திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நாணும் நிறையும் கவர்ந்துஎன்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை
ஆணைஎன் தோழீ! உலகுதோறு அலர் தூற்றிஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

பொ-ரை :- என் தோழீ! ஆணை; என்னுடைய நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, நல்ல நெஞ்சினையும் அழைத்துக்கொண்டு மிக உயர்ந்திருக்கின்ற பரமபதத்திலே சென்று தங்கியிருக்கின்ற தேவபிரானை, உலகுகள் தோறும் அலரைத் தூற்றி என்னால் செய்யக்கூடிய மிறுக்குகளைச் செய்து அடங்காதவளாய் மடல் ஊர்வேன் என்கிறாள்.

வி-கு :- அலர்-பிறர் கூறும் பழமொழி. தூற்றுதல்-பலர் அறியச் செய்தல், குதிரி-தடையில்லாத பெண்; அடங்காதவள். ஊர்தும்: தனித்தன்மைப் பன்மை.

“மடல் ஊர்தும்” என்றதனால், மடல் ஊராமை உணர்க.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1நெஞ்சு விம்மல் பொருமலாகா நிற்கவும், தன் பெண்தன்மையாலே இதற்கு முன்பு மறைத்துக்கொண்டு போந்தாள்; இனி, ‘அவனை அழிக்கப் புகுகிற நாம், யார்க்கு மறைப்பது’ என்று அது தன்னையே சொல்லுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து-சத்தையோடு கூடி வருகின்ற நாணத்தையும் கொண்டான், 2களவு கலந்தால்வருமதனையும் கொண்டான். என்றது, 1வாசல்விட்டுப் புறப்படச் செய்யக் கூடியதல்லாத நாணத்தையும் கைக்கொண்டு, அகவாயில் ஓட்டம் தாய்மார்க்கும் சொல்லக் கூடியதன்றிக்கே இருக்கும் அடக்கத்தையும் கைக்கொண்டான் என்றபடி. என்னை-அவ்விரண்டனையுமே நிரூபகமாகவுடைய என்னை. நல் நெஞ்சம் கூவிக்கொண்டு-பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி, அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற்காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக்கொண்டு 2‘இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோவேகம் இருந்தபடியால் திரைமேலே நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல் : சேண் உயர் வானத்து இருக்கும்-மிக்க ஒக்கத்தையுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, 3அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள் குடி இருப்பில் அன்றிக்கே பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு; ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி. தேவபிரான் தன்னை-4இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக் கொண்டு தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிறபடி. 5அன்றிக்கே, பிரமன் முதலாயினோர் ஓலக்கம் போலப்பேறு இழவு முதலியவைகளில் வருகின்ற துடிப்பு அறியாத ஓலக்கம் அன்றிக்கே, ‘சம்சார மண்டலத்திற்போய் நான் பெற்றுக்கொண்டு வந்தவை இவை’ என்று தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிற ஓலக்கம் முதன் முன்னம் 1அதுவாகப் பெற்றோமே என்பாள் ‘தேவபிரானை’ என்கிறாள் என்னலுமாம். 2பிரிவினால் வரும் வியசனம் அறியார்களேயாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம்.

சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான் தன்னை-3அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’ என்னுமித்தனையாயிற்று அவ்விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது; ‘விரஹப் பிரளயம் ஏறிப் பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்; அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே! 4அன்றிக்கே, நீயே பார்ப்பாயாக அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என்கையிலே படப் புகுகிற பாடு; இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள் ‘தேவபிரான் தன்னை’ என்கிறாள் என்னலுமாம். இப்போது இங்ஙனே ஒருவாய்ப்பகட்டுச் சொல்லுகிறாய், அது செய்து தலைக்கட்ட வல்லையாகப் புகுகிறாயோ? என்ன, ஆணை என்கிறாள். இவள் இப்போது அவன்மேல் ஆணை இடுகிறாளோ, தோழிமேல் ஆணை இடுகிறாளோ? என்னில், அழிக்க நினைக்கப்பட்டவன்மேல் ஆணை இடாளே,ஆதலால், தோழிமேல் ஆணையாமத்தனை. 1இதற்கு உடன்பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பரதேவதை உண்டு’ என்று இராளே, இவள்தான். ‘இது வார்த்தையளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக்கட்டப் பெறுவதுகாண்’ என்னும் தன் நினைவு தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக்கொள்ளுகிறாள். அன்றிக்கே, இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து 2ஆணை என்? என்கிறாள் என்னுதல்; ஆணை என்-தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில், தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லையாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி. 3அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே, இத்தோழிதானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே. உலகுதோறு அலர் தூற்றி-உலகங்கள் எங்கும் புக்கு 4அழிக்கக் கடவேன். என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன். 5‘அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,அவ்வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழியடையப்படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.

ஆம் கோணைகள் செய்து-என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன். கோணைகள் – மிறுக்குக்கள். 1என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே, ‘நம் குணநிஷ்டர்படி இது அன்றோ’ என்று குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்; ‘அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன். அன்றிக்கே, நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன், அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன். 2“வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன். 3“தலையாலே வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால் செய்யப்படவில்லை” என்று புண்படும்படி செய்யக் கடவேன். என்றது, பிள்ளை தலையாலே இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்னும்படி செய்யக் கடவேன் என்றபடி. 4நான் இதனைச் செய்தால், அவர் தம் மனிச்சு அழியாமைக்காக, ‘தம்மோடுஅசாதாரண பந்தமுடையார் தங்கள் ஆதரத்தாலே செய்யக் கடவது ஒன்று அன்றோ இது’ என்னக் கடவன், ‘அது அன்று இது, நான் சாதந அநுஷ்டானம் செய்கிறேன்’ என்னக் கடவேன். 1“எக்காலத்திலும் கைகூப்பிக் கொண்டு நிற்பார்கள், அதுவே மிகவும் விருப்பம் என்பது தோன்றும்படியாகச் சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்கிற இதிலே செலவு எழுதப் பார்ப்பர் அவர்; ‘அங்ஙனம் அன்று, உன் உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன்’ என்னக் கடவேன்.

2குதிரியாய்-குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய், தடை இல்லாத பெண் என்கிறபடியாய், தடையுடையேன் அன்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, குதிரி என்பது, செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ, அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீரமாத்திரமேயாய் என்னுதல்; அன்றிக்கே, பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக்கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள், அதனையுடையேனாய் என்னுதல். மடல் ஊர்துமே- 3‘செய்யக்கடவதாயிற்றபின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

ஆணை -சத்யம் -தோழி -அலர் தூற்ற உலகு -முழுவதும்
கும்ச்தித ஸ்த்ரி குதிரி போலே –
களவு -கொண்டான்
நெஞ்சுக்குள் உள்ளதை தாயார் இடம் சொல்ல முடியாமல் அடக்கமும் கை கொண்டு போனான்
நெஞ்சையும் தனது பக்கம் நிறுத்திக் கொண்டு
எட்டா நிலத்தில் போய்
உயர்த்தி -பரம பதம் இருந்த தேவ பிரான் -வெற்றி காட்டிக் கொண்டு ஹர்ஷதுடன் இருக்க
களவு கொண்டதை காட்டி பெருமையாக காட்டி –
மாடு செல்வம்

அந்தர ஜாதி’ என்றது, சிலேடை: ஆகாசத்திலே சஞ்சரிக்கின்ற சாதி
என்றும், தாழ்ந்த சாதி என்றும் பொருள்.

செய்து தலைக் கட்ட முடியுமா தோழி கேட்க
ஆணை -என்கிறாள்
வேற பரதெய்வம் இல்லை என்று இருப்பவள் தோழி ஆணை என்கிறாள்
ஆணை என் தோழி
ஆணை என் -எனது வழி வருவான் தடை இன்றி –
சர்வாதிகன் -அழிக்க முடியும் படி செய்ய மாட்டானே
கருத்துப் படி வருவான்
அசாதாராண விபூதியில் உள்ளார் -உலகு -தோறும்
பரம பதத்தில் இல்லை –
தோஷத்துக்கு மதிப்பு இங்கே தான் –
குணத்தையும் தோஷமாக கொள்ளும் இடம் இது தானே
அங்கு தோஷம் சொல்லி உபயோகம் இல்லையே

தேவபிரானைப் பழி சொல்லுகிறாளாகில், உலகுதோறு அலர் தூற்றுவது
எற்றிற்கு? என்ன அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அசாதாரண’ என்று
தொடங்கி. என்றது, குணத்தைப் போலவே தோஷத்தையும் எண்ணுகிற
அவ்விபூதியிலன்றிக்கே, குணத்தையும் தோஷமாகக் கொள்ளுகிற
இவ்வுலகத்திலே என்றபடி. அசாதாரண விபூதி-பரமபதம். ‘தாம் பிறர்
அறியும்படி இரார்களே அன்றோ’ என்றது, இவள் செய்கிற செயல்
தங்களுக்கு விருப்பமில்லாததாகிலும் பிறர் அறியாதபடி
அடக்கிக்கொண்டிருப்பவர்களே அன்றோ என்றபடி.

ஊரார் எல்லாம் ஒழியாமே –
இத்தைக் கொண்டே திரு மடல் -அருளி
காசு கொடுத்து எழுதி வைக்க -சொன்னான்
சீரார் திருவேம்கடமே இத்யாதி
பெரிய திரு மடல் 41 திவ்ய தேசம் காட்டி –
தோழி நீ பார்த்துக் கொள் உலகு முல்ய்வதும் சொல்லி
காலில் விழுந்து வணங்கி -விடுவேன் வெட்க்கப் பட்டு உருகும்படி இருக்க வைப்பேன்

மேலதற்கே வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார் ‘தலையாலே’ என்று
தொடங்கி.

“மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத:    சிரசா யாசத: தஸ்ய வசனம் ந க்ருதம் மயா”

என்பது, ஸ்ரீராமா. யுத். 24:19. ஸ்ரீராமபிரான் திருவார்த்தை.

காலிலே குனிந்தால் அது அவனுக்கு மிறுக்காக இருக்குமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘வட்டிக்கு’ என்று தொடங்கி.

“கோவிந்தேதி யதா அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசிநம்
ருணம் பிரவிருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி”

என்பது, பாரதம் உத்யோகபர். 58:22. இது, கிருஷ்ணன் கூறியது.
தொட்டுவிடுதல்-ஈடுபடுத்துதல்

நான் இதனைச் செய்தால்’ என்றது, நான் காலிலே குனிந்தால்
என்றபடி. மனிச்சு-ஆண் தன்மை, பௌருஷம். அசாதாரண
பந்தமுடையார்-சொரூப ஞானமுடையவர்கள். அசாதாரணம்-பொது
அல்லாதது. தங்கள் ஆதரத்தாலே-சொரூபத்திற்குத் தக்கது என்னும்
ஆசையால்.

அன்றிக்கே
சாதனமாக செய்தது போலே

“குதிரி” என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
அடங்காத பெண் என்பது முதற்பொருள். இப்பொருளுக்கு, குத்ஸித ஸ்திரீ
என்பது, “குதிரி” என வந்ததாகக் கோடல் வேண்டும். இரண்டாவது பொருள்,
ஆபரணம் இட்டு வைக்கும் செப்பு என்பது. குதிரையையுடையவள் என்பது,
மூன்றாவது பொருள்.

நெல் ஆத்மா போலே குதிரி –
மடல் -ஒன்றை நினைத்து ஒன்றை சொல்லாமல் இதையே சொல்லி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: