ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவமாவிக்கு மகம் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமனாதி யெம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும்தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே —————–1-2-8-

——————————————————————————————————————————————————————

இரவு-இத்யாதி
சோலைச் செறிவாலே பகல் போது காண ஒண்ணாமையாலே ராத்ரியே விஞ்சி இருக்கும் –
பகல் விரவாத -கூடாத -ராத்ரியாய் இருக்கும் –
ஹேது மாறாமையாலே காரியமும் மாறாது இ றே –
ஆதித்ய கிரணங்கள் புகுந்து பரம்பாது பகலாயே  இருக்கிற அதுவும் –
இருள் பெருகிய வரை முழை –
இருளாய் இருக்கிற மலை முழைஞ்சுகளிலே –
வயிரம் பற்றின இருளாய் இருக்கை –
நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணினாரைப் போலே –
அடிப்பட்டு இருக்குமாயிற்று இருளும் –
ஆக
ராத்ரியே அத்தால் இருள் மிக்கு இருந்துள்ள மலை முழைஞ்சுகளிலே
இரும் பசியது கூர –
வெளி கண்டு புறப்பட்டு வ்யாபரிக்கப் பெறாமையாலே பெரிய பசியானது மிக

நித்ய சூரிகள் அன்ன பாநாதிகள் ஒழிய ஆதரிக்கும் அதுவே உத்தேச்யமாய்
அவர்கள் தாங்களுக் உத்தேச்யராய் இருக்குமா போலே
அந்த சர்ப்பங்களினுடைய பசியும் –
திர்யக் ஜாதிக்கும் அவ்வருகாய் இருக்கிற சர்பங்கள் தானும் உத்தேச்யமாய்
இருக்கிற தாயிற்று இவருக்கு –
ஏதேனுமாக அந் நிலத்தில் உள்ளதாம் இத்தனையே வேண்டுவது இவர்க்கு ஆதரிக்க –
அரவம் ஆவிக்கும்
ஆவிக்கையாவது -பசியாலே கொட்டாவி கொள்ளுகையாகவுமாம் –
அன்றிக்கே
ப்ராணிக்கையாய் -மூச்சு விடுகையாய் -அதாவது
சோலையின் பரிமளத்தோடு கூடின காற்றை யாஸ்வசித்து தரியா நிற்கும் –
வாயுவை இ றே அவை பஷிப்பது –
முக்தர் சத்யகாமாதிகளை உடையராய் இருக்குமா போலே
அங்குத்தை சர்ப்பங்கள் சஞ்சார யோக்யதை இல்லாமையாலே
கிடந்த இடத்தே கிடந்தும் -அத்தை ஆக்ராணம் பண்ணித் தரியா நிற்கும் –
அகன் பொழில் உண்டு
அகவாயில் பொழில் உட் சோலை அது அணைந்து இருந்துள்ள அருவரை இமயத்து-

பரமன் இத்யாதி –
சர்வ சமாஸ்ரயணீயன் வந்து வர்த்திக்கிற தேசம் ஆகையாலே நமக்கு
ஆஸ்ரயணீய ஸ்தலமான பின்பு -நெஞ்சே –
அங்கே சென்று கிட்டப் பாராய் என்கிறார் –
சர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான
தேசம் ஆயிற்று
பரமன் இத்யாதி –
ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள் உடைய பாசுரம் இருக்கிறபடி
சர்வாதிகனாய் -தனக்கு அவ்வருகு ஒருவரும் இல்லாதபடி இருக்கிற -சர்வேஸ்வரன் –
சர்வாதிகன் ஆகிலும் பெற்ற தாயால் விட ஒண்ணாதாப் போலே விட ஒண்ணாத  உடையவன்
விஷயங்களை விரும்புவது ஒரு ப்ராப்தி கொண்டு அன்று இ றே
கீழ் சொன்னவை இரண்டும் இல்லை யானாலும் விட ஒண்ணாத படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
என்று எண்ணி இத்யாதி –
இப்படி சொல்லா நின்று தேவர்கள் தங்களுக்கு கண் காட்டியான ப்ரஹ்மாவோடே
சென்று ஆஸ்ரயிக்கும் படி –
மஹா ப்ரபாவமான பிரிதி சென்று அடை நெஞ்சே –
சிறியார் பெரியார் என்ற வாசி அன்றிக்கே எல்லாருக்கும் உத்தேச்யமான தேசம் –
சிறியாருக்கு வாசி உண்டு
சர்ப்பங்கள் கிடந்த இடத்தே கிடந்தது அபிமதம் பெற்று புஜியா நிற்கும் –
ப்ரஹ்மாதிகள் தங்கள் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயித்து தட்டித் திரிவர்கள் –
புறம்படைய சோலைச் செறிவாலே வந்த விருட்சி மிக்கு இருக்குமா போலே
உள்ளடைய ஆஸ்ரயிக்கிற தேவர்கள் உடைய நெருக்கும் மிக்கு இருக்கும் –
ஆனபின்பு நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –

இத்தால் அங்கு உண்டான சர்ப்பங்கள் அச் சோலையில் பரிமளத்தை காற்று வழியாலே
பருகி தரியா நிற்கும் –
ப்ரஹ்மாதிகள் -சர்வ கந்த -என்கிற வஸ்துவை அனுபவித்து தரிப்பர்கள்-

———————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: