ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

(அஹிம்சா பிரதமம் புஷ்பம் -உண்டே -ஹிம்சிக்காமல் இருந்தீரோ என்ன)
அத்தனையோ
இன்னும் செய்தது உண்டோ என்ன
கை தொடனாய்க் கொன்றே போந்தேன்
என்கிறார் –
(கை தொடாமல் ஸஹாயம் இல்லாமல் நானே செய்து போந்தேன்
பர ஹிம்சைக்காக ஓடியும் வருந்தியும் முயன்றும் இருந்தேனே -ஞான ஹீனனாய் போந்தேன் –
சர்வம் ப்ரஹ்மாத்மகம் என்று அறிந்தேன் அல்லேன் )

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

கோடிய-நல் விஷயத்தில் இருந்தும் விலகி –

——————————————————-

வியாக்யானம் –
கோடிய மனத்தால் –
அனுகூல விஷயத்திலும் நெஞ்சு விலகியாயிற்று இருப்பது –

சினத் தொழில் புரிந்து –
மறச் செயல் செய்து –

திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு –
ஹிம்ஸ்ர பதார்த்தங்களோடே -வேட்டையாடித் திரிந்தபடியைச் சொல்லுதல் –
தண்ணியவர்களோடே கூடி விளையாடிக் களித்து திரிந்தபடி யாதல் –

ஓடியும் –
ஒருவனை ஹிம்சிக்கலாம் பதின் காத மாறு போகலாமோ -என்றால்
தட்டுப் பாராதே அவ்வளவும் ஓடியும் –

உழன்றும் –
ஹிம்சித்ததாம் போது -சால வருந்த வேணும் என்றால்
அப்படி வருந்தி வ்யாபாரித்தும் –

உயிர்களே கொன்றேன் –
ப்ராண விஸ்லேஷ பர்யந்தமாக்கிப் போந்தேன்
புடைவை யுரிந்து விட்டிலேன் –

உணர்விலே –
சர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்றும்
இச்சாண் சந்தையும்-(சொல்ப வாக்கியமும்) நெஞ்சிலே படாத போது
செய்யாதது உண்டோ-

ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்-
என்று வஷ்ய மானத்தை உத்தேசித்து சொல்லுகிறதாகவுமாம்

அன்றிக்கே
கீழோடு சேரவும் அருளிச் செய்வர்
யமனுடைய ஆஞ்ஞை நடவாதபடி அத்தை வென்றேன்
யமபுரத்தை வென்றேன் -என்றபடி
(யமன் வேலை போகும்படி -புதிய எமனை நிர்மாணிக்கும் படி )

அன்றிக்கே
கீழோடு ஆன போதே
இவனை நலிய இவன் மாட்டான்
வேறு ஒரு படை வீடும் ஒரு புதுக் கோமுற்றவனும் விட வேணும்
என்னும்படி
பாபங்களையே பண்ணிப் போந்தேன் -என்னுதல்

பரமனே –
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே
ஔதார்யம் பண்ணும் இடத்தில்
உன்னுடன் ஒக்க-அவ்வருகே- ஒருவர் இல்லாதபடி
இருக்கிறவனே –

பாற் கடல் கிடந்தாய் –
அதுக்கு உறுப்பாக
அடுத்து அணுக்காக
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினவனே-

நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் –
பர ஹிம்சையே பண்ணி
தோற்றின படி திரிந்து
அதுக்கு வரும் பலத்தை கேட்டு அஞ்சி
அநந்தரம்
நமக்கு ஒரு புகல் ஏதோ
என்று ஆராய்ந்து
திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –

நைமி சாரணி யத்துள் எந்தாய்—-
நான் நாடிக் கிட்டினேன் ஆக நினைத்து இருந்தேன்
நீ எனக்கு முன்பே நாடி
(ஜிதந்தே புண்டரீகாஜ -பூர்வஜ-என்கிறபடியே )பூர்வஜனாய்
திரு நைமி சாரணி யத்திலே
வந்து சந்நி ஹிதனானாய்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: