திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நீயும் பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.

பொ-ரை :- நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை, நீண்ட இரவும் குறையும் காலமாயிராமல் கல்பமாக நீண்டுவிட்டது; பகைவர்களை வருத்துகின்ற கொடிய வில்லையுடைய என் காகுத்தனும் வருகின்றான் இலன்; வில்வினையேனாகிய யான் பெண்ணாகப் பிறந்ததனால் இறப்பதற்குரிய வகையை அறிகின்றிலேன் என்கிறாள்.

வி-கு :- நெஞ்சமே பாங்கு அல்லை, இரவும் நீண்டது, காகுத்தன் வாரான், வல்வினையேன் பெண் பிறந்து மாயும் வகை அறியேன் என்க. பிறந்து – பிறந்ததனால். காகுத்தன் – ஸ்ரீ ராமபிரான்; ககுத்தன் வமிசத்தில் பிறந்தவன்.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1எல்லாத் துக்கங்களையும் போக்கும் தன்மையனான ஸ்ரீ ராமபிரானும் வருகின்றிலன், பரதந்திரப்பட்டவள் ஆகையாலே முடியவும் விரகு அறிகின்றிலேன் என்கிறாள்.

நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – 2கங்கையின் அக்கரையைச் சேர்ந்த அன்று, இளையபெருமாளைப் பார்த்து, ‘பிள்ளையாய், நீயும் படைவீடு ஏறப் போ’ என்றாரே அன்றோ, ‘வனவாசம் இவரை ஒழியவும் தலைக்கட்டலாம் என்று மயங்கி;’ அப்படியே, இவரும் தம் திருவுள்ளத்தைப் பார்த்து, ‘நீயும் பாங்கல்லை காண்’ என்கிறார். 3“இம்மைமறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக்கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது, அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார். நீள் இரவும் ஓயும்பொழுது இன்றி ஊழியாய் நீண்டது-1முதலிலே நெடிதான இரவானது, அதற்குமேலே, ஒரு முடிவு காண ஒண்ணாதபடி இராநின்றது. என்றது, அடி காண ஒண்ணாதபடியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இராநின்றது. 2முடிவு காண ஒண்ணாதிருக்கச் செய்தேயும் அடியற்று இருப்பன உண்டே அன்றோ, இது அப்படி இருக்கிறது இல்லை. நின்றவிடத்தில் நின்றும் கால் வாங்கக் கூடியதன்றிக்கே இருத்தலின் ‘ஓயும் பொழுதின்றி’ என்கிறாள். ‘சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று, இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள். அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லையாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்-ஒருத்தியுடைய 3நெடிதானே இரவைப் போக்குவதற்காக வில்லைவளைத்துப் பிடித்த வில்வலியையுடையவனும் வருகின்றிலன். பகைவர்கள்மேல் காயாநிற்பதாய், பகைவர் பக்கல் பெருமாள் கண் பார்க்கிலும் தான் கண் பாராத படியான வில் ஆதலின் ‘காயும் கடும் சிலை’ என்கிறாள். அவனது 1சாங்கம் என்னளவிற் கண்டிலேன். பிராட்டிக்கு உதவினதும் ‘தனக்கு உதவிற்று’ என்றிருக்கிறாளாதலின் ‘என் காகுத்தன்’ என்கிறாள். 2“தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன் தஞ்சம் என்று நான் தஞ்சமாக நினைத்திருக்குமவனும் வருகின்றிலன். 3“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்” என்கிறபடியே, பிராட்டியுடைய விராதியைப் போக்கியது அவளுக்குக் காரியம் செய்தானாக நினைத்திருக்கை அன்றிக்கே, தன்சினம் தீர்ந்தானாயிருக்குமவன். மேலே, “கண்ணனும் வாரானால்” என்றாள்; முடி சூடிய அரசபுத்திரர் அல்லாதார்தாம் தவிருகிறார்கள், முடிசூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? 4ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே! என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள். அன்றிக்கே, பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன் என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள் என்னலுமாம். 5“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படைகோக்க வல்லவர். மாயும் வகை அறியேன்-இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்துபோதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன். வல்வினையேன்-முடிந்துபோதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாதபடியான பாவத்தைச் செய்தேன். என்றது, பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி. 1ஜீவிக்கை தேட்டமானபோது அரிதாம், முடிந்துபோதல் தேட்டமான போது அரிதாம், ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமாமித்தனை அன்றோ. பெண் பிறந்தே – 2பரதந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப்போமோ. பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹாபாவத்தைச் செய்தேன். 3“பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக்கடவதன்றோ.

4“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன்அவர் வரவிட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச்செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ, அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகிலன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து, பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல் தரித்திருந்ததன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி; அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலிபாய்ந்திருக்கும்; பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார்பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே, எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்; தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று, அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; 1அவரைக் கண்ட பிற்றைநாள் நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ. “தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப்போந்தவள், இப்போது அவர்பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் – தன் இச்சைக்கு வசப்பட்ட மரணமாம்போது ஆண்பிறந்த சக்கரவர்த்தி வீடுமன் முதலானோர்களாக வேணுமாகாதே: 1ஞானமுடையவர்களாதல் சுவதந்திரர்களாதல் செய்ய வேணும். அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

காகுத்தனும் வரவில்லையே
மாயும் வகையும் அறியேன் பெண் பாரதந்த்ர்யம் உண்டே
நெஞ்சமே நீயும் பாங்கு இல்லையே
வனவாசம் இளைய பெருமாள் -விட்டு பெருமாள் இருக்க முடியாதது போலே
நெஞ்சமே பந்த மோஷ ஹேது

“மனஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:”-
  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.

இரவு நீண்டு போக
முடிவு காண முடியாவிடிலும் ஆதி -கூட இல்லையே
ப்ராக பாவம்
இரவுக்கு ஆதியும் அந்தமும் இன்றி
கல்பமாய் -ஆனதே
சாத்தன் கூத்தன் சிலர் -இருளன் முனியன் -பெயர் மாறி சோழன் தொண்டைமான் வம்சம்
பட்ட பெயர் கொண்டு வாழுவது போலே கல்பமானதே
அதுக்கும் கூட அவசானம் உண்டே இதுக்கு அதுவும் இன்றி
காகுத்தன் -நெடிதான இரவை முடிக்க வில்லை கொண்டவன்
காயும் -கடும் -பிரதி பஷர் பக்கல் காயும் சிலை -சார்ங்கம் -சாங்கம் பஷ பாதம் வீச வில்லையே
என் காகுத்தன் பிராட்டிக்கு உதவினவன் தனக்கு
தசரதர்க்கு மகனே தஞ்சம் என்று இருக்கும் இவருக்கு வர வில்லையே
முடி சூடியவனும் நோக்கும் குடியில் இருந்தாலும்
ரஷிக்க ஸ்வ பாவம் கொண்டவனே
ககுஸ்தன் -எருது -வம்சத்தில் வந்தும் வாரானால்
எதிரிகள் இருக்கும் இடம் சென்று யுத்தம் செய்தவன்

தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

மாயும் வகையும் அறியேன்
வல்வினையேன் -அதுவும் கிடையாத பாபம் செய்து இருக்கிறேன்
பாபம் விநாச ஹேது -என்பர் ஜீவிக்க ஹெதுவானதே
முடிகை தேட்டமான போது அதுவும் அரிதாம்
பெண் பிறந்தேன் -பரதந்த்ரம் உண்டே
பிதா பத்ரா புத்திர ஸ்வா தந்த்ரம் அர்ஹதி

பெண்பிறவி அப்படிப் பாவத்தின் பலமாகுமோ? என்ன, ‘ஆம்’ என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார் ‘பெண்கள்’
என்று தொடங்கி.

  “நாஸாநாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிபவாகர:
வியாதீநாம் ஆகர: தோயம் பாபாநாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.

பரதந்திரப் பிறவியிலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப் போகாது
என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘நசாஸ்ய மாதா’ என்று தொடங்கி.

“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத்
விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம்
ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.

எனக்கு சமமாக மாதா பிதா கூட கிடையாதே பிராட்டி வார்த்தை –
பாவ பந்தம் -துடிக்கிறார் பெருமாள் இரவு தூங்காமல்-திருவடி வார்த்தை –
பிரிந்து பத்து மாதம் உண்டே –
இவளும் பிரிந்து இருக்கிறாளே திருவடி நினைக்க –
அதற்க்கு பிராட்டி வார்த்தை இது –
பிராணனை விட முடியாதே
இரவல் உடம்பு -போக்கி கொள்ள முடியாதே
நாட்டாருக்கு பிதா மாதா பிராதா-பரந்து -எல்லார் பக்கல் சிநேகமும் எனது பக்கம் வைத்து
பெருமாள் -கடலை அணை செய்து இங்கு இல்லை என்றால் துடிப்பாரே –
விடாய் கொண்டு தண்ணீர் பந்தல் வர -இல்லை போலே

புருஷர் ஞானவான்கள் ஸ்வதந்த்ரர் இல்லையே
அவன் வந்து தானே ரஷிக்க வேண்டும் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: