புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.
பொ-ரை :- சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?
வி-கு :- வலவன் – வல்லவன்; எய்தவன் என்க. திணர் – திண்ணம். சார்ங்கம் – வில். ஓகாரங்கள் சேரப் பெறாததால் உண்டான துக்கத்தின் மிகுதியைக் காட்டுகின்றன.
ஈடு :- ஐந்தாம்பாட்டு. 3நீர் இங்ஙனம் விரைகிறது என்? உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன, அது என்று? என்கிறார்.
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ – 1க்ஷத்திரியர் விற்பிடிக்கிறது துயரஒலி கேளாமைக்கு அன்றோ? “வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில்தரிக்கப்படுகின்றது” என்கிறபடியே.“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை: தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.
2இலக்குக் குறிக்கப்போகாதபடி திரண்டு நின்ற ஏழுமராமரங்களை 3முஷ்டியாலும் நிலையாலும் நேர் நிற்கச்செய்து எய்த தனிவீரனே! ஓ என்பது துக்கத்தின் மிகுதியைக் காட்டும் இடைச்சொல். 4ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே! “மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்” “ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.
என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார். அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்கவேண்டாவோ? புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ – ஒரு நிரையாகச் சேர்ந்து நின்ற மருதமரங்களை ஊடு அறுத்து, ஒன்றிலே வெளிகண்டு போவாரைப்போலே போய், 5உலகத்திற்கு வேர்ப்பற்றான உன்னைத்தந்தவனே! பிரளயகாலத்தில் அன்று உலகத்தை உண்டாக்கியது இன்றாயிற்று. அற்றைக்கு இவன்தான் உளனாகையாலே உண்டாக்கலாம்; இங்கு நிரந்வயவிநாசம் அன்றோ பிறக்கப் புக்கது. முதல்வாவோ – உலகத்தை உண்டாக்கினவனே! 1உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது; 2“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே. “ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.
தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம். இப்படி இருக்கிற 3தன்னளவிலே வந்த ஆபத்தையோ நீக்கலாவது.
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே – திண்மை மிக்கிருந்துள்ள மேகம் என்னும்படி யானைகளானவை சேராநின்றுள்ள திருமலையிலே நின்றருளினவனே! 4மேகங்களோடே எல்லாவகையானும் ஒப்புமை உண்டாகையாலே மேகங்களைக் கண்டபோது யானை என்னலாம்; யானைகளைக் கண்டபோது மேகம் என்னலாயிருக்கும். 5“மதயானைபோல் எழுந்த மாமுகில்காள்” நாய்ச்சியார்
திருமொழி, 8 : 9.-என்னக் கடவது அன்றோ. 6சமான தர்மத்தால் வந்த ஐயம் இரண்டிடத்திலும் உள்ளது அன்றோ. 7விஷயங்களால் வரும் அந்யதாஞானத்தைக் கழித்து, அந்தத் தேசத்தே பிறக்கும் அந்யதாஞானத்தை அன்றோ இவர் கணிசிக்கிறது.அங்குள்ளவை எல்லாம் இனிய பொருள்களாகத் தோற்றுகிறபடி. திணர் ஆர் சார்ங்கத்து உனபாதம் – திண்மை மிக்கிருந்துள்ள ஸ்ரீ சார்ங்கத்தையுடைய உன்னுடைய திருவடிகளை. 2“ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன” என்கிறபடியே, ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
ரக்ஷகமான திருவடிகளை. 3சக்கரவர்த்திப் பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு. திணர் ஆர் சார்ங்கம் – 4தன் வளைவிலே விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை. உனபாதம் – 5அந்த வளைவுக்கு அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது. சேர்வது அடியேன் எந்நாளே – 6கையில் வில் இருக்க இழக்கவேண்டா விரோதி உண்டு என்று; இனி உன்னைப்பெறும் நாளையாகிலும் சொல்லவேணும்.
நீர் த்வரிக்கிறது என்-க்ரமத்தில் போக்குவோம் என்றானாம்
நாள் குறித்து அருளுவாய் என்கிறார்
ஏழு மரங்கள்
மருது மரங்கள்
மேகம் போலே யானைகள் திரண்ட திரு மலை
சார்ங்கத்து-கையும் வில்லும்
வில் வலவா-ஷத்ரியர்கள் -ஆர்த்த சப்தம் உண்டாக கூடாது
முட்டியாலும் நிலையாலும் –
இழித்து பிடித்து
நூற்று கால் மண்டபம் காஞ்சி சிற்பம் உண்டாம்
ஏழு மரங்களும் மலைப் பாம்பு மேலே இருக்க
வாலை மிதித்தாராம் –
நேரே நிற்கப் பண்ணி எய்த ஏக வீரனே
ஒ -அழுகிறார்
இப்படி இருந்தும் -நீயே நம்பிக்கை ஏற்படுத்தி உபகாரம்
நம்பி உள்ள என்னை -ஆசைப்பட்ட என்னை உதவாது ஒழிவதே
அதி சங்கை பண்ணின சுக்ரீவனுக்கு விசுவாசமும் உண்டாக்கி
சேர்ந்து இருந்த மருது
தன்னை ரஷித்து
பிரளய காலத்தில் உண்டாக்கினது ஆச்சர்யம் இல்லை
இன்று இவன் தலை மேல் இடி விழும் போலே
அங்கேயாவது உண்டாக்க நீ இருக்க
முதல்வா -வேர் பற்றான தன்னை நோக்கி
சத் மட்டுமே இருக்க சதைவ சோமய-
உனக்கு வந்த ஆபத்தை மட்டும் போக்கிக் கொள்வாயா – ஒ விஷாத அதிசய சூசகம்
யானைகள் -மேகம் போலே நிதானம் -கருமை –
சமான தர்மம் –
முடிச் சோதியாய் -க்ரீஷ்டம்
முகச்சோதி –
தேஜஸ் முகம் கிரீடம் போலே சம்சயம்
அந்யதா ஞானம் த்யாஜ்யம்
திருமலை யில் இப்படி அந்யதா ஞானம் உத்தேச்யம்
காளி தாசர் ஸ்லோகம்
தேர் போகும் புழுதி ஆகாசம் போக
ஆகாசம் பூமி ஆக்கி
பூமி ஆகாசம் ஆக்கி
யானை போவதால்
கற்பனை அதிசயம் -ரஜோபி -கஜைகி-
சார்ங்கத்து உன பாதம் –
சரண்யன் திருவடிகள்
சரம் ஆண்ட த ண் தாமரைக் கண்ணன்
தசரதன் மகனுக்கு அல்லால் தஞ்சம் இல்லை
விரோதிகளை வளைத்து கொள்ளுகை
அந்த வலையில் அகப்படாதவரை அகப்படுத்தும் திருவடிகள்
கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம்
where there is will there is way
நாளைக் குறித்து அருள வேண்டும் என்கிறார்-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply