Archive for August, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 18, 2013

  வந்தாய் போலே வாராதாய்! வாரா தாய்போல் வருவானே!
செந்தா மரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.

பொ-ரை :- வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும் சிவந்த கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே! சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.

வி-கு :- சிந்தாமணி – ஒருவகை இரத்தினம். பகர் – ஒளி. அல் – இருள். இறையும் அகலகில்லேன் என்க. இறை – சிறிதுபொழுது. ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1தாம் விரும்பியபோதே காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணாவிடில் தரிக்க மாட்டேன் என்கிறார்.

வந்தாய்போலே வாராதாய் – 2மானச அநுபவத்தில் உண்டான கரைபுரட்சிதான் ‘புறத்திலே கலவியும் பெற்றோம்’ என்று கொண்டு மனநிறைவு பிறக்கும்படியாய், அதனை ‘மெய்’ என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கு எட்டாதபடியாயிருக்கை. வாராதாய் போல் வருவானே – ஒரு நாளும் கிட்டமாட்டோம் என்று இருக்கச் செய்தே கடுகக் கைப்புகுந்து கொடு நிற்கும் என்கை. அன்றிக்கே, அடியர் அல்லாதார் திறத்தில் ‘கைப் புகுந்தான்’ என்று தோற்றி இருக்கச் செய்தே புறம்பாய், அடியார்கட்கு ‘இவன் கிட்ட அரியன்’ என்று இருக்கச்செய்தே உட்புகுந்து இருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம். செந்தாமரைக்கண் செம்கனிவாய் நால்தோள். அமுதே – 3தாபங்கள் எல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையவனுமாய், சிவந்த கனிந்திருந்துள்ள திருவதரத்தையுடையனுமாய், கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற நான்கு திருத்தோள்களையுடையனுமாய் இனியனு மானவனே! எனது உயிரே – 4இந்த வடிவழகை என்னை அநுபவிப்பித்து, பிரிந்த நிலையில் நான் உளன் ஆகாதபடி செய்தவனே!

சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே – விலக்ஷணமான இரத்தினங்களினுடைய ஒளியானது அல்லைப் பகல் செய்யாநின்றதாயிற்று; என்றது, இரவு பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக்கொண்டிருக்கையைத் தெரிவித்தபடி. 5“மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்றறிவரிதாய” – பெரியதிருமொழி, 4. 10 : 8.-என்னக் கடவதன்றோ. இதனால்நினைக்கிறது, 1“அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை” “ந கால: தத்ரவை ப்ரபு:”-எனகிற தேசத்தே சென்று அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே அநுபவிக்கக் காணும் நினைவு. அந்தோ – 2போக்கியமும் குறைவற்று, அவன்தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க, கிட்டி அநுபவிக்கப்பெறாது ஒழிவதே என்கிறார். அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே – 3என் சொரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்திபண்ணாய். 4காணாநிற்கச்செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.

தான் அபேஷித்த பொழுதே வர வேண்டும்
மணிகள் ஒளி வீச இரவையும் பகலாக்கி
வந்தாய் போலே வாராதே
மானஸ-அனுபவம் -அணைக்கப் பார்த்தால் கைக்கு எட்டாமல் இருக்க –
வாராதாய் போலே வருவானே
மீண்டும் கிட்டி வந்து –
மறக்கவோ -முடியாமல்
அநாஸ்ரிதர் விஷயத்தில் பிறர்க்கு அறிய வித்தகன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
மகா பலி போன்றர்க்கு சேவை சாதித்து
ஹிரண்யன் ராவணன் போல்வாருக்கும் வந்தாய் போலே இருந்தாலும் வாராதவன் போலே இருக்க
செந்தாமாரைக் கண் செங்கனி வாய்
நால் தோள்
போக்கியம் உள்ளவன்
பிரிந்தால் தரித்து இருக்க முடியாத நிலை அளித்து
ரத்னங்கள் பிரபை அல்லை பகல் ஆக்கி
திரு வெள்ளியங்குடி -பிராத சாய சந்த்யாவந்தனம் சங்கை வரும் படி -இரவையும் பகலாக்கி

அல் இரவு எல்லி இரவு
பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
காலமே இல்லாத பரமபதம் போலே
காலத்துக்கு ஆட்சி இல்லாத தேசம் -அது –
பகவத் அனுபவமே யாத்ரை இங்கேயே ஆழ்வார் அனுபவிக்க ஆசை கொள்கிறார் –
அந்தோ போக்யமும் குறை வற்று
அவனும் சந்நி ஹிதனாய்
எனக்கும் ஆசையும் மிக்கு
அடியேன் -ஸ்வரூபம் உணர்ந்து
ஸ்வரூபம் பார்த்து
தசை பார்த்து
இறையும்-இமைக்கவும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 18, 2013

நோலா தாற்றேன் உனபாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய்மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே.

பொ-ரை :- உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும் விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள், சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.

வி-கு :- நோலாது ஆற்றேன் உன பாதம் காண” என்பது, “நீலார் கண்டத்தம்மான்” முதலாயினோர்கட்கு அடைமொழி. அம்மானும் நான் முகனும் இந்திரனும் பலர்சூழ விரும்பும் திருவேங்கடம் என்க. மால் – கருமை; ஈண்டு, கரிய நிறத்தையுடைய கிருஷ்ணனுக்காயிற்று. மாலாய் வந்தாய்போலே அடியேன்பால் வாராய் என்க. வாராய்; விதிவினை.

ஈடு :- எட்டாம்பாட்டு. 1‘உன்னைச்சேர்தற்கு என் தலையில் ஒரு சாதனம் இல்லை’ என்னாநின்றீர்; ‘இது ஒரு வார்த்தையோ! சாதனத்தைச் செய்தார்க்கு அன்றிப் பலம் உண்டோ?’ என்ன, ‘அவர் அவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுஷ்டானத்தாலே என்றிருக்கும் பிரமன் முதலாயினோர்களுக்கும், கிட்டினால் பாசுரம் இதுவே அன்றோ?’ என்கிறார். தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனைபோக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம்படியோ நீ இருக்கிறது?

நோலாது ஆற்றேன் உனபாதம் காண என்று நுண் உணர்வின் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் விரும்பும்திருவேங்கடத்தானே – உன் திருவடிகளைக் காண்கைக்கு, சாதன அநுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து உன்னை ஒழிய ஆற்றமாட்டேன் என்றாயிற்று, அவர்கள் 1தனித்தனியே சொல்வது. 2ஒரு வாணாசுரனுடைய போரிலே தோற்றுப் போக்கடி அற்றவாறே இங்ஙனே வந்து விழுவர்கள். 3இராசத தாமதகுணங்கள் தலை எடுத்தபோது ‘ஈசுவரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று துதிசெய்யத் தொடங்குவர்கள்

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.

போதகத் தானும்வெண் போதகத் தானும் புராந்தகனும்
தீதகத் தானது நீர்தரும் காலைத் திருவரைசேர்
பீதகத் தாய் அழ கா அரு ளாய்என்பர் பின்னைஎன்ன
பாதகத் தான் மறந் தோதனி நாயகம் பாலிப்பரே.=  என்பது, அழகரந்தாறு, 90.

; 4“ஓ நாதனே! அசுரசேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்” என்கிறபடியே

.ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65

விஷத்தைக் கண்டத்திலே தரித்த ஆற்றலுடையவனாய் அதனாலே உலகத்திற்குப் பிரதானனாக அபிமானித்திருக்கும் சிவனும், அவனுக்கும் தந்தையாய் அவனிலும் ஞானத்திலும்சக்தியிலும் நிறைந்தவனான பிரமனும், மூன்று உலகங்கட்கும் அரசனான இந்திரனும்; 1“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்பது நாராயண அநுவாகம். “ஸபிரஹ்மா ஸ்ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.
2இங்ஙனே இருக்கச் செய்தேயும், அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்கியங்களைப் பிரமாணங்களாகக் கொண்டு போராநின்றோமே? என்னில்‘இவர்களுடைய வாக்கியங்களை’ என்றது,
“அஹமஸ்மி அபராதாநாம் ஆலய:” என்பது போன்றவைகளை.

, 3“சத்துவம் தலை எடுத்தபோது சொல்லுமவை எல்லாம் கொள்ளக்கடவமோம்; இவை கைக்கொண்டோம் என்னா, இவர்கள் தாம் உத்தேசியர் ஆகார்க்ள;

விலையான திலைஎன்று நீதந்த முத்தம்
வேய்தந்த முத்தாகில் வெற்பா வியப்பால்
இலையார் புனற்பள்ளி நாரா யணன்பால்
எந்தாய்! அரங்கா! இரங்காய் எனப்போய்த்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும்
தன்தாதை அவர்தா மரைத்தாள் விளக்கும்
அலையாறு சூடும் புராணங்கள் பாடும்
ஆடும் பொடிப்பூசி ஆனந்த மாயே.–என்பது, திருவரங்கக்கலம்பகம், 61.

4‘காக்கைவாயிலும் கட்டுரை கொளவர்’-பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 1.- என்று உண்டே” என்று பட்டர் அருளிச் செய்வர்.

1ஓர் ஆழ்வார்,

பிதிரு மனமில்லேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.-என்பது, நான்முகன் திருவந்தாதி. 84.

‘பிதிரும் மனம் இலேன் – பேதிக்கப்பட்ட நெஞ்சினையுடையேன் அல்லேன்; பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் – 2சிவன் எனக்கு ஒத்தவன்; அவன் எனக்கு நேரான் – அவனும் எனக்கு ஒத்தவன் அல்லன்; அது என்? என்னில், அதிரும் கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் – பகவத் விஷயத்தில் நெஞ்சை வைத்து அநுபவிக்கையே யாத்திரையான எனக்கு, அந்யபரனானவன் ஒப்பாகப் போருமோ?’ 3‘குறைகொண்டு – தன் வெறுமையைக் கைதொடு மானமாகக் கொண்டு, நான்முகன் குண்டிகைநீர் பெய்து – நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று, உபகரணம் பெற்றிலன், தர்மதேவதையானது தண்ணீராய் வந்து தங்கிற்று, அதனைக்கொண்டு, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – வேதாந்தங்களில் பகவானுடைய பரத்துவத்தைச் சொல்லுகின்ற மந்திரங்களைக் கொண்டு துதிசெய்து. கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் – நான்முகன் திருவந். 9. கைதொடுமானம் – சகாயம்.

அடக்கமில்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப் போலே’. நுண் உணர்வில்-சத்துவம் தலையெடுத்தபோது 4சொல்லுவது இதுவே. சத்துவகுணத்தினால் ஞானம் நன்கு உதிக்கின்றது என்பதே அன்றோ பிரமாணம். நீலார் கண்டத்து அம்மானும் – விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈசுவரனாகத் தன்னை மதித்துக்கொண்டிருக்கின்ற சிவனும். நிறை நான்முகனும் – அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தையுடையனான பிரமனும். இந்திரனும்-இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச்செய்தே “அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்திரனும்.

சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – 1தந்தாமுக்கு ஓர் உயர்த்தி உள்ளபோது பெண்கள் முன்னிலையில் ஓர் எளிமை தோற்ற இரார்களே அன்றோ; ஆபத்து வந்தவாறே, மணாட்டியார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படம் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள். “சிவபெருமான் இருகரங்களையும் கூப்பிக்கொண்டு விஷ்ணுவைப்பார்த்து விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடுகூடச் சொல்லுதற்கு விரும்பினான்” என்றும்,

“அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.

3“ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபைசெய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடுபடவேண்டும்” என்றும்,

“தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.

4“நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்” என்றும்,

தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.

5“சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?” என்றும் சொல்லுகிறபடியே

கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,

வந்து விழுவர்களே அன்றோ. அவர்களுக்கு அடையலாம்படி சுலபனாய்வந்து நிற்கிறானாதலின், ‘திருவேங்கடத்தானே’ என்கிறார். மாலாய் மயக்கி – 1“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும், அன்றிக்கே, மாலாம்படி மயக்கிக்கொண்டு வரவேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்; அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய், கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக்கொண்டு வந்தாற் போலே எனக்காகவும் ஒருவரத்து வரவேணும் என்கிறார்; 3“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3. மாலே
செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத்தலைக்கு
வியாமோகத்தை விளைக்குமவனை. மாலாய் – கிருஷ்ணனாய்.-

சாதனம் இல்லை நீரே சொன்ன பின்பு
காசு இல்லாதாருக்கு பண்டம் உண்டோ
தம் தாம் உடைய அபிமத சித்தி
மேன்மைக்கு தக்க யாரும் சாதனம் செய்ய முடியாதே
ஆகிஞ்சன்யம் அறிவித்தே உன்னைப் பெற முடியும்
நோலாது ஆற்றேன் உன்ன பாதம் -ப்ரஹ்மாதிகளும் இப்படியே சொல்லி
சேலேய் கண்ணார் பலர் சூழ வந்து
மாலாய்
வந்தாய் போலே வாராயே
தனித் தனியே வந்து இதே வார்த்தை சொல்லிக் கொண்டு
பாண யுத்தத்தில் தோற்று வந்த சமயத்தில் சொல்லுவார்கள்
எப்பொழுதும் சொன்னால் ஆழ்வார் ஆவாரே
ஈச்வரோஹம் ரஜஸ் தமஸ் தலை எடுத்த பொழுது
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ புகழ்வார்
விஷத்தை கண்டத்தில் தரித்து அத்தாலே அபிமானித்து இருக்கும் ருத்ரனும் சதுர முகனும் இந்த்டனும்
நுட்பமான அறிவு -இப் பொழுதாவது  வந்து சொல்கிறார்கள்
ச பிரம்மா செந்த்ரா என்பதால் மூவரையும்

அஹம் அபராத ஆலயா
பிராதனா மதி சரணாகதி
தவமே சரணாம்
ருத்ரன் வார்த்தை பிரமாணங்கள்
சத்வம் தலை எடுத்து சொல்லிய வார்த்தை –
வார்த்தை தான் கொள்வோம் –
கை கொள்ளக் கடவோம் இவர்கள் உத்தேச்யர் ஆக மாட்டார்கள்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் -பட்டர் அருளிச் செய்து
அவன் எனக்கு நேரான் -திரு மழிசை ஆழ்வார்
பேதிக்கப் பட்ட நெஞ்சு இல்லை
ருத்ரன் எனக்கு நேரான் -சமானம் இல்லை –
கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் –
நெஞ்சை வைத்து அனுபவிக்கையே யாத்ரை –
அந்ய பரன் சமன் இல்லையே
குறை கொண்டு நான் முகன் -சென்னி மேல் ஏறக் கழுவினான் -ஸ்ரீ பாத தீர்த்தம்
வெறுமையை கொண்டு-

திடீர் என்று சத்யா லோகம் வந்ததால் –
குண்டிகை நீர் -தர்ம தேவதை த்ரவ்ய பூதமாக
உருகி -வேத வாக்யங்கள் கொண்டு கழுவினான்
புருஷ சூக்தம் சொல்லி
கரை கொண்ட கண்டத்தான் -அவிநீயாத -பிரஜைகள் மேல் ஸ்ரீ பாதம் தெளிப்பாரைப் போலே
சென்னி மேல் ஏறக் கழுவினான்
நோலாது ஆற்றேன் -நுண் உணர்வு இருக்கும் பொழுது சொல்லும் வார்த்தை –
ஈஸ்வர அபிமான ருத்ரன் -நிறை நான் முகன் ஞானத்தால் பூர்த்தி -இந்த்ரன் –
சிருஷ்டி சம்ஹாரம் அந்வயம் இன்றி ஒக்க எண்ணலாம் படி இந்த்ரன்
சேலே ய் கண்ணார் -மீன் போன்ற பெண்கள்
தம் தாமுக்கு உயர்த்தி இருக்கும் பொழுது -பெண்களை காட்டாமல்
ஆபத்து வந்த பொழுது
தங்கள் கழுத்திலும் மணாட்டிமார் கழுத்திலும் கப்படம்
துணியை கட்டி
கட்டு மரம் -தமிழ் இருந்து ஆங்கிலம் வந்த வார்த்தை

காப்பு கட்டின துணியை கழுத்தில் கட்டி வந்து விழத் தொடங்குவார்கள்
உமை ஈசன் -கிருஷ்ண கிருஷ்ணா மகா பாவோ
யாசகம் செய்யும் பொழுதும் பார்வதி உடன்
சமுத்திர ராஜன் சவிதாம் பத்தி உடன் பெருமாள் காலில் விழுந்து
தாரை முதலில் போனாள் இளையபெருமாள் கோபம் குறைக்க
சர்வ சுலபன்
மாலாய் மயக்கும் படிக்கு ஈடாக வர வேண்டும்
மால் பித்து ஆகும் படி மயக்கிக் கொண்டு வர வேண்டும் என்பர்
அது அன்று பொருள்
மால் கருமை என்றும்
கிருஷ்ணன் -போலே பிச்சேற்றி கொண்டு வர வேண்டும்
வேங்கட கிருஷ்ணன் –
கிருஷ்ணன் வேஷம் கொண்டு திருவேங்கடத்தான் கொண்டு
தேர் கடவ கழல் கழல் காண்பது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 18, 2013

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.

பொ-ரை :- அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே! அழகிய கோவைக்கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.

வி-கு :- அடுபுள் கொடியா உடையானே! என மாற்றுக. நோலாது உனபாதம் காண்கைக்கு நொடியார் பொழுதும் ஆற்றேன் என்க. நோற்றல்-அவனைக் காண்டற்குரிய சாதனங்களைச் செய்தல். நொடித்தல் – இரண்டு விரல் நுனிகளைச் சேர்த்துத் தெறித்தல்.

ஈடு :- ஏழாம்பாட்டு. 1“மெய்ந் நான் எய்தி” என்ற இந்த ஞானலாபம் உமக்கு உண்டாயிற்று அன்றோ; அது பலத்தோடே கூடியல்லது நில்லாதே அன்றோ; ஆனபின்பு, அவ்வளவும் நீர் ஆறி இருந்தாலோ? என்ன, ‘உன்னுடைய இனிமை, அத்துணை கிரமப்பிராப்தி பார்த்திருக்கப்போகிறது இல்லை’ என்கிறார். உன்தனை ஆறி இருக்க நான் மாட்டுகிறிலேன்.

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – 2தேவஜாதிகளுடைய உப்புச்சாறு போலன்று; ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று; வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று. இமையோர் அதிபதியே – 3இதனை உண்பதற்குக் கூட்டாவது ஒரு திரள் அங்கே உண்டாயிருக்கிறபடி. அடு புள் கொடியா உடையானே-விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடையபெரிய திருவடியைக் கொடியாக உடையவனே! கோலம் கனிவாய்ப் பெருமானே – அழகியதாய்க் கனிந்துள்ள திருவதரத்தின் சிவப்பைக் காட்டி என்னை அடிமைகொண்டவனே! 1வாய்க்கரையிலே தோற்றார்காணும். 2அடியார்கட்கு இவ் வழகை அநுபவிப்பிக்கைக்குக் கொடிகட்டிக்கொண்டிருக்கிறபடி. செடியார் வினைகள் தீர் மருந்தே-3பாபத்தோடே பொருந்தின தீயவினைகளாலுண்டான துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே! செடி – பாவம். அது உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி. அன்றிக்கே, தூறுமண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல். 4அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.மூன்றாந்திருவந். 4. – “மருந்தும் பொருளும் அமுதமும் தானே”திருவாய். 9. 3 : 4– என்றும், “மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு” என்றும் கூறுகிறபடியே அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே. மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார்
திரு. 5. 3 : 6.

திருவேங்கடத்து எம்பெருமானே – 5அவ் வமுதம், உண்பார்க்கு மலைமேல் மருந்து அன்றோ. அவ் வமுதம், உண்பார்க்குச் சாய்கரகம்போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி. 1இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார். 2பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது’ என்று இருக்கின்றதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச்செய்தார். நொடியார் பொழுதும் – நொடி நிறையும் அளவும். உன பாதம் காண நோலாது ஆற்றேன்-3உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கணநேரமும் ஆற்றமாட்டுகிறிலேன். என்றது, சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைம்போலே படாநின்றேன் என்றபடி. 4அது இல்லாமை அன்றோ இவர் இங்ஙனே கிடந்துபடுகிறது. தனியே ஒரு சாதனம் செய்யுமவனுக்கு, ‘அது முடிவு பெற்றவாறே பெறுகிறோம்’ என்றாதல், ‘அதிலே சில குறைவுகள் உண்டானமையால் அன்றோ பலம் தாழ்த்தது’ என்றாதல் ஆறி இருக்கலாம்; அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப்பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.

ஞான லாபம் உமக்கு உண்டாயிற்றே
மெய்யாக அடைய ஏங்குவது எதற்கு
பலத்துடன் சேர்த்து தான் வரும்
ஆறி இருக்க வேண்டாவோ
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க முடியாத போக்யதை உண்டே
உனது பாதம் காண நொடி பொழுதும் நோற்க வில்லை
அடியேன் மேவி அமர்கின்ற அமுது
உப்பு சாறு போலே இல்லையே அது தேவ ஜாதி கூட்டமாக அனுபவிக்க
இது எனக்கே ஏற்ப்பட்ட அமுதம்
அநந்ய பிரயோஜனர் அமிர்தம் இது
அத்விதீயமாக
மேவுதல் -இதிலே இருக்கை
திருவேங்கடத்தானே -அர்ச்சை -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுது இது
இமையோர் கூட்டமாக அனுபவிக்க இருக்க
விரோதி நிரசனம் கொடியார் புல்லை கொடியாக கொண்டவன்

அழகிய திருப்பவளம் காட்டி என்னை எழுதிக் கொண்டு
வாய்க்கரையில் நின்று தோற்றாமல்
கொடி கட்டி கொண்டு இருக்கிறான் விரோதி நிரசன சீலன் காட்ட
செடியார் -பாபம் வளர்ந்து -வினைகள்
செடி பாபம் வினையால் வரும்
தீர்க்கும் மருந்து
தூறு மண்டின கர்மங்களை போக்கும்
அமிர்தமே மருந்தாகிறது
மருந்தும் பொருளும் அமிர்தமும் அவனே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
உபாயம் உபேயம் போக்யதை மூன்றுமே அவனே
அவன் தன்னை வேறு மருந்தும் இல்லையே
மலை மேலே மூலிகை போலே திருவேங்கடத்தில் எம்பெருமானே
சஞ்சீவி மலை கொண்டு வந்து அருளி திருவடி
மீண்டும் கொண்டு போய் வைத்தாராம்
புஜீப்பாருக்கு சாய் கரகம் போலே உயரத்தில் நின்று அருளி –

பட்டர் இந்த பாசுரம் அமுது செய்து
ஸ்தோத்ரம் -நித்ய கிரந்தம் -எம்பெருமானார் -அருளி செய்து இருக்க –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே
இமையோர் அதிபதி
ஆறு விஷயங்கள்
அரு சுவை அடிசில்
பச்சை மா மலை போல் மேனி போன்ற பாசுரங்கள்
பவள வாய்
கமலா செங்கண்
அச்சுதா
அமரர் ஏறே
இதிலும் ஆறு சுவை உண்டு
அதனால் இவற்றை விண்ணப்பம் செய்து –
அதிலும் இந்த இரண்டு பாசுரங்கள் –
நாறு -ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்

நொடி -சாதனா அனுஷ்டானம் பண்ணாமல்
ஷணகாலமும் பிரிந்து இருக்க முடியாமல் துடிக்கிறேன்
முழுக்க அனுஷ்டிதவர் துடிப்பது போலே
சாதனம் இல்லாததால் துடிக்கிறார் –
சாதனம் அனுஷ்டித்து இருந்தால் -அது கொடுக்கும் பொழுது
வரட்டும் என்று ஆறி இருக்கலாம்
அவனே சாதனம் சித்தோ உபாயம் அவிளம்பித்த பலம் தர வேண்டுமே
கிருபையும் ஏறி பாய முடியாத மேடு என்ற பயத்தால் துடிக்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 18, 2013

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே!
மெய்ந்நாள் எய்தி எந்நாள் உன்7 னடிகள் அடியேன் மேவுவதே?

பொ-ரை :- உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.

வி-கு :- இமையோர்கள், மண் அளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி மெய்ந் நா மனத்தால் வழிபாடுசெய்யும் திருவேங்கடம் என்க. “மெய்ந் நா மனத்தால்” என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியவாறு. அடியேன் நான் மெய் எய்தி உன்னடிகள் மேவுவது எந்நாள்? என்க.

ஈடு :- ஆறாம்பாட்டு. 1“எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன, அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார். அங்ஙன் அன்றிக்கே, வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும்கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.

மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று – 2“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார் அங்கே சென்று அடிமைசெய்ய ஆசைப்படுமாறு போலேகாணும், அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி. 3எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ? பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்துகொள்ளக் கண்ட காட்சியிலே தலைமேலே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் படியான இனிமையையுடைய திருவடிகளை. மற்றொருபோது வேறுஒன்றனைப்பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்.

இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி – நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய். மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் – 1மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யாநிற்பர்கள். அன்றியே, மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம். வழிபடுதலாவது, வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக்கொண்டு அடைந்து வணங்குதல். 2நித்தியசூரிகளானபோது, கைங்கரியமாகக் கொள்க. பிரமன் முதலான தேவர்களானபோது, உபாசனமாகக் கொள்க. மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –3குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது; நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடேகூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார். 4ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.

அங்கு உள்ளாறும் நித்தியரும்
இமையோர் –
பிரயோஜனாந்த பரர்களும் அனுபவிக்கும் படி
ப்ரஹ்மாதிகளை சொல்வாரும் உண்டு
அடுத்த பாட்டில் இதை சொல்வதால் அது உசிதம் அன்று
24000 படி
உலகு அளந்த திருவடிகளை காண்பது என்று
இமையோர் இனம் கூட்டமாக
முக் கரணங்களால்  மெய் நா மனத்தால்
மெய்யாகவே நான் எய்தும்படி -மானச அனுபவம் மாதரம் இன்றி
சௌலப்யம் கண்டு அனுபவிக்க
சர்வ சுலபமான திருவடிகள் -வசிஷ்டர் சண்டாள விபாகம் அற
இணைத் தாமரைகள் பரம போக்யமான
மண் அளந்த இணைத் தாமரை இணை அடிகள்
தாள் பரவவி மண் தாவிய ஈசன் -இவன் தானே
துளங்க-மந்த்ரம் அறிந்த வாறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன்னடி -திருமாங்கை ஆழ்வார்
சமஸ்த ஜகதம் மாதா தாய் போலே -அளக்கும் திருவடி என்ற அர்த்தமும் உண்டு

காலம் எல்லாம் வந்து வணங்கி
சௌந்தர்யா வெள்ளம் இனம் இனம் ஆக வந்து
மெய் நா மனத்தால்
மெய்யான மனஸ் என்றுமாம்
அநந்ய பிரயோஜன கரணங்கள்
கைங்கர்யம் நித்யருக்கும்
உபாசனம் ப்ரஹ்மாதிகளுக்கு
வழி பாடு செய்யும்
மெய்யாகவே நான் எய்தி -குணானுஷ்டனம்-காட்டி போக்கினாய் இது வரை –
அப்படி ஏமாற்றாமல் -புகட்ட பிரமிக்க ஒண்ணாது
பத்தும் பத்தாக திருவடிகளை அடையும்படி
ராவணன் தலையை பூர்ன்னமாக வெட்டினது போலே
பொறுந்த-மேவும் படி –
வேறு அடிகளில் சத்தை இல்லையே இவருக்கு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-115-141-ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

August 17, 2013

அவனே உபாயம் என்ற எண்ணமே வேண்டும்
இரக்கம் -உபாயம் -தயை கிருபை ஒன்றே உபாயம் -அத்தாலே அனுபவிப்பது
இச்சை -உபேயம் -அவனே போக்தா -இதுவே தகுதி -ஸ்ரத்தையே -மனம் உடையீர் என்னும் திருநாமம் திண்ணம் நாரணம்
மற்ற உபாயங்கள் ஸ்வரூப விரோதம்
இனிமை –
நஞ்சீயர் வார்த்தை
பிரதான ஹேதுக்கள் இவை
இதர விஷய பரித்யாகம் சொல்லி –
இதர உபாய பரித்யாகம் பிரதான ஹேது சொல்ல ஆரம்பிக்கிறார் –

சூர்ணிகை -115
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான
அசக்திகள்
அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

ப்ராபகம் உபாயம் சாதனம் வழி -பர்யாய சப்தங்கள்
ப்ரபாகாந்தரம் -அவனை தவிர
பரித்யஜ்ய -வாசனை உடன் பரித்யாகம்
அதுக்கு பிரதான ஹேது அஞ்ஞானமோ அசக்தியோ இல்லை
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்கிறார்-

அவள் அருள் நினைந்தே அழும் குழவி –
அவனைக் கொண்டே அவனை பெருகை ஸ்வரூபம் –
பிரபத்தி உபாயம் ஒழிந்த உபாயங்கள் ப்ரபாகாந்தரங்கள் -கர்ம ஞான பக்தி யோகம்
அறிகைகுகும் அனுஷ்டிக்கவும் ஞான சக்தி கள்  வேண்டுமே
தைல தாரை போலெ இடைவிடாதே த்யானம் செய்ய வேண்டுமே –
அவிச்சின்ன பூர்வக த்யானம் –
அத்யந்த பாரதந்த்ர்யமே முக்கிய ஹேது
இவை யும் -அஞ்ஞானம் அசக்தியும் -ஹேதுக்கள் தான்-

அஞ்ஞானத்தால் பிரபன்னர் அஸ்மாத்தாதிகள்
முன்பு சொல்லி
ஸ்வரூப ஞானம் இருந்தால் இவை வந்தாலும் கொள்ளார்
தன்மை -அத்யந்த பரதந்த்ரம் இட்ட வழக்காய் -அவனே எல்லாமுமாக கொள்வதால்
அரைய முடியும் -ஆனால் கூடாது
சக்தி இருப்பதால் அந்த கார்யம் செய்யலாமா யோசித்து தான் செய்வோம்-

சக்யம் எல்லாம் யோக்கியம் இல்லையே
ஸ்வரூப விருத்தம் என்று விட்டால் மருகல் இன்றி விட வழி
இவையும் உபாயம் தானே என்றால்

சூர்ணிகை -116-
பிரபகாந்தரம்
அஜ்ஞர்க்கு
உபாயம் –

முட்டாளுக்கு உபாயம் –
ஸு ரஷண -ஸு யத்னம் பொருந்தாது என்று அறியாதார்
பிறப்பது -இவன் கையில் இல்லை இறப்பதும் இவன் கையில் இல்லை
நடுவில் உள்ளது மட்டும் உன் கையில் இருப்பதாக ஏன் நினைக்கிறாய்
இதை கூட அறியாத -அஞ்ஞர்
எது நல்லது இல்லை என்பதை அவனே அறிவான்
பிரார்த்தனை கூடாது சம்ப்ரதாய கொள்கை இதனால் தானே-

ஸூ ரஷண ஸூ யத்னம் சகிக்காத ஸ்வரூபம்
உணராதவன்

சூர்ணிகை -117-
ஜ்ஞாநிகளுக்கு
-அபாயம் –

ஞானிகளுக்கு அபாயம் ஆக இருக்கும்

பிரம்மாஸ்திரம் -சணல் கயிறு கட்ட பொறுக்காதே –
சரணாகதி வேறு ஒரு சாதனத்தை பற்றில் அரணா காதே –
அபாயம் -ஸ்வரூப நாசகம் என்பதால்

சூர்ணிகை -118-
அபாயம் ஆயிற்று
ஸ்வரூப நாசகம்
ஆகையாலே-

சூர்ணிகை -119
நெறி காட்டி நீக்குதியோ -என்னா
நின்றது இ றே-

நெறி காட்டி நீக்குதியோ –
நெறி உபாயம்
வேறு -காட்டி -மட்டும் சொல்லாமல்
நீக்குதியோ சப்தம் சொல்லி –
உன்னையே உபாயமாக கொண்டு சேர்ப்பாயா
நெறி காட்டுவதும் நீக்குவதும் பர்யாய சப்தங்கள்
என்ன செய்வதாக நினைத்து இருக்கிறாய்

நின் பால் கரு மா திரு மேனி காட்டி சேர்ப்பாயா
அபாயம் சொல்வதற்கு பிரமாணம் காட்டி அருளி

வேறு உபாயம் காட்டுவதே அகற்றுவதற்கு சமானம்
நீக்குதல் -அசல் ஆக்குகை
நீயே செய்து கொள் கை விடுகிறான் –
சூர்ணிகை -120
வர்த்ததே மே  மஹத் பயம் -என்கையாலே
பய ஜநகம்
மா ஸூ ச -என்கையாலே
சோக ஜநகம்

என்னுடையே மனம் வைத்து
பக்தி யோகத்தில்
இருக்க சொல்லி சரம ஸ்லோகம் அடுத்து
கவலைப்படாதே என்பதால் முன்பு கவலைப் பட்டான்
பக்தி யோகம் சொன்ன பின்பு கேட்ட அர்ஜுனன் கவலை கொள்ள
அதற்க்கு இப்படி அருளி செய்தான்
இதனால் மற்ற உபாயங்கள் பயமும் சோகமும் உண்டாக்கும்
சூர்ணிகை -121
இப்படிக் கொள்ளாத போது
ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயஸ் சித்த விதி
கூடாது

ஐயோ இப்படி செய்தோமே
பிற்பாடு நினைந்து வருந்துவதே பிராயஸ் சித்தம்
நம்மை மறந்த நிலையில் செய்த தப்புக்கு தானே பிராயஸ் சித்தம்
burnol இருப்பதால் நெருப்பில் கை வைக்கலாமா போலே
ப்ரபன்னன் -உபாயாந்தர சம்சர்க்கம் ஏற்பட்டால் பிராயச் ஸித்தம் சொல்லி
இது கூடாது எனபது அறியலாமே

சாஸ்திரமே விதித்து இருக்க
சக்ருதேவ ஒரே தடவை பிரவ்ருத்தி  செய்ய வேண்டும்
தென்னாசார்ய சம்ப்ரதாயம்

பஞ்ச சம்ஸ்காரம்
பர ந்யாசம் அடுத்து செய்து கொண்டு
சரம தசையில் பிராய சித்தி பிரபத்தி செய்கிறார்கள்
ஒரு பழத்துக்காக ஒரு தடவை என்பர்
மோஷத்துக்கு முதலில் செய்து
பாபங்களுக்கு ப்ரபத்தி அடுத்து என்பர்

மந்திர ரத்னம் அனுசந்தானம் செய்து கொண்டே
இது மீண்டும் மீண்டும் சரணா கதி இல்லையே
பூர்வ சரணாகதி அநு ஸ்மரணம் தானே

ஸ்ரீ வைஷ்ணவர் வேற யாரை வைதால் கேட்க கூடாதே
த்வயம் சொல்லி பிராயச் சித்தம் செய்யலாம்
உள்ளும் வெளியில் சுத்தி ஏற்பட
புன பிரபத்தி பூர்வம் செய்ததின் ஸ்மரணம் தான்
சூர்ணிகை -122
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி
மதி ரா பிந்து மிஸ்ரமான ஸாத கும்ப மய
கும்ப கத தீர்த்த ஸலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம்-

பிரபத்தியில் அஹங்காரம் வராதே
உபாயாந்தரம் அஹங்கார மிஸ்ரம்
கள் கலந்த
பொன் -குடத்தில் கங்கா தீர்த்தம் -வைத்தாலும்
உபயோகம் இல்லை போலே
உபாயாந்தரம் த்யாஜ்யம்
அபியுக்தர் வசனம் கொண்டு தெரிவிக்கிறார்
சர்வஞ்ஞர் -சாஸ்திரம் ஆராய்ந்து -ஆப்த தமர் -என்கிறார் மா முனிகள்
ஆள வந்தார் -திருப் பேரனார் திருமலை நம்பி குமாரர் இவர் என்பர் சிலர்

வியாச உவாச -சொல்லி சமஸ்க்ருத பிரமாணங்கள் சொல்லுவார்
ஆப்த தமர்

அத்யந்த நிஷித்த த்ரவ்யம்
சேரும் வஸ்துவையும் நிஷிதம் ஆக்கும்
அஹங்கார சம்பந்தம் நிஷிதம்
கும்பம் தங்கமயம் -மேல் பூச்சு இல்லாமல் பூரணமாக தங்கம் -பாத்திர சுத்தி சொல்லி
ஆத்மா -நிர்மலம் சுத சுத்தி பகவத அனன்யாரஹ –
பக்தியும் ஏகாந்த –
அஹங்காரம் கலசித்து இருந்தால் குற்றம் வருமே
பணிக்கும் படி -என்று -சேர்த்து கொள்ளுவதையும் மா முனிகள் அருளி-

உபாயாந்தரமே தோஷம் இல்லை என்கிறார்
அஹங்கார கலசி இல்லாமல் இருந்தால் தோஷம் இல்லை -தேசிகன் அர்த்தம் காட்டி அருளி
ஸு யத்னம் என்றாலே அஹங்காரம் வரும் பிள்ளை லோகாச்சார்யர் அருளி –

சூர்ணிகை -123
ரத்னத்துக்குப் பல கறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

இன்னமும் இதுக்கு பலத்துக்கு சத்ருசம் இல்லை என்கிறார் –

உபாயமே பலம் கொடுக்காதே
பலம் பெற்று தருவதே உபாயம்
கர்ம ஞான யோகம் மூலம் -அவை அசேதனம்
இவற்றால் த்ருப்தனான அவனே பலம் தருவான்
இவை பலத்துக்கு சமம் இல்லையே

சூர்ணிகை -124-
தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

பல கறை -கிளிஞ்சல் போலே
இதை வாங்க dollar கொடுப்பது போலே
ராஜ்ஜியம் வாங்க எலுமிச்சம் பழம் கொடுப்பது போலே
பரிபாடல் -ஸ்தோத்ரம்
ராஜ அளவுக்கு செல்வம் கொடுப்பவன்
முத்து கொடுத்து அரிசி -செழு முத்து திரு நாங்கூர் பாசுரம்
யானை சேர நாடு
பாண்டிய நாடு முத்து
சோழ நாடு சோறு உடைத்து
பலத்துக்கு ஈடு இல்லாதது போலே
ஈஸ்வரன் உகப்பே காரணம்
நாம் கொடுக்க அதுகூட இல்லை
தரித்ரனன் நமக்கு ஒன்றும் இல்லையே
யானே நீ என்னுடைமையும் நீயே
சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லையே –

அவன் இடம் இல்லாதவற்றையே கொடுத்து பெற வேண்டும்
நம்முடைய வஸ்துவையே கொடுக்க வேண்டும்
எம்பெருமான் விஷயத்தில் இப்படி ஒன்றும் இல்லையே
அவன் பூரணன்
நாமோ தரித்திரன்
உண்டு நமக்கு விரகு இல்லை
கொள்ளக் குறைவு இல்லாதவன் அவன் -அருளாள பெருமாள் எம்பெருமானார்

சூர்ணிகை -125
அவன் தந்தத்தை கொடுக்கும் இடத்தில்
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம்
அடைவு கெடக் கொடுக்கில் களவு வெளிப்படும்

அடைவிலே கொடுத்தால் உபாயம் இல்லை
கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுப்பது போலே
ப்ரஹ்ம உபதேச துல்ய சம்பாவனை பிள்ளை பிதாவுக்கு சமர்ப்பித்து போலே –
விசித்ரா தேக சம்பத்தி
அந்நாள் நீ தந்த ஆக்கை
அவன் கொடுத்தவை
சத்யம் கீர்த்தனம் த்யான  அர்ச்சனா ஆதிகளால் தத் சேஷம் ஆக்குதல்
ததீயம் என்ற புத்தியால் சமர்ப்பிக்கை
என்னது என்றால் களவு வெளிப்படும்
ராஜ மகேந்திர படியை திருடி சமர்ப்பித்தது  -போலே
உபாயாந்தரம் இப்படி சாதனம் ஆகாது என்று நிர்ணயிக்கிறார் –

சூர்ணிகை -126-
பர்த்ரு போகத்தை
வயிறு வளர்க்கைக்கு
உறுப்பாக்குமா போலே
இருவர்க்கும் அவத்யம்-

உபாயாந்தர தோஷம் பிரகரணம்
அவ்வழி ஒழிந்த அனைத்து புன்மையும் பார்த்து வருகிறோம் –
கொடுக்கலாவது ஒன்றும் -இல்லை தரித்திரன் ஆகையாலே
அவன் கொடுத்தான் என்ற நினைவுடன் கொடுத்தால் அது அநுபாயம் ஆகுமே
தன்னது என்று கொடுத்தால் களவு தானே வெளிப்படும் –
பர்த்ரு போகத்தை -அவனை உகப்பிக்கைக்கு என்ற எண்ணம் இன்றி வயிறு வளர்வதற்கு
சாதனம் ஆக நினைப்பது போலே
ஸுயம் பிரயோஜனம் இது –
சாதனம் ஆக்கினால் இருவருக்கும் அவத்யம் -தாழ்வு
பக்தி -அவன் மேல் ஈடுபாடு -வை லஷண்ய அனுபவத்தால் உண்டான ஆசை -ஈடுபாடு
மேலே மேலே இன்னும் அனுபவிக்க பண்ணும் இத்தை மோஷ ஹேதுவாக கொண்டால்
சேஷ பூதன் -சேஷி இருவருக்கும் அவத்யம்
மடி தடவாத சோறு –
பக்தியை உபாயமாக கொள்ள கூடாது
சாதனம் ஆக்கினால் குறை
அதுவும் பலத்தில் சேரும்

சூர்ணிகை -127-
வேதாந்தங்கள் உபாயமாக
விதிக்கிற படி என் -என்னில்-

தேசிகன் -சம்ப்ரதாயம்
வாக்ய யோஜனா பேதமே உண்டு
சித்தாந்தத்தில் பேதம் இல்லை
அதிகாரி நியதம் அனுஷ்டான பேதம் –
அதிகாரி பேதத்தால் ஒருவனுக்கு இது சாதனம்
வேதாந்தங்களில் உபாயமாக விதிக்கிறது எதனால்-

ஹிதம் சொல்ல வந்த சாஸ்திரம் வேதாந்தம்
பக்தி உபாயம்
ஓம் இதி ஆத்மாநாம் த்யானம்
லோகம் உபாசீன
லோகம் த்ரஷ்டவ்ய –
ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாச்யவ்யத போன்ற வாக்கியம் உண்டே

சூர்ணிகை -128-
ஔ ஷத சேவை பனண்ணாதவர்களுக்கு
அபிமத வஸ்துகளிலே
அத்தைக் கலசி யிடுவாரைப் போலே
ஈஸ்வரனைக் கலந்து விதிக்கிற
வித்தனை –

கசப்பானை மருந்தை -வேப்பம் கட்டியை -வெல்லக்கட்டியில் கொடுப்பது போலே –
இவன் நினைத்த வஸ்துவில் -ஸு பிரவ்ருதியே பலம் கொடுக்கும் என்ற நினைவில் உள்ளவனுக்கு –
நம் ஆழ்வார் -நாத முனிகள் நேராக பார்த்து பெற்றார் என்று தப்பாக நிர்ணயம்
செய்து பூதம் தனியனை காரணமாக காட்டி
பூதம் சிரஸ் -எம்பெருமானார் திருவடி அறியாமல்
என்றோ பரமபதம் போனவர் இன்று வந்து கொடுத்தார் என்று நம்ப முடியாமல்  –
யோக சக்திகள் இன்று இல்லை என்பதால் தப்பாக பேசி
தர்க்கம் மட்டும் அறிந்து
ப்ரத்யஷம் கூட ஒத்துக் கொள்ள மாட்டான் தர்க்கம் மட்டும் கொண்டவன்
யானை காலடி கண்டு -அனுமானமே பிரத்யஷம்
கிருபை கொண்டு தானே செய்வான் என்றால் அனைவருக்கும் பொதுவானவன்
வேதமே இப்படி பட்ட -அதிகாரிக்கு இத்தை சாதனம் ஆக்கி கொடுக்க

பால புத்ராதிகளுக்கு
தாமசம் இன்றி மருந்து கொடுக்க
சேவிக்க -உபயோகப் படுத்தி என்ற அர்த்தம்
ஔஷத சேவை
ஏறி அருளப் -பண்ணுதல் எழுதுவது
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -அரையர் –
ஸ்ரீ கோஷத்தில் அப்படி தான் ஏறி அருளப் பண்ணி இருக்கிறார்கள் என்பர்
வெல்லக்கட்டி -கலசி இடும் மாத்ராதிகள் போலே
சீக்கிரமாக சம்சார வியாதி  தீர்க்கும் நச்சு மா மருந்தை –
நிவ்ருத்தி மார்க்கம்
பிரவ்ருத்தி மார்க்கம் ஸ்ரைத்தை உள்ளாருக்கு -அநாதி வரும் வாசனை
இவரையும் விட மாட்டாமல் -ஈஸ்வரனைக் கலந்து
பலம் கொடுப்பது ஈஸ்வரன் தானே
உபாசனத்துக்குள் ஈஸ்வரனை வைத்து-

மருந்து தானே வியாதியைப் போக்கும் -உபமானம்
உபமேயம் -உபாசனம் அன்றிக்கே தத் மிஸ்ரமான ஈஸ்வரனே சம்சார வியாதியைப் போக்கும்
மருந்தை நேராக உண்டால் சீக்கிரம் போக்கும்
கலந்து கொடுத்தால் வெளி வஸ்து கரைய வேண்டும் அப்புறம் தான் மருந்து வேலை பண்ணும்
அதே போலே  நேராக பற்றினால் உடன் பலம்
கிட்டும் -கோரின காலத்தில் பலம் கிட்டும் -திருப்த பிரபன்னர் -ஆர்த்த பிரபன்னர் உடனே பெற்று
உபாசகனுக்கு அப்படி இல்லையே -பிராரப்த கர்மம் அனுபவித்த பின்னரே மோஷம்
மருந்தும் அமுதமும் தானே
பேஷஷம் பிஷக் அவனே
கால விளம்பமும் இதிலே சூசகம்

ஆழ்வார் ஆச்சார்யர்கள் விக்ரஹம் உண்டே
வியாசர் பராசரர் வால்மீகி போல்வார் விக்ரஹம் இல்லையே
நுட்பமான விஷயம்
பக்தி யோக நிஷ்டர் இவர்கள்
சித்த சாதனம் ஆழ்வார்களுக்கு
சரீரம் முடிந்த பின்பு மோஷம் உண்டே பிரபத்தி மார்க்கம்
மோஷம் சென்ற பின்பு ஞான விகாசம் உண்டு
விக்ரகம் பிரதிஷ்டை செய்து ஆவாஹனம் செய்தால்
ஒரே சமயம் ஆவிர்பாவம் எத்தனை சரீரத்திலும் ஆகலாம்
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸ்வரூப ஆவிர்பாவம் எம்பெருமானுக்கு
இவர்களுக்கு ஞானத்தால் ஆவிர்பாவம் -இந்த வாசி ஒன்றே உண்டு
ரிஷிகளுக்கு பிராரப்த கர்மம் முடிந்ததா அறியோம் ஸு யத்ன பரராக இருப்பதால்
ஆவிர்பாவம் இருக்காதே –
திருவடிக்கு தனியாக சந்நிதி வைக்கக் கூடாது என்பர்
சிரஞ்சீவியாக இங்கே இருப்பதால்
தனியாக உள்ள ஆஞ்சநேயர் சேவைக்கு போய் பிரசாதம் கொள்ள  மாட்டார்கள்
150 வருஷம் முன்பு தேவதாந்தர கோயிலாக இருந்ததாம்
1965 ஸ்வாமி தகப்பனார் ஆனந்த ஹோமம் செய்தாராம்
இன்றும் வட மாலை ஸ்வதந்த்ரம் பிரசாதம் அத்யாப்பைகர்க்கு இல்லையே
நிரந்குச ச்வாதந்த்ரம் கொண்டூ இதை அனுமதிக்கலாம்

சூர்ணிகை -129-
இத்தை ப்ரவர்த்திப்பித்தது
பர ஹிம்ஸையை
நிவர்த்திப்பிக்கைக்காக –

இத்தை உபாசனத்தை இங்கு அர்த்தம்
பர ஹிம்சை -மேலான ஹிம்சை அர்த்தம்
அக்னி சோமம் யாகம் அக்னிசோமேயம் -பசு மிருகம் -கொடுத்து
ஹிம்சை இல்லை -அதுக்கு மோஷம் என்பதால்-

பிராணன் த்யாகம் கூடாதே
யுத்த பூமியில் உண்டே
வீரன் கொண்டாடுவது போலே
மிருகத்துக்கு மோஷம் என்று கொண்டாடுகிறார்கள்
எது காரணம் என்றே
வைத்தியர் அறுவை சிகிச்சை செய்து புகழ் -ஹித புத்தியால் செய்ததால்
இதுவும் உபகாரம் தானே-

இப்படி விதித்தது மேலே கூட்டிப் போக -கீழ் நின்ற நிலையில் இருந்து
ஆசார்ய ஹிருதயம் இதை விவரித்து
த்ரை குணிய அதிகாரிகளுக்கு வேதம் –
ராஜச தாமச சத்வ
சேன விதி அதர்வண வேதம் விரோதியை அழிக்க
இதை சொல்லலாமா
அவனுக்கு நம்பிக்கை கொடுத்து சாஸ்த்ரத்தில் ஈடுபடுத்த
வாயவ்ய போன்ற பல காட்டி
பகவத் பிராப்தி  வரை கூட்டி  செல்ல-

ஐஸ்வர்யம் கிட்டி இவனுக்கு ஹிம்சை என்பதால் இத்தை பர ஹிம்சை
ஸ்வர்க்காதி பலன்களுக்கு செய்தது

தாயார் அந்த கண் இல்லாத காது கேட்காத -படு கரணர் விட அதிக ப்ரீதி
சாஸ்திரம் அறிவை உள்ளபடி அறியாத
வேதம் -தவறான வழியிலே விட
முடியாமல் குணம் அநு குணமாக புருஷார்த்தங்கள் சாதனங்கள்
கொள் கொம்பிலே ஏற்ற சுள்ளிக் கால் வைப்பது போலே-

தாத்பர்ய அம்சத்தில் மூட்ட தானே
உபாயம் சேனவிதி தொடங்கி உத்தர உத்தர புருஷார்த்தம்
த்யாஜ்யம் –
வாயவ்யம்
உபாதேயம் பகவத் ப்ராப்தி காமனுக்கு பிரபத்தி பரருக்கு
த்யாஜ்யம் உபாதேயம் மாறுமே அதிகாரி பேதத்தால்-

மேல் நிலைக்கு போனவனுக்கு இது த்யாஜ்யம்
நின்ற நின்ற அளவுக்கு ஈடாக
உத்தர உத்தர சாதனங்கள்
உத்தர உத்தர புருஷார்த்தங்கள்
பூர்வ பூர்வ விஹிதன்கள் த்யாஜ்யம் ஆகுமே
பர ஹிம்சை மேலான ஹிம்சை -பர தேவதை போலே
சேனவிதிக்கு மேலான
விஹித ஹிம்சை
சாஸ்த்ரத்தில் விதிக்கப் பட்டதால்
காம்ய கர்மம் சொன்ன படி-

விஹிதமே ஆனாலும்
பகவத் சேஷத்வ ஞானம் -அறிந்து
அக்னி சோமம் -குறித்து செய்வதே ஹிம்சை
அதனால் பர ஹிம்சை எம்பெருமானுக்கு ஆராதனம் என்று நினைவு இன்றி
ஞானிகளுக்கு அபாயம் என்பதால் ஹிம்சை
தர்ம புத்திரன் -ஸ்வர்க்கம் போக -மற்றவர் நரகம் போக
அங்கெ தர்ம தேவதை கூட்டிப் போக
வழி எல்லாம்
கண்ணனே சொன்னாலும் பீதனாய் ஆபாச தர்மம்
மெய்  போலே சொல்லி –
உபாயாந்தரம் பாதகமாக தர்ம தேவதை சொன்னது போலே புண்ணியம் முமுஷுக்கு பாவம் ஆனதே
தங்க விலங்கு
பல த்யாகம் வேண்டுமே
நேராக விட்டிலன்
பக்தி யோக நிஷ்டனுக்கு சொன்னது பிரபத்தி நிஷ்டனுக்கு த்யாஜ்யம்
உபாசன விதி
பரந்த படியில் -உபாசனர் விட வேண்டியது காம்ய கர்மத்தை அருளி –
பரந்த ரகசியம் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து-

சூர்ணிகை -130-
இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும்
குறை இல்லை –

விதித்து பின்பு எதனால் நிஷேதிக்க வேண்டும்
பூர்வ விஹித ஹிம்சை –சேன யாகம் தான்
சாஸ்திரம் விதியையும் நிஷேதமும் சொல்லுமே
உபாசனம் தான் பூர்வ விஹித ஹிம்சை போலே ஒருவருக்கு விதி
காம்ய கர்மம் செய்பவனுக்கு நிஷேதம் ஆகும்-

நாஸ்திகருக்கு விதித்து
ஆஸ்திகருக்கு நிஷேதம்
சேன யாகம் –
உபாசனமும் -ஸ்வதந்திர அந்ய சேஷத்வ -நிஷ்டருக்கு விஹிதம்
பாரதந்த்ர்ய ஞானம் பிறந்த  பரம சாத்விகர் -நிஷேதம்
சாஸ்திர விச்வாசத்துக்காக விதித்தது-

சூர்ணிகை -131-
அத்தை சாஸ்திர விச்வாசத்துக்காக
விதித்தது
இத்தை ஸ்வரூப விச்வாசத்துக்காக
விதித்தது-

சாஸ்திரம் இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு விதித்து
ஆஸ்திக விவேகம் ஊட்ட-

ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்திகள்
இந்த உதர தரிப்பு த்ரை குண்ய விஷயமானவற்றுக்கு பிரகாசகம்
வ்த்சலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு ப்ரத் யௌ ஷதம்
இடுமா போலே எவ் உயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும்
ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இ றே
அது தானும்
ஆஸ்திக்ய விவேக
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி
பாரதந்த்ர்யங்களை
வுண்டாக்கின வழி
சதுர்விதமான
தேக -வர்ண -ஆஸ்ரம -அதிகார -பல -மோஷ -சாதன -கதி -யுகதர்ம -வ்யூஹ -ரூப
க்ரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
ஒஎரிய தீவினில் ஒன்பதாம் கூறும்
மானிடப் பிறவியும்
ஆக்கை நிலையம்
ஈர் இரண்டில் ஒன்றும்
இளைமையும் இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்கு உள்ளே
விக்நம் அர
நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு
அறக் கற்கை அரிது என்று இ றே
வேத சார
உபநிஷத் சார
அநுவாக சாரதம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய்
அன்னமாய்
அமுதம் கொண்டவன்
சாகைகளிலும் ஓதம் போல் கிளர்
நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமுமாக
வெடுத்து
பெரு விசும்பு அருளும்
பேர் அருளாலே
சிங்காமை  விரித்தது
ஸ்வ ச்வாதந்த்ர்யமே விரோதி என்பவனுக்கு பிரபத்தி –
விச்வாசித்ததுக்கு விதித்தது என்பதால் இதை அனுஷ்டித்தல்
தவறு இல்லையோ என்றால் –
பெரிய அவத்யம் உண்டாகும் என்கிறார்

சாஸ்திர விச்வாசதுக்கு -அபிசார கர்மம் -தொடங்கி உபாசனம் -பர்யந்தமாக –
நம்பிக்கை உண்டாக -படிப்படி வந்து தனது ச்வர்ரோபம் ஆராய்ந்து
ஸ்வரூப விச்வாசதுக்கு பிரபத்தி விதித்து –
அதுவும் இதுவும் ஓன்று இல்லை –
விரோதி அழிக்கவும்
ஐஸ்வர் யத்துக்கோ
ஸ்வர்க்காதி
விதி நிஷேதம் அதிகாரிக்கு தக்க மாறுமே –

அனுஷ்டான பேதம் மட்டுமே உண்டு
பாஷ்யகார பின்பட்டாருக்கு அர்த்த வித்யாசம் இல்லை
அடிப்படையில்  சித்தாந்தம் இல்லை -தேசிகன் சாதிக்கிறார் –
18 பேதம் ஸ்லோகம் உண்டே
யோஜனா பேதம் தான் தத்வ பேதம் இல்லை
அனுஷ்டானம் அதிகாரி நியதம் –
அது போலே நாஸ்திகனுக்கு விதித்தது மேல் பட்டவனுக்கு நிஷிதம்  ஆகும்

சூர்ணிகை -132-
அது தோல் புரையே போம்
இது மர்ம ஸ்பர்சி-

ஆபத்து என்று பார்த்தால்
பிறர்க்கு தீங்கு  விளைத்தல் ஆபத்து அதிகம் போலே தோன்றும் -ஆனால் அப்படி இல்லை என்பதை
அது தோல் புரையே போகும்
சேன விதி போல்வன தோல் புரையே போகும் சரீரத்துடன் போகும்
பக்தி யோகம் ஆத்மா ஸ்பர்சி -மர்ம ஸ்பர்சி

அவளவு க்ரூரம் இல்லை என்றால்
அதிலும் கூட க்ரூரம் இது
தேக ஆத்மா அபிமானி செயல்
விசிஷ்ட வேஷ விரோதியாய் -ஆத்மாவுக்கு விசிஷ்ட வேஷம் சரீரம் –
மேல் எழ போகும்
அஹங்கார கர்ப்பமான இந்த உபாசனம் –
தன்னுடைய இந்த்ரியங்களை தான் அடக்கி
ஆத்மாவை உள்ள படி அறிந்து
நிஷ்கிரிஷ்ட வேஷம் -கைங்கர்யம்
கர்மம் விசிஷ்ட வேஷ விஷயம்
சேஷ பூதன் மட்டும் அறிந்து
உள்ளக்குள் போனவன் பாரதந்த்ர்யமும் அறிகிறான்
பாரதந்த்ர்யம் சேஷத்வத்தை செயலிலே கொண்டு போவது
அவனுக்கு அடிமை என்ற ஞானம் மட்டும் சேஷத்வம்
அத்தை அனுஷ்டான பர்யந்தமாக கொண்டு வருவது
செய் தலை நாற்று போலே அவன் செய்வன செய்து கொள்ள இருப்பது –
தனக்கே யாக எனக் கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே-

வேய் மறு தோள் இணை திருவாய்மொழி
பசு மேய்க்க போக கூடாது ஒரு கோபி தடுக்க –
அது வியாஜ்யம் தான் -கோபிகள் கூட போகிறேன் சொல்ல
அந்த கோபி -உனக்கு யார் உடன் கூட இஷ்டமோ
அதை காட்டில் சென்று செய்தால் அசுரர் வந்தால் என்ன செய்வேன்
எங்கள் கண் முகப்பே செய்ய கூடாதா
உகக்கும் நல்லவர் உடன் -உம்தம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
வியக்க -மூன்று அர்த்தம்
உனக்கு வரும் ஆனந்தம் விட எங்களுக்கு அதிகம்
அந்த கோபி விட அதிகம்
என்னுடன் கலக்கும் ஆனந்தம் விட ஆனந்தம் இப்பொழுது
நம்முடன் கலக்காமல் இருந்தாலும் அவன் ஆனந்தம் அடைய அதுவும் நமக்கு ஆனந்தம் உண்டாகும்-

கட்டிப் பொன் போலே சேஷத்வம்
பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்
ஆபரணம் போலே
உருகி ஓடும் பொன்னாகவுமாம்
என்ன வேண்டும் ஆனாலும் செய்து கொள்ளலாமே

சூர்ணிகை -133-
இது தான் கர்ம சாத்தியம்
ஆகையாலே
துஷ்கரமுமாய் இருக்கும் –

துஷ்கரம்
யஞ்ஞாம்
தானம்
தபசு காய கிலேசம்
சர்வ அபேஷை-கடிவாளம் போல பலவும் வேண்டும் அஸ்வமத்-
ஞானம் உண்டாகிறது இப்படி கஷ்டம் பட்டு
ஜன்மான்தார சகஸ்ரேஷு –
பாப ஷயம் பிறந்து ஞானம் உண்டாகி
கிருஷ்ணன் பக்தி உண்டாகும்
கர்ம யோகம் -ஞான யோகம் -பக்தி யோகம் –
ஆரம்ப நிலை -தொடங்கி -இது வரை வந்தது –
திவ்ய தேச வாஸம் முக்கியம் –
பக்தி யோகம்
உடம்பை வருத்தி -தவம் செய்து -பொருப்பிடை நின்றும்
ஐம்புலன் அடக்கி –
உபாயாந்தர தோஷம் விஸ்தாரமாக இது வரை சொல்லி –
115- 133 வரை
ஸ்வரூப விரோதம் சாஸ்திரம் விதித்ததே வேறு அதிகாரிகளுக்கு
மேலே மேலே போவாருக்கு உபாசனமும் த்யாஜ்யம்
சேன விதி விட க்ரூரம்
கஷ்டம் என்பதால் மட்டும் விட வில்லை
ஸ்வரூப விரோதி பிரதான ஹேது

சூர்ணிகை -134-
பிரபத்தி உபாயத்துக்கு
இக்குற்றங்கள்
ஒன்றும் இல்லை –

ஸ்வரூப விரோதம் முதலாக துக்க நிலைகள் அனைத்தும் இல்லை பிரபதிக்கு –
திஷ்கரம் இல்லையே
சூகரம்
அஷ்டாங்க யோகம்
இக்குற்றங்கள் இல்லை என்பதால் வேறு ஒரு குற்றம் உண்டு தோற்றுகிறது
இது உபாயம் என்ற நினைவு ஏற்படுமே அதுவே குற்றம்
தான் உபாயம் அல்லாமல் இருக்கச் செய்தே உபாயமாக நினைக்க வைக்குமே
மின்னின் நிலையிலே மன உயிர் ஆக்கைகள்
மின்னலை  விட நிலை இல்லாதது சரீரம் அப்படி இல்லையே  என்றால்
தோன்றி மறையாதது என்ற எண்ணம் தோற்றுவிப்பதால்-

குழந்தை காக்க பிச்சை சாவு இல்லாத வீட்டில் எடுக்க சொல்லி உணர்த்திய கதை –
மின்னல் க்ரூரமா சரீரம் க்ரூரமா நிலை இல்லாதது இதனால் தான்
அது போலே பிரபத்தியே உபாயம் என்ற நினைவு
தமவே உபாய  பூதோ  மே பவ
பிரார்த்தனா மதி எப்படி உபாயம் ஆகும்
கத்தியால் குத்தப்பட்டு இறப்பேன் கதை –
பொயானால் கத்தியால் குத்தி மெய்யானால் தூக்கில்  போட
பிரபத்தி சரண வாரணம்
நான் செய்வதால் உபாயம் என்ற எண்ணம் தோற்றுவிக்கும்
எனது உணர்வினுள்  நிறுத்தி அதுவும் அவனது இன்னருளே-

சூர்ணிகை -135-
ஆத்ம யாதாம்ய ஜ்ஞான
கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற  வேண்டா -என்கிறபடியே
நிவ்ருத்தி சாத்யம்
ஆகையாலே
ஸூ கரமுமாய்
இருக்கும் –

ஆத்மா ஞானம்
ஆத்மா யாதாம்ய ஞானம்
யதாவது அப்படியே இருப்பதை உள்ளபடி உள் புகுந்து ஆராய்ந்து அறியும் ஞானம்
சிதறவே வேண்டா சிந்திப்பே அமையும்
கவனம் சிதைய விட வேண்டாம்
நினைவே போதும்
நிவ்ருத்தி சாத்தியம் –
சுக ரூபமாய் இருக்கும்
திரு மந்த்ரத்தில் மத்யம -பதம் நம-எனக்கு உரியேன் அல்லேன் –
ஸ்வரூபம் அவனுக்கு அடிமை அத்யந்த பாரதந்த்ரம்
நம நம உபயமும் என்னுடையது இல்லை
ஆனந்தமும் எனக்கு இல்லை –
பாரதத்ர்யமான ஸ்வரூபதுக்கு அனுரூபமாய் இருப்பது
சிதறுதல் -வியாபாரம் ஒன்றும் இல்லை
நிவ்ருத்தி சாத்தியம்
பகவத் பிரவ்ருத்தி விரோதி ஸுபிரவர்த்தி -நிவ்ருத்தி -பிரபத்தி
லஜ்ஜையை விட்டாள்-உடன் சாதனம் ஆனது

பிராட்டி பெருமாள் விளையாட
வெளியில் போய் வர –
நோஞ்சான் பலவான் -நாராயணா கதறி
உதவ போக
போவதற்குள் இவனை அறைந்தான் -திரும்பினேன் –

வாசனை உடன் விட வேண்டும்
அங்கு பண்ண வேண்டியதை லவ லேசம் விட்டாலும் தப்பு கர்ம யோகத்தில்
இங்கு லவ லேசம் செய்தாலும் தப்பு
ஸு பிரவருத்தி நிவ்ருத்தி என்பதால் எளிதாகுமே –
அபாயத்வ
பய ஜனகம் போன்றவை
ஸ்வரூப விரோதி சொல்லும் பொழுதே இவை எல்லாம் போகுமே
சித்தோ உபாயம்
அதன் வரணம் மாத்ரமாய் அதி காரி விசெஷணமும்
இவ்வாறு  தோஷமும் இதுக்கு இல்லாமல்

சூர்ணிகை -136-
பூர்ண விஷயம்
ஆகையாலே
பெருமைக்கு ஈடாகப்
பச்சை இட ஒண்ணாது-

அவன் சந்தோஷம் அர்த்தமாக
பச்சை இட வேண்டாமா
பூரணன் என்பதால் ஒன்றும் வேண்டியது இல்லை
இட்டு அவன் உகக்க வேண்டியது இல்லை
பெருமைக்கு ஈடாக பச்சை இட ஒண்ணாதே
யோக்யதை பார்த்து சம்பாவனை லோகத்தில் –
அவாப்த சமஸ்த காமன் பரி பூரணன்
உகப்பு விளைக்கும் படி எப்படி

சூர்ணிகை -137
ஆபி முக்ய சூசக
மாத்ரத்திலே சந்தோஷம்
விளையும் –

விமுகனாய் போனவன்
அபிமிக சூசகம் ஒன்றே இவனை உகக்க வைக்கும்
அது காட்டுவது இந்த பிரபத்தி –
கருணைக்கே இருப்பிடம் -பூரணன் -இதை ஒன்றே எதிர்பார்த்து இருக்கிறான்

அவன் பூர்த்தி
அகிஞ்சனனான நாம்
அவனை உகப்பி அணுக போமோ
பூர்த்தி கை வாங்காதே மேல் விழ ஹேது
சூர்ணிகை-138
பூர்த்தி கை வாங்காதே
மேல் விழுகைக்கு
ஹேது வித்தனை –

மீளுகை இன்றிக்கே
இட்டது கொண்டு திருப்தி அடைய வேண்டாதபடி
வஸ்து என்னது பார்க்காமல்
பூர்த்தி
பச்சை இட வில்லை என்று கை விட ஒண்ணாதபடி
நமது கிட்டே வந்தானே
விரும்பி கை கொள்ளுவதற்கு பூர்த்தி ஹேது
சேருகைக்கு உடல் —

பிரமாணம் உண்டோ
சூரனை -139-
பத்ரம் புஷ்பம்
அன்யத் பூர்ணாத்
புரிவதும் புகை பூவே

பத்ரம் புஷ்பம் –தோயம் இல்லை புஷ்பம் ஜலம் ஏதாவது
இன்ன புஷ்பம் சொல்ல வில்லை
இன்ன பழம்
ப்ரீதி உடனே கொடுக்க
ப்ரீதி உடன் கொடுக்கும் எண்ணம் ஒன்றே
உண்ணுகிறான்
தோயம் புஷ்பம் உண்ண முடியுமா என்றால்
தரிக்கலாம் குடிக்கலாம் –
ப்ரீதி கொண்டு விழுங்குகிறான்
ஆர்வம் அப்படி –
அநந்ய பிரயோஜன மனஸ் சுத்தி உடன் பக்தி உடன்
பிரேமத்தால்  கலங்கி தடுமாறுவது போலே வ்யாமோகத்தாலே
தடுமாறி இவனும் விழுங்குகிறான்

தோலை உண்டானே -விதுரர் -பக்தி உடன் கொடுத்தது –
அறியாதவன் ஹோமம் மூக்கு பிடிக்க
உனது மூக்கை பிடி
ஒன்றும் அறியாதவன் செய்யும்படி –
வ்யாமோகாத்தல் அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் இவனும் -அஸ்நாமி
அந்யத் பூர்ணா –
சஞ்சயன் இடம் கேட்கிறான் த்ர்தார்ஷ்திரன்
பூர்ண கும்பம் -குசலம் விசாரித்து -காலில் விழுந்தால் மயங்குவான்
வேறு ஒன்றுக்கும் மயங்க மாட்டான்
பொன்னையும் நாட்டையும் கொடுத்து -இழுக்க பார்த்தான் –
நினைவும் செயலும் ஒத்து இல்லாத வஞ்சகன்
உள்ளும் வெளியும் குருடன்
குடிக்கும் குட நீரை வாசலில் வைக்க அமையும்
அதிதி வந்தால் காலை கழுவ –
அர்க்க்யம் பாதம் ஆசமன்யம்-கை கால் வாயை கழுவ –
i  see  you அவனால் பார்க்க முடியாதே
நெடும் தூரம் வந்தவனுக்கு குசலம் இனிய சொல் போதுமே
கொடுக்க நினைக்கும் நாட்டையும் பொன்னையும் மதியான்
ஆபி முக்ய சூசகம் ஒன்றே போதும் –

பெரிய பேறு அடைய
அலன்க்ருதமான சுயாராதை
பரிவதில் ஈசனைப் பாடி உறுவது சாமகானம் பண்ணி அட்டைவது -உயர்ந்த கைங்கர்யம்
பிரிவகை இன்றி –
நன்னீர் தூவி –
தோயம் கீழே சொல்லி
அசம் க்ருதமான ஜலம் வெறும் நீர் -மட்டும் போதும்
வாசனை த்ரவ்யம் வேண்டாம் –
பிரதிவாத பயங்கர அண்ணன் ஸ்வாமி-
பரிமளம் சேர்க்காமல்
மா முனிகள் வைபவம் கேட்ட படியால் –
ஏதேனும் ஒரு பூவும் புகையும்
சுலப ஆராதனம் சுச்ஸ்பஷ்டமாக ஆழ்வார்
கண்டகாலி புஷ்பம் -பட்டர் நஞ்சீயர் -கையில் குத்துமே –

சூரனை -140-
புல்லைக் காட்டி
அழைத்து
புல்லை இடுவாரைப் போலே
பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –
பலமும் சாதனுமும்  ஒன்றே
அதுக்கு உதாரணம்
புல்லைக் காட்டி புல்லை இடுவார்ரைப் போலே

சூர்ணிகை -141
ஆகையால்
சுக ரூபமாய் இருக்கும்
சாப்பாட்டு ராமன் -ருசி பார்த்து வைக்கும் வேலை
வைஷ்ணவம் சொல்லி அதுவே சாதனமும் பலமும் இந்த ஸ்வாமிக்கு-
கூலி வேலை செய்வது போலே இல்லை –
சாமி கழுவி வயிறு கழுவுகிறேன் சொல்லும் கைங்கர்யர் பரர்கள் போலே இன்றி
அஞ்சலி
செய்து
பரம பதம்  பெற்று அங்கும் அஞ்சலி
பல்லாண்டு பாடி அதை பெற்று அங்கும் பல்லாண்டு
பிரபத்தியின் காகிய வியாபாரம் அஞ்சலி
மனசமாகவும் நினைக்கலாம் கை இல்லாதவன்
சுக ரூபமாய் இருக்கும் –
இக்குற்றங்கள் இல்லை சொல்லி
தோஷ ராஹித்யம் சொல்லி மேலும்
குணங்கள் சாஹித்யமும் சொல்லி அருளி
பிரபத்தி வைபவம் சொல்லி அருளுகிறார் –
சூர்ணிகை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

————————————————————————————————————————————————————————————-

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 16, 2013

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.

பொ-ரை :- சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?

வி-கு :- வலவன் – வல்லவன்; எய்தவன் என்க. திணர் – திண்ணம். சார்ங்கம் – வில். ஓகாரங்கள் சேரப் பெறாததால் உண்டான துக்கத்தின் மிகுதியைக் காட்டுகின்றன.

ஈடு :- ஐந்தாம்பாட்டு. 3நீர் இங்ஙனம் விரைகிறது என்? உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன, அது என்று? என்கிறார்.

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ – 1க்ஷத்திரியர் விற்பிடிக்கிறது துயரஒலி கேளாமைக்கு அன்றோ? “வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில்தரிக்கப்படுகின்றது” என்கிறபடியே.“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை: தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.

2இலக்குக் குறிக்கப்போகாதபடி திரண்டு நின்ற ஏழுமராமரங்களை 3முஷ்டியாலும் நிலையாலும் நேர் நிற்கச்செய்து எய்த தனிவீரனே! ஓ என்பது துக்கத்தின் மிகுதியைக் காட்டும் இடைச்சொல். 4ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே! “மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்” “ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.

என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார். அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்கவேண்டாவோ? புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ – ஒரு நிரையாகச் சேர்ந்து நின்ற மருதமரங்களை ஊடு அறுத்து, ஒன்றிலே வெளிகண்டு போவாரைப்போலே போய், 5உலகத்திற்கு வேர்ப்பற்றான உன்னைத்தந்தவனே! பிரளயகாலத்தில் அன்று உலகத்தை உண்டாக்கியது இன்றாயிற்று. அற்றைக்கு இவன்தான் உளனாகையாலே உண்டாக்கலாம்; இங்கு நிரந்வயவிநாசம் அன்றோ பிறக்கப் புக்கது. முதல்வாவோ – உலகத்தை உண்டாக்கினவனே! 1உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது; 2“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே. “ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.

தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம். இப்படி இருக்கிற 3தன்னளவிலே வந்த ஆபத்தையோ நீக்கலாவது.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே – திண்மை மிக்கிருந்துள்ள மேகம் என்னும்படி யானைகளானவை சேராநின்றுள்ள திருமலையிலே நின்றருளினவனே! 4மேகங்களோடே எல்லாவகையானும் ஒப்புமை உண்டாகையாலே மேகங்களைக் கண்டபோது யானை என்னலாம்; யானைகளைக் கண்டபோது மேகம் என்னலாயிருக்கும். 5“மதயானைபோல் எழுந்த மாமுகில்காள்” நாய்ச்சியார்
திருமொழி, 8 : 9.
-என்னக் கடவது அன்றோ. 6சமான தர்மத்தால் வந்த ஐயம் இரண்டிடத்திலும் உள்ளது அன்றோ. 7விஷயங்களால் வரும் அந்யதாஞானத்தைக் கழித்து, அந்தத் தேசத்தே பிறக்கும் அந்யதாஞானத்தை அன்றோ இவர் கணிசிக்கிறது.அங்குள்ளவை எல்லாம் இனிய பொருள்களாகத் தோற்றுகிறபடி. திணர் ஆர் சார்ங்கத்து உனபாதம் – திண்மை மிக்கிருந்துள்ள ஸ்ரீ சார்ங்கத்தையுடைய உன்னுடைய திருவடிகளை. 2“ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன” என்கிறபடியே, ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

ரக்ஷகமான திருவடிகளை. 3சக்கரவர்த்திப் பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு. திணர் ஆர் சார்ங்கம் – 4தன் வளைவிலே விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை. உனபாதம் – 5அந்த வளைவுக்கு அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது. சேர்வது அடியேன் எந்நாளே – 6கையில் வில் இருக்க இழக்கவேண்டா விரோதி உண்டு என்று; இனி உன்னைப்பெறும் நாளையாகிலும் சொல்லவேணும்.

நீர் த்வரிக்கிறது என்-க்ரமத்தில் போக்குவோம் என்றானாம்
நாள் குறித்து அருளுவாய் என்கிறார்
ஏழு மரங்கள்
மருது மரங்கள்
மேகம் போலே யானைகள் திரண்ட திரு மலை
சார்ங்கத்து-கையும் வில்லும்
வில் வலவா-ஷத்ரியர்கள் -ஆர்த்த சப்தம் உண்டாக கூடாது
முட்டியாலும் நிலையாலும் –
இழித்து பிடித்து
நூற்று கால் மண்டபம் காஞ்சி சிற்பம் உண்டாம்
ஏழு மரங்களும் மலைப் பாம்பு மேலே இருக்க
வாலை மிதித்தாராம் –
நேரே நிற்கப் பண்ணி எய்த ஏக வீரனே
ஒ -அழுகிறார்
இப்படி இருந்தும் -நீயே நம்பிக்கை ஏற்படுத்தி உபகாரம்
நம்பி உள்ள என்னை -ஆசைப்பட்ட என்னை உதவாது ஒழிவதே
அதி சங்கை பண்ணின சுக்ரீவனுக்கு விசுவாசமும் உண்டாக்கி

சேர்ந்து இருந்த மருது
தன்னை ரஷித்து
பிரளய காலத்தில் உண்டாக்கினது ஆச்சர்யம் இல்லை
இன்று இவன் தலை மேல் இடி விழும் போலே
அங்கேயாவது உண்டாக்க நீ இருக்க
முதல்வா -வேர் பற்றான தன்னை நோக்கி
சத் மட்டுமே இருக்க சதைவ சோமய-
உனக்கு வந்த ஆபத்தை மட்டும் போக்கிக் கொள்வாயா – ஒ விஷாத அதிசய சூசகம்
யானைகள் -மேகம் போலே நிதானம் -கருமை –
சமான தர்மம் –
முடிச் சோதியாய் -க்ரீஷ்டம்
முகச்சோதி –
தேஜஸ் முகம் கிரீடம் போலே சம்சயம்
அந்யதா ஞானம் த்யாஜ்யம்
திருமலை யில் இப்படி அந்யதா ஞானம் உத்தேச்யம்

காளி தாசர் ஸ்லோகம்
தேர் போகும் புழுதி ஆகாசம் போக
ஆகாசம் பூமி ஆக்கி
பூமி ஆகாசம் ஆக்கி
யானை போவதால்
கற்பனை அதிசயம் -ரஜோபி -கஜைகி-
சார்ங்கத்து உன பாதம் –
சரண்யன் திருவடிகள்
சரம் ஆண்ட த ண் தாமரைக் கண்ணன்
தசரதன் மகனுக்கு அல்லால் தஞ்சம் இல்லை
விரோதிகளை வளைத்து கொள்ளுகை
அந்த வலையில் அகப்படாதவரை அகப்படுத்தும் திருவடிகள்
கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம்
where  there  is  will  there  is  way
நாளைக் குறித்து அருள வேண்டும் என்கிறார்-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 16, 2013

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.

பொ-ரை :- ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை மழையைப்போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.

வி-கு :- “வாணாள்மேல் தீவாய் வாளி பொழிந்த” என்றது, அவர்களைக் கொன்றமையைக் குறித்தபடி. பூவார்கழல்கள் – பூக்கள் நிறைந்திருக்கின்ற திருவடிகள் என்னலுமாம்.

ஈடு :- 1உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை; ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என்கிறார்.

2நஞ்சீயரை, நம்பிள்ளை ஒருநாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள, “நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, 3ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப்போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ, அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச்செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று
உண்டு என்று சொல்லுவாரைப்போலே’ என்றது, “தத்ராபிதஹரம்”
என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”
என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச்செய்யும்போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தரவேணும் என்கிறார்’ என்று அருளிச்செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! 1அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனேகாண் பொருள்; நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார்காண்” என்று அருளிச்செய்தார். 2“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே; நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ.

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா
பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”

என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்
பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி
அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.

3தஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓரான் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு

திருப்பள்ளியறையிலே புக்கருளினார். 1திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம சொரூப குணங்களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.

ஆ ஆ என்னாது – 2ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ; நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்கமுடியாத தன்மை வந்ததாகில், ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில், ‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும்” என்று அருளிச்செய்தார். 3பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். 4‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது. 5அவன் “இராவணனே யானாலும்” என்றால், “விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”

என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.

அவன்

 
உலகத்திலேயுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால், 1“நண்ணா அசுரர் நலிவெய்த” திருவாய். 10. 7 : 5.  என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில், அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான். 2யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ. இவனுடைய தண்ணிய சரீரத்தைப்போக்கி நல்வழியே போக்குகின்றான் அன்றோ. ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் – ஐயோ, ஐயோ, என்னவேண்டியிருக்க, அதற்குமேலே நலியா நிற்பார்கள். 3ஒருவனோடே பகைத்திறம் கொண்டானாகில், ‘பொருளை இச்சித்த காரணத்தால் அன்றோ இது வந்தது, இருவரும் சபலர்’ என்றே அன்றோ இருக்கலாவது; அங்ஙன் அன்றிக்கே, உலகத்தை அலைப்பர்களாயிற்று. 4தம்மோடு ஒக்க உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலியா நிற்பர்களாயிற்று.

அசுரர் – அதற்குக் காரணம் அவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாகையாலே. வாணாள்மேல் – 5இவர்கள் வீரக் கோலத்தால் வந்த ஒப்பனை குறி அழியாதே இருக்க, உயிரிலே நலிகை. என்றது, இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை என்றபடி.தீ வாய் வாளி – 1பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை. ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. 2“தீப்த பாவக ஸங்காஸை: – படும்போது நெருப்பைப் போன்றிருக்கும்படி. “தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22. இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: 3பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை. காஞ்சநபூஷணை: – இவற்றுக்கு 4இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி. 5“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய
திருமொழி, 7. 3 : 4.
– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி. நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். 6நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.1இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா – 2“அம்பு மழையைப் பெய்தாரன்றோ” “ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.

என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி. திருமாமகள் கேள்வா – விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது. 3“கணவனைத் தழுவிக்கொண்டாள்” என்னுமவள். “தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகினையுடையவரை, எதிரிகளை வென்ற வீரக்கோலத்தோடே கண்டாள். ஸத்ருஹந்தாரம்-4தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கிவிடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை. “தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

5முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார், இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ; இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள். மஹர்ஷீணாம்     ஸு காவஹம் – இருடிகளுடைய விரோதிகளைப்போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை. 1தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு. 2கர்ப்ப பூதா: தபோதநா:-தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள். தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி உண்டாயிருக்கச்செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ; அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி

வேண்டின வேண்டினர்க் களிக்கு மெய்த்தவம்
பூண்டுள ராயினும் பொறையி னாற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கினார்
ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டாரரோ.-என்பது, கம்பராமா. அகத்தியப்பட. 8.

. 3அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ. பபூவ – 4பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள். பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா – சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று. 5வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும்குடியிலே பிறந்தவள் அன்றோ. அன்றிக்கே, 1ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார்தான் என்னுதல்! பர்த்தாரம் – 2முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும், ‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது. பரிஷஸ்வஜே – 3இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

திருமாமகள் கேள்வா – 4உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ? புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ? தேவா – 5இவள் அணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகார். அன்றியே, விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம். சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – அநுகூலர் அடையத் திரண்டு 6படுகாடு கிடக்கும்தேசம். பூவார்கழல்கள் – பூவால் அல்லது செல்லாததிருவடிகள் என்னுதல். பூவோடு ஒத்த திருவடிகள் என்னுதல். அருவினையேன் – 1அவன் தடைகளைப் போக்கவல்லனாயிருப்பது, எனக்கு ஆசை கரைபுரண்டு இருப்பது, திருவடிகள் எல்லை இல்லாத இனியபொருளாக இருப்பது; இங்ஙனே இருக்கச்செய்தே, கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன். பொருந்துமாறு புணராயே – 2அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப்போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது; புணராய் – உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.

பொருந்துமாறு
உபாயம் புணராயே
திருவடி சேர சரண் அடைகிறார்
சாதனங்கள் எல்லாம் வீண் எனக்கு
பிரபத்தி பலம் கொடுத்தே தீரும்
பலிக்க வில்லை அதுவும் ஆழ்வாருக்கு
புதிதாக ஒரு வழி வைத்து இருக்கிறாயா எனக்கு என்கிறார் –
அசுரர் ஹிம்சை செய்ய
ஆவா என்னாது -இறக்கம் தயை இன்றி ஹிம்சிக்கையே ஆனந்தம் அவர்களுக்கு
நெருப்பை கக்கும் பானம் பொழிந்த தேவா
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்தும் ஆறு புணராயே தெரிவிக்க வேண்டும்
சங்கை முதலில் –
பிரபத்திக்கு மேலே வேறு ஓன்று உண்டா -நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
பஞ்சமோ உபாயம் ஓன்று உண்டு
தகர ஆகாசம் ஹிருதய புண்டரீகாஷம்
அதுக்கும் உள்ளே ஓன்று உண்டு
பரமாத்மா க்கு உள்ளே சதாசிவ ப்ரஹ்மம்-உபாசிக்க பட
தப்பான அர்த்தம்
திருக்கல்யாண குணங்கள் தான் அவனுக்கு உள்ளே இருக்கும்
அத்தை நாம் உபாசிக்க வேண்டும்
சதுர்தோ உபாயம் –சித்தோ உபாயம் -கர்ம ஞானம் பக்தி சாதனம்

பாசுபதர் –
பகவானே இருக்க அவனுக்கும் அவ்வருகே ஒன்றும் இல்லையே
தஸ்மின் ததா -சுருதி வாக்கியம்
உனது பிரதிபத்தியில் குற்றம் காண்
உம்முடைய -நஞ்சீயர் சொல்லி -நம்பிள்ளை உன் எழுதி
இங்கனே காண் பொருள்
நீயும் உளனாக இருக்க -நான் இழக்க
எல்லாம் செய்தாயிற்று தலையால் நடக்க வேண்டும் வர்ணத்தி பேசுகிற வார்த்தை
பஞ்சமோ உபாயம் கிடையாதே
அர்த்த பஞ்சகம் -ஆச்சார்யா அபிமானம்
பிரதி பத்தியில் அசக்தனுக்கு இது உண்டே
புரியதர்க்காக சொல்லி
சதிர்தோ உபாயத்தில் அந்தர்கதம்

வ்யூஹ நாலும் மூன்றும் சொல்லுவது போலே
ஆசார்ய அபிமானம்  தனியாக இல்லை
ஆசார்யன் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது
வேறு பட்டவர்கள் இல்லை
திருவடி நிலை தானே
கார்ய கரோத்வம் அமோஹம் பற்றி ஐந்தாவதாக ஆசார்ய அபிமானம் சொல்லிற்று
பிராட்டி தனித்து இருப்பு இல்லையே போலே பிரிக்க முடியாத தத்வம் போலே
கடகத்வம் -பிரிக்க முடியாதே
பகவான் அறிவிப்பவர் ஆசார்யன்
பிரபோ நீயும் உளனாக இருக்க நான் துக்கம் பாடுவதா – தரௌபதி சொல்லியது போலே-

பாவம் ஆதங்கம் தோற்ற வார்த்தை –
நீ யும் உளனாய்இருக்க –
சா அஹம் அப்படிப்பட்டவள்
பரிகிரிஷ்ட  துக்கம் அடைந்து
பஸ்யதாம் பாண்டு புத்ரானாம் -பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே
பிரபோ -நீயும் உளனாய் இருக்க
நலியும் படி –
உனது சத்திக்கும் எனது பரிபவதைக்கும் சேர்த்தி உண்டோ
பரி பூரணன் நீ இருக்க செய்தே நான் நோவு படுவதே
அது போலே ஆழ்வாரும் வார்த்தை –
அவனே உபாயம்
செய்ய கூடிய பிரபத்தியும் உபாயம் இல்லையே
ஐதிகம் –
நம்பிள்ளை -ஸ்ரீ பாதத்தில் -பிரபத்தி உபாயம் இல்லை என்றால் எதற்கு செய்ய வேண்டும்
பரம ரகசியம் -சீர்மை அறியாத உனக்கு –
நாத முனிகள் தொடங்கி போந்தார்கள்
ஒன்றும் அறியாத உனக்கு சொல்ல வேண்டி இருக்கிறது
திரு முடியிலே அடித்து கொண்டு  திரு பள்ளி அறைக்கு எழுந்து அருளி
இவனுக்கும் நல்ல புத்தி அருளுவாய்-

சரண வரணம் தானே பிரபத்தி
அதிகாரி விசேஷணம் இது -குணம் போலே –
சாதனம் இது இல்லை –
குழந்தை அழுவது சாதனம் ஆகாதே உணவு  கிடைக்க –
தவமே உபய பூத மே பவ இதி பிரார்த்தனா மதி –
நீயே உபாயம் சொல்வதே பிரபதியின் ஸ்வரூபம்
40 நாள் ஸ்ரீ ராமாயணம் கேட்டு ராமன் ராஷசனா ராவணன் ராஷசனா
கேட்டு சொன்ன நானே ராஷசன்
ஸ்வீகாரம் -வேண்டியதால் பிரதம  தசையில் அதிகாரி விசேஷணம்
உத்தர திசையில் அதுவே பிராப்யமாகும்
அவன் அங்கீகரிக்க வர விலக்காமை காட்டுவதே இந்த பிரபத்தி
முமுஷு க்கு -த்வயமே பிராப்யம்
திவ்ய மங்கள விக்ரஹம் விக்ரஹ குணங்கள் திவ்ய ஆத்ம குணங்கள் நித்ய முக்தருக்கு பிராப்யம் ஆகவது போலே
த்வய மந்த்ரமே பிராப்யம் -அதுவே யாத்ரையாக போக வேண்டுமே -இங்கு உள்ள முமுஷுக்கு-

ஆவா என்னாது உலகத்தை
ஐயோ கிருபை செய்ய வேண்டும் கீழ் பாசுரத்தில்
அசுரர்கள் -பிறர் துக்கம் செய்து -பிறர் துக்கம் கண்டு நாமும் துக்கப் படுவது இருக்க -இது தானே ஈஸ்வரனுக்கு ப்ரீதி
அவன் விபூதியில் கிருபை செய்வதே –
எஜமான் பிள்ளை அடி பட்டு விழ -கண்டும் காணாமல் போனால் -அதுக்கு மேலே அசுரர் செய்யும் கார்யம் –
அவயவ பூதர் அனைவரும் –
கண் இமை காப்பது
இடுக்கண் களைவது நட்பு
பிறர் துக்கம் பொறாமல் இருப்பவனே பகவத் சம்பந்தம் உள்ளவன்
இல்லாமல் இருந்தால் வைணத்வம் இல்லை என்று தானே உணரலாமே –
இந்த துக்கம் பிராப்தம் என்று தோற்றினால் நமக்கு வைணத்வம் இல்லை என்று நாமே உணரலாம்
பிரதி கூலருக்கும் நனமி
அவர் நாணும் படி நன்மை செய்வதே இன்னா செய்தாரை –
எதி வா ராவணாஸ் ஸ்வயம் போலே-

நண்ணா அசுரர் நலிவு எய்த
நல் அமரர் பொலிவு எய்த –
எப்படி சேரும் –
நண்ணுதல்-இல்லாமல்
ந ந மேயம் என்று இருப்பாரை –
அக்னி சோமேயம் ஹிம்சை நியாயம் போலே
பசுவுக்கு ஸ்வர்க்கம் கிடைப்பது போலே
வீர மரணம் பரம வீர பதக்கம் தேசத்துக்கு போவது போலே யாகத்துக்கு
தண்ணிய சரீரம் போக்கி –
ராவணனை வதம் செய்து -ஆத்மாவுக்கு நன்மை செய்து அருளி -மேலே தீங்கு செய்ய  முடியாதே
அறுவை சிகிச்சை போலே –
ஆ ஆ என்னாது
அதுக்கு மேலே ஹிம்சை செய்யும் அசுரர் -காரணமே இல்லாமல் விரோதம்
அசஹ்யா அபசாரம்
அசூயை கூட அசஹ்யா அபசாரம்

தம்மை ஒக்க உண்டு உடுத்து திரிவது பொறுக்காமல் நலியும் அசுரர்
வாழ் நாள் மேல் -உயிர் மட்டும் போக்கி –
ஜீவன ஹேதுவான காலத்தை நலிகை
தீ வாய் வாளி-படும் போது நெருப்பை காக்குமே
ஸ்ரீ சார்ங்கம் -காலாக்னி –
குண ஹீநன் -எரிந்து விழுவது போலே
குணம் -நாண் கயிறு அர்த்தமும் உண்டே –
நெருப்பு போலே எரியும்-வில்லில் இருந்து புறப்பட்டதும்
ஆகார த்வயம் அனுகூலர் வாழும் படியும்
அகப்படவும் இது தான்
சரங்கள் ஆண்ட தண் தாமரை  கையன் என்பார்களே
திரு மா மகள் கேள்வா –
விரோதி போக்கி -அவள் ஆனந்தித்து அணைந்தது
பர்த்தாரம் பரிஹர்ஷயதே
அடியார் விரோதி தொலைத்தாரே
தம் த்ருஷ்ட்வா அவனை பார்த்து
வீரக் கோலத்துடன் -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும்படி
தமது திரு மேனியில் வாட்டம் இன்றி-அவர்களை குற்றுயிர் விடாமல் பரிபூர்ணமாக அழித்து

வேட்டை வீரம் பிறர் சொல்லி கேட்க்கும் அத்தனை இ றே
ஜனஸ்தானம் –
அருகில் இருந்தால் சேர்த்து வைத்து இருப்பாள் –
absence  உதவி dedication  செய்வது போலே –
தபஸ் பலத்தால் சபிக்காமல் பெருமாளை நம்பி இருக்கும் ருஷிகளுக்கு குடி இருப்பு
முறை உணர்ந்த ருஷிகள்-
தம் தாம் கை முதல் மாறாமல் இருந்தும்
கற்ப பூதர் போலே –
கர்பாவஸ்தையில் ஜனினி அறிந்து ரஷிப்பது போலே –
கற்ப பூதோ தபோ -ஸ்லோகம்
14000 தனியே யுத்தம் செய்ய -இவள் -சத்தை அழிந்து இருக்க இப்பொழுது உளள் ஆனாள்
பகுவா-இருந்தாள் சாதாரண அர்த்தம்
இருப்பே கொள்ளாமல் சத்தை அழிந்து இருக்க –
பூ சத்தாயாம் தாது
பகுவா -பூ தாது வில் இருந்து
உண்டானால் உண்டானதும் உண்டாயிற்று
சந்தோஷம்
வைதேகி -வீர வாசி அறியும் குடி பிறப்பு

வேதம் ஒத்து செய்யும் ஸ்திரீகள் தாமே அறிவது போலே
சித்ர கூடம் -பத்தினிகள்-கிளி  கூட -எடுத்து கொடுப்பார்களாம் –
ஒரு சொத்தை வில்லை முறித்து ஜனக மகா ராஜர்  என்னையே கொடுத்தார்
இத்தை பார்த்து என்ன செய்வார்
பர்த்தாரம் முன்பு வீரர் -சேஷம் என்று அணைத்து-
போலி சரக்கு போலே மென்மையாக இருப்பது கண்டு –
ஆண் பிள்ளை என்று அணைத்தது -பார்த்தா தன்னையும் தரிக்க வல்லவர் -இப்பொழுது தான் கண்டாள்
திரு முலைத் தடத்தால் வேவு கொடுத்து -ஒத்தனம்
சக்தி இல்லாமல் இழக்கிறேனோ
புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ
தேவா அணைத்த பின்பு தேஜஸ்
விரோதிகளை போக்கிய காந்தி
திவு தாது -18 அர்த்தம் –
திருமகள் கேள்வா -தேவா -18 அர்த்தம்
தேவன் விளையாடுபவன் க்ரீடா பிராட்டிக்காக ஸ்ருஷ்டாதிகள்
போக மயக்குகள் ஆகியும் அம்மான்
தேஜஸ் அர்த்தம் -அவள் கூட சேர்ந்து
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்
சுரர்கள் முனிக் கணங்கள் -அனுகூலர் அனைவரும் -வைகுண்ட நீள் வாசல் -பின்னிட்ட சடையானும்
பூவார் கழல்கள் -திருவேங்கடம்
பொது நின்ற பொன் அம கழல் -அழகிய மணவாளன்
துயர் அரு சுடர் அடி -தேவ பிரான்
திரு நாரணன் தாள் -திரு நாராயண புரம்-
மாசுசா அருளிய திருவடி திரு வல்லிக்கேணி

அரு வினையேன் –
பிரதிபந்தகங்கள் போக்கி அருளையும்
புருஷகார பூதியும் கிடக்க
ஆசை கரை புரண்டு கிடந்தது
நிரதிசய போக்யதையும் உண்டாய்
கிட்டும் படி பண்ண வேண்டும்
வழியே நீ தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

மாயனே–ஆச்சர்ய சக்தி உக்தன் –
மான-பரிமாணம் அகன்ற இலை-

——————————————————————–

வியாக்யானம் –

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய் என்னுமின் தொண்டர்க்கு-
அறிவு குடி போய் நோவு பட
தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை
நினைக்கிறார் –
இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்

இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை –
இப்படிப் பட்ட ருசியை உடையராய்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு
தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

மன்னு மாட மங்கையர் தலைவன் –
மன்னு மாட மங்கையர் தலைவன் ஆயிற்று கவி பாடினார் –
பிரளயத்துக்கும் கூட அழியாத மாடங்களை உடைய
திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

மான வேல் கலியன்-
வேலைப் பிடித்தவர்களுக்கு
தம்மோடு ஒக்க ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உண்டாக்கும் வேல் என்னுதல்
இலை அகலிய வேல் என்னுதல் –

வாய் ஒலிகள் –
ஆழ்வார் ஒலியை உடைத்ததாகச் செய்தவை –

பன்னிய பனுவல் பாடுவார் –
ல்ஷணங்களில் ஒன்றும் குறையாதபடி
விஸ்த்ருதமாகப் பாடின
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –

நாளும் பழ வினை பற்று அறுப்பாரே –
பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-

தாம் மோஹிப்பது
உணர்வதாக
திருத் தாயார் கூப்பிடுவதாக
வேண்டாதபடி
பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே
புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-

அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

சங்கதி -அரும்பதம்
ராம கிருஷ்ண அவதாரங்கள் செய்தததும்
திவ்ய தேசங்களில் உகந்து அருளி இருப்பதும் இவளுக்காகவே
இப்படி புலம்புவது எதற்க்காக
எதில் ஈடுபட்டு இப்படி விவரணையாய் இருக்கிறாள்
என்ன காரணம் அறியேன் கை விட்டு உன்னிடமே இவளை விட்டேன் என்கிறாள் திருத்தாயார் –

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய  வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

——————————————————————-

வியாக்யானம் –

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்-
பொன்னை குலவா நின்றுள்ள -கொண்டாட நின்றுள்ள
வைவர்ண்யத்தை பஜித்தன விரஹ சஹம் அல்லாத தோள் –

பொரு கயல் கண் துயில் மறந்தாள் –
பொரா நின்றுள்ள கயல் போலே முக்த்த்யமாய் இருந்துள்ள
கண்களில் நித்தரை தத்வம் அடியே பிடித்து உத்பத்தி
பண்ண வேண்டும்படியாக வாசனையோடு மறந்தாள் –

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது-
சங்கம் அடியாக உம்முடைய பக்கல்
பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –

இவ் வணங்கினுக்கு-
பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி
அழகை உடைய விலஷணையான இவளுக்கு –

உற்ற நோய் அறியேன்-
இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்

பயலை பூத்தாள்
கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது
யென்று நோவும் சொல்லி
நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது
இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற –
அதாகிறது
முறுவலிலேயோ
நோக்கிலேயோ
வடிவிலேயோ
சீலத்திலேயோ
அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய  வன முலையாளுக்கு-
மின் போலே வளையா நின்றுள்ள இடையானது
சுருங்கும்படியாக மேலே நெருங்கி வளரா நின்றுள்ள –
முன்பே இற்றது முறிந்தது -என்னும்படி யாயிற்று
இடை இருப்பது  –
அதுக்கு மேலே ஆஸ்ரயத்தைப் பாராதே
நெருங்கி வளரா நின்றுள்ள அழகிய முலையை உடைய இவளுக்கு –

என் கொலாம்-
தாய் கை விட்டமை தோற்ற
சொல்லுகிற வார்த்தை –
இவளுக்கு எவ்வளவாக தலைக் கட்டக் கட்டவதோ –

குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
தாய் கை விடுதல்
தான் கை விடுதல்
செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –

வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள்  உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

ஜடாயு புஷ்கரணி
ஸ்ரீ தேவி பூ மா தேவி இடம் மாறி சேவை திருப்புட் குழி –
பரத்வம் ஸ்புடமாக -ஜடாயு மோக்ஷம் -சாகேத் கோதாவரி கரையில் பஞ்சவடி -நாசிக் ஒரு பக்கம்
மரகத வல்லி தாயார் விஜய ராகவன்
ப்ராமணர் கையால் அடிபட்ட பறவைக்கும் மோக்ஷம்
பராத்பரன் –
விஜய கோடி விமானம்
யாதவ பிரகாசர் இடம் ரஃஆமானுஜர் கால ஷேபம்
கச்ச லோகான் அநுத்தமான்
சத்யத்தால் லோகங்களை ஜெயித்தவன்
பரமார்த்த ஸ்துதி தேசிகன் இங்கு சமர்ப்பித்து
நான்கு திருக்கைகள் ஆஹ்வான ஹச்தஜம் வீற்று இருந்த திருக்கோலம்
போர் ஏற்று நாயனார்
சமர புங்கவர்
மரகத வல்லி தாயார் -வறுத்த பயிறு முளைக்க வல்லவள் -பிள்ளை பாக்யம்
கீழ் குதிரை பிரசித்தம்
கோமள வல்லி -ஆராவமுதன் -திருக்குடந்தை

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

ஆம்பல்-இலைக் குழல் -மூங்கில்
பாடும்–கீழே இராமாயணம் கேட்டத்தைப் பார்த்தோம் -இங்கு இவளே சொல்கிறாள்
கொல்லி கோமள வல்லி கொடி–கொல்லி யம் பாவை கீழேயே பார்த்தோம்

——————————————————

வியாக்யானம் –

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும் –
நெஞ்சில் அழிவை மறைக்க ப்ராப்தமாய் இருக்க
நெஞ்சில் அழிவைத் தாயான என் முன்னே சொல்லா நின்றாள் –
அலம் யென்று ஹலம் -கலப்பையை சேர்ந்து இருந்துள்ள
சுற்று உடைத்தான கையை உடைய -கிருஷ்னன் உடைய-
வாயில் குழல் ஓசையில்
ஒன்றுக்கும் அழியாத என் நெஞ்சு
அழியா நின்றது என்னா நின்றாள் –
வயிரமும் உருக்கும் காணும் வாயில் குழல் ஓசை –
இலைக் குழல் யென்று நிர்பந்திக்கிறாரும் உண்டு –

ஹலத்தை உடைய என்கிற இதுக்கு கருத்து யாது என்னில்
கையில் ஆயுதத்துக்கு எதிரிகள் அழியுமா போலே
குழல் ஓசைக்கு இவள் அழியா நின்றாள் என்கை –
தாய் தமப்பனுக்கு பரதந்த்ரன் ஆகையாலே குறித்த காலத்திலேயே
வரப் பெற்றிலேன் -என்றாப் போலே சிலவற்றை
குழல் ஓசையிலே  தோற்ற வைத்து இறே ஊதுவது –
ஜகௌ கல்பதம் சௌரிச் ஸ்தார மந்திர பத க்ரமம்
ரம்யம் கீதத் நிம் ஸ்ருத்வா சந்த்யஜ்யாவ சதாம்  ஸ்ததா-ஸ்ரீ விஷ்ணு புராணம்
யென்று சொல்லுகிறபடியே –

அன்றிக்கே –
ஆறு நீர வர முன்னே சினை யாறு படுமா போலே
கிருஷ்ணன் வரவுக்கு உறுப்பாக முன்னேறும்
நம்பி மூத்த பிரான் குழல் ஓசை ஆகவுமாம்-

புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்-
அதில் காட்டிலும் அழிக்கும் போலே காணும்
அதுக்கு இவ்வருகில் உகந்து அருளின நிலத்தின் நிலை –
புலம் யென்று விளை நிலத்தை சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றிக்கே
கண்டார் உடைய இந்த்ரியங்கள் பிணி உண்ணும்படியாய்
தன்னில் தான் பொரா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைய திருபுட்குழியில் நிற்கிற நிலையை
அனுசந்தித்தவாறே நான் தாய் யென்று பாராதே
வாய் விட்டு பாடா நின்றாள்-

போதுமோ நீர் மலைக்கு யென்னும்
நம் தசை இருந்த படியாலே
திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு
சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –

குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொல்லி மலையிலே ஒரு பாவை உண்டு -வகுப்பு அழகியதாய் இருப்பது
அது போலே யாயிற்று இவளுக்கு உண்டான
ஏற்றமும் பிறப்பும் -அனுகூலரும் அடுத்துப் பார்க்க ஒண்ணாத சௌகுமார்யமும்-
என்னுடைக் கோமளக் கொழுந்து -நம்மாழ்வார் -என்னக் கடவது இறே –

கொடி இடை நெடு மழைக் கண்ணி–
கொடி போலே இருந்துள்ள இடையை உடையளாய்
ஒரு கால் கண்ணாலே நோக்கில் ஒரு பாட்டம்
மழை விழுந்தால் போலே இலக்கானார்
திமிர்க்கும் படியான நோக்கை உடையளாய்
உஜ்ஜ்வலமாக நிற்பதாய் –

இலங்கெழில் தோளிக்கு-
கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –

என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே
உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற
இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்-

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்