திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

சூழ்கண் டாய்என் தொல்லை வினையை அறுத்துன் னடிசேறும்
ஊழ்கண் டிருந்தே தூராக் குழி தூர்த்து எனைநா ளகன்றிருப்பன்
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!

பொ-ரை :- இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.

வி-கு :- ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே! சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.

ஈடு :- ஆறாம் பாட்டு. 2உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி, உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்.1என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் சூழ் கண்டாய் – என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி, உன் திருவடிகளை நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும். கிரமத்திலே செய்கிறோம் என்ன, அதற்கு எல்லை என்? என்கிறார். உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே – உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்துகொண்டிருந்தே. நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார். தூராக் குழி தூர்த்து-நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு. எனை நாள் அகன்று இருப்பன் – இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன்? 2ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி. வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் – 3‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள். அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம். விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே? என்னில், தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்.

வானோர் கோமானே – 4அவர்கள் சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்யாழின் இசையே – மி்டற்று ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் 1போதுசெய்கை அன்றிக்கே இருத்தல். “யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” –திருவாய்மொழி. 2. 3 : 7.-என்னக்கடவதன்றோ. அமுதே – 2‘செவிக்கு அதுவாய், நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை. அறிவின் பயனே – ஞானத்துக்குப் பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி. அரிஏறே – எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட தன்மையையுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே! 3அன்றிக்கே. கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம். 4இங்குள்ளார்க்கும் அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசயபோக்கியனாயிருக்க, நான் இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.

போக்யதை அனுபவித்த எனக்கு விச்செதம் இன்றி
உன்னை அடைய வழி நீயே பார்த்து அருள வேணும்
தூராக்குழி -இந்த்ரியங்கள் படுத்தும் பாடு
தொல்லை வினையை அறுத்து

“உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி சேரும்படி சூழ்கண்டாய்”
என்றும், “உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும்
பின்னும் கூட்டுக. “ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.

தனமான கர்மங்களை சஞ்சித பாவம் தொல் வினை சவாசனமாக போக்கி
உன்னடி சேரும் வகை சூழ் கண்டாய்
க்ரமத்திலெ செய்கிறேன் என்றானாம்
அவதி என்ன என்று கேட்கிறார்
நாட்டாரை போலே உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன்
அறிந்து கொண்ட பின்பும் அடுத்த ஷணம் மோஷம் கொடுக்காமல் இந்த்ரியங்களுக்கு இறை இட்டு
போரும் திருப்தி இல்லாமல் –
எத்தனை நாள் அவதி நீயே சொல்லி அருள்
பரத ஆழ்வானுக்கு 14 வருஷம் அருளி
திருக்குடைந்தை இப்படி கதற வேண்டாதபடி கூடி
பிரிந்து இருக்கும் நாள் -ச்லாக்கியமான கண் வட்டத்தில் வாழும் படி
வேம்கடத்தை பதியாக வாழும் மேகங்காள் வாழ்ச்சி
நின் தாள் இணைக் கீழ் சேரும் வகை வாழ்ச்சி
தொல் ச்லாக்கியமான பழைய இரண்டு அர்த்தம்
அவர்கள் வாழ்கிற படி எங்கனே என்னில் –
இவரும் அவனை சேவித்து கண் வட்டத்தில் இருக்க
தம்மைப் போலே அவர்கள் கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பால்
வானோர் கோமான் -அகால -நாள் நடையாடாத தேசம் போலே இவர்களும் நித்யர் போலே
யாழின் இசையே
மிடற்று ஓசை போலே -இன்றி -கர்ம அனுகுணமாக தொண்டை மாறலாம்

நித்யமாக இனிமையான குரல் -யாழின் இசையே
அமுதே -நாக்குக்கு வேறு ஓன்று தேட வேண்டாதபடி -செவிக்கும் நாவுக்கும் போக்கியம்
அறிவின் பயனே மனசுக்கும் போக்கியம்
அரி ஏறே மேணானிப்பு -கண்ணுக்கு சிம்ஹ ஸ்ரேஷ்டம் போலே கம்பீரமாக
இங்கு உள்ளாருக்கும் அங்கு உள்ளாருக்கும் உன்னை அனுபவிக்க கொடுத்து இருக்க
நான் எத்தனை நாள் அகன்று இருப்பேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: