ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.
பொ-ரை :- ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை மழையைப்போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.
வி-கு :- “வாணாள்மேல் தீவாய் வாளி பொழிந்த” என்றது, அவர்களைக் கொன்றமையைக் குறித்தபடி. பூவார்கழல்கள் – பூக்கள் நிறைந்திருக்கின்ற திருவடிகள் என்னலுமாம்.
ஈடு :- 1உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை; ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என்கிறார்.
2நஞ்சீயரை, நம்பிள்ளை ஒருநாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள, “நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, 3ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப்போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ, அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச்செய்தார்.
ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று
உண்டு என்று சொல்லுவாரைப்போலே’ என்றது, “தத்ராபிதஹரம்”
என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”
என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.
“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச்செய்யும்போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தரவேணும் என்கிறார்’ என்று அருளிச்செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! 1அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனேகாண் பொருள்; நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார்காண்” என்று அருளிச்செய்தார். 2“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே; நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ.
“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா
பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”
என்பது, மஹாபாரதம்.
கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்
பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி
அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.
3தஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓரான் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு
திருப்பள்ளியறையிலே புக்கருளினார். 1திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம சொரூப குணங்களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
ஆ ஆ என்னாது – 2ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ; நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்கமுடியாத தன்மை வந்ததாகில், ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில், ‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும்” என்று அருளிச்செய்தார். 3பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். 4‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது. 5அவன் “இராவணனே யானாலும்” என்றால், “விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.
அவன்
உலகத்திலேயுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால், 1“நண்ணா அசுரர் நலிவெய்த” திருவாய். 10. 7 : 5. என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில், அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான். 2யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ. இவனுடைய தண்ணிய சரீரத்தைப்போக்கி நல்வழியே போக்குகின்றான் அன்றோ. ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் – ஐயோ, ஐயோ, என்னவேண்டியிருக்க, அதற்குமேலே நலியா நிற்பார்கள். 3ஒருவனோடே பகைத்திறம் கொண்டானாகில், ‘பொருளை இச்சித்த காரணத்தால் அன்றோ இது வந்தது, இருவரும் சபலர்’ என்றே அன்றோ இருக்கலாவது; அங்ஙன் அன்றிக்கே, உலகத்தை அலைப்பர்களாயிற்று. 4தம்மோடு ஒக்க உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலியா நிற்பர்களாயிற்று.
அசுரர் – அதற்குக் காரணம் அவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாகையாலே. வாணாள்மேல் – 5இவர்கள் வீரக் கோலத்தால் வந்த ஒப்பனை குறி அழியாதே இருக்க, உயிரிலே நலிகை. என்றது, இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை என்றபடி.தீ வாய் வாளி – 1பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை. ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. 2“தீப்த பாவக ஸங்காஸை: – படும்போது நெருப்பைப் போன்றிருக்கும்படி. “தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22. இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.
ஸிதை: 3பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை. காஞ்சநபூஷணை: – இவற்றுக்கு 4இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி. 5“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய
திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி. நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். 6நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.1இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.
வாளி மழை பொழிந்த சிலையா – 2“அம்பு மழையைப் பெய்தாரன்றோ” “ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி. திருமாமகள் கேள்வா – விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது. 3“கணவனைத் தழுவிக்கொண்டாள்” என்னுமவள். “தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகினையுடையவரை, எதிரிகளை வென்ற வீரக்கோலத்தோடே கண்டாள். ஸத்ருஹந்தாரம்-4தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கிவிடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை. “தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
5முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார், இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ; இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள். மஹர்ஷீணாம் ஸு காவஹம் – இருடிகளுடைய விரோதிகளைப்போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை. 1தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு. 2கர்ப்ப பூதா: தபோதநா:-தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள். தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி உண்டாயிருக்கச்செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ; அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி
வேண்டின வேண்டினர்க் களிக்கு மெய்த்தவம்
பூண்டுள ராயினும் பொறையி னாற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கினார்
ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டாரரோ.-என்பது, கம்பராமா. அகத்தியப்பட. 8.
. 3அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ. பபூவ – 4பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள். பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா – சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று. 5வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும்குடியிலே பிறந்தவள் அன்றோ. அன்றிக்கே, 1ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார்தான் என்னுதல்! பர்த்தாரம் – 2முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும், ‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது. பரிஷஸ்வஜே – 3இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.
திருமாமகள் கேள்வா – 4உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ? புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ? தேவா – 5இவள் அணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகார். அன்றியே, விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம். சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – அநுகூலர் அடையத் திரண்டு 6படுகாடு கிடக்கும்தேசம். பூவார்கழல்கள் – பூவால் அல்லது செல்லாததிருவடிகள் என்னுதல். பூவோடு ஒத்த திருவடிகள் என்னுதல். அருவினையேன் – 1அவன் தடைகளைப் போக்கவல்லனாயிருப்பது, எனக்கு ஆசை கரைபுரண்டு இருப்பது, திருவடிகள் எல்லை இல்லாத இனியபொருளாக இருப்பது; இங்ஙனே இருக்கச்செய்தே, கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன். பொருந்துமாறு புணராயே – 2அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப்போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது; புணராய் – உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.
பொருந்துமாறு
உபாயம் புணராயே
திருவடி சேர சரண் அடைகிறார்
சாதனங்கள் எல்லாம் வீண் எனக்கு
பிரபத்தி பலம் கொடுத்தே தீரும்
பலிக்க வில்லை அதுவும் ஆழ்வாருக்கு
புதிதாக ஒரு வழி வைத்து இருக்கிறாயா எனக்கு என்கிறார் –
அசுரர் ஹிம்சை செய்ய
ஆவா என்னாது -இறக்கம் தயை இன்றி ஹிம்சிக்கையே ஆனந்தம் அவர்களுக்கு
நெருப்பை கக்கும் பானம் பொழிந்த தேவா
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்தும் ஆறு புணராயே தெரிவிக்க வேண்டும்
சங்கை முதலில் –
பிரபத்திக்கு மேலே வேறு ஓன்று உண்டா -நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
பஞ்சமோ உபாயம் ஓன்று உண்டு
தகர ஆகாசம் ஹிருதய புண்டரீகாஷம்
அதுக்கும் உள்ளே ஓன்று உண்டு
பரமாத்மா க்கு உள்ளே சதாசிவ ப்ரஹ்மம்-உபாசிக்க பட
தப்பான அர்த்தம்
திருக்கல்யாண குணங்கள் தான் அவனுக்கு உள்ளே இருக்கும்
அத்தை நாம் உபாசிக்க வேண்டும்
சதுர்தோ உபாயம் –சித்தோ உபாயம் -கர்ம ஞானம் பக்தி சாதனம்
பாசுபதர் –
பகவானே இருக்க அவனுக்கும் அவ்வருகே ஒன்றும் இல்லையே
தஸ்மின் ததா -சுருதி வாக்கியம்
உனது பிரதிபத்தியில் குற்றம் காண்
உம்முடைய -நஞ்சீயர் சொல்லி -நம்பிள்ளை உன் எழுதி
இங்கனே காண் பொருள்
நீயும் உளனாக இருக்க -நான் இழக்க
எல்லாம் செய்தாயிற்று தலையால் நடக்க வேண்டும் வர்ணத்தி பேசுகிற வார்த்தை
பஞ்சமோ உபாயம் கிடையாதே
அர்த்த பஞ்சகம் -ஆச்சார்யா அபிமானம்
பிரதி பத்தியில் அசக்தனுக்கு இது உண்டே
புரியதர்க்காக சொல்லி
சதிர்தோ உபாயத்தில் அந்தர்கதம்
வ்யூஹ நாலும் மூன்றும் சொல்லுவது போலே
ஆசார்ய அபிமானம் தனியாக இல்லை
ஆசார்யன் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது
வேறு பட்டவர்கள் இல்லை
திருவடி நிலை தானே
கார்ய கரோத்வம் அமோஹம் பற்றி ஐந்தாவதாக ஆசார்ய அபிமானம் சொல்லிற்று
பிராட்டி தனித்து இருப்பு இல்லையே போலே பிரிக்க முடியாத தத்வம் போலே
கடகத்வம் -பிரிக்க முடியாதே
பகவான் அறிவிப்பவர் ஆசார்யன்
பிரபோ நீயும் உளனாக இருக்க நான் துக்கம் பாடுவதா – தரௌபதி சொல்லியது போலே-
பாவம் ஆதங்கம் தோற்ற வார்த்தை –
நீ யும் உளனாய்இருக்க –
சா அஹம் அப்படிப்பட்டவள்
பரிகிரிஷ்ட துக்கம் அடைந்து
பஸ்யதாம் பாண்டு புத்ரானாம் -பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே
பிரபோ -நீயும் உளனாய் இருக்க
நலியும் படி –
உனது சத்திக்கும் எனது பரிபவதைக்கும் சேர்த்தி உண்டோ
பரி பூரணன் நீ இருக்க செய்தே நான் நோவு படுவதே
அது போலே ஆழ்வாரும் வார்த்தை –
அவனே உபாயம்
செய்ய கூடிய பிரபத்தியும் உபாயம் இல்லையே
ஐதிகம் –
நம்பிள்ளை -ஸ்ரீ பாதத்தில் -பிரபத்தி உபாயம் இல்லை என்றால் எதற்கு செய்ய வேண்டும்
பரம ரகசியம் -சீர்மை அறியாத உனக்கு –
நாத முனிகள் தொடங்கி போந்தார்கள்
ஒன்றும் அறியாத உனக்கு சொல்ல வேண்டி இருக்கிறது
திரு முடியிலே அடித்து கொண்டு திரு பள்ளி அறைக்கு எழுந்து அருளி
இவனுக்கும் நல்ல புத்தி அருளுவாய்-
சரண வரணம் தானே பிரபத்தி
அதிகாரி விசேஷணம் இது -குணம் போலே –
சாதனம் இது இல்லை –
குழந்தை அழுவது சாதனம் ஆகாதே உணவு கிடைக்க –
தவமே உபய பூத மே பவ இதி பிரார்த்தனா மதி –
நீயே உபாயம் சொல்வதே பிரபதியின் ஸ்வரூபம்
40 நாள் ஸ்ரீ ராமாயணம் கேட்டு ராமன் ராஷசனா ராவணன் ராஷசனா
கேட்டு சொன்ன நானே ராஷசன்
ஸ்வீகாரம் -வேண்டியதால் பிரதம தசையில் அதிகாரி விசேஷணம்
உத்தர திசையில் அதுவே பிராப்யமாகும்
அவன் அங்கீகரிக்க வர விலக்காமை காட்டுவதே இந்த பிரபத்தி
முமுஷு க்கு -த்வயமே பிராப்யம்
திவ்ய மங்கள விக்ரஹம் விக்ரஹ குணங்கள் திவ்ய ஆத்ம குணங்கள் நித்ய முக்தருக்கு பிராப்யம் ஆகவது போலே
த்வய மந்த்ரமே பிராப்யம் -அதுவே யாத்ரையாக போக வேண்டுமே -இங்கு உள்ள முமுஷுக்கு-
ஆவா என்னாது உலகத்தை
ஐயோ கிருபை செய்ய வேண்டும் கீழ் பாசுரத்தில்
அசுரர்கள் -பிறர் துக்கம் செய்து -பிறர் துக்கம் கண்டு நாமும் துக்கப் படுவது இருக்க -இது தானே ஈஸ்வரனுக்கு ப்ரீதி
அவன் விபூதியில் கிருபை செய்வதே –
எஜமான் பிள்ளை அடி பட்டு விழ -கண்டும் காணாமல் போனால் -அதுக்கு மேலே அசுரர் செய்யும் கார்யம் –
அவயவ பூதர் அனைவரும் –
கண் இமை காப்பது
இடுக்கண் களைவது நட்பு
பிறர் துக்கம் பொறாமல் இருப்பவனே பகவத் சம்பந்தம் உள்ளவன்
இல்லாமல் இருந்தால் வைணத்வம் இல்லை என்று தானே உணரலாமே –
இந்த துக்கம் பிராப்தம் என்று தோற்றினால் நமக்கு வைணத்வம் இல்லை என்று நாமே உணரலாம்
பிரதி கூலருக்கும் நனமி
அவர் நாணும் படி நன்மை செய்வதே இன்னா செய்தாரை –
எதி வா ராவணாஸ் ஸ்வயம் போலே-
நண்ணா அசுரர் நலிவு எய்த
நல் அமரர் பொலிவு எய்த –
எப்படி சேரும் –
நண்ணுதல்-இல்லாமல்
ந ந மேயம் என்று இருப்பாரை –
அக்னி சோமேயம் ஹிம்சை நியாயம் போலே
பசுவுக்கு ஸ்வர்க்கம் கிடைப்பது போலே
வீர மரணம் பரம வீர பதக்கம் தேசத்துக்கு போவது போலே யாகத்துக்கு
தண்ணிய சரீரம் போக்கி –
ராவணனை வதம் செய்து -ஆத்மாவுக்கு நன்மை செய்து அருளி -மேலே தீங்கு செய்ய முடியாதே
அறுவை சிகிச்சை போலே –
ஆ ஆ என்னாது
அதுக்கு மேலே ஹிம்சை செய்யும் அசுரர் -காரணமே இல்லாமல் விரோதம்
அசஹ்யா அபசாரம்
அசூயை கூட அசஹ்யா அபசாரம்
தம்மை ஒக்க உண்டு உடுத்து திரிவது பொறுக்காமல் நலியும் அசுரர்
வாழ் நாள் மேல் -உயிர் மட்டும் போக்கி –
ஜீவன ஹேதுவான காலத்தை நலிகை
தீ வாய் வாளி-படும் போது நெருப்பை காக்குமே
ஸ்ரீ சார்ங்கம் -காலாக்னி –
குண ஹீநன் -எரிந்து விழுவது போலே
குணம் -நாண் கயிறு அர்த்தமும் உண்டே –
நெருப்பு போலே எரியும்-வில்லில் இருந்து புறப்பட்டதும்
ஆகார த்வயம் அனுகூலர் வாழும் படியும்
அகப்படவும் இது தான்
சரங்கள் ஆண்ட தண் தாமரை கையன் என்பார்களே
திரு மா மகள் கேள்வா –
விரோதி போக்கி -அவள் ஆனந்தித்து அணைந்தது
பர்த்தாரம் பரிஹர்ஷயதே
அடியார் விரோதி தொலைத்தாரே
தம் த்ருஷ்ட்வா அவனை பார்த்து
வீரக் கோலத்துடன் -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும்படி
தமது திரு மேனியில் வாட்டம் இன்றி-அவர்களை குற்றுயிர் விடாமல் பரிபூர்ணமாக அழித்து
வேட்டை வீரம் பிறர் சொல்லி கேட்க்கும் அத்தனை இ றே
ஜனஸ்தானம் –
அருகில் இருந்தால் சேர்த்து வைத்து இருப்பாள் –
absence உதவி dedication செய்வது போலே –
தபஸ் பலத்தால் சபிக்காமல் பெருமாளை நம்பி இருக்கும் ருஷிகளுக்கு குடி இருப்பு
முறை உணர்ந்த ருஷிகள்-
தம் தாம் கை முதல் மாறாமல் இருந்தும்
கற்ப பூதர் போலே –
கர்பாவஸ்தையில் ஜனினி அறிந்து ரஷிப்பது போலே –
கற்ப பூதோ தபோ -ஸ்லோகம்
14000 தனியே யுத்தம் செய்ய -இவள் -சத்தை அழிந்து இருக்க இப்பொழுது உளள் ஆனாள்
பகுவா-இருந்தாள் சாதாரண அர்த்தம்
இருப்பே கொள்ளாமல் சத்தை அழிந்து இருக்க –
பூ சத்தாயாம் தாது
பகுவா -பூ தாது வில் இருந்து
உண்டானால் உண்டானதும் உண்டாயிற்று
சந்தோஷம்
வைதேகி -வீர வாசி அறியும் குடி பிறப்பு
வேதம் ஒத்து செய்யும் ஸ்திரீகள் தாமே அறிவது போலே
சித்ர கூடம் -பத்தினிகள்-கிளி கூட -எடுத்து கொடுப்பார்களாம் –
ஒரு சொத்தை வில்லை முறித்து ஜனக மகா ராஜர் என்னையே கொடுத்தார்
இத்தை பார்த்து என்ன செய்வார்
பர்த்தாரம் முன்பு வீரர் -சேஷம் என்று அணைத்து-
போலி சரக்கு போலே மென்மையாக இருப்பது கண்டு –
ஆண் பிள்ளை என்று அணைத்தது -பார்த்தா தன்னையும் தரிக்க வல்லவர் -இப்பொழுது தான் கண்டாள்
திரு முலைத் தடத்தால் வேவு கொடுத்து -ஒத்தனம்
சக்தி இல்லாமல் இழக்கிறேனோ
புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ
தேவா அணைத்த பின்பு தேஜஸ்
விரோதிகளை போக்கிய காந்தி
திவு தாது -18 அர்த்தம் –
திருமகள் கேள்வா -தேவா -18 அர்த்தம்
தேவன் விளையாடுபவன் க்ரீடா பிராட்டிக்காக ஸ்ருஷ்டாதிகள்
போக மயக்குகள் ஆகியும் அம்மான்
தேஜஸ் அர்த்தம் -அவள் கூட சேர்ந்து
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்
சுரர்கள் முனிக் கணங்கள் -அனுகூலர் அனைவரும் -வைகுண்ட நீள் வாசல் -பின்னிட்ட சடையானும்
பூவார் கழல்கள் -திருவேங்கடம்
பொது நின்ற பொன் அம கழல் -அழகிய மணவாளன்
துயர் அரு சுடர் அடி -தேவ பிரான்
திரு நாரணன் தாள் -திரு நாராயண புரம்-
மாசுசா அருளிய திருவடி திரு வல்லிக்கேணி
அரு வினையேன் –
பிரதிபந்தகங்கள் போக்கி அருளையும்
புருஷகார பூதியும் கிடக்க
ஆசை கரை புரண்டு கிடந்தது
நிரதிசய போக்யதையும் உண்டாய்
கிட்டும் படி பண்ண வேண்டும்
வழியே நீ தான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply