திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

அரியேறே! என்னம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
1
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே

பிரியா அடிமைஎன்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன்இனி உன்சரணம் தந்துஎன் சன்மம் களையாயே.

பொ-ரை :- அரியேறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண்களையுடைய கரிய முகிலே! நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே! நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே! இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.

வி-கு :- வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே!” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்!’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே, சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.

ஈடு :- ஏழாம் பாட்டு. 2உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு, உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.

அரியேறே-3தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.என் அம்பொன் சுடரே – அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே! அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே! சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே! என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே! 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.

உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-4உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய். அருள் – அருளாலே. குடந்தைத் திருமாலே-அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! ‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை. 1“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும் எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.

“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 25. பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

இனி தரியேன்- அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது. 2தாய்தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். 3‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

மண்ணாய் நீர்எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித்தளர்ந் தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்திரு வேங்கடவா!
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.-
என்பது, பெரிய திருமொழி.

அதற்கு அடியிலே தரிப்பித்துக்கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.

உனது திருவடிகளை தந்து சம்சாரம் போக்கி அருள வேணும்
பிரியா அடிமை என்னைக் கொண்டே
தரியேன் இனி
எனது சன்மம் களைவாய்
தன்னைத் தவிர அனைவருக்கும் -மேன்மை
பிரகாசக்கிகும் தேஜஸ் வடிவு கொண்டால் போலே
பொன் போலே ஒளி -வடிவின் வாசி அறிவித்து
அதற்கும் அடியாக திருகன்கல் திருமணி செங்கன் கருமேனி
எரியே -பவளக் குன்றே -நட்ஷத்ரம் வரை ஓங்கிய பவள மலை போலே -சமுதாய சோபை
பவளம் சிகப்பு இவனோ கருப்பு
காம்பீர்யம் ஒக்கம் பற்றி
அக்னி போலே தேஜஸ்
நிறம் சொலவில்லை பிரகாசம் -உதாவாதார் கிட்ட முடியாதபடி

நால் தோள் -கற்பக தரு -திருவடி தோற்ற துறை இவரும் தோற்று
எந்தாய்
உன்னுடைய கேவல கிருபையாலே மட்டுமே -அருளாலே மட்டுமே -என்னை அடிமை  கொண்டாய்
குடந்தை திருமாலே
அடிமை கொள்ள ஸ்ரீ ய பதியாய் -40 பாசுரங்களிலும் இங்கு தான் திருமாலே
இளைய பெருமாள் காக்காசுரன் போலே பிராட்டி முன்னிட்டு கொண்டு ஆழ்வாரும்
பிராட்டி சன்னதி முன்னிட்டு
தரியேன் இனி இந்த சேர்த்தி கண்ட பின்பு மாதா பிதா சன்னதி உதாகர்
ஸ்ரீ மானாக இருக்க அடியேன் தரியேன்
பிரஜை
உனது சரணம் தந்து சன்மம் களையாய்
முலை கொடுத்து சிகிச்சிப்பாரைப் போலே
ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே
புண்ணார் ஆக்கை தானே அறுக்க வேண்டுமே
அடியிலே தரிப்பித்து கொண்டு அறுக்க வேண்டும்

திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: