திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண்சுடரோன் வாரா தொளித்தான் இம்மண் ணளந்த
கண்பெரிய செவ்வாய்நம் காரேறு வாரானால்
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பார்ஆர் என்னையே?

பொ-ரை :- பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காண மாட்டேன் என்று சூரியன் வராமல் ஒளித்துக் கொண்டான்; இந்த மூவுலகத்தைத் தன் திருவடியால் அளவிட்ட, பெரிய கண்களையும் சிவந்த வாயினையுமுடைய நம் கார் ஏறு வருகின்றானிலன்; எண்ணுதற்கும் மிக்கதாயுள்ள மனத்தின் நோயை என்னைத் தீர்ப்பார் யார்? என்கிறாள்.

வி-கு :- என்று ஒளித்தான் என்க. அளந்த காரேறு என்க. பசுவைப் பாலைக் கறந்தான் என்பது போன்று, நோயை என்னைத் தீர்ப்பார் யார் என இரண்டு செயப்படுபொருள் வந்தது. அன்றி, என்னுடைய நோயைத் தீர்ப்பார் யார்? என வேற்றுமை மயக்கமாகக் கோடலுமாம்.

ஈடு :- நான்காம் பாட்டு. 2கண்டார்க்குப் பொறுக்க ஒண்ணாதபடி வியசனம் செல்லாநிற்க, வரையாதே காப்பாற்றும் ஸ்ரீ வாமநனும் வருகின்றிலன்; என்னுடைய மனத்தின் துன்பத்தைப் போக்குவார் யார்? என்கிறாள்.

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – பரதந்திர ஜன்மம் ஆகையாலே முடிந்து போகவும் பெறாமல், மிருதுத் தன்மையையுடையவர்களாகையால்பிரிவும் பொறுக்க மாட்டாமல் இருக்கிற பெண்கள் அநுபவிக்கிற மஹா துக்கத்தைக் காண்கின்றிலேன் என்று. 1சர்வ ரக்ஷகன் பொறுக்குமித்தனை போக்கிப் பாதுகாத்தலிலே ஏகதேசம் சேர்ந்தவர்களுக்குப் பொறுக்கப்போமோ? புருஷோத்தமன் பொறுக்குமித்தனை போக்கிப் புருஷர்களால் பொறுக்கப் போமோ? ஒண்சுடரோன் வாராது ஒளித்தான் – 2தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். 3“அந்தப் பரம்பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது” என்கிறபடியே, பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் வரவேணுமேயன்றோ, அதுவும் செய்திலன் என்பாள் ‘வாராதே’ என்கிறாள். இங்ஙனமிருப்பவன் ‘ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ, இக்கொடுமை என் கண்களால் காணப்போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’ என்கிறாள். 4“ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று” என்னக் கடவதன்றோ. 1அன்றிக்கே, “சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்”, 2“அந்தத் தூசியும் காணப்படவில்லை” என்பன போன்று, வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்னுதல்.

இம் மண் அளந்த – 3இந்தப் பூமிக்கு என்ன துயர் உண்டாக அளந்து கொண்டான். 4பூமிக்கு மஹாபலியால் உண்டான இடரினளவோ எனக்கு இரவால் உண்டான இடர்? 5வரையாமல் எல்லாரையும் காக்குமவன். கண் பெரிய செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்-கிருபையால் பெரியனாய்ப் பூமியை அளந்து, பூமியிலுள்ளார் இடர் போகும்படி குளிரக் கடாக்ஷித்து, அதனால் உண்டான பிரீதியின் மிகுதி தோற்றப் புன்முறுவல் செய்கையாலே சிவந்த அதரத்தை உடையவனான நம் கார் ஏறு வருகின்றிலன். எல்லார் விஷயமாகச் செய்யும் ரக்ஷணத்தையே இயல்பாகவுடையவன் என்பாள் “நம்” என்கிறாள். சர்வ ரக்ஷகனுடைய காக்கப்படும் பொருள்களில் தானும்சேர்ந்தவள் ஆகையாலே 1‘நம்’ என்கிறாள் என்பது கருத்து. இவற்றைக் காப்பாற்றுகையாலே தன் நிறம் பெற்றிருப்பவன் என்பாள் ‘கார்’ என்கிறாள். ‘அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள். இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள். இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமானபோது, பண்டு என்னோடே கலந்ததனாலே தன் நிறம்பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக. 2எண் பெரிய சிந்தை நோய் – “எவன் அறியாதவனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ அவன் அறியாதவன்” என்கிறபடியே, வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, 3இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது. ‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. 4பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம்தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே. 5“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப் பாவங்களினின்றும் நீங்கினவள்” என்றாற்போலேசிந்தை நோய் தீர்ப்பார் ஆர் – 1மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும். 2“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள்தாம். 3அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம், துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது, மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று; ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்னபடியேயாம். 4பிரிவு நிலையில் நினைவுதான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ; “5கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” “காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக்கடவ வன்றோ. என்னையே – 6இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள். நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகாநின்றார்களே அன்றோ, 7சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, 8“தியானிக்கக்கடவன்” என்ற நினைவு தன்னையே விதியாநின்றதேஅன்றோ; 1அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

மாயும் வகை அறியேன் -சீதை பிராட்டி போலே பராங்குச நாயகி
பரதந்த்ரமே உருவாக -இருப்பதால் -பொருத்தமாக –
நமக்கு அதிகாரம் இல்லை பிராணன் போக்க- உடையவன் சர்வேஸ்வரன் -சட்டமும் அப்படியே
கண்டார்களுக்கும் பொறுக்க முடியாத துக்கம் கொண்டாள் இவள்
வாமனனும் வர வில்லையே
வரையாது ரஷித்தவனும் –
துக்கம் பார்க்க பொறாமல் சூரியனும் வர வில்லையே –
பெரும் துயர் காணமாட்டாமல்
மண் -அளந்த பெரிய கண் செவ்வாய் எனது கார் ஏறு புருஷ -ரிஷபன் வரவில்லையே
எனது சிந்தை விசனம் தீர்ப்பார் யார்
பரதந்திர ஜன்மம் முடியவும் பெறாமல் -பெண் -மிருது ஸ்வாபம் -பிரிவை ஆற்ற முடியாமல்
சர்வ ரஷகனும் விசனம் காண பொறுக்க  முடியாமல் -ரஷண ஏக தேசம் உள்ளவனும் –ஆதித்யன்
-புருஷோத்தமன் அவனால் முடியும் புருஷனால் முடியாதே
ஒளித்தான் கண்ணில் -படாமல் பகவத் ஆக்ஜையால் முப்பது வட்டம் வர வேண்டுமே –

பீஷா அஸ்மாத் வாத: பவதே”-என்பது, தைத்திரீயகோபநிடதம். 8.

நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால்
ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடுங்கன லாழி அரங்கேசர் தம்திரு ஆணையினே.- என்பது, திருவரங்கத்து மாலை.

முப்பது வட்டம்-முப்பது நாழிகைக்கு ஒரு வட்டம்.

எம்பெருமான் கட்டளை உண்டே
ஒளிந்து -இருக்க -கொடுமை கண்ணால் போக முடியாமல் –
தேரு -ம் போயிற்று –பெரிய திருமொழி, 8. 5 : 2-வர சூசகம் இன்றி மறைய

இம்மண் அளந்த –
மகா பலியால் பூமிக்கு வந்த துயருக்கு மேலே இவளுக்கு இருளால் வந்ததே –
பூமியை அளந்து கொண்டவன் என்னை ரஷிக்க வர வில்லை
கண் பெரிய கிருபையால் பெரிய -தயை -கடாஷம் இரண்டு -அர்த்தம்
சிவந்த அதரம் -விடாய் -போகும்படி பூமி துன்பம் தீர்த்த ஹர்ஷத்தால் சிரிக்க
கார் -தன்னிறம் பெற்று
ஏறு தனது பேறாக -மேணானிப்பு தோன்ற
என் கார் ஏறு -எம் பாட பேதம்
என்னுடன் கலந்ததால் தன்னிறம் பெற்றான்
-வாரானால்
இரக்க -வேண்டாம் அளக்க வேண்டாம் -வந்தாலே போதுமே
எண்ண முடியாதசிந்தை நோய்
வேதங்கள் நிலம் அல்லை பகவத் விஷயத்தை இவ்வளவு பேசி

எண் பெரிய” என்றது, எண்ணுக்கு அகப்படாத என்றபடி.

“யஸ்யமதம் தஸ்ய மதம். . . .அவிஜ்ஞாதம் விஜாநதாம்”-   இது, கேந உபநிடதம்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் -கண்டிலர் கம்பரும்
அறிய முடியாது என்று அறிந்து கொள்ளுவது தான் அறிவு –
சமுத்திர ஜாலம் எவ்வளவு அறிய முடியாது என்பவன் அறிந்து கொண்டவன்
யஸ்ய அமதம் தஸ்ய மதம் -வாக்குக்கும் மனசுக்கும் நிலகம் அன்று
பொய் நின்ற ஞாலம் தொடங்கி பேசி -சிந்தை நோய் -எண் பெரிய
தன்னாலும் அறிய முடியாத -அவனை அறிந்து பேசினாலும் –
பிரிந்த விஷயம் பற்றி அளவு படுத்தினாலும் அதனால் வந்த விசனம் பெரியதே
சூழ்ந்து அகன்ற அசித் சித் -ஈஸ்வரன் அவா பெரியதாய் போனதே –
அந்த அவா அற சூழ்ந்தானே அவன்

விஷயத்துக்குத் தகுதியாக இருக்கும் துன்பம் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘கண்ணனை’ என்று தொடங்கி.

“தச்சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா
ததப்ராப்தி மஹாதுக்க விலீநா ஸேஷ பாதகா.”
“சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸதயா முக்திம் கதா அந்யா கோபகந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.

சிந்தயந்தி போலே அனுபவிக்கிறாள் பெரிய துக்கம்
தீர்ப்பார் யார் –
மறக்கவும் அமையும் –
என்ன செய்தால் மறக்க முடியும்
மறக்க்கவுமாம் நினைக்க்கவுமாம் விசனம் தான் மிஞ்சும்
மறந்தாரை மானிடமாய் வையேன் என்பார்களே
ஓடுகிற விசன அதிசயம் சொல்லுகிறார்
ஓன்று கிடைக்காவிடில் -அதை நினைப்பதே துக்கம் தானே
கண்ணன் நாமமே குளறிக் கொல்வீர்
காட்டேன் மின் நும் உரு
நினைவுஊட்டுமே இவை துக்கம் அதிகமாகுமே
சிந்தை நோய் தீர்ப்பார் யார்-

ஈஸ்வரர் படர்கள் வந்து காண புக்காலும் காண முடியாமல் ஒளிந்தானாம்
இவள் துக்கத்தை காண முடியாதே –
தேரும் போயிற்றே -பெரிய திருமொழி
தூசி கூட தெரியவில்லையே
ராசக்ரீடை கண்ணன் மறைந்தது போலே
சுவடு கூட அறிய முடியாமல் –
பூமிக்கு மகாபலியால் உண்டான துன்பம் விட எனக்கு அதிகம்

கண் கிருபை தயை -இரண்டும்
செவ்வாய் -ப்ரீதி புகார் தோற்ற ஸ்மிதம் பண்ணி
கார் ஏறு -தன்னிறம் பெற்று -மேணாநிப்பு தோற்ற
எம் கார் ஏறு தன்னையும் சேர்த்து கொண்டு
என் கார் ஏறு தன்னிடம் கலந்ததால் வந்த தன்னிறம்
-வாரானால் வடிவை காட்டினாலே போதுமே இரக்கவும் அளக்கவும் வேண்டாமே

எண் -அறிய முடியாது என்று அறிந்தவனே அறிவாளி
யஸ்ய அமதம் -எவன் ஒருவனுக்கு புலப்படவில்லையோ அஸ்ய மதம்
வேதாந்தம் முடியாது என்பதை இத்தனை நேரம் பேசி
சிந்தை நோய்இவரின் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற  ஞானத்துக்கும் அவிஷயமாய் இருந்தது
பிரிந்த விஷயத்தை கூட அளவிடலாம் -துக்கம் அவனை விட பெரிசு
பாரிப்பு தத்வ த்ரயதுய்க்கும் விஞ்சி-

சிந்தயந்தி போலே -மிக பெரிய துக்கம் –
தீர்ப்பார் யார்
மறக்கவும் -அமையுமே நினைவு இருந்தால் தானே துக்கம்
மாநிடராக வையேன் என்பார்களே –
துக்கம் படுத்தும் பாடு இப்படி பேச வைக்கிறது -விசன அதிசயம்
காட்டேன் நும் உரு
கண்ணன் நாமமே குளறி கொல்லீர் போலே
தீர்ப்பது -அது செய்யலாம் இ றே சாதனா புத்தி செய்வாருக்கு
சாணி பஞ்ச கவ்யம் போலே அவனை நினைப்பாருக்கு தானே
நாட்டார் ஸ்மரித்து -துயர்வரும் -நினைமின் -துக்க -நிவ்ருத்தி சாதனா புத்தியாக –
ஆழ்வார் அவனை அடைவதையே பேறாக -நினைத்ததால் இவருக்கு துயர் –
நிதித்யாசவ்யா வேதாந்தம்
திருமேனியில் அவன் படியில் இழிந்தாருக்கு இப்படி துக்கம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: