பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்நின்று இராஊழி கண்புதைய மூடிற்றால்
மன்நின்ற சக்கரத்துஎம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள்ஆவி காப்பார்ஆர் இவ்விடத்தே?
பொ-ரை :- விடாது பின்தொடர்ந்து நிற்கின்ற காதலாகிய நோயானது என் மனத்தினை மிகவும் வருத்தாநிற்கின்றது, இரவாகிய ஊழிக்காலமானது முன்னே நின்று கண்களின் ஒளி மறையும்படி மூடிவிட்டது. நிலைத்து நிற்கின்ற சக்கரத்தையுடைய எம் மாயவனும் வருகின்றிலன்; இந்த நிலையில் நிற்கின்ற நீண்ட உயிரை இவ்விடத்திலே காப்பவர்கள் யாவர்? என்கிறாள்.
வி-கு :- இரா ஊழி முன்நின்று புதைய மூடிற்று என்க. இவ்விடத்து நீள் ஆவியைக் காப்பவர் ஆர்? என்க.
ஈடு :- ஆறாம் பாட்டு. 3விரஹத் துன்பமும் செல்லா நிற்க, இரவும் ஆய் ரக்ஷகனானவனும் வாராது ஒழிந்தால் முடியப் பெறாத உயிரைக் காப்பார் ஆர்? என்கிறாள்.பின் நின்ற காதல் நோய் – 1புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை. நெஞ்சம் பெரிது அடும் – நெஞ்சினை மிகவும் நோவுபடுத்தாநின்றது. 2நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது; அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று – 3காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது. 4‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி. 5எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று 6இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது. 7உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது. அறிகின்றதுமாய்ப் பிரகாசமுமாய் இருக்கின்ற கண் இந்திரியத்தை, அறியப்படுகின்ற பொருளான இருள் வந்து மூடா நின்றது என்பாள் ‘கண் புதைய மூடிற்றால்’ என்கிறாள். அன்றிக்கே, இருளினை ஒத்த நிறத்தினையுடையவன் வந்து முன்னே நின்றாலும் காண ஒண்ணாதபடி, இரவாகிற ஊழி கண்களை மறையாநின்றது என்னலுமாம்.
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-1“எப்போதும் கைகழலா நேமியான்” என்கிறபடியே, அடியார்கட்குப் பகைவர்கள் உண்டான போதாக ஆயுதம் எடுக்கப் பார்த்திராமல், எப்போதும் ஒக்கக் கையிலே விடாதே கொண்டிருப்பவனாதலின், ‘மன் நின்ற சக்கரம்’ என்கிறது. 2பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரியத்தை உடையவனாதலின், ‘மாயவன்’ என்கிறது. இதனால், போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு, போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி. 3இங்குச் சங்கல்பம் அழியவேண்டா; வருவதாக நினைக்க அமையும். 1“என்னுடைய இச்சையினாலே அவதரிக்கிறேன்” என்கிறபடியே, வருவதாக நினைக்க அமையும் என்றபடி. 2‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கையும், பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளைப் போக்கக் கடவது என்கிற மர்யாதையைக் குலைக்கையுமாகிற இவை வேண்டா, தான் வர அமையும்; போக்குகின்ற பொருளின் தன்மையினாலே போகின்ற பொருள் தன்னடையே போகும். 3இவ்விடத்தே இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் – முடிய வேண்டுமளவிலே நூறே பிராயமாக இருக்கிற இவ்வாத்மாவை முடித்து நோக்குவார் ஆர்? 4“இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன், வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக்கொண்டு நின்று வழக்குப் பேசாநின்றதாயிற்று ஆத்மவஸ்து. 5இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை, இச்சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்‘பிரிவிலும் முடியாத என் 1உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-2சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.
ஆவியைக் காப்பார் யார்
பின்னே வந்து ஹிம்சை செய்யும் காதல் நோய்
சக்கரம் வைத்து கொண்டும் வாராமல்
பின் நின்ற காதல் முடிந்த பின்பும் வரும் விஸ்லேஷ துக்கம்
புக்க இடம் எங்கும் புக்கு ஹிம்சிக்கும்
ஒதுங்க முடியாமல் ஹிம்சிக்கும்
நெருப்பு அடுப்பை சூடு பண்ணி –
அது போல் காதல் நோய் நெஞ்சை முதலில் எரித்து –
பிரேமவியாதியும் இரவும் சேர்ந்து -சங்கேதம் -செய்து -கூட்டு சேர்ந்து –
முன்னே இரவு இரவு பின்னே சூழ்ந்து
இரவு முன்னே வர காதல் பின்னே வர
எதிரிகள் சேர்ந்து நலியும் படி
கண்ணை மூடி -உள் கண்ணை காதல் மறைக்க -கட் கண்ணை இரவு மறைக்க
இருளை ஒத்த அவன் வந்தாலும் காண ஒண்ணாத படி
மன் நின்ற சக்கரத்தன் கை கழலா நேமியான்
ஆஸ்ரிதர் துக்கம் உடன் தீர்க்க தானே
“மன்னின்ற சக்கரத்து எம் மாயவன்” என்பதற்கு, பிரகாசத்தையுடைய
பொருளைக்கொண்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரிய பூதன் என்று
மேலே ஒரு கருத்து அருளிச்செய்தார். இப்பொழுது, ‘ஆயுதம் எடேன்’
என்று கூறி வைத்துப் பின்னர் வீடுமனை அழிப்பதற்காக ஆயுதத்தை
எடுத்த ஆச்சரியத்தையுடையவன் என்று வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி, “வாரானால்” என்பதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இங்கு’ என்று தொடங்கி. ‘சங்கல்பம் அழிய வேண்டா’
என்றது, சங்கல்பத்தையும் அழித்து ஆயுதத்தை எடுத்தலாகிற முயற்சியும்
வேண்டா என்றபடி. ‘நினைக்க அமையும்’ என்றது, வருவதற்குத் தன்
இச்சையே ஒழிய வேறு ஒரு வருத்தமும் இல்லாமையைத் தெரிவித்தபடி.
மாயவனும் –
பிரகாச த்ரவ்யதை விட்டு தமசை அழிக்க -இல்லை -அழைக்க வல்ல –
சூர்யனை மறைத்து –
நிவர்தகம் வைத்து -இருட்டை நிவர்த்யத்தை நிவர்ப்பிக்க வல்லவன் –
கோடி சூர்ய ஒளியால் -மறைத்தானே
வாரானால் –
சம்பவாமி ஆத்ம மாயாயா
இச்சை காரணமாக அவன் வருவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய’ என்று தொடங்கி.
“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”-என்பது, ஸ்ரீ கீதை. 4 : 6.
“நீள் ஆவியாய்க் கொண்டு நின்ற” என்றதனால், பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘இவன் வெட்டத் தகாதவன்’ என்று தொடங்கி.
“அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந:”-இது, ஸ்ரீ கீதை. 2 : 24.
சங்கல்பமே போதுமே
ஆய்தம் எடேன் சொல்லி ஆயுதம் எடுக்க வேண்டாமே
நிவர்தள ஸ்வாபாவத்தால் துக்கம் தானே போகுமே
இருள் தானே விலகும் வெளிச்சத்தில்
நூறே பிராயமாக இருக்கும் வஸ்து -ஆத்மா
நோக்குவார் யார் ஆத்மாவை முடித்து காப்பார் யார்
முடிந்து பிழைப்பதே சுகம் என்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply