திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

இசைவித் தென்னை உன்தா ளிணைக்கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெருமூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.

பொ-ரை :- என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே! அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான சேனைமுதலியாருக்குத் தலைவனே! திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே! நான் காணும்படி வர வேண்டும்.

வி-கு :- இசைவித்து இருத்தும் அம்மான் என்க. வில் – ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1சர்வேச்வரனாய் வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு அடிமையால் அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து. 2இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு. உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – 3நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே! பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை. 1“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி.

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.-  என்பது, பெரிய திருவந்தாதி.

2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது. அம்மானே-பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது. அசைவு இல் அமரர் தலைவா – நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி. அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி. அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தையுடையவர்கள் என்னுதல். ஆதிப் பெருமூர்த்தி-இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே! என்றது, உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே! என்றபடி. மூர்த்தி – ஸ்வாமி.

திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே. அசைவுஇல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய். வருத்தம் அறுதலாவது, கண்களால் காணமுடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம்தீர்தல். அன்றிக்கே, 1அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல். அன்றிக்கே, 2அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல். ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே, மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி. கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும். செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, 3‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை
இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-
என்பது, கம்பராமாயணம்.

பாரித்த ஆழ்வாரை இனி இனி இருபது கால் துடிக்க
சரீரத்துடன் வைத்து அனுபவிக்க ஆசை கொண்டான்
வீடு திருத்துவான் என்பதாலும்
திருவாய் பாசுரம் கேட்க ஆசை
லோகம் திருந்த
ஆயிரமும் தலைக்கட்ட
தூது விட்டார் -தரிகப்ப் பண்ணி
மடல் எடுக்க தலைக்கட்ட –
இருள் நலிய மடல் எடுக்க முடியாமல் உஊரெல்லாம் துஞ்சி
எம்பெருமானை அனுகரித்து தரிக்க பார்த்தார் கடல் ஞாலத்தில்
சாதனம் ஒன்றும் இல்லை என்று அறுதி இட்டு நோற்ற நோன்பு இலேன்
ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய்
முகம் காட்டவில்லை
திருக்குடைந்தை ஆரா அமுது -இடம் சரண் புக்கார்
விஸ்வாசம் குறையாமல் –

ஏரார் கோலம் திகழக் கிடந்தது எழுந்து பேசாமல் அணைக்காமல்
வாழி கேசனே திருமங்கை ஆழ்வார் அனுபவித்தால் போலே கிடைக்காமையாலே
சர்வேஸ்வரனாய் வைத்து -எனக்காக இங்கே வந்து அருளி
இசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே

என்னை இசைவித்து
நெடுநாள் விமுகரான என்னை அடிமையில் இசைவித்து
நித்ய சூரியே திரு அவதரித்தாரோ சங்கிக்கும்படியான பெருமை ஆழ்வாரது
இசையாமல் இருந்த என்னை இசைவித்து
என்னை நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகே இருந்த என்னை
எங்குற்றேனும் அல்லேன் –
உன் தாள் இணைக் கீழ் -நித்ய சூரிகள் போலே
நிரந்தரமாக இருக்க நீ நினைக்க
பரந்த சிந்தை -திரியாதபடி தனது திருவடிகளில்
நிழலும் அடி தாறுமாக ஸ்ரீ தனமாக ஆக்கி

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.

மெய்ம்மையே -சத்யம் கண்ணி நுண் சிறு தாம்பு வியாக்யானம் –
தலை மேல் அடித்து -ஸ்ரீ சடகோபனை தலையிலே சாத்தி இருந்து
பெரும் காற்றில் -இலவம் பஞ்சு போலே திரியும் நெஞ்சை
யாதேனும் பற்று நீங்கும் விரதம்
நன்மை என்னும் பேர் இடலாவது தீமையாவது உண்டோ அவன் பார்த்து இருக்க
அதுக்கு கூட இட கொடுக்காமல்
பசு மாட்டை அடிக்க போனவன் ஓடிப் போக
பிரதஷிணமாக ஓட –
நன்மை என்று பேர் இடுவான் என்று அப்ரதஷிணமாக போக
பாவமே செய்து பாவி யே ஆனேன்
பாவம் செய்து புண்யம் ஆவோரும் உண்டே
இப்படி இருந்த என்னை இசைவித்து
அம்மானே -பேறு அவனுக்கும் பலம் தன்னது வஸ்து போகக் கூடாதே
நித்யர் தலைவன் -அசைவில் அமரர் -சேனை முதலியார்
ஆதி பெரும் மூர்த்தி

வில் வீசும் ஒளி திசைகள் எங்கும் வீச
திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்து
தர்சநீயமாய் -ரத்னங்கள் சேரும்
ஆராவமுத ஆழ்வார் திருமழிசை பிரான் போன்ற ரத்னங்கள் வந்து சேர்ந்த திவ்ய தேசம்
அமுது செய்த போனகம் -வாத்சல்யம் கொண்டு தானே அமுது செய்து அருளி
லோகம் வருத்தம் அற்று ஆஸ்ரயிக்கும் படி கிடந்தாய்
அசைவில்லாத நித்ய விபூதி உள்ளாறும் இங்கே வந்து
இவனது அசைவில் கண்டு –
திரை சாத்தி இருக்க -பேசாமல் இருக்க திரை எடுத்தும் சப்தம் கொண்டு ஆராவாரம்
லோகம் அடங்க ஆரவாரம் செய்யும் படி அசைந்து
நடை அழகை அனுபவிக்க -கிடை அழகை கண்ட பின் கிடந்தாய் நான் காண வாராய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: