எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே!
மெய்ந்நாள் எய்தி எந்நாள் உன்7 னடிகள் அடியேன் மேவுவதே?
பொ-ரை :- உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.
வி-கு :- இமையோர்கள், மண் அளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி மெய்ந் நா மனத்தால் வழிபாடுசெய்யும் திருவேங்கடம் என்க. “மெய்ந் நா மனத்தால்” என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியவாறு. அடியேன் நான் மெய் எய்தி உன்னடிகள் மேவுவது எந்நாள்? என்க.
ஈடு :- ஆறாம்பாட்டு. 1“எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன, அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார். அங்ஙன் அன்றிக்கே, வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும்கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.
மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று – 2“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார் அங்கே சென்று அடிமைசெய்ய ஆசைப்படுமாறு போலேகாணும், அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி. 3எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ? பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்துகொள்ளக் கண்ட காட்சியிலே தலைமேலே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் படியான இனிமையையுடைய திருவடிகளை. மற்றொருபோது வேறுஒன்றனைப்பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்.
இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி – நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய். மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் – 1மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யாநிற்பர்கள். அன்றியே, மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம். வழிபடுதலாவது, வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக்கொண்டு அடைந்து வணங்குதல். 2நித்தியசூரிகளானபோது, கைங்கரியமாகக் கொள்க. பிரமன் முதலான தேவர்களானபோது, உபாசனமாகக் கொள்க. மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –3குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது; நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடேகூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார். 4ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.
அங்கு உள்ளாறும் நித்தியரும்
இமையோர் –
பிரயோஜனாந்த பரர்களும் அனுபவிக்கும் படி
ப்ரஹ்மாதிகளை சொல்வாரும் உண்டு
அடுத்த பாட்டில் இதை சொல்வதால் அது உசிதம் அன்று
24000 படி
உலகு அளந்த திருவடிகளை காண்பது என்று
இமையோர் இனம் கூட்டமாக
முக் கரணங்களால் மெய் நா மனத்தால்
மெய்யாகவே நான் எய்தும்படி -மானச அனுபவம் மாதரம் இன்றி
சௌலப்யம் கண்டு அனுபவிக்க
சர்வ சுலபமான திருவடிகள் -வசிஷ்டர் சண்டாள விபாகம் அற
இணைத் தாமரைகள் பரம போக்யமான
மண் அளந்த இணைத் தாமரை இணை அடிகள்
தாள் பரவவி மண் தாவிய ஈசன் -இவன் தானே
துளங்க-மந்த்ரம் அறிந்த வாறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன்னடி -திருமாங்கை ஆழ்வார்
சமஸ்த ஜகதம் மாதா தாய் போலே -அளக்கும் திருவடி என்ற அர்த்தமும் உண்டு
காலம் எல்லாம் வந்து வணங்கி
சௌந்தர்யா வெள்ளம் இனம் இனம் ஆக வந்து
மெய் நா மனத்தால்
மெய்யான மனஸ் என்றுமாம்
அநந்ய பிரயோஜன கரணங்கள்
கைங்கர்யம் நித்யருக்கும்
உபாசனம் ப்ரஹ்மாதிகளுக்கு
வழி பாடு செய்யும்
மெய்யாகவே நான் எய்தி -குணானுஷ்டனம்-காட்டி போக்கினாய் இது வரை –
அப்படி ஏமாற்றாமல் -புகட்ட பிரமிக்க ஒண்ணாது
பத்தும் பத்தாக திருவடிகளை அடையும்படி
ராவணன் தலையை பூர்ன்னமாக வெட்டினது போலே
பொறுந்த-மேவும் படி –
வேறு அடிகளில் சத்தை இல்லையே இவருக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply