திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.

பொ-ரை :- கலியுகம் காரணமாக வருகின்ற தோஷங்கள் ஒரு சிறிதும் இன்றிக்கே, தன் அடியார்களுக்குத் திருவருள் புரிகின்ற, நிறைந்த மிக்க சுடரையுடைய திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனும் மாயப்பிரானும் கண்ணனுமான சர்வேச்வரன் விஷயமாக, வளப்பம் பொருந்திய வயல்களாற் சூழப்பட்ட தெற்கேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த காரிமாறனாகிய ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட தழைத்த புகழோடு கூடின ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உள்ளத்திலேயுள்ள குற்றங்களை நீக்கும் என்றபடி.

வி-கு :- இன்றிக்கே, அருள்செய்யும் மாயப்பிரான் என்க. கண்ணன் தன்னைச் சடகோபன் (சொன்ன) ஆயிரம் என்க. தென்-அழகுமாம்.

ஈடு :- முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையும், எம்பெருமான் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-2“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது; எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது”

என்கிறபடியே, கலிதோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும். 1நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது. மலியும் சுடர் ஒளி மூர்த்தி-சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது. மலிதல்-நிறைதலாய், மிக்க ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி. இதனால், அருள்செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி. மாயம் பிரான் கண்ணன் தன்னை-ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணனை ஆயிற்றுக் கவி பாடிற்று. கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர். இவற்றால், பூசாரத்தைச் சொல்லுதல்; நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல். இப்படிப்பட்ட வயல்களையுடைத்தாயிருந்துள்ள திருநகரியில் ஆழ்வார் அருளிச்செய்த. ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்-பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும், 2வேறு தேவர்கள் பக்கல் பரத்துவ

சங்கை பண்ணுதல், ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல், பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல், வேறு பிரயோஜனங்களை விரும்புதல் ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

 பொலிக பொலிக என்று பூமகள்கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன்சொல்
மருந்தாகப் போகுமன மாசு.

இதர தேவைதைகள் மேல் பரத்வ சங்கை -பிரயோஜனாந்தர பரர் தோஷங்கள் நீங்கப் பெற்று
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
உள்ளத்தை மாசு அறுக்கும்
இந்த இரண்டும் மாசு அகன்று விடும் –
கலி யுகம் ஒன்றும் இல்லாமல் கலி தோஷங்கள் வாராதபடி –

கலி இல்லாமல் போகுமோ? என்ன, ‘எவனுடைய’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.

“கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”

நாட்டுக்கு இட்ட சட்டம் அந்தபுரம் செல்லாது
அடியார்களுக்கு கலி தோஷம் இல்லாதபடி
விட ஒண்ணாத வடிவு அழகு
மிக சுடர் கொண்ட
திருமேனி
ஆசார்யமான கண்ணன் இவனையே சொல்லிற்று
கண்ணன் திருவடியே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
கலி மிடுக்கு -ஆராவாரம்
ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பது மாசுக்கள் இரண்டையும்
பர தேவதை
சஜாதீய புத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பது பகவனே என்று
அபாகவாத சகவாசம் நல்லது என்கிற மாசு
பிரயோஜனந்த மாசு
மானச தோஷங்கள் போகும்
அடியார்களை சேவித்து –
தேவதாந்தர பரதவ சங்கை
கைங்கர்யம் ஒன்றே கேட்டு

இத்திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து
‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

“கறுத்த மனம் வேண்டா” என்றதனால், பிரணவத்தின் அர்த்தமான
அநந்யார்ஹ சேஷத்வத்தையும், அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்”
என்றதனால், நம:(ச்) சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும், “சிந்தையைச்
செந்நிறுத்தி” என்றதனால், நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே, ‘மாசு அறுக்கும்’
என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப்படுகின்றன
என்பர் பெரியோர்.

சாரமான அர்த்தம் –
தொண்டர் மலிவு தன்னை கண்டு
திருந்தாவரையும் திருத்திய மாறன் சொல் மருந்து
மன மாசு போக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: