ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனிநம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.
பொ-ரை :- தாய்மார்களும் தோழிமார்களும் இவள் தன்மையாதாக இருக்கின்றது என்று ஆராயாமல், நீண்ட இரவு முழுதும் தூங்குகின்றார்கள்; மேகம் போன்ற நிறத்தையுடைய நம் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; என்னை ஆராய்கின்றவர்கள் யாவர்? கொடிய தீவினையேனாகிய எனக்குப் பின்னே நின்று பெயரானது என்னை முடிய ஒட்டுகின்றது இல்லை என்கிறாள்.
வி-கு :- நீர் – நீர்மை. துஞ்சுவர் வாரான் ஆதலால், என்னை ஆராய்வார் ஆர்? என்க. வல்வினையேன் பின் நின்று பேர் என்னை மாயாது என்க. மாய்தல்-மறைதல், அழிதல்.
ஈடு :- ஐந்தாம் பாட்டு. ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராயகின்றிலர்கள்; அவர்கள் உதவாதபோது உதவும் கிருஷ்ணனும் வருகின்றிலன்; பெயரளவில் நிற்கின்றவள் ஆனேன் என்கிறாள்.
என்னை ஆராய்வார் ஆர் – 2“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே, திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப்பட்டவர்களாகையாலே என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில், அதுதனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன, ‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்துபோந்த இப் பெண்பையல்களை இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன, “துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப்புக்கால், அப்போதே அவர்கள் கண்குழிவு காணமாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” 1இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினையுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ. ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று 2“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக்கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ‘ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ.
அன்னையரும் தோழியரும் – என் நிலையைக் கண்டு என்னைப் போன்றே 3உறக்கத்தைத் துறந்தவர்களோடு, ‘உறக்கம் துறக்கக் கூடாது’ என்று விலக்குகின்றவர்களோடு வாசி அற ஒக்க எடுக்கும்படியாய் வந்து விழுந்தது. என்றது, என் நினைவே நினைவாய் இருக்குமவர்களோடு தங்களுக்கு என்ன ஒரு நினைவுண்டாய் நியமிக்கத் தக்கவர்களோடு வாசி அற்றது என்றபடி. அன்னையரும் தோழியரும் நீர் என்னை என்னாதே நீள் இரவும் துஞ்சுவர் – 1அன்னையரும் தோழியருமான நீங்கள், என்பட்டாய் என்னாதே, நீள் இரவும் துஞ்சுதிர் என்று சொல்லுவாரும் உளர். அன்றிக்கே, அன்னையரும் தோழியரும் இது ஒரு நீர்மை இருக்கும்படியே! என்னே! என்னாமல், நீள் இரவும் துஞ்சுவார்கள் என்னுதல். என்றது, அவன், தன்னைப் போகட்டுப் போய் வேறு சிலவற்றால் போது போக்தித் தன்னை நினையாமலே இருக்கச் செய்தேயும், தான் அவனை ஒழியப் போது போக்கமாட்டாதே இருப்பதே! இது ஒரு நீர்மையே! என்னே ஆச்சரியம்! என்று இப்படிச் சொல்லாமல் தூங்குவர்கள் என்றபடி. 2“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” என்புழிப் போன்று, ஈண்டும் ‘நீர்’ என்பது, நீர்மை என்ற பொருளில் வந்தது. எனக்கு உறங்காமையே தன்மையாம்படி, நெடிதான இரவு முழுதும் அவர்களுக்கு உறங்குகையே தன்மையாய் விட்டது என்பாள் ‘நீள் இரவும் துஞ்சுவர்’ என்கிறாள்.
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய், 3“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப்போந்தவனும் வருகின்றிலன்.1“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ. பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள். பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். 2அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை. 3நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப்பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 4ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. 5அடியுடைய பெயர் ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே. இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது. பேர் என்னை மாயாதால் – பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்றபடி. வல்வினையேன் – நான் முடியச்செய்தேயும் என்னை முடித்தேன் ஆகாதபடி செய்யும்படியான பெயரைப் படைக்கக்கூடிய மஹாபாவத்தைச் செய்தேன். பின்நின்று – நான் முடியச் செய்தேயும் இப்பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 6வருகிறபோது ஒருசேர வந்தால், போகிறபோதும் ஒருசேரப் போக வேண்டாவோ.1“பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணக் கடவேன்” என்றும், “தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்” என்றும் ஒக்கச் சொல்லக்கடவதன்றோ. 2முற்பட வந்தார்க்கு முற்படப் போகவேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?
மீண்டும் கண்ணன்
ஆழ்வார் இழிந்த துறைக்கு மீண்டும் வர
சப்தம் -நாமம் மாதரம் பேருக்கு இருபது போலே
வஸ்து இல்லை -என்கிறார்
துக்கம் ஆராயப் போகிறவர் யார்
அன்னையர் தோழியர் -நீ இப்படி -சொல்லாமல் –
இரவும் நீண்டு
காரன்ன மேனி கண்ணனும் வாரானால் –
தன்னை நலிந்த ராஷசிகளை கூட அஞ்சாதே என்று ஆராய்ந்து பார்த்தவள்
தன்னை யார் ஆராய்வார் என்கிறாள்
வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘பலம் இல்லாத நான்’ என்றது முதல், ‘ஆர்
என்னை ஆராய்வார் என்கிறாளே அன்றோ’ என்றது முடிய.
“பிராப்தவ்யம் து தஸாயோகம் மயாஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
கம்பராமாயணம் யுத்தகாண்டம் மீட்சிப்படலம் 32 முதல் 37 முடிய
உள்ள செய்யுள்களை இங்குக் காணல் தகும். நேர்த்தரவு-செல்லுச்சீட்டு.
‘இராவணனும் பட்டானாகில்’ என்றது, இராவணனாலே தேவரீருக்கு நலிவு
வாராமல் இருப்பதற்காக முன்பு இவர்களை நலியாமல் விட்டேன் என்றபடி.
திருவடி சென்று ராஷசிகளை நலிய புக –
ராவணன் பரதந்த்ரிகள் -தாசிகள் -பொறுத்தோம் -முன்பே சொல்லி -திரிஜடை சொபனத்தில் –
பிரார்த்திக்காமல் இருக்கச் செய்தே அவர்கள் நடுக்கம் மட்டுமே பார்த்து அருளி –
ராவணனும் பட்டானாகில் நெடு நாள் ஹிம்சை செய்த இவர்களை பொறுக்க வேணுமோ -திருவடி வார்த்தை
கண்ணீர் பார்க்கும் அளவில் உடம்பில் பலம் இல்லை -சீதை வார்த்தை –
ராவணனும் பட்டு -வேற துர் பலம் இல்லையே –
“துர்பலா” என்றால், மனோபலம் இல்லாமை என்று ஆக வேண்டுமோ?
சரீரவலி இன்மையைச் சொன்னதாகக் கொண்டால் என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராவணனும்’ என்று தொடங்கி. ‘இது’
என்றது, மனவலி இன்மையை.
2. “தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் -நாம் அனைவருக்கும் உண்டே –
அன்னையர் -தசை கண்டு உறக்கம் துரந்து
தோழி-உறக்கம் இன்றி இருக்க கூடாது சொல்பவர்
இருவரும் சேர்ந்து -துஞ்ச
நியமிக்கும் -அவர்களும்
துஞ்சுவரால் –
நீர் என்னை என்னாதே –
என்னே -என் பட்டாய் –
அன்னையும் தோழியரூமான நீர் -என்னே என்னாதே –
நீர்மை -அர்த்தம் வேற -இப்படி நீர்மை -இருப்பதே -வேறு சிலவற்றால் போது -போகாமல்
அவனையே நினைத்து கதறி –
நல்லவர் பழக்கம் -நீரவர் கேண்மை நட்பு -பிறை மதி போலே
பேதையார் நட்பு தேய் பிறை போலே
நல்ல மணம் -தீய -கந்தம் மா முனிகள் ஸ்ரீ ஸூக்தி
உறங்காமையே ஸ்வபாவம் போலே இவர்களுக்கு உறங்குவதே
காரன்ன மேனி -வந்தாலே ஸ்ரமஹரமான
உதவிப் போந்தவனும் வர வில்லை
பூர்வ அவஸ்தைஅந்தக் கோப
ஸ்திரீகளுக்கு’ என்று தொடங்கி.
“தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
நம் கண்ணனும் வாரானால்
அவன் வர வில்லை
பெயரும் போக வில்லை
போக்கு வரத்து இல்லை
காரியத்தில் முடிந்தேனாக இருக்கச் செய்தேயும் –
clinical death போலே
இப்பெயர் இன்னாள் முடியவில்லையே
ஆழ்வார் திரு நாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சத்தா ஹேதுவான படி அதுவும் இவருக்கு
அடி உடைய பெயர் ஆகையாலே சர்வருக்கும் பெருமை உடைய பெயர் தாரகம்
சிரசா வகிக்கும் படி அடி உடைய பெயர் -அடி உடைமை பலம் உடைமை திருவடி
சப்த அவசேஷை
முடிய ஒட்டாமல் வல் வினை
பின் நின்று
வருகிற பொழுது ஒக்க வந்தால் போகும் பொழுதும் ஒக்க போக வேண்டாமோ என்ன பாபம்
வருகிறபோது ஒருசேர வந்ததோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
பெயர்களையும் என்று தொடங்கி.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி”
என்பது, சாந்தோக். 6:3.
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”-என்பது. ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 5 : 63.
முற்பட போக வேண்டி இருக்க ஆத்மா முன்பு சரீரம் பின்பு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply