திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மூன்றாம் திருவாய்மொழி – “மாசறு சோதி”

முன்னுரை

    ஈடு :- 1“மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று, வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்; இப்படி அநுசந்தித்து, சுலபனுமாய் ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுமாய் அவை இல்லையேயாகிலும் விட ஒண்ணாத வடிவழகையுமுடையனான இவனோடு மெய்யுறு புணர்ச்சியை விரும்பி அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட, அவன் அகப்படாமல் கைகழிந்து நிற்க, அதனாலே கலங்கி ஒரு பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத்திருவாய்மொழியில். 2மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம். 3‘அநீதி செய்யாதே கொள்ளுங்கோள்’ என்று பிறரைத் திருத்தினவர், ‘நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை, ‘பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

1அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ என்று திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக் கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து, தாம் பகவத் விஷயத்திலே ஈடுபாடுடையவராய் இருக்குமாறுபோலே அவர்கள் இதர விஷயங்களிலே ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு, அவர்கள் கேட்டிற்கு நொந்து அவர்களுக்குப் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துக் கூறித் திருத்தி, ‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே சர்வேச்வரன்!’ என்று அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து, தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து, இப்படிப் பிறருடைய நலத்துக்கு வேண்டுவன எல்லாம்செய்து 1கைஒழிந்த பின்பு பழைய தம் இழவே தலை எடுத்து, ‘வழி அல்லா வழியேயாகிலும் கிட்டுமத்தனை’ என்னும்படியான விடாய் பிறந்து மடல் எடுக்கையிலே ஒருப்பட்டுப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல். 2ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று உண்டானால் அவ்விஷயங்கள் கிடையாவிட்டால் ‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான மனோவேகம் பிறந்தால், பின்பு அவ்விஷயங்கள் இருந்த இடங்களிலே புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே, ‘அத்தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு, தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

3‘அபிமத விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர் சொல்லிப் போருவது. அதாவது, 4“ஒத்த சீலம் வயதுஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே, சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று  இருப்பவர்களான இருவர், அவர்களில் 1‘அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய இலக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய், ‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய இலக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய், இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தையுடையவர்களுமாய் இருக்க; இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட, இவளும் ‘பூக்கொய்து விளையாட’ என்று உத்தியானத்திற்குப் புறப்பட, அவ்விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க இருவர்க்கும் 2கண் கலவி உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே பிரிவோடே முடிவுற்றுப் பிரிய, குணாதிகர்களாகையாலே இருவர்க்கும் 1ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க, இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

2மடல் ஊர்தல் என்பதுதான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி, வைத்த கண் வாங்காதே அவ்வுருவைப் பார்த்துக்கொண்டு பனைமடலைக் குதிரையாகக் கொண்டு, தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற, ஊணும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளிநீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலைமயிரை விரித்துக்கொண்டு திரியா நின்றால், இத்தீயச்செயலைக் கண்ட அரசர் முதலானோர் ‘கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத்துணை அன்பு இருப்பதே!’ என்று அவர்கள் அவனை அத்தலைவியோடு கூட்டக் கூடுதல், இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள3 உறவினர்களும் கைவிட, அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல், தலைவியானவள் குணங்களால் சிறந்தவளாயிருப்பாளேயாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லையாகில், முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

இது தன்னை, 4“கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று உயிரின் அளவல்லாதபடி ஆற்றாமை கரைபுரண்டாலும் பெண்கள் மடல் ஊரக்கடவர்கள் அல்லர்; நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின்மேல் வைத்துச் சொல்லுவான், பின் ‘நான்வரை பாயப் புகாநின்றேன், மடல் எடுக்கப் புகாநின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான், அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக்கடவன்; இத்தனை அல்லது, 1பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை கட்டினார்கள் தமிழர்கள்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, பிராட்டி தான் மடல் எடுப்பதாக இராநின்றது; தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக்கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்,2 அவர்கள் ஒரு தலையிலேதான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே; அவ்வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்? 3இதற்கு ஒரு மரியாதை கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை. அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க வேணும், இன்றேல் வேலியடைத்தால் நிற்கவேணும்; ஆகையால், அவர்கள் அன்பின் தன்மையை அறிந்திலர்களாமித்தனை. 1வரம்பு அழியவாகிலும் முகங்காட்டி வைத்துக்கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே; 2இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக்கொண்டார்கள் இத்தனையே.

இனி, 3இவர்தாம், “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியில், நாம் அவனோடே கலத்தலாகிற இது அவனுக்குத் தாழ்வினை விளைவிப்பதாம், நம் பேற்றுக்காகஅவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதிற்காட்டில் நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது; இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவும், ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நசித்துப்போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது; ஆக, இவர்தம் ஸ்வரூபத்தோடும் சேராது. ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. ஆனால், இது இருந்தபடி என்? என்னில், இவற்றிற்கெல்லாம் சமாதானம், பட்டர் திருமடல் வியாக்கியானம் அருளிச்செய்கிறபோது அருளிச்செய்தருளினார்; இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

1ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள் ஜனக குலத்தில் பிறந்தவர்களாயுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ; அக்குடியிலே பிறந்த பிராட்டியானவள், 2“எந்தப் பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ அந்தப் பிராட்டியை இப்பொழுது இராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே, பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில் 3“மன்னன் இராமன்பின் வைதேகி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே, அவர் பின்னே புறப்பட்டுப்போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது; 4மேலும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்அநுஷ்டிக்கையாலே இதுதானே பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ. 1“பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன் எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே, சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக்கடவதன்றோ. 2ஆனாலும், காமம் விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில், அவை நிலைநில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயேயன்றோ விலக்கப்பட்டிருக்கிறது. பகவத் விஷயத்தில் காமத்தை “தியானம் செய்யத்தக்கவன்” 3என்கிறபடியே, விதியாநின்றதே அன்றோ. வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது. 4“வளவேழ் உலகு”என்ற திருவாய்மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர், அத்தலையை அழித்து முகங் காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா; அங்கு அகல நினைத்ததும் அத்தலைக்கு வரும் தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ; தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது, ‘தன்னை ஆசைப்பட்டார் பெறாமலே முடிய, முகங்காட்டாமலே இருந்தான்’ என்கிற தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே. 1அங்கு அகன்றது ஞான காரியம்; இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம். 2இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லையாகில், அத்தலையில் வைலக்ஷண்யத்துக்குத் தாழ்வாம்; இவர்தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்குத் தாழ்வாம். 3அவன் அருளியதும் மதி நலமே அன்றோ, அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம். 4மதியின் காரியம் அது; பக்தியின் காரியம் இது.1இனித் தான் சித்தோபாயத்தை மேற்கொண்டு அது பலியாவிட்டால் ஸ்வரூபத்தை வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ; 2அவன் ஸ்வரூபம் வேறுபட்டால் இத்தலை சொல்ல வேண்டாவே அன்றோ. 3இத்தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில் அவனுக்கு அசக்தி இல்லையாகில் நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ. 4இவர்தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டுவது இல்லையே யன்றோ குணாதிக விஷயம் ஆகையாலே. ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும்படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது. 1கடலைப் பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக்கடல் தானாக வந்து முகங்காட்டாமையாலே நாலு மூன்று அம்பை விட, உடம்பிலே பாதி வெந்த பின்பேயன்றோ வந்து முகங்காட்டியது; இங்கு அது வேண்டாமையாலே, 2“ஓ இலக்குமணா! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒப்பான பாணங்களைக் கொண்டு வா, சமுத்திரத்தை வற்றச்செய்யப் போகிறேன், வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று, ‘மடல் ஊர்வேன்’ என்று அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிறார். 3தம்முடைய ஸ்வரூபத்தில் கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும் அவனுடைய குணஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும் இவர்க்கு.

4“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று முடித்துக்கொள்வாய் பார்த்தஇடத்தில், அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது; இனி அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்கப் பார்க்கிறார்; 1உண்டாம் போதும் அத்தலையாலே உண்டாய், இல்லையாம் போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது. 2“உயிரினாற் குறை இலம்” என்றார் அங்கு; இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார். “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்; இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார். 3“இராவணன் மாயா சிரசைக் காட்டினபோது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று, தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ்வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று பட்டரைச் சிலர் கேட்க, ‘ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல; அத்தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று; அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச்செய்தார்.

4இப்படி அத்தலையை அழித்தாகிலும் முகங்காட்டுவித்துக்கொள்ள வேண்டும்படி தமக்குப் பிறந்த நிலைவிசேடத்தை, எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே இவள் தரித்திருந்த இருப்பைக் கண்டு, தோழியானவள், ‘முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள், அவன் வாராதிருக்க இவளுக்கு இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாகவேணும்’ என்று பார்த்து, ‘நீ செய்ய நினைக்கிற இது, 1உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன் மதிப்புக்கும் உன் பிறப்புக்கும் உன்னுடைய மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன, ‘என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் மடல் எடுக்கை தவிரேன்’ என்று துணிந்து துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக் கேட்டு அஞ்சி, சர்வேச்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை வந்து முகங்காட்டித் தானும் சத்தைபெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக்கட்டுகிறது.

2இவர் மடலிலே துணிந்தால் கடுக வந்து முகங்காட்டிப் பிழைக்கில் பிழைக்குமித்தனை போக்கி, இல்லையாகில் சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு; பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ அவனுக்கு.1இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரேயாகிலும், அடையத்தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு உள்ளனவாய் இருப்பன பரபக்தி பரஞான பரமபக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே. 2இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, பிரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக்கூடாதே, 3பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்; பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும். பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும். பக்திமானுக்குப் பலத்திலே

சிரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலாயிருக்கும். பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒருகாலும் தவிராததாயிருக்கும்.

பொலிக பொலிக பொலிக -மங்களா சாசனம் செய்த அநந்தரம்
நாயகி நிலை அடைந்து -மடலூர்ந்தாலும் அவனை பெறுவேன் -திருத் துழாய் சூடுவோம் என்கிறார் –
ஆற்றாமை வெளி இடுகிறார் இதில் –
சங்கதி -இரண்டு வித நிர்வாஹம்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி -வடிவு அழகையும் -மாயப்பிரான் செஷ்டிதங்கள்
குணங்கள் கண்ணன் -சௌலப்யம் அனுசந்தித்து
சுலபன் -ஆஸ்ரித செஷ்டிதங்கள்  குணங்கள் இல்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து -அணைக்க கோலி கை நீட்ட –
அகப்படாதே கை கழிந்து நிற்க
கலங்கி -மடல் எடுக்க தொடங்குகிறார்
உன்னுடைய அபசரிதங்களை வெளியில் சொல்லுவேன் -என்று படமூட்டி
மடலூர்வன் திருமங்கை ஆழ்வார்
ஊராது ஒழியேன் சிறிய திருமடலில்
பெரிய திருமடலில் -துன்னு சகடம் -பாண்டவ தூதன் -பெண் கொலை மா முநிக்காக
குடமாடி -கூத்தடித்த சரித்ரம் -சௌலப்யம் சொல்லும் சரித்ரங்கள் –
சொல்லுவேன் என்று பயமுறுத்தி -அலறி வந்து எம்பெருமான் அனுக்ரஹம் செய்து அருளினான்
போர் சுட்டு பொறி உண்பது போலே -செயல் பெரிசு பலன் -கொஞ்சம் -இது தான் மடல் –
அநீதி செய்யாதே பிறரை சொல்லி -ஆழ்வார் -பிறர் திருத்த பார்த்தவர் இதில் ஈடுபட்டு
பகவத் ப்ராவண்யத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு கிடைக்காத இன்னாப்பால் இப்படி ஆழ்வார் நிலை –

“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியிலிருந்து இயைபு
அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, வேறும் ஒரு வகையில் இயைபு அருளிச்
செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, “மலியும் சுடரொளி
மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன் தன்னை” என்ற மூன்று விசேஷணங்களை
“மாசறுசோதி, ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை” என்ற பெயர்களாலே
எடுத்து அருளிச்செய்த காரணத்தாலே, மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்தார் மேல்.
இத்திருவாய்மொழியில் வருகின்ற “நாடி, எனை நாளையம்”, “முன் செய்ய
மாமை இழந்து,” என்பன போன்ற பகுதிகளைக் கடாக்ஷித்து “ஏறாளும்
இறையோனும்” என்ற திருவாய்மொழியிலிருந்து இயைபு அருளிச்செய்கிறார்
எனக் கொள்க. ‘தம்மோடு ஒக்க’ என்று தொடங்கும் வாக்கியம், “நண்ணாதார்
முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியின் கருத்து. ‘அவர்களுக்குப்
பகவானுடைய’ என்று தொடங்கும் வாக்கியம், “ஒன்றும் தேவும்” என்ற
திருவாய்மொழியின் கருத்து. ‘இவர்களிலே’ என்று தொடங்கும் வாக்கியம்,
“கையார் சக்கரத்து” என்ற திருவாய்மொழியின் கருத்து. ‘தாம் திருத்தத்
திருந்தின’ என்று தொடங்கும் வாக்கியம். “பொலிக பொலிக” என்ற
திருவாய்மொழியின் கருத்து. கோள்’ என்று பிறரைத் திருத்தினவர், ‘நீர்
செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று பிறர் திருத்தவும்
திருந்தாதபடி ஆனார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத்
திருத்துகிற இவரை, ‘பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப்
பார்த்தால் திருந்தாரே அன்றோ.

நானும் என்னுடைய உடைமையும் வேண்டாம் என்றார் அவனுக்கு உபயோகம் இன்றி
கூப்பிட்டவர் -தம்முடன் கூப்பிட ஆட்கள் தேடி -லோகம் தாம் பகவத் விஷயத்தில் இருப்பது போலே இதர விஷயத்தில்
பெற்றால் ஹர்ஷம் கிடைக்காவிடில் துன்பம் –
அநர்த்தம் -நண்ணாதார் முறுவலிப்ப இவை என்ன உலகு இயற்க்கை திருத்த பார்க்கிறார்
என்னை இங்கே வைக்காதே கூவிக் கொள் என்றார்
சப்தாதி விஷயங்கள் தண்மையும் -பகவத் விஷயம் உயர்த்தி சொல்லி –
இவர்களில் ஒருவரான தான் திருத்தும்படி செய்த உபகாரத்வம் -அனுசந்தித்து –

கையார் சக்கரத்தில் அருளி –
தாம் திருத்த திருந்திய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் செய்து
பர ஹிதம் முடிந்த பின்பு -ஏறாளும் இறையோனை நிகை ஒழிந்த பின்பு – திருத்துகிற காரியம் முடிந்த பின்பு. ‘பழைய தம்
இழவே’ என்றது, “ஏறாளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியின்
இழவே என்றபடி. ‘வழி அல்லா வழியே யாகிலும்’ என்றது, ஈச்வரனாலேயே
பெறுகை அன்றிக்கே, வேறு சாதனங்களைச் செய்தேயாகிலும் பெறுதலைக்
குறித்தபடி.

இப்படி இரண்டு நிர்வாஹம்

விஷய சங்கம் -ஏற்பட்டு -அடைய த்வரை பிறந்து -சாகாசம் செய்தாகிலும் -பெற நினைப்பாரைப் போலே –
அபிமத விஷயத்தை பிரிந்து ஆற்ற மாட்டாமல் மடல் எடுப்பார்களே

துல்யசீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜனலக்ஷணாம்
ராகவ: அர்கதி வைதேஹீம் தம்சேயம் அசிதேக்ஷணா”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5.

அத்தலைக்கு பழி யை விளைத்தாகிலும் தான் பெற நினைக்கும் -சாகாசம்
இவ்வளவாக பிறந்த தசை வெறி -அநயாபதேசத்தால் -பிராட்டி வார்த்தையாக அருளுகிறார்
மடல் -தமிழர் சொல்வது ஓன்று உண்டு –
சீலம் வயசாலும் வடிவு அழகு சம்பத்து அபிஜனத்தாலும் -ஒத்த -நாயகன் நாயகி –
அறிவு -நிறைவு -பூர்த்தி ஆராயும் சாமர்த்தியம் -கை விடா உறுதி கடைப்படி -நாயக லஷனங்கள்
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -பிரிந்தால் பசலை -நாயகி லஷணம்
யாத்ருச்சிமாக -வேட்டைக்கு இவனும் -பூ கொய்ய -இவளும் செல்ல –
தெய்வ சங்கல்பத்தால் கண்டு –
சம்ச்லேஷம் பிரிவுடன் முடிய –
குணாதிக விஷயம் ஆகையாலே ஆற்றாமை இரண்டு தலைக்கும் விஞ்சி
ஒரு தலையை விட்டு ஒருவர் பிரியாமை இருப்பது முடியாமல் –
அழித்தாகிலும் சேர நினைப்பார்
-அரும்பதம்
ஜீவாத்மா எம்பெருமான்
அபஹத பாபமா குணங்கள் உண்டே
சர்வஞ்ஞன் பூரணன் அவன் அச்சுதன்
ஜீவாத்மா சேஷ பூதன் நாண் மடம் முதலான உண்டே
வேட்டை அவதாரம்
பூ கொய்த -லீலா விபூதி இருக்க
தெய்வ யோகம் கடாஷம்
சம்யோகம் சிலர் அடியாக வராமல் இயற்கையாக
ஸ்வா தந்த்ர்யம் உண்டே கை கழுவ விட்டு போக
ஆற்றாமை விஞ்சி இருவருக்கும்
குணாதிக விஷயம் தானே
தன்னுடைய ஸ்வரூபம் அழிந்தாகிலும்
அவனுக்கும் குணம் இல்லை -அழிக்க பார்க்கிறார்
ஸு பிரவர்த்தி இவர் ஸ்வரூபம் அழிவது
விஷய வை லஷண்யம் இப்படி பண்ண வைத்தது

மடல் -பெயர்
வச்த்ரத்தில் சித்திரம் எழுதுவார் படம் சமஸ்க்ருதம்
வாய்த்த கண் வாங்காதே பார்த்து கொண்டு இருந்து
பனை மடலை குதிரை போலே செய்து –
போக உபகரணம் –பிரிவில் அக்நி போலே தோற்ற –
தழலாம் -சாந்தமும் பூவும் போலே –

கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலேறார் மைந்தர்மேல் என்ப – மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேற்கொண்ட போழ்து–என்பது, நச்சினார்க்கினியர் மேற்கோள்.

“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.” என்பது, திருக்குறள்.

பந்துகள் அரசர்கள் கண்டு -ஈடுபாடு மிக்கு இப்படி தூங்காமல் பைத்தியம் போல் இருக்க
அவர்கள் சேர்த்து வைப்பார்கள் –
இதுவே ஹேதுவாக பந்துக்களும் கை விட –
ஈட்டி ஈட்டி சேர்ந்து -ஒருவருக்கு ஒருவர் ஆதாரமாக இருக்க -அவனே
கூடி தோழிமார் கூடுதல்
பழிக்கு அஞ்சி கூடுதல்
இவை ஒன்றும் இல்லாவிடில் -முடிந்து பிழைத்தல் இறுதியில்
சாகச செயல் தான் மடல் எடுப்பது –

ஸ்திரீகள் மடலூரக் கூடாது தமிழர் –

ஆயின், பெண் மடல் உலகத்தில் இல்லையே? என்ன, ‘வரம்பு அழியவாகிலும்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். வரம்பாவது-
பண்மைக்குரிய குணங்கள். ‘விஷயம் புறம்பில்லையே’ என்றவிடத்தில்,
‘ஈச்வரனைப் போல’ என்பது எஞ்சி நிற்கிறது. ஈச்வரனை ஒழியப் புறம்பு
இல்லை என்றபடி. ஆகையாலே, இவள் பகவத் விஷயத்தில் மடல்
ஊரத் தட்டு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

“மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
கடவுளர் தலைவ ராய்வருங் காலே”

என்பது, பன்னிருபாட்டியல்.

இச்சூத்திரத்தால், கடவுளரைத் தலைவராக வைத்துப் பாடுமிடத்து
மகளிரும் மடல் ஏறுவர் என்பது பெறப்படுதல் காணலாகும்.

ஆழ்வாரை பெற எம்பெருமான் தானே மடல் எடுக்க வேண்டும் –
வடநெறியே வேண்டுதும் -திருமங்கை ஆழ்வார் –
ஒரு தலையில் இசைந்தது ஆற்றாமை தானே காரணம்
இரண்டு தலைக்கும் ஒத்த பின்பு -ஒரு தலையில் ஒதுக்குவான் என்ன –
அடக்கம் -படி தாண்டா பத்னி -மடல் எடுப்பது அடக்கம் மீறி செய்யும் செயல் -என்பதால்
ஆற்றாமை வந்த பின்பு –
ஸ்திரீகள் மடல் எடுக்கும் அளவு அழகான புருஷன் லோகத்தில் இல்லையே –
எம்பெருமான் புருஷோத்தமன் என்பதால்
வரம்பு அழிந்து மடல் எடுக்கும் படி புறம்பே இல்லையே –

ஆசைக்கு வரம்பு கட்ட முடியுமா
சமுத்ரம் வேலி கட்டி கரை கட்ட முடியுமா
கடல் அன்ன காமம் வரம்பு கட்ட முடியாது
ஆழ்வார் -நான் அவனுடன் கலப்பது அவத்யை வள ஏழு உலகில்
அகன்று முடிவது நல்லது அத்தலைக்கு அதிசயம் என்று இருந்தார்
இப்பொழுது கலக்க மடல் எடுக்கலாமா
அவனுக்கு உறுப்பு இல்லாத ஆத்மா ஆத்மீயங்கள் வேண்டாம் என்றவர்
சேர ஆசை படலாமா –
பீத ராகம் -உள்ளவர் ஸ்வரூபம் உணர்ந்தவர் செய்யும் கார்யம் இல்லையே

மேலே, மடல் எடுத்தல் அந்யாபதேச சமாதிக்குச் சேராது என்று சங்கித்துப்
பரிகரித்து, ஸ்வாபதேசத்திலும் இது சேராது என்று மூன்று வகையாகச்
சங்கித்துப் பரிஹரிக்கிறார். ‘இவர்தாம்’ என்றது முதல், ‘அவனும்
அவனுடைமையும் வேண்டா என்கிறார்’ (பக். 78.) என்றது முடிய.

‘இவர்தாம்’ என்றது முதல், ‘ஆக, இவர் தம் ஸ்வரூபத்தோடும் சேராது’
என்றது முடிய, முதல் சங்கை. ‘ஆசையற்றவர்களாயிருப்பவர்களும் செய்வது
ஒன்று அன்று’ என்பது, இரண்டாவது சங்கை. ‘ஞானாதிகராய் இருப்பவர்களும்
செய்வது ஒன்று அன்று’ என்பது, மூன்றாவது சங்கை.

‘ஸ்வரூபத்தோடும் சேராது’ என்றது, “வளவேழுலகின்” என்ற
திருவாய்மொழியாலும், “ஏறாளு மிறையோனும்” என்ற திருவாய் மொழியாலும்
சொன்ன சேஷத்வ பாரதந்திரியத்தோடு கூடின ஸ்வரூபத்தோடும் சேராது
என்றபடி. ஞானாதிகர்-சிஷ்டர். ஆனால்-இப்படியானால், இங்குத்தைக்கும்
இவ்விடத்திற்கும். வேண்டுவன-வேண்டும் பரிஹாரங்கள்.

ஞானதிகர் பீத ராக்கர் ஸ்வரூபம் உணர்ந்தவர் செய்ய கொடாதே
பட்டர் திருமடல் வியாக்யானம் அருளி
சமாதானம் பிராட்டியே மடல் எடுக்க -அதி பிரவ்ருத்தி தான் மடல் -எடுப்பது
வாசவத்தை பார்த்தா யமன் -கூட்டி போக -உடன் சென்று -யாரும் வைய வில்லை புகழ்ந்தார்களே
பெரிய திரு மடல் -வைதேகி -வனத்துக்கு -நடந்து -பார்க்கும் படியாக நடப்பதே மடல் –
த்ரஷ்டும் ந சக்யா -என்று இருந்தவள்
சிஷ்டாசாரம் இப்படி உண்டே

ஆழ்வாரே ச்ரேஷ்டர்
இவர் செய்ததே சிஷ்டாசாரம்
இதுவே பிரமாணம்

“யாநசக்யா புரா த்ருஷ்டும் பூதை: ஆகாசகைரபி
தாம் அத்ய சீதாம் பஸ்யந்தி ராஜமார்க்கதா ஜநா:-என்பது, ஸ்ரீராமா. அயோத். 38. 8.

ஞானாதிகர் செய்தது பிரமாணம் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘பெரியவன்’ என்று தொடங்கி.

“யத்யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதரோஜந:
ஸயத் பிரமாணம் குருதே லோக: தத் அநுவர்த்ததே.”-  என்பது, ஸ்ரீ கீதை, 3 : 21.

கண்ணனுக்கே காமம் -என்று இருந்தவர் -நிதித்யாவச்ய விதிக்கும்
வேதாந்த விஹிதை பக்தியே காமம்

ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய : ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ
நிதித்யாசிதவ்ய:”-என்பது, பிரு. உப. 6 : 5.

அகல நினைத்தது அவனுக்கு தாழ்வு வரக் கூடாதே
இங்கும் இவரை ரஷிக்காமல் இருந்தால் தாழ்வும் வருமே
அத்தலைக்கு அவத்யம் விளைய கூடாதே என்பதால் தான் மடல் எடுக்க பார்க்கிறார்
அங்கு அகன்றது ஞான கார்யம் இங்கு மதியின் கார்யம்
பக்தி ப்ரீதி கார்யம் –
இப்படி கலங்க பண்ணின பகவத் வை லஷண்யம்

மதி ஞானம் நலம் பக்தி
மதி நலம் அருளி அது படுத்தின பாடு தானே இவை எல்லாம்
சித்த -உபாயம் எம்பெருமான் -சித்தமாக இருக்கிறான் –
பலிக்க ஸ்வீகாரம் மட்டும் வேண்டும் –
ஸ்வீகரித்த பின்பும் பலிக்காவிடில் -என்ன குறை
ரஷகன் -அவன் -ஆகாவிடில் –
அசக்தி இல்லைஅவனுக்கு – இத்தலையில் கர்த்தவ்யம் குறை இல்லை பற்றின பின்பு –
விளம்பதுக்கு ஹேது என்ன
பற்றாமல் இருப்பருக்கும் அனுக்ரஹம் செய்யும் சக்திமான் வேற இவன்
ஆற்றாமை குறை இன்றி -பெருமாள் -பற்றின விஷயம் சமுத்திர ராஜன் அம்பால் மிரட்டி
அது போல் மடல் எடுக்க -பயம் காட்டுகிறார்
ஆனால் இவர் சக்திமான் தானே செய்யலாமா –
கடவேன் சொல்லி -விட வேண்டியது தான் அனுஷ்டிக்க வேண்டியது இல்லை

பாதிவெந்த பின்பு தான் அங்கு முகம் காட்டினான்
மடல் ஏற வில்லை
மடலூர்வேன் அச்சமூட்டி கொள்ள பார்க்கிறார்
கலங்கி -ஸ்வரூபத்தில் உண்டு -ஆனாலும் அவன் குணங்கள் ஞானத்தில் கலக்கம் இல்லை

குணாதிக விஷயம் ஆனால் முயற்சி மாத்திரம் போதியதாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி.

2. “சாபமாநய சௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந்
சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா.”

என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22. ஆசீவிஷம்-பாம்பு.

நானும் வேண்டா எனது உடைமையும் வேண்டா என்றவர் –
அத்தை நடத்த பார்க்கிறார்
ஆத்மா அழிய -முடியாதே
எம்பெருமான் உளன் போலே ஆத்மாவும் உளது
மடல் எடுத்தாள் எம்பெருமான் அழிவான் ஆத்மாவும் அழியும்

இனி ஏறாளும் இறையோனும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தால் கூறிய சங்கையை அநுவதித்துப் பரிஹரிக்கிறார். ‘ஏறாளும்
இறையோனும்’ என்றது முதல், ‘வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது’
என்றது முடிய. இது, ஐந்தாம் பரிஹாரம். என்றது சர்வேச்வரனுடைய
உபயோகத்துக்கு உறுப்பு அல்லாத தம் ஸ்வரூப நாசத்துக்கு உடலாக
அவனை அழிக்கப் பார்க்கிறார் ஆகையாலே, சர்வேச்வரனுக்கு உயர்வினை
உண்டுபண்ணக் கூடியதான ஸ்வரூபத்திற்கு விரோதம் இல்லையே என்றபடி.
‘அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்க’ என்றது, அவனுக்கு
நிரூபகமான ரக்ஷணதர்மம் இவர் மடல் எடுத்தால் அழியுமாகையாலே,
நிரூபகம் அழிந்த அளவில் நிரூபிக்கப்படுகின்ற பொருளும் அழியும்
என்றபடி.

உண்டாகும் போழ்தும் இல்லையாம் போதும் அவனாலே தானே –
உயிர்க்கு உயிராக இருப்பவன் தானே அவன்

மேற்கூறிய சங்கையை (ஐந்தாம் சங்கை) வேறு ஒரு வகையிலும்
பரிஹரிக்கிறார் ‘உயிரினாற் குறை இலம்’ என்று தொடங்கி. இது, ஆறாம்
பரிஹாரம். என்றது, ஸ்வரூபத்திற்கு விரோதம் ஆனாலும், ஆற்றாமையின்
முறுகுதலாலே ஸ்வரூபத்தை மீறி அவனை அழிக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியைக்காட்டிலும்
இங்கு ஆற்றாமை அதிகம் என்பது கருத்து. உயிரினால்-சர்வேச்வரனால்.அவனுக்கு உறுப்பு இல்லாதவை வேண்டாம் என்றார்
இதில் எனக்கு உறுப்பல்லாத அவன் வேண்டாம் என்கிறார்
சத்தை -அவனாலே தான்
மாயா சிரஸ் காட்டி -அழியாமல் பிராட்டி -நிஜம் என்று நினைத்து அழுது புரண்டு –
பிராணன் போகாமல் -பட்டர் விளக்கம் -ஞான அஞ்ஞானம் அன்று ஜீவன நிமித்தம் -சத்தை தானே –
எம்பெருமான் உடைய சத்தை ஜீவாத்மாவின் சத்தைக்கு காரணம்
அத்தலையை அழித்தாகிலும் அவன் முகம் சேவிக்க பிறந்த தசா விசேஷம்
ஆற்றாமை மீந்து –
தோழி -தலைவி தெளிந்து இருக்க கண்டு -வாராமல் இருக்க தேறி இருப்பது என்ன காரணம் –
செய்ய நினைத்து இருப்பது என்ன –
உனது தகுதிக்கும் பிறப்புக்கும் சேராது
அவனது மேன்மைக்கும் போராது
ஸ்வரூபம் அழித்தாகிலும் செய்வேன் தோழிக்கு அறிவிக்க -அஞ்சி -சர்வேஸ்வரன்
இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல் முகம் காட்டி தானும் தரித்தான் –
மடலிலே துணிந்தால் -முகம் காட்டி அவன் பிழைத்தான்
பிரம்மாஸ்திரம் தப்ப ஒண்ணாது –
இதுக்கு முன்பு அவனாலே பேறு என்று இருந்தவர்

“யாம் மடல் ஊர்ந்தும்”, “யாம் மடல் இன்றி” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றி ‘உன் தலைமைக்கும்’ என்கிறார். தலைமை-வைலக்ஷண்யம்,
“ஆதிமூர்த்தி” என்பதனைத் திருவுள்ளம்பற்றி ‘அவன் தலைமைக்கும்’
என்கிறார். “என்னை நிறை கொண்டான்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘உன் மதிப்புக்கும்’ என்கிறார். “குதிரியாய் மடலூர்தும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘உன் பிறப்புக்கும்’ என்கிறார். “என்னை நிறைகொண்டான்”
என்பதனை நோக்கி ‘உன்னுடைய மர்யாதைகளுக்கும்’ என்கிறார். ‘என்
ஸ்வரூபத்தை அழித்தாகிலும்’ என்றது, “யாம் மடலூர்ந்தும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. ‘தோழிக்கு அறிவிக்க’ என்றது, தோழிக்கு அறிவிக்கும்
வியாஜத்தாலே ஈச்வரனுக்கு அறிவிக்க என்றபடி, “இரைக்கும் கருங்கடல்
வண்ணன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி “முகங்காட்டித் தானும் சத்தை
பெற்று” என்கிறார்.

பிராப்யமான கைங்கர்யத்துக்கு பர பக்தி பர ஞானம் பரம பக்தி வேண்டுமே
போஜனத்துக்கு சூத்து பசி போலே

பக்தி மானுக்கு சாதக ரூபம் -விதி ரூபம்
பிரபன்னனுக்கு தேக யாத்ரை போலே பிராணன் இது தான் -ச்வரோப ப்ராப்தம்
தவிர ஒண்ணாது பக்தி தூண்ட மடல் எடுக்க முயல்கிறார்

இத்திருவாய்மொழியில், ‘மடல்’ என்று சொல்லுகிறது, ஸ்வாபதேசத்தில்
பக்தியை அன்றோ; அங்ஙனம் இருக்க, அவனையே உபாயமாகப்
பற்றியிருக்கிற இவர்க்கு அது உண்டாகலாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இதற்கு முன்னர்’ என்று தொடங்கி. என்றது, இவருடைய
பக்தி, சாதன பக்தியன்று; சாத்திய பக்தி என்றபடி. பரபக்தி-சம்ஸ்லேஷ
விஸ்லேக்ஷைக சுகதுக்கத்வம்; சேர்க்கையாலே இன்புறுதலும், பிரிவினாலே
துக்கித்தலும். பரஞானம்-ஸ்புடசாக்ஷத்காரம்; மிகத் தெளிந்த ஞானம்
என்றபடி. பரம பக்தி-விஸ்லேஷத்தில் சத்தைக்கு ஹாநி பிறத்தல்; பிரிவிலே
முடியும்படியான நிலையை அடைதல். இவற்றைமுறையே, விஸத விஸததர
விஸததமம் என்பார்கள்.

2. இவர்தாம் ஆர்த்தப் பிரபந்நர் ஆகையாலே, பிரபத்தி செய்வதற்கு
முன்னேயும் பக்தி உண்டு என்கிறார் ‘இனி பக்திமானுக்கும்’ என்று
தொடங்கி. பிரபந்நன்-பிரபத்தியைச் செய்தவன் பிரபந்நன். பிரபத்தியாவது,
பகவத் பிரவிர்த்தி விரோதி ஸ்வப் பிரவிர்த்தி நிவ்ருத்தி சாத்ய:பிரபத்தி.
என்றது, பகவானுடைய ரக்ஷகத்துக்கு விரோதியான தன் செயல்களின்
இன்மையால் சாதிக்கப்படுவது.

3. பக்தி பிரபக்தி நிஷ்டர்களுடைய பக்தி தாரதம்மியத்தை அருளிச்செய்கிறார்
‘பக்திமானுடைய’ என்று தொடங்கி. ‘விதி ரூபமாய் வரும்’ என்றது,
“நிதித்யாசிதவ்ய:” என்கிற விதி மூலமாய் வரும் என்றபடி. என்றது, விதி
ரூபமாய் வருவது ஆகையாலே பக்தி நிஷ்டனுக்குச் சாதன ரூபமாய்
இருக்கும். தேக யாத்திரைக்கு உறுப்பாகையாலே பிரபந்நனுக்கு ருசிகார்யமாய்
இருக்கும் என்றபடி. ‘பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது’
என்ற வாக்கியத்திற்குக் கருத்து, சாதன ரூபமாயிருக்கையாலே பக்திமானுக்கு
விடக்கூடியதாயிருக்கும் என்பது. ‘பிரபந்நனுக்கு’ என்று தொடங்கும்
வாக்கியத்தின் கருத்து, அநுபவ கைங்கர்யமான தேக யாத்திரைக்கு
உறுப்பாகையாலே, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய
சேஷத்வமாகிற சொரூபமடியாக வந்ததாகையாலே விடக்கூடாததாய்
இருக்கும் என்பது.

பக்தி கார்யம் தானே மடல் -சாத்திய பக்தி வேற சாதன பக்தி வேற –
இத்தை கொண்டு வேற பலன் இன்றி அத்தையே பிரயோஜனமாக –
என்நினைந்து போக்குவர் இப்போது போலே ஆழ்வார்கள் –
அதிகாரி பற்றி பேதம் –
மாம்பழம் வாங்குகிறவனுக்கு சாத்தியம் விக்ரவனுக்கு சாதனம் –
கைங்கர்யம் செய்ய போக -அத்யாபகர் -வெளியில் வந்து சம்பாவனை -சாதனம்
உள்ளூர் அத்யாபகர் சாத்தியம் -இதுவே செய்வதே பரம பிரயோஜனம் என்று –
வீடு முன் முற்றவும் -பக்தியை உபதேசிக்க -சாத்திய பக்தியை -அர்த்தம் காட்டி –
தேக யாத்ரைக்கு பக்தி ப்ரீதி பூர்வாக பகவத் த்யாநம் -தானே
இருந்தால் தான் ஆழ்வார் தரித்து இருப்பார் -தேக யாத்ரா சேஷம் இது -உண்ணும் உணவு எல்லாம் இதுவே

முயன்று மடல் எடுப்பது –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -நிலைகள் தவிர ஒண்ணாதே பிராப்தத்துக்கு

ருசி தூண்ட ராக ப்ராப்தம் இது
சாஸ்த்ரம் விதித்ததால் வந்தது இல்லை
பிரபன்னன் பக்தி விட்டே போகாதே-பலனுக்கு செய்யாமல் இதுவே ஸ்வயம் பிரயோஜனமாக செய்வதால் –
ராக ப்ரப்தமாய் ருசி காரணமாய் -ஒரு காலும் தவிர ஒண்ணாது –

        மாசறு சோதிஎன் செய்யவாய் மணிக்குன் றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவி ழந்துஎனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?

பொ-ரை :- தோழீ! அழுக்கு நீங்கிய ஜோதி சொரூபமானவனும் சிவந்த வாயினையுடைய மாணிக்கமலை போன்றவனும் குற்றம் நீங்கிய சீலத்தையுடையவனும் காரணனாயிருக்கின்ற மூர்த்தியுமான எம்பெருமானை விரும்பியதனால், சரீரத்திலுள்ள பசுமைநிறம் நீங்கப் பெற்று அறிவும் நீங்கி எத்தனை காலத்தேமாயினோம்; ஊராருடைய பழிச்சொல் நம்மை என் செய்யும்? என்கிறாள்.

வி-கு :- சோதியும் குன்றமும் சீலனும் மூர்த்தியுமான எம்பெருமான் என்க. நாடி-நாடியதனால். எனை-எத்தனை. நாளையம்-நாட்களையுடையேம். கவ்வை-ஒலி; பழிச்சொல்.

இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

ஈடு :- முதற்பாட்டு. 1“அழகாலும் சீலத்தாலும் மதிப்பாலும் பழிப்பு அற்றது ஒரு விஷயம் ஆயிற்று அது, நீசெய்யப் புகுகிற இதனால் அவ்விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறாயே” என்று தோழி சொல்ல, நான் அவ்விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறேன் அல்லேன், பழிப்பை அறுக்கப் புகுகின்றேன் காண் என்கிறாள்.

மாசு அறு சோதி-1கலந்து பிரிந்தவள் ஆற்றாமை இன்றிக்கே மர்யாதைகளை நோக்கிக்கொண்டிருத்தலானது அத்தலைக்குத் தாழ்வு போலே காணும்; 2பிரிந்தால், இப்படிச் செய்யாத அன்று குற்றமே அன்றோ அழகிற்கு. 3நான் என்னுடைய மர்யாதைகளைக் குலைத்தாகிலும் அவன் முகத்திலே விழித்தல் தவிரேன் என்கிறாள்; 4வடிவு அதுவாயிருக்க, நான் மடல் எடாது ஒழியும்படி எங்ஙனேயோ.1கெடுவாய், அவ்வடிவு குற்றங்கட்கு எல்லாம் எதிர்த்தட்டானது காண். ஆதலால், நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவிற்குக் குற்றத்தை உண்டாக்குகை காண். 2‘அவன் அவ்வடிவை உகந்தார்க்குக் கொடான்’ என்னும் பழியைத் துடைக்கக் காண் நான் பார்ப்பது; 3“பக்தர்களுக்காகவே என்கிற உடம்பைத் ‘தனக்கு’ என்று இருக்கையாகிற இது அவ்வடிவிற்குக் குற்றமே அன்றோ. 4மடல் எடுத்தல் மாசு’ என்று இருக்கிறாள் தோழி; ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்று இருக்கிறாள் இவள். 5பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கிற விஷயங்களைப் போன்றது ஆகுமே. 6வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்படவடிவிலே மண்டுகிறாள். அன்றிக்கே, மேல், ‘ஆசு அறு சீலனை’ என்னாநிற்கச் செய்தே, குணத்திலும் விக்கிரஹம் மனக் கவர்ச்சியைச் செய்கையாலே ‘மாசு அறு சோதி’ என்று முற்பட வடிவழகைச் சொல்லுகிறாள் என்னுதல். 1நான் மடல் எடுக்க நினைத்த அளவிலே மாசு அற்று வருகிறபடி பாராய் என்கிறாள்.

என் செய்ய வாய்-2“அவாக்யநாதர:” என்கிறபடியே, வேறுபாடு இல்லாமல் இருக்கக்கூடிய பரம்பொருள், என்னோடே கலந்து அதனால் வந்த பிரீதிக்குப் போக்கு விட்டுப் புன்முறுவல் செய்து வேறுபாட்டினை அடையக்கூடிய பொருள் போலே வேறுபட்டவன் ஆகாநிற்க, நான் அவனைப் பிரிந்து வேறுபடாதவளாய் இருக்கவோ. 3ஒரு வார்த்தை சொல்லக்கூடியவன் அன்றிக்கே, முகம் பார்த்து வார்த்தை சொல்லுகைக்குத் தன்னோடு ஒப்பது ஒரு வேறுபொருள் இல்லாமையாலே அநாதரித் திருக்குமவன். 4‘கர்மங் காரணமாக வருகின்ற வேறுபாடு இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களோடு கலத்தலாலும் பிரிதலாலும் வருகின்ற வேறுபாடு இல்லை எனில், ஒரு சேதனனோடு கலந்தது அன்றிக்கே ஒழியுமே அன்றோ. 5அவன் கலந்தபோது செய்த புன்முறுவல் அன்றோ என்னை மறைவு அற்ற வழியாகிய மடல் எடுக்கையிலே மூட்டிற்று. 1சம்சாரி முத்தன் ஆவானே ஆனால் அவனுக்குப் பிறக்கும் உவகை போலே காணும் இத்தலையைப் பெற்று அவன் புன்முறுவல் பூத்து நின்ற நிலை. என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-2இவளுடனே கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டுவிட்டது. வாய்க்கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்; கழுத்துக்கு மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது. மணிக்குன்றத்தை – மாணிக்க மலை போன்று இனியன் ஆனவனை. அதாவது, 3‘கழுத்துக்கு மேலே அன்றிக்கே, மெய்யே மடல் எடுக்கச் செய்துவிட்டது என்கிறாள். என்றது, 4என்னோடே வந்து கலந்ததனாலே வடுவில் வைவர்ண்யம் போய்ப் புகர்த்துக் குளிர்ந்து நிலைபெற்றபடியும், பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங்காண் என்னை மடலிலே துணியப் பண்ணிற்று என்கிறாள் என்றபடி.

ஆசு அறு சீலனை – குற்றம் அற்ற சீலத்தையுடையவனை, என்றது, 5அவன் கலக்கிறபோது என்பேறாகக்கலந்தானாகில் அன்றோ நானும் பிரிவில் என்பேற்றுக்கு வேண்டுமதனைச் செய்திருக்கலாவது; அம்மேன்மையுடையவன் இப்படித் தாழ நின்று என்னைப் பெற்ற இது பெறாப் பேறாகத் தான் நினைத்திருக்க, நான் அவனைப் பிரிந்து வைத்து, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்று நினத்திருக்கலாமோ? 1அவன்தன் குணம் பரிஹரித்துப் போக, என்னைப் பழி பரிஹரித்திருக்கச் சொல்லுகிறாயோ? ஆக, ‘ஆசறு சீலனை’ என்றதனால், வெறும் வடிவழகு கண்டு அன்று காண் என்பதனைத் தெரிவித்தபடி. ஆதி மூர்த்தியை – 2‘ஒப்பற்ற குடியிலே பிறந்த உனக்கு, அவன்தானே வர இருக்குமது ஒழிய நீ பதறுகிற இதனால் உன் மதிப்பை அறுத்துக்கொள்ளப் பார்க்கிறாயே’ என்ன, நான் மதிப்பை அறுத்துக்கொள்ளப் பார்க்கிறேன் அல்லேன், மதிப்பை உண்டாக்கிக்கொள்ளப் பார்க்கிறேன் என்கிறாள்; 3“காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது” என்று சாஸ்திரங்கள் ஒரு மிடறு செய்கிற விஷயத்தை அன்றோ நான் ஆசைப்பட்டது, இவ்விஷயத்தை ஆசைப்பட்டுப் பெறாதே முடிந்தாலும் அதுதானே மதிப்பாம்படியான விஷயம் அன்றோ. 4வியாக்கியானம் செய்வதற்கு முன்பேயும் ஒரு பொருள் உண்டு இதற்கு அருளிச்செய்வது: 1“ஆத்மாக்கள் உஜ்ஜீவிப்பதற்கு முற்பாடனாய்க் கிருஷி செய்யுமவன்” என்கிறபடியே, நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாகச்செய்தே, பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பட்டவள் ஆகவோ என்பது.

‘ஆனாலும், காதலனைப் பிரிந்தாள், உடனே மடல் ஊர்ந்தாள்’ என்னாமே, ‘சிலநாள் ஆற்றாமையோடே பாடு ஆற்றிக் கிடந்தாள், பின்பு தன்னால் பொறுக்க ஒண்ணாமையான அளவு ஆனவாறே மடல் எடுத்தாள்’ என்னும் வார்த்தை படைக்கவேணுங்காண்’ என்ன, நாடியே பாசறவு எய்தி-பகவத் தத்துவம் உள்ள இடம் எங்கும் புக்குத் தேடிக் காணாமையால் நசை அற்றுத் துக்கத்தையுடையேனாய்ப் பின்பே அன்றோ மடல் எடுத்தது; பாசறவு-துக்கம். அன்றிக்கே, பாசு என்று பசுமையாய், அது அறுகையாவது, வைவர்ண்யமாய், வைவர்ண்யத்தை மேற்கொண்டு என்னுதல். அன்றிக்கே, பாசு என்று பாசமாய், அதாவது, பற்றாய், உறவினர்கள் பக்கல் பற்று அற்று என்னுதல்; அன்றிக்கே, சிநேகம் அடைய அவன் பக்கலிலே எய்தி என்னுதல். இன்றோ, நான் எத்தனைகாலம் உண்டு இப்படிக் கிலேசப்படுகிறது என்பாள் ‘எனை நாளையம்’ என்கிறாள். என்றது, அவன் என்னைப் பெறுகைக்குப் பட்ட காலம் எல்லாம் போராவோ நான் அவனப் பிரிந்து பட்டவை என்றபடி. 1காலம் எல்லாம் தேடிக் காணப் பெறாமல் துக்கப்பட்டுத் திரிந்த தத்தனை யாகாதே தான்; சிறைக்கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே. 2பிரிவினாலே ஊகிக்கப்படுமித்தனை காணும் புணர்ச்சி.

எல்லாம் செய்தாலும் இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன, அறிவு இழந்து எனை நாளையம் – அறிவு குடிபோய் எத்தனையோர் காலத்தோம். 3மயர்வற மதிநலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு. 4பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று, ‘அது ஞான கார்யம்’ என்று இருந்தாயோ, இன்று இருந்து கற்பிக்கைக்கு; அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ. 5தன்பக்கல் கைவைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ, ‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார்அத் தோள்’ என்னக்கடவதன்றோ. 1“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே, பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே, ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ? 2தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநுசந்திக்கும்படியோ அவன்படி. நன்று; நீ எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்சவேண்டுங் காண் என்ன, ஏசு அறும் ஊரவர் – ‘இவளை ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று அதிலே துணிந்திருக்கிற ஊரார் என்னுதல்; என்றது, ஏசுகையில் துணிந்திருக்கிற ஊரார் என்றபடி. இதனால், மடல் எடுக்கை நமக்குக் குற்றமாகில் அன்றோ அவர்களுக்கும் பழி சொல்லுகையும் குற்றமாவது என்கிறாள் என்றபடி. அன்றிக்கே, ‘பகவத் விஷயத்தில் கைவைத்தவர்களுக்கு ஒரு பழி சொன்னோமாய் விடவல்லோமே’ என்று துக்கப்பட்டிருக்கிற ஊரார் என்னுதல்; ஏசறும் – துக்கப்பட்டிருக்கின்ற. அன்றிக்கே, ஏசற்று இருக்கிற நமக்கு. அதாவது, ஏசும் எல்லையைக் கடந்திருக்கிற நமக்கு என்னுதல்; என்றது, அறிவுடையார்க்கு வரக்கூடியதான பழி, அது வாசனையோடே குடிபோன நமக்கு வாராதுகாண்; இதற்கு அஞ்ச வேண்டா என்கிறாள் என்றபடி.

ஊரவர் கவ்வை – பகவத் விஷயத்திலே கைவைத்தார் ‘இது பழி’ என்னில் அன்றோ பழியாவது, இதற்குப் புறம்பாய் நின்ற ஊரார்கள் சொல்லுமது நமக்குப் பழியோ. தோழி – சமானமான துக்கத்தையும் சுகத்தையுமுடைய உனக்கு ‘இது பழி’ என்று தோற்றில் அன்றோ எனக்கு மீள வேண்டுவது. என்செய்யுமே – 3ஏசு அறும் எல்லையிலே நிற்கிற எனக்கு, இது ஏசாம்படி இருப்பார் சொல்லும் வார்த்தை கொண்டு கார்யம் என்? ஊரார் பழி, புகழாம் எல்லையிலே அன்றோ நாம் நிற்கிறது. 1அவர்கள் சொல்லுகிற இது நமக்குத் தாழ்வேயோ, தாரகமாமித்தனை அன்றோ? “அலர் எழ ஆருயிர் நிற்கும்” என்னக்கடவதன்றோ. “அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட என் காதல்” என்கிறபடியே, அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது.

சௌந்தர்யம் -மதிப்பு -சீலம் உடையவன்
பழிப்பை செய்யலாமா தோழி தடுக்க –
பழிப்பு அறுக்க பார்க்கிறேன் என்கிறாள் -பழிப்பு உண்டாக்க செய்யவில்லை என்கிறாள் தலைவி –
ஏசலும் -வசவுகளும் என்ன செய்யும் –
நாடி அறிவு இழந்து போனது நிறைய காலம்
மாசு இல்லாத சோதி -தேஜஸான -தேஜஸ் வடிவு கொண்டு –
குற்றமே இல்லாத தேஜஸ் –
கலந்து பிரிந்தவள் -ஆற்றாமை இன்றிக்கே -மரியாதை கட்டுப்பாடு நோக்கிக் கொண்டு
மடல் எடுக்காவிடில் மாசு வருமே -அத்தலைக்கு அவத்யம் உண்டாகுமே
சக்கரவர்த்தி திருமகன் -திருவடி -ஒரு மாசம் தரித்து இருப்பேன் பிராட்டி சொல்லிய வார்த்தை
சிரஞ்சீவி வைதேகி -ஷணம் காலம் அழகிய கண் படைத்த அவளை பிரிந்து இருக்க முடியாதே –
ப்ரீதி யாருக்கு அதிகம் -பெருமாளுக்கு தானே -தோன்றும் -ஆசார்யர்கள் –
காசு பொன் இழந்தவர் இழவு ஒத்து இராதே –

உயர்ந்த வஸ்துவாக இருக்க பிரிந்து இருக்க முடியாதே
மாசறு சோதியாக இல்லா விடில் நான் மடல் எடுக்க மாட்டேன் –
மடல் எடுக்கா விடில் மாசு வருமே
விஷயத்தில் பெருமை உண்டே –
ஹெயம் உண்டாக்கும் மடல் எடுக்காவிடில்
உகந்தாருக்கு கொடுக்க மாட்டான் என்னும் மாசு போக்க வேண்டுமே பழி விளையாமைக்கு மடல்
பக்தாநாம் -என்கிற உடம்பை தனக்கு என்று கொள்வது மாசு தானே –

விரும்பினவர்கட்குக் கொடாதொழிகை தாழ்வோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் “பக்தர்களுக்காகவே” என்று தொடங்கி.

“ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதானி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாஸஸே”- இது, ஜிதந்தா. 5.

சப்தாதி விஷய ஈடுபாடு -ஸ்திரமான புத்தி இன்றி –
பகவத் விஷயம் அப்படி இல்லையே
மடல் எடுப்பேன் சொன்னதும் பிரகாசிக்கும் திருமேனி தேஜஸ்
ஆசறு சீலன் மேலே ஸ்வரூபம்
குணத்திலும் திருமேனி ஈடுபடுத்தும்
என் செய்ய வாய் -அவாக்யாத அநாதரன் -ஸ்மிதம் பண்ணி -இருக்க நான் மடல் எடுக்காமல் இருக்கவோ
அவிகாராய -ஸ்மிதம் பண்ணி விகார த்ரவ்யம் போலே -புன் சிரிப்பு காட்ட –
வார்த்தை சொல்ல சமமானவர் இல்லை அங்கு –
கர்ம நிபந்தன விகாரம் இல்லை -ஆஸ்ரித சம்ச்லேஷ விஸ்லேஷ விகாரம் உண்டே
கலந்த பொழுது செய்த ஸ்மிதம் நெஞ்சில் தங்கி மீண்டும் காண  உபாயம் மடல்
சம்சாரி முக்தன் ஆனால் கிடைக்கும் ஹர்ஷம் இவனுக்கு ஆழ்வாரைப் பெற்று
என் -இவருடன் கலந்ததால் -எனக்காக செய்த சிரிப்பு கையும் மடலுமாக ஆக்கி
பந்தம் சிரிக்க இந்த்ரப்ரச்தத்தில் பூசல் விளைக்க போலே
வாய்க்கரையிலே நின்று மடல்
கழுத்துக்கு மேலே மடல் -எடுக்கிறாள்
மணிக்குன்றம் –
வயற்றுக்கு மேலே அன்றி மெய்யே மடல் எடுக்கிறாள்
திருமேனி -புகர்த்து -பள பளத்து -குளிர்ந்து – நிறம் பெற்ற படி
கால் வாங்க முடியாதபடி -பிரிய மனம் இன்றி நின்ற நிலை
மாணிக்க மலை போலே போக்யமானவன்
ஆசறு சீலன்
வடிவு அழகு மட்டும் அன்று அகவாயில் சீலம் -குற்றம் அற்ற ஷீலா குணம்
சீலத்துக்கு குற்றம் -கலக்கும் போலுதுஎனது பேறாக கலப்பது குற்றம்

மேன்மை உடையவன் என்னை பெற்று பெறாதது பெற்றது போலே தனது பேறாக
அடைந்தே தீருவேன்
குணம் இப்படி நிலை நாட்டிய பின்பு –
ஆதி மூர்த்தி –
அவன் தானே வர இருக்க வேண்டும் -குடி பிறப்பு உண்டே உனக்கு –
காரணஸ்து த்யேயக -நீ முயன்று பெற வேண்டும் -வேதாந்தம் சொல்ல -ஒரு மிடறாக
ஆதி மூர்த்தியாக இருக்க -மடல் எடுக்காவிடில் தரித்து இருக்க முடியுமா –
முயல் மேலே அம்பை விட்டு -யானை தப்பிக்க வீரன் -பிரயத்தனம் செய்ததால் -குறள்
மதிப்பான விஷயம் –
நம்மோட்டை கலவிக்கு -மகா புருஷ பூர்வஜ ஜிதந்தே -முற்பாடன் அவன் –

அந்தப் பொருள்தான் யாது? என்ன, அதனை அருளிச்செய்கிறார்
“ஆத்மாக்கள்” என்று தொடங்கி.

“ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”

இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால்
சொல்லப்பட்ட சேஷத்துவமும், ‘நமஸ்தே’ என்றதனால், நமஸ்சப்தத்தால்
சொல்லப்பட்ட பாரதந்திரியமும், ‘விஸ்வபாவந’ என்றதனால், நாராயண
சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும், ‘நமஸ்தேஸ்து’ என்றதனால்,
கைங்கர்யப் பிரார்த்தனையும், ‘ஹ்ருஷீகேச’ என்றதனால், ‘உனக்கே
நாமாட்செய்வோம்’ என்கிறபடியே, கைங்கர்யத்தால் தனக்குப் பலன்
இல்லாமையும் சொல்லுகிறது. இந்தச் சுலோகத்தில் ‘விஸ்வபாவந’
என்றதனால், ஜகத்காரணத்வம் சொல்லி இருப்பதனால், ‘பூர்வஜ’ என்பதற்கு,
சேதந உஜ்ஜீவனத்திற்கு முற்பாடனாய்க் கிருஷி பண்ணுமவன் என்ற
பொருள் கொண்டு நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாய்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். இது, ஜிதந்தா. பாடு ஆற்றி-துன்பத்தைப்
பொறுத்து.

இது எனை நாளையும்
இன்றோ எத்தனை காலமாக கிலேசப் படுகிறேன்
அவன் இத்தலையை பெற பட்டது எல்லாம் -மீறி -நான் பட்டது
காலம் எல்லாம் –
சிறையிலே பிறந்து வளர்ந்தது போலே –விச்லேஷத்தில் பிறந்து வளர்ந்து
நடுவில் கலந்தது
துக்கம் படுவதால் அனுமானத்தால் கலவி இருக்கும் பிரமிக்கும்படியாக சம்ச்லேஷம்
துக்கம் எய்தி –
பாசி பசுமை அறுகை -வை வர்ண்யம் -எய்தி
பாசமாய் பற்றை பந்துக்கள் பக்கம் சங்கம் இன்றி அவன் பக்கம் வைத்து
நான்கு அர்த்தம் –
சிநேகம் எல்லாம் அவன் பக்கம் வைத்து
அறிவுடையார் செய்யும் காரிமா தோழி கேட்க
அறிவு கெட்டு போனது மயர்வற மதி நலம் அருளின அன்றே
திர்யக் காலத்தில் தூது விட்டேனே ஞான கார்யம் என்று இருந்தாயோ
அன்றே மதி எல்லாம் உள் கலங்கி –
மதி கலங்கி
எல்லாம் கலங்கி
உள் கலங்கி
தனது பக்கம் கை வைத்தால் மற்றவை மறக்கப் பண்ணும் பகவத் விஷயம் –

மதி கலங்கினால், “ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை” என்னும்படி என்?
என்ன, ‘தன் பக்கல்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
தன் பக்கல் – சர்வேச்வரனாகிய தன் பக்கல். இதனால், உலக ஞானம்
இல்லை என்றதித்தனைப் போக்கி, பகவத் விஷய ஞானம் இல்லை
என்கிறது அன்று என்பது கருத்து. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
“பேரின்பம் எல்லாம்” என்று தொடங்கி. இது, இரண்டாம் திருவந். 42.

பேரின்பம் எல்லாம் துறந்தார் அத தோள் தொழுதார்

நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம்”-இது, சாந்தோக்யம். 8. 12 : 3.-முக்தர் நிலை போலே

எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்ச வேண்டாமோ
மடல் எடுப்பது குற்றம் இல்லை
பழி செய்வதும் குற்றம் இல்லை
அறிவு உடையாருக்கு வரக் கடவதாக பழி அறிவு இல்லாருக்கு இல்லையே

ஞானம் ஏற்ப்பட்ட ஷணம் -தன்னை அனுசந்தித்து யோக யாத்ரை அனுசந்திக்கும் படி இல்லையே அவன் படி –
ஏசலும் -மடல் எடுக்கை குற்றம் ஆனால் அன்றோ பழி சொல்வதும் குற்றம் ஆகும் –
வஸ்த்ரம் போட்டுக்காத குழந்தை மேல் குற்றம் இல்லை வயசானவர் குற்றம் தானே
இப்பொழுது அறிவு இழந்தேனே -குற்றம் இல்லையே
இதுக்கு அஞ்ச வேண்டாம்
ஏசலும் -மூன்று அர்த்தம் –
பழி சொல்லிக் கொண்டே இருப்பார் -சொல்வது குறை சொல்வதே கார்யம்
ஏசுவதில் துணிந்து இருந்து
பகவத் விஷயத்தில் -ஈடு படாதவர் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாமே
என் செய்யுமே -கார்யம் என்ன
ஞாலம் அறிந்து பழி சுமந்து மேலே இவரே அருளப் போகிறார்
பழிக்கில் புகழ் –
வ்யதிரேக திருஷ்டாந்தம் கேடி கொண்டாடும் புகழ் புகழா
தீயவர் வைதால் புகழ் தான்
அது போல் ஊரவர் கவ்வை சப்தாதி விஷயத்தில் ஈடுபட்டு -புகழாக
தலைக்கட்டும் தாரகமாகும் இத்தனை
அபவாதம் உண்டாகில் உயிர் தரித்து இருக்கும் -அலர் -பழி குறள்

அலர் சேர்த்து வைக்குமே -அபவாதம் இவரே செய்து -சேர்த்து வைக்க -ஈடுபாட்டை
அலர் -தூற்ற கொண்ட எனது காதல் தாரகம் தானே

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.-  என்பது, திருக்குறள்.

“அலர் தூற்றிற்றது முதலா”-என்பது, திருவாய். 7. 3 : 8.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: