திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.

பொ-ரை :- வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே! என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.

வி-கு :- “துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் – துணை. இளைத்தல் – நெகிழ்தல்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும், ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சாநின்றேன்; அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், 2“நீயே உபாயமாகஎனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை; 1“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன்கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய். 2அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்: வளைவாய் நேமிப்படையாய்-பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே! 3களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார். என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி. 4உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார். நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் – 5அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ. குடந்தைக் கிடந்தாய் மா மாயா – திருக்குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ 6மாம்” என்றதன்பின் இவ்வரு

குள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி. 1சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது, ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது, ‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’ என்ன ஒண்ணாது என்றபடி.

உடலம் தளரா – சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர. எனது ஆவி சரிந்து போம்போது – என் உயிரானது முடிந்து போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி. நன்று; 2இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ? என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும், “நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;

‘இதுதான்’ என்று தொடங்கி.-“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம்   அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”என்பது, வராஹசரமம். ‘

இவர்தாம் அவ்வதிகாரிகளும் அலரே. ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்குறித்தபடி.

ஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிரும் சரீரத்தை விட்டுப் போகும் தசையாயிற்று என்கை. இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற்பண்ணி அருளவேண்டும். 3அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.

“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்குறை இல்லை என்றபடி.

“குடந்தைக் கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம்
சொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.
‘நீ மாம் என்றதன்பின்’ என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத்
திருவுள்ளம்பற்றி. ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற
ஏற்றம் எல்லாம் என்றபடி.

விசுவாசம் குலையாமல்
வேறு ஓன்று உபயம் இல்லை
குறையாதபடி பார்த்து அருள வேண்டும்

“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.

“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”-என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்
குறை இல்லை என்றபடி.

களைவாய் –
நீ உனது கார்யம் செய் -செய்யாமல் இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை
உன்னுடைய உடைமை நீ பெற்றால் உனக்கு பேறு
நான் குறை வற்று -உறுதி உடன் இருக்கிறேன்
செய்கிறோம் என்னாமையாலே
என்னுடைய ரஷணத்துக்கு நீ
கிடந்தது திவ்ய ஆயுதங்கள் வேற
அதுவும் வளையாய் இருக்க
பார்த்த பார்த்த இடம் எல்லாம் -வாயான ஆயுதம்
களையாது ஒழிகைக்கு ஒன்றும் சொல்ல முடியாமல்
வாய் படிந்த பிரயோஜனம்
கையிலே இருக்க கை கழலா நேமியான்
பிரயோக சக்கரம் வேற திருவரங்கத்தில்
வேறு ரஷகர் இல்லை களை கண் மற்று இல்லை
ஆயுதம்என் கையில் உண்டோ
பிறர் கையில் உண்டோ
உன்னிடம் இல்லாமல் இருக்கா
குடந்தை கிடந்த மா மாயா -மாம் சௌலப்யம் காட்டி –
கண்டு பற்றுகைக்கு
அர்ச்சாவதாரம் வரை வந்த பின்பு -மாம் என்கிறதுக்கும் மேம்பட்ட சௌலப்யம்
ஆச்சர்யமான அழகு
ருசி உத்பாகன் வடிவு அழகால் அனுபவிக்க வைத்து
ஆவி சரிந்து -சரீரம் தளர்ந்து போகும் முன் செய்யா நின்று -தளர்ந்து
பிராணன் முடிந்து போம் அளவு ஆயிற்று
போம் பொது இதுவாயிற்று
அதுக்கு முன்பு -இந்த ஷணத்திலும் -உனது தாள் ஒருங்க பிடித்து
மறக்காமல் இருக்க அனுக்ரகம்
போம் போதிலே இல்லை அந்திம ஸ்மரதி கேட்கிறார் இல்லை
பிரபன்னனுக்கு தேவை இல்லை அந்திம ஸ்மரதி  வர்ஜனம்
நயாமி பரமாம் கதி –
போம் போது -இது -இப்போது -அர்த்தம் கொண்டு

முடிந்து போகுமளவாயிற்றுக் காண்’ என்று வலிந்து பொருள் கொள்ளுதல்
எற்றிற்கு? இருந்தபடியே அந்திமஸ்மிருதி பிரார்த்தனையாகக் கொண்டாலோ?
என்று சங்கிக்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.

“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”-என்பது, வராஹசரமம். ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்
குறித்தபடி.

உபாசகனுக்கு தான் அந்திம ஸ்மரதி வேண்டும்
ஜடபரதர் மான் போலே பிறந்தாரே
விஸ்லேஷ விசனத்தால் சரீரம் தளர்ந்து
இப்போது பிராணனும் போகும் நிலை வந்தது
நெகிழாமல் உறுதியாக இருக்க பண்ணி அருள வேண்டும்
அனுபவம் கிடையாமையாலே அதுக்கு அடியான உபாய அத்யவசாயமும் குகையுமோ அஞ்சி
பிரார்த்திக்கிறார்
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைக்கும்படி  நீ நினைக்க வேண்டும் -திருமழிசை ஆழ்வார் போலே

முமுஷுபடி மூன்று விரோதி
ஸ்வரூப விரோதி
உபாய விரோதி களைவாய்
பிராப்ய விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: