ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -71-80–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய சூரிகள் படி சொல்லுகிறது 

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப-
திரு உலகளந்த விஜயத்தை அனுசநித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆர்க்க
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
ஆர்க்கைக்கு அவசரம் இன்றிக்கே
அக்நியை உமிழா நின்று கொண்டு
நமுசிப் பிரக்ருதிகளை வாய் வாய் என்று
ஒடுங்குவித்தது திரு வாழி
விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் பூவாரடி நிமிர்த்த போது-
கிடந்த இடத்தே கிடந்து
விஷத்தை உமிழா நின்ற
திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
சௌகுமார்யத்தை உடைய னான ஈஸ்வரன்
பூமியை அளக்கைக்கு புஷ்பஹாச சுகுமாரமான
திருவடிகளை நிமிர்த்த போது
இப்படி ஆனது என்கிறது –

————————————————————————–

திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது-

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

போதறிந்து-
ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று
சத்வோத்தர காலம் அறிந்து
வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போதரிந்து கொண்டேத்தும்-
குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு
அதில் செவ்விப்பூவை அரிந்து கொண்டு
ஏத்தா நின்றது
போது உள்ளம்-
ஹிருதயமே போரு –
அணி வேங்கடவன் பேராய்ந்து வேங்கடவன் மலரடிக்கே செல்ல போது மணி –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவேங்கடமுடையான் உடைய திரு நாமத்தைச் சொல்லி
அவன் திருவடிகளிலே புஷ்பத்தையும் அணி –
மணி வேங்கடவன் என்று சொல்லி
அணி என்று கிரியை ஆகவுமாம்

————————————————————————

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
எல்லா திருநாமங்களையும் ஆய்ந்து உரைப்பன் –
எல்லா அவஸ்தைகளிலும் –
வாய்ந்த மலர் தூவி-
கைக்கு எட்டின புஷ்பத்தைக் கொண்டு
வேண்டியபடியே பொகட்டு
வைகலும் –
காலம் எல்லாம்
ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
பிறை போலே ஏந்திய கொம்பை உடைத்தாய்
தர்சநீயமான கண்ணை உடைத்தான
குவலயாபீடத்தை முடித்த
என்னுடைய ஸ்வாமிக்கு
இறைக்கு ஆட்பட துணிந்த யான் -ஆய்ந்து உரைப்பன் –
அவன் பிரதிபந்தகம் போக்க
நான் அடிமை செய்தேன் என்கிறார்

————————————————————————–

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

யானே தவம் செய்தேன்
நானே தபஸ் பண்ணினவன் ஆகிறேன்
யானே தவம் உடையேன் எம்பெருமான்-
தபஸின் உடைய பலமுடையேனும் நானே
தபஸும் தபஸின் உடைய பலமும் உடையவன் நானே
என்கிறது எத்தாலே என்னில்
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் –
விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை
சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் –
ஆகையால் –
பெரும் தமிழன்— பெரிய தமிழன் / –பெரிது நல்லேன்-மிகவும் நல்லேன்-

————————————————————————–

பெரிய தமிழன் மிகவும் நல்லேன் என்று சொன்னீர்
ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார்

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பெருகு மத வேழம்-
மதித்து சமைந்ததாகில் சிறிது அறிவு உண்டாம் –
மதம் பெருகா நின்று அறிவு கெட்ட சமயத்தில்
மாப்பிடிக்கு –
இப்படி அறிவு கெட்டத்தை
த்யான யுக்தரைப் போலே
தன புருவம் நெறித்த இடத்தில் கார்யம் கொள்ள வற்றாகை
முன்னின்று –
அந்தேவாசிகளைப் போலே
பிடியினுடைய ஸ்வபாவத்தை அறிந்து
கண் வட்டத்திலே நின்று
இரு கண் இள மூங்கில்
இரண்டு கணு வளையச் செய்தே
பருவத்துக்கு உள்ள முற்றனவற்று இருக்கை
வாங்கி —
மூங்கிலினுடைய மேன்மையும் களிற்றுன் உடைய
சாவதானத்தையும் சொல்லுகிறது
-அருகிருந்த தேன் –
திரு மஞ்சனத்துக்கு சம்பாரித்து இருக்குமா போலே
குறைவற்று இருக்கிறபடி –
தேன் -கலந்து-
த்ரவ த்ரவ்யங்கள் இரண்டும் கலந்தாற் போலே இருக்கை
நீட்டும் –
இதுக்கு கொடுக்கையே புருஷார்தமாய்
இருக்கிறபடியும்
அது அநாதரிக்கிறபடியும்
திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை
வான் கலந்த என்கிறது உபமான உபமேயங்கள்
ஸூ சத்ருசமாய் இருக்கிறபடி –

————————————————————————–

இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

வரைச் சந்தன குழம்பும்
சந்தன கிரியிலே உண்டான
சந்தனக் குழம்பும்
வான் கலனும்
தேசமான அணிகலனும்
பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும்
பரிமளம் மிக்கு தர்சநீயமான மல்லிகையும்
நிறைத்துக் கொண்டு ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்
இது எல்லாத்துக்கும் காரணமாய் நின்று
இத்தனையும் செய்தான் ஆகில்
இதற்கு மேல் செய்வது என் என்னும்
ஞானத்தை உடைய சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளையே ஏத்திப் பணிவது உறும் –

————————————————————————–

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

சூத்திர பதார்தங்களினுடைய
காலைப் பற்றிக் கொண்டு திரிந்த உனக்கு
ஸூ ஹ்ருத்தானவனுடைய திருவடிகளைப் பற்றுகை உறும் –
அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா
ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும்
ஆஸ்ரயணயம் தானே உறும்

————————————————————————–

ஆஸ்ரய ணீயவஸ்து கை புகுந்த பின்பு
ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

தபஸ் பண்ணினானும்
பலம் பெற்றானும் ப்ரஹ்மாவே
அன்யார்தமாக பிரவர்த்திகச் செய்தே
பலம் பெற்றான் என்கிறது
அநேக கங்கை படைத்தால் உள்ள
லாபம் பெற்றான்
க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
திருவடி விளக்க அபேஷிதமானவாறே
தர்ம ஜலமானத்தைக் கையிலே கொண்டு
அனைத்து திரு நாமங்களைச் சொல்லி
பின்னை திருவடி விளக்கினான்-

————————————————————————–

திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது –

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பின்னின்று தாய் இரப்பக் கேளான்
ஸ்ரீ கௌசல்யை
நான் ஏக புத்ரை
உம்மைப் பிரிந்து நான் ஜீவியேன்
நீர் காட்டுக்குப் போக வேண்டா
என்று சொன்னால் கேளான் –
பெரும் பணைத் தோள்முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள்
அக்ரதஸ்த்தேக மிஷ்யாமி -என்று
பிரார்திப்பாள் பெரிய பிராட்டியார்
-சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல்
ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப் படா நின்ற
தோள் வலியை உடையனான பிள்ளையுடைய
குணங்களுக்கு
அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர் –
அன்று அளந்தத அத்தனையும்
அக்குணத்துக்கு நேர்-

————————————————————————–

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கிட்டினேன் –
நினைந்தேன் அது ஒண் கமலம் –
ஸ்ப்ருஹணீயகமான திருவடிகளை நினைந்தேன்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் –
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே
ச்நேஹத்தை உடையனாய் பரிப்பூர்ணன் ஆனேன் –
ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக்கோலம் கண்ட பகல் –
திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு
முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம்
என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: