ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்-1-6-7-

———————————————-

வியாக்யானம்-
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்-
நீதி யல்லாதன
நெஞ்சினால் நினைந்தும்
வாயினால் மொழிந்தும்
செய்தும்-

கீழே எல்லாம் தாம் செய்த தப்புக்களை சொல்லிப் கொடு போந்தார்
அவற்றை எல்லாம் திரளச் சொல்லுகிறார் ஆயிற்று –

நீதி அல்லாதன -என்று
மநோ -வாக் -காயங்கள் -மூன்றாலும்
நிஷித்தங்களையே அனுஷ்டித்துப் போந்தவர்கள்
முடிந்தால் போம் வழி உண்டு – நரகத்துக்கு போம் வழி
அத்தைக் கேட்டு துளக்கினேன் –

தொல் நெறி –
பரம பதத்துக்கு போம் வழியோபாதி
இதுவும் பழையது இறே ( ஸூக்ல கிருஷ்ண மார்க்கங்கள் சாஸ்வதம் -ஸ்ரீ கீதை )
இனி அதில் இதுக்கு வாசி ஆள் ஒழுக்கு உறாமை இறே –

கேட்டே துளக்கினேன் –
அனுபவித்தது அன்றிக்கே ஸ்ரவண வேளையிலே நடுங்கினேன்
அதின் பலத்தையும் புஜிக்கும் அத்தனை அன்றோ -என்ன –

விளங்கனி இத்யாதி –
பலத்தை உதிர்த்தது
பல அனுபவம் பண்ண வேண்டா என்று கருத்து-

விளங்கனி முனிந்தாய்-
கனியாகிற அசுரனை நிரசித்தவனே
விரோதி நிரசன ஸ்வபாவனான நீ
என் விரோதியையும் போக்க வேணும் என்கிறார்-

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா-
வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்-

அடியேன் என்று அஹ்ருத்யமாய்
நான் ஒரு உக்தி மாத்ரமாய் சொல்ல
அத்தை ச ஹ்ருதயமாக்கி
நித்ய ஸூரிகளுக்கே உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்க கடவ நீ
என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து
விடாதே இருந்தாய் –

தானவர்க்கு -இத்யாதி –
அஸூர வர்க்கத்துக்கு என்றும் ஒக்க நஞ்சான தேவரீர்
உன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –

நைமி சாரணி யத்துள் எந்தாய் –
நன்னெறி காட்டுகைக்கு அணித்தாக -நீ வந்து இருந்தாய்
தொல் நெறிக்கு எதிர் தட்டாய் அத்தை ஆயிற்று நினைக்கிறது-

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: