(பங்குனி மாத பூரம் நக்ஷத்ரம்-திருக்கல்யாணம் -திரு மந்த்ரம் பெற்ற நாள்
சித்திரை ரேவதி திருத்தேர்
தை புனர்வசு திருத்தேர்
பங்குனி உத்தரம் திருத்தேர்
கத்யத்ரயம் -உத்தாரக ஆச்சார்யர்
சரணாகதி -வித்வான்
நோற்று -பெற வேண்டியதை அவனே ஊட்டுவான் -புண்ணியம் நாம் அடைவோம்
பரகத ஸ்வீகார நிஷ்டை
திருவிடை எந்தை தாய் -அடுத்து மகள் ‘
இங்கு மகள் பதிகம் பின்பு தாய் பதிகம்)
தூ விரிய -பிரவேசம் –
நஞ்சீயர் உடைய நோவிலே
பெற்றி அறியப் புகுந்து
இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும்
பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று
அருளிச் செய்து அருளினார் –
அப்போதே
வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு
பாட்டுக் கேட்டு அருளா நிற்க
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -3-6-4-
என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால்
பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்றும்
அடியேன் மனத்து இருந்தாய் -என்றும் –
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் -என்றும்
மானச அனுபவ மாத்ரமாய் நின்றது கீழ் திருமொழியில் –
மானச அனுபவமானது முதிர்ந்து
அது தான் பிரத்யஷ சாமானகாரமாய் என்று இருக்கை அன்றிக்கே –
பிரத்யஷம் என்றே பிரதிபத்தி பண்ணி
அநந்தரம்
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து
அது தான் நினைத்த படி அனுபவிக்கக் கிடையாமையாலே
ஆற்றாமை கரை புரண்டு
ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
அவள் பேச்சாலே ஸ்வ தசையை -பேசுகிறார் –
பொன் நெருப்பிலே இட இட
அழுக்கற்று தன்னிறம் பெற்று சுத்தமாம் போலே
பகவத் விஷயத்தில் அவஹாகிக்க அபதோஷாநாம்
பின்னை பிராட்டிமார் படி உண்டாக கடவதாயிற்று –
சகல ஆத்மாக்களுக்கும் பிராட்டிமார் தசை
(கடி மா மலர் பாவையோடு ஷட் சாம்யம்
அநந்யார்ஹ சேஷத்வம் ஓங்காரம்
அத்தலையாலே பேறு -அனன்ய சரண்யத்வம் நமஸ்
அவனே பிரயோஜனம் அனன்ய போக்யத்வம்
சம்ச்லேஷத்தில் ப்ரீதி
விஸ்லேஷத்தில் தரியாமை
அவன் நிர்வாஹகனாக இத்தலை நிர்வாஹ்யம்)
பிறந்தபடி தான் என் என்னில்
அனந்யார்ஹ சேஷத்வம் என்று ஓன்று உண்டு –
அது இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும்
கலந்த போது பிரீதி பிறக்கையாலும்
பிரிந்த போது ஆற்றாமை பிறக்கையாலும்
தத் ஏக போகத்தாலும்
அவன் நிர்வாஹகனாக
இத்தலை நிர்வாஹ்யம் ஆகையாலும்
ஸ்வ யத்னத்தாலே பேறு என்று இருக்கை இன்றிக்கே
அததலையாலே பேறு என்று இருக்கையாலும்
பிராட்டிமார் படி உண்டாகத் தட்டில்லை –
சர்வதா சாத்ருச்யம் சொல்லுகிற இடங்களில் வந்தால்
தாமரை போலே வந்தால் என்னும் அத்தை
தாமரை தான் என்று தாமரை என்றே வ்யவஹரிக்கும் இறே
ந ச சீதாத் யா ஹீநா நசா ஹமபி-என்று ஒக்கச் சொன்னார் இறே இளைய பெருமாள்-
இவ்வோ வழிகளால் பிராட்டிமார் தசையை பிராப்தராய் அடைய தட்டில்லை
நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து
பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு பிராட்டி
அவன் வரும் தனையும் பொறுத்து இருக்க மாட்டாமையாலே
தூது விடப் பார்த்து அதுக்குத் தன் பரிகரத்தில்
கால் நடை தந்து போக வல்லார் இல்லாமையாலும்
இனித் தான் சேதன அசேதன விபாகம் அற
இரக்க வேண்டும்படியான தசையையும் உடையளாய் இருக்கையாலும்
ராமாவதாரத்துக்கு பின்பு திர்யக்குகள் போன கார்யம்
தலைக் கட்டி வரக் கண்ட வாசனையாலும்
(சஞ்சயன் கிருஷ்ணன் தூது போயும் கார்யகரமாக வில்லையே ஆகவே பக்ஷிகளையே நம்புகிறாள் )
கண்ணால் கண்ட பஷிகளை அடைய தூது விட்டு
தூதர்க்கு சொல்லுகிற வார்த்தையாலே தன் நெஞ்சு தான்
புண் பட்டு இருக்கிற சமயத்தில்
அவன் தான் சந்நிஹிதனாய்க் கொண்டு வர
அவனுக்கு தன் இழவுகளைச் சொல்லி
தலைக் கட்டிற்றாய் செல்லுகிறது-
(நான்காம் பாட்டில் -அறிவிப்பு வந்ததும் வருவான் -அறிவிப்பே அமையும் கார்யகரம் ஆவதற்கு )
———————————————–
பெண் வண்டு முதல் பாசுரத்தில்
ஆண் வண்டு இரண்டாம் பாசுரத்தில்
குருகு மூன்றாம் பாசுரத்தில்
ஆண் வண்டு பெண் வண்டு நான்காம் பாசுரத்தில் தூது –
சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞானம் அனுஷ்டானம் -கர்மா- சிறகு-
தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-
அதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் –
உனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது
எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே
எனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அருவியாயோ- என்கிறாள் –
(பெருமாள் போல் சுக்ரீவன் குறை தீர்க்க வேண்டிய படி இல்லையே )
தூ விரிய மலர் உழக்கி –
தூ விரிய
தூ விரியும்படியாக -சிறகு விரியும்படியாக மலரை உழக்கி -என்னுதல்-
அன்றிக்கே
தூய்தாக விரிந்த வலர்ந்த மலரை உழக்கி என்னுதல்
பிரிவாலே பூக்களை இறாய்த்து ஓடுங்கா நின்றாள் இறே தான்
அவன் சம்ஸ்லேஷத்தாலே வந்த ஹர்ஷத்தாலே சிறகை விரியா நின்றன ஆயிற்று-
பஸ்யதி ராஷஸ்யோ நேமான் புஷ்ப பல த்ருமான்
ஏகஸ்த்த ஹ்ருதயா நூநம் ராமமே ச அனு பஸ்யதி –
ராஷச தர்சனத்தோடு புஷ்ப பல த்ருமங்கள் உடைய தர்சனத்தோடு
வாசி அற்று இருக்கிறதே இவளுக்கு –
ந கோத்தமம் புஷ்பிதம் ஆகதாத –
எரிகிற நெருப்பைச் சென்று கிட்டுவாரைப் போலே
ஓங்கிப் பரப்பு அடங்கலும் புஷ்பமேயாய்க் கிடக்க –
தத் ஜீவனத்திலே நைராயம் விளைந்தமை தோற்றி இருக்கிறது
மலர் உழக்கி –
இவளுக்கு நெருப்பான பூ அவற்றுக்கு
அள்ளல் சேறு பட்டது படா நின்றது –
அல்லியும் தேனும் தாதும் சுண்ணமும் ஒன்றாக உழறா நின்றது ஆயிற்று –
புஷ்பம் என்றால் கூசி அடி இட வேண்டாவே அவற்றுக்கு
புன்னை மேல் உற்ற பூம் குயில்காள்-6-1-6 -என்னுமா போலே
நெருப்பிலே அடி இட்டாப் போலே இருக்கும் இறே இவளுக்கு-
(நான்கு பதிகம் தூது நம்மாழ்வார் இவரோ நான்கே பாடல்களில் தூது )
நம்முடைய நெருப்பிலே அடி இடுகைக்கு ஹேது என் என்று விசாரித்துப் பார்த்தாள் –
அக்நி ஸ்தம்பந மந்த்ரம் நடுவிலே உண்டாய் இருந்தது –
(பிரிந்த இவளுக்கு நெருப்பு மிதுனமாய் இருந்ததால் அவை )
அம்மந்த்ரம் தான் இருக்கிறபடி –
துணை யோடும் –
இருவராய் இருப்பார்க்கு பூவும் பொறுக்கும் ஆகாதே –
என்னைப் போலே தூது விடாதே கூட வர்த்திக்கப் பெறுவதே –
துணை யோடும் –
தம் தாம் ஸ்வரூபம் இருக்கிறபடி-(தன் வாசனை)
துணை என்றால் ஒரு தலை கழுத்துட்டியாய் ஒரு தலை
ரஷகமாயே காணும் இருப்பது –
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை யாக இருக்கக் கடவது இறே
சிறியாத்தான் -துணை -என்றால் -த்வி நிஷ்டம் அற்று ஏகாஸ்ரயத்தில் கிடக்கும் -என்னுமா
உன்னைப் பிரிந்தார் என்ன வேண்டும் ஸ்தானத்திலே துணை பிரிந்தார் என்கிறது இறே
இப்போதும் துணை -என்கிறது இங்கு சேவலை —
பிரியாதே –
இவ்வர்த்தம் முன்னம் ஓர் இடத்திலே உண்டாகப் பெற்றோமே
(என்னையும் பிரியாமல் பண்ண வேண்டாவோ )
தூ விரிய மலர் உழக்கி துணை யோடும் பிரியாதே –
இது என்ன நோய் ஆசை தான் –
(பிரிந்தால் தானே சேர்த்தி ருசிக்கும் )
மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –
பூ விரிய மது நுகரும்
செருக்கராய் இருக்கும் ராஜ புத்ரர்கள்
முசிந்த படுக்கையை காற்கடை கொண்டு
செவ்விப் படுக்கையிலே செண்டேறுமா -சென்று ஏறுமா -போலே
கழிய அலர்ந்த பூவில் நின்றும் போய் செவ்விப் பூவிலே
படிந்து காணும் மது பானம் பண்ணுகிறது –
இவற்றினுடைய பிரவேசமும் பூ அலருகையும் ஒத்தாயிற்று இருப்பது –
தென்றலோபாதி -ஆதித்ய க்ரணத்தோபாதி காலத்தோபாதி
இவற்றின் உடைய சந்நிதியும் பூவினிடைய விகாசத்துக்கு
உறுப்பாய் இருக்க –
க்ருத சங்கேதராய் இருப்பார் உள்ளே நின்று தன்னைத் தொட்டவாறே
திறக்குமா போலே
இவற்றின் சிறகின் காற்றாலே அலரும்படியாய் இருக்க –
பூ விரிய –
இவற்றின் உடைய வரவு புஷ்பத்தின் உடைய
சங்கோச ஹேதுவாய் அன்றிக்கே விகாச ஹேதுவுமாயும்
நின்றதாயிற்று –
(பாகவதர் சந்நிதியில் -ஹ்ருதய கமலம் மலரும் ஸ்வா பதேசம் )
மது நுகரும் –
ந மாம்சம் ராமோ புங்க்தே ந சாபி மது –
உபாசன க்ருசாய் இருக்கிற படிக்கு எதிர்தட்டாய் இரா நின்றதீ –
உன் படி -அத்தைப் பழி இடுகிறாள்
ஒன்றுக்கு ஓன்று சம்ஸ்லேஷார்தமாக பலா தானம் பண்ணுகிறபடி
(ஒன்றுக்கு ஓன்று ஊட்டி விட்டு -அணைக்க பலம் வேண்டுமே)
நுகரும் –
மது பானம் பண்ணிற்றாய் மீளுவதொரு போது இல்லையே
தனக்கு தான் மது பானம் பண்ணில் இறே மீளுவது –
ஒன்றுக்கு ஓன்று பரார்த்தமாக இறே புஜிப்பது-
ஒன்றுக்காக ஒரு கலத்தில் எடுக்குமா போலே மிடற்றுக்கு
கீழே இழியல் இறே தெகட்டி மீளுவது
இனி தான் தேன் தான் தாரகமாக இழிந்த ஓன்று அன்றே
கூட ஒன்றைத் தொட்டுக் கொண்டு இருக்க கை
தொடுமான போது மது சொட்ட தொட்டன்றோ –
என்னையும் இப்படி புஜிப்பித்து புஜித்தால் அன்றோ
உங்கள் போகத்துக்கு செலவு உள்ளது –
இரவு உண்ணாதாரை ஊட்டி உண்ண வேண்டாவோ –
இது என் குறை அற்று வர்த்திக்கை தான் –
பொறி வரிய –
பொறியையும் வரியையும் உடைத்தான வண்டே
உம் சம்ஸ்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே
தொட்டுக் கொள்ளலாம் படி இருக்கை –
கடகராய் இருப்பார் உடைய தேக குணத்தோடு
ஆத்ம குணத்தோடு வாசி யற உத்தேஸ்யமாய் கொண்டது இறே
சேர்ப்பார் பக்கல் ஜாத்யால் வரும் தண்மை பார்க்கக் கூடாதே
சிறு வண்டே –
இவள் கார்யம் செய்க்கைக்கு முன்பே சிரமம் செய்து
இருப்பாரைப் போலே வடிவு சிறித்து இருந்ததாயிற்று –
கார்ய காலத்தில் வந்தவாறே அணுத்வத்தை ஏறிட்டுக்
கொள்ள வேண்டாதபடி இருக்கும் –
ப்ருஷதம் சக மாத்ர பஹு வ அத்புத தரிசன -என்று சிருக்கன் ஆனான் இறே
சசார நாநா வித வேஷ தாரீ -என்ன வேண்டா வாயிற்று இவற்றுக்கு –
பொறி வரிய -இத்யாதி –
ப்ராசம்த மஹா கபிம்-என்னுமா போலே –
ஏத்த ஏத்த எங்கு எய்தும்-4-3-10- நிலை இறே இவனது –
கடலை வற்ற இறைக்கக் கோலுவாரோபாதி கிடீர் என்கிறார்
ததஸ்தா
திருவடி ராம விருத்தாந்தம் சொல்ல கேட்ட அநந்தரம் உளள் ஆனாள் –
திதிர்மிணி தர்மாஸ் சிந்த்யந்தே -இதி யாயேன
சத்தை உண்டாக உண்டாக மது உண்டாயிற்று
பாலா –
ஹர்ஷம் பொறுக்க ஒண்ணாதவள் ஆயிற்று
பர்த்து சந்தேச ஹர்ஷிதா –
ரஷகரான ராம விருத்தாந்தம் கேட்டு ஹ்ருஷ்டை யானாள் –
பரி துஷ்டா –
அந்த ஹர்ஷம் புற வெள்ளம் இட்டபடி
விசாலாஷீ ப்ரா சம்சத –
ஏத்தத் துடங்கினாள்
மஹா கபிம்-
கடலை வற்ற இறைக்கக் கோலுருவாரைப் போலே-
இப்படிச் சொன்னவாறே உண்டு லஜ்ஜித்து நீ ஏவிற்று செய்ய இருக்கிற எங்களை
ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் –
உன்னோடு கலந்து பிரிந்து உன் தசையைக் கண்டும் இரங்காதே-இராதே போனவன்
எங்கள் வார்த்தையைக் கேட்குமோ -என்று அன்றோ
எங்களுக்கு விலம்பம்
என்றனவாகக் கொண்டு மேல் வார்த்தை சொல்கிறாள்
தீ விரிய இத்யாதி –
நீங்கள் அது நினைக்க வேண்டா
அவ் ஊரில் உள்ளார் தார்மிகராயிற்று இருப்பது-
நீங்கள் என் தசையை அங்கே அறிவிக்க
அவனைப் புறப்பட விடுவார்கள் –
ஸ்திரீ காதுகனாய் இருக்கிறவன் நடுவேயோ நாம் யஜிக்கிறது
என்று புறப்பட விடுவார்கள்-
அறிவிக்கும் அதுவே வேண்டுவது -என்கிறாள்
நொந்தாரை -ஐயோ -என்கிறவர்களாய்
யுக்த காரிகள் அடங்கலும் திரண்ட தேசம் காணும் கோள்
புறப்பட விடுவார்கள்
புறப்பட விட்டால் பின்னை அவனுக்கு நான் அல்லது ஸ்திதி இல்லையே
தீ விரிய -இத்யாதி –
அலர்ந்த தாமரை போலே அக்நி விஸ்தருதாம் படி
வேத-வைதிக மரியாதை குறைவற நடத்துகையால் வந்த
புகழை உடையவர்கள் உடைய திரு வாலியில்-
வேத வித்துக்கள் திரண்ட இடம் ஆயிற்று –
உங்கள் வடிவைக் காட்டி -ஸ்திரீ காதுகன் கிடிகோள் இவன் -என்று
பழி சொல்லிப் போருங்கோள் நீங்கள் –
நாங்கள் சென்று அறிவித்தாலும்
அவன் தான் வருவானானாலும்
வழியிலே பிரபல பிரதிபந்தகங்கள் உண்டாகில் செய்யலாவது இல்லையே -என்ன
அது கவலை வேண்டா – வில் இருக்க -என்கிறாள்
வரப் புக்கால் பிரதிபந்தம் ஒன்றும் கிடாது அவனுக்கு-
(அவனே பிரதிபந்தகங்களையும் போக்கி தன்னையும் நமக்குத் தருபவன் அன்றோ
ஈஸ்வர ப்ரீதி கோபமே புண்ணியமும் பாபமும் -சார்ங்க வில் சேவகன் அன்றோ )
ஏ வரி வெஞ்சிலையானுக்கு
ஆர்த்தி த்வனி செவிப்படாமல் அன்றோ கையில் வில் பிடித்தது
ஆரேனுயுமாக கையிலே வில் பிடித்தாரை யுத்தத்திலே மூட்டுமதாய்
கட்டை உடைத்தாகையாலே வரி வரிப்பட்டு தர்ச நீயமுமாய்
பிடித்த பிடியில் எதிரிகள் குடல் குழம்பும்படியான வில்லைக்
கையிலே உடையவனுக்கு-
(சேர பாண்டியன் வார்த்தை -விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல் )
தூது போகிற எங்கள் படி சொன்னாய் –
நாங்கள் போய் அறிவிக்கிறவன் படி சொன்னாய்-
உன் வார்த்தையாக நாங்கள் அவனுக்கு சொல்லுவது என் என்ன –
என் நிலைமை –
பாசுரம் இல்லாததுக்கு என்னால் பாசுரம் இடப் போமோ –
என் வடிவு இருக்கிறபடி கண்டி கோளே
(படி எடுத்துச் சொல்லும் படியோ -விரஹம் தின்ற வடிவு )
இனி நீங்களே பாசுரம் இட்டு சொல்லும் இத்தனை –
தன்னிலும் தன்னைக் கண்டார்க்கு பாசுரம் இட்டு சொல்லாம் என்று இருக்கிறாள்-
ஒரு ஐந்தர வ்யாபரண பண்டிதனோபாதியாக காணும் இவள் தான் இத்தை நினைத்து இருக்கிறாள்-
(ராமன் கமல பத்ராக்ஷன் இத்யாதி திருவடி சொல்லக் கேட்டு மகிழ்ந்தாள் சீதாபிராட்டி )
உரையாயே
ஒரு கந்தர்வன் துர்யோதனை கட்டிக் கொண்டு போகா நிற்கச் செய்தே
தர்ம புத்திரன் பேரைச் சொல்லிக் கூப்பிட அவனைப் பின்னை
ஆன்ரு சம்சயத்தாலே மீட்டான் -என்னா நின்றது இறே
(கூப்பீடு கேட்டால் ரக்ஷிக்கப்படுவதுக்கு த்ருஷ்டாந்தம் )
அங்கன் அன்றிக்கே
தன்னை ஆசைப்பட்டு
பிரிந்து இருந்து
நோவு படுகிற படியைக் கேட்டால்
உதவாத ஸ்வ பாவனோ -என்கிறாள்
உரையாயே
கொடு வர வேண்டா
அறிவிக்கும் அத்தனை இறே இத் தலைக்கு வேண்டுவது –
கிருபை வருகை-அவன் பணியே
வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம்
உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-
——————————————————-
புருஷகார வாசனையால் பெண் வண்டை முதலில்
இதில் ஆண் வண்டை தூது
பேடையை முன்னிட்டே கார்யம் கொள்வார்கள்
சேவலை -அத்துடன் கூடிய -இத்தை தூது
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-
பிணி யவிழும் நறு நீல மலர் கிழியப்-
இதினுடைய பிரவேசம் பாதியும் காலம் பாதியுமாக வாயிற்று
பூவில் பிணி அவிழ்வது
கழிய அலர்ந்து போனவற்றுக்கும்
பிஞ்சாய் பருவம் இளைதானவற்றுக்கும்
வாசி அறிந்து இருக்கை
இத்தால் அவன் வாய் விடும் போதே
அவன் கருத்து அறிந்து பரிகரிக்க வற்று -என்கை
(அவாக்ய அனாதர பர ப்ரஹ்மம் பரகால நாயகி பற்றி பேச ஆரம்பித்ததும்
விகாரம் அறியுமவை இவை -என்றவாறு )
பிணி யவிழும் நறு நீல மலர் கிழியப்–
கட்டு அவிழா நின்றுள்ள செவ்வியை உடைத்தான
நீல மலர் கிழியும்படியாக வாயிற்று மது பானம் பண்ணுகிறது
ஆவது என் என்னில்
போக விடுகிற இடத்தில் அளவு அறிந்து கார்யம் செய்ய வற்று என்கை –
மலர் கிழிய
பேணிக் கலக்க வறியாயாய் ஆயிற்று
தன் செருக்காலே தன் படுக்கை என்றும் பாராதே
அழித்து பொகடுகிறது ஆயிற்று
இவை தான் அங்கு ஜபிக்கைக்கு புகுவன அன்றே
கார்யப்பாடு அற்று கலக்கிறவற்றுக்கு மற்று ஓன்று தெரியாது இறே
உன்மத்தங்காய் தின்று இருப்பார்க்கு நெஞ்சு இருண்டு வேறு உண்டு தெரியாது இருக்கும் இறே
அந்த உன்மத்தங்காய் என்ன என்றால்
பெடை யொடும் –
இவை தனக்கு ஒரு படுக்கை வேண்டா-
ஆகாசத்தே கலக்க வற்று காணும்
ஒன்றின் உடம்பு இறே ஒன்றுக்கு படுக்கை –
தவாங்கே சமுபாவிசம் என்னுமா போலே –
(மந்தாகினி நதிக்கரையில் சித்ரகூட புறச் சோலையிலே திருமுடியில் அமர்ந்தேன் —
ஸ்ரீ லஷ்மீ நரசிம்மன் வலது மடியில் லஷ்மீ நரசிம்மர் இங்கே
உக்ர நரசிம்மன் -திருக்குறையலூர்
வீர நரசிம்மன் மங்கை மடம்
யோக ஹிரண்ய நரசிம்மன் -திரு நகரி -பஞ்ச நரசிம்மர் சேவை உண்டே
ஆலிங்கனம் பண்ணிக் கொண்ட இடம் திருவாலி
இத்தை நினைத்தே இந்த பாசுரம்
திருவாலி நகராளன்
பூர்ண வல்லித் தாயார் அம்ருத கட வல்லித் தாயார்
லாஷன தீர்த்தம்
இலை அமுது கூடம் அருகில் உண்டே -)
அணி மலர் மேல் மது நுகரும் –
செறிந்த பூவிலே இருந்து மது பானம் பண்ணா நிற்கும் –
ஒரு பூவிலே இருந்து மதுபானம் பண்ணா நின்றால்
மற்றைப் பூவில் போம் போது பரந்து போக வேண்டாதபடி இருக்கை –
பொய்கை அடங்க பரப்பு மாறப் பூத்து
ஒன்றோடு ஓன்று நெருங்கிக் கிடக்கையாலே
ஒன்றில் நின்றும் மற்றையதில் போம் போது
நடந்து சென்று மது பானம் பண்ணலாய் இருக்கை –
பூவில் செறிவு தேட்டமாய் மதுபானம் பண்ணும் இதுவே
யாத்ரையாய் இருப்பதே உங்களுக்கு –
அறு கால
இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே
ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம்
தலைக் கட்டலாம் இறே –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று
சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –
(ஞானம் பக்தி மஹிமை எல்லை காண முடியாத நாதமுனிகள் இங்கும் அங்கும் ஆளவந்தார்
வீசும் சிறு கால் -பறப்பவை அன்றோ –
ஆச்சார்யர் -தர்ம பத்னி -திருக்குமாரர் -ஆறு கால்கள் )
என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்
சரணவ் என்று மிறுக்குப் பட வேண்டாதபடியாய் இருக்கை –
(குறைத்து த்வி வசனம்-பட வேண்டாதபடியாய் இருக்கை –த்வயம் ஷட் பதம் )
சிறு வண்டே –
கார்ய வாய்ப்பு பெருத்து
எம்பார் திரு மேனி போலே வடிவு சிறித்து இரா நின்றதாயிற்று-
(சிறு மா மானிடராய் என்னை ஆண்டார் அங்கே திரியவே )
மணி கெழு நீர் மருங்கலரும்
மணிகளும் செங்கழு நீருமாயிற்று பர்யந்தங்கள் அடங்கலும் இருப்பது –
அன்றிக்கே
மணி என்று அழகாய் அழகிய செங்கழு நீர் அலரும்-என்னுதல் –
மணி கழுநீர் இத்யாதி –
அழகிய செங்கழு நீர்களானவை அலரா நின்றுள்ள
பர்யந்தங்களை உடைத்தான வயலாலே சூழ்ந்த
திருவாலியிலே வந்து இருந்தவன் –
அன்றிக்கே
நீர்களானவை கொழித்து எறடா நின்றுள்ள மணிகளையும்
செங்கழு நீரையும் உடைத்தான பர்யந்தங்கள் என்றுமாம் –
வயலாலி மணவாளன் பணி யறியேன் –
(பணி செயல்-உக்தி- சொல் ஓன்று பணித்தது உண்டு போல் )
1-என்னை அணைக்கையே தொழிலாய்
இங்கு ஏற வருகையில் ஒருபடிப்பட்டு இருக்கிறானோ
அன்றிக்கே
2-ஜாம்பவதி போல்வார்க்கு பூப் பறித்து தொடா நிற்குமோ அறியேன் –
அன்றிக்கே
3-பணி என்று
சகுந்தலையை உபேஷித்த துஷ்யந்தனைப் போலே
அறியாமை பாவித்து இருக்குமோ -அதுவும் அறியேன்
அன்றிக்கே
4-நா விலும் பல்லிலும் நீர் அற்று -என் செய்தாள் – என் பட்டாள் –
என்று கேட்கிறானோ
உக்தியிலும் கிரியையிலும் கொள்ளக் கடவது –
அவன் படி நிச்சயிக்க ஒண்ணா விட்டாலும்
நமக்கு அவனை ஒழிய செல்லாது இறே –
நீ சென்று –
அவன் படி நிச்சயிக்க ஒண்ணாதே ஆகிலும் –
நமக்கு முன்னம் அவனைப் போலே இருக்க ஒண்ணாது இறே
அவனுக்கு நம்மை ஒழிய செல்லும் என்னா
நமக்கும் அவனை ஒழிய செல்ல ஒண்ணாதே
நீ சென்று –
முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –
அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –
(சென்று தென் இலங்கை செற்றானே –வந்து மனம் புகுவானே –
பரகத ஸ்வீகாரம் வேண்டும் என்று சொன்னீரே
சென்று நாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்வானே
நிறைவு அழிந்தேன் -)
அங்கு போனால் சொல்லுமது தான் என் என்னில் –
என் பயலை நோய் உரையாயே –
ததா ஸீன் நிஷ் ப்ரபோத்யர்த்தம் ராஹூ க்ரச்த இவ அம்சுமான் –
என்று பெருமாளுடைய ஆற்றாமையை மகா ராஜருக்கு
இளைய பெருமாள் அறிவிக்க -அவ்வார்த்தை செவிப்பட்டு அழிந்த அழிந்த அளவு தோறும்
உடம்பு வெளுத்து வந்தது இறே
அப்படியே என்னுடைய உடம்பில் வைவர்ண்யமும்
அவன் உடம்பிலே காணும்படி வார்த்தை சொல்லு
பயலை நோயை உரை –
வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு
சொல்லவற்றுக் காணும் இவை தான் –
(ஆச்சார்யர் பிரபாவம் இது அன்றோ )
என் பயலை நோய் உரையாயே –
என் உடம்பு அடைய வைவர்ண்யம் பரந்து இருக்கிறபடியை சொல்லு
உன்னுடைய சொல் கலந்த இடமடைய வைவர்ண்யம்
பரக்கும்படியாக சொல்லிப் போரு-என்கிறாள்
என் பயலை நோய் உரையாயே
ஸ்வ தந்த்ரர் படி கொண்டு கார்யம் என் நமக்கு
நீ சென்று இத்தனையும் அறிவித்துப் போராய்-
(அவர் பணி எவ்வாறு இருந்தாலும்
ஆச்சார்யர் திருவடி பலத்தால் பேறு நிச்சயம் அன்றோ )
————————————————————
வண்டானது மென் மலர் பள்ளி படுக்கை வாய்ப்பாலும்
உன்மத்தங்காய் பெண்ணுடன் இருக்கையாலே
மது பான மத்தாய் இருக்கவும்
அவற்றை விட்டு குருகைத் தூது விடுகிறாள்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-
ப்ரஹ்மம் என்றே உண்மை -காரண கார்ய நிபந்தன சாமானாதி கரண்யம்
பெருந் தகையேற்கு -பெறில் ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடைய அடியேற்கு-
பிருத்வ்யாதி பஞ்ச பூதகங்களையும்
கார்ய யோக்யமாம்படி ஒன்றோடு ஓன்று சேர்த்து
அவற்றுக்கு ஒரு வஸ்துத்வமும் நாமமும் உண்டாம்படி
தான் அவற்றுக்கு உள்ளே புக்கு நின்று
பின்னை அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து
பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –
(க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞன்–சா அபி மாம் வித்தி -இதுவும் –இரண்டும் சரீரம் –
அந்தராத்மாவாக உள்ளேன் -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம –
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் சர்வ சப்த வாஸ்யன் –
சரீராத்மா பாவம் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -)
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-
ஆசை இல்லாத ஜகத்தையும்
தான் ஆசைப்படுமவன் ஆயிற்று-
பிருத்வ்யாதி பூத பஞ்சகங்களையும் உண்டாக்கி
அவற்றுக்கு கார்ய யோக்யதை உண்டாக்கும்படி
நீரையும் சதுகையும் மண்ணையும் கூட்டி துகைத்து விட
சராவாதி கார்யங்களாக நிர்மிக்குமா போலே
அத்தோடே சேதன சமஷ்டியைக் கூட்டி
தேவாதி கார்யத்தை அடைய உண்டாக்கி –
உண்டான இவற்றின் உடைய சத்தா ஹேதுவாகத் தான்
அந்தராத்மதயா அனு பிரவேசித்து அவற்றைச் சொல்லும் சொல்லு
தன்னையே சொல்லிற்றாம்படி நிற்கும் நிலையை சொல்லுகிறது –
நாட்டில் கடபடாதி பதார்த்தங்கள் பரமாத்மா பர்யந்த அபிதானம்
பண்ணி அல்லாது இராது இறே
தத் ஸ்ருஷ்ட்வா இத்யாதி –
இவற்றை சிருஷ்டித்து
இவற்றின் உள்ளே அனு பிரவேசித்து
அந்த அனு பிரவேசத்தாலே சித்தும் அசித்தும் தான் என்று
சொல்லலாம்படி நிற்கிறவன் ஆயிற்று –
நெடுமால் –
தன் பக்கல் அனுகூல்ய லேசம் இல்லாத ஜகத்தின்
பக்கலிலும் தான் மிக்க வ்யாமோஹத்தைப் பண்ணி இருக்குமவன்-
தன் தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே –
தன் பக்கல் ஆசை இல்லாதாரையும் விட மாட்டாதே
இருக்கிறவனுக்கு நான்
பிரிந்து இருந்து ஆசைப் பட்டு தூது விடுகிறதோ குற்றம் –
தான் விஷயீ கரிக்கில் உளேனாய்
இல்லையாகில் இல்லையாம்படி இருக்கிற எனக்கு –
தன் தோளில் இட்ட செவ்வி மாலை பெறில் ஜீவித்து
பெறாவிடில் முடியும் படியாய் இருக்கிற எனக்கு –
தன் தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு –
என்று தன் ஸ்வரூபத்தை சொன்ன படி -என் தான் –
(துளஸீ மாலாதரன் -ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபகம் )
அருளானே –
ப்ரணயிநி யார்த்தி பரிஹரிக்கும் அது போனால்
நாட்டு ஒப்பான அருளும் அன்றிக்கே ஒழிய வேணுமோ –
தன் தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே –
தனக்கே அசாதாரணமாய்
தாரை உடைத்தாய் இருந்துள்ள
செவ்வித் திருத் துழாயைப் பெறில் உளேனாய்
இல்லையாகில் இல்லையாம்படியாய் இருக்கிற
என் பக்கலில் கிருபை பண்ணானோ –
கந்தல் கழிந்தால் பின்னை
திருத் துழாயோபாதி -கௌஸ்துபத்தோபாதி -ஸ்ப்ருஹணீயமாய் யாயிற்று
வஸ்து ஸ்வபாவம் இருப்பது –
அருளானே –
(யுகபத்யம் -ஒரே சமயத்தில் ஸ்ருஷ்ட்டி -அனுக்ரஹ கார்யம்- )
சாமான்ய ரஷணம் தப்ப நில்லாதவன் –
விசேஷ ரஷண நிலை தப்ப நிற்குமோ –
ஆசை இல்லாத பிருத்வி யாதிகளையும் கிருபையால் அருளினவன் என் பக்கல் அருளாது நெகிழ நிற்குமோ
அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும்
அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
வாழ்ந்தாருக்கு கெட்டாரை எடுக்க வேண்டாவோ –
சீராரும் வளர் பொழில் சூழ்
வளர் இளம் கிளர் சோலை -8-9-4–என்கிறபடியே ஊரில்
சம்ருத்தி அடைய சோலையே கோள் சொல்லித் தரும்படியாய் இருக்கை
வளர் பொழில் –
வளர் இளம் பொழில் -என்னுமா போலே
வளர வளர முதுமை இன்றிக்கே இளகிப் பதித்து இருக்கை –
ஐஸ்வர்யத்தின் உடைய சம்ருத்தியை தெரிவியா நின்றுள்ள
வளர்ந்த பொழிலாலே சூழப்பட்ட திருவாலியில் வாழுகிற
சிறு குருகே-
அங்குத்தை வர்த்தனம் தானே வாழ்ச்சியாய் இருக்கை –
கோயில் வாசம் போலே
(கோயிலில் வாழும் வைஷ்ணவன் )
கூர் வாய சிறு குருகே-
கூரிய வாய் அலகை உடைய சிறிய குருகே என்னுதல்-
அன்றிக்கே
அறுதிப்பாடு உடைத்தான வார்த்தை சொல்ல வல்ல குருகே என்னுதல் –
ராஜ புத்ரர்களைக் கண்டு அஞ்சி நாலு மூன்று யோசனை ஓடிப் போன
மகாராஜர் வந்து கிட்டி
ஏகம் துக்கம் சுகம் ஸ்நௌ-என்று நிற்கும்படிக்கு ஈடாக விறே வார்த்தை சொல்லிற்று-
(கூர்வாய சிறு குருகு ஆச்சார்யர் உபதேசம் -ஸ்வா பதேச அர்த்தம் )
குறிப்பறிந்து கூறாயே
அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் –
நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம்
அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து
வார்த்தை சொல் என்றுமாம் –
மிகச் சொல்லில் அவனைக் கிடையாது
அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால்
நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க
நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் –
நாம் முடிந்து பிழைக்கும் படி —
———————————————————
கீழ் குருகை பார்த்து
வண்டுகள் முகம் காட்டி
அவன் உன் படி அறிந்து வைத்தும் உம்மை நினையாது இருந்தான்
நாம் சென்றாலும் பராக்கு பார்த்து இருப்பானே என்று இருந்தோம்
கைங்கர்யம் இழக்க வல்லோம் அல்லோம் என்ன
அறிவித்தால் வருவான் என்கிறாள் –
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-
தானாக நினையானேல் –
வேம்பு -என்பாரைப் போலே
உடைமையை அவனாக நினைக்குமது கிடையாதாகில் –
முறை செய்யானாகில் –
அவனுக்கு ஆஸ்ரிதரை நினையாமை சத்தா பிரயுக்தமாகில் –
தன் சத்தை உண்டாக்கைக்கு ஈடாக நினையானாகில்
என்றுமாம் –
(தான் ஆகையால் -அந்தர்யாமி
தான் ஆகைக்காக–என்றுமாம் -நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன் போல் )
தன் நினைந்து நைவேற்கு –
நாம் அவனைப் போலே ஆக மாட்டோமே
நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப் பெற்றிலோமே
பெறவுமாய் தவிரவுமாய் இருக்கும் விஷயம் ஆகில் இறே
அனுசந்தித்தால் தரித்து இருக்கல் ஆவது –
இதர விசஜாதீயமாய் இருக்கும் விஷயமாகையாலே
அனுசந்தித்த அநந்தரம் நோவு படும் அத்தனை இறே –
ஓர் மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ –
தன்னை ஆசைப்பட்டு நிற்கிற என்னை
மகர த்வஜனோ நலிவான்
அவசியம் நாங்கள் நோவு படுக்கை தவிரோம் ஆகில்
கருளக் கொடி ஒன்றுடையீர் -என்கிற தான் நோவு படுத்த
நோவு பட்டால் என் செய்ய வேணும் –
(மீனக் கொடி உடையானை அனுப்புவாயோ )
பிரவேசத்தில் ஜீயர் வார்த்தையை நினைப்பது-
(காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால்
பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ)
தேன் வாய வரி வண்டே –
இனிய பேச்சை உடைய வண்டே –
பிராட்டி சிம்சுபா வ்ருஷத்தில் திருக் குழலை கொடு போய்
பிணைக்கப் புக்க சமயத்திலே அவளுக்கு உதவி –
அவகாஹ் யார்ணவம் ஸ்வப்ஸ்யே-என்கிற சமயத்திலே இவருக்கு வந்து உதவி
இரண்டு தலையும் உண்டாம்படிக்கு ஈடாக வார்த்தை சொல்ல வற்றாய் இருக்கை
அவன் இத்தலையில் வர நினைத்திலன் ஆகிலும் உங்கள்
பேச்சின் இனிமையிலே துவக்குண்டு வரும்படி வார்த்தை சொல்ல வல்லி கோள் இறே
திருவாலி நகராளும் ஆனாயற்கு –
திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே
திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ
என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –
அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை
நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு
(சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் )
அன்றிக்கே
அறியச் சென்று உரை –
உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய
அவன் அறிந்து
நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி
சென்று சொல் என்றுமாம் —
——————————————————–
உருவ வெளிப்பாடு தோற்ற நேராகப் பேச முற்படுகிறார் –
தூது விட்டவள்
முன்னிலையில் சொல்வது எங்கனம்
அத்தலை இத்தலை யாய் -ஏங்கி தன்னை அருமைப்படுத்தினான்
அது தான் போன பின்பு -உரு வெளிப்பாடு -அவன் முன்னே நின்றானாகக் கொண்டு
அவன் தனக்கு வார்த்தை சொல்வதாக மேல் பாட்டுக்கள்
வாளாய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-
அத்தலை இத்தலையாய்
தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க –
தான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று
சொல்லுங்கோள் என்று தூதர்க்கு
வார்த்தை சொல்லப் புக்கு
அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே
நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு
வார்த்தை சொல்லி செல்லுகிறது
மேலில் பாட்டுக்களில் –
ஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் –
தூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு
அங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே
ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே–
(ப்ரஹ்மாஸ்திரம் அன்று காகாசுரனுக்கு -ராவணன் தூக்கி வந்ததை நீ எவ்வாறு பொறுத்துக கொண்டு இருக்கிறாய்
கணையாழி பெற்றதும் அவனையே நேராகக் கண்டு ஆனந்தப் பட்டாள் போலவும் )
வாளாய கண் பனிப்ப –
அப்போது அவனை கடாக்ஷித்து விட்டேன் ஆகில் அவன் தூது விட்டு இருப்பானே
பரிகரம் இருந்தும் இழந்தேன் –
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்கள் படும் எளிவரவே –
புலியாய் வந்து உகிர் முறித்தேன் -என்கிறாள் –
குவளை அம் கண்ணி –போல் -திருத் தாயார் சொல்லுமா போலே சொன்னாலே தன்னைத் தானே –
எல்லார்க்கும் உள்ளது சொல்லலாய் இருக்கும் இறே-
(யதார்த்த வார்த்தை –புண்டரீகாக்ஷ -விதுர வீட்டுக்குப் போனாய் சொன்னானே )
அவன் தான் -இது ஒரு கண் அழகே -என்று சொல்லக் கேட்டு இருக்குமே –
அத்தலைக்கு உறுப்பான ஸ்வ ஸ்வரூபமும் ப்ராப்ய அந்தர்கதமாய் இருக்கும் இறே-
(அவன் விரும்பாத ஒன்றும் வேண்டேன் -நம்மாழ்வார் )
மென்முலைகள் பொன் அரும்ப
முலைக்கு காடிண்யம் ஸ்வபாவமாக இருக்கச் செய்தேயும்
மென்முலை என்கிறது விரஹ சஹம் அல்லாத முலைகள்
பயலை பூக்க –
வாளாய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப –
தன்னைக் கண்டு கொண்டு இருக்கும்படி அமைந்து இருக்கிறது காணும்
இவள் தனக்கும் –
இவள் தனக்கும் அமையும்
அவன் தனக்கும் அமையும்
சர்வ தேஹிபி இறே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு–ஸ்ரீ விஷ்ணு தத்வ ஸ்லோகம் –
பகவத் குண அனுபவ -ஜனித -ஹர்ஷ -பிரகர்ஷத்தாலே
குளிர்ந்த கண்ண நீரும் தானுமாய் இருக்கை –
புளகீக்ருதாத்ரா
த்ரி சரமும் பஞ்ச சரமும் இட்டாப் போலே இருக்கை
பரகுணாவிஷ்ட –
உள்ளீடும் உண்டாய் இருக்கை –
த்ரஷ்டவ்யஸ் சர்வதேஹிபி —
இப்படி இருப்பான் ஒருவன் உளன் ஆனால்
அவனை யாயிற்று சரீர பரிக்ரகம் பண்ணி வைத்தால் பிரயோஜனம்
ததா த்ரஷ்டவ்ய –
இனி சதா தர்சனத்துக்கு ஒரு தேச விசேஷம் தேடிச்
சோறு பொதித்துக் கொண்டு அறுகாத பயணம் போக வேண்டா –
வினை மேல் பிரிவு இல்லை பார்த்துக் கொண்டே இருப்பது தான் கர்தவ்யம்
வேறே வேலை இல்லை
பொருளுக்காக பிரிந்தான் என்றால்
அவனுக்கு பொருளை இட்டு பிரிய வேண்டா
பிரிகிறது பொருளுக்காகவே –
இம் முத்தையும் பொன்னையும் கொள்-என்று பாரித்து
காட்டினால் போலே யாயிற்று
கண்ண நீரும் உடம்பில் வைவர்ண்யமும் இருக்கிற படி –
ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -திரு விருத்தம் -11-என்னக் கடவது இறே-
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு-
வரவு தாழ்வுக்கு உன்னை ஒரு நாள் நினைத்து
மற்று ஒரு நாள் மற்று ஒன்றை நினைக்கிறேனோ –
நாள் நாளும் –
ஒரு நாள் நோவு பட்டு ஒரு நாள் சுகித்து இருக்கிறேனோ –
நின் நினைந்து நைவேற்கு–
என்னை அன்றோ நீ அறியாதது
உம்மை நீர் அறியீரோ –
நம்மைப் பிரிந்தார் தரித்து இருக்க மாட்டார்கள் என்று இருக்க வேண்டாவோ –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –
நின் நினைந்து நைவேற்கு–
அனுசந்தியா மடியேற்க்குமவளோ நானோ –
தேஹிமே -என்கிற இது ஆற்றாமையிலே கிடக்கிறது–
ஒ மண்ணளந்த தாளாளா !
அபேஷை இல்லாதார் தலை மேலே வைத்த திருவடிகள்
இப் பொன் பூத்த முலைகளுக்கு அறிதாவதே –
ஒ மண்ணளந்த தாளாளா ! –
ஆர் அபேஷிக்கத்தான் நீ அன்று எல்லார் தலை மேலும் திருவடிகளை வைத்தது –
ஆர் கண்ணில் கண்ணநீரும்
ஆர் உடம்பில் வைவர்ண்யமும் கண்டு தான்
திருவடிகளை கொண்டு வந்து வைத்தது –
உன்னைப் பெறாத விகிர்தமாய்-விவர்ணமாய் – இருக்கிற இம்முலை மேலே
திருவடிகளை வைத்தால் ஆகாதோ —
தண் குடந்தை நகராளா !-
அதற்குப் பிற்பட்டாரும் இழவாமைக்கு வந்து இருக்கிற
தன்னேற்றம் தான் பெறலாகாதோ
தண் குடந்தை நகராளா !–
இன்னம் எல்லை நடப்பித்துக் கொள்வார் ஆரேனும் உண்டோ -என்று
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே வந்து சாய்ந்தபடி-
வரை எடுத்த தோளாளா ! –
அங்கன் பிற்பாடர் என்கிற பொது அன்றிக்கே விசேஷித்து
என் பருவத்தில் பெண்களையும் இடையரையும் ரஷித்தவன் அன்றோ –
வரை எடுத்த தோளாளா ! —
பசுக்களும் இடையரும் வர்ஷத்திலே தொலையப் புக
மலையை எடுத்துப் பரிகரித்தான் ஆயிற்று –
ஆஸ்ரிதருக்கு பணி செய்த தழும்பாயிற்று திருமேனி அடையக் கிடப்பது-
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி -தழும்பிருந்த
பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் -முதல் திருவந்தாதி -23-
நம்மை சிலர் கட்டுகையாவது என் –
நாம் சிலருக்கு கட்டுண்கையாவது என் –
இது பின் நாடு அறிகையாவது என் –
என்னா அத்தை மறைக்கப் புக்கான் –
ஒரு தழும்பாகில் அன்றோ உன்னால் மறைக்கல் ஆவது
உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காக கார்யம் செய்ததால் வந்த தழும்பு அன்றோ -என்கிறாள் –
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை –
அழகிய திருக் கையானது ஜ்யாகிண கர்க்கசமாய்க் கிடக்கும்
அழகிய திருக் கையானது ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால்
வந்த தழும்பைச் சுமந்தது –
திருவடிகள் ஆனவை சகடாசுர நிரசனம் பண்ணி அத்தால்
வந்த தழும்பைச் சுமந்தது –
இனி வீங்கோத வண்ணர் விரல் செய்தது என் என்றால் —
பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்
கிளர்த்தியை உடைத்தான ஓதம் போலே இருந்துள்ள
வடிவை உடையவர் ஆனவருடைய திரு விரலானது
பிராட்டிக்கு ஆக இறே சிறுக்கனுக்கு விரோதியான
ஹிரண்யனை பிளந்து பொகட்டது-
அப்படிப் பட்டவளும் கூட விளைவது அறியாதே இது என்னாகப்
புகுகிறதோ
என்று அஞ்சும்படி ஹிரண்யன் மார்பை பிளந்து பொகட்ட தழும்பு இருந்த –
உன்னை அழித்து ஆஸ்ரிதர்க்காகப் பார்த்த நீ –
என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !
அந் நொய்ய கோவர்த்தன கிரியைப் பொகட்டு
என் ஆற்றாமையிலே பாதியை சுமக்க வல்லையே
துணையா ளானாகாயே !-என்றது
ஆக வேணும் என்றபடி
திருவடியையும் திருத்தோள்களையும் காட்டினாள் போதும்
தோடு இட்ட சுவடு இருக்குமே
இவற்றைக் காட்டி அருள்
ஓ மூன்று இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
——————————————————
கீழே முன்னிலை
வராததால் வளைகள் கழன்று போக
முன்னிருந்தவன் கழற்றிக் கொண்டு போனதாக நொந்து
இப்பாசுரம் –
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
(மது விரி துழாய் முடி மாதவன் -சர்வேஸ்வரன்
தோளில் -சாத்தி காதலிக்கு
திருவடிகளில் சேஷ பூதருக்கு )
தனக்கு அசாதாராணமான திருத் துழாய் மாலை யானது
மது வெள்ளம் இட்டு சேறாயாயிற்று திரு மார்பு இருப்பது –
திரு மார்பில் சாத்தின திருத் துழாய் மாலையில் தேனும்
சுண்ணமும் பரிமளமும் புறப்பட்டு திரு மார்வு அடங்கலும்
வண்டலிட்டு வண்டுகள் உழுது சேறு செய்து கைக்கும் ஆயிற்று
இனி இவள் பொன்னரும்பின முலைகளைக் கொண்டு வந்து
நடுகைக்கு நல்ல வளவாயிற்று –
இனி முலைகளைக் கொண்டு போய் நடும் இத்தனை –
ஆசை இல்லாதாரே வேணும் போலே காணும் மார்வுக்கு
எப்போதும் ஒக்க அணைக்கலாம் படி யாயிற்று அம்மார்வு இருப்பது-
போரானைக் கொம்பு ஒசித்த –
யுத்த உன்முகமான குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்தவன் –
வரும் இடத்தில் வழியில் பிரதிபந்தகம் தான் உண்டோ –
புட் பாகன்-
பெரிய திருவடியை வாகனமாக உடையவன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன்-
விரோதி நிரசன ஸ்வா பவனுமாய்
தான் வரும் போதே தூரத்தில் கண்டு விடாய் தீரலாம்படியான
பரிகரத்தை உடையவன் –
என்னம்மான் –
சோளேந்திர சிம்ஹனில்-பெருமாள் யானைக்கு திரு நாமம்–இருப்பைக் காட்டி யாயிற்று
இவளை அநன்யார்ஹை ஆக்கிற்று –
தேராரும் நெடு வீதித்-திருவாலி நகராளும்
தனக்கும் தன் பரிகரத்துக்கும் இணைந்து வருகைக்கு வேண்டும்
பரப்புப் போரும் ஆயிற்று திரு வீதி
தன்னேராயிரம் பிள்ளைகளோடே வரலாம் ஆயிற்று –
காராயன்-என்னுடைய கனவளையும் கவர்வானோ
ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி
பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன்
என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –
சம காலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்
உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்
——————————————————–
கழற்றிய வளையை குலுக்கிக் காட்ட
எனது வளைகளுக்கு நான் அன்றோ கடவன் என்கிறாள்
கழற்றிக் கொண்டு போன வளையை குலுக்கிக் கொண்டு முன்னே தோற்ற
என் வளைக்கு நான் கடவள் அல்லையோ என்று அத்தை பறிக்கத் தொடங்குகிறாள்
கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்
பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா !
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-
கொண்டு அரவத் திரை-கோஷமும் அலையும் கொண்டு
கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்
ரஷணத்துக்கு பாங்காய் ஆர்த்தர் உடைய கூக்குரல் கேட்கும்
தேசம் இது என்று திரு உள்ளத்திலே கொண்டு –
ஆரவாரத்தை உடைத்தாய் -கோஷியா நிற்பதாய் -திரைகள்
ஆனவை சஞ்சரியா நிற்பதாய்
பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே
ஒரு குலகிரி சாய்ந்தால் போலே யாயிற்று
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறபடி –
குரை என்று பரப்புக்கு பேர்
அக்கடல் பாழ் தீரும்படி ஒரு குல கிரி சாய்ந்தால் போலே
பண்டு -அரவின் அணைக் கிடந்தது-
மகாபலி போல்வாரால் பூமி நோவு படுவதற்கு முன்பு ஆயிற்று
அப்படுக்கையில் கண் உறங்குவது –
பாரளந்த பண்பாளா !
படுக்கையை விட்டு வந்து
இத்தை அடைய அளந்து கொண்டான் ஆயிற்று –
ஆக -மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு
இந்தரனுக்கு கொடுத்த நீர்மையை உடையவனே-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !-
அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக
ஆயிற்று
திருவாலியிலே வந்து நிற்கிறது
பரிமளம் படிந்தால் போலே வண்டுகள் படிந்து
மது பானம் பண்ணா நின்றுள்ள ஓங்கின பொழிலாலே
சூழப் பட்ட வயலை உடைத்தான திரு வாலியிலே நிற்கிறவனே
திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து
பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று
திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி
இவரை அகப்படுதின படி –
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு –
திருவாலி யிலே உத்தேச்ய வஸ்து சுலபமாயிற்று
என்றவாறே
கண்ணுறக்கம் குடி போயிற்று ஆயிற்று
என் கன வளையும் கடவேனோ!
என் உடம்பில் உள்ளது வேணுமாகில் கொள்ளுகிறாய்
நான் பொன்னிட்டு கொண்ட வளையில் என் பிராப்தி உண்டு
அவனும் பொன் கொடுத்து இறே கொண்டு போகுகிறது -வைவர்ண்யத்தைக் கொடுத்து –
இவனுக்கும் இவள் உடம்பில் உள்ளது கொள்ளும் போது
இவள் மேல் எழுத்து இட வேண்டாம் காணும்
(மேல் எழுந்தது வேண்டா காணும் -மேல் எழுந்த வளையை கொள்ளுவான் என்
சாமான்யமானது கூடாது ஸ்லாக்யமான வளையல் என்றுமாம் )
ஸ்வாபாவிக மானத்தோடு-(என் கண் துயில் கொண்டு) ஔபாதிக மானத்தோடு-(என் கன வளையும்) வாசி
இன்றிக்கே ஏதேனும் இத்தனையோ நீ கொள்ளுகைக்கு
வேண்டுவது –
அவன் இத்தை விரும்பப் புக்கவாறே என்னது என்று
ஒரு தலை தானும் பற்றுகிறாள்-
(ஆழ்வார் தன்னது என்னுமவை எல்லாம் இவனுக்கு உத்தேச்யம் -என்னுடைய பந்தும் தந்து போ போல்
மன் மநா பவா –மாம் நமஸ் குரு-அவன் என்னது என்னிடமே சொல்வது போல் )
—————————————————-
சந்த்ரோதயமும் நிறைய
ஒரு தலை பற்றி மன்றாடா இருக்க
அவன் இவளுக்கு உஜ்ஜீவ கரமாய் நலியவே
கை வளையல் கழன்று விழ
அவ்வளவும் முன்னே இருப்பதாக -போகாமல் இருப்பதாகக் கண்டு
நிறமும் இழந்து -நிறமும் இழக்கப் பண்ண நினைக்கிறாயோ என்கிறாள் –
குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-
அவ் ஊரில் குயில்கள் ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணா நிற்கும் ஆயிற்று
அவ் ஊரில் குயில்கள் ஆனவை மது பானம் பண்ணி களித்து ஆலியா நிற்கும் ஆயிற்று –
இவ் ஊரில் குயில்கள் ஒன்றும் இறே உறாவிக் கிடக்கிறது
இடைப் பெண்கள் அடையக் காணலாம் படி
மன்றிலே குடக் கூத்தாடி தன் அழகை சர்வ ஸ்தானம் பண்ணினவன்
பிற்பாடர் இழவாமைக்காக திருக் குடந்தையிலே சுலபன் ஆனான்
என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று
அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே
உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
(உறங்கா வில்லி என்னலாம் )
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –
ஐ ஹௌ-என்று ஒரு நாளாகா விட வேண்டாவாயிற்று
(நித்ராஞ்ச –தூக்கம் சோம்பல் களைப்பு -அனைத்தையும் ஒரு நாளாகா விட்டார் )
ஆந்த்ர திருஷ்டியும் உறங்காதபடி பண்ண வேணுமோ
இக் கண்ணுக்கு இலக்காகா விட்டால் உட் கண்ணுக்கு இலக்காக வேணுமோ –
நெஞ்சம் என்னும் உட் கண் -பெரிய திரு அந்தாதி -என்னக் கடவது இறே
அணைக்க ஒட்டா விட்டால் அகவாய் பெரிய திரு நாளாய் செல்ல வேணுமோ –
துயர்வேனோ
மறந்து பிழைத்தாலோ நாங்கள்
முயலாலும் இத்யாதி –
சந்திரனே -நீ கை தொடானாய் நலிய வேண்டும்படியோ என் தசை இருக்கிறபடி
தன் கறை கழுவவும் மாட்டாதே
தன் குறை பரிகரிக்கவும் மாட்டாதே
சந்த்ரனுக்கு களை இழந்து அன்றோ நான் இருக்கிறது –
தன் உடம்பில் துள்ளுகிற முயலைப் போக்கவும் மாட்டாதே
பருவம் நிரம்பாதே இருக்கிறவனுக்கு-இள மதிக்கு அன்றோ நான் – வளை இழந்தேற்கு
இது நடுவே இத்யாதி –
விபூதியை -நீ வைத்த ஆளான சந்திரனை -இட்டு நலிகை அன்றிக்கே நீரும் தூசி ஏறப் புக்கீரோ
போரிலே த்வந்த யுத்தம் பண்ணா நிற்கச் செய்தே
நடுவே வந்து பொருவாரைப் போலே-
விடு நகமும்-( கிட்டிக் கோல் ) சம்மட்டியும் இட்டு நலியா நிற்க அது போராது
என்று உடையவன் தானே நலியுமா போலே —
விபூதியை இட்டு நலிகை தவிர்ந்து நீ தானே கை தொடானாய்
நலியப் பார்த்தாயோ –
கொள்வாயோ மணி நிறமே –
அவன் கூட இருந்த போது-இது ஒரு நிறமே -என்று
வாய் புலற்ற கேட்டிருக்குமே -அல்லது தன் வடிவை தானே ஸ்லாக்கிகிறாள் அன்றே-
———————————————————-
அவன் இவளுக்கு முன்னிலையாகத் தோற்றின மாத்திரம்
உரு வெளிப்பாடு தானே
அறியாமல் -அவன் தானே தன்னை வேண்டாது இருக்கிறான் என்று கொண்டு இப்பாசுரம் –
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-
நிலையாளா-நிலைத்து நிற்பவனாக சேஷ பூதராக –
பகவத் பிரீதி காரித கைங்கர்யமே வேணும்
இரண்டாம் பக்ஷம் -என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும்
சத்தை உள்ளதனையும் அவன் திருவடிகளிலே வணங்கி
வர்த்திக்கும் இதுவே யாயிற்று
ஸ்வரூபத்தோடு சேர்ந்த செயலாவது –
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும்-
அது அப்படியே யானாலும் –
இவனும் இப் பேற்றை பெறுவான் என்று -அவன் நினைக்கில் இறே சித்திப்பது –
(அவன் நினைவே கார்யகரம் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )
நின் வணங்க வேண்டாயே யாகிலும்–
கிடைக்கில் பெற வேண்டியது இது காணும் –
கடக்க நின்று -ஒரு பிரயோஜனங்களை கொண்டு போகை அன்றிக்கே –
கிட்ட நின்று அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ண வாயிற்று ஆசைப் படுவது –
பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே
தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே –
நிலையாளா ! நின் வணங்க-என்றத்தாலே பிராப்ய நிஷ்கர்ஷம்
பண்ணிற்று –
அவன் வேண்டி இராத அன்று இப் பேறு கிடையாது இறே
இது நமக்கு உபேஷா விஷயம்
வேம்பு -என்று இருந்தாயே ஆகிலும் –
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
நான் சத்தை கொண்டு நிர்வஹித்தேன் ஆம்படியாக –
கொங்கை கிளர்ந்து குமைத்து -என்று ஷாம காலத்தில்
பிரஜைகள் சோறு சோறு -என்று அலைக்குமா போலே
இம் முலைகளுக்கு ஆற்ற மாட்டாதே நோவு படுவது தவிர்ந்து
என்னுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நிர்வஹித்தேனாம் படி –
முலையாள –
மத்த கஜத்தைக் கட்டி ஆள்வாரைப் போலே என் முலையை
நான் நிர்வஹிக்கைக்காக –
நமக்கு அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பிரயோஜனத்துக்காக
நம்மை இப்படி செய்யச் சொன்னால் அல்லது செய்யப் போமோ என்ன –
ஒரு நாள் –
நித்தியமாய் வருமது தவிருகிறது
ஒரு நாள் பிறர் உகந்த வகைகளில் பரிமாறினால் ஆகாதோ –
பக்தானாம் என்று இருப்பவன் அன்றோ
ஒரு நாள் -பல நாள் வேண்டும் என்று இருக்க வேண்டா -ஒரு நாள் ஆகிலும் அமையும் –
(அவர் வீதி ஒரு நாள் -அருளாளி புள் கடவி )
அவ்வொருநாள் என் நெஞ்சில் இல்லையாகில் செய்யப் போமோ என்ன –
உன் அகலத்தாளாயே-
உன் நெஞ்சை நீ உகந்தார் பக்கலிலே தந்து
உடம்பை கொண்டு அணைய அமையும் –
நெஞ்சை நினைத்தார்க்கு வைப்பது
வேறு மார்பால் எங்களை அணைவது
இப்படி தான் செய்ய வேண்டுகிறது தான் என் என்ன
சிலையாளா ! –
என் ஆர்த்த த்வனி கேளாமைக்காக –
ஷத்ரியைர்த் தார்யதே சாப-என்கிறபடி ஆர்த்த த்வனி கேளாமைக்கு
அன்றோ நீ வில் பிடித்துக் கொண்டு இருப்பது –
நாம் வில் கொண்டு எங்கே கார்யம் கொள்ளக் கண்டு வளைக்கிறது என்ன –
மரம் எய்த திறலாளா ! –
உன்னை விஸ்வசியாதார்க்கும் மழு வேந்தி கார்யம் செய்பவன் அன்றோ –
உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக
மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுத்திலையோ –
பின்னை நீரும் அவ் வதாரத்தில் வந்து உதவிற்று இலீரே என்ன
திரு மெய்ய மலையாளா !
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –
நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்
கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக
இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-
—————————————————–
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
இதுவாயிற்று பயிர் ஏறாதே தரிசாக நிலம் இருக்கும் படி –
ஊரில் தரிசு கிடக்கும் நிலம் இருக்கும் படி இது வாயிற்று –
மையானது மிகவும் விளங்கா நின்றுள்ள
கறுத்த குவளைப் போக்கல் அலர்ந்து கிடக்குமாயிற்று பர்யந்தங்கள் அடைய –
நாள் செல்ல நாள் செல்ல குறைந்து வருகை அன்றிக்கே
நிறம் உஜ்ஜ்வலமாக நின்றுள்ள
கருங்குவளைகள் ஆனவை அலருகிற பர்யந்தங்களை
உடைத்தான வயலை உடைய திருவாலி –
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை –
புறம்பு அவையும் உள்ளில் அவனுடைய நிறமுமாய்
முன்னடி தோற்றாதாய் ஆயிற்று கையில் திரு வாழி அன்றாகில்
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை –
வடிவில் இருட்சிக்கும் குவளைப் பூவால் வந்த இருட்சிக்கும்
கையில் திரு ஆழியால் வந்த ஒளி அல்லவாகில்
முன்னடி தோற்றாது காணும்
நெடுமாலை –
தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்
தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –
இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்
ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –
கையிலங்கு வேல் கலியன்
பட்டர் சர்வேஸ்வரன் திருமங்கை ஆழ்வாருக்கு குதிரை
ஏறிப் போம் ஆகாதே
அவன் கையில் திருவாழி அழகுக்கு உடலாக ஒப்பித்து இருக்கும் அத்தனை
இவர் கையில் வேல் சத்ரு நிரசனத்தாலே கறை கழுவ அவசரம்
இன்றிக்கே இருக்கும் ஆயிற்று –
அவன் சேஷித்வ ஸூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று
இவர் சேஷத்வ ஸூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –
கண்டுரைத்த தமிழ் மாலை –
தூதருக்கு வார்த்தை சொன்னபடி கேட்டு
அவன் முன்னே வந்து நிற்க
கண்டு சொன்ன
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே
அவனைப் பிரிந்து நோவு பட்டு
தூது விடுகைக்கு ஹேதுவான பாபங்கள் கிட்டாது –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு
அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று –
பரமபதம் வைபவம் அந்தர்யாமி அன்றிக்கே
தான் இருந்த திருவாலிக்கு அன்றோ –
ஞான விபாகமான அஞ்ஞானம்
விளைந்ததுக்கு மை இலங்கு குவளை த்ருஷ்டாந்தம்
ஒரே படுக்கையில் இருந்து பிரிந்த வாற்றாமை இவருக்கு இதில் –
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
தூவி சேர் தும்பி ஆலியான் பால் தூது விட்டு
நோவை உரைத்து அது ஆறாத் தானே யன் நோவை
உரை செய் பரகாலன் ஒப்பில் அருளால் நம்
கரையில் வினை கொள் கள்வன் -26-
கங்குகரை இல்லாப் பாவங்களை நம்முடைய இசைவு பாராது கொள்பவர் ஆழ்வார் –
தூவி -இறகுகள் –ஞானம் அனுஷ்டானங்கள் –
கள்வன் கொல்-பிராட்டி திண்ணம் அல்லவே இவர்கள் புகுவது –
திண்ணம் திருக்கோளூர் புகும் பராங்குச நாயகி போலே அல்லவே
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்