ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான்இடறிச்
சேரும் நல்வளம் சேர்பழனத் திருக்கோளூரிக்கே
போருங் கொல்? உரையீர் கொடியேன் கொடி பூவைகளே!
பொ-ரை :- ஊரிலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களும் உலகத்திலுள்ளவர்களும், தன்னைப்போலவே, அவனுடைய திருப்பெயர்களையும் திருமாலைகளையும் பிதற்றும்படியாக, சிறந்த கற்பினையும் காற்கடைக்கொண்டு, நல்ல வளப்பங்கள் சேர்ந்திருக்கின்ற வயல்களையுடைய திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்திற்குச் சென்று சேர்கின்ற, கொடியேனுடைய பூங்கொடி போன்ற என்மகளானவள் மீண்டு வருவாளோ? சொல்லுங்கோள் என்கிறாள்.
வி-கு :- பூவைகாள்! ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றத் திருக்கோளூர்க்குச் சேரும் கொடியேன் கொடி போருங்கொல்? உரையீர் என்க. கற்பு வான் இடறித் திருக்கோளூர்க்குச் சேரும் கொடி என்க. பூவை – ஒருவகைப் பறவை. போரும் – போதருதல்.
ஈடு :- இரண்டாம்பாட்டு. 1திருக்கோளூர்க்கே போய்ப் புக்க என் பெண்பிள்ளை மீண்டும் வருமோ? சொல்லீர்கோள் என்று பூவைகளைத் திருத்தாயார் கேட்கிறாள்.
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற – 2இந்த இருப்பில் என்ன குறை உண்டு? இங்கே ஒரு குறை உண்டாய், அங்கே அது தீரப் போனாளோ? இங்கே, போதயந்த: பரஸ்பரம் பண்ணுகைக்கு ஆள் இல்லாமை “எங்குப் பழையர்களாய் விளங்குகின்ற சூரிகள் வசிக்கின்றார்களோ” -“யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷசூக்தம்.-என்று ஓதப்படுகிற ஒரு தேச விசேடம் தேடிப் போனாளோ?
குற்றமற்றவனாய்ப் பூர்ண சாம்யத்தை அடைகிறான்” –புண்யபாபே விதூய நிரஞ்சந: பரமம் ஸாம்யம் உபைதி”
என்பது, முண்டகோபநிடதம். 3 : 1.-என்று அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களாயிருக்கும்படி செய்தாற்போலே அன்றோ, இங்குள்ளாரை இவள் தன்னோடு ஒக்கப் பண்ணினபடி. ஊரும் நாடும் உலகமும்-2 தான் இருந்த ஊரும் அதனோடு தோள் தீண்டியான நாடும் அதனோடு சேர்ந்த உலகமும். ஸ்ரீராமாவதாரத்திலும் ஓர் ஊரேயன்றோ திருந்திற்று; இங்குச் சம்சாரமாகத் திருந்நிற்றுக் கண்டீர் என்கை. 3இன்று நம்மளவும் வர வேறிப் பாயும்படி அன்றோ இவள் சம்பந்தம் வெள்ளம் இட்டபடி. 4“பகவத் பக்திக்கு மேட்டுமடையான சம்சாரத்திலே ஈசுவர அவதாரம் போலே ஸ்வயம் பிரயோஜனமாக அவதரித்தவராய்ப் பரமப் பிரயோஜன ரூபமாய் நிறைவுற்றிருக்கின்ற பக்தி யோகத்தையுடையவர்’-லோகே அவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய நாதமுநயே யமிநாம் வராய”-என்பது, தோத்திரரத்நம். 3.–
என்னும்படியே, எல்லா மேடுகளிலும் ஏறிற்று என்கை. 5காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி – சிற்றஞ் சிறு காலையிலே பறவைகளுங் கூட எழுந்திருந்து, அவன் இவள் பக்கல் பிச்சு ஏறி வரும்படியைச் சொல்லாகின்றன. தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்து ஏற வரும்படியைச் சொல்லி.
தன்னைப்போல் அவனுடையபேரும் தார்களுமே பிதற்ற – 1அவன் மயர்வுஅற மதிநலம் அருள வந்த பிதற்றே அன்றோ இவளது; இவள்தான் அடியாக வந்த பிதற்றே அன்றோ இவர்களது; பிதற்று தலாவது, நினைத்துச் சொல்லுகை அன்றியே, பகவானுடைய குணங்களிலே மூழ்கி உணர்த்தி அற்றுச் சொல்லுதல். 2“இந்த அர்த்தமானது ஜமதக்னியின் பிள்ளையான பரசுராமனுடைய பிதற்றுதலில் நின்றும் கேட்கப்பட்டது”-“ஸ்ருதோயம் அர்த்தோ ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:”-என்பது, பாரதம் மோக்ஷதர்மம். 34.– என்கிறபடியே. அவனுடைய பேரும் தார்களும் பிதற்றுதலாவது,3 “சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்” – திருவாய்.- 4. 2 : 9.-என்பது, “தேவதேவபிரான்”-, திருவாய். 6. 5 : 2-என்பது, “விரைமட்டு அலர் தண்துழாய்”-திருவாய். 2. 4 : 9.– என்பதாகை. வான்கற்புஇடறி-4 வானான கற்பை இடறி. சூருவரால் கடக்க ஒண்ணாத மரியாதையைக் கடந்து. மலை போல இருக்கிற மரியாதையை, காற்கீழே அகப்பட்ட தொரு சிறிய கல்லை இடறுமாறு போலே இடறி. 5பெருவெள்ளமானது, சிறிய கரைகளோடு பெரிய கரைகளோடு வாசி அற ஏறுமாறுபோலே, நாணம் மடம் அச்சம் தொடக்க மானவற்றை மதியாதே போதல்.அன்றிக்கே, கற்புவான் இடறி என்பதற்கு, வலிய அறிவினை இடனி என்றும் சொல்லுவர்கள். அப்போது, கற்பு என்று கல்வியாய், அதனாலே அறிவினைச்சொல்லி, வான் என்று வலியைச் சொல்லிற்றாகிறது. அன்றிக்கே, பெரிய ஞானத்தை இடறி என்றும் சொல்லுவர்கள். அப்போது, கற்பு என்று கல்வியாய், அதனாலே ஞானமாய், வான் என்று பெருமையாய், பெரிய ஞானத்தை என்றபடி. 2ஆசைக்கு ஓர் அளவு உண்டாகில் அன்றோ ஓர் அளவிலே தடை நிற்பது. 3”காவலும் கடந்து” – பெரியாழ்வார் திருமொழி. 3. 6 : 1.-என்னக் கடவதன்றோ. “யயௌச காசித் ப்ரேமாந்தா —யயௌச காசித் ப்ரேமாந்தா தத்பார்ஸ்வம் அவிலம்பிதம்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 19.- ஒருத்தி புறப்பட்டுப் போனாள்; இவளைக் கொண்டு போனார் யார்? என்னில், அன்பினாலே வந்த இருட்சி வழிகாட்டப் போனாள்.” 4“குரவ: கிங்கரிஷ்யந்தி தகதாநாம் விரகாக்நிநா –“குரவ: கிம் கரிஷ்யந்தி” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 22.– குருக்கள் கண்டீர் என்ன, வெந்து விழுவதற்கு ஒரு குடநீர் சொரியவல்லர்களோ?”
சேரும் நல்வளம் சேர்பழனம் திருக்கோளூர்க்கே போரும் கொல்-5இங்கே அசலைக் காக்க இருக்கிறவள் அங்கே தன் வயிறு வளர்க்கப் போவதே! இங்கே பிறர் திருந்தும்படி இருக்கிற இவள் அங்கே திருந்தின இடம் தேடிப் போவதே! தன்னைக் கண்டு பிறர் வாழ இருக்கிற இவள், தான் அவனைக்கண்டு வரழப்போவதே! ஒத்தவையான நல்ல செல்வங்கள் சேர்ந்திரும்பதாய், நீர் நிலங்களையுமுடைத்தாயிருக்கிற திருக்கோளூ ராதலின் ‘சேரும் நல்வளம்சேர்’ என்கிறாள்.
போருங்கொல் என்றது, புகுங்கொல் என்றபடி. அன்றிக்கே, இவளுக்கு முன்னே தன் நெஞ்சு முற்பட்டபடியாய், அங்கே இருந்து வழியில் ஒரு குறையும் இன்றியிலே அவள் வருமோ? என்கிறாளாகவுமாம். அன்றிக்கே, நல்வளம் சேர் பழனம் திருக்கோளூர்க்கே சேரும் கொடி போருங்கொல்? என்று கூட்டி, பூவைகாள் உரையீர் என்னலுமாம். என்றது, மீண்டு புறப்பட்டு வரவல்லளோ? சொல்லீர் கோள் என்கிறாள் என்றபடி.
கொடியேன் – இவளைப் பெறுகைக்குப் புண்ணியம் செய்து வைத்து, இவள் அளவினை உங்களைக் கேட்கவேண்டும்படியான பாவத்தைச் செய்துள்ளேன். கொடி-கொள்கொம்பை ஒழியில் தறைப்படும். 2கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும்மனம் அன்றோ. –இரண்டாந் திருவந். 27.-அன்றிக்கே, 3பெற்ற என்னையும் விட்டு வேறேயும் ஒரு பற்றுக்கோடு உண்டாம்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்பாள் ‘கொடியேன்கொடி’ என்கிறாளாகவுமாம். 4பெற்ற தாயாரை விட்டு அகலுதல் குடியின் தன்மை போலே காணும். பூவைகாள் போருங்கொல் உரையீர் – பெற்ற தாயரை விடலாம்; அத்தனை அல்லது, பிறந்தாரைக் கைவிடப் போகாது என்றிருக்கிறாள் காணும் தன்னை இட்டு. போக்குவரத்து எனக்கு அன்றோ சொல்லலாகாது, உங்களுக்கு ஒதுக்காதே சொல்லுமே; வயிற்றிற் பிறந்தார்க்கு ஒளிப்பார் இலரே. உரையீர்-5 அவள் சொல்லிப் போகச் செய்தே இவைசொல்லாது இருக்கின்றன என்று இருக்கிறாள் காணும். 1போருங் கொல் என்ற ஐயத்துக்குக் காரணம், பாவியான நான் இருக்கையாலே மீளாது ஒழியவும் கூடுமே, நீங்கள் இருக்கையாலே மீளவும் கூடும் அன்றோ என்ற எண்ணம் என்க. என்றது, பாவமே பிரபலமாய் வாராது ஒழியுமோ? உங்களைப் பார்த்து வருமோ? சொல்லீர் கோள் என்கிறாள் என்றபடி. 2அறிவித்துப் போனாளாகில் ஸ்ரீராமவதாரத்தைப் போலே உலகமாகப் பின்தொடரும் அன்றோ; சுற்றமெலாம் பின்தொடர அன்றோ போயிற்று.
சுற்றமெலாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே!
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே!
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா! தாலேலோ- என்பது பெருமாள் திருமொழி.
புக்கு மீள வருமோ
பூவைகளை கேட்கிறாள் தாயார்-
கொஞ்சம் சங்கை
மீள வருமோ -பூவைகளை பார்த்து கேட்க –
தன்னைப் போலே
ஊர் கிராமம்
நாடு தேசம்
உலகம் எல்லாம்
பேரும் தாரும் -பிதற்றி
அடக்கம் இன்றி பேசும்படி –
கொடியேன் –
இவள் வைபவம் தன்னைப் போலே பித்து பிடிக்க வைத்து –
என்ன குறை உண்டு இங்கே
அங்கே எதற்கு போக வேண்டும் -குறை தீர்க்க போனாளா
போதயந்த பரஸ்பரம் ஆள் இல்லாமையாலா
துஷ்யந்திச ரமந்தியச்ய -இருவருக்கும் சந்தோஷம்
ஒருவருக்கு ஒருவர் தெரிவித்து கொண்டு -தன்னைப் போலே பிதற்ற
தேச விசேஷம் தேடித் போனாளா
பூர்வே -முக்தர் போலே இன்றி -பூர்வே சாத்யா -நித்யர் எப்பொழுதும் உண்டே
பரமம் சாம்யம் -அவன் செய்து அருளினது போலே இவள் இங்கே
தன்னையே நாளும் வணங்கி தொழுவாரை தம்மையே ஒக்க அருள் செய்வான்
இவர் அங்கே போக வேண்டிய அவசியம் இல்லையே
ராம அவதாரம் ஒரு ஊரை இ றே
அயோதியை வாழும் சராசரங்களை நல் பாலுக்கு உய்ந்தனன்
நம்மளவும் வர -மேடுகளில் ஏறிப் பாயும்படி
நாத முனி பக்தி யோகம் அனைவருக்கும் கொடுத்தார்
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவை சொல்லி மருள் பாடுதல்
திர்யக்குகளும் -ப்ரஹ்ம மூகூர்த்தம் எழுந்து
அவன் இவள் பக்கல் பிச்சேற்றி வந்ததை சொல்லா நின்றன
இவள் இருந்த இடத்தை தேடி அவன் வர
இங்கே இவள் அங்கே போக
மயர்வற மதி நலம் அருளி -இவர் பிதற்ற
ஆழ்வார் அருள இவை இவர்கள் பிதற்ற
திவ்ய ப்ரபந்தம் கற்க ஆசை ஆழ்வார் அனுக்ரகத்தால் தானே வரும்
இவள் அடியாக வந்த பிதற்றல்
நினைத்து சொல்லாமல் -உணர்ச்சி அற்று சொல்லும் படி -பகவத் குணங்களில் அவகாகித்து
சங்கு சக்கரம் -திரு துழாய்
தேவ தேவன் பிதற்ற அடையாளம் காட்டி
ஜல்பம் –
சிறந்த கற்பை இடறி -மரியாதை கடந்து
திருக் கோளூருக்கு இவளே போக -படி தாண்டா பத்னி
கட்டுப்பாடு கடந்து
மலை போலே உள்ள மரியாதையை வான் கற்பு இடறி கால் கீழ் உள்ள கல்லை இடறுமா போலே
பெரிய வெள்ளம் தாண்டி போகுமா போலே
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு
கற்பு ஞானம் என்னவுமாம்
வான் பெரிய பெருமை
அபிநிவேசம் அளவு இன்றி -செயலிலும் அளவு இன்றி போக
எங்கும் காவல் கடந்து கோபிகள் போனது போலே
கயிறு மாலையாகி
மனஸ் ஆசை தூண்ட
இருட்டு வழி காட்ட -பிரேமத்தால் வந்த இருட்டு -அபிமாத்ரா ப்ரேமம்
விரகம் நெருப்பு எரிக்க -பெரியவர்கள் என்ன -செய்வார்கள் அந்த அர்த்தம் இல்லை
நெருப்பு அணைக்க அவன் இடம் தன போக வேண்டும்
வெந்து -குடம் ஜலம் கூட இவர்கள் சேர்க்க மாட்டார்கள்
கண்ணன் இடம் போய் சேர்ந்தார்கள்
நல் வளம் சேர் -சேரும் –
இங்கே பலருக்கு ஜீவனம் கொடுத்தவள்
அங்கே தான் மட்டும் அனுபவிக்க போனாள் -தான் வயிறு வளர்க்க போனாள் –
இங்கே பிறர் திருந்தும்படி இருக்க
அங்கே தான்
தன்னைக் கண்டு பிறர் வாழ இங்கு
அங்கு அவனைக் கண்டு இவள் வாழ
சேர்ந்து இருக்கிற வளம் -சத்ருசமான சம்பத்
வைத்த மா நிதி
நிஷேப வித்தன் -வைத்த மா நிதி
ஆரா அமுதன் அழகு அபரியாம்ர்தம் இல்லையே
புகும்
இவளுக்கு முன்னே தனது நெஞ்சு போக
வழியில் மயங்காமல் இருப்பாளா
அவள் போவது நிச்சயம்
இங்கே மீண்டு வருவது தான் சங்கை –
பூவைகள் -மீண்டும் புறப்பட்டு வருவாளா
கொடியேன் -உங்களைக் கேட்கும் படியான பாவம்
கொடி பெண் பிள்ளை
லதா –
மரம் தேடி போகும்
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி போகும் மனம்
திருக் கோளூர் எம்பெருமானை தேடி போனாள் இந்த கொடி
பெற்ற தாயாரை விட்டு அகலுகை குடி ஸ்வாபம் போலும்
பெரியாழ்வார் நல்லதோர் தாமரை பொய்கை -விஷ்ணு சித்த் நாயகி
கள்வன் கொல் -உண்டு இ றே
பிறந்தாரை கை விட முடியாதே
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்
போக்கு வரத்து எனக்கு அன்றோ சொல்லல் ஆகாது
நீங்கள் சொல்லலாமே
வயிற்றில் பிறந்தாரை ஒளிக்க முடியுமா
பூவைகள் வாய் திறக்க வில்லை
உங்களை பேச கூடாது சொல்லி போனாளா
பாவியேன் நான் இருக்கையாலே மீளா இருக்கலாம் -நீங்கள் இருப்பதால் மீளலாமே
என்னைப்பார்த்து வாராது ஒழியுமோ -உங்களைப் பார்த்து வருவாளோ
ராமன் அறிவித்து போனான்
இவன் சொல்லாமல் போக
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அகன்றவனே
அயோதியை வாசிகள் பின்னே போக
கானம் அடைய வில்லை கங்கை கரைக்கு தான் போனார்கள்
இளைய பெருமாள் சுற்றம் எல்லாம் செய்யும் கைங்கர்யம் செய்ததால்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றான் இ றே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.