திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

  இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி1
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.

பொ-ரை :- தெய்வங்களுக்கு எல்லாம் நாயகனான அந்தச் சர்வேச்வரன் தானே, நீங்கள் கொடுக்க வேண்டிய பொருள்களைக் கொடுத்து, அவர்கள் அருளைப் பெற்று உஜ்ஜீவிக்கும்படி, தன் சரீரத்தையே எல்லா உலகங்கட்கும் தெய்வங்களாக நிறுத்தினான்; ஸ்ரீவத்சம் என்னும் மறுவும் பிராட்டியும் தங்கியிருக்கின்ற திருமார்பையுடையவனான அவ் வெம்பெருமானுடைய அடியார்கள் இசைகளைப் பாடிக் கொண்டு இந்த உலகத்திலே வெறுப்பு இல்லாமல் நிறைந்து வசிக்கின்றார்கள்; நீங்களும் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.

வி-கு :- உண்ண நிறுத்தினான்; தன்மூர்த்தியை எல்லா உலகுக்கும் தெய்வங்களாக நிறுத்தினான் என்க. பூதங்கள் மிக்கார் என முடிக்க. பொருளை நோக்கி ‘மிக்கார்’ என உயர்திணை முடிபு கொடுத்து ஓதுகிறார். நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடு :- எட்டாம் பாட்டு. 2இராஜசராயும் தாமசராயும் உள்ள சேதநர் குணங்களுக்குத் தகுதியாக அடையலாம்படிஇதர தெய்வங்களை உலகம் அடங்கப் பரப்பி வைத்தான்; ஆகையாலே, அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகம் அடங்கப் பரந்தார்கள்; நீங்களும் அவர்களைப் போன்று அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண தன்மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-செய்த பயிருக்குக் 1கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக, எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது, இராஜாக்கள் ஊர்தோறும் 2கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார். அத்தெய்வ நாயகன் தானே – 3இவ்வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே. மறுத் திரு மார்வன் – ஸ்ரீவத்ஸத்தையும் பிராட்டியையுமுடைய மார்வன் என்னுதல்; ஸ்ரீவத்ஸத்தையுடைய அழகிய மார்வையுடையவன் என்னுதல். அவன் பூதங்கள்-அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள். கீதங்கள் பாடி வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்-பிரீதியின் மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வசிக்க வேண்டியிருந்ததே!’ என்கிற வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள். நீர் மேவித் தொழுது உய்ம்மின் – 4ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்; அந்தச் சத்துவ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் வேறு ஒரு பயனைக் கருதாதவர்களாய்ச் சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

அசாதாரண திருமேனி யில் ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ராஜச தாமஸ குணம் உள்ளோருக்கு மூர்த்தி நிறுத்தினான் அத தெய்வ நாயகன் தானே
வரி வசூல் பண அதிகாரிகள் போலே -ராஜாவிடம் தானே போய் சேரும்
இறை-வரி கப்பம் -அனுபவிக்க தனது மூர்த்தி நிறுத்தினான்
தெய்வ நாயகன் தானே
இதை உணர்ந்த -மறு திரு மார்பன் பூதங்கள் -கீதங்கள் பாடி -யார் இடமும் வெறுப்பு இன்றி
ஞாலத்தில் மிகுந்து
அவர்களை மேவி தொழுது உஜ்ஜீவியும்
அவர்கள் மூலம் சர்வேஸ்வரனை தொழுது உஜ்ஜீவிக்கலாம்
ஆறில் ஒரு கூறு ராஜாவுக்கு செலுத்தும் –

எல்லாருக்கும் ஒக்க நியாமகன் தானே
மனிசருக்கு தேவர் போலர் தேவர்க்கும் தேவன் ராஜாதி ராஜா
நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இதர தேவதைகள் –
நாட்டினான் தெய்வம் எங்கும் –
மறு திரு மார்பன் ஸ்ரீ வத்சம் பிராட்டி உடைய திரு மார்பன்
அசாதாரண விக்ரஹம்
இதில் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
பூதங்கள் சப்தம் மீண்டும் இங்கே தமர் முந்திய பாசுரம் –
கீதங்கள் ப்ரீதி பிரகர்ஷத்தாலே வெறுப்பு இன்றி சம்சாரம் வெறுப்பு இன்றி
பூமி எங்கும் பரந்து -அனைவரையும்திருத்த
அவர்களை தொழுது உஜீவியும்
அநந்ய ப்ரயோஜனராய் சர்வேஸ்வரனை ஆச்ரயித்து உஜ்ஜீவியும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: