ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

——————————————————

வியாக்யானம் –
அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும் –
நெஞ்சில் அழிவை மறைக்க ப்ராப்தமாய் இருக்க
நெஞ்சில் அழிவைத் தாயான என் முன்னே சொல்லா நின்றாள் –
அலம் யென்று ஹலம் -கலப்பையை சேர்ந்து இருந்துள்ள
சுற்று உடைத்தான கையை உடைய -கிருஷ்னன் உடைய-
வாயில் குழல் ஓசையில்
ஒன்றுக்கும் அழியாத என் நெஞ்சு
அழியா நின்றது என்னா நின்றாள் –
வயிரமும் உருக்கும் காணும் வாயில் குழல் ஓசை –
இலைக் குழல் யென்று நிர்பந்திக்கிராரும் உண்டு –
ஹலத்தை உடைய என்கிற இதுக்கு கருத்து யாது என்னில்
கையில் ஆயுதத்துக்கு எதிரிகள் அழியுமா போலே
குழல் ஓசைக்கு இவள் அழியா நின்றாள் என்கை –
தாய் தமப்பனுக்கு பரதந்த்ரன் ஆகையாலே குறித்த காலத்திலேயே
வரப் பெற்றிலேன் -என்றாப் போலே சிலவற்றை
குழல் ஓசையிலே  தோற்ற வைத்து இறே ஊதுவது –
ஜகௌ கல்பதம் சௌரிச் ஸ்தார மந்திர பதக்ரமம்
ரம்யம் கீதத் நிம் ஸ்ருத்வா சந்த்யஜ்யாவ சதாம்  ஸ்ததா-
யென்று சொல்லுகிறபடியே –
அன்றிக்கே –
ஆறு நீர வர முன்னே சினை யாறு படுமா போலே
கிருஷ்ணன் வரவுக்கு உறுப்பாக முன்னேறும்
நம்பி மூத்த பிரான் குழல் ஓசை ஆகவுமாம்-

புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்-
அதில் காட்டிலும் அழிக்கும் போலே காணும்
அதுக்கு இவ்வருகில் உகந்து அருளின நிலத்தின் நிலை –
புலம் யென்று விளை நிலத்தை சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றிகே
கண்டார் உடைய இந்த்ரியங்கள் பிணி உண்ணும்படியாய்
தன்னில் தான் பொரா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைய திருபுட்குழியில் நிற்கிற நிலையை
அனுசந்தித்தவாறே நான் தாய் யென்று பாராதே
வாய் விட்டு பாடா நின்றாள்-

போதுமோ நீர் மலைக்கு யென்னும்
நம் தசை இருந்த படியாலே
திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு
சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –

குலங்கெழு கொல்லி கோமளவல்லி
கொல்லி மலையிலே ஒரு பாவை உண்டு -வகுப்பு அழகியதாய் இருப்பது
அது போலே யாயிற்று இவளுக்கு உண்டான
ஏற்றமும் பிறப்பும் -அனுகூலரும் அடுத்துப் பார்க்க ஒண்ணாத
சௌகுமார்யமும்-
என்னுடைக் கோமளக் கொழுந்து -என்னக் கடவது இறே –

கொடி இடை நெடு மழைக் கண்ணி–
கொடி போலே இருந்துள்ள இடையை உடையளாய்
ஒரு கால் கண்ணாலே நோக்கில் ஒரு பாட்டம்
மழை விழுந்தால் போலே இலக்கானார்
திமிர்க்கும் படியான நோக்கை உடையளாய்
உஜ்ஜ்வலமாக நிற்பதாய் –

இலங்கெழில் தோளிக்கு-
கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –

என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே
உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற
இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்-

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: