ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -31-40–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

நாளும் பிரான் என்றும் –
கை கழிந்து போன என்னை தன் பக்கலிலே-ஆபிமுக்யம் பண்ணுவித்து
ருசியை பிறப்பித்த-உபகாரகன் என்றும் –
பெரும் புலரி என்றும் குராநற் செழும் போது கொண்டு –
குராவினுடைய நன்றாய் செவ்வியை உடைத்தான-பூவினைக் கொண்டு
வராகத் தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் –
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க-வேணும் என்று இராதே
நாட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை உடையவன்-திருவடிகளை பணியுமவர்கள்
மகிழ்ந்து -மணி யுருவம் காண்பார் –
பலத்துக்கு பலம் இ றே-ஸூ ஸூ கம் கர்த்துமவ்யயம் -என்கிறபடியே-
சாதன தசையிலே இனிதாய் இருக்கை-

புலரி என்று நாளாய் பெரும் புலரி என்று கொண்டாட்டம் –

————————————————————————–

இவ்விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே
பிரவணம் ஆயிற்று என்கிறார்

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

திருமாலே சிந்தை சூழ்ந்து துணிந்து நின் பாதமே போற்றி -மகிழ்ந்தது
என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து
ஸ்ரீ ய பதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது
மற்றும்
என்றது வாக்கும் என்றபடி
மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடி
மிகவும் பிரதிபஷத்திலே அக்நி உமிழா நின்றுள்ள-திரு ஆழியையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யதையும் பாடி மகிழ்ந்தது

தொழிலாகும் சூழ்ந்து துணிந்து
ஆகம் ஆடுகையாகிற தொழிலிலே மகிழ்ந்தது

————————————————————————-

மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார்

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

துழாய் அலங்கல் அங்க மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால்துணிந்தது
திருத் துழாய் மாலையை திரு மேனியிலே அணிந்தவனுடைய
பேரைப் பலகாலும் உள்ளுகையிலே-சிந்தை துணிந்தது –
அங்கம் -பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே –
சரீரம் பணிந்ததுவும் திருமலையிலே நிற்கிற சர்வேஸ்வரனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை துணிந்து –
வாக்கானது அவனுடைய திறங்களை-சொல்லுகையிலே துணிந்தது

————————————————————————–

உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் –
ராவணனோபாதி வத்யனாய் இருக்க-மகாபலியும் -இவன் பக்கல்-ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-ஆச்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான்
என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை

புகையால் நறு மலரால் –
உன் திருவடிகளை புகையால் நறு மலரால்–மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் -புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு-மிக்க அன்பை உடையேனாய்
சௌந்தர்யத்துக்கு தோற்று அடிமைப் பட்டேன்-இனி என் பாக்கியத்தால்
இப்போது என்னுடைய ஸூ க்ருதத்தாலே-இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்

————————————————————————–

இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே
என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

இனிது என்பர் காமம்
காமத்தை யும் அழகியது என்பர்
என்பர் -என்கிறதாலே தமக்கு இதில் அந்வயம் இன்றிக்கே இருக்கிறபடி
காமதந்த்ரம் போமவர்கள் காம தந்த்ரம் இனிது என்று சொல்லுவார்கள் –
அதனிலு மாற்ற இனிது என்பர் தண்ணீரும் –
காமத்திலும் மிக இனிது தண்ணீர் என்று சொல்லா நிற்பார்கள்
விரக்தருக்கும் வேணும் இ றே தண்ணீர்
ஆப ஏவ ஹி ஸூ மனஸா-என்கிறபடியே
விரக்தரோடே அவிரக்தரோடு வாசி யற
தண்ணீரில் வந்தால் எல்லாரும் ஸூ மனஸ்ஸூ க்களாய் இருப்பர்கள்-
எந்தாய் –
இவருடைய தண்ணீரும் காமமும்-வாசுதேவஸ் சர்வம்-உண்ணும் சோறு -இத்யாதிவத்

இனிது என்று காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்சேம நீர் ஆகும் –
பாஹ்ய ஹானி அடியாக இ றே
அதஸ்மின் தத் புத்தி பண்ணி சப்தாதி விஷயங்களில்
ருசி பிறப்பது –
ஸ்வ பாவத இனிமை இன்றிக்கே இருக்கிலும்
காமத்திலும் தண்ணீரிலும் ஆசைப்படாதே
உன்னுடைய குணங்களில் அல்ப ஆசைப்படுபவர் ஆகில்
ரஷையே ஸ்வ பாவமாம்
புத்தி நாசாத் ப்ரணச்யதி-என்கிறபடி
சப்தாதிகளில் ஆசை விநாசத்தை பலிப்பிக்கும்
மித்ர பாவேன -என்று
பகவத் விஷயத்தில் போலியான ஆசை உண்டாகில்
நத்யஜேயம் கதஞ்சன -என்று இருக்குமவன்
எல்லா ஆசையும் உண்டாகிலும் கிடையாது சப்தாதிகள்
ஓர் அடி வர நிற்கில் அவனதே யாம் பகவத் விஷயம்-

————————————————————————–

பிரமிப்பார் பிரமிக்கிறார் -விஷயங்களிலும் தேவதாந்தரங்களிலும்
நீ இவ்வர்த்தத்தை புத்தி பண்ணி இரு -என்கிறார்

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும் –
தாங்களே சிறியாராய் இருந்து வைத்து
தங்களைச் சொல்லும் பெருமை ஸ்வரூபத்திலே நிற்கும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் –
அவ்விடத்திலே தமக்கு மிடை இல்லை
அறியாமை மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு எண் நெஞ்சே இரு –
நெஞ்சே நீ பெரியார் கோடியிலே இரு
பேராளன் பேரோதும் பெரியோரை -என்னும்படி ஒருவனோ என்கிறது
மாசுச -என்னும்படியே-

————————————————————————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்-
ப்ரஹ்மாவுக்கு இருக்கப் பரப்பு போந்து
குளிர்ந்து விலஷணமான பூவின் உள்ளே ஸ்ருஷ்டிக்கவும்
பிரமித்துப் போய் கேட்டு வரவும் வேண்டாதபடி
தானே சமர்த்தனாக ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து
அவன் பொருந்திய உன் திருவடிகளை ஏத்தி
பணியாவாகில்
எமக்கு பல் பிறப்பும் எல்லாம்ஏதங்கள் –
பல ஜன்மங்களையும் நீ பண்ணுவிக்கிறது
ஓன்று அல்லா ஓன்று பகவத் சமாஸ்ரயனத்துக்கு உறுப்பாம் என்று
ஏதங்கள் என்கிறது -புருஷ பேதங்கள் தோறும்
துக்கங்களும் பேதித்து இ றே இருப்பது –
ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் -நீ நினைத்தபடி அன்றாகில்
அப்புருஷர்களுக்கு எல்லாம் உண்டான
துக்கங்கள் எனக்கு ஒருவனுக்கு உண்டாகும்
ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தாய் என்கிற இத்தால்
சரண்யன் என்கிறது
யோ ப்ரஹ்மாநாம் விததாதி பூர்வம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே
என்கிறபடியே-

————————————————————————–

எமக்கு என்று அர்த்தத்தை புருஷார்த்தமாக புத்தி பண்ணி இராதே
ஸ்ரீ ய பதியை ஆஸ்ரயித்து இரு என்கிறார்-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
கழஞ்சு பொன் உண்டு என்று அறிந்து
சர்வேஸ்வரனைப் பற்றி
நிர்ப்பரராய் இருப்பாரைப் போலே இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து –
தமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து
நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து-
நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீ ய பதி என்னும்
நெஞ்சைப் படைத்தது
அம் மிதுனத்துக்கு வாசகமான
சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது

————————————————————————–

இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து-லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில்
உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்-
தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந –
விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதார்த்தின் முடிவும் இதுவே
அது ஏது என்னில்
உத்தமன் பேர் ஏத்தும் திறம் –
எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய
திரு நாமத்தை யேத்துகை
அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை வல்லீரேல் –
சாங்க அத்யயனத்தைப் பண்ணி
வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே
வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்
நன்றதனை மாட்டீரேல் –
அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –
ஒத்தினுடைய சங்கரஹம்
லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை
அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார்
சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

————————————————————————–

நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்-

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –
பஞ்சதாவான சரீரத்தை சுருங்க வலித்து
உடம்பு எங்கும் தானே யாம்படி வியாபித்து
ஸ்லேஷ் மாவானது நெருக்குவதுக்கு முன்பே
நினையும் கோள்
அர்த்த சுகம் சுகம் அன்றோ என்னில் –
உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும்
திருப் பொலிந்தஆகத்தான் பாதம் –
சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அறிந்து இருக்கச்செய்தே
அறிந்ததாக ஒட்டாத போகத்தால்
அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்
பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத
அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம்
நெருக்கா முன் திருப் பொலிந்த வாகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் –
நினைமின் என்கிற இது இரண்டு இடத்திலும் கிடக்கிறது

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: