திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

1ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனிநம் கண்ணன் தோழீ! கடியனே?

பொ-ரை :- ஊரிலுள்ளவர்களால் பேசப்படுகின்ற அலராகிய எருவை இட்டு, தாயினால் பேசப்படுகின்ற நல்வார்த்தைகளாகிற தண்ணீரைப் பாய்ச்சி, அன்பாகிய நெல்லை விதைத்து அதனை முளைப்பித்த நெஞ்சமாகிய பெரிய வயலிலே, பொருந்திய பெரிய காதலைக் கடலைப் போலே உண்டாக்கிய மேகம் போன்ற திருமேனியையுடைய நம் கண்ணபிரான் கடியன் ஆவானோ? என்கிறாள்.

வி-கு :- முளைத்த – முளைப்பித்த. காதலைக் கடல் புரைய விளைவித்த கண்ணன் என்க. கடியனே என்ற ஏகாரம், கடியன் ஆகான் என்னும் பொருளையுடையது; எதிர்மறை.

ஈடு :- நாலாம் பாட்டு. 2“என்செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ஊரார் சொல்லும் பழியேயாய், அவன் தான் நமக்கு உடலானானோ அவர்கள் சொல்லும் பழி பொறுத்திருக்கைக்கு; ஆனபின்பு, அவன் கடியன்காண் என்றாள். ஏதேனும் ஒன்றைச் சொல்லியாகிலும் மீட்க வேணுமே அவளுக்கு, ‘அவன் அருள் அற்றவன்காண்’ என்ன; ‘கெடுவாய், நீ சொல்லும் வார்த்தையே இது,அவன் நமக்கு என்ன குறை செய்தான்’ என்ன, ஊரவர் பழி சொல்லிலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டான இடத்திலும் இந்நிலையில் வந்து முகங்காட்டிற்றிலன் கண்டாயே’ என்ன; அவன் இப்போது வந்து முகங்காட்டிற்றிலனாகிலும், தான் முகங்காட்டாத போதும் தன்னை ஒழிய நாம் மற்றொன்றால் பொருந்தாதபடி செய்தானே! அவன் செய்தபடி பொல்லாதோ என்கிறாள்.

ஊரவர் . . . . . . விளைவித்த கண்ணன் 1இவை எல்லாம் செய்தாய் நீயோ. ஊரவர் கவ்வை எருவாக – 2அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய அன்று தொடங்கி ஊரவர் பழி சொல்லத் தொடங்கினார்கள் காணும். தங்களை விட்டுப் போருவதற்கு முன்னே “விபீஷணஸ்து தர்மாத்மா” என்றார்களே அன்றோ; இவன் இக்குடியில் உள்ளார்படி அல்லன், இவனுக்கு வாசி உண்டு; அந்த வேறுபாட்டினைச்சொல்லுகிறது “தர்மாத்மா” என்று. 1“மறக்குடி அறஞ் செய்யக் கெடும்” என்றதே அன்றோ. “அரக்கர் செயலை உடையவன் அல்லன்” என்பது போன்று, ஜாதி மாத்திரமே இவன் பக்கல் எடுத்துக்கொள்ளலாவது. 2ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான். 3ஊரார் பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கைவாங்கி இருக்குங்காணும்; என்றது, இவள், ‘மறப்பேன்’ என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள் தன்மையிலே நிற்பர்கள் ஆயிற்று என்றபடி. அன்னை சொல் நீர்படுத்து-4தாயாரும் இதற்கு முன்பெல்லாம் ‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப்புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது. தாயாருடைய ஹித வசனத்தைநீராகப் பாய்ச்சி. 1எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே; ஊரார் ஒருகால் சொல்லிவிடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள். ஈர நெல் வித்தி – அன்பாகிற நெல்லை வித்தி. 2இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ்விஷயத்திலே ஆயிற்று; “முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்கிறபடியே, இளமைப் பருவம் தொடங்கி வேறு ஒன்றினையும் அறியாள். 3புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு. 4தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன்தானே ஆயிற்று. முளைத்த – 5எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;ஆதலின், “முளைத்த” என்கிறது. 1“சரீர ஆரோக்யம் செல்வம்” என்னும் பொருளைத் தொடக்கமாகவுடைய 2சுலோகத்திலே சுகத்திற்குச் சாதனங்களையும் சொல்லி, அவற்றுக்குப் பலமான சுகத்தையும் தனித்துச் சொல்லி, இரண்டற்கும் பகவான் திருவருள் வேணும் என்று சொல்லியிருக்கிறதே அன்றோ. 3சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல், அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

நெஞ்சப் பெருஞ் செய்யுள் – நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. 4கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள். ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி. பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி1ஆத்மாவோடு கட்டுப்பட்டிருக்கின்ற காதல் என்றபடி. 2இங்கே ‘கடல் புரைய’ என்றது, “கடலின் மிகப் பெரிதால்” என்னாநின்றது; 3அதனில் பெரிய என்னவா” என்று, ஈச்வரன்தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது; ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக்கொண்ட காரியம் இதுவாயிற்று. 4கைங்கர்யத்திற்கு முன்கணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது. 5அது உண்டாக வேணுமே அன்றோ அவ்வருகு போம் போது; 6அங்கே போன பின்னர் அங்குள்ளாரது ஒருபடியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே. 7முதலிலே மயர்வற மதிநலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று. 8அன்றிக்கே, பெரியபோரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது, ஊர்ப்பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி. 1அன்றிக்கே, காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல். நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில், 2“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது, அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே, அதிலே ஓர் அவஸ்தாவிசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

கார் அமர் மேனி – அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ; வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு. நம் கண்ணன் – வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று, அகவாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. 3கிருஷ்ணன் என்றால் ‘பெண்களுக்குச் சேஷபூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ. தோழி-நீ தான் யாராய் இவ்வார்த்தை சொல்லுகிறாய். இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய், ‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது! கடியனே – இவ்விஷயத்தில் இப்படிப் பொருந்தவிட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டாம்படி செய்தானாகில், 1இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மையுடையவனாகச் சொல்லப்பட்டவன், இன்று பழிக்கும்படி கடியன் ஆனானோ?

ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.-என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்குக.

ஊரார் சொல்லும் பழி -கைப்பட்டால் பொறுக்கலாம் -கடியன் கான் அவன் என்றாள்  தோழி
ஏதாவது சொல்லி இவளை மீள சொல்கிறாள் –
நாயகி கெடுவாய் நீ சொல்லும் வார்த்தையா –
இத்தசையில் முகம் காட்டாது கண்டாயா துடிப்புக்கு வந்து இருக்க வேண்டாமோ –
நாயகி -முகம் காட்டாத போதும் தன்னை ஒழிய வேறு ஒன்றில் போகாத ஈடுபாட வைத்தானே
இது அவன் செய்த உபகாரம் -கடியன் இல்லையே
காதல் பயிர் -வசவே ஏறு அன்னை சொல் நீர்
ஈர நெல் -நெஞ்சகம் நிலம் -வித்து முளைத்த
பேரமர் காதல் கடல் போல
காரமரர் மேனி இத்தையும் செய்ததே
கடியன் அல்லனே
ப்ராதி கூல்ய நிவ்ருத்தி வந்தது தொடக்கி ஊரார் கவ்வை உண்டே
இவர்கள் தான் ஈடுபட காரணம் –

விரையாக உருவகம் செய்த அன்பிற்குப் பின்னர் உண்டாகக் கூடிய
‘ஊரவர் பழியை’ விரைப்பதற்கு முன்னே இடக் கூடிய ‘எருவாக’ உருவகம்
செய்யலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அநுகூலமில்லாதவர்களை’ என்று தொடங்கி. என்றது, சேர்க்கை உண்டானது
கண்டு பழி சொல்லுகிறார்கள் அன்று, அவன் பக்கல் அத்வேஷம் உண்டானது
கொண்டே பழி சொல்லுகிறார்கள் என்றபடி. அத்வேஷம்-துவேஷம் இன்மை.
அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய மாத்திரத்தில் பழி சொன்னார்
உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தங்களை விட்டுப்
போருவதற்கு முன்னே’ என்று தொடங்கி.

“விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித:”

இது, ஸ்ரீராமா, ஆரண்ய, ஸ்ரீராமனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
இங்கு, “தர்மாத்மா” என்றது, கோறல் முதலிய தீயசெயல்கள் இல்லாமை
மாத்திரம் சொல்லுகிறது. “து” சப்தார்த்தம், ‘இவன் இக்குடியில் உள்ளார்படி
அல்லன்’ என்பது. “தர்மாத்மா’ என்பதற்கு, சநாதன தர்மமான பெருமாளை
ஆத்மாவாக உடையவன் என்றும் சொல்லுவார்கள்.

தங்கள் இடம் போவதருக்கு -முன்பே சூர்பணகை தண்டகாரண்யத்தில் சொல்லிய வார்த்தை –
சரணாகதி செய்வதற்கு முன்பே
ஆநுகூல்ய சங்கல்பம் வரும் முன்பே
ப்ராதி கூல்ய வர்ஜனம் மட்டுமே வந்த நிலை
ஞான பழம் பக்தன் கேலி செய்வது போலே
சொன்னது சூர்பணகை என்பதால் -வசவு கையால் ஆகாதவன் -கொண்டாட்டம் இல்லை
தர்மாத்மா நம்மை பொருது கொண்டாட்டம் போலே இருந்தாலும்
பழிக்கில் புகழ் போலே

“தர்மாத்மா” என்றால், அது பழியாகுமோ? எனின், அது ‘பழியேயாம்’
என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மறக்குடி’ என்று தொடங்கி.

  “மறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்
கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்
மட்டூண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டூண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு”

என்பது, சிலப். மேட்டுவ வரி.

‘மறக்குடி அறஞ் செய்யக் கெடும்’ என்பது வழக்கு.

அதர்ம ஜாதியில் அறம் செய்தவன் கெடும்
துணை நூல் மார்பில் அந்தணர் -உயர்ந்த கொண்டாட்டம் இல்லை இங்கும்
பண்டித சம தர்சன -ப்ராஹ்மனே -கேவல பிராமணர் இங்கே பாஷ்யம் ஜாதி மட்டுமே
அது போல் விபீஷணன் அரக்கர் ஜாதி மட்டுமே
வசவே ஸ்ரீ ராம பக்தி முத்த ஹேது
பிரேமதுக்கு எருவாக இவளுக்கு வசவே
பழி சொல்லாமல் இருந்தால் -கை வாங்கி இருக்க போயி காணும்
மறக்க ஒண்ணாத படி -நினைவு மூட்டி வசவை -பொழிய

அன்னை சொல் நீராக
தாயார் என் மகள் என்று இருக்க -வசவு கேட்டு -அறிந்து -சொல்லிக் கொண்டே இருக்க
எரு அடியில் இட்டால் போதுமே
நீர் மாறாமல் பாய்ச்ச வேண்டுமே
எப்போதும் ஒக்க ஹிதம் சொல்லா நிற்கும்
ஈர நெல் -சங்கம் ஈடுபாடு ஈர
சங்கம் உண்டு -நினைவு அறிந்த நாளில்
முலையோ முழு முற்றும் பொந்தில -பால்யா பிரவர்த்தி

பெருமாள் மலையே திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகம் –
இளைய பெருமாள் போலே தொட்டில் பருவம் தொடக்கி ஈடுபாடு
புறம் சங்கம் ஏற்பட்டு விரக்தி உண்டாகி பகவத் விஷயம் வர வேண்டியது இல்லை
மாதரார் முலை பேணினேன் -வாடினேன் -சொல்லி ஓடினேன் -நாடினேன் என்றார் கலியன்
இவருக்கு அப்படி இல்லையே
மூல ஸூக்ர்தமும் அவனே –
முளைக்கும் பொழுதும் -அவன் கிருபை வேண்டுமே
-எரு இட்டு நீறு பாய்ச்சினால் போதாதே
சரீரம் ஆரோக்கியம்

சாதனம் இருப்பினும் சாத்திய சித்தி அவன் அதீனம் என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘சரீர ஆரோக்கியம்’ என்று தொடங்கி.

2. “சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ்ஸு கம்
தேவி த்வத்திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன்
துதிப்பது. இது, பிராட்டி விஷயமாயினும், பிராட்டிக்கும் ஈச்வரனுக்கும்
உண்டான அபேதத்தைப் பற்ற, பிராட்டி விஷயமான இச்சுலோகம்
இவ்விடத்திற்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை என்க.

உன்னாலே கடாஷிக்க பெற்றவர்கள் அடைவார்கள் -இந்த்ரன் –
சரீரம் ஆரோக்கியம் விரோதிகள் ஜெயம் சுகம் -பலம் சுகம் கடைசியில் –
விளையும் பொழுது அனுக்ரஹம் வேண்டுமே
சிறியத்தை பெரியது நலியாமல் இருக்க –
ராஜ்ஜியம் minority -நலியாமல் –
கர்ம பலன் அனுபவிக்க -செய்தவனே புஜிக்க நிர்வாஹன்
பெரும் செய்யுள் -சம்ச்லேஷ விச்லேஷம் அகலம் நித்ய விபூதி போலே பெருக்கி –
தங்க முலாம் -பெருமாளுக்கு கவசம் -அடித்து அடித்து -பெரிசாக்கி –
கையால் தொடாமல் போடுவது
அடிக்க அடிக்க விரியுமே –
அணு ஸ்வரூபம் நெஞ்சை -பெரிசாக்கி
ஆசையான நெல்லை -விளை  நிலம் நெஞ்சு
பேரமர் காதல் –
வசவுக்கும்
கடல் புரைய
மேலே  கடலில் மிக பெரிய
பெரிய அவா -அதனில் பெரிய அவா -அளவுக்கு வளர்த்தது

“கடல் புரைய” என்ற இது, பின்னே வருகின்ற “கடலின் மிகப்
பெரிதால்” (7. 3 : 6.) என்பது போன்றவைகளோடு முரணாகாதோ?
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இங்கே “கடல் புரைய”
என்றது’ என்று தொடங்கி.

3. “அதனில் பெரிய என்னவா என்று” (திருவாய். 10. 10 : 10) என்றது,
“பொய்ந்நின்ற ஞானம்” (திருவிருத்தம், 1) என்ற திருப்பாசுரம் முதல்,
“முனியே! நான்முகனே!” (திருவாய். 10. 10 : 1) என்ற திருப்பாசுரம் முடிய,
மேலுக்கு மேல் பக்தி விசேஷமாக விளைகையாலே முரண் ஆகாது
என்றபடி. ‘இவ்வளவும்’ என்றது, “அதனிற் பெரிய என்னவா” என்னுமளவும்
என்றபடி. ‘இதுவாயிற்று’ என்றது, இந்தப் பக்தியையாயிற்று என்றபடி.

காது பெருக்குவது போலே -பெருமையாக அன்று கொண்டார்கள்
கைங்கர்யம் செய்ய -பூர்வ ப்ரீதி பூர்வகமாக உண்டாக்க
அனுபவிக்க வளர்த்து –
வியாபாரம் -வளர்க்க -தரம் -வேண்டும் –
பாத்ரம் நிறைய பாலை -காலி பாத்ரம் உள்ளே தானே சேர்க்க முடியும்
வஸ்து அங்கே  இல்லாமல் -தேவை இருக்க வேண்டும் –
செருப்பு வியாபாரம் -கிராமம்
முதல் போனவன் அங்கே யாரும் போட்டுக்கும் வழக்கம் இல்லை
அடுத்தவன் 20000 பேர் உள்ளார்கள் -விக்கலாம் என்றானாம் –
போஜனத்துக்கு சூத்து போலே சாத்திய பக்தி
கைங்கர்யம் அனுபவிக்க ஆசை வேண்டுமே
அதை வளர்த்த
பொய் நின்ற ஞானம் தொடங்கி அதனில் பெரிய அவா வரை –

மயர்வற மதி நலம் அருளி -இனி இனி இருபது கால் சொல்லும் அளவு ஆர்த்தி
அதிகார பூர்த்தி
பேரமர் காதல்
பெரியதாய் அமர்ந்த காதல்
தரமி அனுபந்தியான காதல்
தரமி ஆத்மாவில் அமர்ந்த
பெரிய யுத்தம் விளைக்கும்படி பூசல் தானே மடல் எடுப்பது
ஈரம் சங்கம் -சேர்த்தி
காதல் பக்தி -காமம்
சங்கம் ஈடுபாடு முற்றி காதல் ஆகும்
சங்கம் காமம் குரோதம் -படிக்கட்டுகள் அவஸ்தா விசேஷங்கள்

“பேரமர்காதல்” என்பதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. இங்கு, அமர் – போர்.
போரை விளைக்கின்ற காதல் என்றபடி. “காமவேள் மன்னும்” என்பது,-  பெரிய திருமடல். 43-44.

2. “த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் குரோத: அபிஜாயதே”-  என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.

ஈரம் தான் காதலாக மாறி -வெவ்வேற த்ரவ்யம்
காரமர் மேனி திரு மேனி பார்த்து தான் இவை உண்டான
வர்த்திக மேகம் வேண்டுமே எரு நீர் ப வடிவால் ஆயிற்று வர்ஷித்தது
வர்ஷுத மேஹம்
நம் கண்ணன் –
வடிவில் பச்சை கண்டு போவாள் இல்லையே
உள்ளுக்குள் கிருபை கிருஷ்ணன் -பெண்களுக்கு சேஷ பூதன்
வடிவையும் தந்து தன்னையும் தந்த கண்ணன்
பற்று மஞ்சள் பூசி

கோபிகள் குனிய சொல்லி பற்றுகிறதா பார்த்து -யமுனையில் –
ஒருவர் இலுசும் இடத்தில் ஒருவர் இழுசாதே -முதுகில் முழுவதும் மஞ்சள்
தோழி -நீயே மீட்க்க பார்த்தாலும் மீளாமல்
நீ தான் சேர்த்தாய்
இனி அவன் என் செய்வான் –
சேர்த்து வைத்து பிரிக்க பார்க்கிறாய்
நீர்மை உள்ளவன் சொல்லி தூண்டி
அல்லன் சொல்லி -கடியன் ஆகி விட்டானா

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: