ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -91-100–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கோள்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

-பன்னூல் அளந்தானை –
எல்லா பிரமாணங்களாலும் ஜிஞ்ஞா சிக்கப் பட்டவனை
இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமைதி கம்யமாய்
அரிதாய் இருக்குமோ வென்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் அடியை வைத்த
சுலபனுடைய திருவடிகளை
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்முன்னால் வணங்க முயல்மினோ –
முன்னடி தோற்றாதே பாபத்தைப் பண்ணி
பின்னை அனுதாபம் பிறந்து
பேதுற்று இருக்கிற நீங்கள்
சரீர சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது
பின்னைச் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
முற்பட வணங்கி
பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கோள்-

————————————————————————–

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

அடியால் முன் கஞ்சனைச் செற்று
கம்சன் ஈஸ்வரனை வஞ்சிக்க நினைத்ததை
அவனுக்கு முன்னே கோலித்
திருவடிகளாலே மார்பிலே ஏறி முடித்தவன் –
அமரர் ஏத்தும் படியான் –
குடி இருப்பு பெற்றோம் என்று
ப்ரஹ்மாதிகள் ஏத்தும் ஸ்வபாவத்தை உடையவன் –
கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன்
நெடியான் தன்நாமமே ஏத்துமின்கள் –
ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை
ஒரு நாளும் மறவாதவனுடைய
திரு நாமங்களை ஏத்துங்கோள் –
ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும்
பிரதிபந்தகம் போக்குகை-
ஐஸ்வர்யம் ஆத்மலாபம் தன்னைத்தருகை எல்லாம் கிடைக்கும்-கடிது —
தேவதாந்தர பஜனம் போலே-பலத்துக்கு விளம்பம் இல்லை-அது கூடா முன்னம்

————————————————————————

ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது-

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

கூந்தல் -கேசியினுடைய

கடிது இத்யாதி
நரக தர்சனமோ கடிது
பின்பு அங்குச் செயல்களோ கொடிது –
ருதிரவாறுகளிலே புகடுகை
வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை
இவற்றை அனுசந்தித்து
என்றது கூடா முன்னம்
அவை கிட்டுவதுக்கு முன்னே
வடி சங்கம் கொண்டானை
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
கையிலே ஆயுதமாக கொண்டவனை
கூந்தல் வாய் கீண்டானை
கேசியின் வாயைக் கிழித்தவனை
கொங்கை நஞ்சு உண்டானை
பூதனையை முடிதவனை
ஏத்துமினோ உற்று –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க
விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம்-

————————————————————————–

என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் –
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அபிமான சூன்யராய் தொழுங்கோள்
உலகு ஏழும்முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப் பொருந்தா தான்
மார்பிடந்து பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு –
லோகம் ஒன்றும் பிரி கதிர் படாதபடி
தன் வயிற்றிலே வைத்து ரஷித்து
பிரஜை பால் குடித்தால் தாய் உடம்பு நிறம் பெறுமா போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
பொருந்தாத ஹிரண்யன் மார்பை பற்றி இடந்து
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று
திருப் பாடகத்திலே எழுந்தருளி இருக்கிறவனை
ஏத்தா நின்றது என் நெஞ்சு-

————————————————————————-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

சேய்-அழகிய

ஹிரண்யனுடைய -ஈச்வரோஹம் –
என்ற திண்ணிய நெஞ்சைக் கீண்டு
சிறுக்கன் விரோதி போயிற்று என்று
புகர்த்த வடிவை உடையவன் –
முன்னம் இத்யாதி –
தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்திலே உள்ளான் –
ஊழி இத்யாதி –
காலோ பலஷித சகல பதார்த்தங்களையும்
உண்டாக்கினவன் –
எல்லாரும் ஏத்தும்படி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன் –
திரு அத்தியூரில் வசிக்கிறவன் –
என் நெஞ்சின் உள்ளான் –
தலை மேல் தாளிணைகள் நிலை பேரான்
என் நெஞ்சத்து -என்கிறபடியே-

————————————————————————–

இரண்டாலும் -கருட வாகனத்வம் -சேஷ சாயித்வம் -சர்வேஸ்வரன் என்றபடி –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

மூன்று அக்னி யையும் சொல்லப்படா நின்ற
வேதத்தாலே சமாராத்ரயதயா பிரதிபாதிகப் பட்டவன்
முத்தி மறையாவான் -என்று பாடமாகில்
மோஷ ப்ரதிபாதக வேதத்தாலே பிரதிபாத்யன் என்றபடி –
மா கடல் இத்யாதி
அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன்
எங்கள் பிரான் ஆகைக்காக திரு அத்தியூரில் நின்றான்-

————————————————————————–

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

எங்களுக்கு ஸ்வாமியான
சௌலப்யத்துக்கு மேலே
நித்ய சூரி போக்யனாய்
ஸ்ருதி பிரசித்தமான கண்ணை உடையவனாய்
ஸ்ரீ ய பதியானவனே
விஸ்த்ருதமான படங்களையும்
மூக்கையும் உடையனான
திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பாம்பணை மேல் சேர்ந்தாய்
என்று அந்வயம்

————————————————————————–

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
எடுத்து வளர்க்க வேண்டும்படி
குழவியாய் தான் வளர்ந்தது
ஸ்த் நந்தய அவஸ்தையிலே
வயிற்றிலே வைத்தது அடங்க உலகு ஏழும் –
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற அவஸ்தையிலே
லோகத்துக்கு ரஷகன் ஆனான் –
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை –
இடையனாய்
ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி
என் நெஞ்சிலே பொருந்தி
இரங்கப் பண்ணி
என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட
ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-

————————————————————————

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய் மலர்கள் தூவ –
அஸ்மத் ஸ்வாமியான ஈச்வரனே
அருள் என்று ஓன்று கேட்டவன்ற்றாகப
பாடி காப்பாரை வளைப்பாரைப் போலே
ஈச்வரோஹம் -என்று ஊதின காளங்களைப் பொகட்டு
தேவர்கள் புஷ்பம் தூவி ஆஸ்ரயிக்க
அறை கழல சேவடியான் –
த்வனியா நின்ற வீரக் கழலை உடைய
சிவந்த திருவடிகளை உடையவன் –
எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம்-
செங்கண் நெடியான் குறளுருவாய் –
சர்வேஸ்வரன் குறளுருவாய்ச் சென்று –
மாவலியை மண் கொண்டான் மால் –
ஆஸ்ரித அர்த்தமாக
சுருக்கின வடிவை உடையவனாய்
மகாபலி பக்கலிலே மண் கொண்ட
வ்யாமுக்தன்-

————————————————————————

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே
சர்வாதிகனே
நெடியானே
அபரிச்சேத்யனானவனே
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய சூசகமான திருத் துழாய் மாலையை
உடையையாய்
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே
கண்ணனே
– என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ச்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

ஆல்-ஆச்சர்யம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: