பிரவேசம்
இவ் வாழ்வார் ஆகிறார் –
ஆத்மாவை வெய்யிலிலே வைத்து உடலை நிழலிலே வைத்துப் போந்தார் ஒருவர் ஆயிற்று-
ஆத்மாவை வெய்யிலிலே வைக்கையாவது –
ஸ்ரீ பகவத் விஷயத்தில் முதலிலே இழியாமை-
உடம்பை நிழலிலே வைக்கையாவது –
அநாதி காலம் விஷய பிரவணராய் -அதுவே யாத்ரையாய் போருகை-
நிழல் ஆவது ஸ்ரீ பகவத் விஷயம் இறே –
ஸ்ரீ வாஸு தேவ தருச் சாயா -ஸ்ரீ கருட புராண ஸ்லோகம்-
பார்த்த பார்த்த இடம் எல்லாம் நிழலாய் இருக்கை-
எங்கும் ஒக்க நிழல் செய்த இந் நிழல் அல்லது புறம்பு ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கை-
(வாஸூ தேவன் எங்கும் இருப்பதால்-நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் )
நாதிசீதா ந கர்மதா —
அற வவ்வல் இடுதல் -வேர்த்தல் செய்யாது இருத்தல்-
நரகாங்கார சமநீ
தானே ஏறிட்டுக் கொண்ட நரகம் ஆகிற பெரு நெருப்பையும் அவிக்கவற்று –
(இந்த வாஸூ தேவ மரமோ சம்சாரம் ஆகிற நெருப்பை அழிக்கும் )
சா கிமர்த்தம் ந சேவ்யதே –
பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –
துக்க நிவர்த்தகம் அன்று என்ன ஒண்ணாது
வயிறு நோவா நின்றது -சவி -என்பாரைப் போலே -அநிச்சை சொல்லி- கை வாங்கும் இத்தனை இறே உள்ளது –
அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை -பிரபத்தியிலே மாறாட்டமே உள்ளது –
இந் நிழலிலே இருந்து வைத்து ஒதுங்கிற்றிலேன் -என்பாரைச் செய்யலாவது இல்லையே-
(வாஸூ தேவ மரத்தில் ஒதுங்காமல் அவன் இடம் இருந்து ஒதுங்கி இருந்தாலும் -நம்மை விடானே அவன்)
இவர் கண்ணால் காண்கிற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாது இருக்கிறார் ஆகில்
நம்மையும் அவ்விஷயங்களோபாதி
இவர் கண்ணுக்கு இலக்காக்கினால் விரும்பாது ஒழியார் இறே என்று பார்த்து
உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி
இவரை விஷயீ கரித்து
தன் படிகளை அடையக் காட்டிக் கொடுத்து
தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
இவரை அனுபவித்து
இங்கே இருந்தே பரம பதத்தில் உள்ளார் படி யாம்படி பண்ணி
அத் தேச பிராப்தியும் இவருக்கு பண்ணிக் கொடுத்தான் -என்கிறது இப் பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்
இவர் பக்கலில்
அத்வேஷமும்
விஷயங்களின் உடைய லாகவமே இவரை மீட்கைக்கு பரிகரமாகவும்
லாகவம் -அல்ப அஸ்த்ரத்வாதிகள் –
இவருடைய ரசிகத்வமே -தன் வாசி அறிகைக்கு பற்றாசாகவும்
அநாதி காலம் பண்ணின பாப அம்சத்தை நம் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று பார்த்து
இவர் விஷயங்களின் வாசி அறிந்து தன்னை அறிகைக்காக
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
தனக்கு வாசகமான திரு மந்தரம் முன்னாக
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அடங்கக் காட்டிக் கொடுக்க
கண்டு அனுபவித்து -அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீ கரித்தான்
என்று க்ருதஞ்ஞர் ஆகையாலே ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார்
பகவத் விஷயத்திலே நேர் கொடு நேர் செய்யல் ஆவது ஓன்று இல்லை-
செய்ய வேண்டுவதும் ஓன்று இல்லை-
பண்ணின உபகாரத்துக்கு கிருதஞ்ஞராம் இத்தனையே வேண்டுவது -அசித் வ்யாவ்ருத்தி தோற்ற-
————-
மந்த்ரம் -முதல் பத்து
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து -திருப் ப்ரீதி -இரண்டாம் பத்து
மந்த்ர பிரதனரான ஆச்சார்யர்-ஸ்ரீ பதரிகாஸ்ரமம் மூன்றாம் நான்காம் பத்து
————-
அப்பு அரும் பதம் -இவ்வாழ்வார் என்றதை விளக்கி அருளுகிறார்-
அபார கருணா அம்ருத ஸாகரமான பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாராதிகளை வியாக்யானங்களில்
காட்டி அருளியதைத் தொகுத்து அருளிச் செய்கிறார் இங்கு
பெரியாழ்வார் -அவதாரம் தொடக்கமான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தும் –
அதுக்கு அடியானை ராம அவதார அனுபவத்தையும் –அர்ச்சாவதாரங்களை பஹு பிரகாரமாக அனுபவித்து –
திரு வேங்கட அனுபவத்துடன் தலைக்கட்டுகிறார் –
பெண் பிள்ளையான ஆண்டாள் நந்தகோபன் குமாரனை அனுபவித்து -ஆழ்வார்களை பள்ளி எழுப்பி
அவர்களை அடி ஒற்றி-அநுகாரம்-பாவத்தால் -மானஸ அனுபவம் தானே
மனப்பால் -காமன் காலிலே விழுந்து துவண்டு -படாதன பட்டு -கனாக் கண்டு -தூது விட்டு –
பெரிய பெருமாளை அழகர் -தோற்று கலங்கின அளவில் தெய்வ யோகத்தால் –
தாம் பணித்த மெய்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –
வல்ல பரிசு தருவிப்பரேல் -ஆச்சார்ய பரதந்த்ர ஞானம் –
அநுபூத விஷய வை லக்ஷண்யம் துடிக்க வைக்க -இங்கே போகக் கண்டீரே தேடிச் சென்று –
வீதியாரே வருவானைக் கண்டோமே காட்சி யுடன் முடிந்து
குலசேகர பெருமாள் -என்று கொலோ காணும் நாளே -பெரிய பெருமாள் -ஆசை கரை புரண்டு –
அடியார் அளவும் மால் ஏறி பெரும் பித்தராய் –
ஏதேனும் ஆவேனே -திர்யக் ஜென்மங்களை ஆசைப்பட்டு
அர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணனை ப்ராசங்கிகமாக அனுபவித்து-
அந்த அனுபவத்தை திருச் சித்ரகூடத்தில் அடியிலே இருந்த பரம பக்தியில்
பெரியாழ்வார் -திருவேங்கடத்தில்
ஆண்டாள் -பிருந்தாவனம்
திரு மழிசை பிரான் -பாவனா பிரகர்ஷம்–மாத்திரம் இல்லாமல் -அர்ச்சா பெருமாள் சொன்ன வண்ணம் செய்து –
நியமிக்கும் படி -தெளிந்த சிந்தை -பரத்வம் ஸ்பஷ்டமாக-நமக்கும் உபதேசித்து
மற்று ஓன்று வேண்டா என்று பெரிய பெருமாளை மட்டும் ஸ்ரோதாவாக்கி -தொண்டர் அடிப் பொடி –
இன் சொற்களைச் சொல்லி -திருமாலை -அறியாதார் திரு மாலையே அறியாதவர் ஆவாரே
திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பெரிய பெருமாளாலே விஷயீ கரிக்கப் பெற்று பரப்பற பத்து-அந்யபதேசம் இல்லாமல் –
காமன் காலில் விழாமல் –தூது விடாமல் -காணாமல் தடுமாறாமல் -கண்டு தெளிந்தும் –
பர உபதேசம் பண்ணப் போவார்களா நிந்தித்து -தமக்கு எம்பெருமான் இரங்காததை நொந்தார் தாமே போய் பள்ளி உணர்த்தும் செய்யாதே –
ஆ பாத சூடம் சாஷாத்காரம் அனுபவத்தில் ஊன்றி லோக சாரங்கர் திருத் தோள்களில் எழுந்து அருள –
சாயுஜ்யம் இந்த விபூதியில் பெற்று திரு வேங்கடமுடையானையும் பெரிய பெருமாளையும் ஒரே சேர்த்தியாக அனுபவித்து
மற்று ஒன்றினைக் காணா என்று தலைக்கட்டியும்
பிரதம அவதியில் மண்டி -இவர்கள் அனைவரும் –
மதுர கவி ஆழ்வார் -அடியார்க்கு ஆட்படுவது உத்தேச்யம் -ஆழ்வார் ப்ராப்யம் ப்ராபகம்
ஓம் –திருப்பல்லாண்டு
கண்ணி நுண் சிறுத்தாம்பு -மத்யமாம் பதம் –
த்ருதீய பதம் -பெரிய திருமொழி -நாராயணாயா –
காயிக அனுஷ்டானம் -திரு மங்கை ஆழ்வார் தானே செய்தார் -மதுர கவி ஆழ்வார் -பாசுரம் பாடி
இவர் தானே பாகவத ததீயாராதானம்
வாள் வலியால் மந்த்ரம் பெற்று
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று வாயாலும் அருளிச் செய்து -பரம விலக்ஷணர்
சர்வேஸ்வரன் திருத்திய பிரகாரம்
ஸூ விஷய அத்வேஷத்தை மாற்றி
இவர் அனுபவித்த விஷய அல்பமே கொண்டு மீட்க பரிகரம்-இவரது ராசிகத்வத்தை தன் பக்கலில்
வாசி அறிய பற்றாசாகவும் நிர்ஹேதுக கடாக்ஷம் –
வக்த்ரு வை லக்ஷண்யம்
திரு மந்த்ரார்த்தம் ப்ரதிபாத்ய ஏற்றம் –
————————————————————————–
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-
பெரும் இடும்பையில் பிறந்து-மிகுந்த துன்பத்துக்கு கொள்கலமாய் -துன்பங்கள் வரக் காரணம் –
பிறப்பு சரீரம் கொள்வது
கூடினேன் கூடி -சரீரம் என்றும் ஆத்மா என்றும் பகுத்து அறியாத படி உடலே ஆத்மா என்று மயங்கி கூடினேன்
இப்படி நெடும் காலம் இருந்து
இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி-யுவதிகள் சம்ச்லேஷ இன்பத்தை நினைத்து
ஓடினேன் ஓடி -விஷயங்கள் தோறும் அலைந்து -ஓடினதே மிச்சம் -இதுவே தொழிலாக
பின்பு
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்-கொள் கொம்பு இல்லாத கொடி போல் வாடினேன்
வாடி -ஒவ் ஒன்றுக்கும் இப்படி திரும்பி -வாட்டமே வாழ்வாக –
விஷயாந்தரங்கள் பின்பு சென்று மனசால் வருந்தி
உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து-உஜ்ஜீவனம்-பொருள் என்று நிர்ஹேதுக கிருபை
உணர்வு -ஞானம் -உயர்ந்த -ஞானியே முக்தன் –
நாடினேன் நாடி -பகவத் விஷயம் நன்றாக ஆராய்ந்து
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-திரு நாமம் சொல்லக் கூட யோக்யதை இல்லா நான்
காணப் பெற்றேன்
நம் ஆழ்வார் சர்வேஸ்வரனை சாஷாத்கரித்த அநந்தரம் -தாம் பெற்ற பேறு அறியாதே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தாப் போலே
இவரும் பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பு தாம் கீழ் நின்ற நிலையை எல்லாம் அனுசந்தித்து
வாடினேன் -என்கிறார் –
உலர்ந்தேன் என்னாதே வாடினேன் என்கிறார் –
வாடி வாடும் இவ் வாணுதல் -பிராட்டி போலே
(தானான தன்மையிலும் பிராட்டி போலே வாடினேன் என்கிறாரே)
வாடினேன்
கொம்பை இழந்த தளிர் போலே -ஆஸ்ரயத்துக்கு அழிவு இல்லாமையாலே –
இன்னும் நோக்குவோம் என்னில் -நோக்குகைக்கு யோக்யதை உண்டு என்கை –
அநந்ய ராகவோ அஹம் என்கிற பிராட்டியோடே பிராப்தி சகல ஆத்மாக்களுக்கும் உண்டான பின்பு –
இப் பிராப்தியை உணர்ந்தால் அநாதி காலம் இழந்தவருக்கு வாடினேன் என்னத் தட்டில்லை இறே
யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்
யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-
ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்
எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்
எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை
விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –
திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே
வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது
வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )
விஷய ப்ராவண்யம் காதாசித்கமாய் அனுதாபம் பிறந்து மீளுகை அன்றிக்கே
அநாதி காலம் இதுவே யாத்ரையாய் போந்தது என்றும் -இவ்வளவு அன்றிக்கே இதுக்கு மேலே
விளைந்ததோர் அநர்த்தத்தை சொல்ல ஒருப்பட்டமையும் தோற்றுகிறது –
மேல் விளைந்த அநர்த்தம் தான் ஏது என்னில் –
வருந்தினேன் மனத்தால் –
மாநசமான க்லேசத்தை அனுபவித்து போந்தேன் –
இந்த்ரியங்கள் விஷயங்களிலே ப்ரவணமாய் -அவற்றை அனுபவிக்கக் கோலி அவற்றை லபியாமையாலும்
லபித்தாலும் அவற்றில் அனுபவிக்க லாவது ஓன்று இல்லாமையாலும்
மாநசமான க்லேசத்தை அனுபவித்துப் போந்தேன்
சர்வேந்த்ரியங்களுக்கும் கந்தமான மனஸை பிரத்யகர்த்த பிரவணம் ஆக்க மாட்டாமையாலே
மாநசமான க்லேசத்தை அனுபவித்தேன் –
(பிரத்யகர்த்தம் -ஜீவ ஈஸ்வர பரம் / பராக் – வெளி விஷயம்)
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணனாய் திருவடிகளை ஒரு நாளும் நினைக்கப் பெற்றிலேன் என்றபடி
பெரும் துயர் இடும்பையில் பிறந்து –
விஷயங்களிலே ருசியைப் பிறப்பித்து
வாசனையை உண்டாக்கி
ராக த்வேஷங்களை மிகுத்து
இதில் உண்டான அவித்யா கர்மங்களும் சரீர ஆரம்ப ஹேதுவாக வந்து பிறந்தேன்
துயர் என்று துக்கம்
இடும்பை என்றும் துக்கம்
இத்தால் சரீரம் தான் துக்க ஆயதநமுமாய் துக்க ஹேதுவுமாய் இருக்கும் என்கை –
துக்க ஆயதநமுமாய் மேலே அநேக துக்கங்களை விளைக்கவும் வற்றாய் இருக்கை-
பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடி வாடினேன் -என்னாதே முதலில் -வாடினேன் -என்பான் என் என்னில் –
கர்ம சம்பந்தம் அநாதியாய் -அசித் சம்சர்க்கமும் ப்ரவாஹ ரூபேண நித்யமாய் இருக்கையாலே
நடுவே ஒன்றைப் பிடித்து சொல்லுகிறார் –
பிறந்து –
ஜன்ம மரணங்கள் இல்லாத ஆத்மா -செத்தான் பிறந்தான் -என்று வ்யவஹாராஸ் பதம் ஆகையாலே
கூடினேன் –
நித்தியமாய் ஏக ரூபமாய் ஞாநாநந்த லஷணமாய் பகவத் சேஷமான ஆத்மாவை
தேவோஹம் மனுஷ்யோஹம் என்னலாம் படியான படி கூடினேன் –
அசித் சம்சர்க்கம் தான் சத்தா ப்ரயுக்தம் என்னலாம் படி பொருந்தின படி கூடினேன் -என்கையாலே
இது தான் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்று ஔபாதிகம்-வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது
ராஜ புத்திரன் வழி போகா நிற்க வேடர் கையிலே அகப்பட்டாப் போலே இறே
ஆத்மாவுக்கு அசித் சம்சர்க்க்கம் தான் வந்தபடி
அய பிண்டத்தை ( இரும்புத் துண்டத்தை )அக்நியின் அருகில் வைத்தால் அக்நி பரமாணுக்கள் சூஷ்ம ரூபேண
அதிலே சங்கரமித்தாதல் -வாசனையாலே யாதல் -அதினுடைய ஔஷ்யண்ய ஸ்வபாவத்தையும் நிறத்தையும் பஜித்து
அது தான் என்னலாம் போலே –
இவ்வாத்மாவும் அசித் சம்சர்க்கத்தாலே அதுதான் என்னலாம்படி அசித் கல்பமான படி
பரமாணு பற்று சிவப்பு மாறினாலும் வாசனையாலே சுடும்-
கூடி –
சரீர விச்லேஷம் அசஹ்யமாம் படி பொருந்தின படி –
ஞானம் பிறந்தால் சரீர விச்லேஷம் தான் பிரார்த்தித்து பெற வேண்டும் படியான படி
கூடி -என்கையாலே
அநாதி காலம் இத்தோடே பொருந்திப் போந்தமையும்
இதுக்கு மேலே ஓர் அநர்த்தம் விளைந்தது என்றும் தோற்றுகிறது –
மேல் விளைந்த அநர்த்தம் தான் என் என்னில் –
இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன்
இளையவர் –
சப்தாதி விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்று ஆராயவும் ஒட்டாதே
பகவத் விஷயத்தில் நன்மையை அறிந்து அதிலே மூளவும் ஒட்டாதே
பருவத்தை இட்டு பகட்டித் துவக்குவர்கள்
தம்மோடு –
சாயா ரச சத்வம் அனுகச்சேத் -என்கிற அதுவும் எல்லாம் இங்கே
(மூல சம்ஹிதா -சாயா -நிழல் போவது போலே)
நல்லதொரு பூமாலை கண்டால் தன் தலையிலே வைத்தல்-தன்னை ஒருவனாக நினைத்து இருத்தல் செய்யாதே
அவர்கள் போந்த அடி வழியே போம் இத்தனை –
யேந யேந தாதா கச்சதி தேந தேந சஹ கச்சதி (பரம சம்ஹிதை)-என்கிறதுவும் எல்லாம் இங்கே –
அவர் தரும் கலவி –
கிட்டின போது-சிரித்து- சிறிது வார்த்தை சொல்லி இருந்து இனி இவன் கைப்பட்டான் என்று அறிந்தால்
தங்களைக் கொண்டு எழ வாங்கி இருப்பர்கள்
கலவியே கருதி –
அனுபவித்து என்பது அனுபாவ்யம் தான் உண்டாகில் இறே
இவனுடைய மநோ ரதமே ஆகையாலே -கருதி -என்கிறது
மநோ ரதம் தான் மாறாது இறே
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீள இறே அடுப்பது
அவர்கள் இறாய்க்க இறாய்க்க -நன்மை உண்டு -என்று மேன்மேலும் மநோ ரதம் செல்லா நிற்கும் ஆயிற்று –
அதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே –
ஒரு விஷயத்தில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீளலாம் இறே
அத்தை விட்டு மற்று ஒன்றை அறியப் போய் அதிலும் ஒன்றும் காணா விட்டால்
பின்னையும் அவ்வருகே போகா நிற்கும் இத்தனை இறே –
ஓடினேன் –
விஷயங்கள் தன்னில் அரை ஷணம் கால் தாழப் பண்ண வல்லதொரு விஷயம் தான் இல்லை இறே
போக உபகரணம் கொண்டு புக்கு ஸ்நானத்துக்கு ஈடாக புறப்படும் விஷயம் இறே
இவற்றின் தோஷத்தை தானும் அறிந்து -அத்தை மறைக்கைக்கு ஈடான போக உபகரணங்கள்
கூட்டிக் கொடுத்து இறே தானும் அனுபவிக்கப் புகுவது
ப்ரத்யஷம் அகிஞ்சித்கரமாகிற விஷயம் இறே –
இவற்றின் உடைய தோஷம் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாதே கண்ணாலே காணலாம்படி
இருக்கச் செய்தே -கண்டு மீள ஒண்ணாதபடி இருக்கிறது இறே
விஷய ப்ராவண்யம் ஆவது பாம்பு படத்தை விரித்துக் கொண்டு நின்றால்
அது அள்ளிக் கொள்ள புகுகிறது அறியாதே அதன் நிழலிலே ஒதுங்கத் தேடுமா போலே இருப்பது ஓன்று இறே
உயிர்க் கழுவிலே இருந்தவன் பிபாசையும் வர்த்தித்து தண்ணீரும் குடித்துப் பிறக்கும் சுகம் போலே இறே
விஷய அனுபவத்தால் பிறக்கும் சுகம் ஆகிறது
துக்கங்களிலே ஒன்றை சுகம் என்று நிர்வகித்து கொள்ளுகிறான் இத்தனை இறே
நிரஸ்த சுக பாவைக லஷணா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்-என்கிற அதுவே இறே சுகம்
ஓடி
முன்பு எல்லாம் இப்படியேயாய் போரச் செய்தே ஒரு நன்மை உண்டாயிற்று என்று தோற்றுகிறது
சர்வ சக்தி ரஷிப்போம் -என்று கை நீட்டி எடுக்கப் பார்த்தாலும் எட்டாதபடி கை கழியப் போனேன்
உய்வதோர் பொருளால் –
விஷயங்களிலே கை கழியப் போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் –
இனி இவன் தானாக மீள மாட்டான் -என்று அது தானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –
கிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது
பகவத் கிருபையை -கௌரவத்தாலே -உய்வதோர் பொருள் -என்று மறைத்துச் சொல்லுகிறார்
நாலாம் பாட்டில் -ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்
நம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே
நானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் நானே விநாசத்துக்கு ஈடான பரிகரம் தேடிக் கொள்ள
எனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று
அசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று
உணர்வு என்னும் பெரும் பதம்
விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -யதிதன் ஸ்தானம் ஆர்ஜிதம் -ஜன்மாந்தரம் விலகாமல் இருக்க வேண்டும் -ஜிதந்தே-
கிடைக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தாப் போலே
பெரும் பதம் –
அவன் தான் வேண்டா தத் விஷய ஞானமே அமையும் -என்னும்படி இதனுடைய பெருமை
(உணர்வால் பெரும் பதம் அடைந்து என்னாமல் உணர்வே பெரும் பதம் என்றவாறு )
திரிந்து
விஷயங்கள் தான் சவாதி ஆகையாலே அவற்றில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாமை மூட்டி மீண்டேன்
(அளவுக்கு உட்பட்டவை விஷயாந்தரங்கள்)
தெரிந்து -என்று பாடம் ஆகில் –
ஞானம் பிறந்தவாறே எல்லாம் இருந்தபடியே தெரிந்தது
ஆகையால் முன்பு எல்லாம் மிருட்சியாய் போந்தமை தோற்றுகிறது
நாடினேன் –
ஞானம் பிறந்தவாறே –
நாம் கீழ் பட்டது என் -மேல் படப் புகுகிறது என் -என்னும் ஆராய்ச்சி பிறந்தது
நாடி –
இதர விஷயங்களைப் பெற வேணும் என்று புத்தி பூர்வகமே ப்ரவர்த்தித்தாலும்
அநர்த்தாஹமாம் அத்தனை போக்கிப் பலிப்பது ஓன்று இல்லை
பகவத் விஷயத்தில் ஆராய என்று இழிந்த மாத்ரத்திலே பல வ்யாப்தி உண்டு
(த்வேஷம் போக்கி அறிய ஆசை வந்ததுமே பலன் இங்கு)
நான் –
ஓடினேன் என்ற நான்
ராவண பவனத்திலே நெடு நாள் அவன் எச்சில் தின்று வளர்ந்தவன்
ஒரு முழுக்கு இடாதே ஸ்ரீ ராம கோஷ்டிக்கு ஆள் அனால் போலே
ஸ்ரீ வேல் வெட்டி நம்பியார் ஸ்ரீ பிள்ளை கிழக்கே முக்காத மாற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஒரு திருக் கார்த்திகையிலே புறம்பே சிலரைக் கேட்டால் -எளியன் என்று இருப்பர்கள்
இது பரிஹரிக்க வல்லாரும் இல்லை-
இத்தை சொல்லி வர காட்ட வேணும் என்று ஒரு ஆள் கொடுத்து வரக் காட்டினார் –
அது என் என்பது என்னில் –
ஸ்ரீ பெருமாள் கடலைச் சரம் புகுகிற இடத்தில் ப்ராங்முகத்வாதி நியமோபேதராய்க் கொண்டு சரணம் புக்கார் –
இதர உபாயங்களோபாதி பிரபத்தியும் சஹாயாந்தர சாபேஷமோ -என்று வரக்காட்ட –
அந்த உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று –
உபாய பரிக்ரஹம் பண்ணினவருடைய ஸ்வபாவத்தாலே வந்தது –
ராஜச ஜாதியார் ஆவார் தண்ணியராய் அநதிகாரிகளாய் இருக்க அவர்களிலே ஒருவனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று இவருக்கு உபதேசித்தான் –
அவன் பக்கல் நியதி கண்டிலம் -இவர் பக்கலிலே நியதி கண்டோம் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் –
அநதிகாரியானவனுக்கு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –
கண்டு கொண்டேன் –
தனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்
தாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –
நான் கண்டு கொண்டேன் –
கெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை
நாராயணா
பிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே
திருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )
பல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-
(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)
என்னும் நாமம் –
என்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி
நாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –
இச்சை பிறந்த போதே காலம் –
சொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது-
(மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)
ஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்
கங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
இந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-
————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .