திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நான்காம் திருவாய்மொழி – “ஊரெல்லாம்”

முன்னுரை

    ஈடு :- 1“நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்” என்று பெரியதொரு மனோவேக ரசமாய் அன்றோ மேலே சென்றது, 2மடல் ஊரப் பெறுகைதான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம்படி பலக்குறைவு அதிகரித்தது; 3இனித்தான், மடல் ஊரும்போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுதவேணுமே, அதற்கு நேரம் இல்லாதபடி 4“ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல், இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அதுதான் மாலை நேரம் அளவு அன்றிக்கே சராசரங்கள் முற்றும் அடங்கிய 5நடு இரவாய், பழிசொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற, எல்லாரும் ஒருசேர உறங்குகையாலே ஓர் உசாத்துணையும் இன்றிக்கே, இவ்வளவிலே, பிரளயஆபத்திலே உதவும் தன்மையனுமாய் எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க, அவைதாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே 1ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்; 2“விஷஸ்யதாதா-இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ? மே-கிடைத்தால்தான் எனக்கு இது சம்பவிக்குமோ? சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிதுபோது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத்தான் தருவார் உண்டோ? வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற்கொலைக்குச் சாதனமானதைத்தான் தருவார் உண்டோ?” 3இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, 4‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவராய் இருந்தோம்; கிராமப்பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க; அவன் சர்வர்க்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சியுள்ளவனாகில், கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை, நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குணஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.

        ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.

    பொ-ரை :- ஊரிலேயுள்ள மக்கள் எல்லாரும் உறங்கி, உலகம் எல்லாம் செறிந்த இருளாகி, நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் தெளிந்து ஒரே நீண்ட இரவாகி நீண்டு விட்டது; உலகங்கள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் புசித்த நம் பாம்பணையான் வருகின்றான் இலன்; தோழீ! வலிய வினைகளைச் செய்த என்னுடைய உயிரை இனிக்காப்பவர்கள் யார்? என்கிறாள்.

வி-கு :- துஞ்சவும் இருளாகவும் தேறவும் இக்காலம் நீள் இரவாக நீண்டது என்க. துஞ்சுதல் – உறங்குதல். ஆல் – அசைநிலை. அன்றி, ஆகையாலே என்று பொருள் கோடலுமாம்.

இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

ஈடு :- முதற்பாட்டு. 1பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னை விரஹநோயாகிய பிரளயம் கோக்க, வந்து உதவாத பின்னர், இனி, நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ? என்று தன் ஜீவனத்திலே நசை அறுகிறாள்.

ஊர் எல்லாம் துஞ்சி-2ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம்மடல் ஊர்வது என்கிறாள். 1சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள். 2திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று. 3அன்றிக்கே, இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக்கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒருசேர உறங்கினபடியைச் சொல்லிற்று ஆகவுமாம். நாக பாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு ஜாம்பவான், மஹாராஜர், திருவடி தொடக்கமானார் தாம் உணர்ந்திருந்தமை உண்டே அன்றோ; இங்கு அங்ஙனம் ஒருவர் இலராயிற்று. ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத்துணையாவாரோடு வாசி அற, எல்லோரும் ஒருசேர உறங்கினார்கள் என்கை. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது. ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பேயுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில், உலகு எல்லாம் நள் இருளாய் – பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று. நள் என்று, நடுவாதல், செறிவாதல்; நடுவான இருள், செறிவான இருள் என்றபடி. அன்றிக்கே, எல்லாப் பொருள்களினுடையவும் ஒலி அடங்கில் இராத்திரி தனக்கெனவே ஓர் ஒலி உண்டு; அதனைச் சொல்லுகிறதாதல். ஆக, கண் களுக்குப் புலப்படுவது ஒன்றும் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

நீர் எல்லாம் தேறி-தண்ணீரில் வசிக்கும் பிராணிகள் முழுதும் ஆழ இழிந்து, அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. ‘ஊர் எல்லாம் துஞ்சி’ என்கையாலே, சிலர் வார்த்தை கேட்டுப் போது போக்குமது இல்லை என்கை. ‘உலகெல்லாம் நள்ளிருளாய்’ என்கையாலே, கண்களுக்குப் புலப்படும் பொருள் ஒன்று இல்லாமையாலே ஒன்றைக் கண்டு போது போக்குமது இல்லை என்கை. ‘நீர் எல்லாம் தேறி’ என்கையாலே, முதலிலே காதுக்கு விஷயம் இல்லை என்கை. இவைதாம் மற்றைய இந்திரியங்களின் காரியங்கட்கும் உபலக்ஷணமாய் இருக்கின்றன. 1பகலிலே ஆனால் இந்திரியங்கள் தனது தனது விஷயங்களிலே பல்லி பற்றுகையாலே ஆற்றாமை அரையாறு பட்டு இருக்கும், இராத்திரியில் எல்லா இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்கு ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு இருக்கும். ஓர் நீள் இரவாய் நீண்டதால்-2பண்டும் இராத்திரி நெடுகாநிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று. மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு, அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையாயிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள். பார் எல்லாம் உண்ட-பிரளய ஆபத்திலே இன்னார் இனியார் என்னாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன். 3பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும்உண்டு போலே காணும்; 1பிரளயத்தில் சிலர் மடல் எடுக்கப் புக்கு அதுவும் மாட்டாத நிலை உண்டாகி, அன்று உதவி செய்தது. என்றது, தங்கள் தங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாதபடியான ஆபத்து வந்தால் உதவுமவன் என்றபடி. நம் பாம்பு அணையான் – திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவன். என்றது, உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி. 2ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் படியும் இல்லையாயிற்று, சம்சாரிகள் படியும் இல்லையாயிற்றே நமக்கு! என்கிறாள். 3நித்தியசூரிகளை நித்திய அநுபவம் செய்விக்கும்; சம்சாரிகளுக்கு விருப்பம் இல்லாதிருக்கவும் தான் அறிந்ததாக ஆபத்தையுடையரானவாறே வந்து ஆபத்தைப் போக்குவான் தன்னுடைய சம்பந்தத்தாலே. 4தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்தபடியாலே ‘நம்’ என்கிறாள்.

வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ. 5“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்” என்னக்கடவதன்றோ. இனி-இவ்வளவில், ஆவி காப்பார் ஆர் – பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ? 1“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்கிறபடியே, ‘இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவுபடுகிற தோழி காக்கவோ, ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ, பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ? எல்லே – என்ன ஆச்சரியம்! அன்றிக்கே, ‘எல்லே’ என்று தோழியை விளிக்கிறாள் ஆதல். 2மேலே, “அன்னையரும் தோழியரும்” என்று அவர்களும் உறங்கினார்கள் என்னாநிற்கச் செய்தேயும், தன் ஆபத்தே செப்பேடாக ‘இவ்வளவில் அவள் உணர்ந்திருக்கச் சம்பாவனை உண்டு’ என்று நினைத்து ‘எல்லே’ என்கிறாள். வல் வினையேன் – எல்லாரையும் காப்பாற்றுகின்றவனுமாய், உடம்போடு அணைந்தாரைப் பிரியாதவனுமாய் இருக்கிற அவன் வந்து உதவாதபடியாய் இருக்கிற மஹாபாவத்தைச் செய்தேன். 3வல்வினையேன் ஆவி-பிரிவே காரணமாக நூறே பிராயமாயிருக்கிற என்னுடைய உயிரை. 4‘பிரிவிற்குச் சிளையாத இது இனி முடியப் புகுகிறதோ’ என்று இருக்கிறாள். 5ரக்ஷகனானவன் வந்திலன், எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.

முடிகை தேட்டமாக -ஆழ்வார் இருந்த அளவிலே
சர்வ ரஷகத்வம் காட்டி
திருப்பாற் கடலில் சயனித்து –
உம்முடைய ரஷணத்திலும் சித்தமாக இருக்கிறேன்
க்ரம ப்ராப்தி வேண்டாமோ

பிராட்டி அப்படி முடியத் தேடினாளோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘விஷஸ்யதாதா’ என்று தொடங்கி.

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி

விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி
ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா – விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்
எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா – ஆயுதத்தையாவது. வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.

குண ஞானத்தால் தரித்து தலைக்கட்டுகிறார்
குண்டலிதம் -சிலர் பின்பு
அபிநிவேச அதிசயத்தால் ஸ்வரூப அஅனுரூபமான பிரவ்ருதியில் இழிந்து
அவன் அசந்நிகிதன் ஆகையாலே
கால தாமதம் பொறுக்காமல் ஆர்த்தராய் ஆற்றாமை மிக்கு கூப்பிடுகிறார்
நாயகி நிலையில்

ஜீவனத்தில் நசை -இன்றி பேச
ஊரெல்லாம் துஞ்சி –
கவ்வை எருவாக –தாரகமாக -சொல்லி மடலூர -முடியவில்லை
இனி மேல் யார் பழி தாரகமாக மடலூருவது
எல்லாரரும் தூங்க
அசோகவனம் ராஷசர்கள் எல்லாம் தூங்க -அது போலே
இவள் தசை கண்டு சோகித்து கோரை சாய்ந்தால் போலே அனைவரும் தூங்க
நாக பாசம் அனைவரும் கட்டுண்ட பண்ணியது போலே
பிரம்மாஸ்திரம் ஜாம்பவான் திருவடி உணர்ந்து இருந்தது உண்டே -இங்கு அப்படி கூட யாரும் இல்லை
பழி ஹிதம் சொல்லுவார் வாசி அற -உசாவி கால ஷேபம் செய்ய முடியாமல் இருக்க –

உலகு அடைய இருளாய்
நள் இருள் நடு இரவு -செறிந்த இருள் -நள் சப்தம் -அனைத்து சப்தங்களும் அடங்க –
கும் இருட்டு
நீர் தத்வங்கள் தொநியும் அடங்க –
வார்த்தை கேட்டு போது போக்க முடியவில்லை -வாக் இந்த்ரியம் வேலை இல்லை
முடியாது கண்ணுக்கு இலக்கு இன்றி கண்டு பொழுது போக்க முடியாது
காதுக்கும் விஷயம் இல்லை
சர்வ இந்த்ரியங்களுக்கும்
பகலில் ஸுவ விஷயங்களில் பல்லி  பட்டால் போலே பற்று இருக்கும் ஆற்றாமை அரை
ஆரு பற்று இருக்கும் -இரவில் மிக்கு இருக்குமே –
ஓர் நீள் இரவாய் நீண்டதாய்
பகல் கலவாத இரவாக போனதே
தேவர்கள் இரவு நீண்டு இருந்தாலும் அதுக்கும் அவதி உண்டு
தசிணாயணம் அவர்கள் இரவு
இதுக்கு அவதி இன்றி நீண்டு இருக்க
பார் எல்லாம் ஒக்க ரஷித்தவன் -உண்டு -பிரளய ஆபத்தில் -அன்று செய்தவன் –
இவள் ஒருத்திக்கு அனைவர் ஆபத்தும் வந்ததே -விரக பிரளய ஆபத்து
மடல் எடுக்க ஆசைப்பட்டு அதுவும் முடியாமல் –
தம் தாமால் வந்த ஆபத்து
உகந்தாருக்கு உடம்பு கொடுக்கும் பாம்பணையான்
ஆதி சேஷன் கிடைத்ததும் கிடைக்க வில்லை
சம்சாரிகள் போலேவும் கிடைக்க வில்லை
இரண்டும் இழந்தாள் இவள்
இரண்டு கோடி -சேராத -அவஸ்தை

ஆபத்தை போக்குபவன் சம்பந்தம் காரணமாக
சம்ச்லேஷதுக்கு -நம் பாம்பணையான் -கூப்பிட சக்தி கொடுத்து -முன்பு கூடி –
கதற சக்தியும் கொடுத்தானே
வாரானால் -வயிற்றில் வைத்து ரஷிக்க வேண்டா -உடம்பு கொடுக்க வேண்டாம்
முகம் காட்டினாலே போதுமே
திருக்கண் கடாஷமே துக்கம் போக்குமே

முகம் காட்டினவாறே துக்கம் போமோ? என்ன, அதற்குப் பிரமாணத்தோடு
விடை அருளிச்செய்கிறார் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி.

“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.

இனி -காப்பார் யார்
யான் ரஷிக்கவோ
தோழி ரஷிக்கவோ
தாயார் ரஷிக்கவோ
ஊரார் ரஷிக்கவோ
அவன் ஒருவனே ரஷகன்
எல்லே –ஆச்சர்யம் சம்போதம் முன்பு வாசனையால் தூங்கி இருந்தாலும்

சர்வ ரஷகன் உடம்பு அணைந்த ஆதி சேஷனுக்கு பிரிவு கொடுக்காத -அவனும் காக்காமல் இருக்க –
பிரிவே ஹேதுவாக நூறு பிராயமாக இருக்கும் பாவியேன் ஆவி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: