அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.
பொ-ரை :- அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே! அழகிய கோவைக்கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.
வி-கு :- அடுபுள் கொடியா உடையானே! என மாற்றுக. நோலாது உனபாதம் காண்கைக்கு நொடியார் பொழுதும் ஆற்றேன் என்க. நோற்றல்-அவனைக் காண்டற்குரிய சாதனங்களைச் செய்தல். நொடித்தல் – இரண்டு விரல் நுனிகளைச் சேர்த்துத் தெறித்தல்.
ஈடு :- ஏழாம்பாட்டு. 1“மெய்ந் நான் எய்தி” என்ற இந்த ஞானலாபம் உமக்கு உண்டாயிற்று அன்றோ; அது பலத்தோடே கூடியல்லது நில்லாதே அன்றோ; ஆனபின்பு, அவ்வளவும் நீர் ஆறி இருந்தாலோ? என்ன, ‘உன்னுடைய இனிமை, அத்துணை கிரமப்பிராப்தி பார்த்திருக்கப்போகிறது இல்லை’ என்கிறார். உன்தனை ஆறி இருக்க நான் மாட்டுகிறிலேன்.
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – 2தேவஜாதிகளுடைய உப்புச்சாறு போலன்று; ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று; வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று. இமையோர் அதிபதியே – 3இதனை உண்பதற்குக் கூட்டாவது ஒரு திரள் அங்கே உண்டாயிருக்கிறபடி. அடு புள் கொடியா உடையானே-விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடையபெரிய திருவடியைக் கொடியாக உடையவனே! கோலம் கனிவாய்ப் பெருமானே – அழகியதாய்க் கனிந்துள்ள திருவதரத்தின் சிவப்பைக் காட்டி என்னை அடிமைகொண்டவனே! 1வாய்க்கரையிலே தோற்றார்காணும். 2அடியார்கட்கு இவ் வழகை அநுபவிப்பிக்கைக்குக் கொடிகட்டிக்கொண்டிருக்கிறபடி. செடியார் வினைகள் தீர் மருந்தே-3பாபத்தோடே பொருந்தின தீயவினைகளாலுண்டான துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே! செடி – பாவம். அது உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி. அன்றிக்கே, தூறுமண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல். 4அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.மூன்றாந்திருவந். 4. – “மருந்தும் பொருளும் அமுதமும் தானே”திருவாய். 9. 3 : 4– என்றும், “மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு” என்றும் கூறுகிறபடியே அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே. மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார்
திரு. 5. 3 : 6.–
திருவேங்கடத்து எம்பெருமானே – 5அவ் வமுதம், உண்பார்க்கு மலைமேல் மருந்து அன்றோ. அவ் வமுதம், உண்பார்க்குச் சாய்கரகம்போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி. 1இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார். 2பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது’ என்று இருக்கின்றதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச்செய்தார். நொடியார் பொழுதும் – நொடி நிறையும் அளவும். உன பாதம் காண நோலாது ஆற்றேன்-3உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கணநேரமும் ஆற்றமாட்டுகிறிலேன். என்றது, சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைம்போலே படாநின்றேன் என்றபடி. 4அது இல்லாமை அன்றோ இவர் இங்ஙனே கிடந்துபடுகிறது. தனியே ஒரு சாதனம் செய்யுமவனுக்கு, ‘அது முடிவு பெற்றவாறே பெறுகிறோம்’ என்றாதல், ‘அதிலே சில குறைவுகள் உண்டானமையால் அன்றோ பலம் தாழ்த்தது’ என்றாதல் ஆறி இருக்கலாம்; அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப்பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.
ஞான லாபம் உமக்கு உண்டாயிற்றே
மெய்யாக அடைய ஏங்குவது எதற்கு
பலத்துடன் சேர்த்து தான் வரும்
ஆறி இருக்க வேண்டாவோ
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க முடியாத போக்யதை உண்டே
உனது பாதம் காண நொடி பொழுதும் நோற்க வில்லை
அடியேன் மேவி அமர்கின்ற அமுது
உப்பு சாறு போலே இல்லையே அது தேவ ஜாதி கூட்டமாக அனுபவிக்க
இது எனக்கே ஏற்ப்பட்ட அமுதம்
அநந்ய பிரயோஜனர் அமிர்தம் இது
அத்விதீயமாக
மேவுதல் -இதிலே இருக்கை
திருவேங்கடத்தானே -அர்ச்சை -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுது இது
இமையோர் கூட்டமாக அனுபவிக்க இருக்க
விரோதி நிரசனம் கொடியார் புல்லை கொடியாக கொண்டவன்
அழகிய திருப்பவளம் காட்டி என்னை எழுதிக் கொண்டு
வாய்க்கரையில் நின்று தோற்றாமல்
கொடி கட்டி கொண்டு இருக்கிறான் விரோதி நிரசன சீலன் காட்ட
செடியார் -பாபம் வளர்ந்து -வினைகள்
செடி பாபம் வினையால் வரும்
தீர்க்கும் மருந்து
தூறு மண்டின கர்மங்களை போக்கும்
அமிர்தமே மருந்தாகிறது
மருந்தும் பொருளும் அமிர்தமும் அவனே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
உபாயம் உபேயம் போக்யதை மூன்றுமே அவனே
அவன் தன்னை வேறு மருந்தும் இல்லையே
மலை மேலே மூலிகை போலே திருவேங்கடத்தில் எம்பெருமானே
சஞ்சீவி மலை கொண்டு வந்து அருளி திருவடி
மீண்டும் கொண்டு போய் வைத்தாராம்
புஜீப்பாருக்கு சாய் கரகம் போலே உயரத்தில் நின்று அருளி –
பட்டர் இந்த பாசுரம் அமுது செய்து
ஸ்தோத்ரம் -நித்ய கிரந்தம் -எம்பெருமானார் -அருளி செய்து இருக்க –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே
இமையோர் அதிபதி
ஆறு விஷயங்கள்
அரு சுவை அடிசில்
பச்சை மா மலை போல் மேனி போன்ற பாசுரங்கள்
பவள வாய்
கமலா செங்கண்
அச்சுதா
அமரர் ஏறே
இதிலும் ஆறு சுவை உண்டு
அதனால் இவற்றை விண்ணப்பம் செய்து –
அதிலும் இந்த இரண்டு பாசுரங்கள் –
நாறு -ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
நொடி -சாதனா அனுஷ்டானம் பண்ணாமல்
ஷணகாலமும் பிரிந்து இருக்க முடியாமல் துடிக்கிறேன்
முழுக்க அனுஷ்டிதவர் துடிப்பது போலே
சாதனம் இல்லாததால் துடிக்கிறார் –
சாதனம் அனுஷ்டித்து இருந்தால் -அது கொடுக்கும் பொழுது
வரட்டும் என்று ஆறி இருக்கலாம்
அவனே சாதனம் சித்தோ உபாயம் அவிளம்பித்த பலம் தர வேண்டுமே
கிருபையும் ஏறி பாய முடியாத மேடு என்ற பயத்தால் துடிக்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply