திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

என்செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனிநம்மை
என்செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன்செய்ய மாமை இழந்து மேனி மெலிவெய்தி
என்செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.

பொ-ரை :- தோழீ! என்னுடைய செந்தாமரைக் கண்ணன், என்னுடைய நிறையைக் கொண்டான்; முன்பு இருந்த சிறந்த மாமை நிறமும் நீங்கிச் சரீரமும் மெலிவை அடைந்து என்னுடைய செவ்வாயும் கருங்கண்களும் பசலை நிறத்தை அடைந்தன; ஆதலால், இனி ஊரவர் கூறுகின்ற பழிச்சொற்கள் நம்மை என் செய்யும்? என்கிறாள்.

வி-கு :- இழக்க எய்த பயப்பு ஊர்ந்த என்க. பயப்பு – பசப்பு. ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் என்க. மாமை-அழகு. நிற விசேடமுமாம்.

ஈடு :- 2மேல் திருவாய்மொழியில் நின்றும் இத்திருவாய்மொழிக்குப் புகுருகைக்கு வழி இரண்டாகஇருக்கும். “சீலம் இல்லாச் சிறியன்” என்ற திருவாய் மொழியிலே கூப்பிட்டார்; கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாமையாலே, அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவையும் 1ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எனக்கு வேண்டா என்றார்; இப்படி ஒழியப் புறம்பே பேறு இழவுமாய் இருக்கிற சம்சாரிகள்படியைக் கண்டு வெறுத்தார்; ‘ஈச்வரனும் கைவாங்கிய இவர்களை நான் திருத்துவேன்’ என்று, பகவானுடைய பரத்துவத்தை எடுத்துச் சொல்லித் திருத்தினார்; ‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற எனக்கு இவ்வாசி உண்டாவதே!’ என்று பகவானுடைய கிருபையைக் கொண்டாடினார்; தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்தார்; தொடங்கின காரியம் முடிந்தவாறே பழைய இழவே தலை எடுத்து, தம் ஆற்றாமையாலே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல். அன்றிக்கே, மேலே, “மலியும் சுடர் ஒளி மூர்த்தி” என்று வடிவழகை அநுசந்தித்தார், பின்பு புறக்கலவியை விரும்பினார், அப்போதே பெறாமையாலே, 2வழி அல்லா வழியே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.

மாசறு சோதி . . . . . . என் செய்யுமே – 3என் செய்யவாய் மாசறு சோதி மணிக்குன்றத்தை என்று சேர்த்துக்கொள்வது, ‘இனி, விசேஷணந்தோறும் ஒரு பொருள் சொல்லவேணும்’ என்னுமதனாலே சொன்னோம்” என்று அருளிச்செய்வர்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1ஊரவர் சொல்லும் பழி நம்மை என் செய்யப் புகுகிறது என்று நின்றாள் மேல்; இது என்ன வார்த்தை சொன்னாய் ஆனாய், எல்லாம் செய்தாலும் பழி நீக்கப்பட வேண்டுங்காண் என்ன, நான் ‘பழி நீக்கப்பட வேண்டா’ என்றேன் அல்லேன், பழி நீக்கப்படுதற்கு உரிய எல்லை கடந்தது காண் என்கிறேன் என்கிறாள்.

‘ஊரவர் கவ்வை 2இனி நம்மை என் செய்யும் தோழீ’ என்று, தன் வடிவழகைக் காட்டுகிறாள். இம்முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில் மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன. என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக. 3தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட, உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள். தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக்கடவதன்றோ. 1“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி; ‘இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவேயாயிற்று வாசி. 2தலைவியைக் காட்டிலும் தோழிக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்; அதற்குக் காரணம், தலைவனைப் பிரிகையால் உண்டான ஆற்றாமை மாத்திரமே தலைவிக்கு உள்ளது, தலைவி நோவுபடக் காண்கையாலும், தலைவியும் தலைவனுமாகச் சேர இருக்குமது காணப் பெறாமையாலும் தோழிக்கு இரட்டித்திருக்குமே அன்றோ.

3‘பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளையபெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க, அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வைவர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று; “அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசாமகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும், பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வளவன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ. ‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று. அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசாமகோசரம் என்றபடி. 4“நம் இருவர்க்கும்சுகதுக்கங்கள் ஒன்றே” என்கிறபடியே, தனக்கும் தோழிக்கும் உள்ள சம்பந்தத்தை முன்னிட்டுக்கொண்டு ‘தோழி இனி நம்மை’ என்கிறாள். என்றது, ‘பழி’ என்று நீக்குதற்குப் பார்க்கிறவள் தன்னையும் பழி சொல்லுகிறாள் அன்றோ, “நம்மிருவர்க்கும் சுகதுக்கங்கள் ஒன்றே” என்றிருக்குமது அவளுக்கும் உண்டு ஆகையாலே.

பழிக்கு அஞ்ச வேண்டாமல் இருப்பதற்கு நமக்கு இப்போது வந்தது என்? என்ன, என்செய்யத் தாமரைக்கண்ணன் என்னை நிறை கொண்டான் – 1‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற அகவாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கி ‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து இத்தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளைகொண்டு போனான். என்றது, எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி. 2சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக்கடவதன்றோ. 3என்னை நிறை கொண்டான் – அவன் புருஷோத்தமனாய் இருக்கும் தன்மைக்குத் தாமரைக் கண்ணனாய் இருத்தல் எல்லையாய் இருக்குமாறு போல ஆயிற்று இவள் பெண் தன்மைக்கு நிறை எல்லையாய் இருக்கும்படி. அவன் புருஷோத்தமன் ஆனாற் போலே ஆயிற்று, இவள் பெண்ணுக்குள்ளே உத்தமியாய் இருக்கும்படி. 1பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையாநிற்கச் செய்தேயும் ‘என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி; ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள். 2நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப்போம் இதற்கு மேற்படச் செய்யலாவது இல்லை என்றாயிற்று, இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானந்தான் இருப்பது; ஆதலின், ‘என்னை நிறைகொண்டான்’ என்கிறாள். என்றது, கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி. 3தன்னுடைய ஆண் தன்மை முழுதையும் அழிய மாறி என்னுடையபெண் தன்மையைக் கொண்டான் என்பாள் ‘என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது, தான் தோற்றுப் போலே காணும் இவளைத் தோற்பித்தது என்றபடி. 1என்னை நிறை கொண்டான்’ என்று இவள்தான் தோழிக்குச் சொல்லும்படி அன்றோ பண்ணிற்று. நிறையாவது, அடக்கம். அகவாயில் ஓடுகிற இது பிறர்க்குத் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கை அன்றோ. நான் எனக்கு ஓடுகிற நிலையை உனக்கு வாய்விட்டுச் சொல்லும்படி அன்றோ செய்தது. 2தோழி தானும் இவள் வடிவிலே வேறுபாடு கொண்டு “உற்ற நன்னோய் இது தேறினோம்” என்று இவள் அகப்பட்டபடி அறியுமித்தனை போக்கி, இவள்தான் தோழிக்கும் வாய்விட்டுச் சொல்லாதபடி அன்றோ பெண்மை தான் இருப்பது. 3“என்னைப் பார்த்து ஒன்றும் வார்த்தை சொல்லவில்லை” என்னக் கடவதன்றோ. ‘நிறை கொண்டான்’ என்கிற இதனை விரித்துப் பேசுகிறாள் மேல்:

உன்னிடத்தில் அவன் கொண்டவைதாம் யாவை? என்ன, ‘நிறைகொண்டான்’ என்ற சொல்லுக்குள்அடங்கி கிடக்குமவற்றை எண்ணுகிறாள்: ‘மடல் ஊர்வேன்’ என்கிற என் வாயை நீ புதைத்தால், என் வடிவு மடல் எடுக்கிற இதனை என் கொண்டு மறைப்பாய் என்கிறாள். முன் செய்ய மாமை இழந்து-இதற்கு மூன்று விதமாகப் பொருள் அருளிச்செய்வர்: தன்பக்கல் கைவைப்பதற்கு முன்னே, அதாவது, பிறந்தபோதே உண்டான நிறத்தை இழந்து என்னுதல். அன்றிக்கே, மற்றையவற்றை இழப்பதற்கு முன்னே நிறத்தை இழந்து என்னுதல்; 1முன்பு தோற்றினவற்றைப் பறித்துக் கொண்டு, பின்பே அன்றோ கிழிச்சீரையை அறுத்துக்கொள்வது; அவன் தானும் முந்துற விரும்பியது இந்நிறத்தைக் காணும். அன்றிக்கே, முன்னே காணக் காண நிறத்தை இழந்து என்னுதல். இப்பாசுரத்தில் ‘செய்ய மாமை’ என்கிறாள்; 2முன்னே “மணிமாமை” என்கிறாள்; இவ்விரண்டாலும் சிவப்பும் கறுப்பும் அல்ல இங்குச் சொல்லுகிறது; இரண்டிலும் ஒருசேர ஏறின பிரயோஜனம், ‘விரும்பத் தக்க தன்மை’ என்பதேயாகும். அவனோடு கலந்து பெற்ற நிறத்தைத் தனமாக நினைத்திருந்தபடியால் ‘மாமை இழந்து’ என்கிறாள். மேனி மெலிவு எய்தி-நீர்ப்பண்டம் போலே காணக்காணச் சரீரம் சருகு ஆகாநின்றதாயிற்று. 3ஆஸ்ரயம் உண்டானால் அன்றோ தொங்குவது; ஆதலால், இனி அவன் வந்தாலும் நிறம் வந்தாலும் தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை என்பதைத் தெரிவித்தபடி. என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த – 4அவயவியாகத் தேடுகிறேனோ, அவயவங்கள் தோறும் வருகிறபடி பாராயோ? என்கிறாள். இப்போது1“செய்ய வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத் தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்; அவன் வந்து கிட்டினபோது அவனுடைய ஸ்ரீ சகஸ்ரநாமங்களுக்கு விஷயம் இவையே அன்றோ, அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது, தான் இழந்த முறை சொல்லாநிற்கச் செய்தே, அவன் உகந்த முறை தோன்றாநின்றது காணும் இவளுக்கு என்றபடி. 2அவன், தனக்கு இவற்றை எல்லாச் செல்வங்களுமாக நினைத்திருந்தபடியால், இவளும் ‘உன்னது என்னது’ என்று ஒருதலை பற்றுகிறாள் ‘என்வாய்’ என்று. 3ஆத்ம ஸ்வரூபமும் பிராப்பிய அந்தர்க்கதமாய் அன்றோ உத்தேஸ்யமாவது, இங்ஙன் அன்றாகில், “மம என்ற இரண்டு எழுத்துகள் நாசத்திற்குக் காரணமாகின்றன. ந-மம என்ற மூன்று எழுத்துகள் மோக்ஷ பதவிக்குக் காரணமாகின்றன” என்கிற வழியாலே பற்றுகிறாள் அன்றே என்றபடி. 4அவன் வாய்புகு சோறுபறியுண்ணாநின்றது என்பாள் “செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள். “செங்கனிவாய் நுகர்ந்தான்”, “மண நோக்கம் உண்டான்” என்னக் கடவதன்றோ. செய்யவாயும் கருங்கண்ணும் பயப்புஊர்ந்த-1கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய் இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமேயாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று. 2விஷம் பரந்தாற்போலே காணக் காண வண்டல் இட்டு வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று.

இரண்டாம் -பாட்டு
முதல் பாட்டில் வியாக்யானம் ஆன பின்பு பிரவேசம் முதல் பாட்டு சுருக்கம் –
இரண்டு நிர்வாஹம்

ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எனக்கு வேண்டா’ என்றது,
“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில். ‘வெறுத்தார்’ என்றது,
“நண்ணாதார்” என்ற திருவாய் மொழியில். ‘திருத்தினார்’ என்றது, “ஒன்றும்
தேவும்” என்ற திருவாய் மொழியில். ‘கிருபையைக் கொண்டாடினார்’ என்றது,
“கையார் சக்கரத்து” என்ற திருவாய்மொழியில். ‘மங்களாசாசனம் செய்தார்’
என்றது, “பொலிக பொலிக” என்ற திருவாய்மொழியில். தொடங்கின காரியம்
– சம்சாரிகளைத் திருத்துதல். ‘பழைய இழவே’ என்றது, “ஏறாளும்
இறையோனும்” என்ற திருவாய்மொழியில் கூறிய இழவு.

மடல் எடுத்தாலும் கொள்ள வேண்டும்படி வடிவு அழகு கொண்டவன் –
பழி கை விட வேண்டாம் -எல்லை கடந்து நிலைமை தாண்டி போனேன் என்கிறார் –
இனி நம்மை -உடம்பை பார்-பூர்ணம் அபகரித்து கொண்டான்
மாமை இழந்தேன்
கண் வாய் பயலை நோய் பரவ –உடம்பு காட்டிக் கொடுக்க –
இனி -நீயே பார் -பஸ்ய சரீராணி போலே காட்டுகிறாள் –
இனிக்கு அர்த்தமாக மேலே பாட்டில் –
என் செய்ய தாமரை கண்ணன் நினைத்து பயலை அடைந்து –
இனி நம்மை -என்னை சொல்லாமல் -தோழியையும் சேர்த்து –
வாயாலே தோழி தடுத்தாலும் உடம்பு வெளுப்
எனக்கு அவன் வேண்டும்
இவளுக்கு அவன் வேண்டும்
இரண்டும் உண்டே
சேர்த்து பெறாத காணப் பெறாத துக்கம் உண்டே தோழிக்கு

தோழிமார்க்கு ஆற்றாமை இரட்டித்திருப்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்
‘பெருமாளும்’ என்று தொடங்கி.

“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :
ததாஸீத் நிஷ்பிரப: அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்”

என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 36. இச்சுலோகத்திற்குப் பொருள், ‘பெருமாளும்’
என்று தொடங்குவது. மாறிற்றாயிற்று – இங்கும் உண்டாயிற்று என்றபடி.
சுலோகத்திலுள்ள “அத்யர்த்தம்” என்ற சொல்லின் பொருளை விளக்குகிறார்
‘அர்த்தம்’ என்று தொடங்கி.

சேர்த்தியும் சேவிக்க வேண்டும்
இவள் துக்கம் கழிய வேண்டும்
அதனால் துக்கம் இரட்டித்து இருக்கும் –
இளைய பெருமாள் சொல்ல -சுக்ரீவர் கேட்டு -சீதை பிராட்டி இடம் திருவடி அருளி –
பிரிந்த வார்த்தை காதால் கேட்டு -அந்த சமயத்தில் -தேஜஸ் குறைந்து –
சூர்யன் ராகுவால் பீடிகப்பட்டது போலே
சூர்யா புத்திரன் தானே சுக்ரீவன்
அது போலே தோழி உடம்பு வெளுக்க –
நம்மை -இவர் பெருமாள் ஆற்றாமை கண்டும்
பிராட்டி சேர்த்தி இல்லாமையாலும் அத்யர்த்தம் -இரட்டிப்பு
வார்த்தையால் வர்ணிக்க முடியாத துக்கம் -அத்யர்தம்

இருக்காமல் இருப்பதே பழி
செய்ய தாமரைக் கண்ணன் பூர்த்தியை அபகரித்துக் கொண்டான்

“என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்”
என்பதற்கு, ‘தான் என்னுடையவன்’ என்னும் ஆகாரம் தோற்றும்படி
கண்களாலே குளிர நோக்கி என்னுடைய எல்லாச் சொத்துகளையும்
கொள்ளை கொண்டான் என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி
அருளிச்செய்கிறார் ‘என்னுடைய’ என்று தொடங்கி. இப்பொருளில், “நிறை”
என்ற சொல்லுக்கு, ‘நிறைய’ என்றாய், எல்லாவற்றையும் என்பது பொருள்.
“செய்யத் தாமரைக் கண்ணன்” என்றது, இப்போது, வாத்சல்ய குணத்திலே
நோக்கு. உரி கூறை கொண்டு – கூறையை உரிஞ்சிக்கொண்டு. கூறை –
புடைவை.

ஏவம் துக்கம் சுகம் -தோழிக்கும் நாயகிக்கும் ஒன்றே தானே –
பிராப்தி முன்னிட்டு கொண்டு -ஆறி இருக்க வேண்டும் -தோழி சொன்னாலும்
பழிக்கு அஞ்ச வேண்டாம் –
உடல் இருவருக்கும் வெளுத்து
என்னை நிறை கொண்டான் –
ஆத்மா ஆத்மநீயங்கள் நீ இட்ட வழக்கு -அவன் சொல்லி –
எத்தால் கவர்ந்து கொண்டான்
தாமரைக் கண்ணீன் அழகைக் காட்டி -ஹிருதயத்தில் உள்ளவை கண்ணில் காட்டி
வாத்சல்யத்தால் குதறி சிவந்து
என்னையும் என் உடைமையும் கொண்டான்
உபகரிப்பாரைப் போலே வந்து அனைத்தையும் கொண்டு போனான் –
கூட படுத்து துணை இருப்பாரைப் போலே -வஸ்த்ரம் முழுவதும் அபகரித்து கொண்டு போனான்
இருக்க நோக்கி -வஸ்திரம் சேர்த்து கொண்டு போக
கண்களால் சொன் -னது ஓன்று -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -செயல் வேற
நிறை கொண்டான்
ஸ்த்ரீத்வதுக்கு நிறை தானே லஷணம்
புண்டரீகாட்ஷத்வம் அவனுக்கு போலே -அத்தை காட்டி இத்தை கொண்டு போனான்
செய்ய தாமரை கண்ணன் போறாதோ என் -பிரிவிலும் விட முடியாத
மடலூர்ந்த பொழுதும் என் என்றே இருப்பவள்
என்னை நிறை கொண்டான் -ஸ்த்ரீத்வ அபிமானம் -நூறாயிரம் பேயரையும் விளாக்கொலை செய்யும்
பும்ஸ்வத்வம் அழிய மாறி ஸ்த்ரீத்வம் கொண்டு போனான் –
தான் தோற்று போலே பாவனை காட்டி இவளை தோற்பித்து விட்டான்
என்னை நிறை கொண்டான் -கடலை தரை கண்டான் போலே

ஸ்த்ரீத்வம் கடல் போலே –
யாராலும் கவர முடியாத -நூறாயிரம் புருஷோதமனாலும் கவர முடியாதே
என்னை நிறை கொண்டான் தோழிக்கு சொல்லும்படி ஆனதே
கண்ணபுரம் தொழும் காரிகை -பெண்மையும் உரைக்கின்றாள்
தன்னுடைய உண்மையும் உரைக்கின்றாள்
பாட திருத்தம் –
பெண்மை என் தன்னுடைய உண்மை உரைக்கின்றாள்-காஞ்சி ஸ்வாமி காட்டி அருளி
என்ன ஸ்த்ரீத்வம் –
அது போல் இங்கே தோழிக்கு சொல்லும்படி -வாய் விட்டு சொல்ல மாட்டாதவள் அறியாதவள் –
தோழி தானும் இவள் வடிவு கண்டு -உற்ற நல் நோய் என்று சொல்லும்படி –
நிறை போர்த்தி துக்கம் எவ்வளவு இருந்தாலும் சொல்ல மாட்டாள்
அடையாளம் கண்டு தோழி உரைக்கும் படி தானே இருக்கும் –
அப்படி இருப்பவள் வாய் விட்டு சொல்லும்படி
வடிவில் வேறுபாடு கண்டு உற்ற நல்ல நோய் நாம் தேறினோம்
ஆனால் இவள் என்னை நிறை கொண்டால் வாய் விட்டு சொல்லலாம்படி
சுமந்த்ரன் -விடை கொண்டு -பெருமாள் -சீதை வார்த்தை சொல்லாமல் -நிறை அங்கே  காட்டி
அடக்கம் -அகவாயில் ஓடுவது பிறருக்கு தெரியாமல் இருப்பது தான் நிறை
இனி -நிறை கொண்டான் வியாக்யானம் மேலே –
மாமை இழந்து –
மேனி நலிவி எய்து
செய்ய வாயும் பசப்பு எய்த
மடலூர்வன் வாயால் சொல்லாமல் இருந்தாலும் -வடிவு மடல் எடுக்க இருக்க என்ன செய்வேன்
உடல் இளைத்து -நாலு பேர் அறிந்து அவனை இகழ்வார்களே
முன் செய்ய மாமை -இழந்து –
முன்னே -தனது பக்கல் அவன் கை வைக்கும் முன்பு
காலத்தால் அன்றிக்கே
அல்லாத இழவுக்கு முன்னே இழந்தது
அன்றிக்கே
முன்பு தொற்றினவற்றை பறித்து கொண்டு பின்பு கிளிச்சீரை பறிப்பது போலே
சீரை பட்டு-சீனாவில் பட்டு -துணி வைக்கும் பட்டு துணி

இழந்து -பும்ஸாம் -கலந்தபடியால் வந்த சிவந்த நிறம் தனம் கிடைத்தால் போலே
மேனி மெலிவு -இனி அவனே வந்தாலும் ஆஸ்ரயம் இல்லையே
நீர்பண்டம் போலே -பார்த்து கொண்டு இருக்கும் பொழுது உருகி சருகாக போனதே –
அவன் வந்து கிட்டின பொழுது -இவள் ஒரு அவயவம் வர்ணித்து
கண் ஞானம்
முலை பக்தி
இடை வைராக்கியம்
கொண்டாடினான் –
என்பதால் இவளுக்கு -ஸ்திரீ சஹஸ்ரநாமம் -அவன் சொல்லி கொண்டாட -அத்தை திருப்பி சொல்கிறாள்
தான் இழந்த வற்றை சொல்லா நிற்க செய்தே உகந்த க்ரமத்தில் அருளுகிறாள்
உன்னது என்னது -ஆனதால்
ப்ராப்ய அந்தர்கம் -இவை
ஜீவாத்மா -கண்கள் ச்வந்து திருவாய்மொழி -ஹேயத்தை நினைத்து அல்லாவி உள் கலந்தார் –
அவருக்கு உணர்த்த -இவன் -ஜீவாத்மா ஸ்வரூபம் நன்றாக காட்டிக் கொடுக்க
ஸ்வ ஸ்வரூபம் பிரபா அந்தர்கதமாக உரிய பொருள் தானே –
என்னுடைய செய்யவே கரிய கண் கொண்டாட இது தான் காரணம்
கரிய செம்மை நிறம் காட்ட இல்லை ஸ்பர்ஹநீயம் -என்பதால்
குரு மா மணியாய் இணையும் வஸ்து கௌஸ்துபம் போலே உயர்ந்த வஸ்து

அவன் தனக்கு சர்வ ஸ்வயமாக நினைத்து இருப்பதால்
இவளும் இவற்றை பற்றுகிறாள் –
அவனுடைய வாய் புகு சோறு பறிபோகிறதே  –
மறையவர் வேள்வியில் வகுத்த ஹவுஸ் போலே இவை –
நாயகி செவ்வாயை முகந்தான் –
கடலும் மலையும் குடி இருக்கும் இடம் எல்லாம் பிரளயத்தில் போவது போலே எங்கும் ஒக்க
வெளுப்பாக -விஷம் ஏறுவது -போலே கண்ணால் பார்க்கும் பொழுதே பரவி
இனி ஊரவர் கவ்வை என் செய்யும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: