அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-
மாயனே–ஆச்சர்ய சக்தி உக்தன் –
மான-பரிமாணம் அகன்ற இலை-
——————————————————————–
வியாக்யானம் –
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய் என்னுமின் தொண்டர்க்கு-
அறிவு குடி போய் நோவு பட
தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை
நினைக்கிறார் –
இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்
இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை –
இப்படிப் பட்ட ருசியை உடையராய்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு
தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
மன்னு மாட மங்கையர் தலைவன் –
மன்னு மாட மங்கையர் தலைவன் ஆயிற்று கவி பாடினார் –
பிரளயத்துக்கும் கூட அழியாத மாடங்களை உடைய
திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –
மான வேல் கலியன்-
வேலைப் பிடித்தவர்களுக்கு
தம்மோடு ஒக்க ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உண்டாக்கும் வேல் என்னுதல்
இலை அகலிய வேல் என்னுதல் –
வாய் ஒலிகள் –
ஆழ்வார் ஒலியை உடைத்ததாகச் செய்தவை –
பன்னிய பனுவல் பாடுவார் –
ல்ஷணங்களில் ஒன்றும் குறையாதபடி
விஸ்த்ருதமாகப் பாடின
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாளும் பழ வினை பற்று அறுப்பாரே –
பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-
தாம் மோஹிப்பது
உணர்வதாக
திருத் தாயார் கூப்பிடுவதாக
வேண்டாதபடி
பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே
புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –
————-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-
அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply