ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3-

(சேமம் -க்ஷேமம்
விஷய சபலனாய் -உஜ்ஜீவனத்துக்கு ஆள் இல்லாமல்
நான் உய்ய நான் கண்டு கொண்டேன் -ஒன்றும் வழி இல்லா நான் அன்றோ -என்பதால் இரண்டு நான்)

வியாக்யானம் –
சேமமே வேண்டி-
சத்ருக்களால் ராஜாக்கள் உள்ளிட்டாரால் நமக்கு ஒரு நலிவு வாராது ஒழிய வேணும்
எல்லாராலும் ரஷை பெற்று செல்ல வேணும் என்று ஆயிற்று நெஞ்சால் நினைத்து இருப்பது

தீவினை பெருக்கி-
ரஷையே பெற்றுச் செல்ல வேண்டும் என்று இருந்தால் அது சபலமாம்படியான
சத் கிரியை பண்ணாதே பாபத்தை யாயிற்று கூடு பூரிப்பது

தெரிவைமார் உருவமே மருவி –
நல்லதையே வேண்டி இருக்கும் காட்டில் அது வாராதே
செய்ததின் பலம் இறே வருவது –
பண்ணி வைத்த பாபங்கள் கொடு போய் விஷயங்களிலே மூட்டும்

உருவமே மருவி –
அகவாயில் இழயில் த்யஜிக்கலாம் இறே
அகவாய் நஞ்சாய் -ஸ்வ கார்ய பரராய் இறே இருப்பது
அகவாயிலே இழியில் அநாத்ம குணம் கண்டு மீளலாய் இருக்கும் இறே
வடிவில் தோஷங்களை மறைத்து இறே வைப்பது

மருவி –
அத்தையே ஸூபாஸ்ரயமாக மனனம் பண்ணியாய் இற்று இருப்பது-

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஊமனார் -ஊமைகள்
ஊமை கண்ட கனவிலும் பழுதாய்
ஊமை கண்ட கனா வாய் விட மாட்டான் இத்தனை நினைத்து இருக்கும்
அங்கனும் அன்றியே நெடுநாள் அனுபவித்துப் போந்த விஷயங்களில் போய் இருந்து
அநந்தரம் நினைத்து இருக்கைக்கும் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

அங்கன் அன்றிகே
ஊமை கண்ட கனா வாய் விட மாட்டிற்றலன் ஆகிலும் நினைத்து இருக்கலாம்
இவை நினைக்கில் பய அவஹம் ஆகையாலே நினைக்கவும் ஒண்ணாது என்கை
ஸ்ம்ருதி விஷயமாவது ஒன்றும் இல்லை
ஸ்ம்ருதி விஷயம் ஆயிற்றது உண்டாகில் பயாவஹமாய் இருக்கும்

ஒழிந்தன கழிந்த அந்நாள்கள் –
நமே துக்கம் ப்ரியாதூரே நமே துக்கம் ஹ்ருதேதிவா ஏததேவா நுசோசாமி
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே–யுத்த-5-5-
பிரியையாவாள் தூர இருந்தாள் என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்
அது நாலு பயணம் எடுத்து விடத் தீரும்
வலிய ரஷசாலே அபஹ்ருதை என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்
அது அவன் தலையை அறுக்கத் தீரும்
நமக்கு சோக நிமித்தமும் இதுவே
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே -போன காலத்தை அம்பாலே மீட்க ஒண்ணாதே

நீர் பற்ற சொல்லுகிற விஷயத்துக்கு இந்த தோஷங்கள் இல்லையோ என்ன –
காமனார் தாதை-
உருவமே மருவிலும் பசை போரும்
உடம்பைப் பற்றிலும் ஊதியம் போரும்-(ஊதியம்- விருத்தி கைங்கர்யம் )
தன் வடிவாலே நாட்டை யடைய பகட்டித் திரியுமவனுக்கும் உத்பத்தி ஸ்தானம்
தன் கையில் நாட்டார் படுவது அடங்க அவன் தான் இவன் கையிலே படும்
சாஷான் மன்மத மன்மத —

நம்முடை அடிகள் –
கீழில் விஷயங்களுக்கு சொன்ன குற்றம் இல்லாததுவே யன்று இதுக்கு வாசி
அவை அப்ராப்த விஷயம் -இது ப்ராப்த விஷயம்

நம்முடை அடிகள் -சர்வ ஸ்வாமி

தம்மடைந்தார் மனத்து இருப்பார் –
வடிவைக் காட்டித் துவக்கி -கையில் உள்ளது அடங்க அபஹரித்து உடம்பு கொடாதே
எழ வாங்கி இருக்கை அன்றிக்கே –
ஆசா லேசமுடையார் நெஞ்சு விட்டு போய் இருக்க மாட்டாதவன் –
கலவிருக்கையான ஸ்ரீ பரமபதத்தையும் விட்டு நெஞ்சே கலவிருக்கையாக-ராஜ தர்பார்- கொள்ளும்-

தம்மடைந்தார் மனத்து இருப்பார் -நாமம் –
இவ்வர்த்தம் இத்தனைக்கும் வாசகமான திருநாமம்
தேக குணமும்
சர்வ ஸ்வாமித்வமும்
சௌலப்யமும்
வாத்சல்யமும் இறே இதுக்கு அர்த்தம் ஆயிற்று

(தேக குணமும் -காமனார் தாதை
சர்வ ஸ்வாமித்வமும் -நம் அடிகள்
சௌலப்யமும் – தம்மடைந்தார் மனத்து இருப்பார் –
வாத்சல்யமும்-தம்மடைந்தார் மனத்து இருப்பார் -)

நான் உய்யக் கண்டு கொண்டேன் –
அசந்நேவ -என்று முடியும்படியான நான் உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்

நான் கண்டு கொண்டேன் –
இனிக் காட்சி இல்லையோ என்னும் படி கை கழிந்த நான் உத்தேச்ய சித்தி உண்டாகப் பெற்றேன்
இனி சத்தை உண்டாக மாட்டாது -காட்சி உண்டாக மாட்டாது -என்னும்படியான நான்
உஜ்ஜீவிக்கவும் பெற்று
நான்
காணவும் பெற்றேன் என்கிறார்

நான் உய்ய நான்-
என்று இருகால் சொல்லுகிறது
லாபத்தால் வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்லுகிறார்
(மன் மநாபவ இன்டக்ஹ்யாதி –நான் நான் என்று நம்மைப் பெற அவன் சொல்வது போலே )

நாராயணா என்னும் நாமம் –
சந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத் மன்யே யாத்மானம் பஸ்யேத் -ப்ருஹதாரண்யம்
என்று சமதமாத்யுபேதர் சொல்லக் கடவ திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவை மா உருவமே மருவி -என்று
அநாத்ம குணோபேதனாய் போந்த நான்
ஆத்ம குணோ பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன்

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: