திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பேய்முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய்முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறுஅட்ட
தூமுறுவல் தொண்டைவாய்ப் பிரானைஎந் நாள் கொலோ?
        4நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.

  பொ-ரை :- பேயின் முலையை உண்டு சகடத்தின் மேலே பாய்ந்து மருத மரங்களின் நடுவே சென்று அவற்றை வேரோடு கீழே தள்ளிப் புள்ளின் வாயைப் பிளந்து யானையைக் கொன்ற, தூய்மை பொருந்திய புன்சிரிப்பையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய பிரானை, தோழீ! தாய்மார்கள் நாணுறும்படியாகச் சேர்வது எப்பொழுதோ? என்கிறாள்.

வி-கு :- பேய் – பூதனை, சகடம்-சகடாசுரன். புள்-பகாசுரன். களறு-குவலயாபீடம். அட்டபிரானை அன்னையர் நாண உறுகின்றது எந்நாள் கொலோ? என்க. தாய்மார், ஐவராதலின் அன்னையர் என்கிறாள். “ஐவர் நலன் ஓம்ப” என்றார் திருத்தக்கதேவரும். தூ-பரி சுத்தம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1மஹோபகாரகனைக் ‘குணம் இல்லாதவன்’ என்று சொல்லுகிற தாய்மார் ‘இவனை யாகாதே நாம் குணம் இல்லாதவன் என்றது’ என்று நாணம் உறும்படி அவனைக் காண்பது என்றோ! என்கிறாள். அவன், தன் சத்தையை உண்டாக்கி, நம் சத்தையைத் தந்தான்’ நாம் அவன் சத்தையால் உண்டான பலத்தைப் பெறுவது என்றோ என்கிறாள்.

பேய் முலை உண்டு – பூதனையால் வந்த ஆபத்தைத் தப்பி, சகடம் பாய்ந்து-2உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி காவலாக வைத்த சக்கரம் அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வர அதனை வருத்தம் இன்றியே முறித்து, மருதிடை போய் முதல் சாய்த்து-தவழ்ந்து போகா நிற்க இடைவெளி இல்லாமல் வழியிலே நின்ற மருத மரங்களின் நடுவே போய்த்தான் அவற்றைத் தப்பிப் போன அளவே அன்றிக்கே, அவை தம்மை வேரோடு பறித்து விழவிட்டு. அன்றிக்கே, முதல் சாய்த்து-குருந்தத்தைப் பறித்துப் போகட்டு என்னுதல். புள் வாய் பிளந்து-பகாசுரனை வாயைக் கிழித்து, களிறு அட்ட – குவலயாபீடத்தைக் கொன்ற, தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை – தடையாக வந்தவைதாம் பிரபலமாயிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை 3பாத்தம் போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி.

என்றது, 1வெண்முறுவலையும் சிவந்த அதரத்தையுமுடைய உபகாரகனை என்றபடி. அன்றிக்கே, தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக் கனி போன்ற அதரத்தையுமுடையவனை என்னுதல். இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில், அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில், இவையேயன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி. என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இத்தனை போக்கி, அவனை அழிக்க உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் என்றபடி. அவ்வுபகாரங்கள் எல்லாம் 2தனக்காகச் செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.

3பூத் தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு. பூத் தரு புணர்ச்சியாவது, இவள் ‘உத்தியான வனத்திலே பூக் கொய்ய’ என்று புறப்பட்டுப் பூக் கொய்யாநிற்க, அருங்கொம்பிலே எட்டாதே நின்ற பூவை இவள் ஆசைப்பட்டால் ஒருவன் தன்னைப் பேணாதே மரத்தின்மீது ஏறி அம்மலரைப் பறித்துக் கொடுக்க, ‘இவன் தன்னைப் பேணாதே தன் நினைவைத் தலைக்கட்டினான்’ என்று அதற்காகத் தன்னைக் கொடுத்தல். புனல் தரு புணர்ச்சியாவது, புதுப்புனல் ஆடப் போய் நீரிலே இழிந்து விளையாடா நிற்க, ஒரு சுழி வந்து இவளைக் கொடுபோக, அதில் நின்றும் எடுத்து ஏறவிட்டதற்காகத் தன்னைக் கொடுத்தல். களிறு தரு புணர்ச்சியாவது, வீதியிலே நின்று விளையாடாநிற்க, யானையின் கையிலே அகப்படப் புக, அதன் கையில் நின்றும் தன்னை மீட்டமைக்குத் தன்னைக் கொடுத்தல் என்று ஒரு மரியாதை கட்டினார்கள்; 4இவளை நோக்கினதற்காக, இவள், தன்னைஅவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது; அவ்வளவு அன்றிக்கே, 1இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். 2அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப்பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது, இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.

தோழீ! நாம் உறுகின்றது எந்நாள் கொல்லா-தோழீ! அவன், தன்னை உளனாக்கி வைத்தான், இனி நாம் அவனைக் கிட்டுவது என்றோ? 3“ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழிதான் இருப்பது; ஆதலின், ‘நாம் உறுகின்றது’ என்கிறாள். 4‘இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப்படுகிறோம் அல்லோம்; பின்னை எற்றிற்கு? என்னின், அன்னையர் நாணவே-‘பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள், அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, 5“எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,

நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே, அவன் நாணமுற்று வந்து நிற்கிறபடியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொன்னோம்’ என்று தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும்படியாக.

தன் பக்தர்களுக்கு உபகரிக்க -பேய் முலை உண்டு -சகடம் பாய்ந்து இத்யாதி
தூய்மையான முறுவல் -தொண்டை வாய் -பிரான் -உபகாரகன் ஐந்து செஷ்டிதங்களையும்
அன்னை வெட்கப்ப்படும்படி –
பூதனை ஆபத்து தப்பி
உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி ரஷகன் சகடாசுரன் வர –
மருது இடை போய் -ஒன்றாய் வளர்ந்து நிர் விவரமாய் -ஓட்டை இடை -இன்றி
விவரித்து சொல் -நடுவில் போய் வேரோடு பறித்து முதல் சாய்த்து –
அன்றிக்கே
குறும்பமரத்தை பறித்து பொகட்டு
பிரதி பந்தகங்கள் பிரபலமாக இருக்க செய்தேயும் -ஸ்மிதம் பண்ணி நின்றபடி –
பிரான் -உபகாரகன் –
தன்னை நமக்கு உபகரிதத்தவன்
அழிக்க நினைத்து மடல் -எடுப்பவள் இதுவே இவள் தான் அழிக்க -நினைப்பது
அச்சம் உறுத்தி முகம் காட்ட வைக்க மடல் எடுபதாக சொல்கிறாள்
தனக்காக -பூத்தரு புணர்ச்சி -பூவை தர நாயகிக்கு
புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி போலே
இவன் செஷ்டிதங்களில் மயங்கி

நாம்” என்று தோழியையும் கூட்டிச் சொன்னதற்கு, பாவம் அருளிச்
செய்கிறார் ‘ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது திருவடியைப் பார்த்துப்
பிராட்டி கூறியது.

“சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி
பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா”

என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 5. இதனால், சமமான துக்கத்தையுடையவளாதலின்
தோழியையுங்கூட்டிச் சொல்லுகிறாள் என்றபடி. “நாம்” உளப்பாட்டுத்
தன்மைப் பன்மை.

அது போலே தோழி இருப்பது –
ஸ்பர்சித்தால் போதும் நினைக்க வில்லை
அன்னையர் நாணும்படி ஆறி இருக்க முடியாமல்
மடல் எடுக்கும் அளவுக்கு தாமசம் பண்ணினோமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: