திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  வந்தாய் போலே வாராதாய்! வாரா தாய்போல் வருவானே!
செந்தா மரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.

பொ-ரை :- வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும் சிவந்த கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே! சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.

வி-கு :- சிந்தாமணி – ஒருவகை இரத்தினம். பகர் – ஒளி. அல் – இருள். இறையும் அகலகில்லேன் என்க. இறை – சிறிதுபொழுது. ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1தாம் விரும்பியபோதே காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணாவிடில் தரிக்க மாட்டேன் என்கிறார்.

வந்தாய்போலே வாராதாய் – 2மானச அநுபவத்தில் உண்டான கரைபுரட்சிதான் ‘புறத்திலே கலவியும் பெற்றோம்’ என்று கொண்டு மனநிறைவு பிறக்கும்படியாய், அதனை ‘மெய்’ என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கு எட்டாதபடியாயிருக்கை. வாராதாய் போல் வருவானே – ஒரு நாளும் கிட்டமாட்டோம் என்று இருக்கச் செய்தே கடுகக் கைப்புகுந்து கொடு நிற்கும் என்கை. அன்றிக்கே, அடியர் அல்லாதார் திறத்தில் ‘கைப் புகுந்தான்’ என்று தோற்றி இருக்கச் செய்தே புறம்பாய், அடியார்கட்கு ‘இவன் கிட்ட அரியன்’ என்று இருக்கச்செய்தே உட்புகுந்து இருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம். செந்தாமரைக்கண் செம்கனிவாய் நால்தோள். அமுதே – 3தாபங்கள் எல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையவனுமாய், சிவந்த கனிந்திருந்துள்ள திருவதரத்தையுடையனுமாய், கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற நான்கு திருத்தோள்களையுடையனுமாய் இனியனு மானவனே! எனது உயிரே – 4இந்த வடிவழகை என்னை அநுபவிப்பித்து, பிரிந்த நிலையில் நான் உளன் ஆகாதபடி செய்தவனே!

சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே – விலக்ஷணமான இரத்தினங்களினுடைய ஒளியானது அல்லைப் பகல் செய்யாநின்றதாயிற்று; என்றது, இரவு பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக்கொண்டிருக்கையைத் தெரிவித்தபடி. 5“மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்றறிவரிதாய” – பெரியதிருமொழி, 4. 10 : 8.-என்னக் கடவதன்றோ. இதனால்நினைக்கிறது, 1“அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை” “ந கால: தத்ரவை ப்ரபு:”-எனகிற தேசத்தே சென்று அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே அநுபவிக்கக் காணும் நினைவு. அந்தோ – 2போக்கியமும் குறைவற்று, அவன்தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க, கிட்டி அநுபவிக்கப்பெறாது ஒழிவதே என்கிறார். அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே – 3என் சொரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்திபண்ணாய். 4காணாநிற்கச்செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.

தான் அபேஷித்த பொழுதே வர வேண்டும்
மணிகள் ஒளி வீச இரவையும் பகலாக்கி
வந்தாய் போலே வாராதே
மானஸ-அனுபவம் -அணைக்கப் பார்த்தால் கைக்கு எட்டாமல் இருக்க –
வாராதாய் போலே வருவானே
மீண்டும் கிட்டி வந்து –
மறக்கவோ -முடியாமல்
அநாஸ்ரிதர் விஷயத்தில் பிறர்க்கு அறிய வித்தகன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
மகா பலி போன்றர்க்கு சேவை சாதித்து
ஹிரண்யன் ராவணன் போல்வாருக்கும் வந்தாய் போலே இருந்தாலும் வாராதவன் போலே இருக்க
செந்தாமாரைக் கண் செங்கனி வாய்
நால் தோள்
போக்கியம் உள்ளவன்
பிரிந்தால் தரித்து இருக்க முடியாத நிலை அளித்து
ரத்னங்கள் பிரபை அல்லை பகல் ஆக்கி
திரு வெள்ளியங்குடி -பிராத சாய சந்த்யாவந்தனம் சங்கை வரும் படி -இரவையும் பகலாக்கி

அல் இரவு எல்லி இரவு
பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
காலமே இல்லாத பரமபதம் போலே
காலத்துக்கு ஆட்சி இல்லாத தேசம் -அது –
பகவத் அனுபவமே யாத்ரை இங்கேயே ஆழ்வார் அனுபவிக்க ஆசை கொள்கிறார் –
அந்தோ போக்யமும் குறை வற்று
அவனும் சந்நி ஹிதனாய்
எனக்கும் ஆசையும் மிக்கு
அடியேன் -ஸ்வரூபம் உணர்ந்து
ஸ்வரூபம் பார்த்து
தசை பார்த்து
இறையும்-இமைக்கவும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: