திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

வாரா அருவாய் வரும்என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

    பொ-ரை :- புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே! ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்றவனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே! திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ?

வி-கு :- மூர்த்தி – சரீரத்தையுடையவன். ஆவியகம் – ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.

ஈடு :- பத்தாம் பாட்டு. 1‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமையாலே, இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.

வாராஅருவாய்-வாராத அருவாய். என்றது, 2புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி. அருவாய் வரும் என் மாயா – மறந்து பிழைக்க ஒண்ணாதபடி 3அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே! ‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது. மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே! 4“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களையுடையனவாயன்றோ இருப்பன. ஆராவமுதாய்-நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே! அடியேன் ஆவியகமே தித்திப்பாய்-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே! 5தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத, உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து, ‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே! அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே, “தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி என்னை அடிமை கொண்டாய் என்றுமாம். திருக்குடந்தை ஊராய் – என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது, 1நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி. 2ஒருநத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும் இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார். உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும். அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது. இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் 3தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.

அவனுடைய அனுக்ரகத்தாலே -நித்தியமாய் நினைக்க அருளி
இசைவித்து தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே
இத்தனை எத்தனை வாசல் தட்டித் திரிவேன்
வருவது போலே
உனக்கு ஆள் பட்டும் அடியேன்
வாராத அருவாய் -ரூபம் இல்லாத
பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண வாராமல்
உரு வெளிப்பாடு மட்டும் காட்டி –
கண்ணால் கண்டு அனுபவிக்க மாட்டாதே –

அகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய்,
அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.

உள்ளே பிரகாசித்து
மாயா மூர்த்தியாய் -உத்பத்தி விநாசம் இல்லாத விக்ரஹ
நிரதிசய போக்யனாய்
அடியேன் -நெஞ்சுக்கு உள்ளே இனிமை அனுபவிக்கக் கொடுத்து
தீரா வினைகள் தீர என்னை ஆண்டான்
நிர்ஹெதுக கிருபையாலே

‘நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே’ என்றது, நீ
இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற
இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி

அனுபவ விரோதியான கர்மங்களைப் போக்கி
தீர்ப்பாரை யாம் இனி வினைகளைப் போக்கி
அனுக்ரகம் பண்ணி அருளி திருக்குடந்தை வந்து கண் வளர்ந்து
நீ கிட்ட வந்து -அருளி -நான் செய்ய வேண்டிய கார்யம் நீ செய்து
திவ்ய தேசம் பிடித்து
உனக்கு ஆள் பட்டும் -அடியேன் இன்னம் உழல வேண்டுமோ
யாருடைய வஸ்து இங்கனே அலமந்து கிடக்கிறது
உன் திருவடிகளில் சரண் அடைந்த பின்பு துக்கம் வந்தால் உனக்கு தானே இழிவு வரும்
அடியேன் -சர்வச்தையும் உனது திருவடிகளில் பொகட்டு
இன்னும் எத்தனை வாசல் தட்டித் திரிய வைப்பாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: