ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -51-60–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்–51

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திருவடிகளை
நெஞ்சே மதிக்கண்டாய்
அவனுக்கு வாசகமான திரு நாமத்தை மதிக்கண்டாய்
கண் வளருகைக்கு போரும்படி
பெரிதான திருப் பாற் கடலிலே நின்றும் பேர்ந்து
பின்னை அத்தை கடைவதும் செய்து
நீரை உடைத்தான
கடல் போலே இருக்கிறவனுடைய
திரு நிறத்தை அனுசந்தி

————————————————————————

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்
நீல மேகத்திலே மின்னற் போலே
பிராட்டியை திரு மார்பிலே உடையானாய்
அவளோட்டை கலவியாலே
ஆநரு சம்சய பிரதானனான் ஆனபடியை யார் அறிவார்
ராவணனோ பாதியும் வதத்துக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
இவன் பக்கலிலே ஔதார்யகுணம் கிடந்தது என்று
மன்வந்தரம் பூர்ண மபேத சத்ரு -என்னும்படியே
மேல் இந்திர பதம் செலுத்துவதாக வைத்தவனுடைய
ஆன்ரு சம்சயத்தை யார் அறிவார்

————————————————————————–

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

ஆஸ்ரயித்தவர்கள் உடைய
முன்னின்று பின் தாழ்ந்த குழல் கற்றையை அறியாதே
ஒரு சிறுமலை என்று எண்ணி
மூச்சு விடுதல்
உடம்பாடுதல்
செய்யாமையாலே
இன்ன மலை என்று அறியாமையாலே
பூக்களை உடைத்தான கொடிகள் தங்குகிற
பொரா நின்ற புனலை உடைத்தாய் இருந்துள்ள மலை
என்கிற திருவேங்கடமே நாம் ஆசைப்படும் மலை
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

————————————————————————–

இவன் திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப
பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார்

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54

வெற்பு என்று சொல்லப் படா நின்ற
தெற்கு திருமலை பெரிய திருமலை இவை போலே
என்னுடைய ஹிருதயத்தையும் உன்னுடைய கோயிலாக நினைத்தாய் என்று அறிந்து
நான் கிருதக்னனாக ஒண்ணாது என்று
ஹிருதயத்திலே புகுருகைக்கு
பாலாலயமாகக் கொண்ட
திருப் பாற் கடலை கை விடாதே கொள் என்று
இரக்கிறேன்

————————————————————————–

உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் 
இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

என்றும் மறந்து அறியேன்
ஒரு நாளும் உன்னை மறந்து அறியேன் –
ஸ்ரவண மனன நிதித்யாசன அநந்தரம்
பிறக்கும் உபாசனாத்ருவா நுஸ்ம்ருதிகளாலேயோ
நீர் மறவாது ஒழிந்தது என்னில் –
ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்
எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் -என்னும்படி
எல்லா ஜன்மங்களிலும்
எல்லா காலத்திலும்
நீ நின்று
உன்னுடைய நினைவு மாறாத ஸ்வபாவத்தாலே
ஒரு நாளும் மறந்து அறியேன்
வென்றி அடல் ஆழி கொண்ட வறிவனே –
நான் செய்த அம்சம் செய்தோம் இ றே
எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ -என்ன –
உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு
வைகல்யம் காண்கிறிலேன்
ஆனபின்பு
இன்பக் கடலாழி நீ யருளிக் காண் –
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்னும்படியே
உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளாய்-

————————————————————————-

நீர் சேஷபூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்-
அது விதேயமான போது இ றே-ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்-நாணப் படும் என்றால் நாணுமே-
சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே
நிற்கப் போமோ –
கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் –
ஸாபராதன் என்று மீளவும் போகாது
கருமாலை பொன் மேனியாக காட்டுவதருக்கு  முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு –
எங்களுடைய புருஷகாரமாக பிராட்டி முன்னே காட்டா நின்றால்
ந கச்சின் ந அபராத்யதி -என்று
எங்கள் உடைய குற்றம் அவள்
பார்க்க ஒட்டாமையாலும்
முறையில் நிற்க ஒண்ணாது

————————————————————————–

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்படிமின்
பெரிய பிராட்டியார் நித்ய கடாஷம் பண்ணா நின்ற தெய்வத்தை
நா வாழ்த்துகை ஆகிய
கருமத்தை கை விடாதே
இரும் தடக்கை எந்தை பேர் நாற்றிசையும் கேட்டீரே –
பெரிய தோளை உடையனான
என் சுவாமி உடைய பேர் அன்றோ
எல்லா திக்குகளிலும் உள்ளது
அது கேட்டிலி கோளோ
கண்டீர் –
நாம் உரிமையால் ஏத்தினோம் பாதம்
நாங்கள் அவனுடைய பேரையும்
திருவடிகளையும்
சேஷபூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம்

————————————————————————–

நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து
என்னை ஓதி வைத்தது என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து 
எங்களுக்கு இந்த நன்மை உண்டாயிற்று
நா மங்கை யானவள் ஹிருதயத்தில் இருந்து
நம்மை ஓம்பி ஒதுவித்ததாலே -ஓம்பி -வளர்ந்து கிளர்ந்து
ராஜ புத்ராதிகள்
ராஜ வைபவம் அறியாது இருக்கச் செய்தே
அத்தை சொல்ல அறியாமையாலே
விரசமானாலும் சரசாமாகத்தங்கள்
ஸ்வரூபத்துக்கு கற்பிக்கும் தாச வ்ருத்தைகளைப் போலே
அவள் ஹிருதயத்திலே இருந்து ஒதுவிக்கைக்கு அடி சொல்லுகிறது
வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த வருள் –இனிய விது வேம்பு போலே கையா நின்றதே ஆகிலும்
பாடு என்று அருளி அல்லது நிற்கப் போகாதே
அவனுடைய நீர்மையாலே தந்த அருள் –
தந்த பிரசாதம் சரஸ்வதி ஒதுவிக்கைக்கு அடி

————————————————————————–

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

காண்குற்ற = கடாஷித்து அருளுகிற  –

அடியோமான எங்கள் மேல்
அருள் புரிந்த சிந்தையை வைத்து
அத்தாலே
நாங்கள் பதார்த்தங்களை அறிந்து காண உற்ற போது
நீ சேஷி நான் சேஷ பூதன் என்கிற ஞானத்துக்கு விரோதியான
அஞ்ஞானத்தைப் போக்கி
உணர்ந்து
உன்னுடைய கமலம் போன்ற திருவடிகளை
நினைத்தேன்
ஆராய்ந்து பார்த்து
பரதந்த்ரமாய் இருக்கையாலே
என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்
அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை
எங்கள் மேல் வைத்து
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்

————————————————————————–

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

ஓர் உருவன் அல்லை
நித்யோ நித்யானாம் என்றபடி
சர்வ விசஜாதீயம் என்கிறது அன்று உனக்கு வடிவு
ஒளி உருவம் நின் உருவம் –
பக்தாநாம் த்வம் பிரகாசசே –
என்கிறது உனக்கு ஸ்வபாவம்
இரு நிலத்தோர் ஈர் உருவன் என்பர்
அறியாதார் பெரிய ஈஸ்வரன் என்பர்கள்
ஓர் உருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று -எல்லார்க்கும் சத்தை அவனே என்று
அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பூமியை முறை குலையாமல் காப்பார்
தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: