திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.

பொ-ரை :- வேதங்களிலேயுள்ள பரிசுத்தமான ஸ்ரீ புருஷ சூக்தங்களை நாக்கினாலே உச்சரித்துக்கொண்டு, பக்தி மார்க்கத்தினின்றும் வழுவாமல், பூவும் புகையும் விளக்கும் சாந்தமும் தண்ணீரும் ஆகிய இவற்றாலே நிறைந்தவர்களாய்க்கொண்டு பொருந்தி, அடியார்களை நழுவ விடாதவனான சர்வேச்வரனைத் தொழுகின்ற அடியார்களாலும் பகவர்களாலும் உலகமானது நிறைந்திருக்கின்றது; ஆதலால், நீங்கள் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.

வி-கு :- உலகு அடியாரும் பகவரும் மிக்கது; நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. “பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்று அழுதநம் கண்ணினீர்கள்” (சிந். 1391.) என்றவிடத்துக் ‘கள்’ என்பதனை அசைநிலை என்றார் நச்சினார்க்கினியர். மலிந்து – மலிய; எச்சத் திரிபு. அடியார் என்பதற்கு, இல்லறத்தார் என்றும், பகவர் என்பதற்குத் துறவறத்தார் என்றும் பொருள் கூறுவதும் உண்டு.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1பகவத்குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டருமான ஸ்ரீ வைஷ்ணவர்கள், பூமி எங்கும் பரந்தார்கள்; நீங்களும் அவர்களோடு ஒக்க வேறு பயன்களைக் கருதாதவர்களாய் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

நீர் மேவித் தொழுது உய்ம்மின் – நீங்கள் வேறு பயன் ஒன்றனையும் கருதாதவர்களாய்க் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள். வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு – 1வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும் ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷசூக்தாதிகளை நாக்கிலே கொண்டு. அச்சுதன் தன்னை-2இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு 3“அவர்களை விடமாட்டேன்” என்னுமவன். ஞானவிதி பிழையாமே-பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ‘ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை. பூவின் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு. மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும் ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது, தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும், கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே ஆயிற்று உலகம் அடைய என்றபடி. ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

அடியார்
பகவர்

‘பகவத் குணநிஷ்டரும்’ என்றது, “பகவரும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி,
‘பகவத் குண நிஷ்டர்’ என்றது, ஸ்ரீ பரதாழ்வானைப் போன்றவர்களை.
‘கைங்கரிய நிஷ்டரும்’ என்றது, “அடியாரும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
‘கைங்கர்ய நிஷ்டர்’ என்றது, இளையபெருமாளைப் போல்வாரை என்க.

முக்கோல் பகவர் -த்ரிதண்டம் உயர்வாக தமிழ் இலக்கணம்
நூல் -கரகம் மணி ஆசனம் -முக்கோல் -தொல்காப்பியம் -அந்தணர் இலக்கியம் சொல்லும்
கைங்கர்ய நிஷ்டர் -குண நிஷ்டர்கள் இருவரையும் இப்படி  சொல்லி –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே

புனிதமான வேத ரிக்குகள் வார்த்தைகள் -நாவிலே கொண்டு –
அச்சுதன் -கைவிடாத சர்வேஸ்வரன்
ஞான விதி பக்தி மார்க்கம் குறை இல்லாமல்
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு சமர்ப்பித்து
பெரிய ஜீயர் எடுத்துக் கொடுக்கும் கைங்கர்யம்
அடியார் பகவர் -இரண்டும் செய்வார்கள் சரீரம் -ஆத்புருஷ சூக்ததிகள் புனித ருக்குகள்
வேதத்தில் விபூதி விஷயமாகவும் உண்டே
அசாதாரண விக்ரஹம் குணம் ஸ்வரூபம் சொல்லும் புனித ருக்குகள்
நாராயண அனுவாஹம் விஷ்ணு சூக்தம் போல்வன நாக்கில் கொண்டு
நாவில் அசஹ்ருதயாமாக கொண்டு சொன்னாலும்
நழுவ விடாதவன் அச்சுதன்

நாவிற்கொண்டு என்பதற்கு, மனத்தொடு படாமல் நாக்கில் மாத்திரமே
கொண்டு என்று வியாக்கியானம் செய்திருப்பதால், வேதப்புனித இருக்கை
நாவிற்கொண்டு அச்சுதன் தன்னை மேவித் தொழுது உய்ம்மினீர்கள் என்று
கூட்டி, “நாவிற்கொண்டு”  என்பதனை, உபதேசிக்கப்படுகின்றவர்களுக்கு
அடைமொழி ஆக்குக. நாவிற் கொண்டு ஞானவிதி பிழையாமே மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் என்று கூட்டற்க. என்னை? எனின்,
பிழையாமல் மேவித் தொழும் அடியார்க்கு, “நாவிற்கொண்டு” தொழுதல்
குற்றமாதல் காண்க.

ஞான யோகம் -கர்மங்களால் ஆராதிக்க படும் சர்வேஸ்வரனை உபாசிக்க
பக்தி -ப்ரீதி பூர்வகமாக செய்வதே
பக்தி ஞானம் முதிர்ந்த நிலை
ஞான யோகமே பக்தி யோகம் -வேறு ஒரு நிலை
ராமன் பிறந்த தேசம் கோசல தேசம் -என்பர் -அயோதியை -அரண்மனை -என்பர்

அந்த அறையில் பிறந்தார் போலே –

ஞானமே பக்தி -ஞானம் என்றது விசேஷமான பக்தியை தான் இங்கே குறிக்கும்
பூவும் -அனைத்தையும் கொண்டு
உபகரணங்கள் விடாமல் அடிமை செய்பவர் -அடியார்
குண அனுபவம் செய்யும் பகவர் –
மிக்க இந்த லோகம் –
இளைய பெருமாள் பரத ஆழ்வான் போலே
இப்படி இருப்பார்கள் நிறைந்து இருக்க
நீங்களும் அடிமை செய்யும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: