திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.

பொ-ரை :- ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரானை, வாசனை பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள் எல்லாம் வைகுந்த மா நகரமேயாகும் என்றவாறு.

வி-கு :- இரைத்தல் – ஒலித்தல். விரை – வாசனை. நிரை-வரிசை. அந்தாதி-முதற்செய்யுளின் அந்தமானது, அடுத்த செய்யுளின் ஆதியில் அமையும்படி பாடுவது. அந்தம்-ஈறு. ஆதி-முதல். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்பது, இலக்கணம். ’வைகுந்தம் – அழிவில்லாதது; பரமபதம்.

ஈடு :- முடிவில், 1இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்கும் கருங்கடல் வண்ணன் – 2அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில் 3“‘வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது கடல் கீழ்மண்கொண்டு மேல் மண் எறிந்தாற்போலேயாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன்தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச்செய்தார். வண்ணன்-ஸ்வபாவத்தையுடையவன் என்றபடி. இரைக்குங் கருங்கடல் வண்ணன் – ஓதம் கிளர்ந்த கடல் போலே சிரமஹரமான வடிவையுடையவன். 1மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி. வண்ணன் – வடிவையுடையவன். கண்ணபிரான்தன்னை – அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு இது. ஸ்வாபாம் இது. இங்ஙனம் இருக்க, நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ? விரைக் கொள் பொழில் குருகூர் – 2இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது உண்டான பரிமளத்தால் நிறைவு பெற்றபடி. நிரைக் கொள் அந்தாதி – இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது, எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்தபடி. 3இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே, இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ. 4“சுலோகத்திற்குரிய எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீராமாயணமானது சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால் சோக வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே, சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய திருவருளால் எல்லா இலக்கணங்களோடு கூடி இருந்தாற்போலே.

உரைக்க வல்லார்க்கு – மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும். தம் ஊர்

எல்லாம் வைகுந்தமாகும் – அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம். அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம்தானே பரமபதமாம் என்னுதல். 1அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. 2இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது; இப்பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்; இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்; 3இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாசறு சோதிகண்ணன் வந்துகல வாமையால்
ஆசை மிகுந்துபழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர்.

நிகமத்தில்
ஓடி வந்து -இந்த திருவாய் மொழி உரைக்க வல்லாருக்கு
அதுவே பரம பதம் -ஆகும்படி
இரைக்கும் கரும் கடல் -வண்ணன்
கடல் கீழ் மண் கொண்டு மேலே எழுந்தது போலே -சாயமான -வார்த்தை
கேட்டு அது போலே மடல் எடுப்பேன் சொன்ன உடன் ஓடி
வந்தான் வண்ணன் -ஸ்வபாவன் -அனந்தாழ்வான் அருளிய ஸ்ரீ ஸூ க்தி
மடல் எடுத்தும் திருக் குருகூரும் மணம் பெற்றது
பிரபந்தம் சேர இருந்த படி –

“சாபம் ஆநய ஸௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந்
சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து பிலவங்கமா:” –
என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.

வைகுந்தம் பலம்
கிடைக்கும் அவர்கள் இருக்கும் இடமே
பரமபதம் உக்தி மாத்ரமே போதும்
புருஷோத்தமன் தானே
அனுக்ரகம் பொய்யே இல்லையே

ஏசி அறவே
மண்ணில் மடலூர மாறன்  ஒருமித்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: