திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடுஅன்றி ஓர்சொல்லில்லேன்
தீர்ந்த என்தோழி! என்செய்யும் ஊரவர் கவ்வையே?

பொ-ரை :- ஊர்ந்து வந்த சகடாசுரனை உதைத்துக் கொன்ற திருவடிகளையுடையவனும், சார்ந்து பூதனையின் முலையைச் சுவைத்த சிவந்த வாயினையுடையவனுமான கண்ணபிரான் என் நிறையைக் கொள்ளைகொண்டான்; சென்றும் வந்தும் அவன் சம்பந்தமான வார்த்தைகளை ஒழிய வேறு வார்த்தைகளையுடையேன் அல்லேன்; அறுதியையுடைய என் தோழீ! ஊராருடைய பழிச்சொல் என்ன காரியத்தைச் செய்யும் என்கிறாள்.

வி-கு :- தீர்ந்த-எல்லாவற்றையும் விட்டு நீங்கிய. “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். தோழி ஊரவர் கவ்வை என் செய்யும் என்க. ஈடு :- மூன்றாம் பாட்டு. 1“என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்; 2‘இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன், 3‘இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே நிற்கிறேன், 4‘இது பழி’ என்று சொல்லுகிறவர்கள்தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள், 5அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீதான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-ஊருகிற சகடம் அன்று; அது செய்வது எல்லாம் செய்து முடிந்தது; இவன்ஜீவன அதிருஷ்டத்தாலே தப்பின இத்தனை. 1இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு வளர்த்திப் போனாள் தாயார்; பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று. அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ. அதுவும் செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்; திருவடிகளினுடைய செயலாலே தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள். இவனை அடிகாத்துத் திரிந்ததித்தனை. முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத் திருவடிகளுக்கு இலக்காய்த் துகளாய்ப் போயின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள் 2“கிருஷ்ணன் முலைப்பாலை விரும்பினவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தான், அழுதான்” என்பது விஷ்ணு புராணம். 3நமக்குப் புகலான திருவடிகள்தாமே நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.

4
சகடாசுரனைக் கொன்ற இது, பருவம் நிரம்பிக் கம்சனைக் கொன்ற செயலோடு ஒக்கச் சொல்லலாம்படி
யன்றோ இதற்கு முன்பே பூதனையைக் கொன்ற செயல். சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்; பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ, ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ. பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் – பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால் தாய்மார்களுடைய முலைக்கீழே முட்டினவாறே பால் சுரக்கும், பின்னைப் பாலை உண்டு உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்வார்கள்; அப்படியே, அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு, உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது. 1“மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே” என்னக் கடவதன்றோ. 2“உயிரை வற்ற வாங்கி உண்டவாயான்” என்கிறபடியே, முலைப்பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.

1ஆக, இதற்கு முன்பெல்லாம், சகடாசுரனைக் கொன்றதும், பூதனையின் பாலைக் குடித்து அவளை அழித்ததும், ‘கம்சன் வரவிட்டனவற்றைப் போக்கினான்’ என்று இருந்தாள் அவள்; ‘எனக்குத் தன்பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ என்று இருக்கிறாளாயிற்று இவள். பருவம் நிரம்பிக் காதலனாய் அதில் வல்லவனான பின்பு செய்தவை அலவோ இவளுக்குத் தன்பக்கல் ஈடுபாடு மிகைக்குச் செய்தவையாவது, பால்யத்திலே செய்தவை இவளுக்கு உடலாம்படி எங்ஙனே? என்னில், 2இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தாபிரயுக்தம் என்கை. 3“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்று அவற்றைஒழியவேயும் பின்பு செய்த காரியங்கள் எல்லாம் தனக்காகச் செய்தான் என்று இருக்கிறாள் ஆயிற்று இவள்.

என்னை நிறை கொண்டான்1ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான். 2தன்னை ஆசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று; அவளை நற்கொலையாகக் கொன்றான், என்னை உயிர்க்கொலையாகக் கொன்றான். 3அவனுடைய செயல்களிலே ஒன்று குறைதல், நான் இழந்தவற்றிலே ஒன்று குறைய இழத்தல் செய்யில் அன்றோ நீ சொல்லுகிற வார்த்தையைக் கேட்க வல்லேனாவது. ஆகில், இத்தகைய நிலைகள் உளவானால் அவ்விஷயத்தை மறந்து உலக யாத்திரையிலே புகுந்து புறம்பு ஏதேனும் ஒன்றைக் கொண்டு போது போக்கிக்கொண்டு இருக்க வேண்டாவோ, எல்லாம் செய்தாலும் இழக்காலாவது ஒன்றோ நிறை? என்ன, 4பேர்ந்தும் பெயர்ந்தும்-போயும் வந்தும். என்றது, பிரிந்தும் கலந்தும் என்றபடி. அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன். 5மறக்கையாவது, நினைப்பனவற்றிலே ஒன்றாக வேணுமே நான் ஆறி இருக்கைக்கு,1“ஏது செய்தால் மறக்கேன்” என்னக்கடவதன்றோ. 2நாட்டார், தங்கள் தங்கள் காதலர் காதலிகளோடு கலந்த போது அவர்களை நினைத்து, பெயர இருந்தபோது அவர்களை மறந்திருப்பர்கள், கலந்து பிரிந்த விஷயத்தினுடைய தன்மையாலே; நான் பிரிந்த இது உலகத்தில் வேறுபட்ட பொருளாகையாலே, பிரிந்தபோது மறக்கலாய் இருந்தது இல்லை, இனிக்கூடித்தான் பார்ப்போமோ மறக்கலாமாகில் என்கிறாள். 3கூடினாலும் மறக்கலாமோ? என்னில், கூடின காலத்தில் மறப்பது செய்யலாமாயின் பிரிந்தபோது மறக்கலாவதென்று வியதிரேக உக்தி. அன்றிக்கே, அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன் என்பதற்கு, 4‘அவனை மற, அவனை நினை’ என்றே நீ சொல்லுவது,ஆகையாலே, அவனை ஒழிய எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள் என்னுதல். இவள் இப்படிச் சொன்னவாறே விலக்குகிற தோழி உகந்தாள், யாங்ஙனம்? எனின், ‘நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்டபாடும், அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும் மறவாதபடி உட்புகுந்தவாறும் என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு இவள் மனத்தினைக் கண்டாள் ‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.

தீ்ர்ந்த என் தோழி – தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன், உன் நினைவு இதுவாகப் பெறுவதே! 1நீ நீயேயாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள். 2“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே, ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி. 3“தோழிமாருடனே சுகமாக அருப்பாய்” என்கிற அவர்கள் படியாய் இருந்தாயே நீ என்கிறாள் என்றபடி. 1“நான் அங்கு ஸ்ரீ ராமபிரானுடைய திருமாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக்கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப்பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக்கூடியதாய் இருந்தது. 2அத் தோழி தானும், பிறர் கூறுகின்ற நல்வார்த்தைகளும் இவள் செவியிற்படும்படியோ இவள்தான் நின்ற நிலை’ என்று அறிகைக்காகச் சொன்னாளித்தனை அன்றோ. ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது என்ன, 3என் செய்யும் ஊரவர் கவ்வையே. 4ஆகில், உனக்கு வார்த்தை சொல்ல அடுப்பது இப்படியே காண், ‘நாட்டார் பழி சொல்லுவர்கள்’ என்று சொல்லாமல் ‘என் நினைவு இருந்தபடி இது’ என்று செல்லலாவதுண்டாகில் சொல்லிக்காணாய் என்கிறாள். ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள்.

எல்லாம் செய்தாலும் -லோகத்தார் பழி தவிர்க்க வேண்டும் -தோழி
இது பழி என்று சொல்பவர்கள்
நான் எங்கே நீ எங்கே அவன் எங்கே ஊரார் எங்கே
பழி அனைவரும் சொன்னாலும் கவலை இன்றி இருக்க செய்தான்
செஷ்டிதங்கள் -செய்தவன் என்னை நிறை கொண்டான்
அவனை தவிர வேறு சொல் இல்லையே
அவனை விட முடியாதபடி ஈடுபாடு செய்த பிரான்
ஊரார் பழி சொன்னாலும் விட முடியாத ஈடுபாடு கொடுத்து அருளி
அத்தா  அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்பார் லோகத்தார்

பழிக்கிற சமயத்திலே உபகாரங்களைச் சொல்லுதல், மிக்க ஈடுபாட்டினை
உண்டாக்குவதற்குக் காரணங்கள் என்கிறார் ‘இது பழி’ என்று தொடங்கி.
“ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம்பற்றி ‘ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்’
என்கிறார்.

முத்தா எங்கனம் உன்னை விடுவேன்
சகடம் உதித்த பாதத்தன் –
இரண்டு சரித்ரம் விஸ்தர வியாக்யானம்
கம்சன் விரோதி போக்கியது என்று நினைத்து இருந்தால் முன்பு பராங்குச நாயகி
இப்பொழுது தனது  பக்கம் பிராவண்யம் விளை க்க தான் -அடிமை கொள்ள
பால்யத்தில் செய்தவை இவளுக்கு -யவன பருவத்தில் இருப்பது -ஆகர்ஷகமாக இருப்பது எங்கனம்
சத்தா பிரவருதி பிராவண்யம் விளைப்பது அவனுக்கு -உடன் கூடவே இருக்கும் திருக்குணம்
உலகு இரந்த கள்வருக்கு -மதியினால் குறள் மாணாய் –
சாமர்த்தியமாக மாவலி இடம்
எம்பெருமானார் நிர்வாஹம் -பராங்குச நாயகியை ஈடுபடுத்த இப்படி செய்த புத்தி சாதுர்யம் –
சைசவத்தில் பண்ணி வைத்து அவள் உருகுவாள் என்று –
சத்தா ப்ரவ்ருத்தம் அவனுக்கு
என் நின்ற யோநியுமாய் பிறந்தது இவளுக்கு தான்
ஊர்ந்த சகடம் -ஊருகின்ற சகடம் இல்லை -நின்று இருக்கும் சகடம் தான் –
நடுவிலே தொட்டில் இட்டு போனாள் தாயார்
எமுனை நீராட போனாள்
காவல் காத்தாரே  களவு காண்பது போலே ஊர்ந்து வந்தது -ஆவேச அசுரர்கள்
உதைத்த பாதத்தன்
திருவடி மெய் காப்பாளர் போலே
கவனத்தாலே-அடி காத்து திரியும் -திருவடி
உதை த்த பாதத்தன் முலை பால் தாழ்ந்தது என்று சீறி உதைக்க –
அவனுக்கும் இதுவே ரஷணம்
சகடாசுரன் -பருவம் நிறைந்த என்று -எழு திங்களில் இது
அதுக்கும் முன்பு -பூதனை நிரசனம்
சகடம் பார்த்து காக்கலாம்
தய்வடிவில் வந்தததால் தடுக்க பிரசக்தி இல்லையே
ஈன்றாரே நஞ்சு இட்டது போலே
முகம் பார்த்து ஸ்மிதம் பண்ணும்
தாய் பார்த்து முலைக்கு கீழே முழுசி -உதை த்த பாதத்தன்-சுவைத்த செவ்வாயன் –

புன்முறுவல் செய்து முலை உண்டமைக்குப் பிரமாணம் காட்டுகிறார்
“மழலை மென்னகை” என்று தொடங்கி.

குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்!
கோவிந்தா! என்குடங் கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளம்சிறு தளிர்போல்
ஒருகை யால்ஒரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை இடைஇடை அருளா
வாயி லேமுலை இருக்கஎன் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணினை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே.-இது, பெருமாள் திருமொழி.

2. “சுவைத்த” என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “உயிரை” என்று தொடங்கி.

முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.-  இது, பெரிய திருமொழி.

ஒரே கார்யத்தால் இரண்டு பேர் முடிய போதனை பராங்குச நாயகி
அவளை நல்ல கொலை செய்து
என்னை உயிர் கொலை செய்தானே
அவனுடைய வியாபாரங்கள் செய்யாமல் இருந்தாலோ
நான் மறந்து லோக யாத்ரையில் இருக்கவோ
துக்கம் தவிர வஸ்துவை மறந்து வேற விஷயம் கவனம் செலுத்தி –
புறம்பு ஏதேனும் ஓன்று பொழுது போக்க
எல்லாம் செய்தாலும் நிறை காக்க
பேர்ந்தும்
மறைக்கை யாவது -இன்னொன்றை நினைப்பதே அதை மறப்பது -தன்னடையே போகும்
ஏது செய்தால் மறப்பேன்
எத்தை செய்தாலும் அவன் நினைவு
நினைக்க வழி சொலும்
திருமலை ஆண்டான் -மறக்க வழி சொல்லி கொடு -பின்பு சொல்கிறேன் எல்லாவற்றிலும் அந்தர்யாமி நியாமகன்
எது செய்தால் மறப்பேன் -திருமங்கை ஆழ்வார்

“ஏது செய்தால் மறக்கேன்” என்று. இது, பெரிய திருமொழி. 9. 3 : 3.

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்றதன்
கருத்து, பிரிந்தபோதொடு கலந்தபோதொடு வாசி அற அவனை ஒழிய, ஒரு
வார்த்தை எனக்கு இல்லை என்பது. இதனால் பலித்த பொருள், புணர்ச்சிக்
காலத்தும் பிரிவுக் காலத்தும் அவனை மறக்கப் போகாது என்பது.

5. மறக்கும்படி சொல்லுகிற தோழியைப் பார்த்து, ‘பிரிவுக்காலத்தில்
மறக்கப்போகாது’ என்னும் இத்துணையே சொல்ல அமைந்திருக்க,
“பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்று

கூடினால் மறக்கும் படி இருந்தால் -பிரிந்து இருந்து மறக்க முடியும்
பேர்ந்து போந்தும் வந்தும் அவனை தவிர வேறு சொல் இல்லை
அவனை மற -நீ சொல்லி அவனை நினைவு படுத்த
அவனை தவிர வேறு சொல் இல்லை
தோழி சேர்பித்த தானே பிரிக்க முயன்றாலும் பிரியாமல் உறுதிகண்டு  ஹர்ஷிக்க

“பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்”
என்பதற்கு, விலக்ஷணமான பொருளாகையாலே புணர்ச்சிக்குரிய காலத்திற்
போலவே, பிரிவுக்குரிய காலத்திலும் மறக்க ஒண்ணாது என்று மேலே ஒரு
கருத்து அருளிச்செய்து, புணர்ச்சிக்குரிய காலத்தோடு பிரிவுக்குரிய
காலத்தோடு வாசி அற நீ அவனை நினைப்பூட்டுகின்றவளாயிருக்கையாலும்
‘அவனை மறக்கப்போகாது’ என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அவனை மற’ என்று தொடங்கி. என்றது, கலவியில் அவனை நினை,
பிரிவில் ‘அவனை மற’ என்றே அன்றோ

ரிஷிகள் கொடுத்த வாக்கை விடேன் -பெருமாள் வார்த்தை கேட்டு பிராட்டி ஹர்ஷித்தது போலே
உன்னை விட்டாலும் இளைய பெருமாளையும் விட்டாலும் –
அது போலே தோழியும் ஹர்ஷிக்க –
பார்த்தவள் -தீர்ந்த என் தோழி -என்று -நெஞ்சை பார்த்து
தாய்மார் சொன்ன ஹித வார்த்தை போல் இல்லை
நீ  நீ தான்

முன்பு வெறுத்தவள், பின்பு ஆநுகூல்யத்தை அறிந்து கொண்டாடுவதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘இராவணன் வரவிட்ட ஆள்’ என்று தொடங்கி.
பிராட்டி கொண்டாடின படியைக் காட்டுகிறார் ‘பெருமாளால்
அநுப்பப்பட்டவனாயிருப்பதனாலே’ என்று தொடங்கி.

“அர்ஹஸேச கபிசிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும்
யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண விதிதாத்மநா”

என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 10. பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.

மேற்காட்டிய சுலோகத்தில், “மயாஸம் அபிபாஷிதும், அர்ஹஸே”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் “தோழிமாருடனே”என்று தொடங்கி. என்றது,

பெருமாள், ‘தோழிமாரோடே இரு’ என்று அருளிச்செய்த தோழிமாரைப் போலே இருந்தாய் நீ என்றபடி. அவர்கள்படி – தோழிமார்படி.

1. “சம்அபிபாஷிதும்” என்றதிலேயுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் “நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் –
என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.

“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் சர்வகாம சம்ருத்திநீ”

என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.

சங்கை முதலில்
சந்தோசம் இப்பொழுது
பிராட்டி -திருவடி இடம் பெருமாள் உடன் சந்தோஷமாக இருந்தேன் கூடி களித்ததை
சொல்லி -அது போலே இங்கும் –
உஊரார் பழி தடுக்க தான் சொன்னேன்
என் செய்யும் ஊரார் கவ்வை
நாட்டார் வார்த்தை நீ சொல்லாதே
உனது நிலைமையை சொல்லு
மனசில் கொண்டாடுவதை சொல்லு என்கிறாள்
எனக்கே அற்று தீர்ந்த தோழி நீ

அந்தரங்கமான நீ நிஷேதிக்க கடவையோ
உனது நெஞ்சில் குறை இல்லையே என்கிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: