நோலா தாற்றேன் உனபாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய்மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே.
பொ-ரை :- உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும் விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள், சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.
வி-கு :- நோலாது ஆற்றேன் உன பாதம் காண” என்பது, “நீலார் கண்டத்தம்மான்” முதலாயினோர்கட்கு அடைமொழி. அம்மானும் நான் முகனும் இந்திரனும் பலர்சூழ விரும்பும் திருவேங்கடம் என்க. மால் – கருமை; ஈண்டு, கரிய நிறத்தையுடைய கிருஷ்ணனுக்காயிற்று. மாலாய் வந்தாய்போலே அடியேன்பால் வாராய் என்க. வாராய்; விதிவினை.
ஈடு :- எட்டாம்பாட்டு. 1‘உன்னைச்சேர்தற்கு என் தலையில் ஒரு சாதனம் இல்லை’ என்னாநின்றீர்; ‘இது ஒரு வார்த்தையோ! சாதனத்தைச் செய்தார்க்கு அன்றிப் பலம் உண்டோ?’ என்ன, ‘அவர் அவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுஷ்டானத்தாலே என்றிருக்கும் பிரமன் முதலாயினோர்களுக்கும், கிட்டினால் பாசுரம் இதுவே அன்றோ?’ என்கிறார். தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனைபோக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம்படியோ நீ இருக்கிறது?
நோலாது ஆற்றேன் உனபாதம் காண என்று நுண் உணர்வின் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் விரும்பும்திருவேங்கடத்தானே – உன் திருவடிகளைக் காண்கைக்கு, சாதன அநுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து உன்னை ஒழிய ஆற்றமாட்டேன் என்றாயிற்று, அவர்கள் 1தனித்தனியே சொல்வது. 2ஒரு வாணாசுரனுடைய போரிலே தோற்றுப் போக்கடி அற்றவாறே இங்ஙனே வந்து விழுவர்கள். 3இராசத தாமதகுணங்கள் தலை எடுத்தபோது ‘ஈசுவரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று துதிசெய்யத் தொடங்குவர்கள்
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.
போதகத் தானும்வெண் போதகத் தானும் புராந்தகனும்
தீதகத் தானது நீர்தரும் காலைத் திருவரைசேர்
பீதகத் தாய் அழ கா அரு ளாய்என்பர் பின்னைஎன்ன
பாதகத் தான் மறந் தோதனி நாயகம் பாலிப்பரே.= என்பது, அழகரந்தாறு, 90.
; 4“ஓ நாதனே! அசுரசேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்” என்கிறபடியே
.ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65
விஷத்தைக் கண்டத்திலே தரித்த ஆற்றலுடையவனாய் அதனாலே உலகத்திற்குப் பிரதானனாக அபிமானித்திருக்கும் சிவனும், அவனுக்கும் தந்தையாய் அவனிலும் ஞானத்திலும்சக்தியிலும் நிறைந்தவனான பிரமனும், மூன்று உலகங்கட்கும் அரசனான இந்திரனும்; 1“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்பது நாராயண அநுவாகம். “ஸபிரஹ்மா ஸ்ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.
–2இங்ஙனே இருக்கச் செய்தேயும், அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்கியங்களைப் பிரமாணங்களாகக் கொண்டு போராநின்றோமே? என்னில்‘இவர்களுடைய வாக்கியங்களை’ என்றது,
“அஹமஸ்மி அபராதாநாம் ஆலய:” என்பது போன்றவைகளை.
, 3“சத்துவம் தலை எடுத்தபோது சொல்லுமவை எல்லாம் கொள்ளக்கடவமோம்; இவை கைக்கொண்டோம் என்னா, இவர்கள் தாம் உத்தேசியர் ஆகார்க்ள;
விலையான திலைஎன்று நீதந்த முத்தம்
வேய்தந்த முத்தாகில் வெற்பா வியப்பால்
இலையார் புனற்பள்ளி நாரா யணன்பால்
எந்தாய்! அரங்கா! இரங்காய் எனப்போய்த்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும்
தன்தாதை அவர்தா மரைத்தாள் விளக்கும்
அலையாறு சூடும் புராணங்கள் பாடும்
ஆடும் பொடிப்பூசி ஆனந்த மாயே.–என்பது, திருவரங்கக்கலம்பகம், 61.
4‘காக்கைவாயிலும் கட்டுரை கொளவர்’-பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 1.- என்று உண்டே” என்று பட்டர் அருளிச் செய்வர்.
1ஓர் ஆழ்வார்,
பிதிரு மனமில்லேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.-என்பது, நான்முகன் திருவந்தாதி. 84.
‘பிதிரும் மனம் இலேன் – பேதிக்கப்பட்ட நெஞ்சினையுடையேன் அல்லேன்; பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் – 2சிவன் எனக்கு ஒத்தவன்; அவன் எனக்கு நேரான் – அவனும் எனக்கு ஒத்தவன் அல்லன்; அது என்? என்னில், அதிரும் கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் – பகவத் விஷயத்தில் நெஞ்சை வைத்து அநுபவிக்கையே யாத்திரையான எனக்கு, அந்யபரனானவன் ஒப்பாகப் போருமோ?’ 3‘குறைகொண்டு – தன் வெறுமையைக் கைதொடு மானமாகக் கொண்டு, நான்முகன் குண்டிகைநீர் பெய்து – நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று, உபகரணம் பெற்றிலன், தர்மதேவதையானது தண்ணீராய் வந்து தங்கிற்று, அதனைக்கொண்டு, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – வேதாந்தங்களில் பகவானுடைய பரத்துவத்தைச் சொல்லுகின்ற மந்திரங்களைக் கொண்டு துதிசெய்து. கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் – நான்முகன் திருவந். 9. கைதொடுமானம் – சகாயம்.
அடக்கமில்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப் போலே’. நுண் உணர்வில்-சத்துவம் தலையெடுத்தபோது 4சொல்லுவது இதுவே. சத்துவகுணத்தினால் ஞானம் நன்கு உதிக்கின்றது என்பதே அன்றோ பிரமாணம். நீலார் கண்டத்து அம்மானும் – விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈசுவரனாகத் தன்னை மதித்துக்கொண்டிருக்கின்ற சிவனும். நிறை நான்முகனும் – அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தையுடையனான பிரமனும். இந்திரனும்-இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச்செய்தே “அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்திரனும்.
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – 1தந்தாமுக்கு ஓர் உயர்த்தி உள்ளபோது பெண்கள் முன்னிலையில் ஓர் எளிமை தோற்ற இரார்களே அன்றோ; ஆபத்து வந்தவாறே, மணாட்டியார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படம் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள். “சிவபெருமான் இருகரங்களையும் கூப்பிக்கொண்டு விஷ்ணுவைப்பார்த்து விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடுகூடச் சொல்லுதற்கு விரும்பினான்” என்றும்,
“அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.
3“ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபைசெய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடுபடவேண்டும்” என்றும்,
“தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.
4“நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்” என்றும்,
தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.
5“சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?” என்றும் சொல்லுகிறபடியே
கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,
வந்து விழுவர்களே அன்றோ. அவர்களுக்கு அடையலாம்படி சுலபனாய்வந்து நிற்கிறானாதலின், ‘திருவேங்கடத்தானே’ என்கிறார். மாலாய் மயக்கி – 1“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும், அன்றிக்கே, மாலாம்படி மயக்கிக்கொண்டு வரவேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்; அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய், கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக்கொண்டு வந்தாற் போலே எனக்காகவும் ஒருவரத்து வரவேணும் என்கிறார்; 3“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3. மாலே
செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத்தலைக்கு
வியாமோகத்தை விளைக்குமவனை. மாலாய் – கிருஷ்ணனாய்.-
சாதனம் இல்லை நீரே சொன்ன பின்பு
காசு இல்லாதாருக்கு பண்டம் உண்டோ
தம் தாம் உடைய அபிமத சித்தி
மேன்மைக்கு தக்க யாரும் சாதனம் செய்ய முடியாதே
ஆகிஞ்சன்யம் அறிவித்தே உன்னைப் பெற முடியும்
நோலாது ஆற்றேன் உன்ன பாதம் -ப்ரஹ்மாதிகளும் இப்படியே சொல்லி
சேலேய் கண்ணார் பலர் சூழ வந்து
மாலாய்
வந்தாய் போலே வாராயே
தனித் தனியே வந்து இதே வார்த்தை சொல்லிக் கொண்டு
பாண யுத்தத்தில் தோற்று வந்த சமயத்தில் சொல்லுவார்கள்
எப்பொழுதும் சொன்னால் ஆழ்வார் ஆவாரே
ஈச்வரோஹம் ரஜஸ் தமஸ் தலை எடுத்த பொழுது
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ புகழ்வார்
விஷத்தை கண்டத்தில் தரித்து அத்தாலே அபிமானித்து இருக்கும் ருத்ரனும் சதுர முகனும் இந்த்டனும்
நுட்பமான அறிவு -இப் பொழுதாவது வந்து சொல்கிறார்கள்
ச பிரம்மா செந்த்ரா என்பதால் மூவரையும்
அஹம் அபராத ஆலயா
பிராதனா மதி சரணாகதி
தவமே சரணாம்
ருத்ரன் வார்த்தை பிரமாணங்கள்
சத்வம் தலை எடுத்து சொல்லிய வார்த்தை –
வார்த்தை தான் கொள்வோம் –
கை கொள்ளக் கடவோம் இவர்கள் உத்தேச்யர் ஆக மாட்டார்கள்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் -பட்டர் அருளிச் செய்து
அவன் எனக்கு நேரான் -திரு மழிசை ஆழ்வார்
பேதிக்கப் பட்ட நெஞ்சு இல்லை
ருத்ரன் எனக்கு நேரான் -சமானம் இல்லை –
கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் –
நெஞ்சை வைத்து அனுபவிக்கையே யாத்ரை –
அந்ய பரன் சமன் இல்லையே
குறை கொண்டு நான் முகன் -சென்னி மேல் ஏறக் கழுவினான் -ஸ்ரீ பாத தீர்த்தம்
வெறுமையை கொண்டு-
திடீர் என்று சத்யா லோகம் வந்ததால் –
குண்டிகை நீர் -தர்ம தேவதை த்ரவ்ய பூதமாக
உருகி -வேத வாக்யங்கள் கொண்டு கழுவினான்
புருஷ சூக்தம் சொல்லி
கரை கொண்ட கண்டத்தான் -அவிநீயாத -பிரஜைகள் மேல் ஸ்ரீ பாதம் தெளிப்பாரைப் போலே
சென்னி மேல் ஏறக் கழுவினான்
நோலாது ஆற்றேன் -நுண் உணர்வு இருக்கும் பொழுது சொல்லும் வார்த்தை –
ஈஸ்வர அபிமான ருத்ரன் -நிறை நான் முகன் ஞானத்தால் பூர்த்தி -இந்த்ரன் –
சிருஷ்டி சம்ஹாரம் அந்வயம் இன்றி ஒக்க எண்ணலாம் படி இந்த்ரன்
சேலே ய் கண்ணார் -மீன் போன்ற பெண்கள்
தம் தாமுக்கு உயர்த்தி இருக்கும் பொழுது -பெண்களை காட்டாமல்
ஆபத்து வந்த பொழுது
தங்கள் கழுத்திலும் மணாட்டிமார் கழுத்திலும் கப்படம்
துணியை கட்டி
கட்டு மரம் -தமிழ் இருந்து ஆங்கிலம் வந்த வார்த்தை
காப்பு கட்டின துணியை கழுத்தில் கட்டி வந்து விழத் தொடங்குவார்கள்
உமை ஈசன் -கிருஷ்ண கிருஷ்ணா மகா பாவோ
யாசகம் செய்யும் பொழுதும் பார்வதி உடன்
சமுத்திர ராஜன் சவிதாம் பத்தி உடன் பெருமாள் காலில் விழுந்து
தாரை முதலில் போனாள் இளையபெருமாள் கோபம் குறைக்க
சர்வ சுலபன்
மாலாய் மயக்கும் படிக்கு ஈடாக வர வேண்டும்
மால் பித்து ஆகும் படி மயக்கிக் கொண்டு வர வேண்டும் என்பர்
அது அன்று பொருள்
மால் கருமை என்றும்
கிருஷ்ணன் -போலே பிச்சேற்றி கொண்டு வர வேண்டும்
வேங்கட கிருஷ்ணன் –
கிருஷ்ணன் வேஷம் கொண்டு திருவேங்கடத்தான் கொண்டு
தேர் கடவ கழல் கழல் காண்பது
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply