Archive for May, 2013

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -மந்தி பாய் வட வேங்கட மாமலை–

May 18, 2013

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3

————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
மூன்றாம் பாட்டு –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ  கமலத்திலே வீசிற்று –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —

மந்திபாய் –
ஸ்ரீ திருமலையில் பலாக்கள் வேரே  பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபலத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புக -மற்றை
மேல் பழத்திலே கண்ணை யோட்டி -இத்தை விட்டு -அதிலே பாய்ந்து தாவா நிற்கும் அத்தனை யாய்த்து –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே யாய்த்து அவைகளும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே
மந்தி பாய் –
ஒன்றை ஒன்றை பற்றி மாலையாக நாலா நிற்கும் –
திருச் சின்ன குரல் கேட்டவாறே பாய்ந்தோடா நிற்கும் -என்றுமாம்
பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை
மந்திபாய் –
பலாக்கள் வேரோடு பனையோடு வாசியறப் பழுத்துக் கிடைக்கையாலே
ஒன்றிலே வாய் வைக்கப் பெறாதே தான் வேண்டினபடியே திரியும்படி யாய்த்து –

வட வேங்கடம் –
தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம் –
போக்யதை அளவற்று இருக்கை –
உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம் –

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
எத்தனையேனும் தண்ணியார்க்கும் முகம் கொடுத்து நிற்கிற இந் நீர்மையை
அனுசந்தித்து நித்ய சூரிகள் வந்து படுகாடு கிடப்பது இங்கே யாய்த்து
மேன்மையை அநுபவிக்கும் அத்தனை இறே -அங்கு –
சீல அநுபவம் பண்ணலாவது -இங்கே இறே
நித்ய சூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –

அரங்கத்து அரவின் அணையான் –
அங்கு நின்றும் இங்கே சாய்ந்தபடி –
பரம பதத்தின் நின்றும் அடி ஒற்றினான்
திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது –
அங்கு நின்றும் வடக்குத் திருவாசலாலே கோயிலே சாய்ந்தான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் –
ராவண வதம் பண்ணித் தெற்கு திரு வாசலாலே வந்து சாய்ந்த வித்தனை -என்றுமாம் –

அரவின் அணையான்
திரிகிறவன் சாய்ந்து அருளினால் உள்ள அழகு
அரவு
நாற்றம் குளிர்த்தி மென்மையும்

அரங்கத்து அரவின் அணையான்
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் -ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு கிடக்க விட்டுப் போந்து –
கடல் கரையிலே வளைப்புக் கிடந்தால் போலே -சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன்
என்று வளைப்புக் கிடக்கிறான்
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-

அந்தி போல் நிறத்தாடையும்
சந்த்யா ராகம் போலே இருந்துள்ள திருப் பீதாம்பரம்
அரைச் சிவந்த வாடை -பின்னாட்டுகிற படி
அதன் மேல் –
இவ் வழகின் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர்-

அயன் -இத்யாதி –
சதுர தச புவன ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தின்
மேலதன்றோ -சதுர்முகன் ஸ்ருஷ்டி பூர்வ காலத்திலே யாகிலும் இப்போது ப்ரஹ்மாவுக்கு
உத்பத்தி ஸ்தானம் என்று கோள் சொல்லித் தரா நின்றது –
திரு நாபீ கமலம் -எழில் உந்தி இளகிப் பதிக்கை -ப்ரஸவாந்தஞ்ச யௌவனம் -என்கிறபடி
அன்றிக்கே இருக்கை

அடியேன்
பதிம் விச்வச்ய -யச்யாச்மி-என்கிற பிரமாணத்தாலே அடியேன் -என்கிறார் அல்லர்
அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே
என்னுடைய நல் ஜீவனானது திரு நாபீ கமலத்தது அன்றோ -என்கிறார்
விடாமைக்கு பற்றாசு -மருடியேலும் விடேல் கண்டாய் -என்னுமா போலே –

இப்பாட்டில்
பெரிய பெருமாள் பக்கலில் திருவேம்கடமுடையான் தன்மையும் உண்டு என்கிறார்-

—————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

மூன்றாம் பாட்டு -மந்தி பாய் –

திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ  கமலத்திலே வீசிற்று –

முதல் பாட்டில் -ஆதி -பிரான் என்று ஜகத் காரண பூதனாய் -சர்வ ஸ்மாத்பரனாய் இருக்கும் என்று
சொல்லக் கேட்டவர்கள் -ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் -என்று மூவர் ஜகத் காரண பூதர்
என்று பிரசித்தமாய் இருக்க -இவனே ஜகத் காரண பூதன் என்று அறியும்படி என் என்ன –
சாஸ்திர முகத்தாலே நம்முடைய காரணத்வத்தை பிரகாசிப்பித்தோம் ஆகில்
அது கர்மாதீநமான ருஸ்யநுகூலமாக -கமுகின் நிரை போலே -அயதாவாக பிரகாசிக்கும் என்று பார்த்தருளி-

த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரி தயமித மத்வை தமதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி ஸிவ நிதாநம் பகவதஸ்த தன்யத் ப்ரூ பங்கீ பரவதிதி ஸித்தான்யதி ந -என்றும் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பார் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
முதல்வா நிகரில் அலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரில் இலகு தாமரையின் பூ -என்றும்
சொல்லுகிறபடியே
தன திரு நாபீ கமலத்திலே -ஜகத் காரண பூதராக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்களை சிருஷ்டித்துக் காட்ட
அந்த நாபீ கமலம் அம்முகத்தாலே தன்னுடைய மேன்மையையும் அழகையும் காட்டி
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற என்னுடைய மனஸை தன் பக்கலில் இழுத்துக்
கொள்ளா நின்றது -என்கிறார்
அனுபாவ்யத்தை எல்லை கண்டு மீளுதல்
தம்முடைய ஆதரம் மட்டமாய் மீளுதல் செய்கிறார் அல்லரே
தம்முடைய சாபல்யம் அடியாக இழுப்பு உண்கிறார் இத்தனை இறே-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்-சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-

கீழ்ப் பாட்டில் -உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -கடியார் பொழில் அரங்கத்தம்மான் -என்றது –
இந்த லோகங்களை அடைய தன் திருவடிகளாலே அளந்து கொண்டார் பெரிய பெருமாள்
என்றாரே -அங்கனே சொல்லாமோ –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் -என்று அன்றோ நம் ஆழ்வார் வார்த்தை –
திருவேம்கடமுடையான் திருவடிகளைக் காண வேண்டும் என்று -வழிபாடு
செய்யும் சூரிகளும் எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று
அன்றோ பிரார்த்தித்தது -ஆகையாலே இந்த பூமியை அடைய திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக்கையாலே -உலகம் அளந்த
பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறமவனுமாய் -தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
என்கிறபடியே அண்டமுற நிவர்ந்த நீண் முடியனுமாய் நிற்கின்றான் திருவேங்கடமுடையான் அன்றோ என்ன –
அந்த திருவேங்கடமுடையான் ஆகிறானும் இங்குக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளே -என்கிறார்-

மந்திபாய் வடவேங்கட மாமலை –
திருப் பீதாம்பரத்தின் அழகை அனுபவிக்கச் செய்தே -திரு நாபீ கமலத்தின் அழகிலே
தாம் இழுப்பு உண்ட சாபலத்துக்கு போலியாய் இருக்கையாலே குரங்குகளை
நிதர்சனமாக சொல்லுகிறார் –
மந்தி பாய் –
திருமலையிலே பலாக்கள் வேரே பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடைக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபல்யத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புகுகிறவை
மற்றைக் கொம்பில் பழத்தில் கண்ணை யோட்ட -இத்தை விட்டு அதிலே தாவப் பாய்ந்து திரியா
நிற்கும் ஆய்த்து -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே
மந்தி பாய் –
ஒன்றை ஓன்று பற்றி நாலா நிற்கும்
திருச்சின்னம் கேட்டவாறே பாய்ந்து ஓடா நிற்கும் என்றுமாம்-

பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை-

வடவேங்கடம் –
திருமலை என்னாதே வடவேங்கடம் -என்கிறது தமிழுக்கு எல்லை நிலம் அதுவாக சொல்லுகையாலே
வேத சப்த உபப்ரும்ஹண சப்தங்களால் அன்றிக்கே தம்முடைய ஜந்ம அனுரூபமாக
தாம் கவி பாடுகிற சப்தம் நடையாடுகைக்கு எல்லை அதுவாகையாலே சொல்லுகிறார் –

மா மலை –
1-போக்யதையின் மிகுதியைச் சொல்லுகிறது ஆதல் –
2-பரன் சென்று சேர் -என்றும் -முன்னம் அடைமினோ -என்றும் சொல்லுகிறபடியே
சேஷியானவன் தன்னுடைய ரஷகத்வ சித்திக்காகவும்
3-சேஷ பூதரானவர்கள் தங்கள் ஸ்வரூப சித்திக்காகவும் வந்து சேருகையாலே வந்த
ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆதல் –
4-சூரிகள் பரம பதத்தின் நின்றும் திருவேங்கடமுடையானை அநுபவிக்க வரும் போது
தன் சிகரத்தில் இளைப்பாறி வரலாம்படி யிருக்கிற உயர்த்தியைச் சொல்லுகிறது ஆதல் –
அன்றிக்கே –
5-உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம்-

வானவர்கள் சந்தி  செய்ய –
நித்ய சூரிகள் -சிந்து பூக் கொண்டு போக ரூபமான சமாராதநத்தைப் பண்ண –
அவன் பரம் பதத்தின் நின்றும் தன் நீர்மை பிரகாசிக்கைக்காக ஆதியான தான் திருமலையிலே வந்தவாறே –
விண்ணவர் கோனான தன்னுடைய மேன்மையை அனுபவித்துக் கொண்டு போந்த சூரிகள்
விரையார் பொழில் வேங்கடவனான நீர்மையை அனுபவிக்கைக்காக திருமலையிலே வருவார்கள் –
அந் நீர்மைக்கு அடியான மேன்மையை அனுபவிக்கைக்காக திருமலையில் நின்றும் பரம பதத்து ஏறப் போவர்கள் –

நின்றான் –
இந் நிலையாலே ஒரு உத்தியோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
பெருமாள் ருச்யமூக பர்வதத்திலே மஹாராஜர் தொடக்கமான வானர சேனைக்கும் இளைய பெருமாளுக்கும் ஒக்க
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையும்
வானராணாம் நராணாஞ்ச கதமாஸீத் சமாகம -என்று -திருவடியை பிராட்டி -இங்கித
ஆகாரங்கள் அறியாத குரங்குகளுக்கும் விலஷணமான மனுஷ்யர்களுக்கும் கூட்டுறவு உண்டான படி எங்கனே –
கத மாசீத் சமாகம -தன் கடாஷ பாதமும் ஆபரண பாதமும் உண்டு என்று அறியாதே
நான் சேர விட -பின்பு -தோழன் நீ -என்ன ப்ராப்தமாய் இருக்க -நான் பிரிந்து
இங்கே இருக்கக் கூட்டரவு உண்டான படி என் என்று கேட்க –
ராம ஸூக்ரீவ யோரைக்யம் தேவ்யேவம் சம ஜாயதே -என்று அவர்கள் சேர்ந்த பிரகாரம் அறிந்திலேன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற இளைய பெருமாளும் அருகே நிற்க அவர் பரிகரமான நான் இன்று வந்து
அந்தபுர பரிகரமாம்படி கூடினார்கள் -என்றான் இறே-

நின்றான் –
நித்ய சூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –

நின்றான்-
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானைக் கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும் குடியேறத் தாங்குவித்துக் கொண்டு –
என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதிகள் சந்த்யா காலத்திலே வந்து சமாராதனம் பண்ணப்
பெரிய மேன்மையோடே  நின்ற நிலையைச் சொல்லுகிறதாகவுமாம் –

நின்றான் –
இந் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
சூரிகள் அந்த உத்தியோகத்தை அடி ஒற்றினவாறே -வடக்குத் திரு வாசலாலே வந்து புகுந்து –
கோயிலிலே படுக்கையிலே சாய்ந்தவனாய் இருந்தான் –
இவன் கிடக்கிறபடியைக் கண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மை -என்கிறதிலே போர ப்ரீதராய்
இனி சம்சாரக் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் என்று மீண்டு போனார்கள்-

ஆஸ்தாந்தே குண ராசிவத் குண பரீவா ஹாத்ம நாம் ஜங்கநாம் சங்க்யா
பௌமநிகேத நேஷ்வபி குடீ குஞ்ஷே ஷூ ரங்கேச்வர
அர்ச்ய சர்வ சஹிஷ்ணு  ரர்ச்சக பராதீநா கிலாத்மஸ்திதி
ப்ரீணீ ஷே ஹ்ருதயாளு பிஸ்தவ தத சீலாஜ் ஜடீ பூயதே -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –

அரவின் அனையான் –
புஷ்பஹாச சுகுமாரமான அவ்வடிவுக்கு போறாத படி காடுகளிலும் கரைகளிலும்
திருவடிகளைக் கொண்டு உலாவின விடாய் எல்லாம் தீரும்படி –
சைத்ய மார்த்தவ சௌ ரப்யங்களை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினான் –
அரங்கத்து அரவின் அணையான் -என்று சீலத்தையும் மேன்மையும் அழகையும் அனுபவிக்கிறார்
அரங்கத்து அரவின் அணையான் –
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் யாவநமே ந ப்ரஸீததி -என்று ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு
கிடக்க விட்டு போந்து -கடல் கரையிலே வளைப்பு கிடந்தால் போலே
சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன் என்று வளைப்பு கிடக்கிறான்-
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-

அந்தி போல் நிறத்தாடையும்
கீழ்ச் சொன்ன சிவந்த வாடை -ஆபரண கோடியிலேயாய் கழற்றவுமாய் இருக்கும்
இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்தாடையும்-என்கிறார்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிறபடி
திருமேனிமயில் கழுத்து சாயலாயே இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம்
சந்த்யா ராக ரஞ்சிதமான காளமேகம் போலே ஆகர்ஷமாய் இறே இருப்பது
அரைச் சிவந்தவாடை -பின்னாட்டுகிறது -என்றுமாம்-

அதன் மேலே –
அவ்வழகுக்கு மேலே
அயனை இத்யாதி –
ஜகத் காரண பூதனான பிரசித்தனான சதுர் முகனை தன் பக்கலிலே உண்டாக்கி
அதடியாக வந்த மேன்மையால் உண்டான அத்வதீயமான அழகை உடைத்தாய்த்து திரு நாபீ கமலம் இருப்பது –
லோகத்தில் உத்பாதகருடைய அழகு பிரசவாந்தமாய் இருக்கும் –
இவனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது அத்தனை-
யோ ப்ரஹ்மாணம் விததாதி தம் ஹதேவம் என்கிறபடியே இவனை சிருஷ்டித்த பின் இறே த்யோதமனாய் ஆயிற்று –

ஓர் எழில் உந்தி –
சௌந்தர்யாக்யா சரிதுரசி விச்தீர்ய மத்யா வருத்தா ஸ்தானால்பத்வாத் விஷமகதி ஜாவர்த்த கர்த்தாபநாபி
ப்ராப்ய ப்ராப்த பிரதி மஜகநம் விஸ்ருதா ஹஸ்தி நாத ஸ்ரோதா பேதம் பஜதி பவதபாததே ஸாபதேஸாத் –
என்கிறபடியே -சௌந்தர்யம் ஆகிற பெரிய ஆறு திரு முடி யாகிற மலைத் தலையின் நின்றும்
அகன்ற திருமார்பு ஆகிற தாழ்வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி யிழிந்து
சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப்பட்டு பின்பு திரு நாபி யாய்ச் சுழி யாறு பட்டது என்னக் கடவது இறே-

அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
அடியேனான என்னுடைய அகவாயில் வர்த்திக்கிற ஹ்ருதயமானது –
உந்தி மேலதன்றோ –
அடியேன் என்று இப்போது இவர் ஸ்வரூப ஞானம் பிறந்து
பதிம் விச்வச்ய -யஸ் யாஸ்மி -பரவாநஸ்மி -தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிற
பிரமாணங்களாலே -அடியேன் -என்கிறார் அல்லர் –
குணைர்த் தாஸ்ய முபாகதராய்ச் சொல்லுகிறாரும் அன்று -அழகுக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –
அதிலும் வடிவழகின் சாமாந்யத்தைப் பற்றி சொல்லுகிற வார்த்தையும் அன்று
ஓர் அவயவத்தின் அழகுக்கு தோற்று சொல்லுகிற வார்த்தை
உயிர் -என்கிறது மனஸ்ஸை –
ஊனில் வாழ் உயிர் -என்று கொண்டாடினாப் போலே
வடிவழகு தமக்கு ரசித்து போக்யமாம்படி இருக்கையாலே இன்னுயிர் என்கிறது
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது-

அந்த திரு நாபி கமலம்
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும்
அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்
பிள்ளை யழகிய மணவாள அரையர் பெருமாள் திருவடிகளில் புக்கு -நாயந்தே அடியேன்
திருவேங்கடமுடையானை திருவடி தொழுது வர வேணும் என்று நினையா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்ய –
வாரீர் அமலனாதிபிரானை ஒருகால் இசை சொல்லி காணீர் -என்று திரு உள்ளமாக
பிள்ளையும் ஒரு கால் இசையை விண்ணப்பம் செய்யக் கேட்டருளி –
இனிப் போகிலும் போம் இருக்கிலும் இரும் என்று திரு உள்ளமாயினார் –
முதலில் கண் படுவது திரு நாபீ கமலம் இறே

இப்பாட்டில் -பெரிய பெருமாள் பக்கலிலே திருவேங்கடமுடையான் ஆன தன்மையும் உண்டு என்கிறது-

——————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே
பகவத் சேஷத்வ பர்யவஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து -அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க
பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் -காதா சித்த சேஷத்வ ஞானம்
உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல அநுகூல உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-வியாக்யானம் –

மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக -கதாகதம் காமகாமா லபந்தே -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –

அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரம பத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு
படிமாவாய் நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான திரு அரவு அணையிலே
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-

அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான சூர்யோதததுக்கு
பூர்வ சந்த்யை போலேயும் புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –
மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –
அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி
ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்
இத்தால் ப்ரதிபுத்தர்க்கு ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று
இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது

மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ச்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –
இன்னுயிர் என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –
ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 18, 2013

நீயும் பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.

பொ-ரை :- நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை, நீண்ட இரவும் குறையும் காலமாயிராமல் கல்பமாக நீண்டுவிட்டது; பகைவர்களை வருத்துகின்ற கொடிய வில்லையுடைய என் காகுத்தனும் வருகின்றான் இலன்; வில்வினையேனாகிய யான் பெண்ணாகப் பிறந்ததனால் இறப்பதற்குரிய வகையை அறிகின்றிலேன் என்கிறாள்.

வி-கு :- நெஞ்சமே பாங்கு அல்லை, இரவும் நீண்டது, காகுத்தன் வாரான், வல்வினையேன் பெண் பிறந்து மாயும் வகை அறியேன் என்க. பிறந்து – பிறந்ததனால். காகுத்தன் – ஸ்ரீ ராமபிரான்; ககுத்தன் வமிசத்தில் பிறந்தவன்.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1எல்லாத் துக்கங்களையும் போக்கும் தன்மையனான ஸ்ரீ ராமபிரானும் வருகின்றிலன், பரதந்திரப்பட்டவள் ஆகையாலே முடியவும் விரகு அறிகின்றிலேன் என்கிறாள்.

நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – 2கங்கையின் அக்கரையைச் சேர்ந்த அன்று, இளையபெருமாளைப் பார்த்து, ‘பிள்ளையாய், நீயும் படைவீடு ஏறப் போ’ என்றாரே அன்றோ, ‘வனவாசம் இவரை ஒழியவும் தலைக்கட்டலாம் என்று மயங்கி;’ அப்படியே, இவரும் தம் திருவுள்ளத்தைப் பார்த்து, ‘நீயும் பாங்கல்லை காண்’ என்கிறார். 3“இம்மைமறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக்கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது, அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார். நீள் இரவும் ஓயும்பொழுது இன்றி ஊழியாய் நீண்டது-1முதலிலே நெடிதான இரவானது, அதற்குமேலே, ஒரு முடிவு காண ஒண்ணாதபடி இராநின்றது. என்றது, அடி காண ஒண்ணாதபடியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இராநின்றது. 2முடிவு காண ஒண்ணாதிருக்கச் செய்தேயும் அடியற்று இருப்பன உண்டே அன்றோ, இது அப்படி இருக்கிறது இல்லை. நின்றவிடத்தில் நின்றும் கால் வாங்கக் கூடியதன்றிக்கே இருத்தலின் ‘ஓயும் பொழுதின்றி’ என்கிறாள். ‘சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று, இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள். அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லையாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்-ஒருத்தியுடைய 3நெடிதானே இரவைப் போக்குவதற்காக வில்லைவளைத்துப் பிடித்த வில்வலியையுடையவனும் வருகின்றிலன். பகைவர்கள்மேல் காயாநிற்பதாய், பகைவர் பக்கல் பெருமாள் கண் பார்க்கிலும் தான் கண் பாராத படியான வில் ஆதலின் ‘காயும் கடும் சிலை’ என்கிறாள். அவனது 1சாங்கம் என்னளவிற் கண்டிலேன். பிராட்டிக்கு உதவினதும் ‘தனக்கு உதவிற்று’ என்றிருக்கிறாளாதலின் ‘என் காகுத்தன்’ என்கிறாள். 2“தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன் தஞ்சம் என்று நான் தஞ்சமாக நினைத்திருக்குமவனும் வருகின்றிலன். 3“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்” என்கிறபடியே, பிராட்டியுடைய விராதியைப் போக்கியது அவளுக்குக் காரியம் செய்தானாக நினைத்திருக்கை அன்றிக்கே, தன்சினம் தீர்ந்தானாயிருக்குமவன். மேலே, “கண்ணனும் வாரானால்” என்றாள்; முடி சூடிய அரசபுத்திரர் அல்லாதார்தாம் தவிருகிறார்கள், முடிசூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? 4ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே! என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள். அன்றிக்கே, பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன் என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள் என்னலுமாம். 5“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படைகோக்க வல்லவர். மாயும் வகை அறியேன்-இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்துபோதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன். வல்வினையேன்-முடிந்துபோதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாதபடியான பாவத்தைச் செய்தேன். என்றது, பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி. 1ஜீவிக்கை தேட்டமானபோது அரிதாம், முடிந்துபோதல் தேட்டமான போது அரிதாம், ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமாமித்தனை அன்றோ. பெண் பிறந்தே – 2பரதந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப்போமோ. பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹாபாவத்தைச் செய்தேன். 3“பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக்கடவதன்றோ.

4“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன்அவர் வரவிட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச்செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ, அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகிலன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து, பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல் தரித்திருந்ததன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி; அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலிபாய்ந்திருக்கும்; பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார்பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே, எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்; தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று, அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; 1அவரைக் கண்ட பிற்றைநாள் நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ. “தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப்போந்தவள், இப்போது அவர்பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் – தன் இச்சைக்கு வசப்பட்ட மரணமாம்போது ஆண்பிறந்த சக்கரவர்த்தி வீடுமன் முதலானோர்களாக வேணுமாகாதே: 1ஞானமுடையவர்களாதல் சுவதந்திரர்களாதல் செய்ய வேணும். அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

காகுத்தனும் வரவில்லையே
மாயும் வகையும் அறியேன் பெண் பாரதந்த்ர்யம் உண்டே
நெஞ்சமே நீயும் பாங்கு இல்லையே
வனவாசம் இளைய பெருமாள் -விட்டு பெருமாள் இருக்க முடியாதது போலே
நெஞ்சமே பந்த மோஷ ஹேது

“மனஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:”-
  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.

இரவு நீண்டு போக
முடிவு காண முடியாவிடிலும் ஆதி -கூட இல்லையே
ப்ராக பாவம்
இரவுக்கு ஆதியும் அந்தமும் இன்றி
கல்பமாய் -ஆனதே
சாத்தன் கூத்தன் சிலர் -இருளன் முனியன் -பெயர் மாறி சோழன் தொண்டைமான் வம்சம்
பட்ட பெயர் கொண்டு வாழுவது போலே கல்பமானதே
அதுக்கும் கூட அவசானம் உண்டே இதுக்கு அதுவும் இன்றி
காகுத்தன் -நெடிதான இரவை முடிக்க வில்லை கொண்டவன்
காயும் -கடும் -பிரதி பஷர் பக்கல் காயும் சிலை -சார்ங்கம் -சாங்கம் பஷ பாதம் வீச வில்லையே
என் காகுத்தன் பிராட்டிக்கு உதவினவன் தனக்கு
தசரதர்க்கு மகனே தஞ்சம் என்று இருக்கும் இவருக்கு வர வில்லையே
முடி சூடியவனும் நோக்கும் குடியில் இருந்தாலும்
ரஷிக்க ஸ்வ பாவம் கொண்டவனே
ககுஸ்தன் -எருது -வம்சத்தில் வந்தும் வாரானால்
எதிரிகள் இருக்கும் இடம் சென்று யுத்தம் செய்தவன்

தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

மாயும் வகையும் அறியேன்
வல்வினையேன் -அதுவும் கிடையாத பாபம் செய்து இருக்கிறேன்
பாபம் விநாச ஹேது -என்பர் ஜீவிக்க ஹெதுவானதே
முடிகை தேட்டமான போது அதுவும் அரிதாம்
பெண் பிறந்தேன் -பரதந்த்ரம் உண்டே
பிதா பத்ரா புத்திர ஸ்வா தந்த்ரம் அர்ஹதி

பெண்பிறவி அப்படிப் பாவத்தின் பலமாகுமோ? என்ன, ‘ஆம்’ என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார் ‘பெண்கள்’
என்று தொடங்கி.

  “நாஸாநாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிபவாகர:
வியாதீநாம் ஆகர: தோயம் பாபாநாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.

பரதந்திரப் பிறவியிலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப் போகாது
என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘நசாஸ்ய மாதா’ என்று தொடங்கி.

“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத்
விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம்
ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.

எனக்கு சமமாக மாதா பிதா கூட கிடையாதே பிராட்டி வார்த்தை –
பாவ பந்தம் -துடிக்கிறார் பெருமாள் இரவு தூங்காமல்-திருவடி வார்த்தை –
பிரிந்து பத்து மாதம் உண்டே –
இவளும் பிரிந்து இருக்கிறாளே திருவடி நினைக்க –
அதற்க்கு பிராட்டி வார்த்தை இது –
பிராணனை விட முடியாதே
இரவல் உடம்பு -போக்கி கொள்ள முடியாதே
நாட்டாருக்கு பிதா மாதா பிராதா-பரந்து -எல்லார் பக்கல் சிநேகமும் எனது பக்கம் வைத்து
பெருமாள் -கடலை அணை செய்து இங்கு இல்லை என்றால் துடிப்பாரே –
விடாய் கொண்டு தண்ணீர் பந்தல் வர -இல்லை போலே

புருஷர் ஞானவான்கள் ஸ்வதந்த்ரர் இல்லையே
அவன் வந்து தானே ரஷிக்க வேண்டும் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 18, 2013

ஆவிகாப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண்மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவிசேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.

பொ-ரை :- ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக்கொண்டு பெரிய விகாரத்தையுடையதாய் ஒப்பற்ற வலிய இருள் மயமான இரவாயே நீண்டுவிட்டது; நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.

வி-கு :- காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய சம்பந்தத்தாலே, நீயும் அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.

கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை ஆவி காப்பார் இனி யார் – உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும் பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்? ஆழ்கடல் மண் விண் மூடி – அளவிட முடியாததான கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி, அந்தப் பூமிக்கும் இடம் கொடுக்கக்கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து. 2காரணப் பொருள்களைக் காரியப் பொருள்களிலே ஒன்று மறைத்தது. மா விகாரமாய் – பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய் இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தையுடைத்தாய்ப் பரமபதத்தையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது. 3விஸ்வரூபத்தைக் காட்டின சர்வசக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி. ஓர் வல் இரவாய்-4திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்ணாதபடி செறிந்திருக்கை. 1இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமையை நினையாமையாலே, இருளை ‘இரவு’ என்கிறாள். நீண்டதால் – ஒரு முடிவு காண ஒண்ணாது.

காவி சேர் வண்ணன் – 2“அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன். என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி. 3இருள் அன்ன மா மேனி அன்றோ. 4கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ. என் கண்ணன்-கம்சன் காவலாக வைத்த தீயோர் கண்படாதபடி இருளிலே வந்து உதவினவன். 5நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ. வாரானால்-6தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீதன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ? 7“வந்தானாகில் அப்போதேவிடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பதன்றோ பெரியார் திருவாக்கு. 1பாவியேன் நெஞ்சமே-உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனாயன்றே உதவாது விட்டது, என்னுடைய சம்பந்தமே அன்றோ. 2என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது, அது உனக்கும் ஒக்குமே அன்றோ. நீயும் பாங்கு அல்லையே-3ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ? 4ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும். 5அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது என்றால் ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்; உனக்கு அங்ஙன் ஒன்று இல்லையே. இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ. 6‘என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று ஒருசேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.

இந்த தசையில் கிரிஷ்ணனும் வரவில்லை
நெஞ்சே நீயும் படுத்துகிறாயே
நீயும் பாங்கு அல்லையே
ஒப்பற்ற இரவு
மலை கடல் மண்ணும் விண்ணும் மூடி இரவு நீண்டு போக
காவி மலர் காயாம்பூ வண்ணம் -காவி கமழ திருக்காட்கரை போலே -கண்ணனும் வாரானால்
உதவுபனும் உதவ வில்லை
நீயும் படுத்த
வ்யாபக -பதார்த்தங்களை வ்யாப்யம் இருள் மறைக்க

“காரணப்பொருள்களைக் காரியப்பொருள்களிலே ஒன்று மறைத்ததற்கு ஒரு
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘விஸ்வரூபத்தை’ என்று தொடங்கி. சர்வசக்தி –
ஸ்ரீ கிருஷ்ணன்

விஸ்வரூபம் காட்டி -அவன் போலே அனைத்தையும் தன்னில் இருள் கொள்ளும்படி
இருட்டு வேற இரவு வேற –
ஓர் வல் இரவாய் திரு ஆழி கொண்டு போக்க முடியாத
நீண்டு முடிவு காண முடியாத
அக்கமலத்து இலை போலும் திருமேனி -இருள் அன்ன மா மேனி –
கருப்பு உடுத்து வரலாமே

“புல்லேந்தீவர பத்ராபம் சதுர்பாஹும் உதீக்ஷ்யதம்
ஸ்ரீவத்ஸவக்ஷ ஸம்ஜாதம் துஷ்டாவ ஆநகதுந்துபி:”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.

3. யானும்என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான் – தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த
அருளென்னும் தண்டால் அடித்து.

என்பது, பெரிய திருவந். 26.

4 “காவிசேர் வண்ணன்” என்று இப்படிச் சொல்லுவதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘கறுப்புடுத்து’ என்று தொடங்கி. கறுப்பு உடுத்து வருவார்
– நகரிசோதனைக்காக மாறுவேடம் பூண்டு இரவில் வருகின்ற அரசர்கள்.

5. தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.-  என்பது, பெரிய திருமொழி.

வாரானால் -தாமச பிரகிருதிகளை அழிக்க வருபவன் தமாசை அழிக்க
வந்தாலே விடுவு
பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
நெஞ்சமே நீயும் கண்ணன் போலே
உதவும் சம்பந்தம்
எனது சம்பந்தம் -அதனாலே உதவாமல் போக -நெஞ்சே அது போலே நீயும்
என் மார்போடே அணைந்து உதவாதவன் போலே
ஓர் ஆகாரத்தால் சாகாத்யம் இருந்தால் ஓர் ஆகாரத்தில் வேறு பாடு கூடாதோ
நீயும் -உம்மைத் தொகை –
அவனை போலே எல்லா விஷயத்திலும் இப்படி இருக்க வேண்டுமா
ஸ்வ தந்த்ரனாய் -அவன் -பரதந்த்ரனாய் வந்தான் நான் இட்ட வழக்காய் இருந்தான்
நெஞ்சமே நீயும் பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் உனக்கு இப்படி பண்ணலாமா-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 18, 2013

நான்காம் திருவாய்மொழி – “ஊரெல்லாம்”

முன்னுரை

    ஈடு :- 1“நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்” என்று பெரியதொரு மனோவேக ரசமாய் அன்றோ மேலே சென்றது, 2மடல் ஊரப் பெறுகைதான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம்படி பலக்குறைவு அதிகரித்தது; 3இனித்தான், மடல் ஊரும்போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுதவேணுமே, அதற்கு நேரம் இல்லாதபடி 4“ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல், இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அதுதான் மாலை நேரம் அளவு அன்றிக்கே சராசரங்கள் முற்றும் அடங்கிய 5நடு இரவாய், பழிசொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற, எல்லாரும் ஒருசேர உறங்குகையாலே ஓர் உசாத்துணையும் இன்றிக்கே, இவ்வளவிலே, பிரளயஆபத்திலே உதவும் தன்மையனுமாய் எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க, அவைதாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே 1ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்; 2“விஷஸ்யதாதா-இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ? மே-கிடைத்தால்தான் எனக்கு இது சம்பவிக்குமோ? சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிதுபோது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத்தான் தருவார் உண்டோ? வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற்கொலைக்குச் சாதனமானதைத்தான் தருவார் உண்டோ?” 3இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, 4‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவராய் இருந்தோம்; கிராமப்பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க; அவன் சர்வர்க்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவனாகில், கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை, நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குணஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.

        ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.

    பொ-ரை :- ஊரிலேயுள்ள மக்கள் எல்லாரும் உறங்கி, உலகம் எல்லாம் செறிந்த இருளாகி, நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் தெளிந்து ஒரே நீண்ட இரவாகி நீண்டு விட்டது; உலகங்கள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் புசித்த நம் பாம்பணையான் வருகின்றான் இலன்; தோழீ! வலிய வினைகளைச் செய்த என்னுடைய உயிரை இனிக்காப்பவர்கள் யார்? என்கிறாள்.

வி-கு :- துஞ்சவும் இருளாகவும் தேறவும் இக்காலம் நீள் இரவாக நீண்டது என்க. துஞ்சுதல் – உறங்குதல். ஆல் – அசைநிலை. அன்றி, ஆகையாலே என்று பொருள் கோடலுமாம்.

இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

ஈடு :- முதற்பாட்டு. 1பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னை விரஹநோயாகிய பிரளயம் கோக்க, வந்து உதவாத பின்னர், இனி, நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ? என்று தன் ஜீவனத்திலே நசை அறுகிறாள்.

ஊர் எல்லாம் துஞ்சி-2ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம்மடல் ஊர்வது என்கிறாள். 1சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள். 2திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று. 3அன்றிக்கே, இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக்கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒருசேர உறங்கினபடியைச் சொல்லிற்று ஆகவுமாம். நாக பாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு ஜாம்பவான், மஹாராஜர், திருவடி தொடக்கமானார் தாம் உணர்ந்திருந்தமை உண்டே அன்றோ; இங்கு அங்ஙனம் ஒருவர் இலராயிற்று. ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத்துணையாவாரோடு வாசி அற, எல்லோரும் ஒருசேர உறங்கினார்கள் என்கை. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது. ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பேயுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில், உலகு எல்லாம் நள் இருளாய் – பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று. நள் என்று, நடுவாதல், செறிவாதல்; நடுவான இருள், செறிவான இருள் என்றபடி. அன்றிக்கே, எல்லாப் பொருள்களினுடையவும் ஒலி அடங்கில் இராத்திரி தனக்கெனவே ஓர் ஒலி உண்டு; அதனைச் சொல்லுகிறதாதல். ஆக, கண் களுக்குப் புலப்படுவது ஒன்றும் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

நீர் எல்லாம் தேறி-தண்ணீரில் வசிக்கும் பிராணிகள் முழுதும் ஆழ இழிந்து, அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. ‘ஊர் எல்லாம் துஞ்சி’ என்கையாலே, சிலர் வார்த்தை கேட்டுப் போது போக்குமது இல்லை என்கை. ‘உலகெல்லாம் நள்ளிருளாய்’ என்கையாலே, கண்களுக்குப் புலப்படும் பொருள் ஒன்று இல்லாமையாலே ஒன்றைக் கண்டு போது போக்குமது இல்லை என்கை. ‘நீர் எல்லாம் தேறி’ என்கையாலே, முதலிலே காதுக்கு விஷயம் இல்லை என்கை. இவைதாம் மற்றைய இந்திரியங்களின் காரியங்கட்கும் உபலக்ஷணமாய் இருக்கின்றன. 1பகலிலே ஆனால் இந்திரியங்கள் தனது தனது விஷயங்களிலே பல்லி பற்றுகையாலே ஆற்றாமை அரையாறு பட்டு இருக்கும், இராத்திரியில் எல்லா இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்கு ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு இருக்கும். ஓர் நீள் இரவாய் நீண்டதால்-2பண்டும் இராத்திரி நெடுகாநிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று. மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு, அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையாயிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள். பார் எல்லாம் உண்ட-பிரளய ஆபத்திலே இன்னார் இனியார் என்னாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன். 3பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும்உண்டு போலே காணும்; 1பிரளயத்தில் சிலர் மடல் எடுக்கப் புக்கு அதுவும் மாட்டாத நிலை உண்டாகி, அன்று உதவி செய்தது. என்றது, தங்கள் தங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாதபடியான ஆபத்து வந்தால் உதவுமவன் என்றபடி. நம் பாம்பு அணையான் – திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவன். என்றது, உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி. 2ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் படியும் இல்லையாயிற்று, சம்சாரிகள் படியும் இல்லையாயிற்றே நமக்கு! என்கிறாள். 3நித்தியசூரிகளை நித்திய அநுபவம் செய்விக்கும்; சம்சாரிகளுக்கு விருப்பம் இல்லாதிருக்கவும் தான் அறிந்ததாக ஆபத்தையுடையரானவாறே வந்து ஆபத்தைப் போக்குவான் தன்னுடைய சம்பந்தத்தாலே. 4தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்தபடியாலே ‘நம்’ என்கிறாள்.

வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ. 5“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்” என்னக்கடவதன்றோ. இனி-இவ்வளவில், ஆவி காப்பார் ஆர் – பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ? 1“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்கிறபடியே, ‘இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவுபடுகிற தோழி காக்கவோ, ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ, பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ? எல்லே – என்ன ஆச்சரியம்! அன்றிக்கே, ‘எல்லே’ என்று தோழியை விளிக்கிறாள் ஆதல். 2மேலே, “அன்னையரும் தோழியரும்” என்று அவர்களும் உறங்கினார்கள் என்னாநிற்கச் செய்தேயும், தன் ஆபத்தே செப்பேடாக ‘இவ்வளவில் அவள் உணர்ந்திருக்கச் சம்பாவனை உண்டு’ என்று நினைத்து ‘எல்லே’ என்கிறாள். வல் வினையேன் – எல்லாரையும் காப்பாற்றுகின்றவனுமாய், உடம்போடு அணைந்தாரைப் பிரியாதவனுமாய் இருக்கிற அவன் வந்து உதவாதபடியாய் இருக்கிற மஹாபாவத்தைச் செய்தேன். 3வல்வினையேன் ஆவி-பிரிவே காரணமாக நூறே பிராயமாயிருக்கிற என்னுடைய உயிரை. 4‘பிரிவிற்குச் சிளையாத இது இனி முடியப் புகுகிறதோ’ என்று இருக்கிறாள். 5ரக்ஷகனானவன் வந்திலன், எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.

முடிகை தேட்டமாக -ஆழ்வார் இருந்த அளவிலே
சர்வ ரஷகத்வம் காட்டி
திருப்பாற் கடலில் சயனித்து –
உம்முடைய ரஷணத்திலும் சித்தமாக இருக்கிறேன்
க்ரம ப்ராப்தி வேண்டாமோ

பிராட்டி அப்படி முடியத் தேடினாளோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘விஷஸ்யதாதா’ என்று தொடங்கி.

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி

விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி
ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா – விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்
எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா – ஆயுதத்தையாவது. வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.

குண ஞானத்தால் தரித்து தலைக்கட்டுகிறார்
குண்டலிதம் -சிலர் பின்பு
அபிநிவேச அதிசயத்தால் ஸ்வரூப அஅனுரூபமான பிரவ்ருதியில் இழிந்து
அவன் அசந்நிகிதன் ஆகையாலே
கால தாமதம் பொறுக்காமல் ஆர்த்தராய் ஆற்றாமை மிக்கு கூப்பிடுகிறார்
நாயகி நிலையில்

ஜீவனத்தில் நசை -இன்றி பேச
ஊரெல்லாம் துஞ்சி –
கவ்வை எருவாக –தாரகமாக -சொல்லி மடலூர -முடியவில்லை
இனி மேல் யார் பழி தாரகமாக மடலூருவது
எல்லாரரும் தூங்க
அசோகவனம் ராஷசர்கள் எல்லாம் தூங்க -அது போலே
இவள் தசை கண்டு சோகித்து கோரை சாய்ந்தால் போலே அனைவரும் தூங்க
நாக பாசம் அனைவரும் கட்டுண்ட பண்ணியது போலே
பிரம்மாஸ்திரம் ஜாம்பவான் திருவடி உணர்ந்து இருந்தது உண்டே -இங்கு அப்படி கூட யாரும் இல்லை
பழி ஹிதம் சொல்லுவார் வாசி அற -உசாவி கால ஷேபம் செய்ய முடியாமல் இருக்க –

உலகு அடைய இருளாய்
நள் இருள் நடு இரவு -செறிந்த இருள் -நள் சப்தம் -அனைத்து சப்தங்களும் அடங்க –
கும் இருட்டு
நீர் தத்வங்கள் தொநியும் அடங்க –
வார்த்தை கேட்டு போது போக்க முடியவில்லை -வாக் இந்த்ரியம் வேலை இல்லை
முடியாது கண்ணுக்கு இலக்கு இன்றி கண்டு பொழுது போக்க முடியாது
காதுக்கும் விஷயம் இல்லை
சர்வ இந்த்ரியங்களுக்கும்
பகலில் ஸுவ விஷயங்களில் பல்லி  பட்டால் போலே பற்று இருக்கும் ஆற்றாமை அரை
ஆரு பற்று இருக்கும் -இரவில் மிக்கு இருக்குமே –
ஓர் நீள் இரவாய் நீண்டதாய்
பகல் கலவாத இரவாக போனதே
தேவர்கள் இரவு நீண்டு இருந்தாலும் அதுக்கும் அவதி உண்டு
தசிணாயணம் அவர்கள் இரவு
இதுக்கு அவதி இன்றி நீண்டு இருக்க
பார் எல்லாம் ஒக்க ரஷித்தவன் -உண்டு -பிரளய ஆபத்தில் -அன்று செய்தவன் –
இவள் ஒருத்திக்கு அனைவர் ஆபத்தும் வந்ததே -விரக பிரளய ஆபத்து
மடல் எடுக்க ஆசைப்பட்டு அதுவும் முடியாமல் –
தம் தாமால் வந்த ஆபத்து
உகந்தாருக்கு உடம்பு கொடுக்கும் பாம்பணையான்
ஆதி சேஷன் கிடைத்ததும் கிடைக்க வில்லை
சம்சாரிகள் போலேவும் கிடைக்க வில்லை
இரண்டும் இழந்தாள் இவள்
இரண்டு கோடி -சேராத -அவஸ்தை

ஆபத்தை போக்குபவன் சம்பந்தம் காரணமாக
சம்ச்லேஷதுக்கு -நம் பாம்பணையான் -கூப்பிட சக்தி கொடுத்து -முன்பு கூடி –
கதற சக்தியும் கொடுத்தானே
வாரானால் -வயிற்றில் வைத்து ரஷிக்க வேண்டா -உடம்பு கொடுக்க வேண்டாம்
முகம் காட்டினாலே போதுமே
திருக்கண் கடாஷமே துக்கம் போக்குமே

முகம் காட்டினவாறே துக்கம் போமோ? என்ன, அதற்குப் பிரமாணத்தோடு
விடை அருளிச்செய்கிறார் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி.

“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.

இனி -காப்பார் யார்
யான் ரஷிக்கவோ
தோழி ரஷிக்கவோ
தாயார் ரஷிக்கவோ
ஊரார் ரஷிக்கவோ
அவன் ஒருவனே ரஷகன்
எல்லே –ஆச்சர்யம் சம்போதம் முன்பு வாசனையால் தூங்கி இருந்தாலும்

சர்வ ரஷகன் உடம்பு அணைந்த ஆதி சேஷனுக்கு பிரிவு கொடுக்காத -அவனும் காக்காமல் இருக்க –
பிரிவே ஹேதுவாக நூறு பிராயமாக இருக்கும் பாவியேன் ஆவி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற –

May 17, 2013

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2

————————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –

இரண்டாம் பாட்டு –
முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்தபடி சொன்னார்
இப் பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார்-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி -சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் -அர்த்தியாய் வந்து -தன் திருவடிகளை
தலையிலே வையா நின்றால் -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்று உகக்க வேண்டி இருக்க –
அவை அறியாது ஒழிய –
பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் மாதாவைப் போலே உகந்த திரு உள்ளதை உடையவனாய் –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி -என்கிறபடியே-

உலகம் அளந்து –
வகுத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தானும் விடாதே அளந்தது –
உகக்க அறியாமைக்கு -வன் மா வையம் இறே
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி
அண்ம்டமுற –
அண்டம் மோழை எழ
நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே
நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும்படி இருக்கிற திரு வபிஷேகத்தை யுடையவன் –
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி தரிப்பது-

அன்று –இத்யாதி
கண்ட காட்சியிலே ஜிதம் என்ன வேண்டும்படி இருக்குமவன் இறே
எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடைய சக்கரவர்த்தி திருமகன் –
அன்று –
ரஷகனானவன் ரஷ்யதை நோக்கக் கடவராக வந்து நின்ற அன்று –
நேர்ந்த நிசாசரரை
எதிரிட்ட நிசாசரரை
நேர்ந்த நிசாசரர் -என்கிறது திருப்பல்லாண்டு பாட வேண்டும் அழகைக் கண்டும்
எதிர் அம்பு கோப்பதே என்று
நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்
கவர்ந்த
புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை
வெங்கணை
விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை
தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை
காகுத்தன் –
குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-

கடியார் பொழில் –
திரு உலகு அளந்து அருளின இடமே பிடித்து அடி யொற்றி
ராவண வதம் பண்ணி
தெற்கு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினான் –
இன்னமும் வேர்ப்பு அடங்கிற்று இல்லை
திருச் சோலையில் பரிமளம் விடாய்க்கு சிசிரோபசாரமானபடி –
அரங்கத்தம்மான் –
அவதாரத்துக்கு பிற்பாடருக்கும் இழவு தீர கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற படி –
அம்மான்
இங்கே வந்த பிறகு ஈச்வரத்வம் நிலை நிற்கை-

அரைச் சிவந்த வாடை –
உடையார்ந்த வாடை
செக்கர் மா முகில்
திரு மேனிக்கு பரபாகமான திருப் பீதாம்பரம்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றின் மேலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார் –
என் சிந்தனை –
ஆருடைய கூறை யுடையைக் கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது
என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்த பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையை கெடுத்து திரு வோலக்கத்திலே காண்பாரைப்
போலே திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே திரு உள்ளத்தைக் கண்டபடி –

இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்

———————————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை-

இரண்டாம்பாட்டு –
உவந்த -கீழில் பாட்டில்

அரங்கத்தம்மான் திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன
ஒக்கின்றனவே -என்று திருவடிகள் தானே தம்மை விஷயீ கரித்துத் தம் திரு உள்ளத்திலே
பிரகாசித்தபடியைச் சொன்னார்

இப்பாட்டில் -திருவடிகளில் தொடர்ந்த திரு உள்ளம் திருப்
பரியட்டதின் மேல் சேர்ந்தபடி எங்கனே என்னில் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம்
ஆகையாலே போக்யதை அளவுபட்டதும் அல்ல
ஆசை தலை மடிந்ததும் அல்ல
கடலோதம் கிளர்ந் தலைக்ப்புக்கால் உள்ளே கிடந்த தொரு துரும்பு கடலை அளவிட்ட வல்லவே
கரை ஏறுவது -ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனை இறே –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுதுகையால் வந்த ப்ரீதி –
சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -அவாக்ய அநாதர -என்கிறபடியே
பரிபூர்ணனான தான் –
கதாபுநச் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாங்குச வஜ்ர லாஞ்சநம்
த்ரி விக்ரம தவச் சரணாம் புஜத்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்றும் –
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் -என்றும் சிலர் அபேஷியாது இருக்க –

பாதா ருந்துத மேவ பங்கஜா ஜ -என்னும் சௌகுமார்யத்தை யுடைத்தாய் –
பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடவும் பொறாத அந்த திருவடிகளை
காடு மேடுகள் என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே பரப்பினால்
இப்படி உபகரிப்பதே -என்று இவர்கள் உகக்க ப்ராப்தமாய் இருக்க
இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக விலக்காது ஒழியப் பெற்றோமே என்று
இரட்டிக்க புகுந்த திரு உள்ளத்தை உடையனாய் –

க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ -என்று
தம்மோடும் தம்பியாரோடும் உண்டான வாசனையாலே முடியை விலக்குகிறான் என்று
வெறுத்து இருந்த பெருமாள் -இவன் இசைந்து முடியை வைத்த பின்பு உகந்தாப் போலே
இத்தலையில் அத்வேஷமே ஹேதுவாக திருவடிகளை வைக்கப் பெறுகையாலே
மிகவும் ப்ரீதனாய் –
எதிர்த்தலை அறியாது இருக்க தானே உகக்கிற இது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்

உலகம் அளந்து –
வசிஷ்ட சண்டாள விபாகம் -ஸ்த்ரி பும்ஸ விபாகம் -ஜ்ஞான அஜ்ஞ்ஞான விபாகம் –
என்றவற்றைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த படி –
உலகம் அளந்து –
வைத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தான் விடாதே யளந்தது
உகக்க அறியாமைக்கு வன்  மா வையம் இறே

குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இ றே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி
அண்டம்முற –
அண்டம் மோழை எழ
நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே
நீண் முடியன் –
முடிக்கு நீட்சி யாவது -உபய விபூதிக்கும் தரித்த முடி என்று தோற்றும்படி யாய் இருக்கை
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநா மீசதே பி ஸூ நயந் கில மௌளி -என்னுமா போலே
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி நல் தரிப்பது-

ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடிகளுக்கு வளர்த்தி
சொல்லப் ப்ராப்தமாய் இருக்க திருமுடிக்கு வளர்த்தி சொல்லுகிறது -இத் திருவடிகள்
அப்ராப்தமான திருவடிகள் அன்று -ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்றுகைகாக –
தான் அர்த்தியாய் சென்று -அர்த்தித்வத்தை மாறாதே அவன் கொடுத்த படியாலே உவந்த
உள்ளத்தனாய் –
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே
உலகம் இத்யாதி –
திருக்கையில் நீர் விழுந்த அளவிலே அந் நீரே பற்றாசாகக் கொண்டு வளர்ந்து அளந்து கொண்டான்-

ஆக  இப்படி அர்த்தித்வ நிரபேஷமாக லோகத்தை இருந்ததே குடியாக திருவடிகளாலே
விஷயீ கரித்தால் போலே –
உம்முடைய நிகர்ஷம் பாராதே
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்று நெஞ்சிலே வந்து புகுந்தானே
யாகிலும் -உம்முடைய சித்தமானது ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே
நாஸ்பதீ -என்கிறபடியே அங்கு கால் பொருந்தி இருக்க மாட்டானே
ஆகையால் அத்தை நீர் போக்கப் பாரீர் என்ன
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
கண்ட காட்சியிலே ஜிதந்தே என்ன வேண்டி இருக்கிறவன் இறே
எதிர்த்த பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடையவன் –

பெருமாளும் -ச்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே பிராட்டியும் நித்ய சூரிகளோபாதி
சுற்றம் எல்லாமான இளைய பெருமாளுமாக தண்ட காரண்யத்திலே போய் புக்கு
பரதன் அங்கு வந்து பின்னாட்டுகையாலே அங்கு இருக்க மாட்டாதே ஜன ஸ்தானத்திலே
போய் புக்கு அங்கு வர்த்திக்கிற ரிஷிகள் பாடே சென்று -ஆவாசம் த்வஹ மிச்சாமி ப்ரதிஷ்ட மிஹ காநநே –
என்று உங்கள் சாகாசத்திலே இருக்கப் பாரா நின்றோம் என்று இடம் தர வேணும் என்ன
அவர்களும் அங்கே இருக்க அனுமதி பண்ணி -நன்றாக பர்ண சாலை அமைத்து
வாஸ்து பலிகளும் இட்டு -அங்கே எழுந்து அருளி நிற்க –

அவ் விருப்புக்கு விரோதிகளாய் கர தூஷணாதிகள் எதிர்க்க
அவர்களை நோக்கி அந்த ரிஷிகள் கோத்த ஓர் அம்பு உண்டோ
அவர்கள் ஏஹி பஸ்ய சரீராணி -என்னும்படி உரு மாய்ந்த அந்த ராஷசரை
தம்முடைய திருக்கை திருச் சரங்களால் -உருக்கெட வாளி பொழிந்த சக்கரவர்த்தி திரு மகன்
என்னுடைய ராகாதி தோஷங்களை -விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்து
அரவத் தமளியினோடும் அரவந்தப் பாவை தன்னோடும்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையும் படி புகுந்து இருக்கிறவன் -என்கிறார்-

அன்று –
ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று
ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –
நேர்ந்த நிசாசரரை –
அக வாயில் இருட்சியே யன்றிக்கே -சர்ப்பம் உணர்த்தி யற்று ராத்ரியிலே புறப்படுமா போலே
பர ஹிம்சைக்கு ஏகாந்தமான காலத்திலேயே வந்து எதிர்ந்த கர தூஷணாதி ராஷசரை
நேர்ந்த நிராசரர் என்கையாலே விபீஷணாதிகளை வ்யாவர்த்திக்கிறது
அன்று நேர்ந்த நிசாசரர் –
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண
மங்களாநி பிரயுஜ்ஞாநா ப்ரத்ய க்ருஹ்ணன் த்ருடவ்ரதா -என்றும் –
ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம பவன் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரஸா சதி -என்றும்
அநுகூல ப்ரதிகூல விபாகம் அற இவனைக் கண்ட மனுஷ்யர் மங்களா சாசனம் பண்ணுவார்-

அடைவு  கெட வாய் புலத்துவார் ஆகிற காலத்திலே -இவர்கள் இங்கனே சிலர் எதிர்த்து
நசித்துப் போவதே என்று வருந்துகிறார் இவர் –
ராமோ ராமோ ராம இதி -பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது இத்தனை என்று இறே நிர்வஹிப்பது –
இத் த்ரைவியத்துக்கு பொருள் –
ரூப ஔதார்ய குணங்களை வென்ற வடிவழகும் –
அத்தை அநுபவிக்கக் கொடுக்கையும் –
கொடா நின்றால் இறுமாப்பு அற்று இருக்கையும் –
பும்ஸாம் தாருண் யஞ்ச -என்று ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம்
உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்லுகிறது
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆகிறது-

ப்ரஜாநாம் -மாதா பிதாக்கள் அன்று -வசிஷ்டாதிகள் அன்று -ஜனி தர்மாக்காளுக்கு

கதா -லோக யாத்ரைக்கு உறுப்பாம் வார்த்தைகளும் பெருமாளைப் பற்றி அல்லாது இராதே
ராமபூதம் ஜகத் பூத் -ஜகம் அடைய ராமாத்வைதம் ஆய்த்து
ஜகதா தம்யமிதம் சர்வம் என்கிற பொது அல்ல
ராமபூதம் -என்று ராமாத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வதைத்தை வ்யாவர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு விரல் கொண்டு லீலாரசம் அனுபவிக்கிற காலத்திலேயோ -என்னில்
ராமே ராஜ்யம் ப்ரஸாஸ தி -தஹ பச -என்கிற காலத்தில்-

அன்று –
இப்படி எல்லாரும் ஒக்க ப்ரவணர் ஆகிற அன்று –
நேர்ந்த நிசாசரரை
இவ்வடிவழகிலே தோற்று விழாதே -சர சச்த்ரங்களைக் தூவிக் கொண்டு வந்து எதிர்ந்த ராஷசரை
கவர்ந்த –
மாரீச சுபாஹூ த்வத்துக்கு அப்பால் ஓர் இரை பெறாதே கிடக்கிறது ஆகையாலே இரை
பெறாத சர்ப்பம் போலே எதிரிகள் மேல் விழுந்து க்ரசித்த படி-

வெங்கணை
அவன் தன்னைப் போலே யாய்த்து அம்புகளும் -இருப்பது –
தீப்த பாவக சங்காசை சிதை காஞ்சன பூஷணை -என்கிறபடியே தொடுக்கிற போது
அம்பாய் -எதிரிகள் மேலே போய் விழும் போது எரிகிற காலாக்நி போலே யாய்த்து விழுவது-

நத்வாம் இச்சாம் யஹம் த்ரண்டும் ராமேண நிஹதம் சரை -என்று
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்திலே புக்கு ஸ்ரமம் தீர மாட்டாதே சாவை காண
மாட்டு கிறிலேன் -சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து
நில்லாதே -என்கிறபடியே
நீயும் நானும் கூடி -இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுவாராய்
ஆள் படப் போகாதே -என்றான் இறே விபீஷணன்
வெங்கணை –
வெஞ்சிலை யினின்றும் புறப்படுகிறவை ஆகையாலே வெங்கணை யாய் இருக்கும் இறே
அவன் அனுகூலருக்கு -புனலுருவாய்-பிரதி கூலருக்கு அனலுருவாய் -இருக்குமா போலே
பொன் எழுதின பகழிகளும் தானுமாய் இருக்கையாலே பிரதிகூலருக்கு பயங்கரமாய்த்து இருப்பது -இச் சரங்களும்

ஆக -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -என்று
கோ குணவான் -என்று பிரதம ப்ரச்னமாய் -ஆஸ்ரயணீயமான சீல குணத்தை சொன்னாராய்
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று -அநந்தரமாக –
கச்ச வீர்யவான் -என்று சொன்ன விரோதி நிரசனத்துக்கு உறுப்பான வீர குணங்களைச் சொல்லுகிறார் –
ஆக -மாம் -அஹம் -என்கிற இரண்டின் உடைய அர்த்தமும் அனுசந்தித்தாராய் விட்டது –
உலகம் அளந்து -என்று திருவடிகள் விக்ரமித்தபடியை சொல்லி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று திருத் தோள்கள் பராக்ரமித்தபடி சொன்னார் –
காகுத்தன் -இந்த இரண்டு குணமும் உபய விபூதி நாதத்வ ப்ரயுக்தம் அன்று –
ககுஸ்த வம்சத்திலே பிறந்து படைத்தான் ஆகையாலே ஔத்பத்திகம் என்றபடி –
ஆக -கர தூஷணாதிகளை -சிலையால் வாளி பொழிந்த படி சொல்லிற்று –

கடியார் பொழில் அரங்கத்தம்மான் –
திரு உலகு அளந்து அருளினதால் வந்த ஸ்ரமமும் -ஜனஸ்தானத்தில் ராஷச வதம்
செய்து அருளின ஸ்ரமமும் ஆறுகைகாக -பரிமள பரிதமான சோலையை உடைத்தாய் –
கோயிலிலே வந்து -அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்தான் –
பரிவராய் இருப்பர் -கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -அடியார் அல்லல் தவிர்த்த வசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய வசைவோ பணியாயே -என்று நீ இங்கு வந்து ஹிரண்ய ராவணாதிகளை
நிரசித்ததால் வந்த ஸ்ரமம் தீரவோ -த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆயாசத்தால்
வந்த ஸ்ரமம் தீரவோ -பணியாய் -உன் ஸ்வரம் கொண்டு நாங்கள் அறியும்படி சொல்லாய்
என்றார்கள் இறே
பிள்ளாய் -கிடக்கும் போது ஒரு மூலையில் ஒருவரும் அறியாதே கண் வளர்ந்து அருளினால் ஆகாதோ
இன்னமும் அவர்கள் மறு கிளை கிளைத்து அவன் எங்கே என்று தேடிக் கொடு வரிலும்
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ -என்று வயிறு பிடித்தார் இறே
அது போலும் அல்ல கிடீர் இவன் கண் வளர்ந்து அருளுகிறபடி என்கிறார் இவர்-

கொடிகள் த்ருஷடி கோசரம் ஆனால் இறே அவன் கிடக்கிறபடி அறியல் ஆவது
இது அங்கன் அன்றே -தூராத் கந்தோ வாதி -என்கிறபடியே தூரச்தரையும் அழைக்குமது இறே
சர்வ கந்த வஸ்து கண் வளர்ந்து அருளுகையாலே -கடியார் பொழிலாய் இருக்கும் இறே
திருச் சோலையில் பரிமளம் விடாயருக்கு சிசிரோபசாரம் ஆம்படி
அரங்கத்தம்மான்
அவதாரத்துக்கு பிற்பாடார் ஆனாரும் இழவாதபடி இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது
ப்ராப்தி யாலே இறே –
ஆக -இத்தால் போக்யதை சொல்லிற்று-

அரைச் சிவந்த வாடையின் மேல் –
மேக ச்யாமமான திருவரைக்கும் பரபாக ரச அவஹமான திருப் பீதாம்பரத்தின் மேல்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றிலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார்
என் சிந்தனையே –
ஆருடைய கூறை வுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது –
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் -அத்ருஷ்டத்திலே வென் நரகிலே தள்ளவும் கடவதான
உடைகளிலே பிரவணமான என் மனஸ் -த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா
பச்யந்திக்கு விஷயமான திருப் பீதாம்பரத்திலே விழுந்து நசை பண்ணா நின்றது –
என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்த மாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஒலக்கத்திலே காண்பாரைப் போலே
திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே கண்டபடி
மனஸ் -என்னாதே சிந்தனை -என்றது சிந்தா விசேஷத்தை பற்ற-

இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்-

ஆக -கீழ் -கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன -என்று தானே முற்பாடனாய் வந்து
விஷயீ கரித்த படியாலே சாதன பாவம் சொல்லிற்று –
சென்றதாம் -என்று தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாகச் சொல்லுகையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது -இங்கு
கீழ் -நீண் மதிள் அரங்கம் -என்று ரஷகத்வம் சொல்லிற்று –
கடியார் பொழில் அரங்கம் -என்று போக்யதை சொல்லுகிறது -இங்கு
ஆக இப்பாட்டால் -முதல் பாட்டில் -நிமலன் நின்மலன் -என்று அபேஷா நிரபேஷமாக
உபகரிக்கும் சுத்தியை உடையவன் என்றதாய்த்து சொன்ன அர்த்தம் கூடுமோ என்ன
கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் சொன்னாராய் நின்றது –

—————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜ்யத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
உதாரா சர்வ எவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிச்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வச்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேச்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும் அபிவ்யக்தமாய் ஆகிறது

இத்த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும் சொல்லிற்று ஆயிற்று

இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோநிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –

காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்
காகுத்தன் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூ ரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –

அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில் பாலாதபம் பரந்தாப் போலே இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக

சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது
சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 17, 2013

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.

பொ-ரை :- ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரானை, வாசனை பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள் எல்லாம் வைகுந்த மா நகரமேயாகும் என்றவாறு.

வி-கு :- இரைத்தல் – ஒலித்தல். விரை – வாசனை. நிரை-வரிசை. அந்தாதி-முதற்செய்யுளின் அந்தமானது, அடுத்த செய்யுளின் ஆதியில் அமையும்படி பாடுவது. அந்தம்-ஈறு. ஆதி-முதல். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்பது, இலக்கணம். ’வைகுந்தம் – அழிவில்லாதது; பரமபதம்.

ஈடு :- முடிவில், 1இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்கும் கருங்கடல் வண்ணன் – 2அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில் 3“‘வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது கடல் கீழ்மண்கொண்டு மேல் மண் எறிந்தாற்போலேயாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன்தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச்செய்தார். வண்ணன்-ஸ்வபாவத்தையுடையவன் என்றபடி. இரைக்குங் கருங்கடல் வண்ணன் – ஓதம் கிளர்ந்த கடல் போலே சிரமஹரமான வடிவையுடையவன். 1மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி. வண்ணன் – வடிவையுடையவன். கண்ணபிரான்தன்னை – அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு இது. ஸ்வாபாம் இது. இங்ஙனம் இருக்க, நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ? விரைக் கொள் பொழில் குருகூர் – 2இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது உண்டான பரிமளத்தால் நிறைவு பெற்றபடி. நிரைக் கொள் அந்தாதி – இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது, எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்தபடி. 3இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே, இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ. 4“சுலோகத்திற்குரிய எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீராமாயணமானது சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால் சோக வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே, சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய திருவருளால் எல்லா இலக்கணங்களோடு கூடி இருந்தாற்போலே.

உரைக்க வல்லார்க்கு – மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும். தம் ஊர்

எல்லாம் வைகுந்தமாகும் – அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம். அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம்தானே பரமபதமாம் என்னுதல். 1அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. 2இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது; இப்பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்; இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்; 3இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாசறு சோதிகண்ணன் வந்துகல வாமையால்
ஆசை மிகுந்துபழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர்.

நிகமத்தில்
ஓடி வந்து -இந்த திருவாய் மொழி உரைக்க வல்லாருக்கு
அதுவே பரம பதம் -ஆகும்படி
இரைக்கும் கரும் கடல் -வண்ணன்
கடல் கீழ் மண் கொண்டு மேலே எழுந்தது போலே -சாயமான -வார்த்தை
கேட்டு அது போலே மடல் எடுப்பேன் சொன்ன உடன் ஓடி
வந்தான் வண்ணன் -ஸ்வபாவன் -அனந்தாழ்வான் அருளிய ஸ்ரீ ஸூ க்தி
மடல் எடுத்தும் திருக் குருகூரும் மணம் பெற்றது
பிரபந்தம் சேர இருந்த படி –

“சாபம் ஆநய ஸௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந்
சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து பிலவங்கமா:” –
என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.

வைகுந்தம் பலம்
கிடைக்கும் அவர்கள் இருக்கும் இடமே
பரமபதம் உக்தி மாத்ரமே போதும்
புருஷோத்தமன் தானே
அனுக்ரகம் பொய்யே இல்லையே

ஏசி அறவே
மண்ணில் மடலூர மாறன்  ஒருமித்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 17, 2013

யாமடல் ஊர்ந்தும் எம்ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவுதோறு அயல் தையலார்
நாமடங் காப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.

பொ-ரை :- மடம் முதலான குணங்கள் ஒரு சிறிதும் இன்றித் தெருக்கள்தோறும் அயல்பெண்கள் நாக்கும் மடங்காமலே பழிகளைத் தூற்ற நாடும் கூப்பிடும்படியாக, யாம் மடலை ஊர்ந்தாயினும் எம்முடைய சக்கரத்தைத் தரித்த அழகிய கையையுடைய எம்பெருமானுடைய பரிசுத்தமான இதழையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரைச் சூடக் கடவோம் என்கிறாள்.

வி-கு :- எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணம்துழாய் மலரை, தையலார் பழிதூற்ற நாடும் இரைக்க மடம் யா இன்றித் தெருவுதோறும் யாம் மடல் ஊர்ந்தும் சூடுவோம் என்க. இனி, தெருவுதோறு தையலார் தூற்ற எனக் கூட்டலுமாம். யா என்பது, அஃறிணைப் பன்மை வினாப்பெயர். யாவை அல்லது, எவை என்பது பொருள்.

“மடல் ஊர்ந்தும்” என்றதனானே, ஊராமை உணர்தல் தகும்.

ஈடு :- பத்தாம் பாட்டு. 1உலகம் எல்லாம் கலக்கம் உறும்படி மடல் ஊர்ந்தாகிலும், தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையையுடையவனைக் காணக் கடவேன் என்கிறாள்.

யாம் மடல் 2ஊர்ந்தும்-செய்யக்கடவது அல்லாததனைச் செய்தேயாகிலும். என்றது, “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக்கூடிய நாம், மடல் ஊர்ந்தேயாகிலும் என்றபடி. 1பெற்று அன்றித் தரியாத உபேய வைலக்ஷண்யம், அதற்கு அடியான உபாய வைலக்ஷண்ய அநுசந்தானம், ‘அவ் வுபாயந் தன்னாலே பேறு’ என்கிற துணிவு, வேறு ஒன்றினை உபாயமாக நினையாமை, முறையிலே பெறுகிறோம் என்று நினையாமை ஆகிய இவைகளே, இங்கு ‘மடல்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. 2“மடல் ஊர்தும்” என்றாள் மேல்; ‘இது உனக்கு வார்த்தை அன்று, 3முதல் தன்னிலே பெண்கள் மடல் ஊர்தல் ஆகாது என்று விலக்கியுள்ளார்கள். அதற்கு மேல், நீயோ எனின், 4“எப்பொழுதும் உயிரை ஒத்த நாயகன் நன்மையிலேயே நோக்கங்கொண்டவள்” என்கிறபடியே. உன்னை அழிய மாறியும் அவனுக்கு நன்மையையே விரும்புகின்றவளாய் இருப்பவள் ஒருத்தி, அவனோ எனின், உன்பக்கல் வருகைக்கு உன்னைக் காட்டிலும்விரைகின்றவனாவான் ஒருவன், முறையிலே பெறுகிறோம் என்று நினையாமையால் படுகிறாயித்தனை, நீ சாகஸத்திலே ஒருப்படுகிற இது 1‘உன் ஸ்வரூபத்தோடு சேராது’ என்ன, அது பார்க்க ஒண்ணாதபடி காண் எனக்கு அவன்பக்கல் உண்டான அன்பின் மிகுதி என்கிறாள். யாம் மடல் ஊர்ந்தும்-2இப்படி இருக்கிற என் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் பெறத் தவிரேன். 3செய்யக்கடவது அல்லாததனைச் செய்தாகிலும் பெறக் கடவேன். 4ஆத்மாவோடு சேராத செயலைச் செய்தேயாகிலும் பெறக்கடவேன். 5பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசகசப்தம் இருக்கிறபடியாயிற்று ‘யாம்’ என்பது. 6அத்தலையைக்கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.

எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர்கொண்டு சூடுவோம்-‘எம் பிரான்’ என்றதனால்நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது. 1இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது. 2அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள் ‘ஆழி அம்கைப் பிரான்’ என்கிறாள். 3நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில் ஆபரணத்தை வாங்கி என்கையிலே இட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என்தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்; இல்லையாகில் எல்லாங்கூட இல்லையாகின்றன. என் தோளில் மாலையைப் பாராய், நான் செவ்வி மாலை சூடவேணுங்காண் என்பாள் ‘பிரானுடைத் தூ மடல்’ என்கிறாள். 4விரஹத்தாலே தன் மார்பின் மாலை சருகாய் அன்றோ கிடக்கிறது, செவ்விமாலை உள்ளது அவன் பக்கலிலே அன்றோ. நன்று; ஒன்றைச் சொல்லுகிறாயாகில் செய்து தலைக்கட்டப் புகுகிறாயோ, உன் பெண் தன்மை உன்னைக் காற்கட்டுங்காண் என்ன, யா மடம் இன்றி-5அதுவோ! பெண்தன்மை இல்லாதார் செய்யுமதனை முதலிலே செய்யக் கடவோம். தெருவுதோறு-“உலகுதோறு அலர்தூற்றி” என்றாளே மேல்; அங்ஙனம் உலகமாகத் திரண்டிருக்க உலகத்திற்காக ஒரு வார்த்தை சொல்லி விடுவேனோ, தெருவுகள்தோறும் புக்கு, அறியாதார் எல்லாரும் அறியும்படி அலர் தூற்றக் கடவேன். 1‘கிருஹ அர்ச்சனைகள் அர்ச்சக பராதீனம்’ என்று ஒரு மூலையிலே புக்கு இருக்க ஒட்டுவேனோ. அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி-வேற்றுப் பெண்கள் 2நாக்குப் புரளாத படியான பழிகளை எல்லாம் சொல்ல. சிசுபாலன் முதலானார் வாயில் கேளாதவற்றை எல்லாம் என் வாயிலே கேட்க அன்றோ புகுகிறான். அன்றிக்கே, அவர்கள் நா, மீளாமல் உருவப் பழி சொன்னபடியே இருக்கும்படியான பழிகளைத் தூற்ற என்றுமாம். அன்றிக்கே,  நாம் 3தங்களுக்கு அடங்காமல் மடல்கொண்டு புறப்பட்ட பழியைத் தூற்ற என்னலுமாம்.

நாடும் இரைக்கவே – அவன் என்னுடைய ஊரவர் கவ்வை நீக்கிலனாகில், நான், 4தன்னை நாடாக இரைக்கும்படி பண்ணுகிறேன். என்றது, உலகமெல்லாம் கலங்கும்படி செய்கிறேன். ‘ஒருத்தி ஒருவனைப் படுத்திற்றே! ஒருவன் முகங்காட்டிற்றிலன்’ என்னும்படி செய்கிறேன் என்றபடி. 5அவனைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும் அவனை அடையும் சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும் எல்லாம் அழிய அன்றோ புகுகின்றன; 1‘ஒருவன் உளனாகில் ஆசைப்பட்டவள் இப்படிப் பட இருக்குமோ, ஆன பின்னர் நிரீஸ்வரங்காண் உலகம்’ என்னும்படி செய்கிறேன். 2அவனோடே கலந்த என் வார்த்தை ஒழிய, அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ? 3பிரமேய சிரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் பிரமாண சிரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ. 4‘ஆசைப்பட்டார்க்குப் பலம் இதுவான பின்பு இனி உபாசனத்துக்குப் பலம் இல்லை’ என்று கைவாங்கி நாஸ்திகராம்படி உலகினரனைவரையும் செய்கிறேன். நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும்-5நாட்டார் சொல்லும் பழிதானே தாரகமே அன்றோ. “ஊரவர் கவ்வை எருவாக” என்றாளே, அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.

அடக்கம் இன்றி –
தெரு தோறும் மடல் எடுத்து அவனை அடைந்தே தீருவேன் என்கிறாள்
ஆறி இருப்பது ஸ்வரூபம்
என்றாலும் அழிய -மாறியும் உதவ

செய்யக்
கடவது” அல்லாததனை’ என்று தொடங்கி. “யாம்” என்றதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘என்னை அழைத்துக்கொண்டு’ என்று தொடங்கி.

“சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39:30.

அவன் பக்கல் உண்டான ப்ராவண்யஅதிசயத்தால்
பிரணவத்தில் அஹம் அர்த்தம் சேராதது ஸ்வரூபம் சேராதது -ஆனாலும்
யாம் இங்கே சொன்னது அஹம் -அத்தலை இட்டு இவளை நிரூபிப்பது அவன் சொத்து என்பதால்
ஓம்கார ஈஸ்வர -வாக்கியம் அஹம் அர்த்தம் -அவனுக்கு அனைத்தும் சேஷம்
என் ஆழி அம் கை பிரான் -நாராயண
சப்தார்தம் நான் கையும் மடலுமே புறப்பட்டால் தனது கையில் ஆபரணம் வாங்கி
எனது கையில் போட்டு ஆழி –மோதிரம்
குடி இருக்க
இல்லாஇவிடில் அழிந்து -அனைத்தும் போய் விடும் –
குளிர்ந்த துழாய் மாலை அவன் இடம்
எனது உடல் கொதித்து மாலை
வாட செவ்வி மாலை சூட வேண்டுமே
மடல் செய்து தலைக்கட்ட ச்த்ரீத்வம்
லோகதுக்காக -தெரு தோறும் புக்கு அறியாதார் அனைவரும் அறியும் படி
அர்ச்சக பராதீனம் ஒதுங்கி இருப்பான் –
எங்கும் போய் -சொல்வேன்
சிசுபாலாதிகள் வாயால் வராதவற்றையும் சொல்வேன்

எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான”

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தையும்,

“கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”

என்ற திருக்குறளையும் நினைவு கூர்தல் தகும்.

4. “ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் பிராணஸமாஹிதா”

என்பது, சங்க்ஷேபராமாயணம் பாலகாண்டம்.

நாடும் நகரமும் அறியும் படி பெரும் பழி சொல்வேன்
முகம் காட்டாமல் மடல் எடுக்க பண்ணுகிறானே
நாராயண தத்வமே வார்த்தைக்கு மதிப்பு இன்றி செய்வேன்
உண்மையில் ஈஸ்வரன் இருந்தால் அனுக்ரஹம் செய்து இருக்க வேண்டுமே
ஆசைப்பட்டவள் இப்படி இருக்க
ஈஸ்வரன் தான் ஜகத் –
அடி இல்லாத -விஷயம்

“நாடும் இரைக்க” என்றதற்கு, சுவாபதேசம் அருளிச்செய்கிறார் ‘அவனைப்
பற்றி’ என்று தொடங்கி. ‘அவனைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்கள்’
என்றது, “நாராயண பரம்பிரஹ்ம” என்பது போன்ற வாக்கியங்களை.
‘அவனை அடையும் சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்கள்’
என்றது, “நிதித்யாஸிதவ்ய:” என்பது போன்ற வாக்கியங்களை. வாச்யனாக

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 17, 2013

நாணும் நிறையும் கவர்ந்துஎன்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை
ஆணைஎன் தோழீ! உலகுதோறு அலர் தூற்றிஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

பொ-ரை :- என் தோழீ! ஆணை; என்னுடைய நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, நல்ல நெஞ்சினையும் அழைத்துக்கொண்டு மிக உயர்ந்திருக்கின்ற பரமபதத்திலே சென்று தங்கியிருக்கின்ற தேவபிரானை, உலகுகள் தோறும் அலரைத் தூற்றி என்னால் செய்யக்கூடிய மிறுக்குகளைச் செய்து அடங்காதவளாய் மடல் ஊர்வேன் என்கிறாள்.

வி-கு :- அலர்-பிறர் கூறும் பழமொழி. தூற்றுதல்-பலர் அறியச் செய்தல், குதிரி-தடையில்லாத பெண்; அடங்காதவள். ஊர்தும்: தனித்தன்மைப் பன்மை.

“மடல் ஊர்தும்” என்றதனால், மடல் ஊராமை உணர்க.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1நெஞ்சு விம்மல் பொருமலாகா நிற்கவும், தன் பெண்தன்மையாலே இதற்கு முன்பு மறைத்துக்கொண்டு போந்தாள்; இனி, ‘அவனை அழிக்கப் புகுகிற நாம், யார்க்கு மறைப்பது’ என்று அது தன்னையே சொல்லுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து-சத்தையோடு கூடி வருகின்ற நாணத்தையும் கொண்டான், 2களவு கலந்தால்வருமதனையும் கொண்டான். என்றது, 1வாசல்விட்டுப் புறப்படச் செய்யக் கூடியதல்லாத நாணத்தையும் கைக்கொண்டு, அகவாயில் ஓட்டம் தாய்மார்க்கும் சொல்லக் கூடியதன்றிக்கே இருக்கும் அடக்கத்தையும் கைக்கொண்டான் என்றபடி. என்னை-அவ்விரண்டனையுமே நிரூபகமாகவுடைய என்னை. நல் நெஞ்சம் கூவிக்கொண்டு-பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி, அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற்காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக்கொண்டு 2‘இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோவேகம் இருந்தபடியால் திரைமேலே நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல் : சேண் உயர் வானத்து இருக்கும்-மிக்க ஒக்கத்தையுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, 3அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள் குடி இருப்பில் அன்றிக்கே பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு; ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி. தேவபிரான் தன்னை-4இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக் கொண்டு தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிறபடி. 5அன்றிக்கே, பிரமன் முதலாயினோர் ஓலக்கம் போலப்பேறு இழவு முதலியவைகளில் வருகின்ற துடிப்பு அறியாத ஓலக்கம் அன்றிக்கே, ‘சம்சார மண்டலத்திற்போய் நான் பெற்றுக்கொண்டு வந்தவை இவை’ என்று தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிற ஓலக்கம் முதன் முன்னம் 1அதுவாகப் பெற்றோமே என்பாள் ‘தேவபிரானை’ என்கிறாள் என்னலுமாம். 2பிரிவினால் வரும் வியசனம் அறியார்களேயாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம்.

சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான் தன்னை-3அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’ என்னுமித்தனையாயிற்று அவ்விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது; ‘விரஹப் பிரளயம் ஏறிப் பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்; அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே! 4அன்றிக்கே, நீயே பார்ப்பாயாக அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என்கையிலே படப் புகுகிற பாடு; இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள் ‘தேவபிரான் தன்னை’ என்கிறாள் என்னலுமாம். இப்போது இங்ஙனே ஒருவாய்ப்பகட்டுச் சொல்லுகிறாய், அது செய்து தலைக்கட்ட வல்லையாகப் புகுகிறாயோ? என்ன, ஆணை என்கிறாள். இவள் இப்போது அவன்மேல் ஆணை இடுகிறாளோ, தோழிமேல் ஆணை இடுகிறாளோ? என்னில், அழிக்க நினைக்கப்பட்டவன்மேல் ஆணை இடாளே,ஆதலால், தோழிமேல் ஆணையாமத்தனை. 1இதற்கு உடன்பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பரதேவதை உண்டு’ என்று இராளே, இவள்தான். ‘இது வார்த்தையளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக்கட்டப் பெறுவதுகாண்’ என்னும் தன் நினைவு தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக்கொள்ளுகிறாள். அன்றிக்கே, இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து 2ஆணை என்? என்கிறாள் என்னுதல்; ஆணை என்-தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில், தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லையாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி. 3அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே, இத்தோழிதானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே. உலகுதோறு அலர் தூற்றி-உலகங்கள் எங்கும் புக்கு 4அழிக்கக் கடவேன். என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன். 5‘அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,அவ்வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழியடையப்படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.

ஆம் கோணைகள் செய்து-என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன். கோணைகள் – மிறுக்குக்கள். 1என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே, ‘நம் குணநிஷ்டர்படி இது அன்றோ’ என்று குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்; ‘அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன். அன்றிக்கே, நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன், அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன். 2“வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன். 3“தலையாலே வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால் செய்யப்படவில்லை” என்று புண்படும்படி செய்யக் கடவேன். என்றது, பிள்ளை தலையாலே இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்னும்படி செய்யக் கடவேன் என்றபடி. 4நான் இதனைச் செய்தால், அவர் தம் மனிச்சு அழியாமைக்காக, ‘தம்மோடுஅசாதாரண பந்தமுடையார் தங்கள் ஆதரத்தாலே செய்யக் கடவது ஒன்று அன்றோ இது’ என்னக் கடவன், ‘அது அன்று இது, நான் சாதந அநுஷ்டானம் செய்கிறேன்’ என்னக் கடவேன். 1“எக்காலத்திலும் கைகூப்பிக் கொண்டு நிற்பார்கள், அதுவே மிகவும் விருப்பம் என்பது தோன்றும்படியாகச் சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்கிற இதிலே செலவு எழுதப் பார்ப்பர் அவர்; ‘அங்ஙனம் அன்று, உன் உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன்’ என்னக் கடவேன்.

2குதிரியாய்-குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய், தடை இல்லாத பெண் என்கிறபடியாய், தடையுடையேன் அன்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, குதிரி என்பது, செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ, அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீரமாத்திரமேயாய் என்னுதல்; அன்றிக்கே, பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக்கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள், அதனையுடையேனாய் என்னுதல். மடல் ஊர்துமே- 3‘செய்யக்கடவதாயிற்றபின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

ஆணை -சத்யம் -தோழி -அலர் தூற்ற உலகு -முழுவதும்
கும்ச்தித ஸ்த்ரி குதிரி போலே –
களவு -கொண்டான்
நெஞ்சுக்குள் உள்ளதை தாயார் இடம் சொல்ல முடியாமல் அடக்கமும் கை கொண்டு போனான்
நெஞ்சையும் தனது பக்கம் நிறுத்திக் கொண்டு
எட்டா நிலத்தில் போய்
உயர்த்தி -பரம பதம் இருந்த தேவ பிரான் -வெற்றி காட்டிக் கொண்டு ஹர்ஷதுடன் இருக்க
களவு கொண்டதை காட்டி பெருமையாக காட்டி –
மாடு செல்வம்

அந்தர ஜாதி’ என்றது, சிலேடை: ஆகாசத்திலே சஞ்சரிக்கின்ற சாதி
என்றும், தாழ்ந்த சாதி என்றும் பொருள்.

செய்து தலைக் கட்ட முடியுமா தோழி கேட்க
ஆணை -என்கிறாள்
வேற பரதெய்வம் இல்லை என்று இருப்பவள் தோழி ஆணை என்கிறாள்
ஆணை என் தோழி
ஆணை என் -எனது வழி வருவான் தடை இன்றி –
சர்வாதிகன் -அழிக்க முடியும் படி செய்ய மாட்டானே
கருத்துப் படி வருவான்
அசாதாராண விபூதியில் உள்ளார் -உலகு -தோறும்
பரம பதத்தில் இல்லை –
தோஷத்துக்கு மதிப்பு இங்கே தான் –
குணத்தையும் தோஷமாக கொள்ளும் இடம் இது தானே
அங்கு தோஷம் சொல்லி உபயோகம் இல்லையே

தேவபிரானைப் பழி சொல்லுகிறாளாகில், உலகுதோறு அலர் தூற்றுவது
எற்றிற்கு? என்ன அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அசாதாரண’ என்று
தொடங்கி. என்றது, குணத்தைப் போலவே தோஷத்தையும் எண்ணுகிற
அவ்விபூதியிலன்றிக்கே, குணத்தையும் தோஷமாகக் கொள்ளுகிற
இவ்வுலகத்திலே என்றபடி. அசாதாரண விபூதி-பரமபதம். ‘தாம் பிறர்
அறியும்படி இரார்களே அன்றோ’ என்றது, இவள் செய்கிற செயல்
தங்களுக்கு விருப்பமில்லாததாகிலும் பிறர் அறியாதபடி
அடக்கிக்கொண்டிருப்பவர்களே அன்றோ என்றபடி.

ஊரார் எல்லாம் ஒழியாமே –
இத்தைக் கொண்டே திரு மடல் -அருளி
காசு கொடுத்து எழுதி வைக்க -சொன்னான்
சீரார் திருவேம்கடமே இத்யாதி
பெரிய திரு மடல் 41 திவ்ய தேசம் காட்டி –
தோழி நீ பார்த்துக் கொள் உலகு முல்ய்வதும் சொல்லி
காலில் விழுந்து வணங்கி -விடுவேன் வெட்க்கப் பட்டு உருகும்படி இருக்க வைப்பேன்

மேலதற்கே வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார் ‘தலையாலே’ என்று
தொடங்கி.

“மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத:    சிரசா யாசத: தஸ்ய வசனம் ந க்ருதம் மயா”

என்பது, ஸ்ரீராமா. யுத். 24:19. ஸ்ரீராமபிரான் திருவார்த்தை.

காலிலே குனிந்தால் அது அவனுக்கு மிறுக்காக இருக்குமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘வட்டிக்கு’ என்று தொடங்கி.

“கோவிந்தேதி யதா அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசிநம்
ருணம் பிரவிருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி”

என்பது, பாரதம் உத்யோகபர். 58:22. இது, கிருஷ்ணன் கூறியது.
தொட்டுவிடுதல்-ஈடுபடுத்துதல்

நான் இதனைச் செய்தால்’ என்றது, நான் காலிலே குனிந்தால்
என்றபடி. மனிச்சு-ஆண் தன்மை, பௌருஷம். அசாதாரண
பந்தமுடையார்-சொரூப ஞானமுடையவர்கள். அசாதாரணம்-பொது
அல்லாதது. தங்கள் ஆதரத்தாலே-சொரூபத்திற்குத் தக்கது என்னும்
ஆசையால்.

அன்றிக்கே
சாதனமாக செய்தது போலே

“குதிரி” என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
அடங்காத பெண் என்பது முதற்பொருள். இப்பொருளுக்கு, குத்ஸித ஸ்திரீ
என்பது, “குதிரி” என வந்ததாகக் கோடல் வேண்டும். இரண்டாவது பொருள்,
ஆபரணம் இட்டு வைக்கும் செப்பு என்பது. குதிரையையுடையவள் என்பது,
மூன்றாவது பொருள்.

நெல் ஆத்மா போலே குதிரி –
மடல் -ஒன்றை நினைத்து ஒன்றை சொல்லாமல் இதையே சொல்லி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 17, 2013

பேய்முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய்முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறுஅட்ட
தூமுறுவல் தொண்டைவாய்ப் பிரானைஎந் நாள் கொலோ?
        4நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.

  பொ-ரை :- பேயின் முலையை உண்டு சகடத்தின் மேலே பாய்ந்து மருத மரங்களின் நடுவே சென்று அவற்றை வேரோடு கீழே தள்ளிப் புள்ளின் வாயைப் பிளந்து யானையைக் கொன்ற, தூய்மை பொருந்திய புன்சிரிப்பையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய பிரானை, தோழீ! தாய்மார்கள் நாணுறும்படியாகச் சேர்வது எப்பொழுதோ? என்கிறாள்.

வி-கு :- பேய் – பூதனை, சகடம்-சகடாசுரன். புள்-பகாசுரன். களறு-குவலயாபீடம். அட்டபிரானை அன்னையர் நாண உறுகின்றது எந்நாள் கொலோ? என்க. தாய்மார், ஐவராதலின் அன்னையர் என்கிறாள். “ஐவர் நலன் ஓம்ப” என்றார் திருத்தக்கதேவரும். தூ-பரி சுத்தம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1மஹோபகாரகனைக் ‘குணம் இல்லாதவன்’ என்று சொல்லுகிற தாய்மார் ‘இவனை யாகாதே நாம் குணம் இல்லாதவன் என்றது’ என்று நாணம் உறும்படி அவனைக் காண்பது என்றோ! என்கிறாள். அவன், தன் சத்தையை உண்டாக்கி, நம் சத்தையைத் தந்தான்’ நாம் அவன் சத்தையால் உண்டான பலத்தைப் பெறுவது என்றோ என்கிறாள்.

பேய் முலை உண்டு – பூதனையால் வந்த ஆபத்தைத் தப்பி, சகடம் பாய்ந்து-2உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி காவலாக வைத்த சக்கரம் அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வர அதனை வருத்தம் இன்றியே முறித்து, மருதிடை போய் முதல் சாய்த்து-தவழ்ந்து போகா நிற்க இடைவெளி இல்லாமல் வழியிலே நின்ற மருத மரங்களின் நடுவே போய்த்தான் அவற்றைத் தப்பிப் போன அளவே அன்றிக்கே, அவை தம்மை வேரோடு பறித்து விழவிட்டு. அன்றிக்கே, முதல் சாய்த்து-குருந்தத்தைப் பறித்துப் போகட்டு என்னுதல். புள் வாய் பிளந்து-பகாசுரனை வாயைக் கிழித்து, களிறு அட்ட – குவலயாபீடத்தைக் கொன்ற, தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை – தடையாக வந்தவைதாம் பிரபலமாயிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை 3பாத்தம் போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி.

என்றது, 1வெண்முறுவலையும் சிவந்த அதரத்தையுமுடைய உபகாரகனை என்றபடி. அன்றிக்கே, தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக் கனி போன்ற அதரத்தையுமுடையவனை என்னுதல். இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில், அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில், இவையேயன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி. என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இத்தனை போக்கி, அவனை அழிக்க உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் என்றபடி. அவ்வுபகாரங்கள் எல்லாம் 2தனக்காகச் செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.

3பூத் தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு. பூத் தரு புணர்ச்சியாவது, இவள் ‘உத்தியான வனத்திலே பூக் கொய்ய’ என்று புறப்பட்டுப் பூக் கொய்யாநிற்க, அருங்கொம்பிலே எட்டாதே நின்ற பூவை இவள் ஆசைப்பட்டால் ஒருவன் தன்னைப் பேணாதே மரத்தின்மீது ஏறி அம்மலரைப் பறித்துக் கொடுக்க, ‘இவன் தன்னைப் பேணாதே தன் நினைவைத் தலைக்கட்டினான்’ என்று அதற்காகத் தன்னைக் கொடுத்தல். புனல் தரு புணர்ச்சியாவது, புதுப்புனல் ஆடப் போய் நீரிலே இழிந்து விளையாடா நிற்க, ஒரு சுழி வந்து இவளைக் கொடுபோக, அதில் நின்றும் எடுத்து ஏறவிட்டதற்காகத் தன்னைக் கொடுத்தல். களிறு தரு புணர்ச்சியாவது, வீதியிலே நின்று விளையாடாநிற்க, யானையின் கையிலே அகப்படப் புக, அதன் கையில் நின்றும் தன்னை மீட்டமைக்குத் தன்னைக் கொடுத்தல் என்று ஒரு மரியாதை கட்டினார்கள்; 4இவளை நோக்கினதற்காக, இவள், தன்னைஅவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது; அவ்வளவு அன்றிக்கே, 1இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். 2அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப்பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது, இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.

தோழீ! நாம் உறுகின்றது எந்நாள் கொல்லா-தோழீ! அவன், தன்னை உளனாக்கி வைத்தான், இனி நாம் அவனைக் கிட்டுவது என்றோ? 3“ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழிதான் இருப்பது; ஆதலின், ‘நாம் உறுகின்றது’ என்கிறாள். 4‘இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப்படுகிறோம் அல்லோம்; பின்னை எற்றிற்கு? என்னின், அன்னையர் நாணவே-‘பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள், அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, 5“எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,

நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே, அவன் நாணமுற்று வந்து நிற்கிறபடியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொன்னோம்’ என்று தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும்படியாக.

தன் பக்தர்களுக்கு உபகரிக்க -பேய் முலை உண்டு -சகடம் பாய்ந்து இத்யாதி
தூய்மையான முறுவல் -தொண்டை வாய் -பிரான் -உபகாரகன் ஐந்து செஷ்டிதங்களையும்
அன்னை வெட்கப்ப்படும்படி –
பூதனை ஆபத்து தப்பி
உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி ரஷகன் சகடாசுரன் வர –
மருது இடை போய் -ஒன்றாய் வளர்ந்து நிர் விவரமாய் -ஓட்டை இடை -இன்றி
விவரித்து சொல் -நடுவில் போய் வேரோடு பறித்து முதல் சாய்த்து –
அன்றிக்கே
குறும்பமரத்தை பறித்து பொகட்டு
பிரதி பந்தகங்கள் பிரபலமாக இருக்க செய்தேயும் -ஸ்மிதம் பண்ணி நின்றபடி –
பிரான் -உபகாரகன் –
தன்னை நமக்கு உபகரிதத்தவன்
அழிக்க நினைத்து மடல் -எடுப்பவள் இதுவே இவள் தான் அழிக்க -நினைப்பது
அச்சம் உறுத்தி முகம் காட்ட வைக்க மடல் எடுபதாக சொல்கிறாள்
தனக்காக -பூத்தரு புணர்ச்சி -பூவை தர நாயகிக்கு
புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி போலே
இவன் செஷ்டிதங்களில் மயங்கி

நாம்” என்று தோழியையும் கூட்டிச் சொன்னதற்கு, பாவம் அருளிச்
செய்கிறார் ‘ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது திருவடியைப் பார்த்துப்
பிராட்டி கூறியது.

“சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி
பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா”

என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 5. இதனால், சமமான துக்கத்தையுடையவளாதலின்
தோழியையுங்கூட்டிச் சொல்லுகிறாள் என்றபடி. “நாம்” உளப்பாட்டுத்
தன்மைப் பன்மை.

அது போலே தோழி இருப்பது –
ஸ்பர்சித்தால் போதும் நினைக்க வில்லை
அன்னையர் நாணும்படி ஆறி இருக்க முடியாமல்
மடல் எடுக்கும் அளவுக்கு தாமசம் பண்ணினோமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 17, 2013

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான்தன்னைக்
கலைகொள் அகல்அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.

பொ-ரை :- கலையைக் கொண்டிருக்கின்ற அகன்ற அல்குலையுடைய தோழீ! வலையிலே என்னையும் அகப்படுத்திச் சிறந்த மனத்தையும் அழைத்துக்கொண்டு அலைகளையுடைய கடலிலே பள்ளி கொண்டிருக்கின்ற அம்மானாகிய ஆழிப்பிரான்தன்னை, இந்தப் பெண்களுக்கு முன்பு நம் கண்களாலே கண்டு தலையாலே வணங்கவும் ஆகுங் கொல்லோ என்கிறாள்.

வி-கு : . . . ஆழிப்பிரான்தன்னைக் கண்டு வணங்கவும் ஆகும் கொல்? என்க. கலை-புடைவை. மேகலாபரணமுமாம். தலையில்-தலையால். வேற்றுமை மயக்கம். தையலார்-பெண்கள்.

ஈடு :- ஏழாம் பாட்டு. 3அவனிடத்தில் குணம் இன்மையைச் சொல்லுகிற பெண்கள்என்னை வலியுள் அகப்படுத்து-என்னைத் தப்பாதபடி புன்முறுவல், கடைக்கண் நோக்கம் முதலியவைகளிலே அகப்படுத்தி. நல் நெஞ்சம் கூவிக் கொண்டு – 1தான் என்றால், “நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி” என்று நான் பிற்பாடையாம்படி என்னிற்காட்டிலும் முற்படும்படியான நெஞ்சைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு. அலை கடல் பள்ளி அம்மானை-2“ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங் கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக்கொண்டு வரக்கூடும்” என்று எட்ட ஒண்ணாத நிலத்திலே பின்னையும் போய்ப் புக்கான். பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி கொந்தளிக்கிற கடல் என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள். 3பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல் ஓடத் தொடங்கினான். ஆழிப்பிரான்தன்னை – ‘புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாதபடியாயிற்றுக் கையும் திருவாழியுமான அழகு. 4கடல் ஓடியாகிலும் பெறவேண்டியாயிற்று இருப்பது.

கலை கொள் அகல் அல்குல் தோழி-நல்ல புடைவையையுடைத்தான அகன்ற நிதம்பப் பிரதேசத்தையுடைய தோழீ! என்றது, 5உன் வடிவு போலே அநுகூலமாய் இருக்க வேண்டாவோ உன் வார்த்தையும் என்றபடி. அன்றிக்கே, அவள் மடியிலே கிடந்து சொல்லுகிறாள் ஆகவுமாம். மேல், “தோழிமீர், என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்; இங்கே, ‘தோழி நம் கண்களாற் கண்டு’ என்று விளிக்கிறாள்; இவை சேரும்படி என்? என்னில், தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள். இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள். நம் கண்களால் கண்டு-1இப்போது இவள் ஹிதம் சொன்னாளேயாகிலும், காணும்போது நான்கு கண்களாலே காணும் காண்பது; அல்லது, இரண்டு கண்களாலும் காண வேண்டாள். தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே-‘பிரிந்த இடத்தில் தன்னுடைய பெண் தன்மைக்குப் போரும்படி அவன்தானே வரப் பார்த்திருந்திலள், அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து, அவன் வந்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ! 2இத்திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக்கொண்டிருக்க, ‘ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ‘ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் 3“தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச்செய்தார். 1“கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

2“மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே-நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும் ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்; அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான் ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ? அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான். இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களானபோது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரானபோது உபேக்ஷித்தும் போரக்கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்; நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே, தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு. தம் மம அர்த்தே சுகம் பிருச்ச – எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ, அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,1கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது. தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆனபின்பு, தம்முடைய உண்மையை 2ஆகாசிக்கையன்றோ இனி எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு. சிரசா அபிவாதய ச-நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு, நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ. இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்யவேணுமே அன்றோ; ஆனபின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச்செய்தாள்.”

3‘இதுதான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ, அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன, ‘மேலே, திருவடி வந்தபோது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடையமாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல, பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க அருளிச்செய்கிற பாசுரம்’ என்று அருளிச்செய்தார்.

புன் சிரிப்பு நோக்கம் வலை
நெஞ்சை நல்ல -முற்பட்டதால்

நெஞ்சுக்கு நன்மையாவது யாது? என்ன, ‘தான் என்றால்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘தான் என்றால்’ என்னுமிதனை, பின்
வருகின்ற ‘முற்படும்படியான’ என்றதனோடு கூட்டுக. “நெஞ்சே” என்ற
பாசுரம், பெரிய திருவந். 1. நொடித்துக் கொண்டு-இங்கிதமாக
அழைத்துக்கொண்டு.

“வலை” என்பது, நோக்கையும் புன்முறுவலையும் காட்டுவதற்கு ஐதிஹ்யம்
காட்டுகிறார் ‘ஆழ்வார்’ என்று தொடங்கி. அதற்குப் பிரமாணங்
காட்டுகிறார் “கமலக்கண்” என்று தொடங்கி. இது, நாய்ச்சியார் திருமொழி,-14 : 4.

ஹிதம் சொல்லுமது இவளுக்கும் உண்டேயன்றோ, அங்ஙனம் இருக்க, “நம்
கண்களாற் கண்டு” என்று அவளுக்கும் காட்சியிலே சேர்க்கை உண்டாகச்
சொல்லலாமோ? என்ன, ‘இப்போது’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். என்றது, ஹிதம் சொல்லுமது மனத்தொடு படாததாய்,
நாயகன் விஷயத்தில் நாயகிக்கு உண்டான ஈடுபாடு தனக்கு உடன்பாடு
ஆகையாலே, காட்சியில் இவளுக்கும் சேர்க்கை உண்டாகச் சொல்லலாம்
என்றபடி. ‘நான்கு கண்களாலே’ என்கையாலே, புருஷகாரம் முன்னாகச்
சேவிக்க வேண்டும் என்பது ஸ்வாபதேசம். இதனால், ‘வேதம் வல்லார்களை’
முன்னிட்டே அவனைக் காண்பார் என்றபடி

தனம் சேர்ந்தால் கடல் யாத்ரை போவான்
போலே என் நெஞ்சம் பெற்றதும் அலை கடல் பள்ளி
கொண்டான் கடலில் போயும் சேர வேண்டிய ஆழியும் கையுமான அழகு
நம் கண்களால் கண்டு
உயிர் தோழி கண்டு வார்த்தை சொல்கிறாள்

எம்பெருமான் வந்தால் அவள் தான் இவளை விட அதிகம் மேல் விழுவாள்
என்பதால் நம் கண்கள் என்கிறாள்
தலையால் வணங்க பாரிக்கிறாள் கண்டதும்

அவன் வந்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ! 2இத்திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக்கொண்டிருக்க, ‘ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ‘ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் 3“தலையாலே தொழுதலையும் செய்வாய்”

பர்த்தாவை சேவிக்க சாஸ்திரம் அனுமதி இல்லையோ
ஓர் உயிர் ஈர் உடல் என்பதால் –

கௌசல்யா லோகபர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ
தம் மமஅர்த்தே சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- 
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்-  என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே, “அஹம்
சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்-  என்றபடி.

ஏசி அறவே
மண்ணில் மடலூர மாறன்  ஒருமித்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.