ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -11-20–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன
இப்படி செய்வார் உண்டோ என்னில்-அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

வியாக்யானம் –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
அவர்களை நாள் தோறும் தொழுது
மத்யம புருஷார்த்தமான சுகத்தைப் பெறுவர் –
புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அவர் –
எங்கும் புக்க நின்ற நீரை உடைத்தான கடலிலே நிறத்தை உடைய சர்வேஸ்வரனே
ப்ராப்யமான உன்னுடைய திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர்

————————————————————————–

சிறியார் பெரியார் என்னாதே-சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——12-

வியாக்யானம் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் –
எல்லாரும் அவனையே ஆஸ்ரயிக்கிறதோ என்னில்
பிரசித்தமான ப்ரஹ்மாதிகளும் அவனைத் தொழும் ஸ்வபாவராய் அன்றோ இருக்கிறது
எண்ணில்-பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
பரந்து அழகியதான கிரணங்களை உடைய ஆதித்யனும்
ப்ரஹ்மாவும் லலாட நேத்ரனும்
நாளும் தொடர்ந்து தொழும் தகையார் —
தொழும் ஸ்வ பாவத்தை உடையவர் ஆவர்

————————————————————————–

விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது –

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—-13-

வியாக்யானம் –
தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்து கையில் கொண்ட ஆனை
மதித்து இருந்தல்ல ஆனை
சூழ் கயம் புக்கு –
பரந்த பொய்கையிலே புக்கு
இடர் அடுக்க அஞ்சி –
முதலையால் வந்த இடருக்கு பயப்பட்டு
படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
படர்ந்து ஓங்கி குளிர்ந்த தாமரைப் பூவைக் கொண்டு
அன்று-ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்பாழி தான் எய்திற்றுப பண்டு-
சர்வேஸ்வரன் உடைய திருவடிகளில் விழுந்து அன்றோ
நித்ய சூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே
ஏறப் பெற்றது

————————————————————————-

அவன் படி இதுவான பின்பு-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே
அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி
உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார்
அன்றிக்கே
வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம்

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

வியாக்யானம் –
பழி பாவம் கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே
அடி உண்டாயும்
அடி இன்றிகே யாயுமான பாபமே
வாழ்வாக இருப்பாரைப் பேசாதே
பழி –பிறரால் ஏற்பட்ட தீமைகள்
பாவம் -புத்தி பூர்வகமாக செய்த தீமைகள்
எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து
எட்டுத் திக்கும் விம்ம வளர்ந்த நாலு தோள்களை-உடையவன் உடைய திரு நாமங்களைச் சொல்லி –

பெரும் பதியை ஆக்கி லோகத்தை உண்டாக்கி என்று-அதுக்கு ஆபத்து வர எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான் என்று அவனுக்கு விசேஷணம் ஆக்குதல்
அன்றிக்கே-பண்டியாகிய வயிற்றைப் பெருக்கப் பண்ணி என்னவுமாம்

————————————————————————–

திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும்
ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார்

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

வியாக்யானம் –
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
யுத்தத்திலே
உடம்புக்கு ஈடிடாதே
உன்னை அழிய மாறி
படை பொருத்து தேர் கடாவித் திரிந்தது –

அன்று -பிரிந்தது சீதையை மான் பின் போய்-

ரஷிக்கும் இடத்தில் இருவரும் கூட இருந்து-ரஷிக்கப் பெற்றோமோ –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள அழகியதே –
தரையிலே பள்ளி கொள்ளக் கற்றது

நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த வாழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளப் பெற்ற சௌவ்குமார்யத்தை
உடையனானவனுக்கு ஜகத் ரஷணம்
சால அழகியதாய் இருந்ததே

————————————————————————–

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
என்னும்படி விசதமாக அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை –
யத்யதாசரதி ஸ்ரேஷ்ட என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைப்பதாம்
வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்மாரி யார் பெய்கிற்பார் மற்று –
காட்டில் திடரை கல்லிக் குளமாக்கும் அது ஒழிய
வர்ஷத்தை இவனால் பெய்விக்கப் போமோ
இத்தால்
ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை
ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று –
அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது
மற்று வர்ஷிப்பிக்குமது
இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்
ருசி உத்பாதகனும் தானே
பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்

————————————————————————–

இவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

மற்று ஆர் இயலாவார் –
மற்று ஆஸ்ரயணீயர் ஆவார் ஆர் –
வானவர் கோன் மா மலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை –
லோகத்தில் பிரதானனான இந்த்ரனோடு கூடின ப்ரஹ்மாதிகள் இ றே
அவர்களும் அவனை ஆஸ்ரயித்து இ றே தம்தாமுடைய
அபிமதங்கள் பெறுகிறது
இந்த்ரன் ப்ரஹ்மா நேர் கொடு நேர் ஆஸ்ரயிகப் போகாதே
பாடே பக்கே சென்று வணங்கும் ஆச்ராயண பிரகாரங்களை
உடையனாவனை –
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி-வணங்குவார் என்னவுமாம்
ஒற்றைப் பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று –
சடையிலே பிறையைத் தரித்தானாய்
சுக பிரதானான ருத்ரன் பின்னே சென்று -அனுவர்தித்து
மாலை -சர்வேஸ்வரனை
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு
ஹிருதயத்திலே கொண்டு –
குறைகளை இரந்து
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான்

————————————————————————–

இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஸ்ரீ வாமனனாய் உலகம் அளந்து கொண்டது
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
கை தொட்டு ஆஸ்ரித விரோதிகளை போக்கும்படி –
உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே
தன் திருவடிகளிலே அடங்கின
லோகங்களையே திரு வயிற்றில் வைத்ததுவும்
தாமரைக் கண் மால்
புண்டரீகாஷனான ஈஸ்வரன்
ஒரு நாள் வான் கடந்தான் –
நித்ய சூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்
ஸ்வர்க்கத்தை அளந்தவன் என்றுமாம்
செய்த வழக்கு –
தன்னுடமையை ரஷிக்க பிராப்தம் இ றே

————————————————————————–

நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்ததும்
வழக்கு அன்று
அது செய்தோம் இ றே என்னில்
இது இ றே நானும் வேண்டா என்கிறது
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
இது வழக்கு என்று நீ புத்தி பண்ணி இருக்க வேண்டா
குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
அசுரனான கன்றும்
விளாவான அசுரனும்
தன்னிலே ஒத்து உள்ளறிந்த உன்னை நலிந்ததாகில்
செய்வது என் என்று
பயப்படுகிறார் –
திரு மாலே –
இருவரும் கூட இருக்கிறது அன்றோ
தகுவது
பார் விளங்கச் செய்தாய் பழி –
பூமி அடங்கலும் பிரகாசிக்கும் படி பழி செய்தாய்
விபூதியில் ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு
அவ் விபூதியையும் அழிக்கப் பார்த்தாய்-

தனக்கு ஒரு ஹானி வந்தால் அவ் விபூதி அழியும் என்றபடி
இது அவன் செய்த பழி யாவது

————————————————————————–

ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயிதவர்கள் அன்றோ
ஆழ்வார்கள் -என்கிறது –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

பழி பாவம் கை யகற்றிப் –
அடி உண்டாயும் அடி இன்றிக்கேயும் உள்ள விரோதங்களைப் போக்கி
பழி -அபுத்தி பூர்வகமாக செய்யும் தப்பு
பாவம் -புத்தி பூர்வகமாக செய்யும் தப்பு
பல் காலும் நின்னை
என்றும் உன்னை ஆஸ்ரயித்து வாழ்வார்
வாழ்ந்தே போவார் வழி வாழ்வார் வாழ்வராம்-
நஸூ லப்யதே சுகம் –என்கிறது இவனை ஆகாதே –
மாதோ –
இது இடைச் சொல்லு
வழுவின்றிநாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
வழு இன்றிக்கே இருக்கிற நாராயணனுடைய திரு நாமங்களை
பக்தியாலே உணர்ந்து நன்றாகவே ஏத்தும்
காரணங்கள் -தாமுடையார் தாம் –
ஹேதுக்கள் -ஏத்துகைக்கு அடியான பக்தி ருசி -ஆநு கூல்யம்
பகவத் கடாஷம் ஸூ க்ருதம்
தாரணங்கள் தாமுடையார் என்ற போது
தாரணம் என்று த்ருதி உடையார் என்றபடி –
சுகத்துக்கு அநந்தரம் துக்கம் என்கிற ந்யாயம்
இங்கு இல்லை யாகாதே என்கிறது –
முடிய வாழ்வே யாய் இருக்கும் பகவத் சமாஸ்ரயணம் என்றபடி

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: