ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -41-50–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
பொருளாலே ஸ்வர்க்கத்தில் புக-யத்னம் பண்ணப் போகாது
அருளால் அறம் அருளும் அன்றே
கிருபையாலே இவை ஸ்வர்க்கத்தை-ஆசைப்பட்ட தாகில் ஸ்வர்க்கத்தை
கொடுக்கப் போம் என்று இருக்கும்
அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே-நீ மறவேல் நெஞ்சே நினை
தன கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன்
திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை
மா மறையோர் என்றது-சுகோ முக்தோ வாமதே வோபி முக்த -என்றவர்கள்
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் என்றுமாம்-ஸ்ரீ மார்கண்டேயன் என்றுமாம்

————————————————————————–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில்
பிராட்டியோடே வந்தார் போலே
நினையா நின்றேன் –
எதுக்கு நினைக்கிறது என்னில் –
அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் –
அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்
மனைப்பால் பிறந்தார்  பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்-
சம்சார சுகத்தை துறந்தவர்கள்-அத் தோளைத் தொழப் பெறுவார்கள்

————————————————————————

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

————————————————————————-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

சிறந்தார்-இத்யாதி
திருநாமத்தை சொன்னவர்களுக்கு
பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து
உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் –
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடைய
ஈஸ்வரனுடைய திருநாமத்தை மறந்தாரை
மனுஷ்யராக புத்தி பண்ணி இரேன்
அஞ்ஞரை சர்வஞ்ஞர் என்று இருப்பன்
அறிகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கையாலே
குருவிந்தக் கல்லை மாணிக்கம் என்று நினைத்து இருந்தால்
ரத்னம் ஆகாது இ றே
ரத்ன பரீஷகன் ரத்னமாம் என்றது இ றே ரத்னம் ஆவது –
அப்படியே நெஞ்சிலே மனிசர் என்று வைக்கப் பட்டவர்கள்
மனுஷ்யர் ஆவர் என்கிறார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -என்கிறபடியே-
அறம் தாங்கும் இத்யாதி
ஆன்ரு சம்சயத்தாலே தரியா நின்ற
ஸ்ரீ ய பதியினுடைய திருநாமத்தை நாவினாலே
ஓத உள்ளு –

————————————————————————–

நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள் அர்த்ததினுடைய
லாப அலாபங்களுக்கு ஈடுபடார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

உளது என்று இறுமாவார் –
தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே
மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள் –

இல்லை என்றுதளர்தலதனருகும் சாரார் –இத்யாதி
இல்லை என்று தளரார் என்னாதே
உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில்
நித்ய தரித்திரன் சோகம் அறியான் –
ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே
பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்
இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும்
தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –
என்று சொல்லுகிறது

பகவத் விஷயத்தில் பிரிவு உத்தேச்யமோ என்னில்
அழு நீர் துளும்ப வலமருகின்றன வாழியரோ –
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம்-
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில்
ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ
உண்ணும் சோற்றில் முற் கூறும்
துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ
முகில் வண்ணன் மாயம் கொலோ –
நன் பண்ணின ஸூ க்ருதமோ
இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
நிர்க்குண பரமாத்மா சௌதேஹம் தேவ்யாப்ய திஷ்டதி –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –

தளர்தலதனருகும் சாரார்-என்றது-
சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது
முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து
ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து
ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இ றே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இ றே சோகம் உள்ளது
அளவரியவேதத்தான் –
அபரிச்சின்னமான வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுமவன்
கண்ணாலே காண ஆசைப் படுமவனுக்கு
வேத பிரதிபாத்யன் என்றால் என்ன
பிரயோஜனம் உண்டு என்னில் –
வேங்கடத்தான் –
எல்லாரும் கண்டு ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாக
திருமலையிலே நின்றான் –
எங்களுடைய அர்த்தத்தோபாதி
உம்முடைய அர்த்தமும் பிரத்யஷம் ஆயிற்றோ என்னில் –

விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –
அவனுடைய சத்பாவத்துக்கு இசைந்தால்
அவர்களுக்கும் கூட ஸ்ப்ருஹணீயனானவனே
இங்கே வந்து நிற்கிறான் என்று
ஆதரிக்க வேண்டாவோ பிரமாணிகர் ஆகில்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –
இவர்களுக்கு இறுமாக்கவும் தளரவும் அவசரம் இல்லை

————————————————————————-

இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

மணி போலே ஸ்ரமஹரமான வடிவையும்
உதாரமான கையையும் உடைய சர்வேஸ்வரன்
பலகால் பயின்றது
கோயில்
திருக்கோட்டியூர்
திருமலை
பல நாள் பயின்றது –
தர்சநீயமாய் திகழா நின்றுள்ள
சோலையை உடைத்தாய் சம்சாரத்துக்கு ஆபரணமாய் இருந்துள்ள திருநீர் மலையே

————————————————————————-

அவன் ஸ்வ பாவம் இப்படி யானபின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

அரி உருவன் பாத மலர் மாலைஅணிந்து காலை தொழுது எழுமின்-
ஆஸ்ரித அர்த்தமான வடிவை தனக்கு வடிவாக உடையவன் உடைய
திருவடிகளிலே மலர்மாலையை அணிந்து கை கூப்பி
ப்ராஹ்மமான முகூர்த்தத்திலே தொழுது உஜ்ஜீவியுங்கோள் –
கை கோலி என்று ஏற்கவே கோலி என்கிறது
கை கூப்பி என்றுமாம் –
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை –
சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –
மற்று அல்லால் -இத்யாதி –
மற்று நீங்கள் அனுசந்திக்கும் படி
எல்லாத்தையும் உணர்ந்து காலை தொழுது எழுமின்
மற்று எல்லாம் இதி பாடாந்தரம்

————————————————————————–

எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

உணர்ந்தாய் மறை நான்கும்-
சம்ச்காராத்மகமாக உன் திரு உள்ளத்தில் கிடந்த வேதத்தை
பிரகாசிப்பித்தாய்
ஓதினாய் நீதி –
வேத உப ப்ரும்ஹணமான
இதிகாச புராணங்களை உண்டாக்கினாய்
மணந்தாய் மலர்மகள் தோள்-
வேத ப்ரதிபாத்யை யானவளுடைய
தோளை சம்ச்லேஷித்தாய்
போய் வேயிரும் இத்யாதி –
வேத பிரதிபாத்யன் ஆகில்
பரம பதத்திலே யி றே என்னாதபடி
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி
திருமலையை விரும்பினாய்

————————————————————————–

திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார்

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

குலை சூழ் -கரையாலே சூழப் பட்ட
மலை ஏழும் -இத்யாதி
முலை எங்கும் வியாபித்த நஞ்சாலே
மிடுக்கு உடையளான பூதனையை
முக்தமான சொலவுகளை அவள் முகத்தே சொல்லி
சுவையா நின்ற நாவை உடையவன் -என்று அழை
பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்
அஞ்சாது -பூதனை பட்டது படும் இத்தனை

————————————————————————–

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

முகப்பும் -எல்லார் முன்பும்

அழைப்பன் திருமாலை
ஸ்ரீ ய பதியை அழைப்பன்
ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி –
திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை
அனுசந்திக்கப் புக்கால்
பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத
திரு நாமங்களைச் சொல்லி –
ஆங்கு அவர்கள் என்றது -திரு ஆய்ப்பாடியில் உள்ளவர்களை
பார்த்து நம்முடைய பக்கலிலே இரங்குவர் என்று –
இழைப்பரிய வாயவனே –
நினைக்க அரிதாம் படி பெண்களைப் படுத்தும்
கிலேசத்தை உடைய கிருஷ்ணனை
யாதவனே என்றவனை –
இடைத்தனத்தோபாதியும்
ஸ்ரீ வாசுதேவர் மகன் ஆனதுவும்
ஆகர்ஷகம் ஆனபடி
யார்முகப்பும் –
எல்லார் முகப்பும்
மாயவனே என்று மதித்து –
ஆச்சர்ய பூதனே என்று மதித்து
திருமாலை அழைப்பன்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: