ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -21-30–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—21-

ஏத்தும் போது தான் உண்டாக வேணுமே என்னில்
தாமுளரே
இவன் தான் தன்னை உண்டாக்க வேண்டி இருந்ததோ –
பூர்வமே வக்ருதா ப்ரஹ்மன் ஹ ஸ்த பாதாதி சம்யுதா
விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும் -அன்றோ
தம் உள்ளம் உள் உளதே –
தனக்கு புறம்பு அன்றே ஹிருதயம்
தாமரையின் பூ உளதே –
இவனுடைய விபூதிக்கு புறம்பே தேடித் போக வேண்டாவே –பூ
ஏத்தும் பொழுது உண்டே –
ஏத்துகைக்கு காலம் ஈஸ்வரனே உண்டாக்கினானே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே –
எல்லார் தலையிலும் காலை வைத்தானாய்–தன்னுடைமையை பெறுகைக்கு அர்த்தியுமாய்-இருந்தவனுடைய ஐஸ்வர்யம் பொருந்தின
திருவடிகளை வைக்க விலக்காத தொரு தலையையும் உடையவரே
செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –
இப்படி உபகரணங்கள் குறை வற்று இருக்கச் செய்தே-நரகத்துக்கு நேர் வழி கிடையாது-

————————————————————————–

சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு-சமாஸ்ரயணீயனைப் பெற்றால்-எல்லாம் சுலபம் இ றே என்கிறது –

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—22-

அரியது எளிதாகும் –
அரிதாவது-பகவல் லாபமும் பகவத் பஜனமும்-இவை இரண்டும் எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால் –
இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் –
எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு-சர்வ சக்தியைப் பெற்றால் சுக லாபம் நம்மதான பின்பு-எல்லாவற்றையும் ஈஸ்வரன் பக்கல் விடுகிறது என் –
நாமே பஜிப்போம் என்பான் ஒரு அதிகாரியைப் பெற்றால் என்றுமாம் –
மேல் இதுக்கு திருஷ்டாந்தம் –
கரியதோர் வெண் கோட்டு மால் யானை
கறுத்த வடிவையும் வெளுத்த கொம்பையும் உடைத்தான-பெரிய யானை
தண் கோட்டு –
கோட்டு என்று கரையிலே என்கிறது –
தண் தோட்டு மா மலர் -என்ற பாடம் ஆனபோது
இதழை உடைத்தான பெரிய புஷ்பத்தாலே என்கிறது
மா மலரால் தாழ்ந்து வென்றி முடித்தது அன்றே –
புஷ்பத்தைக் கொண்டு திருவடிகளிலே பணிந்து அன்றோ-ஆனை வென்றியை முடித்தது -விஜயத்தைப் பெற்றது அவன் பிரசாதத்தாலே யன்றோ என்கிறது

தாழ வில்லை என்று பிரபத்தி பரம்
தாழ்ந்தது அன்றோ என்று பக்தி பரம்

————————————————————————–

தன்னை ஆஸ்ரயிப்பாருக்கு–பிரதிபந்தகதையும் போக்கி-தானும் சுலபனாம் என்கிறது 

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—–23-

வியாக்யானம் –
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் –
அவன் பிரசாதத்தைக் கொண்டு
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற வகைகளால் தாழ்ந்து -ஆஸ்ரயித்து
அது தானே வாழ்வாக காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-
பிரதிபந்தகம் செய்வது என் என்னில்-தாழ்ந்த விளங்கனி பட்டது படும் அத்தனை –
தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்--அளந்தடிக்கீழ் கொண்ட வவன் –
வேற்றுருவாய் என்கிறது-சிறு காலைக் காட்டி பெரிய வடிவைக் கொண்டு அளந்தது
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது என்றுமாம் –
பூமியை அளந்து தன திருவடிகளில் இட்டுக் கொண்டவன் வாழ்விக்கும் –

————————————————————————–

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —–24–

சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே-என்கிறபடி
அவனைப் பற்றி சம்சார பந்தம் அறுக்க வேணும் என்கிறது –
காரோதச் சீற்றத் தீ -என்று படபாக்னியை சொல்லுகிறது
போக மோஷ சூன்யராய் இருக்கிற சேதனரை
கரண களேபரங்களைக் கொடுத்து -போக மோஷ பாக்கில் ஆக்குகை-ஆரருள்
கேடு -மகா பிரளயம்-அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன்

————————————————————————–

உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது –

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

சென்றதிலங்கை மேல் செவ்வே –
சங்கல்பத்தால் அன்றியே-நேரே கால் நடையே இலங்கையில் நடந்தது
தன் சீற்றத்தால் கொன்றது ராவணனை –
கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து
வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் என்றபடி

ராவணனை –கூறுங்கால் –
பேசுங்கால் –
நின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்தம் வாயோங்கு தொல் புகழான் வந்து –
நித்ய சூரிகள் ஸ்துதிக்கப் படா நின்ற பழைய புகழை உடையவன் –
கீழ் ராமாவதாரம் ஆகையாலே ராவண வத சமனந்தரம்
ப்ரஹ்மாதிகளாலே ஸ்துதிகப் படுகிற புகழை உடையவன் என்றுமாம் –
அவதாரத்துக்கு பிற்பாடானவர்கள் இழக்க ஒண்ணாது என்று
அவர்கள் விரோதியை போக்குகைகாக திருமலையிலே வந்து நின்றது

————————————————————————–

திருமலை பிரஸ்துதம் ஆகையாலே-பின்னையும் திருமலைக்கு உள்ளே ப்ரஸ்துதம் சொல்லுகிறது

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி
பகவத் பிராப்தி விரோதியான பூதங்களையும் அவித்து
ஆர்வமாய் –
அபிநிவேசத்தை உடையராய்
வந்தித்து அவனை
அவனை வந்தித்து -அவனை ஆஸ்ரயித்து
உந்திப் படி யமரர் வேலையான் –
அஹ மஹ மிகயா-ப்ரஹ்மாதிகள் ஆஸ்ரயிக்க
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் –
பண்டு அமரர்க்கு ஈந்த –
நித்ய சூரிகளுக்கு பரிசில் கொடுத்தது
படி
பூமி
படி யமரர் வாழும் பதி
பூமியில் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும் திருமலை

அவனை வந்தித்து இருக்கிறபடி அமரர் வாழ்வு இ றே
பதியானது -திருமலை யானது
உந்திப்படி அமரர் வேலையான் -திருப்பாற் கடல் நாதன்

————————————————————————–

கீழ் திருமலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த பரிமாற்றம் கிடையாமையாலே-நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கிற-சர்வேஸ்வரனை தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை –
திருமலையில் பொருந்தி ஆராய்ந்து-விஸ்த்ருதமாய் கிளர்ந்த மநோ ரதத்தை உடைத்தாய்
மதி உரிஞ்சி –
சந்த்ரனைக் கடந்து
மால் தேடி ஓடும் மனம் –
கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-சர்வேஸ்வரனை தேடி ஓடா நின்ற நெஞ்சு
வான் முகடு நோக்கி –
அண்ட பித்தியை நோக்கி
கதி மிகுத்தங்கு
வேகத்தை உடைத்தாய்
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
அழகியதோர் கொம்பை தேடா நின்ற கொடி போன்று இருந்தது
கதிர் என்ற பாடமான போது ஒளியை உடைத்தான கொடி

————————————————————————–

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பப்புக்கவாறே-அவன் இவருடைய மனசையே விரும்பா நின்றான் என்கிறது

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28

விவஷிதர் எல்லாம் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்ன
பிரசித்தனானவன்
ஜகத் ரஷணதுக்காக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து
கிருஷ்ணனாய் அவதரித்து
விரோதி நிரசனம்பண்ணி வருவது போவதாக ஒண்ணாது என்று
திருமலையிலே வந்து நின்ற தேவாதி தேவன்
என்றும் பரிச்சேதிக்கப் போகாத பரப்பை உடைத்தான கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்
என் நெஞ்சை விரும்பி புறம்பே போகிறிலன்

நினைப்பரிய -அவனுக்கும் உள்ளுக்கும் விசேஷணம்

————————————————————————–

கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே-அதிலே சுழி யாறு படுகிறார்-

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
பிள்ளையாக எடுத்து –
தாயார் ஒசழக்காக எடுக்குமா போலே எடுத்து
நஞ்சாலே நிறைந்ததை பாலாலே நிறைந்ததாகப் பண்ணி
அத்தாலே தர்சநீயமான கொங்கையை
அகனார உண்பன் என்று உண்டு –
அவள் நிலை இ றே இவனது
அவள் முலை கொடுத்து அல்லது தரியா ளாய் நின்றாப் போலே
இவனும் உண்டு அல்லது தரியானாய்
வயிறார உண்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய்
மகன் என்றாலும் தாய் என்றாலும்
கிருஷ்ணன் பக்கலிலும் யசோதை பிராட்டி பக்கலிலும் நிற்கும் –
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே
அவனும் விரும்பி முலை உண்ணா நிற்க இவளும் விரும்பி முலை கொடா நிற்கிலும்
பூதனை மடியிலே இருந்தானாய் கொண்டு
துணுக துணுக என்னும்படியாக தாயாரைத் தொட்டு விட்டாய்

தென்னிலங்கை நீறாக வெய்தழித்தாய் நீ
ஒரு தாயாரை மார்பிலே கையை வைத்து உறங்கும்படி பண்ணின நீ
கீர்த்தி பூதாம் பதாகாம் யோலோகே ப்ரமயதிபிரபு கின்நாம
துர்லபம் தஸ்ய -என்று சொல்லும்படி பண்ணின நீ –
பருவம் நிரம்பி ஆயுத ஸ்ரமங்களும் பண்ணிச செய்தாய்
பருவம் நிரம்புவதருக்கு முன்னே இச்செயலை செய்தாய் என்று

————————————————————————-

எல்லார் தலையிலும் ஒக்க திருவடிகளை–வைத்த அவதாரத்தை சொல்லுகிறது

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

நீண்ட திருமாலே -நீ அன்று உலகளந்தாய்-
அபரிசேத்யனாய் ஸ்ரீ ய பதியான நீ
பெறாதது பெற்றாற் போலே பூமியை அளந்தாய்
நீ அன்று உலகு இடந்தாய்
அதுக்கடியாக பூமியை இடந்தாய்
பேரோத மேனிப் பிரான் நீ யன்று காரோத முன் கடைந்து மா கடலை பின் அடைத்தாய்
பெரிய கடல் வெள்ளம் போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையையாய்
உபகாரகனான நீ
கறுத்த நிறத்தை உடைத்தான
கடலை முற்படக் கடைந்து
அது தன்னை பின்பு அடைப்பதும் செய்தாய்
பேரோத மேனிப் பிரான் -என்று கடைகிற போது
ஒரு கடலை ஒரு கடல் நின்று கடைந்தாற் போலே இருக்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: