திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!
தொழுவ னேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

பொ-ரை :- கலக்கத்தாலே அழுவேன், தெளிவாலே தொழுவேன், மயக்கத்தால் ஆடுவேன், குணங்களுக்குப் பரவசப்பட்டுப் பாடுவேன், துன்பத்தால் அலற்றுவேன், என்னைத் தழுவி நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால் நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன், வரக் காணாமையாலே நாணங்கொண்டு தலை குனிந்திருப்பேன், செழுமை பொருந்திய அழகிய வயல்களாற்சூழப்பட்ட திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற என்னை உன் திருவடிகளைச் சேரும்படி ஒரு நல் விரகு பார்க்க வேண்டும்.

வி-கு :- ஆடிக் காண்பன் : ஒருசொல். ஆடுவேன் என்பது பொருளாம். தொழுவனேன்: வினையாலணையும் பெயர். கண்டாய்: முன்னிலை அசைச் சொல்

.ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையாலே இரங்குதற்குரிய செயல்கள் பலவும் செய்த இடத்திலும் காணப்பெற்றிலேன், உன் திருவடிகளை நான் பெறும்படி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் – குழந்தைகள் செய்வதனையும் செய்யாநின்றேன். 2“மற்றவள்தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ.

குழந்தைகள் அழுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “மற்றவள் தன்”  என்று தொடங்கி.

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே-என்பது, பெருமாள் திருமொழி. 5 : 1.

தொழுவன் – 3வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்.“அஞ்சலி: பரமா முத்ரா” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
‘வேதாந்த ஞானமுடையார்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.-  கலியர்-பசியர்

ஆடிக் காண்பன் – ‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன். 4‘என்பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அதுதானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை. தழு வல் வினையால் – இப்படிப்பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ 5‘உடன் வந்தியான வல்வினை. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே. பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே. பக்கம் நோக்கி – ‘துன்பமே செப்பேடாக வரும்’ என்றிருக்கையாலே, வருவதற்குச் சம்பாவனையுள்ள திக்கைப் பார்த்து. நாணிக் கவிழ்ந்திருப்பன் – அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, ‘ஆசைப்பட்டு 1அழகிதாக உண்டோம்’ என்று நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன். அன்றிக்கே, பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் என்பதற்கு, ‘அருகுநின்றார் இவளை என் சொல்லுவர்களோ’ என்றதற்கு நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன் என்னலுமாம்.

செழு ஒண் பழனம் குடந்தைக் கிடந்தாய்-பெருத்து அழகிதான நீர்நிலைகளையுடைய திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! செந்தாமரைக்கண்ணா-2கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே. வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிறதன்றோ. தொழுவனேனை –3புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாதபடி கிருபணனான என்னை. அன்றிக்கே, புறம்புள்ள விஷயங்களிலே ஈடுபட்டவனாய்த் தாழ்ந்தவனான என்னை என்னுதல். தொழுவன்-கிருபணன் என்னுதல். தாழ்ந்தவன் என்னுதல். உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – உன் திருவடிகளைக் கிட்டுவது ஒரு விரகு, 4நான் அறியாதபடி நீயே பார்த்தருளவேண்டும். 1தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய், ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி. என்றது, வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரியசிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

ஆர்த்தியே செப்பெடாக வருவானே
நாணிக் கவிழ்ந்து இருப்பேன்
அழகிது வேட்கத்தாலே
எம்பெருமானை எசுவார்களே என்று பக்கம் நோக்கி லஜ்ஜித்து இரூப்பன்
அழுதல்: உபாசகர், சபலர். தொழுதல்: பிரபந்நர், விரக்தர்.
நாட்டார் சொல்லும் பழிக்கு அவனுக்கு அவத்யம் என்று
செந்தாமரைக் கண்ணா முகாந்தாரத்தாலே ஜீவனம் இல்லை
உன்னிடம் இருக்க கொடுக்காமல் இருக்கிறாயே
எனது ஜீவனம் ஒரு முகம் செய்து கிடக்கிறது
தொழுவன் தீனன் புறம்பு புகல் அற்று
தாழ்வான் என்னை
உன்னுடைய திருவடிகளை கிட்டுவது விரகு நீயே காட்டி அருள வேண்டும்
தமது ஆற்றாமை பேற்றுக்கு உபாயம் இல்லை -ஸ்வரூபத்தில்
சேரும் பிரக்ருதியாய்
இருக்கும் அவனாலே பேறு
சூழ் கண்டாய் -கார்யம் அவனே செய்து அருள வேண்டும்
அழுவன் தொழுவன் சொல்லியதும் சாதனம் இல்லை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: