திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஆவிகாப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண்மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவிசேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.

பொ-ரை :- ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக்கொண்டு பெரிய விகாரத்தையுடையதாய் ஒப்பற்ற வலிய இருள் மயமான இரவாயே நீண்டுவிட்டது; நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.

வி-கு :- காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய சம்பந்தத்தாலே, நீயும் அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.

கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை ஆவி காப்பார் இனி யார் – உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும் பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்? ஆழ்கடல் மண் விண் மூடி – அளவிட முடியாததான கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி, அந்தப் பூமிக்கும் இடம் கொடுக்கக்கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து. 2காரணப் பொருள்களைக் காரியப் பொருள்களிலே ஒன்று மறைத்தது. மா விகாரமாய் – பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய் இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தையுடைத்தாய்ப் பரமபதத்தையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது. 3விஸ்வரூபத்தைக் காட்டின சர்வசக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி. ஓர் வல் இரவாய்-4திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்ணாதபடி செறிந்திருக்கை. 1இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமையை நினையாமையாலே, இருளை ‘இரவு’ என்கிறாள். நீண்டதால் – ஒரு முடிவு காண ஒண்ணாது.

காவி சேர் வண்ணன் – 2“அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன். என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி. 3இருள் அன்ன மா மேனி அன்றோ. 4கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ. என் கண்ணன்-கம்சன் காவலாக வைத்த தீயோர் கண்படாதபடி இருளிலே வந்து உதவினவன். 5நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ. வாரானால்-6தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீதன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ? 7“வந்தானாகில் அப்போதேவிடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பதன்றோ பெரியார் திருவாக்கு. 1பாவியேன் நெஞ்சமே-உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனாயன்றே உதவாது விட்டது, என்னுடைய சம்பந்தமே அன்றோ. 2என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது, அது உனக்கும் ஒக்குமே அன்றோ. நீயும் பாங்கு அல்லையே-3ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ? 4ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும். 5அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது என்றால் ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்; உனக்கு அங்ஙன் ஒன்று இல்லையே. இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ. 6‘என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று ஒருசேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.

இந்த தசையில் கிரிஷ்ணனும் வரவில்லை
நெஞ்சே நீயும் படுத்துகிறாயே
நீயும் பாங்கு அல்லையே
ஒப்பற்ற இரவு
மலை கடல் மண்ணும் விண்ணும் மூடி இரவு நீண்டு போக
காவி மலர் காயாம்பூ வண்ணம் -காவி கமழ திருக்காட்கரை போலே -கண்ணனும் வாரானால்
உதவுபனும் உதவ வில்லை
நீயும் படுத்த
வ்யாபக -பதார்த்தங்களை வ்யாப்யம் இருள் மறைக்க

“காரணப்பொருள்களைக் காரியப்பொருள்களிலே ஒன்று மறைத்ததற்கு ஒரு
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘விஸ்வரூபத்தை’ என்று தொடங்கி. சர்வசக்தி –
ஸ்ரீ கிருஷ்ணன்

விஸ்வரூபம் காட்டி -அவன் போலே அனைத்தையும் தன்னில் இருள் கொள்ளும்படி
இருட்டு வேற இரவு வேற –
ஓர் வல் இரவாய் திரு ஆழி கொண்டு போக்க முடியாத
நீண்டு முடிவு காண முடியாத
அக்கமலத்து இலை போலும் திருமேனி -இருள் அன்ன மா மேனி –
கருப்பு உடுத்து வரலாமே

“புல்லேந்தீவர பத்ராபம் சதுர்பாஹும் உதீக்ஷ்யதம்
ஸ்ரீவத்ஸவக்ஷ ஸம்ஜாதம் துஷ்டாவ ஆநகதுந்துபி:”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.

3. யானும்என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான் – தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த
அருளென்னும் தண்டால் அடித்து.

என்பது, பெரிய திருவந். 26.

4 “காவிசேர் வண்ணன்” என்று இப்படிச் சொல்லுவதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘கறுப்புடுத்து’ என்று தொடங்கி. கறுப்பு உடுத்து வருவார்
– நகரிசோதனைக்காக மாறுவேடம் பூண்டு இரவில் வருகின்ற அரசர்கள்.

5. தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.-  என்பது, பெரிய திருமொழி.

வாரானால் -தாமச பிரகிருதிகளை அழிக்க வருபவன் தமாசை அழிக்க
வந்தாலே விடுவு
பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
நெஞ்சமே நீயும் கண்ணன் போலே
உதவும் சம்பந்தம்
எனது சம்பந்தம் -அதனாலே உதவாமல் போக -நெஞ்சே அது போலே நீயும்
என் மார்போடே அணைந்து உதவாதவன் போலே
ஓர் ஆகாரத்தால் சாகாத்யம் இருந்தால் ஓர் ஆகாரத்தில் வேறு பாடு கூடாதோ
நீயும் -உம்மைத் தொகை –
அவனை போலே எல்லா விஷயத்திலும் இப்படி இருக்க வேண்டுமா
ஸ்வ தந்த்ரனாய் -அவன் -பரதந்த்ரனாய் வந்தான் நான் இட்ட வழக்காய் இருந்தான்
நெஞ்சமே நீயும் பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் உனக்கு இப்படி பண்ணலாமா-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: