Archive for July, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–

அண்டக்குலத்துக்கு அதிபதி என்றே ஐஸ்வர்யார்த்திகள்
வண்டுகள் பாட -கயல்கள் பாய -நாட்டியம் ஆட -தாமரை மொட்டுக்கள் மலரும் -அலர்த்து-மலர்ந்து –
இவையே கச்சேரி பார்க்கும் பார்வையாளர்கள்
கீழே மூவர் ஆஸ்ரயிக்க-ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் -நித்ய சூரிகளும் -கேவல ப்ராஹ்மணரும் –

————————————————

வியாக்யானம் –
தொண்டாம் இனமும் –
வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –

இமையோரும்-
நித்ய சூரிகளும் –

துணை நூல் மார்பில் அந்தணரும் –
கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் –
(வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே-வித்யையால் பணிவு -ஒன்றை சொல்லி –
கேவல பிராமணரை வரவழைத்து கீதா பாஷ்யம் -தாத்பர்ய சந்திரிகை
பசு மாடு ஹஸ்தி
நாய் நாய் மாமிசம் உண்பவன் -இரட்டை இங்கு
பண்டிதர் சம தர்சனம் பண்ணுவார்கள் -ஸ்ரீ கீதை )

அண்டா வெமக்கே யருளாய் -இத்யாதி
தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்
என்று தனித் தனியே சொல்லா நின்று கொண்டு
சேருகிற கோயில் அருகு எல்லாம் –

வண்டார் -இத்யாதி
வண்டுகளால் மிடையப்பட்டு உள்ள
பொழிலால் உண்டான பழனம் உண்டு -நீர் நிலம்
அதினுடைய பர்யந்தங்களில் உண்டான வயலிலே நின்று
கயலாவது நீர் நிலங்களிலே வந்து பாய –

தன்டாமரைகள் முக மலர்த்தும்-
கூத்தாடுமவர்கள் அடி இட்டால்
ததஸ்த்ரராய் -சதஸ்ஸிலே- இருப்பார்
தம் முக விகாசத்தாலே கொண்டாடுமா போலே
தாமரைகள் முகம் மலர்த்தும் ஆயிற்று –

சாளக் கிராமம் அடை நெஞ்சே –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

கீழே -1-4-நரஸிம்ஹ விருத்தாந்தம் அருளிச் செய்து அடுத்து ஹர சாப விமோசனம் போலே இங்கும் –

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8-

சந்தார் தலை-மண்டை ஓட்டையில் துளைகள் நிரம்பி இருக்குமே –
பெரியோன்-பெருமை பாவித்து இருக்கும் ஹரன் –
சந்தார் பொழில் -சந்தன மரங்கள் நிறைந்த சோலை

வியாக்யானம் –

வெந்தார் என்பும் -சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு –
வெந்தவர்களுடைய எலும்பும்
அது சுட்ட சாம்பலும்
உடம்பிலே பூசி
கையிலே சந்துகள் ஆர்ந்து இருந்துள்ள தலையைக் கொண்டு –
எல்லா நரம்புகளும் வந்து கூடின இடத்திலே யிறே சேதித்தது –
தலை என்னாமல் சந்தார் என்பதால் -எல்லா நரம்புகளும் இத்யாதி -என்கிறார்

உலகு ஏழும் திரியும் பெரியோன் -தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன –
கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே
ஈஸ்வர அபிமாநியாய்
தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவன் சென்று –
என் ஸ்வாமீ – என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –

திரு மார்வில் இலங்கு அமுது நீர் தந்தான் –
விளங்கா நின்றுள்ள திரு மார்வில்
அம்ருத ரூபமான ஜலத்தைக் கொடுத்து (வேர்த்து -வேர்வை நிரம்பிய அழகு)
அவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-

சந்தார் பொழில்
சந்தனத்தாலே நிறைந்த பொழிலாலே சூழப் பட்ட
சாளக்கிராமம் அடை நெஞ்சே-

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

திரிவிக்ரமன் -வியாப்தி -என் கண்ணன் எங்கும் உளன் -ஸ்ரீ நரஸிம்ஹ விருத்தாந்தம் இதில்

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-7-

தானாய்-சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சர்வாத்மா – ஜெகாதாரகத்வம் -சாரீரகத்வ மீமாம்சை -ப்ரஹ்ம விசாரம்
பரிய–ஊனார கலம்-மாமிசம் நிறைந்த என்று மேலே சொல்லி இங்கு பெருத்த
தானுமானான்-அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் -ஸூ பாஸ்ரயமாக –

———————————————————–

வியாக்யானம் –

ஏனோர் இத்யாதி –
சத்ருக்களான ஆசூர பிரகிருதிகள்
அஞ்சும்படியாக யுத்தத்திலே நரசிம்ஹமாய்-

பரிய விரணியனை –
துர் மாம்சத்தாலே தடித்த ஹிரண்யனை

உடம்பு ஒழிய ஆத்மா ஓன்று உண்டு
அத்தை உடையான் ஒருவன் உண்டு
அவனைப் பெற வேணும் -என்னும்-மெய்மையும்-மென்மையும் – கலந்து வளர்ந்த உடம்பன் அன்றே

மாம்ச பிரசுரமாய் இருக்கிற
மார்வை பிளவு செய்த
அத்விதீயன்
அப்படிப்பட்டவன் தானே

சந்திர சூர்யாதி களுக்கு அந்தர்யாத்மதயா புக்கு
இவர்கள் தான் என்னலாம் படியாய்
ஆகாசமாய்
தேஜோ பதார்த்தமாய்
வாயு தத்வமாய்
(கீழே காரண பொருள்களைச் சொல்லி )கார்ய கோடியில் மலையாய் -கடல் சூழ்ந்த பூமி

தானும் ஆனான் –
அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ உக்தனாய் இருக்கிறவன் –

——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

ஏழு வயசில் பண்ணின அத்தைச் சொன்ன பின்பு பூதனா நிரசனம்
எதுகை மோனை
கிருஷ்ண வாமன -ஊராக நாடாக தீண்டின அவதாரங்கள் அன்றோ –
வருக வருக வாமன நம்பி

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6-

விழுது-வெண்ணெய்
வாயான் -வெண்ணெய் உண்ட வாயான் -இன்றும் வாசனை வீசும்
ஏயான்-பொருந்தாத

வியாக்யானம் –

தாயாய் இத்யாதி –
தாய் வடிவைக் கொண்டு வந்த பூதனை உடைய உயிரையும்
யசோதை பிராட்டியார் உடைய தயிரையும்
வெண்ணெயும் ஒக்க
அமுது செய்த திருப் பவளத்தை உடையவன் –
அநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்
பிரதிகூல பிராணனும் ஒக்க
தாரகமாக வளர்ந்தவன் –

தூய இத்யாதி –
கண் அழிவற்ற வாமன வேஷத்தை உடையனாய்
அம்புக்கு செல்லா விடத்தே
அழகாலே வசீகரிக்கும் படியான
வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று
(வாம -ஸூகம் -அழைத்து போமவன் வாமனன் -பட்டர்
கொண்ட கோல உருவம் -இவனே நினைத்தாலும் அது போலே மீண்டும் கொள்ள முடியாத வடிவம் )

ஏயான் இரப்ப –
ஸோ சஹச்ர ப்ரதாதாரம் -ஸ்ரீ ராமாயணம்
தத் யாந்ந ப்ரதி க்ருஹ்ணீயாத் -ஸ்ரீ ராமாயணம்-(பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்தது )
என்று இரப்புக்கு ஆகாத – தான் சென்று இரக்க

மா வலியை ஏயான் இரப்ப –
கொடேன் என்றே அபிசந்தி பண்ணி இருந்த அவன் பக்கலிலே – இரப்பன் -என்னவுமாம்
மூவடி மண் இப்போதே தர வேணும் என்று வேண்டிக் கொண்டு –
அநுமதி பண்ணின அநந்தரம்
மரு மனஸ் படுவதருக்கு முன்னே வளர்ந்து
லோகம் ஏழையும் அளந்து கொண்டு

தாயான் –
தாவினவன்

காயா மலர் வண்ணன்-
அவ்வடிவைக் கொண்டு ஆயிற்று
பூமியை அளந்தது –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

அதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –
கர தூஷணாதிகள் வந்த காரணம் இது அன்றோ –
பஞ்சவடியில் மூவரும் மகிழ்ந்து இருக்க வந்தவள் சூர்ப்பணகை
கொல்லை அரக்கியை மூக்கரிந்த குமரனார் –
சக்ர தாரி -இங்கும் கோவர்த்தன உத்தாரணத்திலும் -உகந்தாருக்குத் தான் தானே காட்டி அருளுவான்-
கீழே சாளக்கிராமம் திருக்குடந்தை சேர்ந்து அனுபவம்
இதில் ராம கிருஷ்ண சேர்த்து அனுபவம் –

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

வியாக்யானம் –

அடுத்து –
மேல் விழுந்து கிட்டி

ஆர்த்து எழுந்தாள் –
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
கிளர்ந்து வந்து தோற்றினவள் –

பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்
கூர்மை கூரிய
திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்

விளங்கு இத்யாதி
கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-

நண்ணார் -இத்யாதி –
சத்ருக்கள் முன்பே
இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
(நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரத்தையும் அறியாதே
ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று

தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-7-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 30, 2013

ஏழாந் திருவாய்மொழி – “உண்ணுஞ்சோறு”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத்தாயாரானவள், ‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும் மோகித்தாள்; அவன் திருநாமத்தைச் சொல்லுகையாலே பெண்பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளூர் ஏறப்போனாள்; 2திருத்தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப் பார்த்தாள்; வெறும் படுக்கையாய்க் கிடந்தது; 3இனி, இவள் என் வயிற்றிற் பிறப்பாலும், தன் தன்மையாலும், இங்கு இருந்த நாட்களில் தேகயாத்திரை இருந்தபடியாலும் இவள் திருக்கோளூர் ஏறப்புறப்பட்டுப் போயினாள் என்று அறுதியிடுகிறாள்.

4வளையம் முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளேயாகிலும் நாம் இவளை இழக்கவேண்டி இராது என்றே இருந்தாள் மேல்திருவாய்மொழியில். இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள். 1ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்;

“கள்வன்கொல்” என்றதுபெரியதிருமொழி, 3. 7 : 1.

தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார். அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் 2ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்:அகலகில்லேனிறையும்”, “பித்தர்  பனிமலர்மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத்தகும்.

3இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். 4“அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!” அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர்கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி. 5ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு; ‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.

அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே, ‘பகவத்கோஷ்டிக்கு இனி ஆளாகமாட்டாரே!’ என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கைகழிந்த இவர், ‘சம்சாரிகளுக்கு இனி ஆளாகமாட்டார்’ என்னும்படி நாட்டாரோடு இயல்வு ஒழிந்து, கொள்ள மாளா இன்பவெள்ளத்தைப் புஜிக்கக் கைகழிந்த படி சொல்லுகிறது. நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக்கடவ இவர், சொரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது. க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள். 3“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்” “ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-என்பது, உத்தரராமாயணம்.

என்றாற்போலே. 4ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள். ‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”-
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.

என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது. பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன்வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத்க்ருதா’ என்கிறதுஅசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத்தான் நினையாநின்றாளோ? 1இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது. ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது. “கன்னகு திரள்புயக் கணவன் பின்செல
நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.


2
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி

புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-
என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

திருத்தாயாரும் இம்மாளிகையைக் கண்டுவெறுத்து, ‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ? தனிவழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும்பெறாது ஒழிவதே! இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ! அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ! 2அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர்நிலைகளையும் அவன் குணங்களையும் கண்டு உகக்கிறாளோ! கண்டு சிதிலை ஆகிறாளோ! இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோரதித்துக்கொண்டு, 3தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே, 4இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று திருத்தாயார் இன்னாதாகிறாள்.

   உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.

பொ-ரை :- உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.

வி-கு :- “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை” என்று அவ்வவற்றிற்குரிய சிறப்புத் தொழிலாற் கூறப்பட்டுள்ளமை நோக்கல் தகும். என் இளமான் என்று என்றே கண்கள் நீர்மல்க, வளமிக்கவன் சீரையும் ஊரையும் விடவிப் புகும் ஊர் திருக்கோளூரே; இது திண்ணம் என்க. வளமிக்கவன் : பெயர்.

இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

ஈடு :- முதற்பாட்டு. 1தன் வயிற்றிற் பிறப்பாலும், இவளுடைய தன்மையாலும் இவள் இங்கு நின்றும் போய்ப் புகும் ஊர் திருக்கோளூர் என்று அறுதியிடுகிறாள்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் – 2இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் தேடிப் போனாளோ. என்றது, இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கேபுக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி. “அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், 3நான் பகவானாகிய இனிமையைஅநுபவிக்கிறவன்” என்று இருப்பார்க்கும் அவ்வருகு போகவேணுமோ? சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ? ‘உண்ணுஞ் சோறு’ என்பதுபோன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில், வேட்ட பொழுதின் அவையவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ; அப்படியே, இவைதாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே; அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொருபடியிருக்கும் அப்படியேயாயிற்று இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க. 1தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாசுதேவஸ் ஸர்வம்” “பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ்ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19

என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள். ‘உண்ணும்சோறு’ என்ற நிகழ்காலத்தாலே, அல்லாதது2 உண்டு சமையும் சோறு என்கையும், இது மாறாதே உண்ணும்சோறு என்னுமதுவும் தோற்றுகிறது. 3“கணைநாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்” -பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ. மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ; “அப்பொழுதைக் கப்பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும், “கொள்ளமாளா இன்பவெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.1இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர், இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள். 2இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

என்று என்றே – 3இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச் சொல்லுவது; இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு ஊண் உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே என்றபடி. கண்கள் நீர்மல்கி-4இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி. 5இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். 6தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ? ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ணநீருமாயிருக்க, அவனைக் கண்டுகொண்டிருக்கவன்றோ அடுப்பது. 1‘அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ –திருவிருத்தம், பா. 2.-என்று சேதனராகில் மங்களாசாசனம் செய்யக்கடவது. 2நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அறையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன். அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.

3ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.

விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது. பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே. அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன். சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கையாயிற்று. ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ? ‘அளந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேகயாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி-1இந்த பாவனையின் மிகுதியினாலே பெற்றாற்போலே இருந்து ஆனந்தக் கண்ணீர் புறப்படுகிறபடியாகவுமாம்; இந்த அநுசந்தானத்தாலே கண்ணீர் மல்கி என்னவுமாம். மண்ணினுள். . . . . .புகும் ஊர்த்திருக்கோளூரே-மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே. 2விண்ணில் ஓர் ஊர் விசேடிக்கவேண்டும்படியாய் இராதன்றோ. அவன் சீர் வளம் மிக்கவன் ஊர்-அவனுடைய கல்யாண குணங்களையும் தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வத்தையுடையவனுடைய ஊரையும். 3“அந்த முக்தன் எல்லாக் கல்யாணகுணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”   “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணா”-என்பது, சுருதிவாக்கியம்

என்கிறபடியே, அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று, அவன் விரும்பின தேசமும் பிராப்பியத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ. அவன் சீர் – அவனுடைய கல்யாணகுணங்கள். அவையாவன: அவன் தன்திறத்தில் தாழநிற்கும் நிலைகள். வளம் மிக்கவன் ஊர் – 4பரமபதம் கலவிருக்கையைப் போன்றது; உகந்த விஷயத்தைப் பெறும் இடன் அன்றோ ஊராகிறது. 5‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது’ கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.

என்பதேயன்றோஅவனுடைய திருவார்த்தை.

இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தியாயின்
நன்னுதற் சீதையால்என் ஞாலத்தாற் பயன் என் நம்பி
உன்னையான் தொடர்வன் என்னைத் தொடருமிவ் வுலகம் என்றால்
பின்னைஎன் இதனைநோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.–என்பது கம்பராமாயணம், மகுடபங்கப்படலம்.

1பரமபதத்தைக் காட்டிலும் அடியார்கள் இருந்த இடம் அன்றோ ஊராகிறதும், அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தியிருப்பதும். வளம் மிக்கவன் – 2பிரணயதாரையில் சாமர்த்தியத்தையுடையவன் என்றுமாம். இப்போது சாமர்த்தியமாவது, தான் இருந்த இடத்தே இவள் வரும்படி இத்தலையை அழித்தது.

வினவி-3‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு, அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன, அதுதானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை. “தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திருநாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச்சோறாகும்” பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்.-என்றார் பிறரும். 4பூ அலரும்போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இட்ம போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப்பெற்றிலேன் என்று காணும் திருத்தாயார்தான் நோவுபடிகிறது. என் இளம் மான் புகும் ஊர் திருக்கோளூரே – 5என் வயிற்றிற் பிறப்பாலும் இவளுடைய தன்மையாலும் அவ்வூரில் அல்லது புகாள் என்கிறாளாயிற்று.

தாயின் வழியைக் கொண்டே தன்மைகளை அறுதியிடலாமே அன்றோ. 2பெருமாளைக் கண்டல்லது தரிக்கமாட்டாதானாய் வருகிற ஸ்ரீபரதாழ்வானைக் கண்டுவைத்தேயும், முக்காலமும் உணர்ந்த முனிவரும்கூட, 3“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ, இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டுபண்ணும் போலிருக்கிறது” “கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது, ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து
ஸ்ரீகுகப்பெருமாள் கூறியது. இது, குகப்பெருமாளுடைய வார்த்தையாக
இருப்பினும், இதனை இங்கே எடுத்தது, பரத்துவாச பகவானுக்கும் கருத்து
இதுவாகையாலே.

என்கிறபடியே, தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப்போக விட்டாயாகில், இன்னும் ‘பெருமாள் இருக்கில் 4கீழ்வயிற்றுக் கழலையாகிறது’ என்று அங்குப்போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ என்றான் அன்றோ. “கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச”

என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,) போன்ற பரத்துவாச முனிவருடைய வார்த்தைகளைத் திருவுள்ளம்பற்றி.

அவன் படிகள் காணா நிற்கச்செய்தே தாய் சம்பந்தம் கொண்டு ஐயப்பட்டானே அன்றோ. பொருள்களின் தன்மைகளைக்கொண்டு பத்தும்பத்தாக நிமித்தங்களை அறியக் கடவர்களாய் இருப்பர்கள் வேடர்கள்; இங்ஙனே இருக்கச்செய்தேயும், தம் எல்லையிலே இவன் வந்து புகுந்ததற்கு மகிழ்ந்தவர்களாய் 5‘அடிச்சேரியிலே வந்து புகுவதே!’ என்பது; ‘ஆனாலும், அரசர்களாயிருப்பார் வன்னியர் பற்றிலே புகுரும்போது கேள்விகொண்டன்றோ புகுருவது’ என்றாற்போலே இருக்க வெளிறும் காழ்ப்புமாகச் சொல்லி, தாய் வழியை நினைத்து அசிர்த்தார் அன்றோ ஸ்ரீகுகப்பெருமாளும்.

அப்படியே, இவளும் தன்வயிற்றிற் பிறந்த சுத்தியே காரணமாகத் ‘திருக்கோளூரிலேபுகும்’ என்று அறுதியிடுகிறாள். 3இராம பாணம் இலக்குத் தப்புமோ! என் மகள் புகும் ஊர் அதுவே என்கிறாள். இளமான் – 2இப் பருவத்தில் இவளைத் தல்கு அறுக்கும்போது அவ்வூரில் அவனேயாக வேண்டாவோ? என் இளமான் – கிரமத்திலே அடைவதைப் பொறுக்காதவள். தன் மிருதுத்தன்மை பாராமல் பதறிக்கொண்டு போனாள். புகுமூர் – 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை. 4எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகிறாள் ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக்கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார். என் இளமான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் – இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம். 5இவ்வூரில் பிள்ளைகளைக் காணாவிட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.

சாரமான திருவாய்மொழி
மோஹித்து கிடக்க
அது போயிற்று இது பயிற்று என்று திரு நாமம் சொல்லி
தாயாரும் மோகிக்க
மகள் எழுந்து -திரு நாமம் தரிக்க காரணம் ஆயிற்று
உணர்ந்து இருந்து புறப்பட்டு திருக் கோளூர்
பாதேயம் புண்டரீகாஷ சங்கீர்த்தனம்
ஏகாதசி திரு நாமம் சொல்லி தரிக்க
வெறும் படுக்கையாக இருக்க கண்ட தாயார்
தன வயிற்றில் பிறந்தவள்
தனது பிரக்ருதியாலும்
இங்கு இருந்த நாள் தேக யாத்ரை யாகை யாலும்
இவள் திருக் கோ ளுருக்கே போனாள்  அறுதி இட்டு சொல்ல
வளை யாதிகளை இழந்தாலும் இவளை இழக்க வேண்டாம் என்று இருக்க
ஆளவந்தார் கோஷ்டியிலே
அன்றே பகவத் கால ஷேபம் உண்டே
கள்வன் கொல் -கரியான் ஒரு காளை  வந்து -மட மானை -வெள்ளி வளை  கை
அணி யாலி  புகுவர் கொலோ
அதுவும் தாயார் பாசுரம் –
இருவராய் போனாருக்கு வயிறு எரிய வேண்டுமோ
தனியாக போனவளுக்கு பரிய வேண்டாமோ -இருந்த முதலிகள் சொல்ல
ஆளவந்தார் -மாற்றி
இருவராய் போனால் இருவருக்கும் பரிய வேண்டுமே
இருவருக்கும் இருவரும் ஊமைத்தங்காய் போலே -உன்மத்தங்காய்
கடித்ததும் ஊர்ந்ததும் அறியாது இருப்பார்கள்
ராஷசர் வருவார்
கண் எச்சில் படும்
லங்கா த்வாரம் புகுவாரா அணி ஆலி புகுவர் கொலோ -ஐயப்பாடு தெரிவிக்க படும் சப்தம் கொண்டு வியாக்யானம்
இவள் அங்கு புக்கு அல்லது தரியாள்

தனியே போனாள் –
பகவத் கோஷ்டிக்கு ஆளாக மாட்டாத
மாற்றார் உடன் இயைவு ஒளிந்து
அர்த்த அல்ப சாரங்கள் சுவைத்து அகன்று ஒழிந்தேன்
அப்படிப் பட்ட -ஆழ்வாரை
சம்சாரிகள் இடம் ஒட்டாத
கொள்ள மாளா  இன்பம் எம்பெருமானை அனுபவிக்க
ஸ்வரூபம் அனுரூபமான விஷயத்தை பிறர் அறியாமல் தாயார் கூட அறியாமல் புகுந்து
முன்பு தாழ்ந்த விஷயத்தில் பழிக்கு அஞ்சாமல்
அவள் உடைமை போன இடத்துக்கு இவளும் போக -அல்லது நில்லேன்
லஷ்மணன் -யம தர்ம ராஜன் வந்து -யார் வந்தாலும் உள்ளே விட கூடாது
மீறி  உள்ளே விட்டால் முகத்தில் விழிக்க முடியாதே -சொல்லி
துர்வாசர் வர –
உள்ளே போவேன்
இஷ்வாகு குலத்தை நாசமாக்க சாபம் விடுவேன்
தம்மை அழிய மாறி உள்ளே விட
சரயுவில் இறங்கி -அடுத்த ஷணமே –
பார்த்து போக வந்தேன் –
-நல்  பாலுக்கு உய்த்தவன் –
இளைய பெருமாள் போன இடமே நானும் போவேன்
அது போலே உடைமை போன இடத்துக்கு இவள் போய் சேர
சர்வான் போகான் பரித்யஜ்ய -ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம் அர்த்தம்
சீதை பிராட்டி போகம் விட்டு
பர்த்தா சிநேகத்தால்
தூண்டப்பட்டு வனத்துக்கு போனாள்
இந்த கட்டத்துக்கு ஒப்பு இட்டு வியாக்யானம்
சர்வான் போகான் -பண்டு விரும்பி இருக்கும் அவற்றோடு பெத்த தாய் வாசி அற
பொகட்டு
பரித்யஜ்ய -மீண்டும் இன்னும் நசை பண்ணும் தோற்றாதபடி
காரணம் -விஷயத்தில் ஸ்நேகம் -அனைத்தையும் விடப் பண்ணுமே
சு வசத்தால் போக வில்லை -அவன் இடம் சிநேகத்தால்
வரப் போவதையும் நினைக்க வில்லை
பெருமாளை ஒழிய தன்னை கண்டால் தான் சுகமோ துக்கமோ நினைப்பாள்
போகத்துக்கு ஏற்றட ஏகாந்த ஸ்தலம் என்று ஆசைப் பட்டு போனாப் போலே
சக்கரவர்த்தி பிள்ளைகள் இருவரையும் பிரிந்து போனான்
அயோதியை தேசமும்
சீதை இருந்து இருந்தால் நிச்சயம் வருவான் நினைத்து  இருக்க
நப்பாசை கூட இருக்க முடியாமல்
சந்தரன் இல்லாத ஆகாசம் போலே
தாயார் துக்கத்துக்கு அப்படியே ஆயிற்று
நல்லதோர் தாமரை பொய்கை -அழகு குலைந்து இருக்க

தனி வழியே போக
என்னையும் இன்றி
அவனும் கூட போகாமல்
எப்படி அங்கெ போவாள்
அங்கு புக்கால் என் செய்வாள்
சோலை கண்டு சிதிலம் ஆவாளோ
தன்னை பார்த்தல் எங்களை பார்த்தல் செய்யாமல் போனாள்
கடலிலே கவிழ்த்து விட்டு போனாள்

இவள்
தன்  வயிற்றில் பிரததாலும்
ஸ்வா பாவத்தாலும்
புகுவது -திண்ணம் என்கிறாள்

தாரக போஷாக போக்யங்கள் எல்லாம்
அங்கே  புக்கு அவனாலே தரிக்க
இங்கே இருக்கும் பொழுது அன்ன பாநாதிகளால் கொண்டு தரிக்காமல்
அஹம் அன்னம்
சோறு -உண்ணும் சோறு விசேஷணம்
பருகும்  நீர்
தின்னும் வெற்றிலை
இன்பத்து பால் வேட்டை பொழுது
விரும்பின காலத்தில் அவை அவை கிடைத்தால்
அபேஷை உள்ள பொழுது –
உண்ண  வேண்டும் என்று ஆசைப் பட்ட காலத்தில் கிடைக்கும் சோறு -உண்ணும் சோறு
தாகம் இல்லாத பொழுது கொடுத்த நீர்
அது போலே வெற்றிலை
இவை தான் அனுபவமாக இருக்கும் -அபிமத –
எப்போதும் இவருக்கு அபிமத விஷயங்கள்
வாசுதேவ சர்வம்
உண்ணும் சோறு இது உண்டு கொண்டே இருக்கிற சோறு
அல்லாதவை உண்டால் முடியும் -என்றும் அர்த்தம்
மாறாதே புஜிக்கும் சோறு
ஓயாத ஊணாக கல்யாண குணங்கள் -பெரிய திருவந்தாதி
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம்
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
இவளுக்கு எல்லாம் அவன்
இவள் சன்னிதியே அமையும் எங்களுக்கு
என்று என்றே -இத்தை தவிர வேறு ஒன்றும் அறியாள்
மம சர்வம் -வாசு தேவ -பிரமாத்மகம் -ப்ரஹ்ம சரீரம்
அத்வைதி போலே ப்ரஹ்மம் சர்வம் இல்லை

கண்கள் நீர் மல்கி
தாயாருக்கு உண்ணும் சோறு இவள் கண்கள் கோலம்
இவள் முகத்தாலே காணும் இவளுக்கு
ஜீவனம் எங்கள் ஜீவனம் கொண்டு அவள் ஜீவனம் தேடித் போக வேண்டுமா
பகவத் குணா வித்தனாய்  கண்ணும் கண்ண நீருமாக இருக்க பார்க்க ஆசைப்படுவார்கள்
அலமருகின்றன -இப்படியே இருக்க மங்களா சாசனம் செய்வார்கள்
நஞ்சீயர் – பிள்ளை திரு நரையூர் அரையர் இடம் மூன்று திருவாய் மொழி கேட்டு
ஒரு வார்த்தையும்
சிதிலராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் திரு முக மண்டலம் தான் நினைவில் இருக்கும்
பிரமாணம் -ஆஹ்லாத -சீத நேத்ராம்புக்கு -ஆனந்த கண்ண நீர் -குளிர்ந்து
புலகிக்தம் புல்லரிக்கும் திரு மேனி
குணங்களால்
த்ரஷ்டவ்ய -பார்க்கப் படுபவர்கள் சர்வ தேகம் -ஓன்று உள்ளவர்கள்
விரகத்தால் கொதித்த கண்ண நீர் இல்லை
மயிர் கூச்சு எடுத்து
குணங்களால் மேலிட்டு -பக்தன் த்ரஷ்டவ்ய சர்வ தேகிபி
தேகம் உள்ள பிரயோஜனம் இதுவே சதா தர்சனம் பண்ண தேச விசேஷம் போக வேண்டாமே
திவ்ய தேச வாசம்
அனந்தாழ்வான் –
சோழ வந்தான் -சோழ குலாந்தகன் -பாண்டியன் சோழ தேசம் வென்று
திரு கோளூர் விட்டு வந்தான்
தேக யாத்ரை நடவாமை வந்தேன்
கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்று இலையோ
நிலை நின்ற ஜீவனம் இழந்தாயே

பாவனா பிரகர்ஷம் –
நேராக காண்பது போலே கண்கள் நீர் வர
கிடைக்க வில்லை துக்கம் என்று நீர் வர வில்லை
சீத நேத்ராம்பு
நினைவால் கண்ணீர் பெருக
மண்ணினுள் புகுமூர்
விண்ணில் -பிரித்து வைக்காதே
இங்கே பிரித்து சீர் வளம் மிக்க ஊர்
அவனோடு அவன் குணங்களோடு வாசி அற -அவன் விரும்பிய தேசமும் பிராப்யம்
விரும்ப படுகிற எவை -காமாகா -ப்ராப்ய அந்தர்கதம்
தாழ நிற்கும் தேசம்
கலவிருக்கை அது
இது அவனூர்
உகந்த தேசம்
கிம் கார்ய சீதையா மம -பெருமாள் வார்த்தை
இன்று வந்த ஆஸ்ரிதனுக்காக பிராட்டியை காற்கடைக் கொண்டான்
ஆஸ்ரிதர் உள்ள இடமே
அவன் மேவி உறைகிற கோயில்
அவன் உள்ள தடம் தேடி வந்ததால்
வினவி -எவ்வளவு
கொஞ்சம் தரிப்புக்கு உடலாக
தாயார் இவள் வாயை நினைத்து
தாயைப் போலே பிள்ளை
பெருமாளை கண்டு தரிக்க மாட்டாமல் பரதன் போலே
எம்பெருமான் –
பெருமாளை தேடி வர -ரிஷியும் பரத்வாஜரும் சங்கை கொண்டு பேச –
தாயைப் போலே பிள்ளை என்ற நினைவால் –
கடேற போக விட்டு -அங்குப் போயும் நலிய
த்ரிகால ஞானி கூட சங்கை -பரதனை பார்த்து இருந்தாலும்
குகன் -தம் ஸ்வா பாவத்தைக் கொண்டு
சந்கித்து -தாயை போலே பிள்ளை –
எனது வயற்றில் பிறந்து -அங்கெ தப்பாமல் போவாள் என்கிறாள் சங்கை இன்றி
இள மான் –
சம்பந்தம் விட்டு போன இளையவள்
க்ரம ப்ராப்தி –
புகுமூர் காட்டுத் தீயில் அகப்பட்டவன் பொய்கையும் தேடி
சம்சாரத்தில் திவ்ய தேசம்
பாலை வனத்தில் சோலை போலே திவ்ய தேசங்கள்
புக்கார் போகாத தேசம் இது
நச் புன ஆவர்த்ததே
திருக் கோளூர் பெண் வார்த்தை ரகசியம்
இவனைப் போலே அவனை போலே இல்லையே
இது திண்ணம்
இங்கே பிள்ளையை காணா  விட்டால் கோயிலிலே தேடுவார்கள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 30, 2013

கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண் பாரே.

பொ-ரை :- செறிவினையுடைய அழகுபொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய தெற்குத் திக்கிலேயுள்ள திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய சூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

ஈடு :- முடிவில், 2இத் திருவாய்மொழியினை வல்லவர்கள் நித்தியசூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள் என்கிறார்.

கட்டு எழில் சோலை – பரிமளத்தையுடைத்தான நல்ல சோலை. கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது; வலித்தல் விகாரம். கடி – வாசனை. நல்வேங்கடம் – 3சேஷசேஷிகள் இருவர்க்கும் உத்தேசியமான திருமலை. வாணன் – நிர்வாஹகன். திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவிபாடிற்று. 4“திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகதிருவாய்.-  3. 9 : 1.

. என்னாவில் இன்கவி யான் ஒரு

வர்க்கும் கொடுக்கிலேன்” என்று இருக்கும் அவர் அன்றோ. கட்டு எழில் தென்குருகூர்-அரணையுடைய திருநகரி. கட்டு-அரண். ணூட்டு எழில் ஆயிரம் – அழகிய தொடைகளையுடைத்தாயிருக்கை. கட்டு-தொடை. கட்டு எழில் வானவர் – கட்டடங்க நல்லவரான நித்திய சூரிகள். அன்றிக்கே, ‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது, சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலையற்றவையாய் இருக்கும் அன்றோ. இது, சொரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, முழுதும் என்றே பொருள் கோடலுமாம். 1நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்; மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம். 2ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்
சாலநைந்து தன்னுடைமை தானடையக் – கோலியே
தானிகழ வேண்டாமல் தன்னைவிடல் சொல்மாறன்
ஊனமறும் சீர்நெஞ்சே! உண்

கடி -கட்டு வலித்து
கட்டு எழில் -வாசனை மிக்க சோலை
நல் வேங்கட வாணன் -சேஷி செஷபூதநிருவருக்கும்
அவனே ஆசைப் பட்டு வந்தவன் –
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் -தானே ஆசைப்பட்டு
சுமதி அரசன் ஆசைப் பட்டு திரு வல்லிக்கேணி
திருவரங்கம் -சோலை அழகை  கண்டு இருந்தானே
வாணன் -நிர்வாகன்
பத்துப் பாட்டும் திரு வேம்கடத்துக்கும் ஆயிற்று
இது போலே வீற்று இருந்த ஏழு -உலகம் -மாரி மாராத -அங்கும்
ஆனந்த எல்லை அது
இது துக்கத்தின் எல்லை
இரண்டிலும் திரு வேம்கடத்து
திரு வேம்கடத்தான் தவிர யான் ஒருவருக்கும் கொடுத்திலேன் நானின் கவி
முதலில் திரு விருத்தம் திருவாய்மொழி இரண்டிலும் திருவேம்கடம்
பெரிய திருவந்தாதி -கல்லும்கனை -கடலும் திருவேம்கடம் தவிர வேறு இல்லையே
நன்றாக தொடுக்கப் பட்ட
கட்டு எழில் போகம் -நிரதிசய ஆனந்தம் ஸ்திரம் ஸ்வரூப அனுரூபமான நித்யம்
நான்கு அடியிலும் கட்டு முழுக்க
எங்கும் சோலை
எங்கும் அழகு
நீர்மைக்கு எல்லை ஆச்ரயண ஸ்தலம் -இத்தை சொன்னால்
அனுபவிக்க ஸ்தலம் அனுபவம் கிட்டும் -பரம பதம் கிட்டும்நிச்ச்சயம்
சாரம்
தான் கலந்து சேரப்
பெறாமையால் சால நைந்து
தானே உடைமை கழியப் பெற்றன
மாறன் சீர் -ஊனம் இல்லாத நெஞ்சை உண்பாயாக

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 30, 2013

     பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்குஎன்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.

பொ-ரை :- அழகுபொருந்திய நீண்ட திருமுடியிலே தரித்த அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடே போர்செய்த தோள்களையும் ஆச்சரியமான செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, நிற்கின்றனவான பலவகைப்பட்ட பொருள்களையும் சரீரமாகவுடையவனாய் அவற்றின் குற்றங்கள் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு, அறிவுடைய என் மகளானவள் மரியாதையை இழந்தாள்.

வி-கு :- மல் – மல்லர்கள். கற்பு – கல்வி; அறிவு. கட்டு – உலக மரியாதை. பெண்களுக்குள்ள மரியாதையுமாம்.

ஈடு :- பத்தாம்பாட்டு. 1பரத்துவம் என்ன, அவதாரம் என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி இவள் உடைமை எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள்.

பொற்பு அமை நீள்முடி பூந்தண் துழாயற்கு-அழகு சமைந்திருப்பதாய் ஆதிராஜ்யப் பிரகாசகமான திருமுடியின் மேலே இறைமைத்தன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையை யுடையவனுக்கு; தன்னுடைய பரிசத்தாலே பூத்துச் சிரம ஹரமாயிருத்தலின் ‘பூந்தண்துழாய்’ என்கிறாள். மல் பொரு தோளுடை மாயம் பிரானுக்கு-வந்து அவதரித்து மற்பொரு தோளையுடையனாயிருக்கை. சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின் ‘மாயப் பிரான்’ என்கிறாள். 2சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் – பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-அன்றோ. ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள். அன்றிக்கே, மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம். நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு – தாவர சங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே, அவற்றின் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தையுடையவனுக்கு. என் கற்புடையாட்டி – மிக்க அறிவையுடைய என்மகள். 3“என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30.

என்று இருக்குமவள் அன்றோ.இழந்தது கட்டே – 1தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு – முழுதும். ‘கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்

பரத்வம் என்ன -விபவம் என்ன -அனைத்தையும் காட்டி
அனைத்தையும் இழந்தாள்
பொற்பு அணை -நீண் முடி ஆதிராஜ்ய -ஐஸ்வர்ய சூசுகம்
ஸ்பர்ச்த்தால் வந்த பெருமை
வந்து அவதரித்து மல்லர் உடன்
மாயப்பிரான் சாத்தின சாந்து குறி அழியாத படி
சாந்தணி தோள் சதுரன் இ றே
ஆச்சர்யமான உபகாரங்கள் பல செய்தவன்
ஸ்தாவர ஜங்கம -உள்ளே இருந்தும் தோஷம் தட்டாத மாயன் ஆயன் –
என் கற்புடை யாட்டி -மிக அறிவை உடைய என் மகள்
மிக்க அறிவு -தக்க அறிவு -தது தஸ்ய சத்ரும் பவேத் அறிவு
தன்  உடையவை காட்டி -அனைத்தையும் கொண்டான்
கட்டு கட்டடங்க
கட்டுப்பாடை இழக்க வைத்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 30, 2013

    மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

பொ-ரை :- அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.

வி-கு :- தோற்றம் – தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி காகுத்தன் – ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி – பூர்ணன்.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 1ஸ்ரீ வாமனம் முதலிய அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு – 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு – 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து – கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் – அழகு. அன்றிக்கே, “ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்

“ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3 : 10.

எம் காகுத்த நம்பிக்கு-1குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.

ஆந்ருஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-  என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.

2“தசரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன்”-திருவாய். 3. 6 : 8.– என்னுமவராதலின் ‘எம் காகுத்தன்” என்கிறாள். 3“குணங்களுக்கு எல்லாம் நிலைக்களமானவர்”குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

ஆதலின் ‘நம்பி’ என்கிறாள். என் பூண் புனை மென்முலை – ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும் அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள். தோற்றது பொற்பே – 4“பூண்புனை மென்முலை” என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள். பொற்பு – அழகு. 5“மலராள் தனத்துள்ளான்”-மூன்றாந் திருவந். 3.- என்கிறபடியே, அவனைத் தன்னழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள் கண்டீர் தோற்றாள் என்கை.

பல அவதார செஷ்டிதங்கள் காட்டி அழகை
மாண்பு -சமைந்து ஒப்பனை உள்ள வாமனன்
நெஞ்சு உருக்கும் படி அழகு
மாயம் -ஆச்சர்யம் வஞ்சனை
உயர்ந்த குன்றம் போலே எம்பெருமான்
அடியிலே நீர் வார்த்து கொடுத்த உடன் வளர்ந்த படி
தோற்றம் -அழகு
சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சொல்லலாம்
காகுத்த நம்பி -குண பூர்த்தி உள்ளவன்
மனத்துக்கு இனியான்
பெண் பிள்ளைகளுக்கு உதவினதால் இப்படியே பேசுவார்கள்
தயரதர்க்கு மகன் தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாக
பூம் புணை மென் முளை
பொற்பு அழகு
ஒப்பனையால் வந்த அழகை யும் இயற்க்கை அழகையும் இழந்தாள்
ஸ்தனத்துள்ளான் -அவனையே வைத்து கொள்ளுபவள் இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 30, 2013

   சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.

பொ-ரை :- குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.

வி-கு :- மாய – இறக்க. மாயம் என்று பிரித்து வஞ்சனையுடைய என்னுதல், பேயை : வேற்றுமை மயக்கம் குழலி – கூந்தலையுடையவள்.

ஈடு :- எட்டாம்பாட்டு. 4கிருஷ்ணன், தன் விரோதிகளை அழித்த செயலுக்குத் தோற்று, இவள், தன்னுடைய பெண்மையை இழந்தாள் என்கிறாள்.

குருந்தம் சாய ஒசித்த தமியற்கு – 4அசுர ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்தத்தை வேரோடே சாய்ந்து விழும்படிமுறித்த தனியற்கு. என்றது, நம்பிமூத்தபிரானை ஒழியவே தனிவீரம் செய்தவனுக்கு என்றபடி. 1தான் அத்தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு. மாயச் சகடம் உதைத்த மணாளற்கு – 2வஞ்சனைபொருந்திய சகடம்என்னுதல்; “தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே, சகடம் உருமாயும்படி என்னுதல். மணாளற்கு-ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல்போலே, இந்தச் செயலினைக் காட்டியாயிற்று இவளைத் தனக்கே உரியவளாக்கியது. பேயைப் பிணம் படப் பால் உண் பிரானுக்கு – 3சூர்ப்பணகையைப் போலே ஒரு கேட்டினை விளைக்க உயிரோடே விடாதே, பூதனையைப் பிணமாய் விழும்படி முலை உண்ண வல்ல மஹோபகராகனுக்கு. னுன் வாசக்குழலி – 4இயற்கையிலேயே வாசனைபொருந்திய குழலையுடைய என் பெண்பிள்ளை. 5அவனை, “சர்வகந்தா:” என்று சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு. 6வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ.-இது திருவாய்மொழி,-  10. 10 : 2.- இழந்தது மாண்பே-தன் ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண்தன்மையைக்கொண்டான். மாண்பு-மாட்சிமை; பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.

கிருஷ்ணன் விரோதி நிரசனதுக்கு தோற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வம் இழந்தாள்

பெண்மையே போயிற்றாம்
குருந்தம்சாய -ஒசித்த -தமியற்கு –
நம்பி மூத்த பிரான் ஒழிய தனியாக செய்த சேஷ்டிதம்
தான் உதவக் காணும் இவளுக்கு நினைவு
குலசேகர ஆழ்வார் ராமருக்கு உதவ போனது போலே
மாய சகடம் கிரித்ரிம சகடம் மாய உதைத்த மணாளர்
குழந்தை மணாளரா  நாள்களோ நாள் ஐந்து திங்கள்
இவ்வபதானத்தை காட்டி இவள் தோற்று
சீதைக்கு வில்லை முறித்து காட்டியது போலே
சூர்பணகை விட்டது போலே -அநர்த்தம் விலைக்க உயிர் உடன் விடாதே
மஹோ உபகாரன் -தன்னை ரஷித்து
நிசர்க்கம் வாசனை பிரியாத குழல்  சர்வ கந்த -இவள் சம்பந்தத்தால்
இத்தலையை இட்டு வாசம் செய் பூம் குழல்
பும்ஸ்த்வம் காட்டி இவள் உடைய ஸ்த்ரீச்த்வம் அபஹரித்து கொண்டான்
மாண்பு -அழகு பெண்மை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.