திருச்சந்த விருத்தம் -101-110-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

101-பாட்டு –அவதாரிகை –

நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான
இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன –
அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக
தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

வியாக்யானம்-

இரந்து உரைப்பது உண்டு –
சிரஸா யாச தஸ் தஸ்ய -என்கிறபடியே -திருவடிகளிலே பக்த அபிமாநனாய்க் கொண்டு-விழுந்து -தலையாலே தேவரீரை இரந்து விண்ணப்பம் செய்யப் புகுகிறதொரு கார்யம் உண்டு –

வகுத்த விஷயத்திலே ஸ்வரூப ப்ரயுக்தமான அநவரத பாவனையையே அர்த்திக்கிறார்-
ஆகையாலே -இப்படி கூசிச் சொல்லுகிறது என் என்னில் –
தம்முடைய பூர்வ வ்ர்த்தத்தைப் பார்த்தும் –
தத்துவத்தினுடைய உத்துங்கதையை பார்த்தும்  அருளிச் செய்கிறார்
பூர்வ வ்ர்த்தத்தை பார்த்தால் கிட்டக் கூச வேணும் –
கிட்டினாலும் உத்துங்கதையைப் பார்த்தால் அநாதிக்கிறானோ என்று கூச வேணும்
வாழி –
அவன் முகம் பார்க்கைக்காக மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –
அநவரத பாவநைக்கு விஷயமான அவன் அழகை அனுசந்தித்து
மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –

ஏம நீர் நிறத்த மா –
அப்ரமேயோ மஹோ ததி -என்கிறபடியே அபரிச்சின்னமான கடல் போலே இருக்கிற-திரு நிறத்தை உடைய நிருபாதிக பந்துவே –
ஏமம் -உறவு
ஸநோ பந்து -என்றும் –
அஹம்வோ பாந்தவ ஜாத -என்றும் சொல்லக் கடவது இ றே
இத்தால்-
1-இரந்து அல்லாது நிற்க ஒண்ணாத படியையும் –
2-மங்களா சாசனம் பண்ணி அல்லாது நிற்க ஒண்ணாத படியான வடிவு அழகையும் -3-ப்ராப்தியையும் -சொல்லுகிறது –

வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப் –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அநுரூபமான நன்மைகளை –
அபேஷித்தார் அபேஷித்த வரங்களை தந்து அல்லது நிற்க மாட்டாத
திரு உள்ளத்திலே வைத்ததாகில்
சீர் -நன்மை -அதாகிறது -கைங்கர்ய சாம்ராஜ்யம்
இந்த கைங்கர்யத்துக்கு அடியாய் இருந்துள்ள அநவரத பாவனையை அபேஷிக்கிறார் மேல் –

பரந்த சிந்தை ஒன்றி நின்று-
சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் –
மற்று ஒன்றில் போகாதே –
உன் பக்கலிலே ஒன்றி நின்று –
நின்ன பாத பங்கயம் –
ப்ராப்தமுமாய் –
நிரதிசய போக்யமும்
ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –
அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –
என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்
உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை

———————————————————————————–

102-பாட்டு –அவதாரிகை –

விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க –
அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-நான் தரித்து இருக்கும்படி -இன்னபடி செய்கிறோம் என்று -ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

வியாக்யானம்-

விள்விலாத காதலால் –
பிரயோஜனாந்தரன்களைப் பற்றி நெகிழாத -அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு -திருவடிகளில் பண்ணின பிரேமத்தாலே -விள்கை விள்ளாமை விரும்பி -என்னக் கடவது இ றே

விளங்கு பாத போதில் வைத்து –
அந்த பிரேமத்தால் உஜ்வலமான திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரிதர் உடைய சந்நிதியிலே அலரும் அது இறே திருவடித்-தாமரைகள் –
இத்தால் –
நான் பிரயோஜனாந்த பரனாய் -அசித் சம்பந்தம் அனுவர்த்திக்கிறதோ –
தேவரீர் ஆஸ்ரித வத்ஸலர் அல்லாமே அனுவர்த்திக்கிறதோ -என்கை –

உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ-
அத்  திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு -ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு
ஊனமாகிறது –
ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் அனுபவ சங்கோசமும் –
இவற்றை விளைக்கும் அது இ றே தேக சம்பந்தம் –
சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இ றே
இத்தால் –
வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –
சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –

தெழிக்கும் நீர் பள்ளி மாய-
தேவரீரோட்டை ஸ்பர்சத்தாலே -கோஷிக்கிற கடலிலே –
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக –
கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்யமான
சௌலப்யாதி திருக்குண உக்தனே
தெழிக்கை -முழங்குகை

பன்றியாய வென்றி மாய –
விஸத்ர்சமான சம்சாரத்திலே ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக கண் வளர்ந்து
அருளுகிற இவ்வளவே அன்றிக்கே –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாய் பாதாள கதையான
பூமியை எடுத்து ஹிரண்யாஷனை வென்ற வீரத்தை உடையவனே

குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் –
தன்னில் கிடக்கும் பதார்த்தங்களை கரையிலே பொகடும் திரைக் கிளர்த்தியை உடைய-
கடலிலே அழுந்தக் கடவ மலைகளைக் கொண்டு அணை செய்த சக்கரவர்த்தி திருமகனே –
தோன்றல் -அரசன்
பரமபத நிலயனான தேவரீர் -ஆஸ்ரித அர்த்தமாக -சம்சாரத்தில் வந்து –
சுலபராயும் -தேவரீரை அழிய மாறி நஷ்டோத்தரணம் பண்ணியும் –
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்தும் –
அதி மாநுஷ சேஷ்டிதங்களைப் பண்ணியும் –
இப்படி நீர்மையாலும் -சக்தியாலும் -குறைவற்ற தேவரீருக்கு
என் சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கு என் கையில் பொருள் உண்டோ -என்கை

ஓன்று சொல்லிடே –
இரண்டு தலையிலும் குறைவற்ற பின்பு இது அனுவர்த்திக்கிறது -நீ நினையாமை – இ றே
தேவரீர் நினைக்கும் அளவும் தரிக்கும்படி -இன்னளவிலே  செய்கிறோம் –என்று
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

தெழிக்கும் நீர் பள்ளி மாய -பன்றியாய வென்றி வீர குன்றினால் -துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல்
விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து உள்ளுவேனதுஊன நோய் ஒழிக்கும் ஓன்று சொல்லிடே-என்று அந்வயம்-

———————————————————————————

103 பாட்டு –அவதாரிகை –
அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன –
அங்கனே ஆகில் –தேவரீர் உடைய
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
வடிவு அழகுக்கும்
வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு
ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார்

திருக்கலந்து சேரு  மார்ப தேவ தேவ  தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -103-

வியாக்யானம்-

திருக்கலந்து சேரு  மார்ப –
பிராட்டி தேவரீர் உடன் சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷத்தில் அதி சங்கித்து –
அகலகில்லேன் இறையும் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை  உடையவனே –
பக்தரோடு முக்தரோடு நித்யரோடு -வாசியற -ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
சர்வருக்கும் அபாஸ்ரய பூதை யான பிராட்டி -தான் நித்ய சாபேஷை யாம் படி யன்றோ
தேவரீர் உடைய பெருமை –

தேவ தேவ  தேவனே  –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளுக்கு மோஷ ருசி பிறந்தவன்று -ப்ராப்யரான நித்ய சூரிகளுக்கு
நித்ய அனுபாவ்யனாய்க் கொண்டு நிர்வாஹகன் ஆனவனே –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே -எடுத்துக் கை நீட்டுகையே -யாத்ரையாய்
இருக்கும் நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகன் -என்கை-

இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா –
ரிக் ப்ரசுரமான வேதத்தால் பிரதிபாதிக்கையையே ஸ்வபாவமாக உடையையாய் நின்ற
ஹேய ப்ரத்யநீகனே –
நீதி -ஒழுக்கம் -அதாகிறது -ஸ்வபாவம் –
ஹரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய -என்றும்
அபஹதபாப்மா -என்றும் -இத்யாதி வாக்யங்களாலே –
1-ஸ்ரீ ய பதித்வம் -என்ன
2-ஸூ ரி போக்யதை -என்ன –
3-ஹேய ப்ரத்யநீகை -என்ன –
இப்படிகளாலே வேதைக ஸமதிகம்யன் -என்கை-

கருக்கலந்த காள மேக மேனி யாய –
பொன் போலே புகர்த்துக் கறுத்து மேகம் போலே இருக்கிற திருமேனியை உடைய க்ர்ஷ்ணனே –
கரு -பொன்
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகவபாஸ் வரா -என்றும்
அஜாயமாநோ பஹூதா விஜாயதே -என்றும் –
விக்ரஹத்தையும்
அவதார சௌலப்யத்தையும் சொல்லிற்று இ றே
நவமாஸ த்ர்தம் கர்ப்பம் -என்னுமா போலே -நீரை உள்ளே உடைய காள மேகம் என்னவுமாம் –
கரு -கர்ப்பம்
இத்தால் –
தாபஹரமாய்
ஆகர்ஷமுமான
வடிவோடே க்ர்ஷ்ணனாய் வந்து அவதரித்து
ஆஸ்ரிதருக்கு சுலபன் ஆனவன் -என்கை –

நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –
ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –

———————————————————————————————

104-பாட்டு-அவதாரிகை –

யத் கரோஷியதச் நாஸி -என்றும் –
த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்
இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே –
நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ –
உரை செய் -என்கிறது என் -என்ன –
நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க
நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ
நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே
அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை
இடந்து கூறு செய்த  பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

வியாக்யானம்-

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை-
அற வெட்டியனான கவந்தன் -தந்தவக்ரன் -கரன் -முரன் -இவர்களுடைய தலைகளை –
அல்லாதார் காட்டில் கபந்தனுக்கு வெட்டிமை யாவது
பிராட்டியை பிரிந்து கடலும் மலையும் விசும்பும் தேடுகிற தசையிலே
எதிர் அம்பு கோக்க வந்த வெட்டிமையை நினைந்து வெறுக்கிறார் –

இடந்து கூறு செய்த  –
அவர்கள் தலை மண்டையை இடந்து சரீரங்களை -சிந்நம் பிந்நம் சரைர் த் தக்த்தம் –
என்கிறபடியே சகலமாக்கினவனே –
அசூர ராஷசர்களைப் யழியச் செய்தாப் போலே
என்னுடைய பாப ரூபமானப்ரதிபந்தகங்களை யழியச் செய்ய வேணும் -என்கை

பல் படைத் தடக்கை மாயனே –
அவர்களை அழியச் செய்கைக்கும் -பலவகைப் பட்ட ஆயுதங்களை
ஆஸ்ரிதரைக் குளிரத் தடவ கடவ திருக் கையிலே
தரித்த ஆச்சர்ய சக்தி உக்தனே
ஒன்றே பிரதிகூலருக்கு பாதகமாய் -அது தானே அனுகூலருக்கு ரஷகமுமாய் இருக்கை
ஆச்சர்யம் இ றே –
என்னுடைய விரோதியைப் போக்குகைக்கு திவ்ய ஆயுதங்கள் வேண்டா
இரங்க வமையும் -என்கை
அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி ஸ்ரீ மத நந்த மூர்த்தி -என்றும் –
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்றும்
ஆஸ்ரிதரை உஜ்ஜீவிப்பிக்கும் கை இ றே
தடம் -குளிர்த்தி
ஆனாலும் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

கிடந்து இருந்து நின்றி யங்கு போதும் –
ஆஸீ நா வசயா நவா திஷ்டந்தோ யத்ர குத்ரவா -என்கிறபடியே
கிடந்தும் -இருந்தும் நின்றும் சஞ்சரித்தும் -இப்படிகளாலே தேக யாத்ரை நடக்கும் போதும்
நின்ன பொற் கழல் –
வகுத்த சேஷியான தேவரீர் உடைய ஸ்பர்ஹணீயமான திருவடிகளை
தேக யாத்ரா சேஷமான காலமும் விட ஒண்ணாத திருவடிகள் -என்கை

தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே –
மேல் விழுந்து -இடை விடாத படியான ஸ்வபாவத்தை எனக்கு பண்ணித் தந்து
அருள வேணும் –
தொடர்ச்சி -செறிவு
இத்தால் –
அனுபவ விரோதிகளை தேவரீரே போக்கவும்
சர்வ காலமும் ஸ்பர்ஹ்ணீயமான தேவரீர் திருவடிகளை இடை விடாதே அனுபவிப்பேனாகவும்
பண்ணித் தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

——————————————————————————————-

105-பாட்டு –அவதாரிகை –

நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்
நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்
ஹேது என் என்ன –
பிராட்டி புருஷகாரமாக –
குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே
தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே
உபாயாந்தர அபேஷை இல்லை –
தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

வியாக்யானம் –

மண்ணை உண்டு உமிழ்ந்து
பிரளய ஆபத்தில் -அபேஷியாது இருக்க -ஆபத்தே முதலாக -வரையாதே
இஜ் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்து –
உள் இருந்து நோவு படாதபடி ஸ்ர்ஷ்டி காலத்திலேயே உமிழ்ந்து
இத்தால் –
தன் பக்கல் விமுகரான அளவிலும் வத்ஸலன் -என்கை –

பின்னிரந்து கொண்டு அளந்து  –
ஸ்ர்ஷ்டமான பின்பு -அஜ் ஜகத்தை மஹாபலி அபஹரிக்க -அவன் பக்கலிலே
அர்த்தியாய் சென்று –இரந்து -இந்தரனுக்கு த்ரை லோக்ய சாம்ராஜ்யத்தை கொடுத்து
அவ்வளவுக்கு மேலே சதுர்தச புவநத்தில் உண்டான சகல சேதனர் தலையிலும்
உன் திருவடிகளை வைத்து
இத்தால் –
விமுகரான அளவிலும் -சீலவானுமாய் சுலபனுமாய் இருக்குமவன் -என்கை –
தன்னை அழிய மாறி தாழ நிற்கை இ றே –சீலம்
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கை இ றே –சௌலப்யம் –

மண் கண்ணுள் அல்லது இல்லை என்று –
விமுகரான சம்சாரிகளைக் குறித்து இப்படி செய்து அருளுகைக்கு அடி என் -என்னில் –
இஜ் ஜகத்துக்கு நம் கடாஷம் ஒழிய வேறு ஸ்திதி இல்லை என்று –

வென்ற காலமாயினாய் –
சகல பதார்த்தங்களும் தன் கையிலே அகப்படும்படி –
சகல பரிணாமத்துக்கும் நிர்வாஹகமான காலத்துக்கும் நிர்வாஹகன் ஆனவனே –
இத்தால் –
ஸ்ர்ஷ்டியாதிகளுக்கு கர்மீபவித்தும்
அந்ய சேஷத்வத்தால் முறை யழிந்தும் –
இப்படி கால வச்யரான சேதனருக்கு -தேவரீர் அல்லது காலத்தை ஜெயிக்க விரகு இல்லை -என்கை
காலம் ஸபச தே யத்ர நகாலஸ் தத்ர வை ப்ரபு -என்னக் கடவது இ றே
மண் கண்ணுள் அல்லதில்லை என்று -கீழே அன்வயிக்க்கவுமாம்
அப் பஷத்தில்-மகாபலி- பிரளயம் ஆகிய விரோதிகளை உன் பேறாக வென்ற -என்கை

-பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! –
மதுரா மதுரா லாபா -என்கிற பேச்சையும் பருவத்தையும் உடைய திரு முலைத் தடத்தையே-அபாஸ்ரயமாக உடைய புண்டரீகாஷனே
இத்தால்-
பருவத்தாலும் -பேச்சாலும் -அவயவ சோபையாலும் -விலஷணமான பிராட்டிக்கு
வல்லபன் ஆகையாலே -பூர்வ வ்ர்த்தத்தை விஸ்மரித்து -என் பக்கலிலே
கீழ்ச் சொன்ன ஆபத் சகத்வாதி குணப் ப்ரேரிதமான விசேஷ கடாஷத்தைப் பண்ணினவன் -என்கை –

நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே –
தேவரீரை இடைவிடாதே யநுபவிக்க வேணும் என்கிற மநோரத பிரகாரத்துக்கு
ஹேது -உன் வடிவு அழகு அல்லது வேறு ஓன்று இல்லை-
உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள்
ஒழிய உன் வடிவு அழகே எனக்கு இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-

———————————————————————————–

106 -பாட்டு -அவதாரிகை

நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –
இதில் –தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு அல்லது நான் நெகிழிலும்
என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

வியாக்யானம் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூட-
க்ருத்தனாய் எதிரிட்ட கால நேமியாகிற அசுரன் ம்ர்த்யுவோடே கூடும்படி –
இந்த்ராதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் -அவர்கள் பக்கல் ஈஸ்வரன் அனுக்ரஹத்தையும்
பொறாதே க்ருத்தனாய் ஆய்த்து –
ஸூ ஹ்ர்தம் சர்வ பூதாநாம் -என்கிற விஷயத்தில் கிடீர் க்ருத்தன் ஆய்த்து
ஸநோ பந்து -அஹம்வோ பாந்தவோ ஜாத -என்கிறபடியே நிருபாதிக பந்துவின்
பக்கலிலே இ றே கோபித்தது
ஓர் அஞ்சலியால் நீராக கலக்கும் விஷயத்தில் துஷ்ப்ரக்ர்தி யாகையாலே
எதிரம்பு கோத்து நசித்தான் -என்கை
அனுகூலித்தாரை உன்னோடு கூட்டுகையும்
பிரதிகூலித்தாரை யமனொடு கூட்டுகையும்
இ றே தேவரீருக்கு ஸ்வபாவம்  –

அன்று –
கால நேமி யாலே இந்த்ராதிகளுக்கு ஆபத்து வந்த அன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
ஸ பரிகரனான கால நேமியை தலை அறுத்த திரு வாழி தொடக்கமான
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரித்தவனே -திருவாழி யாலே அவன் தலை அறுப்புண்ட பின்னும்
தேவர்களுக்கு எவராலே என்ன விரோதம் வருகிறதோ -என்று –
கை கழலா நேமியான் -என்கிற படியே திவ்ய ஆயுத தரனாய் இருக்கிறபடி –தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க –
இந்த்ராதிகளுக்கு அசுரனால் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லிற்று  -கீழ்
இந்த்ரனால் பசுக்களுக்கும் இடையர்களுக்கும் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லுகிறது -மேல்
பசுக்களுக்கு அநுபவ விநாச்யமான ஆபத்தை போக்குகைக்காக
அசுரர்களால் வந்த ஆபத்துக்கு ரஷ்யனான இந்த்ரனால் வந்த ஆபத்து ஆகையாலே
அநுபவித்தே அறும் ஆய்த்து
அன்று –
கோகோ பீஜ ந சங்குல மதீ வார்த்தம் -என்கிற தசையிலே-தொறு  -பசு

குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் –
கோவர்த்தநத்தை தரித்து ரஷித்த உன் கல்யாண குணத்துக்கு அல்லது
இந்த்ரன் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லாமையாலே -அழியச் செய்யும்
திவ்ய ஆயுதங்கள் உண்டாய் இருக்க -தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து
நோக்கினான் -என்கை
முன் -என்கிறது -ஒருத்தருக்கு நோவு வருவதருக்கு முன்னம் என்கை
வரை முன் ஏந்தும் -என்று அவன் அநாயாசேந தரிக்கச் செய்தேயும் –
அவன் சௌகுமார்யத்தை அனுசந்தித்து –பொறுத்த -என்கிறார் இவர் –

ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –
வ்யக்த்யந்தரத்தில் ஆதல் –
குணாந்த்ரத்தில் ஆதல் –
எனக்கு ப்ராவண்யம் சம்பவிக்கிலும் என் மனசுக்கு ப்ராவண்ய லேசம் இல்லை
ஆக –
ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை
மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது
என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை என்றது ஆய்த்து

————————————————————————————-

107-பாட்டு –அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும் –
தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான
வடிவு அழகையும்
ஆபத் சகத்வத்தையும்
பேசினார் –
இதில் –
அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்
போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது
வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார் –

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

வியாக்யானம் –

காய்சினத்த காசி மன்னன் –
காயும் சினத்தைஉடைய காசி ராஜன் –
சாத்விகரைக் கொன்று அல்லது விடாதே கோபத்தை உடையவன் -என்கை –
காய்தல்-கொல்லல்
அப்படி இருக்கும் தந்த –வக்கிரன் பவுண்டிரன்
ஈச்வரோஹம் -என்று இருக்கும் பௌண்ட்ரக -வாசுதேவன்-
மாசினத்த மாலி-
பெரிய சினத்தை உடைய மாலி
மான் சுமாலி –
மஹானான ஸூ மாலி
சினத்தை உடையவனுமாய் பத்ராகாரனுமாய் இருக்குமவன் -என்கை
கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –
தேனுகன் –
க்ர்ஷ்ணனை அனுவர்த்திக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் பயங்கரனான தேனுகன் -இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என்  நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

—————————————————————————————-

108-பாட்டு –அவதாரிகை –

நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் –
நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இ றே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன –
போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய
மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

வியாக்யானம் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன் –
கேடில் சீர் வரத்தனாய -அயன் -கெடும் வரத்தனாய அரன் –
அழிவில்லாத சம்பத்தை உடையனாம்படி பகவத் பிரசாதத்தை உடையனாய் இருக்கிற ப்ரஹ்மா
சர்வத்துக்கும் தன்னாலே உப சம்ஹாரம் ஆம்படி பகவத் ப்ரசாதம் பெற்ற ருத்ரன் –
அதவா –
அழிவில்லாத சம்பத்தை உடையவனாய் -வர ப்ரதாந ஷமனான ருத்ரனும் என்றுமாம் –

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் –
இவர்களுடைய நாட்டோடே கூட ஸஹஸ்ராஷனுடைய நாட்டையும் பெற்றாலும் –
நாட்டம் -கண்
நாடு -என்று நாட்டில் உள்ள விஷயங்களை நினைக்கிறது –
அதாகிறது -ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய மூவகைப்பட்ட ஐஸ்வர்யத்தை நான் ஒருத்தனும் பெற்றாலும் –
இவ் ஐஸ்வர்யம் மூன்றுக்கும் ஏகாஸ்ரயத்தில் சம்பாவனை இல்லை இ றே -கூடாதது கூடினாலும்-

வீடதான போகமெய்தி –
அதுக்கு மேலே
பரம புருஷார்த்த லஷணமான போகத்தை ப்ராபித்து
மோஷம் ஆகிறது –
சம்சார நிவ்ர்த்தி மாத்ரம் ஆதல் –
ஒரு தேச விசேஷ ப்ராப்தி யாதல் -அன்று –
கைங்கர்ய போகம் என்கை-

வீற்று இருந்த போதிலும் –
கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இ றே
போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-
தர்மார்த்தகாமை கிந்தஸ்ய முக்திஸ் தஸ்ய கரேஸ்திதா
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ்ஸ் திராத்வயி -என்றும் –
விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -என்று இ றே
பகவத் ஜ்ஞான பக்திகள் ரசித்தவர்கள் உடைய வார்த்தை –

———————————————————————————-

109-பாட்டு-அவதாரிகை –

கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை
பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் –
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி
நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -என்றும் –
கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்
பேசினீரே என்ன –
உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை –
அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே
பேசினேன் இத்தனை -என்கிறார்

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –109-

வியாக்யானம் –

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் –
ஒரு கர்மத்தாலே ஒரு காலத்திலே-ஒரு கர்த்தாவால் உண்டாம் ஹ்ராஸம் இன்றிக்கே
ஆஸ்ரித அனுக்ரஹம் ப்ரேரிக்க
இச்சையாலே
வாமனன் ஆனாய் –
சேதனர் கர்ம பேதத்தாலும் க்ர்தர் பேதத்தாலும் க்ரிமி கீடங்களாகா நின்றார்கள் இ றே-கலி காலமும் சேதனரை அங்குஷ்ட மாதரம் ஆக்கா நின்றது இ றே
சங்கா ப்ரேவேச சமயத்தில் அந்ய பாரதந்த்ர்யத்தால் திருவடி ஹ்ர்ஸ்வ பூதனான் இ றே
சுருங்கியும் —அப்படியே சிறுகி இருக்கச் செய்தேயும்-

பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய் –
பூர்வோக்தமான வ்ர்த்தி ஹேதுக்கள் இன்றிக்கே இருக்க பெருக்கம் எய்தும் ஸ்வபாவனே
பெற்றி -இயல்வு
இத்தால் -அர்த்தித்வத்துக்கு ஏகாந்தமான வாமன வேஷத்தைக் கொண்டு
கையிலே நீர் விழுந்த சமநந்தரத்திலே செய்தது யாய்த்து –
ப்ரீதி பிரகர்ஷத்தாலே வளர்ந்து –
சதுர்தச புவனங்களில் உண்டான சகல சேதனர் தலையிலும் -வரையாதே –
திருவடிகளை வைக்கையாலே –
ஆஸ்ரிதர் அர்த்தமாக வ்ர்த்தி ஹ்ராஸா திகள் இவனுக்கு ஸ்வாபாவிகம் -என்கை

செருக்குவார்கள் –
இந்த்ராதிகளை நலிந்து -த்ரை லோக்யத்தை அபஹரித்து –
நயஷ்டவ்யம் நதாதவ்யம் -என்று ஈஸ்வர ஆஞ்ஞையை அதிலங்கித்து
இப்படி செய்தோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே செருத்தி வர்த்திக்கிற மகாபலி போல்வார் உடைய
தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற நாசகரமான ஸ்வபாவத்தை தன்னுடைய அர்த்தித்வத்தால்-தவிர்த்து -இந்த்ராதிகளுக்கு குடி இருப்பை கொடுத்த சர்வேஸ்வரனே

என்று இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த –
இப்பாசுரத்தாலே
த்ரை விக்ரம அபதாநத்தைப் பற்றி வேத ஸ்தலங்களும்
வைதிகரான முனி சமூஹங்களும்
விசக்ரமே ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
த்ரிர்த் தேவ ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
இத்யாதி வேதங்களும் –
சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தை ததா மநுஷ் யைர்க்கநேச கேசரை ஸ்துத
இத்யாதிகளாலே சௌந காதிகளும்
ஏத்தக் கண்டவாறே
யானும் ஏத்தினேன்
தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி
கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை
இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன் -என்கை-

————————————————————————————

110 பாட்டு –அவதாரிகை –

தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் –
முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை –நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி
பொறுத்தருள வேணும் என்று –
கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

வியாக்யானம்-

தூயனாயும் அன்றியும் –
ஷேத்ரஜ்ஞஸ் யேச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமா மதா -என்கிறபடியே தேவரீர் உடைய
பாவநத்தை அனுசந்தித்து நான் யோக்யன் என்று பரிமாறியும் –
ஆகர்ஷமான தேவரீர் உடைய வடிவைக் கண்டு மேல் விழுந்து நான் நித்ய சம்சாரி
என்று புத்தி பண்ணாதே பரிமாறியும் –
அதவா-நஹிஜ்ஞாநேநஸ த்ர்சம் பவித்ர மிஹ வித்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே சுத்தன் என்று பரிமாறியும்
அந்த ஸ்வரூபத்துக்கு அஹங்கார மமகாரங்களால்  பிறந்த அசுத்தியையும் புத்தி பண்ணாதே
பரிமாறியும் போந்தேன் என்றுமாம் –

சுரும்பு உலாய தண் துழாய மாய –
தம் தண்மையையும் -அத்தலையில் வை லஷண்யத்தையும் பாராதே
யோக்யன் என்று பிரமிக்கைக்கு ஹேது சொல்லுகிறது –
வண்டுகள் அபிநிவேசிக்கும் திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் ஆச்சர்யமான
குண சேஷ்டிதங்களை வுடையவனே –
திர்யக்குகளுக்கும் ஸ்பர்ஹை பண்ண வேண்டும்படி இ றே போக்யதை இருப்பது –
ஒப்பனை அழகும் குண சேஷ்டிதங்களும் ஆய்த்து இவரை மேல் விழப் பண்ணிற்று -நின்னை –
சர்வாதிகனாய் -பரம பாவநனாய் -ஸூ ரி போக்யனாய் -இருக்கிற உன்னை –
நாயினேன் –
உன்னுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாப் போலே –
என்னுடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லை -என்கிறார் –
நாயினேன் –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து –
நுழைந்த வாசல் எல்லா வற்றிலும் பரி பூதனாய் –
தேவரீர் உகந்து தொடிலும் அன்குத்தைக்கு அவத்யம் விளையும்படி
ஸ்வரூபத்தை உடைய நான் –

வணங்கி வாழ்த்துமீதெலாம் –
ஒன்றைச் செய்து அதற்க்கு ஷாமணம் பண்ணுகிறேனோ –
திருவடிகளில் தலையார வணங்கி -வாயார வாழ்த்திப் -போருகிற ஈதெல்லாம் –
நீயும் –
நானும் பிரேமத்தால் தவிர மாட்டுகிறிலேன்
க்ஷமையை ஸ்வ பாவமாக உடைய நீயும் பொறுக்க வேணும்

நின் குறிப்பினில் பொறுத்து நல்கு –
காக -சிசுபாலாதிகள் உடைய அபராதத்தை திரு உள்ளத்திலே பொறுத்தால் போலே-
என் அபராதத்தையும் திரு உள்ளத்தாலே  பொறுத்து –
அவ்வளவு அன்றிக்கே –
இவன் பராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லன் என்று ப்ரசாதத்தைப் பண்ணி
அருள வேணும்

வேலை நீர் பாயலோடு பத்தர் சித்தர் மேய வேலை வண்ணனே –
இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்
திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும்
போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –
ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே
அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே
என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: