ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம்
இவ் வாழ்வார் ஆகிறார் -ஆத்மாவை வெய்யிலிலே வைத்து உடலை நிழலிலே வைத்துப் போந்தார் ஒருவர் ஆயிற்று
ஆத்மாவை வெய்யிலிலே வைக்கை யாவது -பகவத் விஷயத்தில் முதலிலே இழியாமை
உடம்பை நிழலிலே வைக்கையாவது -அநாதி காலம் விஷய பிரவணராய் -அதுவே யாத்ரையாய் போருகை
நிழல் ஆவது பகவத் விஷயம் இறே -வாஸு தேவ தருச்சாயா -பார்த்த பார்த்த இடம் எல்லாம் நிழலாய் இருக்கை
எங்கும் ஒக்க நிழல் செய்த இந் நிழல் அல்லது புறம்பு ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கை-

நாதிசீதா நகர்மதா -நரகாங்கார சம நீ -தானே ஏறிட்டுக் கொண்ட நரகம் ஆகிற பெரு நெருப்பையும் அவிக்கவற்று –
சாகிமர்த்தம் ந சேவ்யதே -பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –
துக்க நிவர்த்தகம் அன்று என்ன ஒண்ணாது
வயிறு நோவா நின்றது சவி -என்பாரைப் போலே அநிச்சை சொல்லி கை வாங்கும் இத்தனை இறே உள்ளது –
அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை -பிரபத்தியிலே மாறாட்டமே உள்ளது –
இந் நிழலிலே இருந்து வைத்து ஒதுங்கிற்றிலேன் -என்பாரைச் செய்யலாவது இல்லையே

இவர் கண்ணால் காண்கிற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாது இருக்கிறார் ஆகில்
நம்மையும் அவ்விஷயங்களோபாதி இவர் கண்ணுக்கு இலக்காக்கினால் விரும்பாது
ஒழியார் இறே என்று பார்த்து
உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி
இவரை விஷயீ கரித்து
தன் படிகளை அடையக் காட்டிக் கொடுத்து
தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
இவரை அனுபவித்து
இங்கே இருந்தே பரம பதத்தில் உள்ளார் படி யாம்படி பண்ணி
அத்தேச பிராப்தியும் இவருக்கு பண்ணிக் கொடுத்தான் -என்கிறது இப் பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்

இவர் பக்கலில் அத்வேஷமும் விஷயங்களின் உடைய லாகவமே இவரை மீட்கைக்கு பரிகரமாகவும்
லாகவம் -அல்ப அஸ்த்ரத்வாதிகள் –
இவருடைய ரசிகத்வமே தன் வாசி அறிகைக்கு பற்றாசாகவும்
அநாதி காலம் பண்ணின பாப அம்சத்தை நம் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று பார்த்து
இவர் விஷயங்களின் வாசி அறிந்து தன்னை அறிகைக்காக
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
தனக்கு வாசகமான திருமந்தரம் முன்னாக
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அடங்கக் காட்டிக் கொடுக்க
கண்டு அனுபவித்து -அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீ கரித்தான்
என்று க்ருதஞ்ஞர் ஆகையாலே ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார்
பகவத் விஷயத்திலே நேர் கொடு நேர் செய்யல் ஆவது ஓன்று இல்லை
செய்ய வேண்டுவதும் ஓன்று இல்லை
பண்ணின உபகாரத்துக்கு கிருதஞ்ஞராம் இத்தனையே வேண்டுவது -அசித் வ்யாவ்ருத்தி தோற்ற-

————————————————————————–

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

நம் ஆழ்வார் சர்வேஸ்வரனை சாஷாத்கரித்த அநந்தரம் -தாம் பெற்ற பேறு அறியாதே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தாப் போலே
இவரும் பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பு தாம் கீழ் நின்ற நிலையை எல்லாம் அனுசந்தித்து
வாடினேன் -என்கிறார் -உலர்ந்தேன் என்னாதே வாடினேன் என்கிறார் -வாடி வாடும் இவ்வாணுதல் -பிராட்டி போலே
-வாடினேன்
கொம்பை இழந்த தளிர் போலே -ஆஸ்ரயத்துக்கு அழிவு இல்லாமையாலே –
இன்னும் நோக்குவோம் என்னில் -நோக்குகைக்கு யோக்யதை உண்டு என்கை –
அநந்ய ராகவோ அஹம் என்கிற பிராட்டியோடே பிராப்தி சகல ஆத்மாக்களுக்கும் உண்டான
பின்பு -இப்பிராப்தியை உணர்ந்தால் அநாதி காலம் இழந்தவருக்கு வாடினேன் என்னத் தட்டில்லை இறே
யஸ்ய ராமம் நபஸ் யேத்து -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே

யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்
யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –
ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்
எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும் பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்
எத்தைனையேனும் சிறியான் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையாலே எண்ணப் படும் எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச்செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது -அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –
திருக்கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே
வாடினேன் -என்கிற இது தான் எவ்வஸ்த்தையைப் பற்றி சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது -நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
விஷய ப்ராவண்யம் காதாசித்கமாய் அனுதாபம் பிறந்து மீளுகை அன்றிக்கே
அநாதி காலம் இதுவே யாத்ரையாய் போந்தது என்றும் -இவ்வளவு அன்றிக்கே இதுக்கு மேலே
விளைந்ததோர் அநர்த்தத்தை சொல்ல ஒருப்பட்டமையும் தோற்றுகிறது –

மேல் விளைந்த அநர்த்தம் தான் ஏது என்னில் –
வருந்தினேன் மனத்தால் –
மாநசமான க்லேசத்தை அனுபவித்து போந்தேன் –
இந்த்ரியங்கள் விஷயங்களிலே ப்ரவணமாய் -அவற்றை அனுபவிக்கக் கோலி அவற்றை லபியாமையாலும்
லபித்தாலும் அவற்றில் அனுபவிக்க லாவது ஓன்று இல்லாமையாலும் மாநசமான
க்லேசத்தை அனுபவித்துப் போந்தேன்
சர்வேந்த்ரியங்களுக்கும் கந்தமான மனஸை பிரத்யகர்த்த பிரவணம் ஆக்க மாட்டாமையாலே
மாநசமான க்லேசத்தை அனுபவித்தேன் -இத்தால் சொலிற்று ஆயிற்று
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணனாய் திருவடிகளை ஒரு நாளும் நினைக்கப் பெற்றிலேன் என்றபடி

பெரும் துயர் இடும்பையில் பிறந்து –
விஷயங்களிலே ருசியைப் பிறப்பித்து
வாசனையை உண்டாக்கி
ராகத்வேஷங்களை மிகுத்து
இதில் உண்டான அவித்யா கர்மங்களும் சரீர ஆரம்ப ஹேதுவாக வந்து பிறந்தேன்
துயர் என்று துக்கம்
இடும்பை என்றும் துக்கம்
இத்தால் சரீரம் தான் துக்க ஆயதநமுமாய் துக்க ஹேதுவுமாய் இருக்கும் என்கை –
துக்க ஆயதநமுமாய் மேலே அநேக துக்கங்களை விளைக்கவும் வற்றாய் இருக்கை-

பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடி வாடினேன் -என்னாதே முதலில் -வாடினேன் –
என்பான் என் என்னில் -கர்ம சம்பந்தம் அநாதியாய் -அசித் சம்சர்க்கமும் ப்ரவாஹ ரூபேண
நித்யமாய் இருக்கையாலே நடுவே ஒன்றைப் பிடித்து சொல்லுகிறார் –
பிறந்து –
ஜன்ம மரணங்கள் இல்லாத ஆத்மா -செத்தான் பிறந்தான் -என்று வ்யவஹாராஸ் பதம் ஆகையாலே
கூடினேன் –
நித்தியமாய் ஏக ரூபமாய் ஞாநாநந்த லஷணமாய் பகவத் சேஷமான ஆத்மாவை
தேவோஹம் மனுஷ்யோஹம் என்னலாம் படியான படி –

கூடினேன் –
அசித் சம்சர்க்கம் தான் சத்தா ப்ரயுக்தம் என்னலாம் படி பொருந்தின படி –
கூடினேன் -என்கையாலே இது தான் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்று ஔபாதிகம்
வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது
ராஜபுத்திரன் வழி போகா நிற்க வேடர் கையிலே அகப்பட்டாப் போலே இறே
ஆத்மாவுக்கு அசித் சம்சர்க்க்கம் தான் வந்தபடி
அய பிண்டத்தை அக்நியின் அருகில் வைத்தால் அக்நி பரமாணுக்கள் சூஷ்ம ரூபேண
அதிலே சங்கரமித்தாதல் -வாசனையாலே யாதல் -அதினுடைய ஔஷ்யண்ய ஸ்வபாவத்தையும்
நிறத்தையும் பஜித்து அது தான் என்னலாம் போலே -இவ்வாத்மாவும் அசித் சம்சர்க்கத்தாலே
அதுதான் என்னலாம்படி அசித் கல்பமான படி
பரமாணு பற்று சிவப்பு மாறினாலும் வாசனையாலே சுடும்-

கூடி –
சரீர விச்லேஷம் அசஹ்யமாம் படி பொருந்தின படி -ஞானம் பிறந்தால் சரீர விச்லேஷம் தான்
பிரார்த்தித்து பெற வேண்டும் படியான படி
கூடி -என்கையாலே அநாதி காலம் இத்தோடே பொருந்திப் போந்தமையும் இதுக்கு மேலே
ஓர் அநர்த்தம் விளைந்தது என்றும் தோற்றுகிறது -மேல் விளைந்த அநர்த்தம் தான் என் என்னில் –

இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன்
இளையவர் -சப்தாதி விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்று ஆராயவும் ஒட்டாதே
பகவத் விஷயத்தில் நன்மையை அறிந்து அதிலே மூளவும் ஒட்டாதே பருவத்தை இட்டு
பகட்டித் துவக்குவர்கள்

தம்மோடு –
சாயா ரச சத்வம் அனுகச்சேத் -என்கிற அதுவும் எல்லாம் இங்கே
நல்லதொரு பூமாலை கண்டால் தன் தலையிலே வைத்தல்
தன்னை ஒருவனாக நினைத்து இருத்தல் செய்யாதே
அவர்கள் போந்த அடி வழியே போம் இத்தனை –
யேந யேந தாதா கச்சதி தேந தேந சஹ கச்சதி -என்கிறதுவும் எல்லாம் இங்கே –

அவர் தரும் கலவி –
கிட்டின போது சிறிது வார்த்தை சொல்லி இருந்து இனி இவன் கைப்பட்டான் என்று அறிந்தால்
தங்களைக் கொண்டு எழ வாங்கி இருப்பர்கள்
கலவியே கருதி –
அனுபவித்து என்பது அனுபாவ்யம் தான் உண்டாகில் இறே
இவனுடைய மநோ ரதமே ஆகையாலே -கருதி -என்கிறது
மநோ ரதம் தான் மாறாது இறே
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீள இறே அடுப்பது
அவர்கள் இறாய்க்க இறாய்க்க -நன்மை உண்டு -என்று மேன்மேலும் மநோ ரதம் செல்லா நிற்கும் ஆயிற்று –
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே –
ஒரு விஷயத்தில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீளலாம் இறே
அத்தை விட்டு மற்று ஒன்றை அறியப் போய் அதிலும் ஒன்றும் காணா  விட்டால்
பின்னையும் அவ்வருகே போகா நிற்கும் இத்தனை இறே –
ஓடினேன் -விஷயங்கள் தன்னில் அரை ஷணம் கால் தாழப் பண்ண வல்லதொரு விஷயம் தான் இல்லை இறே

போக உபகரணம் கொண்டு புக்கு ஸ்நானத்துக்கு ஈடாக புறப்படும் விஷயம் இறே
இவற்றின் தோஷத்தை தானும் அறிந்து -அத்தை மறைக்கைக்கு ஈடான போக உபகரணங்கள்
கூட்டிக் கொடுத்து இறே தானும் அனுபவிக்க புகுவது
ப்ரத்யஷம் கிஞ்சித்கரமாகிற விஷயம் இறே -இவற்றின் உடைய தோஷம் தான்
சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாதே கண்ணாலே காணலாம்படி இருக்கச் செய்தே
கண்டு மீள ஒண்ணாதபடி இருக்கிறது இறே
விஷய ப்ராவண்யம் ஆவது பாம்பு படத்தை விரித்துக் கொண்டு நின்றால் அது அள்ளிக் கொள்ள
புகுகிறது அறியாதே அதன் நிழலிலே ஒதுங்கத் தேடுமா போலே இருப்பது ஓன்று இறே
உயிர்க்கழுவிலே இருந்தவன் பிபாசையும் வர்த்தித்து தண்ணீரும் குடித்துப் பிறக்கும் சுகம்
போலே இறே விஷய அனுபவத்தால் பிறக்கும் சுகம் ஆகிறது
துக்கங்களிலே ஒன்றை சுகம் என்று நிர்வசித்து கொள்ளுகிறான் இத்தனை இறே
சுக பாவைக லஷணா -என்கிற அதுவே இறே சுகம்

ஓடி
முன்பு எல்லாம் இப்படி யாய் போரச் செய்தே ஒரு நன்மை உண்டாயிற்று என்று தோற்றுகிறது
சர்வ சக்தி ரஷிப்போம் -என்று கை நீட்டி எடுக்கப் பார்த்தாலும் எட்டாதபடி கை கழியப் போனேன்
உய்வதோர் பொருளால் –
விஷயங்களிலே கை  கழிய போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் -இனி இவன் தானாக
மீள மாட்டான் -என்று அதுதானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –
கிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது
பகவத் கிருபையை -கௌரவத்தாலெ -உய்வதோர் பொருள் என்று மறைத்துச் சொல்லுகிறார்
நாலாம் பாட்டில் ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்
நம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே
நானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் நானே விநாசத்துக்கு ஈடான
பரிகரம் தேடிக் கொள்ள எனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று
அசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று

உணர்வு என்னும் பெரும் பதம்
விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -கிடைக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தாப் போலே
பெரும் பதம் -அவன் தான் வேண்டா தத் விஷய ஞானமே அமையும் -என்னும்படி இதனுடைய பெருமை
திரிந்து
விஷயங்கள் தான் சவாதி ஆகையாலே அவற்றில் அனுபவிகலாவது ஓன்று இல்லாமை மூட்டி மீண்டேன்
தெரிந்து -என்று பாடம் ஆகில் -ஞானம் பிறந்தவாறே எல்லாம் இருந்தபடியே தெரிந்தது
ஆகையால் முன்பு எல்லாம் மிருட்சியாய் போந்தமை தோற்றுகிறது
நாடினேன் -ஞானம் பிறந்தவாறே -நாம் கீழ் பட்டது என் -மேல் படப் புகுகிறது என் -என்னும் ஆராய்ச்சி பிறந்தது

நாடி -இதர விஷயங்களைப் பெற வேணும் என்று புத்தி பூர்வகமே ப்ரவர்த்தித்தாலும்
அநர்த்தாஹமாம் அத்தனை போக்கிப் பலிப்பது ஓன்று இல்லை
பகவத் விஷயத்தில் ஆராய என்று இழிந்த மாத்ரத்திலே பல வ்யாப்தி உண்டு
நான் -ஓடினேன் என்ற நான்
ராவண பவனத்திலே நெடு நாள் அவன் எச்சில் தின்று வளர்ந்தவன்
ஒரு முழுக்கு இடாதே ராம கோஷ்டிக்கு ஆள் அனால் போலே
வேல் வெட்டி நம்பியார் பிள்ளை கிழக்கே முக்காத மாற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஒரு திருக் கார்த்திகையிலே புறம்பே சிலரைக் கேட்டல் -எளியன் என்று இருப்பர்கள்
இது பரிஹரிக்க வல்லாரும் இல்லை-

இத்தை சொல்லி வர காட்ட வேணும் என்று ஒரு ஆள் கொடுத்துவரக் காட்டினார் –
அது என் என்பது என்னில் -பெருமாள் கடலைச் சரம் புகுகிற இடத்தில் ப்ராங்முகத்வாதி
நியமோபேதராய்க் கொண்டு சரணம் புக்கார் -இதர உபாயங்களோபாதி பிரபத்தியும்
சஹாயாந்தர சாபேஷமோ -என்று வரக்காட்ட -அந்த உபாயத்துக்கு உடன் வந்தியாய்
இருப்பது ஓன்று அன்று -உபாய பரிக்ரஹம் பண்ணினவருடைய ஸ்வபாவத்தாலே வந்தது –
ராஜச ஜாதியார் ஆவார் தண்ணியராய் அநதிகாரிகளாய் இருக்க அவர்களிலே ஒருவனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று இவருக்கு
உபதேசித்தான் -அவன் பக்கல் நியதி கண்டிலம் -இவர் பக்கலிலே நியதி கண்டோம் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் -அநதிகாரியானவனுக்கு அதிகாரம்
சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –
கண்டு கொண்டேன் –
தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்
தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –
நான் கண்டு கொண்டேன் –
கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை
நாராயணா
பிரணவம் ஆதல் நமஸ் ஆதல் சதுர்த்தி யாதல் கூட்டாமையாலே திருவிடை யாட்டத்திலே
இழிய அமையும்
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது
என்னும் நாமம் –
என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான நாராயண அநுவாகப் ப்ரசித்தி
நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் -இச்சை பிறந்த போதே காலம் –
சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது
திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –
என்று ஜீயர் பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்
கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-

————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: