Archive for April, 2013

திருச்சந்த விருத்தம் -அவதாரிகை /1-10 பாசுரங்கள் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 16, 2013

அவதாரிகை –
ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலே ஆய்த்து பிறந்த படியும் வளர்ந்த படியும் –
யது குலத்தில் பிறந்து கோபால குலத்தில் வளர்ந்தாப் போலே
ரிஷி புத்ரராய்ப் பிறந்து -தாழ்ந்த குலத்திலே யாய்த்து வளர்ந்தது –
ஸ்ரீ கிருஷ்ணனாய் யது குலத்திலே பிறந்தாப் போலே அங்கே வளர்ந்து அருளினான் ஆகில்
ராமோவவதாரத்தோபாதி யாம் இத்தனை என்று பார்த்தருளி -இடையரும் இடைசிகளும் பசுக்களும் –
நம்மிலே ஒருத்தன் -என்னும் படி தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக வாய்த்து கோப
சஜாதீயனாய் வளர்ந்து அருளிற்று -அப்படியே ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து

இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக -மயர்வற மதி நலம் அருளி
தன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும் –
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் –
உபயத்துக்கும் பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
அதுக்கு அலங்காரமான கிரீடாதி பூஷண வர்க்கத்தையும் –
அதோடு விகல்ப்பிகலாம் படியான சங்கு சக்ர திவ்ய  ஆயுதங்களையும் –
இது அடங்க காட்டில் எறிந்த நிலா ஆகாமே அநுபவிக்கிற லஷ்மீ ப்ரப்ர்தி மஹிஷீ வர்க்கத்தையும்
அச் சேர்த்தியே தங்களுக்கு தாரகாதிகளாக உடையரான பரிஜன பரிபர்ஹத்தையும்
இப் போகத்துக்கு வர்த்தகமான பரமபததையும் சாஷாத் கரிப்பித்து
ப்ரகர்தி புருஷாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ர்ஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை
லீலையாய் உடையனாய் இருக்கிற படியும் காட்டிக் கொடுத்து -இப்படி உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்

நோ பஜனம் ஸ்மரந நிதம் சரீரம் -என்கிறபடியே சம்சார தோஷத்தை அனுசந்திக்க
இடம் இல்லாதபடி -ஈஸ்வரன் தம்மை அனுபவிக்கையாலே -மார்கண்டேயாதிகளைப்
போலே சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த  இவர்
ப்ராப்தமுமாய் –ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்

தாம் பகவத் விஷயத்திலே ப்ரவணராய் இருக்கிறாப் போலே
ரஜஸ் தமஸ்ஸு க்களால் பிறந்த அந்யதா ஞான விபரீத ஞானங்களாலே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
யுக கோடி சஹஸ்ரேஷு விஷ்ணும் ஆராத்ய பத்மபூஸ் புநஸ் த்ரைலோக்ய தாத்ர்வம்
ப்ராப்தவாநி தி சுஸ்ருமே -என்றும் –
வேதாமே பரமம் சஷூர் வேதாமே பரமம் தனம் -என்றும் –
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா -என்றும் –
ஏக ஏவ ருத்ரச -என்றும் –
ஹிரண்ய கர்பஸ் சம வர்த்ததாக்ரே -என்று

இத்யாதி ப்ரசம்சா வாக்யங்களாலும் -தாமஸ புராணங்களாலும் பரதவ புத்தியைப் பண்ணி –
சேதனர் பகவத் விமுகராய் அனர்த்தப் படுகிறதை கண்டு –பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே
நிர்தோஷ பிரமாணங்களாலும் சம்யன் நியாயங்களாலும் -பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் –பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப்  பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை  யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்துஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————

முதல் பாட்டு –
அவதாரிகை –
அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்
நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் -இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பத உரை
பூநிலாய -பூமியிலே வர்த்திக்கிற
ஐந்துமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் ஐந்துமாய்
புனல் கண் நின்ற -ஜலத்திலே வர்த்திக்கிற
நான்குமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்குமாய்
தீநிலாய -அக்நியிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
மூன்றுமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
சிறந்த -சேதனருக்கு ஆதாரமாய் இருக்கும் பலத்தை உடைய
கால் நிலாய -வர்த்திக்கிற
இரண்டுமாய் -சப்த ஸ்பர்சங்கள் இரண்டுமாய்
மீநிலாயது -ஆகாசத்திலே வர்த்திக்கிற
ஒன்றுமாகி -சப்த குணம் ஒன்றுமாகி
வேறு வேறு தன்மையாய் -தேவாதிகளுக்கு அந்தராத்மாவாய்
நீ-சித் அசித் சரீரி
நிலாய வண்ணம் -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்
நின்னை -சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னை
யார் நினைக்க வல்லீரே –நினைக்க வல்லார் யார்-

வியாக்யானம்-

பூநிலாயஐந்துமாய்
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான்
என் என்னில்
சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –
புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது

தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே -என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –
சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம்
இரண்டுமாய் -பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது
மீநிலாயதொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது
உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –

அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்
குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும்
சொல்லுவான் என் என்னில் -தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத -என்கிற
ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது
இவ்வளவாக பரகத  ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து

வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும்
ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால்
வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற
நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரி யான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை
நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை
ஆர் நினைக்க வல்லர்
நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –

————————————————————————————————-

இரண்டாம் பாட்டு -அவதாரிகை
சஹ யஜ்ஞ்ஞைஸ் பரஜாஸ் ஸ்ரஷ்ட்வா -என்கிறபடியே காரண பூதனான உன்னாலே
ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்
சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும் –அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித
போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க
வல்லர் -என்கிறார்-

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

வியாக்யானம்
ஆறும் -அத்யயநாதி ஷட் கர்மங்களும்

முதல் ஆறு அந்தணர்களின் ஆறு கர்மங்கள்
அத்யயனம் தானே ஓதுதல்
அத்யாபனம் -ஓதுவித்தல்
யஜனம்-தான் வேள்வி செய்தல்
யாஜனம் -வேள்வி செய்வித்தல்
தானம் -தான் கொடுப்பது
ப்ரதிக்ரஹம் -பிறர் கொடுப்பதை தான் வாங்கி கொள்வது .
ஆறும் -அத்யயநத்தால் ஜ்ஞாதவ்யமான கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான வசந்தாதி ருதுக்கள் ஆறும்
ஆறுமாய் -அனுஷ்டேயமான ஆக்நேயாதி ஷட் யாகங்களும்

ஆக்நேயம் -அக்நி ஷோமேயம்-வுபாம்ஸு யாஜம் -ஐந்த்ரம் -இரண்டு ஐந்த்ராஞ்ஞம் –
இது சர்வ கர்மங்களுக்கும் உப லஷணம்
இவை ஆறு -என்றது -இவற்றோடு ஈஸ்வரனை சமாநாதிகரித்து –
அத்யயநாதிகளிலே -ததாமி புத்தியோதந்தம் -என்கிறபடியே சேதனரை மூட்டியும்
அவற்றுக்கு ஏக அங்கங்களான காலத்துக்கு நிர்வாஹனாகவும்
அனுஷ்டேய கர்மங்களுக்கு ஆராத்யானும் இருக்கையாலே சமாநாதிகரித்து சொல்லுகிறது

ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
கீழ் சொன்ன கர்மத்துக்கு அதிகார சம்பத்துக்கு உடலாய்
பிரதானமான பஞ்ச மஹா யஞ்ஞத்துக்கும் -பஞ்ச ஆஹூதிக்கும் ஆராத்யனாய் –
பஞ்ச அக்நிக்கும் அந்தராத்மாவாய் இருக்குமவன்
பஞ்ச மஹா யஞ்ஞம் ஆவது –

தேவ யஞ்ஞம் -பித்ரு யஞ்ஞாம் -பூத யஞ்ஞம் -மனுஷ்ய யஞ்ஞம் -ப்ரஹ்ம யஞ்ஞம் –என்கிறவை

பஞ்ச ஆஹூதிகள் -ஆவன ப்ராணாத்யாதி ஆஹூதிகள்-.பிராண அபான வ்யான வுதான சமான-
பஞ்ச அக்நிகள் ஆவன -கார்ஹ பத்யாஹவநீய தஷிண அக்நிகளும் சப்யாவசத்யங்களும்

-கார்கபத்யம் -ஆகவநீயம் –தஷிணாக்னி-சப்யம் -ஆவஸ்த்யம் –
ஏறு சீர் இரண்டும் –
தர்மேண பாபமப நுததி -என்னும்படியே -விஹித கர்ம அனுஷ்டானத்தாலே -மோஷ விரோதி பாபம் போனால்
இவன் பக்கலில் பிறக்கும் உபாசன ரூப பகவஜ்ஞ்ஞாநமும் -தத் கார்யமான இதர விஷய வைராக்யம் என்கிற இரண்டு -குணமும்
மாற்பால் மனம் சுழிக்கையும் -மங்கையர் தோள் கை விடுகையும்
மூன்றும் -உபாசன பலமான ஐஸ்வர்ய -கைவல்ய -பகவத் ப்ராப்திகள் –
அன்றிக்கே
ஜ்ஞான வைராக்ய சாத்யமான -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் மூன்றும் –
ஏழும்
உக்தமான கர்ம யோகாதி பரபக்தி பர்யந்தமான அளவுகளை பலிக்கக் கடவ மநோநை மல்யத்துக்கு அடியான விவேகாதி சப்தகமும்
-அதாகிறது விவேக -விமோக -அப்யாச க்ரியா கல்யாணா நவசா தா நுத் தர்ஷங்கள்
அதாகிறது -மநோநை மல்ய ஹேதுவான விவேகாதி சப்தக உக்தமாகிய -க்ரியா சப்த
வாசியமான விஹித கர்ம அனுஷ்டானத்தாலே உபாசன நிஷ்பத்தியை சொல்லுகிறது

விவேகம் -கார்ய சுதி
விமோகம் -காமம் குரோதம் இல்லாமை
அப்யாசம்
க்ரியை
க்ல்யாணம்
அநவசதம் -சோக நிமித்தம் -மனஸை மழுங்காது இருப்பது
அனுதர்ஷம் -சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் பொங்காது இருப்பது
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மனசுக்கு இவை எல்லாம் தேவை
ஆறும்
உக்த பக்தி வர்த்தகமாய் ஸ்வயம் ப்ராப்யமான ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆறும்
எட்டுமாய் –
அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகமுமாய் -ஸ்வேன ரூபேண பி நிஷ்பத்யதே -என்கிறபடியே

அபகதபாப்மா -பாப சம்பந்தம் அற்று இருப்பவன்
விஜரக -கிழத் தன்மை அற்று நித்ய யுவாவாக இருப்பவன்
விம்ருத்யக -மரணம் அற்றவன்
விசோக -சோகம் அற்றவன் –
விஜிகத்சக -பசி அற்றவன்
அபிபாசாக -தாகம் அற்றவன் –
சத்ய காம
சத்ய சங்கல்ப
தம்மை தொழும் அடியாருக்கு தம்மையே ஒக்கும் அருள் தருவானே
இது ப்ராப்ய அந்தர்கதம் இ றே

வேறு வேறு ஞாநமாகி
நிர்மல அந்தகரணர் அல்லாத பாக்ய ஹீநருக்கும் பாக்ய குத்ருஷ்டி ச்ம்ர்திகளுக்கும்ப்ரவர்தகனாய்-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு புறம் புக்க வாறும்-
மெய்யினோடு பொய்யுமாய்
கீழ் சொன்ன முமுஷுக்களுக்கு மெய்யனாய்
பிரயோஜனாந்த பரரான ஷூத்ரர்களுக்கு பிரயோஜனங்களைக் கொடுத்து தான் அகல
நிற்கையாலே பொய்யனாய்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புள் கொடி உடைய கோமான்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்

ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்

கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக்  கடவது இ றே
ஆய மாயனே
கோப சஜாதீயனாய் அவதரித்த ஆச்சர்ய பூதனே -அதாவது
தான் நின்ற நிலையிலே நின்று ஆஸ்ரிதருக்கு உபகரிக்கை அன்றிக்கே
திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்து
உபாசகருக்கு சுபாஸ்ரயமாய் –
ஸித்த உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கு விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு தானே போக்யமாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்கும் பரம பக்தி உக்தருக்கு
சர்வவித போக்யமும்
ஆனவன் என்கை
அவதாரம் தான் சாது பரித்ராணத்துக்கும் தர்ம ஸம்ஸ்தாபநத்துக்கும் ஆக வி றே

——————————————————————————————————

மூன்றாம் பாட்டு -அவதாரிகை –
முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன –
இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே –3-

வியாக்யானம்-
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும் -வாகாதி கர்ம
இந்த்ரியங்கள் ஐந்தும் ஆகி –
ஐந்தும் மூன்றும் –
ஆகாசாதி  பூதங்கள் ஐந்துக்கும் காரணமான தந் மாத்ரைகள் ஐந்தும்
ஒன்றுக்கு ஓன்று காரணமான அஹங்காரம் என்ன மஹான் என்ன சூஷ்ம மூல பிரகிருதி என்ன -இவை மூன்றும் –
ஒன்றுமாகி –
மன ஏவ -என்கிறபடியே உக்தமான சகல பதார்த்தங்களுக்கும் பந்த ஹேது வாகைக்கும்
மோஷ ஹேது வாகைக்கும் ஹேதுவான மனஸ் ஸூ மாய்
அல்லவற்றுள் ஆயமாய் –
இப்படி சதுர் விம்சதியாக விபக்தமான பிரக்ருதியிலே சம்ச்ர்ஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய்
அல்லவற்றுள் –
அசித் வ்யாவ்ர்த்தரான சேதனர் பக்கலிலே

நின்ற வாதி தேவனே –
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாய் நின்றாப் போலே -இவை அழிந்த காலத்திலும்
சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு நின்ற காரண பூதன் ஆனவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –
இதுக்கு கீழே லீலா விபூதி யோகத்தை காட்டித் தந்த படியைச் சொன்னாராய் –
மேல் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நித்ய விபூதி யோகத்தையும் காட்டித் தந்த படியைச் சொல்லுகிறார்
அப்ராக்ருதமாய் பஞ்ச சக்தி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
தத் ஆஸ்ரயமான ஜ்ஞான இந்திரியங்கள் ஐந்தும்
கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
என்கிற இவற்றுக்கு நிர்வாஹனாய்
இத்தால் திவ்ய விக்ரஹ யோகம் சொல்லிற்று

யந்தரத்து யணைந்து நின்று ஐந்தும் ஐந்துமாய –
சப்தாதி போக்யங்கள் ஐந்தும் -போக ஸ்தானம் என்ன போக உபகரணம் என்ன –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியும் முத்தரும் என்று அஞ்சு கோடியுமாய்
யந்தரத்து யணைந்து நின்று-
பரம வ்யோம -என்றும்
பரமாகாசம் -என்றும்
ஸ்ருதி பிரசித்தமான பரம பதத்தில் பொருந்தி நின்று -இப்படி உபய விபூதி உக்தனான
நின்னை யாவர் காண வல்லரே
ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் ஆர் –
மனுஷ்யரில் காட்டில் ஞாநாதிகரான தேவர்கள் காணவோ
உபய பாவ நிஷ்டர் என்னா ப்ரஹ்மாதிகள் காணவோ
ப்ரஹ்ம பாவ நிஷ்டர் என்னா சநகாதிகள் காணவோ –

——————————————————————————————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4

“மூன்று முப்பதாறினோடு “..33 ஹல் எழ்த்து “மூன்று முப்பது “/.16 அச்சு எழுத்துகள்
“ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் /”ஐந்து ள்ள கராதி பஞ்சாட்ஷரம் ..

மூன்று மூர்த்தி யாகி நின்று –
ரிக் யஜுர் சாம வேத -வேத த்ரயம் ஸ்வரூபமாய்
மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் –
த்வாதச அஷரீ பிரதிபாடனாய் -ஓம் நமோ பகவதே வாசுதேவ
தோன்று சோதி மூன்றுமாய்
இத்தை மூன்று தோன்று சோதியாய் -என்று கொண்டு -மூன்று அஷரம் –பிரணவம் -அதில்
தோன்றும் ஜோதி
துளக்கமில் விளக்கமாய் –
அழிவு அற்ற விளக்காகிய -அ காரம் -ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்
ஒம்காரோ பகவான் விஷ்ணு -சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு
காரணம் அற்றவன் -அதனால்  துளக்கமில் விளக்கம் என்கிறார்

வெம் மீசனே-எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என்று -எனது காரியங்களை
நீயே ஏறிட்டுக் கொண்டு
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை

———————————————————————————————-

ஐந்தாம் பாட்டு -அவதாரிகை-

ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-

வியாக்யானம் –
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும்
ஸ்தாவரமாய் நின்றும் -ஜங்கமமாய் சஞ்சரித்தும்
தம் தாமுடைய உஜ்ஜீவன பிரகாரங்களிலே ஒன்றுக்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கிற
சகல சரீரங்கள் தோறும்
ஆவியாய் ஒன்றி உள் கலந்து நின்ற –
ஆத்மாவாய் –எதிர்தலையில் ஹேயதையை பாராதே பொருந்தி -சமாப்ய உள் புகுந்து –
ஏக த்ரவ்யம் என்னும்படி கலந்து நிற்கிற

நின்ன தன்மை –
உன்னுடைய ஸ்வபாவம் -அதாகிறது தத்கத தோஷங்கள் தட்டாதே நிற்கையும்
விபுவான தான் இவற்றில் சமாப்ய வ்யாபரிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யம்
இன்னதென்று –
ஏவம் விதம் என்று -திருஷ்டாந்த முகத்தாலே உபபன்னம் என்று
என்றும் யார்க்கும் –
வர்த்தமான காலத்தோடு பவிஷ்ய காலத்தோடு வாசி யற அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும்
எண்ணிறந்த –
மநோ ரததுக்கும் அவ்வருகாய் நின்ற
வாதியாய் –
ப்ரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் ப்ரதானன் ஆனவனே

சாஷாத் கரிக்கும் போது -நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடியே விசேஷ்யமான தேவரீர்
பிரதானமாய் -சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும்
வ்யவஹாரத்தில் வந்தால் -வசசாம் வாச்யமுத்தமம் -என்கிறபடியே சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்
அன்று-நின்னுந்தி வாய்  நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –
இது கிடக்க -ஜகத் ஏக காரணனாய் நிற்கிற நிலை தான் ஒருவருக்கும் அறிய நிலமோ –
ஒன்றும் தேவில் -படியே தேவாதி சகல பதார்த்தங்களும் அழிந்து கிடந்த அன்று
உன்னுடைய திரு நாபீ கமலத்திலே -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்கிறபடியே
ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த ஜகத் ஏக காரணன் அல்லையோ
திரு நாபி கமல உத்பத்தியைப் பார்த்தால் ப்ராக்ர்தம் என்ன ஒண்ணாது
ஷேத்ரஞ்ஞனான ப்ரஹ்மாவுக்கு உத்பாதகம் ஆகையாலே அப்ராக்ருதம் என்ன ஒண்ணாது
இவ் வாச்சர்யத்தை ஏவம் விதம் என்று கர்மவச்யராய் பரிமித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகள் அறியவோ

நின்று இயங்கும் ஓன்று இல்லா உருக்கள் தோறும் –
வேதங்களும் மந்திர ரகச்யங்களும் இருக்க யாவர் காண வல்லரே
தேவரீர் எனக்கு காட்ட -அலகு அலகாக நான் கண்டது போலே ஒருவருக்கும் காண முடியாது என்கிறார்

———————————————————————————————-

ஆறாம் பாட்டு -அவதாரிகை –
சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று தாரகமாயும் தார்யமாயும் போருகிறது இல்லையோ என்று
பகவத் அபிப்ராயமாக
அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவச்திதம் அன்றோ
இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

வியாக்யானம் –

நாகம் ஏந்து மேரு வெற்பை –
ஸ்வர்க்கத்தை தரிக்கிற மேரு வாகிற பர்வதத்தை -மேருவுக்கு ஸ்வர்க்க ஆதாரத்வம்
மேரு சிகரத்தில் தேஜோ த்வாரத்தாலே –
நாகம் ஏந்து மண்ணினை –
திக் கஜங்களால் தரிக்கப் படும் பூமி என்னுதல்
பாதாள கதனாய் இருந்துள்ள திருவநந்த வாழ்வானாலே தரிக்கப் படுகிற பூமி என்னுதல்
நாகம் ஏந்து மாகம் –
துக்க கந்த ரஹிதமான சுகத்தாலே பூரணமான பரம வ்யோமம்
ஏந்தல் –என்று தேங்கலாய் ஆநந்த நிர்பரமான தேசம் என்கை
நாகம் –என்றது துக்க கந்த ரஹிதமான  சுகத்துக்கு வாசகமாம் படி என் என்னில் –
கம் =சுகம் –அகம் =-துக்கம் நாகம் -துக்க ரஹிதம் இத்யர்த்தம் –
நாகமேந்தும் ஆக -திருவநந்த வாழ்வானாலே தரிக்கப்பட்ட திருமேனியை உடையவனே

இத்தால் கீழ் சொன்ன தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன என்றது ஆய்த்து
மாகம் ஏந்து வார் புனல் –
பரமபதம் என்ன -ஆகாசத்திலே தரிக்கப் படுகிற ப்ரவாஹ ரூபமான கங்கை என்ன இவையும் –
மாகம் ஏந்து மங்குல் –
ஆகாசம் தரிக்கிற மேகத்தையும்
தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்தும் –
வைஸ்வானர அக்நியையும் -பஞ்ச வ்ர்த்தி பிராணன் களையும் ரஷண தர்மத்திலே
சமைந்து நின்று ரஷித்து
ஒய் வாயு ஐந்து அமைந்து காத்தும் –-என்று பாடமான போது
தசதா விபக்தமான வாயுவைச் சொல்லுகிறது
மேகோ  தயஸ் ஸாகர சந்நிவ்ர்த்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
நிராலம்பனமான ஆகாசத்தில் சஞ்சரிக்கிற சகல பதார்த்தமும் ஈஸ்வர சங்கல்ப்பத்தாலே
சஞ்சரிப்பதாக சொல்லிற்று ஆய்த்து
யதாகாகச்தி தோ நித்யம் -இத்யாதி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை –
ஒரு வஸ்து தரிக்கின்றது என்று ஸ்ருதி சொல்லுகிற ஸ்வபாவம்
நின் கணேயியன்றதே —
தேவரீர் பக்கலிலே வர்த்திக்கிறது
இயத்தல் -நடத்தலும் வளர்த்தலும்
யாவர் காண வல்லர் என்று கீழோடு அந்வயம்
இஸ் சர்வ ஆதாரத்வத்தை தேவரீர் காட்ட நான் கண்டாப் போலே வேறு காண வல்லார் ஆர் என்கிறார்

அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்

—————————————————————————————-

ஏழாம் பாட்டு -அவதாரிகை –
நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது
ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்
அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

வியாக்யானம்
ஓன்று இரண்டு மூர்த்தியாய்
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய்

ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா –
உறக்கமோடு உணர்ச்சியாய் –
ஜ்ஞான அஞ்ஞானங்களுக்கு நிர்வாஹனாய் –
அநாதி மாயயா ஸூப்தச் -என்கிறபடியே உறங்கினார் கணக்காய் விழுகையாலே
உறக்கத்தை அஜ்ஞ்ஞானம் என்கிறது

அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் உறக்கம் போலே தானே
இத்தால் மூன்றும் ஏகாத்மாதிஷ்டிதம் என்றும் -அநேகாத்மா திஷ்டிதம் என்றும் –
அந்யோந்யம் சமர் என்றும் அஜ்ஞ்ஞானத்துக்கும் -மத்யஸ்தன் ரஷகன் -ப்ரஹ்ம ருத்ராதிகள்
ரஷ்ய பூதர் என்கிற யாதாத்ம்யஜ்ஞானத்துக்கும் நிர்வாஹனாய் – என்கை
ஓன்று இரண்டு காலமாகி –
ஞான ஹேதுவான சத்வோத்தர காலத்துக்கும்
அந்யதா ஞான விபரீத ஜ்ஞானங்களுக்கு ஹேதுவான ரஜஸ் தமோத்ரிக்த கால
த்வ்யத்துக்கும் நிர்வாஹகனாய் -த்ரேதாயாம் ஜ்ஞானமுச்யதே -கலவ் ஜகத் பதிம்
விஷ்ணும் -என்னக் கடவது இ றே
வேலை ஞாலமாயினாய் –
கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகனாய் -யாதாவஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு
ஆவாஸஸ்தானமான கர்ம விபூதிக்கு நிர்வாஹகனாய்
அய்ந்து நவமஸ் தேஷாம் தீவபஸ் ஸாகர சம்வர்த்த -என்கிறபடியே
.ஓன்று இரண்டு தீயுமாகி
ஆகவநீயம் -கார்தபத்யம் தஷிணாக்நி -என்ற மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹகனாய்
ஆயனாய மாயனே –
கோபால சஜாதீயனாய் அவதரித்த
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் -என்கிறார்

—————————————————————————————–

எட்டாம் பாட்டு -அவதாரிகை
ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

ஆதியான வானவர்க்கும்
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் சப்த ரிஷிகள் த்வாதச ஆதித்யர்கள்
ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள் ருத்ரன் அக்நி
யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்
நித்ய சூரிகள்

அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற
ஜகத் காரண பூதரான நித்ய சூரிகளுக்கும் -அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே
நித்ய சூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இ றே
அதவா
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ -என்றும்

யத்ரர்ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா -என்றும் சொல்லுகிற ஆதி தேவர்கள் என்றுமாம்

ஆதியான வாதி நீ –
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –

இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி –
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய்

இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது –
ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற
ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய்
நீ உரைத் தி – என்கிறது
சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே
ஆதியான கால நின்னை
ஆதி காலம் ஆன நின்னை -என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை

கார்ய ரூபமான ஜகத்தடைய சக்த்ய வஸ்த ப்ரபை போலே லீநமாய்
சதேவ சோம்யே தமக்ரே -என்கிறபடியே ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை
யாவர் காண வல்லரே -என்கிறார்

தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்

—————————————————————————————

ஒன்பதாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான
ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான சாத்விக ஜனங்களும் உன்னையே
ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

வியாக்யானம் –
தாதுலாவித்யாதி –
தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்
கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் –
தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை
உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –
இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது

நீதியால் வணங்கு பாத –
தேவரீரை ஐஸ்வர்ய விசிஷ்டனாக ஆஸ்ரயிக்க சொல்லுகிற வேதோக்த ப்ரகாரத்தாலே
அவன் உபாசிக்கிற திருவடிகளை உடையவனே
நின்மலா –
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்கிறது -ஈச்வரோஹம் -என்று இருக்கிற துர்மானி
ஆஸ்ரயித்தான் என்று -இத் தோஷங்களை நினையாதே -நம் பக்கலிலே சாபேஷனாய்
வந்தான் என்கிற குணத்தையே நினைத்து -அநந்ய பிரயோஜநருக்கு முகம் கொடுக்குமா
போலே முகம் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இப்படி விஷயீ கரித்து அவனுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ஏது என்னில்
மஹா தேவஸ் சர்வ மேதே மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ –
என்கிறபடியே தேவ தேவத்வத்தை கொடுத்தவனே –
இது பிரயோஜநாந்தர பரர் எல்லாருக்கும் உப லஷணம்
நிலாயா சீர் –
வர்த்திக்கிற குணங்கள் –
அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்மகுணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை
அங்கன் அன்றியே –
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ
நிர் தோஷத்வங்களாலே  -காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண
குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர்
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்
கீத வேள்வி –
அந்த வேதார்த்த அனுஷ்டானமாய் சாம கான பிரதானமான யாகங்களிலே ப்ரவர்த்தர் ஆனவர்கள்
அதாவது -ஆத்ம யாதாம்ய ஞான பூர்வகமாக த்ரிவித பரித்யாக உக்தராய் பகவத் சமாராதான
புத்தியாலே அனுஷ்டிக்கும் யஞ்ஞங்கள்

நீதியான கேள்வியார் –க்ரமப்படி ஸ்ரவண மனனங்களை செய்பவர்கள் –
உக்தமான வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகைக்கும் தத் கார்யமான கர்ம யோகாத்யா
அனுஷ்டானங்களுக்கும் அடியான கேள்வியை உடையவர்கள் –
நீதியான கேள்வி யாகிறது -ப்ரீஷ்ய லோகான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நிர் வேதா வ்ர்த்தி பிறந்து ப்ரஹ்ம நிஷ்டரான ஆசார்யன் பக்கலில் உபசன்னராய்
ச்ரோதவ்யோ மந்தவ்ய -என்கிறபடியே சரவண மனனங்களை பண்ணுகை

நீதியால் வணங்குகின்ற நீர்மை –
நிதித்யாஸிதவ்ய -என்கிறபடியே கர்ம அங்கமான அநவரத பாவனை பண்ணுகைக்கு
உபாச்யனாய் நிற்கிற ஸ்வபாவம்
நின் கண் நின்றதே –
உன் பக்கலிலே வர்த்திக்கிறது இத்தனை –
அவதாரணத்தாலே வேறு ஆஸ்ரயணீயர் இல்லை -என்கிறார்

—————————————————————————————-

பத்தாம் பாட்டு -அவதாரிகை –
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே –
காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீ யம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரய ணீயத்வமும் தேவரீருடையது
என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

வியாக்யானம் –
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி –
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிஷித்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் -தன்னுளே -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாதவியாபாரங்களும்
-ஸ்வரூப அந்தர்பூதம் என்கை –
திரைத்து எழும் தரங்கம் –
நிஸ்தரங்க ஜலதி யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள
திரைகளை உடைத்தாகை –
த்ருஷ்டாந்திகத்திலே வாயு ஸ்தாநீய பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே
பிறந்த குண வைஷம்யம்
வெண் தடம் கடல் –
சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் –

இது மேலே –நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம்

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் –
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து
உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று –
கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான
காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே
கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -இது எத்தாலே அறிவது என்னில் –
ந கர்மா விபாகாத் -என்கிற ஸூத்ரத்தாலே
சதேவ -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே
கர்மம் இல்லை என்று பூர்வ பஷித்து -ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ –என்றும்
நித்யோ நித்யாநாம் -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம்
உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே
சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இ றே
திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று –

யதா சோம்யை கேந  ம்ர்த்பிண்டேந -என்று உபநிஷத்து
கடகமகுட கர்ணிகாதி பேதைஸ் -என்று ஸ்ரீ பராசுர பகவான்
இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் –
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் –
ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே
அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்
நின் கண் நின்றதே –
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 16, 2013

நிறுத்தி நும் உள்ளத்துக்கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.

பொ-ரை :- உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுகின்ற தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளுவதும் மீண்டும் அவன் திருவருளாலேயாகும்; அதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான்;

தண்ணிய மனம் சிறிதும் வேண்டாம்; கண்ணபிரானைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை; ஆதலால், உங்களால் செய்யப்படுகின்ற நித்திய நைமித்திக கர்மங்கள் எல்லாவற்றையும் சர்வேச்வரனுக்குச் சரீரமாக இருப்பவர்கள் இந்தத் தேவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களுக்கு இடுங்கோள் என்கிறார்.

வி-கு :- நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்வது அவனொடே கண்டீர் என்க. ‘அவனொடே’ என்றது, அவன் திருவருளாலேயாகும் என்றபடி. கரி – சான்று. ‘கறுத்த’ என்பது, ஈண்டுக் குற்றத்தைக் காட்டுகின்றது. இறுத்தல் – கொடுத்தல். அவன் மூர்த்தியாயவர் – அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்.

ஈடு :- ஏழாம் பாட்டு. 1நாங்கள் பலநாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆராதித்துப் போந்தோம்; அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன, நீங்கள் ஆராதிக்கின்ற தேவதைகள் உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று, ஆன பின்பு, 2அவனையே ஆராதிக்கப்பெறில் அழகிது; அதுவும் மாட்டீர்கோளாகில், நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக உள்ளவர்கள், இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று புத்தி பண்ணியாகிலும் இடுதற்குப்  பாருங்கோள் என்கிறார்.

நிறுத்தி – 3தியானம் செய்தற்குரிய பொருளை நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பாரமாயிற்று. தியானம் செய்கிற இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள். நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் – உங்களுடைய இருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள். ‘புறம்பே சிலர் அறியில் பரிஹசிப்பர்கள்’ என்று தாங்களே அறிந்ததாக உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார். உம்மை உய்யக்கொள்-உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி. மறுத்தும் அவனோடே கண்டீர்-நீங்கள் ‘அவனிலும் இவர்கள் அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற, இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டுபோய் அன்றோ காப்பாற்றுவது. 1”காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர, காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் இரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.

வேறு சிலரை ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன, மார்க்கண்டேயனும் கரியே-இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷி மார்க்கண்டேயன். அம்மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆராதிக்க, அவனைப் பார்த்து, ‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய், இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது, உன்னோடு என்னோடு வேற்றுமை இல்லை, உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று சர்வேச்வரன் பக்கலிலே கொண்டு சென்று, அவனுடைய விருப்பத்தைத் தலைகட்டிக் கொடுத்தான்; ஆனபின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி. கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா. கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை- 1“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை. “எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை. இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் – ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம் ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள். ‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய நைமித்திகக் காமங்களையெல்லாம் என்றபடி. ‘அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி. ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.

பலன் கொடுப்பவனும் எம்பெருமானே-

நாங்கள் தேவதைகளை பச்சை இட்டு ஆஸ்ரயித்தோம்
பலன் வாங்கி வந்த பின்பு பகவத் சமாஸ்ரயநீயம் செய்கிறோம் என்ன
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து முன்பே அருளினார்
அவன் தானே ரஷிப்பான் -உங்கள் தேவதைகளையும் ரஷிப்பவன் அவனே
மார்கண்டனேயனுமே சாஷி
இவர்கள் முகத்தாலே பகவத் சாமாஸ்சரயநீயம் செய்து -அவன் அந்தர்யாமியாக நினைத்து செய்தால்
இது அவதாரிகையில் அருளி -மேலே விளக்கி -இங்கு சரீரம் என்ற புத்தி பண்ணி யாகிலும்
சாமான்யமான ஆராதனம் பற்றி சொலவில்லை –
சந்தாவந்தனம் அக்னி வருணன் சூர்யன் இவர்களை -சொல்லுவதை -பற்றி –
அவனை அந்தர்யாமியாக கொண்ட தேவதைகள் –
ஆராதனை எம்பெருமானுக்கே என்று நினைத்து –
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி முடிக்கிறோம்

இரக்ஷண தர்மம் மற்றைத் தேவர்கட்கு இல்லையோ? என்ன, ‘இல்லை’
என்பதனைப் பிரமாணத்தோடு காட்டுகிறார் ‘காப்பாற்றுவதில்’ என்று
தொடங்கி.

“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.

உம்மை உயக் கொள்வது அவனுடன் சேர்த்து -தானே கண்டீர் பிரத்யட்ஷம்
மார்கண்டேயனும் கரியே –
கருத்த மனம் வேண்டாம்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
அனைத்தும் அவன் மூர்த்தி சரீரம் -தானே
நிறுத்தி -தேவதைகளை நிறுத்துவதும் கஷ்டம்
த்யானம் செய்யும் வஸ்துவை கெட்டியாக கொண்டு -செய்ய வேண்டும்
த்யான  ஸ்லோகம் திருமேனி வர்ணிக்கும்
அர்த்த அனுசந்தானம் செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும்
த்யான ஸ்லோகம் சொலும் பொழுதே காணிலும்-உருப்பிலா -பயங்கரமாக இருக்க
நிறுத்துவதே கஷ்டம் –
இவன் நிறுத்த அவை நிற்கும் பேச நின்ற சிவனுக்கும்
உங்கள் ஹிருதயங்களில் கொள்ளும் தேவதைகள் -வெளிப்படையாக சொல்லவும் வெட்கி
தாங்கள் -பரிகசிக்கப்படாமல் -இருக்க -இதர தேவதாந்திரம் சேவை பண்ணி

இப்படி இவன் செய்ய அந்த தேவதைகளும் கை விட்டு –
மறுத்தும் மீண்டும் அவனுடன் சேர்த்து –
இவை உங்களை அவன் பக்கலில் இட்டு ரஷிக்கும் -ரஷணம் தர்மம் அவனது
பலான சாமர்த்தியம் சர்வேஸ்வரனை விடு வேறு யாருக்கும் இல்லை
பிறவி என்னும் நோய்க்கு யாரும் மருந்து அறிவார் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் ஒருவனே
மார்கண்டேயன் ருத்ரனை ஆஸ்ரயிக்க -இது பாழாக ஆகக்கூடாது
உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் -அவன் அபேஷிதத்தை தலைக் கட்டி கொடுத்தான் –

கருத்த மனம் ஒன்றும் வேண்டா தாழ்ந்த புத்தி வேண்டாம்
கண்ணன் ஒருவனே -தேவன்
மற்றவை எல்லாம் பிரகாரம்

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை” என்றதனால், வேறு தெய்வங்களே
இல்லை என்கிறாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வேதங்களும்’ என்று தொடங்கி.

“ஜோதீம்ஷி சுக்ராணிச யாநி லோகே த்ரயோ லோகா : லோகபாலா:
திரயீச, திரய : அந்நய : ச ஆஹீதய:ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ
புத்ர ஏவ” என்பது, மஹாபாரதம் வீடுமப்பர்வம்.

“யோ யோ யாம் யாம் தநும் பக்த:சிரத்தயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்ய அசலாம் சிரத்தாம் தாமேவ விததாமி அஹம்”

என்பது, ஸ்ரீ கீதை. 7 : 21.

இவற்றால், மற்றைத் தேவர்கள் சர்வேச்வரனுக்குச் சரீரமாகையாலே
பரதந்திரப் பட்டவர்கள் என்பதனைத் தெரிவித்தவாறு.

மிடுக்கிலாத தேவர்
அவன் பிரசாதத்தால் கிடீர் இவை பலன் கொடுக்கும்
மேலுக்கு மெழுகு பூசி நிறுத்தினாலும் –
பிரகார பூதராக இந்த தேவதைகள் -தரு பூதரே சரீரம் தானே
நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் அணங்குகள் பல பலவாக்கி –
அங்கானி -உபநிஷத்தும் சொல்லும்
சரீர பூதர் என்ற நினைவுடன் கொடுக்கலாம்

விதி பூர்வகமாக -மாம் ஏவ கௌந்தெய அவிதி பூர்வாக -கீதை
அவர்களையே உபாசிப்பதாக செய்தால் -பலன் கிட்டாது
சரீரம் சந்தனம் சத்தி ஆத்மா சந்தோஷிப்பது போலே
ஆத்மா இல்லாத சரீரத்துக்கு மோதிரம் போடுகிறோமோ
நித்ய நைம்மித்திக கர்மாக்களை செய்யும் பொழுது –
தீய கந்தம் சேர்ந்து தீய கந்தம் கொள்வது போலே –
தேவதாந்தர பஜனம் கூடாதே –
கஜாநனர் -விஷ்வக் சேனர் காவல் காரர்கள் எட்டு பேரில்
கரி முகன்-ஜயத்செனன் – குமுதன் குமுதாட்ஷன் ஜெய விஜயன் -பட்டர்

அவனே இங்கே படுகாடு கிடக்க -இதர தேவதைகள் நமது திருக்கோயிலில் இருந்தாலும் சேவை கூடாதே –
ஹோமம் அக்னி ஸ்வாகா -சோம ஸ்வாகா சொல்லி சாஸ்திரம் விதிக்க அவன் மூர்த்தியாய்
இரப்பது எல்லாம் -அந்தராத்மா புத்தி பண்ணி பற்ற -வேண்டும்
தனது  திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலன் கொடுப்பானே சர்வேஸ்வரன் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 16, 2013

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.

பொ-ரை :- கண்டோம் கண்டோம் கண்டோம், கண்களுக்கு மகிழ்ச்சியைக் கெடுக்கக்கூடிய கூட்டங்களைக் கண்டோம்; தொண்டீர்!எல்லீரும் வாருங்கோள்; தொழுது தொழுது ஆரவாரிப்போம்; வண்டுகள் படிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்தவனான சர்வேச்வரனுடைய அடியார்கள் இத்த உலகத்திலே பண்ணோடு பாக்களைப் பாடிக்கொண்டு நின்று ஆடிக்கொண்டு எங்கும் பரந்தவர்களாய்த் திரிகின்றார்கள்.

வி-கு :- ‘பூதங்கள்’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘திரிகின்றன’ என அஃறிணைச்சொல்லால் முடிந்தது.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.

கண்டோம் கண்டோம் கண்டோம் – காணப்பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார். கண்ணுக்கு இனியன கண்டோம்-2”கொடு உலகம் காட்டேலே” என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர, பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம். தொண்டீர் எல்லீரும் வாரீர் – பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், 3பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று இருப்பார் அடையத் திரளுங்கோள். ‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில், தொழுது தொழுது நின்று ஆர்த்தும் – பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கைமேலே பிரயோஜனமன்றோ. ‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அதுதானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி. ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடுகூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.

வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் – வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையையுடையனாய், திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய 1ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள். மண்மேல் பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-2“ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே” என்னும் தேசம் ஒழிய, அதற்கு மாறுபட்ட பூமியிலே, வேறு ஒன்றனாலே தூண்டப்பட்டவர்களாய் அன்றிக்கே, தங்கள் பிரீதிக்குப் போக்குவிட்டு, பண்மிகும்படி நின்று 3தாங்களே பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆடி, பரந்து திரிகின்றார்கள்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் எனக் கூட்டுக.

வைஷ்ணவ சமர்த்தி
பாடி ஆடி -பரவி கண்ணுக்கு இனியன கண்டோம் –
காணப் பெற்றோம் ஆனந்தத்தால் மீண்டும் மீண்டும் சொல்லி
கொடு உலகம் காட்டேல்
இங்கு கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
பேராளன் பேரோதும் பெரியோரை –
வந்து
தொழுது
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேண்டாமே
கை மேலே பிரயோஜனம்
தொழுது கொண்டு இருப்பதே பிரயோஜனம்
அரவம் –
வண்டார் தண் அம் துழாய்-ஸ்ரீய பதி -இங்கேயே கூத்தாட
ஒண் டோடியாள் நீயுமே நிலா நிற்ப இங்கேயே கிடைக்க பெற்ற
தூண்டப் படாமல் தமது பிரிதியால்
பாடி ஆடி பரந்து திரிய

மாதவன்” என்ற பதத்தைநோக்கி ‘ஸ்ரீய:பதித்வத்திலும்’ என்றும், “வண்டார்
தண்ணம் துழாயான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘ஒப்பனையிலும்’
என்றும் அருளிச்செய்கிறார்.

2. திருவாய். 4. 9 : 10.

3. ‘தாங்களே பாடி’ என்று பொருள் அருளிச்செய்வதனால், “பண்தாம் பாடி”
என்ற பாடமே ஏற்புடைத்து. “பண்தான் பாடி” என்பது இப்பொழுதுள்ள
பாடம்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 16, 2013

இரண்டாம் திருவாய்மொழி – “பொலிக பொலிக”

முன்னுரை

    ஈடு :- 1“ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்தியசூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். இத்திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து, அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த, அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச்செய்வர்.

2தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும், குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயுமுள்ளார் குறைந்தவர்களாயிருக்கிறபடியையும், சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும், அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு உண்டான நன்மைகள் 1“எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே, 2பகவானுடைய பரிசத்தாலேயாயிருக்கிறபடியையும், 3அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத் தண்ணியனவாயிருக்கிறபடியையும் சொல்லி, தம்மாலே திருந்தின 4ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும், திருந்தாதாரை உபேக்ஷித்தும், இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
‘நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற
“தேவர்கள் தாமும் புகுந்து”, “நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே
நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும். இதனால், “ஒன்றும் தேவும்”
என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள்
இயைபு தோன்றும். இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய்
மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)

2. பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம்
செய்கிறார் ‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்
பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சத்துவ குணமுடையார்’
என்றும், “மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும்
பரந்திருக்கிறபடியையும்’ என்றும், “உள்ளீரேல்” என்றதனை நோக்கிக்
‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
‘சத்துவகுணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது, “மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கது
உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. “பெரியகிதயுகம்பற்றி” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப்
போருகிறபடியையும்’ என்கிறார். ‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள்
மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும். என்றது. “திரியும் கலியுகம் நீங்கி”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி, “சமயத்தை எல்லாம் எடுத்துக்
களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி எனலுமாம். ‘தேச
காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.

பொ-ரை :- கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!

வி-கு :- பொலிதல்-நீடு வாழ்தல். உயிர் வல் சாபம் போயிற்று என்க. பூதங்கள்-பாகவதர்கள். உழிதரல்-சஞ்சரித்தல்.

இத்திருவாய்மொழி, அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

ஈடு :- முதற்பாட்டு. 1ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பொலிக பொலிக பொலிக – நீடூழி  வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும். “சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும்முறை சொல்லக்கடவதாயிருக்குமேயன்றோ? ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார். ‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, அப்படியே யன்றோ செய்தது,1“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார்கண்டீரே; பின்னை இத்திருவாய்மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார். 2பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும். உயிர் வல் சாபம் போயிற்று-உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது. 3சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார். அன்றிக்கே, 4ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அவித்யை முதலானவைகள் போயிற்றன என்னுதலுமாம். நலியும் நரகமும் நைந்த-கர்மங்களுக்குத் தகுதியாகச் சேதனர்களைக் கொண்டுபோய் வருத்துகின்ற 5நரகங்களும் சிதிலமாயின. 6நரக அநுபவத்திற்கு ஆள் இல்லாமையாலே, நரகங்களும் கட்டி மேய்க்கை தவிர்ந்து கோப்புக் குலைந்தன. ஆயின், அவ்விடங்கட்கு அதிகாரிகளாயிருக்குமவர்கள் செய்வன என்? என்னில், இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை-யமனும் தனக்கு அடைத்த இந்நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை; இனிப் பரமபதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார். தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரகலோகத்தைக்காணுதல் செய்ய வேண்டியிருந்ததேயன்றோ, 1அதற்கும் ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.

இவை எல்லாம் உண்டாவன கிருத யுகத்திலே அன்றோ, கலியுகத்திலே உண்டாவன ஆமோ? என்னில், கலியும்கெடும்-அந்தக் கலிகாலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக்கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும்கெடும்’ என்ற இதனை எதிர்காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம். அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே 2ஒரே ரீதியாகச் சொல்லவுமாம். நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில், கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில், ‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச்செய்கிறார் மேல்: 3“எந்தத் தேசத்தில் திரு அட்டாக்ஷர மந்திர சித்தியையுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப்பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? கடல் வண்ணன் பூதங்கள்-அவனுடைய சிரமஹரமான வடிவழகை அநுசந்தித்து அதனாலே தங்கள் சத்தையாம்படி இருக்குவர்கள். “பூ ஸத்தாயாம்” என்று தாதுவாகையாலே, அவன் சத்தையே சத்தையாய் அறுகையாலே ‘பூதம்’ என்ற சொல் அடியார்களைக் காட்டுகிறது. மண்மேல்-அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரமபதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். 1பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டுமடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன, மலியப் புகுந்து- 2“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து. இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, 3யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம். உழிதருகை-பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.

கடல் வண்ணன் என்று தொடங்கி, உழிதரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று கூட்டுக.

உபகாரம் கொண்டாடினார் கையார் சக்கரத்தில்
நிர்ஹெதுகமாக -பிறரையும் திருத்தி -பொன்னாக்கும் தன்மை அருளி –
பொலிக பொலிக பாகவத சமர்த்தி மங்களா சாசனம்
நித்ய சூரிகள் வந்து பார்க்க -அவர்களுக்கு மங்களா சாசனம் ஆளவந்தார் நிர்வாகம்
இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் –எம்பெருமானார் நிர்வாகம் –
பரம பதம் -உபய விபூதி இன்றி ஒன்றாக இருப்பது பார்த்து –

நித்ய சூரிகள் பிரதாண்யம் ஆளவந்தார்
ஒன்றும் தேவும் -அத்தாலே திருந்த
அன்குள்ளா ரும் இங்கே வரும்படியான -சம்சார விபாகம் இன்றி –
இங்குள்ளார் பக்கம் பிரதாண்யம் -எம்பெருமானார் நிர்வாகம் –
ஞான சங்கோசம் -அற்று –
ராஜச தாமச குணங்கள் அற்று –
ராஜச பலனில் ஆசை பட்டு -இதர தேவதைகள் –
அஞ்ஞானம் இன்றி மற்ற தேவதைகளை ஆஸ்ரயிக்க –
மாம் ஏவ பிரபத்யே சாத்விகர் ஆக –
பேச நின்ற சிவனுக்கும் நாயகன் அவனே உபதேசித்த பின்பு இந்த ராஜச தாமச
குணங்கள் நீங்கி -சாத்விகர் விச்திராயும் -மற்றவர் சந்குதராயும்
உத்தம ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் –
சர்வேஷாம் உத்தமோ வைஷ்ணவ விதி -ஆத்மா சரீரவதி போலே

சர்வேஷாம் கில தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி:
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்வ சரீரவத்.

என்பது, பாரதம் மோக்ஷதர்மம். ஸ்ரீவைஷ்ணவ தர்மம் உத்தமமான
தர்மமானபடி என்? என்னில், ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சர்வேச்வரன்
“ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்” (பகவத். கீ. 7 : 18.) என்று, தனக்குத்
தாரகமாகக் கொள்ளுகையாலே என்க.

இது இல்லை யாகில் -விஷ்ணு பக்தி இன்றி -ஒன்றும் பலன் இல்லையே
ஓடத்தொடு ஒழுகல் -ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் –
தம்மாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளில் விழுந்தும்
திருத்தியும் –
திருந்தாத ஸ்ரீ வைஷ்ணவர்களை நிந்தித்தும் –

பகவானுடைய சம்பந்தம் உண்டானால் தேச காலங்களுக்கு நன்மை உண்டு
என்று சொல்லுகையாலே, இந்தச் சம்பந்தம் இல்லாத போது அவற்றால்
பயன் இல்லை என்ற பொருளும் தோன்றுகையாலே, அதனை
அருளிச்செய்கிறார் ‘அது இல்லையாகில்’ என்று தொடங்கி. அது
பகவானுடைய சம்பந்தம். அவை-தேச காலங்கள்.

4. ‘ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்’ என்றது, “தொழுது
தொழுது நின்று ஆர்த்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தொழுதுய்ம்மினீரே”, “உய்யும் வகை இல்லை” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றித் ‘திருந்துகைக்குத் தகுதியுடையாரை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக பொலிக -மங்களா சாசனம் ஸ்பஷ்டமாக
சாந்தி சாந்தி சாந்தி போலே
சாபம் -அனுபவித்தே தீர வேண்டிய பாபங்கள்
நமனுக்கே வேலை இன்றி போக -நரகமும் நலிந்து போக
கலி புருஷனுக்கும் கெட்டு போகும் படி
கடல் வண்ணன் பூதங்கள் -நினைத்தே தரித்து இருப்பவர்கள்
மண் பூ லோகத்திலே மலிய புகுந்து -எம்பெருமானார் நிர்வாகம்
பாடி ஆடி இருக்க கண்டார்
பகவத் சமர்த்திக்கு -சமர்த்தமாக வேண்டும் -வைதிக மங்களா சாசனம் முக்கால் சொல்லப் படும்
பகவானுக்கு மங்களா சாசனம் செய்த பின்பு பாகவதர்களுக்கு செய்ய வேண்டுமே
நம்பிள்ளை நஞ்சீயர் -கேட்க
மணி வண்ணா பல்லாண்டு அப்புறம் சுடர் ஆழியும் பல்லாண்டு பெரியாழ்வார்
வீற்று இருந்து ஏழு உலகும் -போற்றி அங்கேயே செய்து அருளி
நம் ஆழ்வாரை அடி ஒற்றி பெரியாழ்வார்

பிராயச்சித்தம் செய்து போகும் பாபம்
அனுபவித்தே போக்க வேண்டியவை சாபம்
இங்கே சாபம் -என்றது -ஆத்மாவை பற்றி கிடக்கிற அவித்யாதிகள்
கர்மானுகூலமான -நலிய கூடிய நரகங்கள் -ஆள் இன்றி -கட்டி மேய்ப்பு தவிர்ந்து நலிய –
இருக்கும் -நமனுக்கு இங்கு இந்த பூமியிலே -வேலை இல்லை
யாதொன்றும் இல்லை லவதேசமும் இல்லை
தர்ம புத்திரன் -கூட அஸ்வச்த்தாமா -சொன்னதுக்கு போக
துரி யோதனன் ஸ்வர்க்கம் இருக்க -தானும் நரகம் போக கேட்டு –
வழி எல்லாம் நாற்றம் -சகிக்க முடியாமல்
தர்ம புத்திரன் தேஜஸ் நறு மணம் வீச –
அங்கேயே இருக்க -இந்த்ரன் தோன்றி -நரக தர்சனம் -உண்டு அப்புறம் கூட்டி போனான் –
நரக தர்சனும் இல்லை இவற்களுக்கு
கிருத யுகத்தில் இல்லை
கலியும் கெடும் -பவிஷ்யத்த விஷயமாகவும் கெட்டு போயிற்று என்றும் சொல்லாம்
கெட்டு போனது எப்படி -கண்டு கொண்மின்
அனுபவத்தால் ஸ்பஷ்டமாக பார்க்க சொல்லி புரிய வைக்க வேண்டுமோ
கடல் வண்ணன் -பாகவத சஞ்சாரம் இல்லாமையாலே இந்த பொல்லாங்கு நடமாட அடி
இப்பொழுது உண்டான பின்பு இருக்குமோ
விளக்கு ஏற்றின பின்பு இருள் விலகுமே

பாகவதர்களுடைய சஞ்சாரம் உண்டானால் பொல்லாங்குகள் போமோ?
என்ன, ‘போகும்’ என்பதனைப் பிரமாணத்தோடு எடுத்துக் காட்டுகிறார்
‘எந்தத் தேசத்தில்’ என்று தொடங்கி.

“யத்ர அஷ்டாக்ஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா:”– சுலோகம்.

புருஷார்த்தம் -வியாதி -நம்மை உணர்ந்து கொள்ளாதது
துர்பிஷம் வேண்டியது கிடைக்க திருவடி உபாயம்
தனக்குஎன்று நினைப்பது திருட்டு
ஸ்வா பதேசம் -அர்த்தம் –
பூதங்கள் -அவன் பூ சத்தாயம் -பூ தாது -இருப்பது –
எம்பெருமானை நினைத்து தரித்து
வணங்கி -தரித்து மூச்சு போலே பகவத் அனுபவம் –
அத்தாலே சத்தை -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன்
அவன் நித்ய சூரிகள் நாயகன் -மண் மேல் இங்கே என்று கையால் படி எடுத்து காட்டுக்கிறார்
இப்படி தான் நீதாண்டிய அசைவோ
படி பூமி –
ஒருவர் இருவர் இல்லை மலியப் புகுந்து
அடியார் குழாம் நெருங்கி
பாடி ஆடி –
எமாதிகள் தலை மேல் அடி இட்டு-
உழி தருகின்றோம் -நிர்பயமாக எங்கும் சஞ்சரிக்கை
போயிற்று வல்லுயிர் சாபம் –

“மலியப் புகுந்து” என்பதற்கு, அவதாரிகை, ‘பகவானுடைய’ என்று
தொடங்கும் வாக்கியம்.

மருபூமி-நீரும் நிழலும் அற்ற நிலம். “மலையும் மறிகடலும் வனமும்
மருநிலமும்” என்பது, கம்பராமா. மூலபல. 158. “நீரும் நிழலும் இல்லா மரு
நிலம் என்பார், ‘மண்’ என்றார்” என்பது, பரிமேலழகருரை. (குறள். 742)

3. திருவாய். 2. 3 : 10.

4. “காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே”

என்பது, திருமாலை.
பொலிக பொலிக பொலிக -5104
48 நாள் அவதாரம்
மதுர கவி ஆழ்வார் பட்டோலை -கொள்ள -செய்தார் -ஆண்டிடும் தன்மையான் –
-கேட்டாராம் ஆழ்வார் இடம் -கலியும் கெடும் -திருவடி காட்ட
அஞ்சலி உடன் திவ்ய மங்கள விக்ரஹம் -காட்டிக் கொடுக்க –
அப்புறம் பவிஷ்யத் ஆசார்யர் விக்ரஹம்
பூத புரி -அவதாரம் -பூதங்கள் சொல்லி சூசகம் -அலங்கார சாஸ்திரம் –
சப்தங்கள் சூசகம்
அடியார்கள் சொல்லாமல் பூதங்கள் -சொல்லி அருளி –
எம்பெருமானார் திருவவதரித்து –
விசேஷமான திருவாய்மொழி –
அவன் திருவடியில் அனுபவிக்கப் பெற்றோம்
கலியும் கெடும் போலே சூசிதம் கொசித் கொசித் -ஆசார்ய ஹ்ருதயம் -ஸ்ரீ ஸூக்தி
தாமர பரணி நதிக்கரை –

இது பிரசித்தம் கொண்டு அத்தை காட்டிக் கொடுக்க –
இங்கு  இப்பொழுது மலிய புக கண்டோம் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-258-267..

April 16, 2013

258-

நாரதர் வால்மீகி -16 கல்யாண குணங்கள் பட்டியல்-
மஹானுபாவர் புருஷோத்தமன் ஸ்ரீ ராம சந்திரன் –
பெண்கள் பண்புகள் ஒரே இடத்தில் சீதை பிராட்டி
தொண்டனுக்கு  உள்ள அடையாளங்கள் எல்லாம் லஷ்மணன் இடம்
தஞ்சை -மேல வீதி – ராமன் கோயில் -நந்தன வருஷம் தாண்டி விஜய வருஷம்
உயர்ந்த த்வஜ ஸ்தம்பம் சுவர்ண கவசம்
பலி பீடம்
கருடன் சன்னதி கண்ணாடி போன்று அழகை காட்டும் வேதாந்தா
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
உள்ளே ஸ்ரீநிவாசன் என்பதால் கருடன்
வால்மீகி மண்டபம் அருகில்
வடக்கே வால்மீகி ஆஸ்ரமம் லவ குசன் 240000 ஸ்லோகங்கள் சுவரில் எழுதி
ஸ்தல வருஷம் வேம்பு உடலுக்கு நன்மை
தேன் போன்று தித்திக்கும் ஸ்ரீ ராமாயணம்
கம்பன் பரதன் குகன் சந்திப்பு இன்பம் சொட்ட வடித்து காட்டி அருளுகிறார்
குகன் முதலில் தவறாக நினைத்து –
போர் முரசு கொட்ட
சுமந்த்ரன் நோக்கால் உணர்த்திய குறிப்பை வாக்கினால் –
ஈமசடங்கு செய்ய வசிஷ்டர் தடுக்க பரதன் புலம்ப
நஞ்சினை நுகர -அஞ்சினன் அலர்தினன் –
நடுங்கி -மூன்று உலகினுக்கும் ஒரு முதல்வனாய் ராமன் இருக்க
ஈன்றவள் செய்த இழுக்கு இது
அவையோர் அனைவரும் ஆராவாரிக்க –
நின்னின் தோன்றிய -யாரும் உனக்கு நிகர் இல்லை –
தந்தை மரிக்க -தடுக்க ஆள் இல்லை
அரசு வேண்டாம் கூறி
வாழிய நின் புகழ் -வேள்வி ஒன்றும் வேண்டாம் –
பதினான்கு லோகங்களும் உனது புகழ் -பாடும்
தானையை விரைய எழுக என்று விளம்பி
நல்லவன் உரை செய்ய -அமிழ்த்தினால் குளித்து
ராமன் பொன் முடி சூடப் போகிறான் உறுதி ஆனந்தம்
எழுந்தது பெரும் படை கழிந்தது பெரும் துயர்
அழிந்தது கைகேயி ஆசை
கண்ணினை மறைத்தன தூசிகள்
ரஜகத துர சேனை –
மந்திரை குறுக்கே வர –
கங்கை காண் படலம் –
மேக கூட்டம் போலே
பேசும் வெட்டிய மொழியனன் குகன் சந்திக்கிறான் பரதன்

259

ராமாயண கதா -இமய மலை சூர்யா சந்தரன் இருக்கும்வரை வாழும்
உமது புகழும் இருக்கும் வால்மீகிக்கு பிரம்மா அருள
விஜய ராகவன் -விஜய ராமன் சன்னதி மேல வீதி தஞ்சாவூர்
சௌசீல்யம் அழகால் வெற்றி கொள்கிறான் நம்மை
இதுவே அம்பு நம்மை ஈர்த்து கொள்ள

பெரிய பிரகாரம்
சித்திரங்கள் பல
அரசர்கள் கைங்கர்யம்
தூய்மையாக பராமரிக்கப் பட்டு தசாவதாரம் சித்திரம் மீனோடு –தானே -கல்கியும் –

முக்கிய அவதாரங்கள்
பார்வையால் ரஷிக்க மீன் திரு அவதாரம்
ஆமை முதுகில் தாங்கும் பலம்
வராகம் பிரளய ஆபத்தில் தூக்கி காத்த சிறப்பு
நர சிம்ஹன் பக்தனுக்காக எதையும் செய்ய வல்லவன்
வாமன திருவிக்ரமன் சொத்தை மீட்க்க
பரசுராமன் கோபம் குற்றம் செய்ய கூடாது
ராமன் -சீல குணம் காட்ட
பலராமன் ஆதி செஷன் தொண்டு புரிய
கண்ணன் உபதேசத்துக்கு கீதாசார்யன்

சேஷ யாளி ஹம்ச சிம்ஹ கருட ஹனுமந்த வஹனங்கள்
கங்கை கரை அடைந்து
கங்கை காண் படலம் –
கூற்று -போன்ற அட்ட்றல் குகனுக்கு
கண்களில் தீ பொறி -பரதனை கண்டதும்
நாசி புகை
குறிப்போடு புருவம்
கையில் வில் வேண்டாம்
கடித்த  வாயினன் வெட்டிய மொழியினன்

விளிக்கும் தீயினன்
எலி போன்ற இந்த படை பாம்பு போலே முடிப்போம்
ராமனுக்கு தீங்கு செய்ய -தாண்டி போக விட மாட்டோம்
நாய் குகன் -ஆறு கடந்து இவர் போவாரோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
நண்பன் தம்பி சொல்லி என்னை கொண்டானே
விலை தரையில் ஊன்றி
சுமந்த்ரன் அறிமுகப்படுத்த
கங்கை இரு கரை உடையவன் –
கணக்கு இறந்த கப்பல்களுக்கு சொந்த காரன்
உங்கள் குல நாதருக்கு உயிர் துணைவன் தலை நிமிர்த்து பார்த்தான் பரதன்
பக்தி கண்கள் கலக்க உண்மை கொப்பளிக்க
அண்ணலுக்கு ஏற்றவன்
கோபம் கண்டு கலங்காமல்
வில் கையில் இருந்து விழ
வற் கலையை உடையானை -சடை முடி உடன் இருக்க –

ராமனுக்கு பின் பிறந்த தம்பி தீங்கு புரிவான் நினைத்தது எனது குற்றமே
நம்பியும் நாயகனுக்கு ஒக்கின்றான்
அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்
ஆயிரம் ராமர் போலே உண்மை நிலை உணர்ந்து
தீ வினை என்று நினைத்து சிந்தனை முகத்தில் தேக்கி
தராசு தட்டில் ஆயிரம் ராமர் -ஆவரோ என்கிறான்

260

ஆபதாம் –ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
விஜய ராமர் மேல வீதி தஞ்சாவூர்
த்வார பாலகர் சேவித்து கொண்டு –
மணிக்கதவம் திறக்க சொல்லி
மூலவர் உத்சவர் சக்கரத் தாழ்வார் சேவை
ராமர் சீதைலஷ்மணன்
கையும் வில்லுமான அழகை சேவித்து கொள்கிறோம்

விவேகம் சிறந்த அம்பு கொண்டு அஞ்ஞானம் போக்குகிறான்
உடல் வேறு ஆத்மா வரு ராமனுக்கு அடங்கி அவனே தஞ்சம் என்னும் அறிவு என்கிற அம்பால்
ஸ்ரீநிவாசன் கோயிலும் திருவடியில் ஆஞ்சநேயர் சேவை
அஞ்சநாத்ரி -அஞ்சனை தேவி தவம் இருந்து பெற்ற ஆஞ்சநேயர்

ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -குகன் புகழ
உயர் குணத்து –
இஷ்வாகு தொடங்கி ராமர் வரை -அனைவர் புகழும் உன்னிடம் கண்டேன்
ஸ்ருங்கி பேரம் –
யானே காட்டுவன் எழுக என்றான் -குகன்
விம்மி விழுந்து
அரிய புல்லில் துயின்றனன் –
வில்லை ஊன்றிய  கை உடன் கண்களில் நீரை சொரிய லஷ்மணன்
நிலை கேட்டு -பரதன் -துன்பத்துக்கு ஹேது வானேன் அவன் அதை துடைக்க –
அழகிது என் அடிமை -என்கிறான் பரதன்

நாவாய் பல சூழ்ந்து
ஏறி அமர்ந்து
எழில் கொஞ்ச
மூன்று தேவிமார்களை அறிமுகப் படுத்துகிறான் பரதன்
முதல் தேவி மூன்று லோகம் ஆள்வானை ஈன்ற தாய்
யார் பிறந்த படியால்
எனக்கும் மூத்த-வன் இன் துணைவன் குகனை அறிமுகப்படுத்தி
லஷ்மணன் -பின் செல்ல ஒருவன் உளன் என்பதருக்கு ஈன்ற சுமத்ரை
என்னை ஈன்றாள் நாம் அழுவதருக்கு
உருவத்தில் பேய்
குகன் இப்படி பேசுவது ராமன் உகக்க மாட்டான்

261-

ஸ்ரீ ராம -சகஸ்ரநாம தத் துல்யம்
பாபங்கள் போக்க ஸ்ரீ ராம நாமம்
போகும் உயிர் மீட்க்க
அக்கரை -ஆங்கரை வந்துள்ளோம்
ஸ்ரீ ரெங்கம் அருகில் -சமய புரம் லால்குடி மார்க்கம்
அஹம் கர சொல் மருவி ஆங்கரை

கருடன் சன்னதி எதிரில்
வாயில் ஒற்றை கல்லால்
கஜ லஷ்மி பெருமாள்
அனந்த கிருஷ்ண வரத ராஜர்
90 சர்க்கம் –
கங்கை தாண்டி சேர்த்தான்
பரத்வாஜர் ஆஸ்ரமம் போக
கும்ப மேளா நடந்த ஸ்தலம்
வால்மீகி சிஷ்யர்

முனிவர் ஆஸ்ரமம் அரசர் பணிவுடன் செல்ல வேண்டுமே
வசிஷ்டர் கண்ட பரத்வாஜர் அர்க்க்யம் பாத்யம் சமர்ப்பித்து
தயரதன் மரித்த செய்தி அறிவார் பரத்வாஜர்
நாட்டில் நலமா விசாரிக்க
நன்கு ஆட்சி செய்கிறாயா கேட்டதும்
இடி விழுந்தால் போலே இருக்க
பரதன் –
குற்றம் இல்லாத ராமனுக்கு தீங்கு நினைந்து வந்தாயா
கேட்டதும் -நீர் முக்காலம் உணர்ந்த முனிவர் கேட்கும் படி
இறந்தவனுக்கு சமம் ஆனேன்
குற்றம்நிணைக்க வேண்டாம்
ராமன் இடம் அரசை சமர்ப்பித்து கூடிப் போக வந்தேன்

உலகம் உனது புகழ் அறிய தான் இப்படி கேட்டேன்
உனது கீர்த்தி உலகு அனைத்தும் எட்ட வேண்டுமே
நீ வாழி
கூறினதும் பரதன் மூச்சு விட்டான்
அனைவரும் சங்கை
எடுத்து கூறி சமாதானம் செய்கிறான் பரதன்

பட வேண்டிய கஷ்டம் பட்ட பின்பு புகழ் உலகம் அறிந்து என்ன பயன்
இன்று இரவு தங்கி நாளை போகலாம் என்றார்
பெரிய விருந்தோம்பல் பரத்வாஜர் செய்ய அன்று
முனிவர் காய் கனி
யோக பலத்தால்
அக்னி சமையல்
அப்சரஸ்
கந்தர்வர்
நாரதர் வீணை இந்த்ரன்
வாயு தென்றல்  அனைவரும் வந்து சேவை செய்கிறார்கள்

262
அனந்தன் கிருஷ்ணன் வரதராஜன்
ஆங்கரை கோதண்ட ராமர் கோயில்
பரத ராஜர் விருந்து பரதனுக்கும் சேனையோருக்கும்
முனிவரை சந்திக்க பணிவு வடாடோபம் இன்றி வர முன்னோர் சொல்லிக் கொடுக்க
ஆஸ்ரமம் அழிய கூடாதே யானை குதிரை படைகளால்
அக்னி சாலைக்கு சென்று பரத்வாஜர் அக்னி கார்யம் முடித்து
விஸ்வகர்மா அமர இடம் செய்து தர கேட்டுக் கொண்டு
குபேரன் வாயு அக்னி அனைவருக்கும் வேலை
நதிகள் அனைத்தும் தண்ணீர் கொடுக்க
அப்சரஸ்
பரிமாற்ற
பூ வகைகள் வர வழைத்து
நக்கி கடித்து உண்பவை –
மந்த மாருதம் வீச தொடங்க
தண்ணீர் தெளித்து வர வேர்க்க
வாத்தியம் முழங்க
நாரதர் கிண்ணர்கள் கீதம்
50 mile விஸ்தாரம் மண்டபம் அமைத்து
முத்து பவள மாலைகள்
வித வித பழங்கள்
சிங்காசாசனம் அமர பரதனை சொலி
ராமர் இருக்க வேண்டியா இடம் என்று வணங்கி
கல்பக பாரிஜாத புஷ்பங்கள்
தீப தூபம்
அனைத்தையும் வாரி வழங்கி
யானை குதிரை படைகளுக்கும்
ராமனை கூட்டி இங்கேயே இருக்கலாம் நினைத்து மக்கள் சந்தோஷிக்க

263-

நேர்மை அடையாளம் கருணை கடல் ஸ்ரீ ராமன்
அன்று இழந்த நாம் ஷேத்ரங்களில் சேவிக்க பெறுகிறோம்
சித்ரவாடி -கடலூர் கிராமம் மதுராந்தகம்
வாடி -இடம் பட்டி போலே -ஹல்லி கர்நாடக -இதை
சித்ர -அழகிய வித விதமான
மலைக்கு மேல் நரசிம்ஹன் சிம்ஹ கிரி
பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆஞ்சநேயர் கீழே சேவிக்கிறோம்
அஞ்சன தேவி தவம் இருந்து பெற்ற ஆஞ்சநேயர் –

ஸ்ரீ ராமன் திருவடி சேவித்து கொள்கிறோம்
நடந்த கால்கள் நொந்தவோ
எவ்வாறு நடந்தனை எம் ராமாவோ
நர்த்தன கிருஷ்ணன் சேவித்து கொள்கிறோம்
குடமாடு கூத்தர் ராச கிரீடை ஜல கிரீடை காலிங்க நர்த்தனம்
பத்மாவதி தாயார் சேவை
அகலகில்லேன் இறையும் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
தாயார் மூலம் சரண்
அருகில் ஆண்டாள் சேவை
வண்டி கட்டி பக்தர் கூட்டம் மார்கழி முழுவதும் உண்டாம்
92 சர்க்கம் –
முன்பு பெரிய விருந்து பார்த்தோம்

திருப்தி உடன் மக்கள் இருக்க –
காலை புலர்ந்தது
போகும் வழி கேட்கிறான் பரதன்
பெருமாளை செவிக்கும் வரை நிம்மதி இல்லையே
கண்களால் குளிர கடாஷிக்க வேண்டிக் கொள்கிறான்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -உன்னை காணும் அவாவில் விழுந்து
எங்குற்றேன் அல்லேன் –
எப்படி செல்ல வேண்டும் -வழி அருளுவீர்
காடு 35 mile -60 kms தூரம் சித்ர கூடம் வரும் நுழை வாயில்
3 1/2 யோஜனை தூரம் தெற்கு திசை போய் தென் மேற்கு திசை திரும்பி

கௌசல்யை அறிமுகம் படுத்துகிறான்
வணங்கினாள் -ராமனை ஈன்று எடுத்த தேவி
சுமத்ரை -இயம்
தனது தாயாரை -பார்த்தால் நல்லவள் போலே -என்னை பெற்றவள்
பரத்வாஜர் தாயாரை இகழாதே
ராமன் உயர்ந்த உள்ளம் தகுந்தபடி நீயும் நடந்து கொள்

264-

வால்மீகி நாரதர் -குணங்கள் பட்டியல் இட்டு -இஷ்வாகு வம்ச -ஸ்ரீ ராமன் -அணைத்து குணங்களும்
கடலில் முத்தும் மாணிக்கமும் பவளமும் போலே கருணைக் கடல் தானே ஸ்ரீ ராமன்
சித்ரவாடி -பிரசன்னவேங்கடாசாபதி சன்னதி கீழே –
தனது திருவடி காட்டி -கடி ஹஸ்தம் முலம் கால் வற்றி போகும் என்று காட்டி
மன்றமற  கூத்தாடி மகிழ்ந்தாய் -வட திருவேம்கடம் மேய மைந்தா
லஷ்மி நரசிங்கன் கிரி மேலே சேவை

கண்ணீர் துளிகள் துளிக்க துளிக்க சேவை –
சேர்ந்த பின்பும் -கரியவாகி -மிளிர்ந்து -அடியார்களை பார்த்த ஆனந்த கண்ணீர்
பிரஜைகள் பார்த்து ஆனந்த பாஷ்யம்
பூரி ஜகன்னாத ஷேத்ரம் போலே கோபுரம் –
92 சர்க்கம் –
பரத்வாஜர் -கௌசல்யை சுமத்ரை கைகேயி அறிமுகம்
தனது தாய் பற்றி குறைவாக பரதன் பேச –
பரத்வாஜர் -ராமனே குற்றம் பார்க்காமல் –
குகன் முனிவர் காட்டில் வாழும் ரிஷிகள் நன்மை
ஜடாயு மோஷம் -சுக்ரீவன் விபீஷணன் தோழமை உண்டே
நன்மைகள் பல உண்டே –
யமுனை ஆற்றைக்கடந்து போக வேண்டும் -இன்று சித்ர கூட மலை
சேனைகள் உடன் போக வழி சொல்கிறார் -பரத்வாஜர்
காடே தவிக்க சேனைகள் செல்ல
ராமரை தரிசிக்க போவதை கண்டு வன தேவதைகள் மகிழ
93 சர்க்கம்
வனம் அழகு -பரதன் வியந்து
மலர்கள் காய்கள் கனிகள் புஷ்பங்கள் கொடிகள் வர்ணிக்கிறார்
யோஜனை 10 mile -35 யோஜனைகள்  போக
நீர் நிலைகள் பல கடந்து

வசிஷ்டர் இடம் -பரதன் பெருமாளை கிட்டி விட்டோம்
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
நாம் கூடவா வந்தோம்
அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே

265

ந ருக்வேத -ஆஞ்சநேயரை கொண்டாடி ராமர் பேசி
வேதங்களை கரை காணாதவன் இப்படி பேச ஒண்ணாது
சாஸ்திரங்கள் பலவும் கற்று நான்கு வேதங்களையும் அறிந்து –
பஞ்ச முகம் -ஆஞ்சநேயர் -தானான நான்கு வேதங்களுக்கும்
சித்ரவாடி -பஞ்ச முக ஆஞ்சநேயர் சேவை
திண்ணிய வடிவு கருணை கடாஷம்
அபய ஹஸ்தம் வலது -இடது கையில் கதை -பத்து கைகளிலும் பத்து ஆயுதங்கள்
தானான திரு முகம் நேராக
வலது பக்கம் கருடன் சேவை
வராகன் -வலது கோடியில் சேவை
இடது பக்கம் -நர சிம்ஹன் சிங்கப்பிரான் -அடுத்து ஹயக்ரீவர் –
மது கைடபர்களை அழித்து வேதம் மீட்டு கொடுத்த
ஐந்து திருமுகங்கள் திருவடி பற்றி உஜ்ஜீவிக்க
சிம்ஹ கிரி
93 சர்க்கம்
பரதன் பரத்வாஜர் சொல்லிய வழியில் போக –
மந்தாகினி நதி கரை நெருங்க
அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –

ராம ரத்னம் சேற்றில் வருவது போலே என்னுடன்
வானோர் இறையை –
யசோதைபோலே பேசி ஏமாற்றினேன் -நம் ஆழ்வார்
அவனின்றி வாழ முடியாதே
பெருமை மனசில் பட்டி பின் வாங்க
நமது தாழ்வு நோக்கி முன்னே செல்ல
கங்கை நீராடி பாபங்கள் போக்கி
கழுவி பாபங்கள் சேராதே –
அருகில் போக முடியுமா- பிரிந்தால் தானே அருகில் போக முடியும் –
நிழல் உடம்பு போலே அணைத்து ஜீவர்களும் அப்க்ர்த்த சித்த விஷயம்
மாணிக்கம் ஒளி பூ மணம் போலே
தனித்து ஸ்திதியே இல்லையே
ஒட்டிக் கொண்டு சார்ந்து இருக்கிறோம்
நினைக்க நினைக்க தான் உண்மை அறிகிறோம்
பிரிய முடியாது இருந்தும் உடம்பை கட்டிக் கொள்ள ஆசை
நாமுமா கிட்டே வந்தோம்
மிருக கூட்டம் அசைய -புகை மூட்டம் கண்டான் பரதன்
தபச்விகள் வாழும் இடம் என்று தெளிவாக தெரிகிறதே
தூதுவர்கள் சென்று வர
அஹம் நானே போகிறேன் என்று குனிந்த தலை உடன் கண்களில் நீர் கோத்து பரதன் போக

266

ஸ்ரீ ராம நாம ராமேதி -சகஸ்ரநாம தத் துல்யம்
பண்டிதர்களும் கடைப்பிடிக்கும்படியான சிறந்த திரு நாமம் –
உள்ளம் பூரிக்கும்
நகர் கிராமம் -சமய புறம் -லால்குடி -ஆங்கரைக்கு முன்பு –
கோதண்ட ராமர்
ருக்மிணி சத்தியபாமை உடன் கிரிஷ்னன் அபய வரதர்
ஆஞ்சநேயர் விஷ்வக் சேனர் சேவை
மீன் சின்னங்கள் -கரும் கல்
சந்தான வேணுகோபாலன் -புல்லாம் குழல் -நடனம் ஆடும் திருக்கோலம் சேவை –
பூமி நீளா சமேத அபய வரதர் சேவை –
நர்த்தன கிருஷ்ணன் சேவை –
நாப கச்சன் -ஓடவும் மாட்டாமல் இருக்கவும் மாட்டாமல்
94 சர்க்கம்
சித்ர கூடம் வர்ணனை
தனிமையில் பிராட்டி உடன் பெருமாள் பேசி அருள –
சசி தேவி இந்த்ரன் போலே -நாட்டை ஆளும் -சடை முடி உடன் காட்டில் இருந்தாலும் –
அயோதியை விட்டு வந்ததில் துக்கம் இல்லை
தனியாக பொழுது போக்க
தர்மம் அறிவு பகுந்து கொண்டு இருக்கிறோம்
மனமே தெளிந்து
தபச்விகள் வாழும் மலை
தாதுகள் நிறைந்த மலை முகடுகள்
வெள்ளி போலே தாமாரைக்காடு போலே
நீல மஞ்சள் மணிகள் கலந்து
நவ ரத்னம் போலே மலை முகடுகள்
பறவைகள் பல வகை கண்டார்கள்
கண்களால் கடாஷி
மான் கணங்கள் மருண்டு வர வெட்கி
அன்னம் பறவை நடை பாரதி நாணி ஒழிய
பூக்கள் பழம்கள்  காய்கள் பல கண்டார்கள்

கிழங்குகள் பல வகை
ஆரோக்கியம் உணவுகள்
பல த்வயம் தந்தை சொல் கேட்டும் உன்னுடன் இருக்கப் பெற்றதும்
வர்ணங்கள் பல பல கண்ணை கவர
புன்னை மரம்
ஆனந்தமாக கழிப்போம்
தர்ம சிந்தனை செய்து –

267

யாவத் இராமாயண கதா லோகே பிரகர்ஷயிதி -24000 ஸ்லோகங்கள் -ஆதி காவ்யம் –
நகர் கோதண்ட ராமர் திருக்கோயில் -சமய புரம் -லால்குடி
லஷ்மி நாராயணர் சேவை -அவனே சீதா ராமராக அவதரிக்க
அம்பை பிடித்த திரு கோலம் திரு கரங்கள் -உத்சவர்
சீதையினால் தானே ராமனுக்கு பெருமை -மாரீசனே உணர்ந்து
95 சர்க்கம்
மந்தாகினி நதி விபரணம்
சல சலத்து ஓடி வருகிறது -புனிதமான தீர்த்தம் ராமர் காட்
துளசீதாசர் வால்மீகி ஆஸ்ரமம்
லாகாசுரன் அபராதம் செய்த பாறை உண்டு
சரணாலாயம் போலே பல பறவைகள் –
தபஸ்விகள் பலர் வாழ
இடைவிடாமல் பெருமாளை சிந்தித்து
தர்ம கார்யம் உடன் செய்யும்
ரகு வம்சம் விளங்க செய்த ஸ்ரீ ராமன்
பெரும் தூசி கிளப்பி சேனைகள் வர –
ஏகாந்தமாக இருக்க விடாமல்
96 சர்க்கம்
லஷ்மணன் கோப பேச்சு
பரதன் -திட்டமிட்டு படை திரட்டி வருகிறான் என்று
கோப பேச்சு தூசி கிளம்பி வர -சப்தங்களும் கேட்க –
யானைகள் கால் ஓசை –
லஷ்மணன் மேலே சென்று பார்க்க -குன்றின் மேலே ஏறி
அத்திக் கொடி பார்த்து தமது சேனை வருவதை பார்த்து
சீதை கூட்டி ராமா நீ சென்று விடு
கைகேயி மகன் உயிர் பிரிக்க வருகிறான் –
அவனை கொள்வதில் எந்த குற்றமும் இல்லை –
தீயவர்கள் பாரம் நீக்கி பூமா தேவி துயரம் தீர்ப்பேன்
ராமர் நிதானம் இழக்க வில்லை

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-248-257..

April 16, 2013

248-

மனோஜவம் -ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி
நமாமி -கை கூப்பிக் கொண்டு வாய் முறுவலும் ஸ்ரீ ராம நாமம்
விநய வீர அபய ஆஞ்சநேயர்
கனை ஆழி ஆஞ்சநேயர் சேவை இன்று -ஸ்ரீ ராம நாமம் பதித்த ஆழி அடையாளம் –
திருக்கையில் பிடித்து கூப்பிய கைகள் உடன் நின்ற திருக் கோ
வசந்த நகர்
ஹயக்ரீவர் காயத்ரி ஆஞ்சநேயர் அனைவரையும் சேவிக்க பாக்கியம் பெற்றோம்
ஆஞ்சநேயர் மேலேயே சீதா ராமர் லஷ்மணர் சேவை
தன்வந்தரி அமுத குடம் கொண்டு சேவை
கடல் கடையும் பொழுது தோன்றிய -ஆரோக்கியம் அருள தன்வந்தரி
ஆஞ்சநேயர் இரண்டு திரு கண்களாலும் கடாஷித்து சேவை
ஆசார்ய ரூபம் -ஆஞ்சநேயர்
தேசிகன் -ஜீவாத்மா சிறை உடலில்
பவ சாகரம் சம்சாரம்
ராவணன் போலே மனஸ் -இறைவன் வழி செல்லாமல்
பத்து இந்திரியங்கள்
தெரியாமல் தவிக்கிறோம்
ஆசார்யர் பரமாத்மா செய்து காட்டி
சங்கம் சக்கரம் கொண்டு தாப -பஞ்ச சம்ஸ்காரம் செய்து –
இரண்டு உயிர் கொடுத்த பிராண தேவதை ஆஞ்சநேயர்
கம்ப ராமாயணம் பார்த்து வருகிறோம்
தீய சொல் -தந்தை மரித்த செய்தி
எழுந்தனன் ஏங்கினன் விம்மினன் அலட்றினான்
அலங்கோலமாக போக –
தந்தைக்கு ஒப்பான நேர்மையே உருவான ராமன் திருவடி பட்டு துயர் தீர்க்க
வனத்திடை சொல் கேட்டு நெருப்பில் -விழுந்தது போலே துடிக்க
அரசர் கோமகன் தசரதன் சொல்படி சென்றான்
வாய் மடித்து -கை கொண்டு பூமியில் அடிக்க -இடி போலே
இறந்தான் தந்தை அன்னவன் மைந்தன் அரசை துறந்தான்
கொன்றேன் நான் என் தந்தையே
அனைத்து குற்றமும் தானே ஏற்று கொண்டு
மன்னர் மன்னர் வாழ்த்தி கௌசல்யை -முன்னோர் அனைவரையும் வென்றாய் என்றாள்

249-

ஞானாந்த -மயம் -இவையே உருவாக்கி நிர்மலம் தூய ஸ்படிகம் போலே
அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரம்
ஹயக்ரீவம் உபாஸ்ம்யம்
நவ வ்யாக்ர பண்டிதர் ஆஞ்சநேயர்
காயத்ரி தேவி ஐந்து முகம் பத்து திருக்கரங்கள் வித்யை வளர
புஷ்கரம் ஷேத்ரம் தண்ணீர் வடிவில் பிரமனுக்கு கோயில் காயத்ரி தேவியும் வேறு மலையில் சேவை
பெருமழை த்யானம் செய்ய அறிவு ஆற்றல் வளர சூர்யா மண்டலம் உள்ள ஸ்ரீ நாராயணன்
சந்தஸ் காயத்ரி மூன்று பாதங்கள் 24 எழுத்துகள்
காயத்ரி மண்டபம் 24 தூண்கள் திரு அரங்கத்தில்
உயர்ந்த வித்யை மோஷ வித்யை பெற இங்கே சேவை  சாதிக்க
மன்னர் மன்னவா -போற்றினாள் கௌசல்யை பரதனை
மனம் மாறி கூப்பிட பரதன் தாங்காமல்
தொண்டர் தொண்டன் என்றல் மகிழ்வான்
76 சர்க்கம்
தயரதன் ஈமச் சடங்கு செய்து –
செய்ய வேண்டியதை வசிஷ்டர் –
தைலத்தில் உடல் இருக்க ஸ்வர்க்கம் அனுப்ப
சடங்குகள் செய்ய சொல்லி –
எதருக்கு நான் வருவதருக்குள் அவசரம் -பரதன் அழுது புலம்ப –
நாடு நீர் இல்லாமல் சோபை இழக்க
வசிஷ்டர் தேற்ற –
அக்நி கோத்ரம் தினம் செய்தவர் தசரதர்
அகில் சந்தன கட்டைகள் சீதை மூட்டி –
பங்காளிகள் தீட்டு 10 நாள்கள்
77 சர்க்கம் –
12 நாள் ஸ்ரார்தம் செய்து -திரு அத்யயனம் -சபிண்டி கரணம்
தானம் கொடுத்து
13 நாள் -அஸ்தி -அன்று தான் செய்வார்கள் –
நீர் பார்த்து வளர்த்தீர் -ராமன் இடம் ஒப்படைத்தீர்
ராமனும் இல்லை யார் என்னை காப்பார்
சோகம் படுவதை கண்டு சத்ருக்னன் பொறுக்க வில்லை
சூழ் உரைக்கிறான் தபோ வனம் செல்வேன்
வசிஷ்டர் நல்ல வைத்தியர் -தேற்ற
மரணம் இயற்க்கை
பசி தாகம் சோகம் மோகம் ஜரா மரணம் ஆறும் உண்டே
விதி விளக்கு யாரும் இல்லையே
சத்ருனனுக்கு சுமந்த்ரன் நல்லது உரைக்க
கலங்காதே
ஆத்மாவை நனைக்கவோ வெட்டவோ உலர்த்தவோ முடியாதே
அடுத்த செயலை பார்க்க ஊருக்குள்  நுழைகிறார்கள்

250-

ராமனே அரசன்
பிரஜைகளை காக்க உறுதி கொண்டவன்
பருத்தியூர் ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்
குடவாசல் அருகில்
வராத ராஜர் ஆஞ்சநேயர் சன்னதிகளும் உண்டு
நன்றாகபராமரிகப் பட்டு இருக்கும் கோயில்
78 சர்க்கம்
சத்ருக்னன் கூனியை வெட்டப் போக பரதன் தடுத்தான்
பெண்களை வதம் செய்யக் கூடாதே
தந்தை சொல்லை காக்க ராமன்
சீதை பார்த்தா பின் போக
இலக்குவன் இருவர் பின் சென்று கைங்கர்யம் செய்ய
நாம் தாம் இழந்தோம்
கூனி வெற்றிலை போட்டு சிறிது இருக்க -சத்ருக்னன்

கைகேயி இடம் சரண் அடைய –
பெண்களை  அவமானம் படுத்த கூடாதே பரதன் சொல்லி
எய்தவன் இருக்க அம்பை –
பொறுமை வேண்டும் ராமன் விரும்ப மாட்டானே
தர்மம் வழி தான் நடக்க வேண்டும்
கடமை காத்து -மனசை பார்த்து செய்ய வேண்டிய தர்மம்
79 சர்க்கம் –
மந்த்ரிகள் கூடி -14 நாள் -காலை -பரதன் முன் வந்து
தசரதன் ஸ்வர்க்கம் போக பெருமாள் காட்டுக்கு போக அரசு இன்றி இருக்கக் கூடாதே
நரர்களில் சிறந்த பரதனை வேண்டினார்கள்
யார் அரசன் யார் பிரஜை அறியாமல் பேசுகிறீர்கள்
ராமனை கூட்டி வருவோம்
பட்டாபிஷேகம் சேர்த்த பொருள்களை எடுத்து கொண்டு போவோம்
காட்டில் நானும் சத்ருனனும் இருப்போம்
நன்று நன்று -அனைவரும் போவோம் -என்றார்கள்

251-

ஸ்ரீ நிதிம் -தேவராஜம் அதி ராஜ்ஜியம் ஆஸ்ரயே
கல்யாண வராத ராஜர் சேவை பருத்தியூரில்
கேட்ப்பவர் வரம் கொடுக்கும் -திருக்கோலம்
வரம் ததாதி வரதக
பெரும் தேவி தாயார் சேவை
ஹஸ்தி கிரி மேலே போலே சேவை
80 சர்க்கம்
அனைவரும் கூடி போக
அனைத்து சக்தி உள்ளவர்களும் போக
வழி சரி பண்ணிக் கொண்டு போக
தோரணம் கட்டி
பரதன் புறப்பட நல்ல நாள் நட்ஷத்ரம் குறித்து சென்றார்கள்
வரை படம் தயார் செய்து சுமந்த்ரன் சொன்ன படி
நதிகளை கடந்து
கங்கை கரை வரை வழி அறிந்து
81 சர்க்கம்
நாந்தி நாள் -ஸ்ரார்தம் நடந்த பின்
காலை ஸுப்ரபாதம் வாசிக்க -வாத்திய கோஷம் கேட்க
பரதன் சகிக்க வில்லை
தான் அரசன் இல்லையே -தொண்டன் என்றே இருந்தவன்
நிலவும் நாயகி பிரிவில் சுடும்
எழும் பொழுதே பாரதன்சொகதுடன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலே இருக்க
பரதன் அழுவதை பார்த்து தவிக்க தாங்காமல்
வசிஷ்டர் உறுதியாக இருக்க
தங்கமயமான ஆசனம் அமர்ந்து
சுமந்த்ரன் முதலான மந்த்ரிகள் கூட
பரதன் தொண்டன் என்ற எண்ணத்துடன் இருக்க
82 சர்க்கம்
ராமன் வருவான் உறுதியாக இருக்க
வசிஷ்டர் மீண்டும் உபதேசிக்க
தந்தை எடுத்த செயலை முடிக்க உயிர் விட்டார்
காணும் கண்ணீருமாக பரதன் பேச
சபையில் விழுந்து அழுது அலற்றி
எனது ஒரே சொத்தை அடிமை அதையும் பறிக்க பார்க்கிறீர்
அழுதான் பரதன்
இந்த துக்கம் மிக பெரியது

252

253

நம கோதண்ட ஹஸ்தாயா ராமாய ஆபன் நிவாராணயே –
துன்பங்கள் விளக்கி நன்மைகள் அருளுபவன் ஸ்ரீ ராமர்
திருவாரூர் அருகில் நன்னிலம் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயில்
மாய மான் பின் போன -ராமன் சரித்ரம் ஐந்து கிராமங்களில் நடந்ததாக
நல்ல மானைக் கண்ட இடம் நன்னிலம்
நல்ல மானா -சீதை நினைவால்
மாரீசனும் நல்லதை ராவணனுக்கு உபதேசித்தான்
பெரிய பிரகாரம் உள்ள திருக் கோயில்
மூலவர் லஷ்மி நாராயண பெருமாள்
கூப்பிய திருக்கை உடன் அஞ்சலி விநய ஆஞ்சநேயர்
300 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்
பழுது பார்க்கும் பொழுது பழைமை மாறாமல் செய்ய வேண்டும்
83 சர்க்கம் இறுதியில் இருக்கிறோம்
சுருங்கி பேர புரம் பரதன் வர
கங்கை வடக்கு கரை வந்து -விஸ்ராந்தி அடைந்து –
தேர் படை யானை படை குதிரை படை எல்லாம் –
84 சர்க்கம்
குகனும் பரதனும் சந்திக்க
தெற்கு கரையில் குகன் இருக்க
பெரும் சேனை கண்டு சங்கை அடைந்தான் குகன்
பரதன் நல்லவன் கேள்வி பட்டு இருக்கிறான் குகன்
மனக் குழப்பம்
கொடி ஏற்றி யுத்தம் வருவது போலே இருக்க
அரசை திரும்பி கொடுக்க வந்து இருக்கிறானா
ஓடங்கள் சேர்த்து குகன்
தீய எண்ணம் உடன் வந்தால் குகன் தோள் வலிமை தாண்டி போக முடியாது
இரண்டையும் சுமந்த்ரன் கண்டான் இருவரையும் அறிந்தவன்
காய் கனிகள் கொண்டு பரதன் இடம் குகன் வர
வணங்கி
உன்னிடமாக நினைத்து வாழலாம் ஒரே விதி ராமனுக்கு நல்ல எண்ணம் உடன் வந்து இருப்பாயானால்

85 சர்க்கம்
ராமனை தேடி வந்து இருக்கிறேன்
பரத்வாஜர் ஆஸ்ரமம் போக வழி காட்டு -பரதன் சொல்ல
மறுபடியும் சங்கை உடன் குகன்
ராமன் அணைத்து உறவும் தெய்வமும் எனக்கு
ராமனை மீண்டும் கூட்டிப் போக வந்தேன்
நன்கு வாழ்வாய் உன்னை சங்கை பண்ணினேனே
உனக்கு என்று கிட்டிய ராஜ்ஜியம் -உன்னை எவ்வளவு கொண்டாடினாலும் தகும்
ராமன் சீதை லஷ்மணன் தங்கிய இடம் காட்டினான்

254

ராமாயா -சீதையா பதயே நம
உண்ணாது உறங்காது ஒலி கடலை உஊடருத்து
நன்னிலம் நல்ல மானை கண்ட ஸ்தலம்
சௌரி பெருமாள் -நடை அழகு அம்மாவாசை தோறும் அருகில் –
கோதண்ட ராமர் நின்ற திருக்கோலம் -இங்கே
மாட்டுயர் கற்பக கொடி போலே மூக்கு
மலர்ந்த பூ போலே திருக்கண்கள்
கனிந்த பழம் போலே திரு அதரம்
தர்ம கார்யம் உரு துணை சீதை பிராட்டி
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
நேர் கொண்ட விழிகள் பக்தி தளும்ப
லஷ்மணன் அனைவரையும் சேவித்து கொண்டோம்
கருடன் சன்னதி எதிரில் சேவை
86 சர்க்கம் –
குகன் பரதன் -பேசிக்கொண்டதை பார்க்கிறோம்
பங்குனி உத்தரம் இன்று
சேர்த்தி திருக்கோலம் திருவரங்கத்தில்
கத்ய த்ரயம் விண்ணப்பம் செய்து -ஸ்ரீ ராமானுஜர் -சரண் அடைந்து நமக்காக -வேண்டி கொண்ட நந்நாள்

நன்னிலம்
கோதண்ட ராமர் திருகோயில்
குகன் பரதன் இடம் லஷ்மணன் பெருமை சொல்
சொல்லி விட்டு செய்வார் லஷ்மணன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி
சொல்லாமல் செய்வான்
சொன்னதை எல்லாம் செய்வான் பரதன்
தொண்டு புரிவதே நோக்கு சேஷத்வம் அடையாளம்
பாரதந்த்ர்யம்
கையின் பெருமையை கடல் இடம் கூறுவது போலே

255

அமர்ந்த  திருக்கோலம் ஆஞ்சநேயர் -ஸ்ரீ இராமாயண ஓலை சுவடி ஏந்திக் கொண்டு
ஸ்ரீ ராம மகிமை உணர்த்தியவர்
ஆத்ம ஹத்தி இத்தை கொண்டே தடுத்தார் ஒரே மருந்து
பெரிய திருவடி சன்னதி சேவிக்க பெற்றோம்
86 சர்க்கம்
குகன் கூறி வருகிறான் ராமன் திருவடியில் லஷ்மணனை படுக்க சொன்னேன்
பூமியில் படுப்பதை காண முடியாமல் வருந்தி
என் கண்கள் தூங்காதே இவர்களை கண்டு
சுத்தி சுத்தி வந்துகையும் வில்லுமாக இருந்தான்
ராமன் திரும்பி அயோதியை போவது வரை
நாட்டு நடத்தை அறியாமல் புலம்பி கொன்னு இருந்தான்
கௌசல்யை தசரதன் சுமந்த்ரன் -உயிர் போன்ற ராமனை விட்டு எப்படி இருப்பார்கள்
தந்தை மரித்து இருந்தால் யார் ஈமச் சடங்கு செய்து இருப்பார்கள் என்று எல்லாம் புலம்பி
பரதன் இவற்றை கேட்டு
சூர்ய வம்சம் பேணி பாது காத்த அரசு -மக்கள் அரசனை இழந்து தவிப்பார்களே
இரவு இப்படி கழிய
அண்ணலும் தம்பியும் சீதையும் புறப்பட்டு
ராமனை தவிக்க விட்டு மாமன் வீட்டுக்கு போனோமே பரதன் வருந்தி
இரவில் அவர்கள் தன்கியைடம் தர்சித்தான்

256

ஆபதாம் -ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமஸ்காரம்
என்றும் விலகாமல் கோயில்களில் எழுந்தருளி -அருள் பாலிக்கிறார்
மனக்கவலை தீர்க்க -புலன்களை கட்டுப்படுத்த -ஆனந்தம் அடைய
திருமேனி அழகை  வழங்கி
வள்ளலே  மரகத மணியே
87 சர்க்கம்
பெருமாள் பிராட்டி சயனத்த இடம் காட்டி குகன் –
பரதன் மயங்கி விழ
லஷ்மணன் செய்த பாக்கியம் உணர்ந்து –
கௌசல்யை சுமத்ரை விழுந்த சப்தம் கேட்டு ஓடி வர
மடியில் வைத்து கொண்டு –
புத்ரா நீ இருப்பதால் தரித்து கொண்டு இருக்கிறோம்
உன்னை அனைத்து உலகாக நம்பி இருக்கிறோம்
என்ன ஆபத்து என்று கேட்டு மயங்கி விழுந்தாய்
சமாதானம் செய்து எழுந்தான் பரதன் –
ராமன் பிராட்டி பற்றி அனைத்து செயல்களையும் சொல்ல சொல்ல
காய் கனிகள் கொடுக்க உண்ணவில்லை
தண்ணீர் குடித்து
கேள்விப்பட்ட பரதன் மேலும் மூர்ச்சிக்க
இருவர் படுத்து இருந்த -கங்கை கரை ராம சய்யா -தலையால் தர்சிகலாம் இன்றும் –
சுருங்கி பேர புரத்தில் சென்று தலையால் தீண்டி இந்த சர்க்கம் வாசிக்க வேண்டும்
ரமணீயமான இடம்
இன்றும் சாஷியாக பலவும் உண்டே அங்கு
88 சர்க்கம் –
இங்குத மரம் அடியில் சயனித்த இடம் கண்டான் பரதன் –
ஸ்ரீ ராம நாம பஜனை இன்றும் செய்து ஆனந்திக்கலாம் இங்கே –
பட்டு படுக்கை விட்டு இங்கே இருவரும் சயனிக்க –
கடினமான தமது உள்ளம் போலே இருக்கிறதே
இரும்பு போலே வலிய நெஞ்சம்
அநாதை போலே இங்கே சயனித்து இருக்க –
தேவை யான காலத்தில் கைங்கர்யம் செய்யாமல் இழந்து
சூழ் உரைக்கிறான்
தரையில் படுக்க சடை முடி தரித்து
பெருமாள் திரும்பி வரும் வரை இப்படி தான் இருப்பேன்
காட்டிலே வாழ்வேன் என்கிறான் பரதன்

257

நமாமி ஆஞ்சநேயம் -யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
ஸ்ரீ ராம பக்தர் தூதர்
தஞ்சை விஜய ராமர் பிரதாப வீர ஆஞ்சநேயர் திருகோயில் மூலை
மேல வீதி -வாயு மூலை  வாயு புத்திரன் கோயில்
துவார பாலகர்கள் -வானர உத்தமர்கள்
அபய திருக்கரம் உடன் சேவை -கீர்த்தி மிக்கு -மூர்த்தி சிறியதானாலும்
பக் த கூட்டங்கள்
89 சர்க்கம் –
குகன் ஓடத்தில் அமர்த்தி அக்கரை கூடிப் போகிறான்
பரதன் தூங்க வில்லை –
பரத்வாஜர் ஆஸ்ரமம் போக விரைந்து
500 படகுகள் வால்மீகி
எண்ணிறந்த படகுகள் கம்பர்
இரவு சுகமாக கழிந்ததா கேள்வி கேட்டு -பெருமாள் மீண்டு வரும் வரை எங்கு சுகம்
ஸ்வஸ்திகம் படகு மேலே விதானம் வெண் பட்டு கம்பளம்
ரிஷிகள் சிலர் படகில்
சிலர் ஆகாச மார்க்கம் கங்கை கடக்க
படகுகள் சென்று சென்று திரும்பிற்றாம்
4 ஓடங்கள் கொண்டு 600 பெரும் அநு யாத்ரை -20 பேராக ஒரு தடவை -15 நிமிஷம் பிரயாணம்
உட்கார்ந்து ஸ்ரீ ராம சங்கீர்த்தனம் செய்து மகிழ்ந்தார்களாம்
குதிரைகள் யானைகள் ஒட்டகங்கள் கடக்க -கப்பம் கட்டி –
பிரயாக் ராஜ் அடைந்தார்கள் –
திர்வேணி சங்கமம் –
இத்தனை ராம பக்தர்கள் பிரயாணம் செய்ய பெற்ற பாக்கியம் கங்கை மகிழ
கரையில் ஒய்வு கொண்டு
பரதன் பரத ராஜர் பார்க்க போக
இனி கம்பர் அருள் வாக்கு பார்ப்போம்
பள்ளி படை படலம் இருந்து பார்ப்போம்
எண்ணை கொப்பரை
வசிஷ்டர் முனி தடுக்க
உன்னை மகன் அல்லன் -ஈம  சடங்கு செய்ய
சத்ருக்னன் கார்யம் முடிக்க
பிடிக்காத நாட்டை ஆள மகன் -அரசு செய்யவோ ஆனேன்
பிடித்த தர்மம் செய்ய முடியாமல்

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 13, 2013

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர்வள வொண்கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர்வண்ண வொண்தமிழ்கள் இவைஆ யிரத்துள் இப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.

    பொ-ரை :- மேகம் போன்ற நிறத்தையுடையவனும், தாமரை போன்ற விசாலமான திருக்கண்களையுடையவனுமான கண்ணபிரானை, ஏர்களையுடைய வளம்பொருந்திய அழகியனவான வயல்களால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட சீர்களோடும் வண்ணங்களோடும் கூடின தமிழ்ப்பாசுரங்கள் இவை ஆயிரத்துள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் அமிருதபானம் பண்ணுவாரைப் போன்று விருப்பத்துடன் சொல்லுகின்றவர்கள், பொலிந்து இறைவன் திருவடிகளை அடைவார்கள் என்றவாறு.

வி-கு :- கமலத் தடங் கண்ணனாகிய கண்ணபிரான் என்க. கண்ணபிரானைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தமிழ்கள் என்க. தமிழ்கள்-தமிழ்ப் பாசுரங்கள். இப்பத்தையும் உரைப்பார் பொலிந்து அடிக் கீழ்ப் புகுவார் என்க. அடிக் கீழ்-திருவடிகளிலே. கீ்ழ்: ஏழாம் வேற்றுமை உருபு. ஆர் வண்ணம்-பருகுகிற வண்ணம். ஆர்தல் – பருகுதல்; அல்லது, புசித்தல். வண்ணம்-வகை. “பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி” என்றார் நன்னூலார்.

ஈடு :- முடிவில், 1இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், தனக்குமேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.

கார்வண்ணன் – காளமேகம் போலே சிரமஹரமான வடிவையுடையவன். கண்ணபிரான் – கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வடிவை என்னை அநுபவிப்பித்தவன். கமலத்தடங்கண்ணன் தன்னை – 2மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருக்கண்களையுடையவன். அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. 3மேலே “நிறமுடை நால்தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி. ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சினபோது, சிரமஹரமான வடிவைக் காட்டித் தன்னை 4முழுக்கக் கொடுத்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.  ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-நிறைந்த ஏர்களையுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி. ‘வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது. சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் – 1சீரியதான பிரகாரத்தையுடைய அழகிய தமிழ் என்னுதல்; கவிக்கு உறுப்பான 2சீரையும் வண்ணத்தையுமுடைய அழகிய தமிழ் என்னுதல். ‘சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை. ஆர் வண்ணத்தால்-நிறைவாக என்னுதல். ஆர்தல்-பருகுதலாய், 3“தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது, மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி. பொலிந்தே அடிக்கீழ்ப் புகுவார் – 4நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே, எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப்பெறுவர்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக்கே இருக்கப்
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மைதனைப்
போற்றினனே மாறன் பொலிந்து.

நிரவதிக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பெற்று
கார்வண்ணன் ஸ்வாபம் நிறம் இரண்டும்
புண்டரீக தடாகம் -குளிர்ந்து செவ்விய திருக் கண்கள் வடிவு எல்லாம் கண்கள்
தேக சம்பந்தம் அஞ்சி இருந்த இவரை
வடிவை காட்டி திருக் கண்களால் நோக்கிய நிலை
கமலத் தடம் கண்

சீரிய -சீர் அசை -அழகிய
தொண்டருக்கு அமுது உண்ண அடி  – கீழ் பொலிந்தே புகுவார்
இங்கே பொலிந்து
எம்பெருமானாரை போலே
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ வையம் மன்னி வீற்று இருந்து பொலிந்து
பின்பு அங்கெ புகப் பெறுவார்

கால் அன்றிக்கே இருக்க
போயாயாக பேசும் புறம் உரை
மெய்யான பேற்றை மாறன் போற்றி
அருளினார் பொலிந்து

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 13, 2013

ஆனான் ஆளுடையான் என்றஃ தேகொண் டுகந்துவந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையு மாய் நர சிங்கமு மாய்க்குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கி யாம்இன்னம் கார்வண்ணனே.

பொ-ரை :- மீனாகியும் ஆமையுமாகியும் நரசிங்கமுமாகியும் குட்டையனாகியும் காட்டில் வசிக்கும் பன்றியுமாகியும் இன்னம் கற்கியும் ஆகின்ற கார்வண்ணன், என்னை அடிமைகொண்டவன் ஆனான் என்றேன்; என்ற அந்த வார்த்தையை மட்டும் கொண்டு மகிழ்ந்து வந்து தானாகவே இனிய திருவருளைச்செய்து எனக்கு எல்லா உறவு முறையும் தானே ஆனான் என்கிறார்.

வி-கு :- ‘என்ற அஃதே’ என்பது, ‘என்றவஃதே’ என்று வால் வேண்டும், ‘என்றஃதே’ என வந்தது, தொகுத்தல் விகாரம். வந்து செய்து முற்றவும் ஆனான் என்க. என்னை: வேற்றுமை மயக்கம். எனக்கு என்பது பொருள். மீன் – மச்சம், ஆமை – கூர்மம். குறள் – வாமனம். ஏனம் – வராகம். கற்கி – கற்கி அவதாரம்; கற்கி – குதிரை.

ஈடு :- பத்தாம்பாட்டு. 1சர்வேசுவரன் தன் கிருபையாலே ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹோபகாரத்தை நினைத்த க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.

ஆளுடையான் ஆனான்-என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒருவார்த்தை சொன்னேன். 2என்ற அஃதே கொண்டு-என்று கூறிய இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு. 3நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான், 4இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்.உகந்து – பலத்தை அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, 1சந்தோஷமும் தன்னதே ஆயிற்று. வந்து-2வருதலும் மாறாடிற்று. தானே இன் அருள்செய்து-3நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன்பேறாகத் திருவருளைச் செய்து. என்னை முற்றவும் தானானான்-4உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல். அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல். “ஆக முற்றும் அகத்து அடக்கி” என்றாரே அன்றோ முன்னரும்.

5மீனாய் – உலகில் உள்ள சாதிகட்கு எல்லாம் வேறுபட்டவனான தான், 6ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டுத்தண்ணீரில் சஞ்சரிக்கின்ற சாதியன் ஆனான். ஆமையும் ஆய் – 1எல்லாவற்றையும் தாங்கும் பொருட்டுக் கூர்மத்தின் வடிவையுடையவன் ஆனான். நரசிங்கமும் ஆய் – உடனே விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான். குறள் ஆய் – கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான். கான் ஆர் ஏனமும் ஆய் – 2பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான். 3“ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே, காடு அடங்க மயிற்கழுத்துச் சாயல் ஆக்கும்படியான வடிவையுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார். 1காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி. அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.

இன்னம் கற்கி ஆம் – 2மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது, என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?” என்று கொண்ட குதை மாறுகின் றிலன் என்றபடி. 3நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும். 4நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத்தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான். கார் வண்ணனே-நீர்கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன். வண்ணம் – ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.

சப்தாதி விஷயங்கள் பற்று அறுத்து
தானே இன் அருள் செய்து
ஆளுடையனாக ஆனான்
வார்த்தை கேட்டு உகந்து என்னை முற்றவும் தான் ஆனான்
என்னையே உண்ணும் சோறு
மீனாய் –கல்கியுமாய் ஆனான் எனக்காக செய்து அருளினான்
அடிமை கொள்வான் -வார்த்தை உக்தி மாத்ரமே கொண்டு
உக்தியும் அவனால் சிருஷ்டி முகத்தல் செய்த கிருஷி பலம்

அதையும் மறந்து
இந்த உக்தியை குவாலாகக் கொண்டு இன் அருள் பல அருளி

சந்தோஷமும்’ என்ற உம்மையாலே, கிருஷி தன்னதானது அன்றிக்கே
என்றபடி.

2. ‘வருதலும் மாறாடிற்று’ என்றது, சந்தோஷம் மாறாடினாற் போலே,
வருதலும் மாறாடிற்று என்றபடி.

3. ‘நான் வேண்டிக்கொள்ளாது இருக்க’ என்றது, “தானே” என்ற ஏகாரத்தின்
பொருள். “இன்னருள்” என்றதனை நோக்கித் ‘தன்பேறாக’ என்கிறார்.

4. “என்னை முற்றவும் தானானான்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருள், என்னை-என்னோடு, முற்றவும் –
உள்ளும்புறம்புமான எல்லாவிடத்திலும், தான் ஆனான் – தான் என்னோடு
கலந்தான் என்பது. இரண்டாவது, என்னை – எனக்கு, முற்றவும் –
எல்லாவிதமான இனிய பொருள்களும் தானானான் என்பது. மூன்றாவது,
என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களுமாகக் கொண்டான்
என்பது. ஈற்றிலே கூறிய பொருளுக்குப் பிரமாணம், “ஆக முற்றும்” என்பது.
இது, திருவாய்மொழி. 4. 3 : 3.

5. இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு தன்பேறாக விரும்பக் கூடுமோ?
என்ன, என்னைப் பெறுகைக்குப் பல காலம் எதிர் குழல் புக்குத்
திரிந்தவதனாதலின், கூடும் என்கிறார் “மீனாய்” என்று தொடங்கி.

6. ‘ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டு’ என்றது, மச்சாவதாரமாகிப்
பிரஹ்மாவுக்கு வேதத்தை உபதேசித்த தன்மையைத் தெரிவித்தபடி.

சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்தஉக்ர
பாழித் திகிரிப் படைஅரங் கேசர் படைப்பவன்தன்
ஊழிப் பொழுதொரு சேலாய் ஒருசெலு வுட்கரந்த
ஆழிப் பெரும்புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே.

என்றார் திவ்ய கவியும்.

அருமறையார் இருக்கெசுர் சா மத்தி னோடும்
அதர்வணமா கிய சதுர்வே தங்கள் தம்மைத்
திருடிஎடுத் துக்கொண்டே உததி சேரும்
தீயனுக்கா மச்சாவ தார மாய்நீ
ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கி யேவைத்து
உக்கிரத்தாற் சோமுகா சுரனைக் கொன்றிட்டு
இருளறவே விதி படைக்க அவ்வே தத்தை
இரங்கி அளித் தனைஅரியே! எம்பி ரானே!

  என்றார் பிறரும்.

1. திரிக்கின்ற பொற்குன் றழுந்தாமல் ஆமைத் திருவுருவாய்ப்
பரிக்கின்ற திற்பெரும் பாரமுண் டேபண்டு நான்மறைநூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தந்திரு மேனியின்மேல்
தரிக்கின் றது மக ரக் கட லாடைத் தராதலமே.

என்பது, திருவரங்கத்துமாலை. 24.

2. இங்கே,

“தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்”

என்ற பரிபாடல் பகுதியையும்,

‘இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண்
அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’
என்ற அதன் உரையையும் நினைவு கூர்க.

3. “சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
அத்ருஸ்யத ததாராமோ பாலசந்த்ர இவோதித:”

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

உகப்பும்
அவனுக்கு சேதன லாபம்
ஈஸ்வரனுக்கு -வந்து அதுவும் மாறாடிற்று
தன பேறாக கிருபை
பண்ணி முழுக்க கலந்து
சர்வ போக்யமும் ஆனான்
அகத்தில் தனது திரு மேனி -அடக்கி
மீன் -ஜல  சஞ்சரிக்கும் சஜாதீயன் ஞானம் கொடுக்க
சடக்கென விரோதி போக நர சிம்ஹன்
கீழ் குளம் புக்க வராஹ கோபாலர் போலே
சம்சாரம் எடுக்க
கான் காடு அலங்காரம்
சோபயம் தண்ட காரண்யம் -மயிலும் கழுத்து சாயல் போலே

சம்சாரம் அழி க்க கல்கியாக  போகிறான்
அனுக்ரகம் அடியாக அவதாரங்களுக்கு அவதி இல்லையே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 13, 2013

ஆவார் ஆர் துணை? என்று அலைநீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிற விக்கட லுள்நின்று நான்துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்துஅடி யேனொடும் ஆனானே.

பொ-ரை :- துணை ஆவார் யார்? என்று, அலைகளையுடைய நீரையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப்போன்று, பிறவியாகிய பெருங்கடலுள் நின்று நான் நடுங்கிக்கொண்டிருக்க, தெய்வத் தன்மை பொருந்திய திருமேனியோடும் திருச்சக்கரத்தோடும் திருச்சங்கினோடும் அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான் என்கிறார்.

வி-கு :- நாவாய் என்றது, நாவாயிலுள்ளவர்களைக் குறித்தது. ஆகுபெயர். நான் துளங்க அருள்செய்து ஆனான் என்க. ஆஆ என்பன: இரக்கத்தைக் காட்டுகின்ற குறிப்பு இடைச்சொல்.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 2பலசொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால் பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று – துணை ஆவார் யார்? என்று. அலை நீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க-கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க. ‘நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்தபோது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. 1அதற்குக் கருத்து, நோவுபடாநிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி. நடுங்குகையாவது, அசைந்து வருகை. அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகுபெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம். இவ்விதமான நடுக்கத்தில் சர்வேசுவரன் செய்தது என்? என்னில், தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே-2பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ்வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து, ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.

பின் இரண்டு அடிகட்கு, 3“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற்போலே என்னோடே வந்து கலந்தான்” என்றுஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். 1இதனை எம்பெருமானார் கேட்டருளி “இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது; ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச்செய்தார். இவர் தாம் 2பூவேளைக்காரரைப் போலே, இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ. 3“கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர், இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார். 4ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

சம்சாரத்தில் கிலேசம் அறிய வேண்டாத படி
அப்ராக்ருத ரத்திரு மேனி உடன் வந்து கலந்தான்
– நீர் கலங்கிய கடல்
நாவாய் மாதரம் நினைத்த உடனே
கரையில் உள்ளவன் சொல்லும் வார்த்தை சம்சாரத்தில் முளுகுவதை உணராமல் இருக்க

ஆடிக் கொண்டு வர நடுக்கம்
தேவு அழகு திவ்ய அப்ராக்ருத திவ்ய
சமஸ்தானம் திவ்ய ஆயுதங்கள் உடன்
ஐயோ ஐயோ கலந்து
ஆளவந்தார் -திரு சக்கரம் ஆழி பொருந்தியது போலே என்னுடன் பொருந்தினான்
அடியேனொடும் ஆனான்
எம்பெருமானார்
கூராழி வெண் சங்கு ஏந்தி ஆசைப்பட்ட படி வந்து கலந்தான்

அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும்
ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே, அப்ராகிருத
விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ
ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து. “அடியேனொடும்” என்ற
உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும்
சேர்ந்தான் என்றபடி. “கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.

’இதனை’ என்றது, “திருச்சக்கரம் சங்கினொடும்” என்றதனைத்
திருஷ்டாந்தமாக யோஜித்த ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகத்தைக் குறித்தபடி.
எம்பெருமானார் நிர்வாகத்தில் “அடியேனொடும்” என்ற உம்மை, இழிவு
சிறப்பு. “கூராராழி வெண்சங்கு” என்பது, திருவாய். 6. 9 : 1.

2. பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில்
குத்திக்கொண்டு முடியுமவர்கள். ‘இவை காணாத போது’ என்றது, இவற்றைக்
கைமேலே காணாத போது என்றபடி. “கைமேலே முடிவார்” என்பதற்குப்
போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.

3. “அருள்செய்து” என்ற இடத்தில் “விதி” என்ற சொல்லை அமைக்காததற்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கேசவன்தமர்’
என்று தொடங்கி. ‘கேசவன்தமர்… தொடங்கி’ என்றது, “கேசவன்தமர்” என்ற
திருப்பதிகத்திலுள்ள “மதுசூதனை” என்கிற திருப்பாசுரம் தொடங்கி
என்றபடி. ‘தொடங்கி’ என்றது, பின்னே வருகின்ற “என்றும் ஒன்றாகி”,
“கையார் சக்கரம்”, “அம்மான் ஆழிப்பிரான்” என்ற திருப்பாசுரங்களைத்
திருவுள்ளம்பற்றி, லோபத்தாலே-கிருபையை வெளியிட ஒண்ணாது என்ற
லோபத்தாலே.

4. “அருள்செய்து” என்னும் வினையெச்சம், “அடியேனொடும் ஆனான்”
என்பதில் “ஆனால்” என்ற வினையைக் கொண்டு முடிகிறது என்று
தோன்றுவதற்காக “அருள்செய்து அடியேனொடும் ஆனான்” என்று
மேலே அருளிச்செய்தார். இப்போது, “அடியேன்” என்ற பதத்திலே
நோக்காக, அதற்கு மறுதலைப் பொருளாயுள்ள ‘சேஷி’ என்ற சொல்லைக்
கொணர்ந்து கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபத்திற்கு’ என்று
தொடங்கி.

பாதுகாப்பாக இருக்கிறார்கள் -என்று ஆழ்வார் நினைக்க காட்டி அருளுகிறான்
பூ சூட -காணாவிடில் மெய் காவலர் அரசனுக்கு
அடியெனொடும் ஆனான்
கேசவ தமர் விதி =கிருபை
ஸ்பஷ்டமாக வெளி -இடாமல்
இதில் அருள் என்று வெளி இட்டார்
சேஷி யாகவே வந்து கலந்தான் முறை தப்பாமல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

April 13, 2013

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.

பொ-ரை :- மேன்மை பொருந்திய நித்தியசூரிகளாலும் நிலத்தேவர்களாகிய ஸ்ரீவைஷ்ணவர்களாலும் பொருந்தி வணங்கப்படுகின்ற திருமால் ஆனவர், இப்பொழுது அடியேன் மனத்திலே வந்து நிலை நின்றார்; இனிமேல், சேல் போன்ற கண்களையுடைய பெண்களும் பெரிய செல்வமும் சிறந்த புத்திரர்களும் மேலான தாயும் தகப்பனும் அவரே ஆவார் என்க.

வி-கு :- நிலத்தேவர்-திருமாலடியார். மன்னுதல்-நிலைபெறுதல். ‘சேல் ஏய்’ என்பதில் ‘ஏய்’ உவம உருபு.

ஈடு :- எட்டாம் பாட்டு. 2உபயவிபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல்விழுந்து என்னை விடாதே மனத்திலே புகுந்திருந்தான்; நானும், இனி நித்தியசூரிகளைப் போலே நித்திய சம்சாரத்தை விட்டு, அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

மேலாத் தேவர்களும் – நித்தியசூரிகளும். நிலத் தேவரும் – பூசுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களும். மேவித் தொழுஉம்மாலார் – 1இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில் உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன். வந்து – தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல் தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து. இன நாள் – இப்போது, என்றது, முக்கணத்தில் அறியாது இருக்க, இங்ஙனே விடிந்துகொண்டு நிற்கக் கண்டேன் என்றபடி. இப்படி வருகைக்குக் காரணம் என்? என்னில், அடியேன்-விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான். வந்து செய்தது என்? என்னில், மனத்தே மன்னினார் – 2“மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே, பரம யோகிகள் நெஞ்சிலும், திருப்பாற் கடலிலும், பெரிய பிராட்டியார் திருமுலைத்தடங்களிலும் இருக்கக்கூடிய அவன், நித்திய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலைபெற்று நின்றான்.

இனி, நீர் செய்யப் பார்த்தது என்? என்ன, இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ? என்கிறார் மேல்: சேல் ஏய் கண்ணியரும் – தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும். பெரும் செல்வமும்-நிரவதிகமான செல்வங்களும். நன்மக்களும் – குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும். 3மேலாத் தாய் தந்தையும் – தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம். இனி அவரே ஆவார்-இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். 4“தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும் ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம். 1“யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை; எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.

நித்ய சம்சாரி நிலைமை ஒழி ந்து நித்ய சூரிகள் போலே ஆனேன் என்கிறார்
நிலத்தேவர் -இங்கே இருந்து  மேவித் தொழும் மாலார்
அடியேன் மனத்தே மன்னிய பின்பு இனி நான் போக ஒட்டேன்
சேலேய் கண்ணியர் ஸ்திரீகள் கொடுக்கும் இன்பம் அவன் கொடுக்க
மேலாத் தாய் தந்தையர்
தந்தை இனி எல்லாம் அவன் தானே
இடக்கை வலக்கை அறியாதவரும் அடிமை செய்யும் படி ஆக்கிக் கொள்கிறான்
நித்ய சூரிகள் நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
அவன் -வந்து
தான் இருந்த இடம் நான் செல்ல ப்ராப்தமாய் இருக்க இப்பொழுது
விடிந்து கொண்டு நிற்க கண்டேன் -இந்த ஷணம் இங்கனே
வருகைக்கு அடி அடியேன்
அடியேன் ஆன படியால் தானே வந்தான்
மனத்துள்ளான்
மா கடல் நீர் உள்ளான்
மலராள் தனத்துள்ளான்
என்னுடைய மனசில்லே வந்தானே
இனி எனக்கு ஒரு செயல் உண்டோ
நோக்காலே தோற்கடிக்கும் ஸ்திரீகள் –மாதா பிதா இனி அவரே
கிலேசப்பட வேண்டாம் இவற்றால் இனி

அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே
பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”

இது, ஸ்ரீராமா. அயோத். 58 : 31.

நற்றா தை நீ தனிநா யகன் நீ வயிற்றிற்
பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது கா ணுதி இன் றெனக் கை மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.-  என்பது கம்ப ராமாயணம்.

இளைய பெருமாள் -எனக்கோ என்றால் அவர் தந்தை இல்லையே
பிராதா பந்து பார்த்தா பிதா எல்லாம் பெருமாள் தான்
அஹத்தை பிடித்த மகாராஜா வேண்டாம்
அஹங்காரம் எனது பிள்ளை என்று இருந்தவர் காஞ்சி சுவாமி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.